topbella

Thursday, August 26, 2010

உன் நினைவில்....!!


எங்கேனும் நான் சென்றாலும்
என்னெதிரே உன் சாயலில்
எவர் வந்தாலும்
என் மனதிற்குள் பட்டாம்பூச்சி...!

கணநேரம் நீ காணாமல் போயினும்
ரணமாகும் என் இதயம்... அதைக்
குணமாக்க வேண்டியவன் என்
மனம் வாடச் செய்ததேனோ...??

உன்னை உயிர் என்றேன்
எந்தன் சுவாசம் என்றேன்
இவ்விரண்டும் இல்லாவிட்டால்
ஏதேனும் வாழ்க்கை உண்டோ..??

சுவாசிக்க மறந்தாலும்.. உன்னை
யோசிக்க மறப்பதில்லை..
நேசிக்கத் தொடங்கி விட்டால்
யாசிக்க கௌரவம் பார்ப்பதில்லை..!Monday, August 23, 2010

தொடர்பதிவு...... பதிவுலகில் நான்..!!!

ஒரு வழியா தோழிகள் அப்பாவி தங்கமணி, காயத்ரி  அவங்க, குடுத்த தொடர் பதிவை எழுதி முடிச்சாச்சு.. அடுத்து, "பதிவுலகில் நான்...!!" தொடர் பதிவிற்கு, அழைத்த தோழிகள்  சந்த்யா, மற்றும் ப்ரியாவிற்கு  நன்றி..!!


1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

அன்புடன் ஆனந்தி
 
2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

ஆனந்தி தான் உண்மையான பெயர்...
(வாங்க பேசலாம் வாங்க..னு தான் வைக்க நினச்சேன்.... சரி விஜய் டிவி -ல ஏற்கனவே ஒரு ப்ரோக்ராம் அந்த பேர்ல வருதுன்னு விட்டுட்டேன்)

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
(அது ஒரு பெரிய்ய கதை.. என்ன என்ன? எங்க கிளம்பிட்டீக..... இருங்கப்பா ச.... வாய திறக்க விட மாட்டேங்கறாங்க... அப்படி எல்லாம் ஒன்னும் சொல்லல.. பயம் வேணாம்..)

எனக்கு கவிதை (சுமாரான கிறுக்கல் தான்) எழுத பிடிக்கும்... என் தோழி சித்ரா அவங்க எழுதுற ப்ளாக் அப்பப்ப படிப்பேன்.. ஒரே ஜாலி-யா எழுதுவாங்க.. விளையாட்டா ஒரு நாள் நீங்க ஏன் ப்ளாக் எழுத கூடாதுன்னு அவங்க கேட்டு.. அப்படியே கை, கால் எல்லாம் எடுத்து வச்சேங்க..!
 
4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

நான் இன்னும் பிரபலம் எல்லாம் இல்லைங்க....!! இன்ட்லி, தமிழ்10 , ரெண்டிலும் பதிவு செய்வேன்.. முடிஞ்ச வரைக்கும் மற்ற பதிவுலக நண்பர்களுக்கு பின்னூட்டம் இட (நல்ல கவனிக்கணும்...) முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்..!  மற்றும், வலைச்சரத்தில் நண்பர்கள் சைவ கொத்துப்பரோட்டா, அக்பர், தேனம்மை அக்கா, தேவா இவங்க எல்லாரும் என்னையும் அறிமுகம் செய்தாங்க..! அவங்களுக்கு என் நன்றி..!
(எச்சூச்மி....  இந்த சன் டிவி, ஜெயா டிவி, சூர்யா டிவி, விஜய் டிவி... அப்புறம் இந்த பிபிசி, CNN இதுல எல்லாம் சின்னதா ஒரு விளம்பரம் குடுக்க ஆசை தான்.... ஆமா நா எழுதுற எழுத்துக்கு இது ஒண்ணு தான் குறைச்சல்னு டீசெண்டா விட்டுட்டேன்..)

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

இல்லை.. சொந்த விஷயம் எதுவும் பகிர்வது இல்லை..என் அனுபவங்களை பகிர்ந்து  கொண்டதுண்டு..   (ஏன்? எதுக்கு? இல்ல எதுக்குன்ரேன்.... நல்லாத் தானே போயிட்டு இருக்கு.. நம்மளா ஏன் சும்மா போறவங்கள சொரிஞ்சு விடணும்....)

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

(அன்புடன் ஆனந்தி, அசத்தல் ஆனந்தி, அழகு ஆனந்தி, அரட்டை ஆனந்தி, அல்வா ஆனந்தி........ இப்படி எல்லாம் சொல்வேன்னு நினைச்சீங்களாக்கும்.. ஹி ஹி... ஒன்னே ஒண்ணு..... கண்ணே கண்ணு........தாங்க...)

அன்புடன் ஆனந்தி..

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

மத்தவங்க மனசு கஷ்டப்படுற மாதிரி யாரும் எழுதினா கோவம் வரும்... (வந்தாத் தான் என்ன செஞ்சு கிழிச்சிருவன்னு கேக்கப் பிடாது...)

பொறாமை... இல்ல யார் மேலயும் பொறாமை வந்ததில்லை.. எல்லாருமே அவங்க அவங்க எழுத்துல தனிச்சு நிக்கிறாங்க.... அப்புறம் எதுக்கு பொறாமை படணும்? 
(உண்மை என்னன்னா.. நா கொஞ்சம் சோம்பேறி... அதுக்கெல்லாம் டைம் இல்லிங்கோ...)

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

இப்போ கேட்டேங்களே ஒரு கேள்வி.. அது கேள்வி..! முதல் முதலாக, என்னை பாராட்டியவங்க.... தோழி சித்ரா, சஞ்சய், LK , செல்வா அண்ணா, பிரியா, தாரபுரத்தான்,
R .கோபி, மைதிலி கிருஷ்ணன், மெல்லினமே மெல்லினமே, நந்தினி, அண்ணாமலையான், கீதா. ஏதோ, கின்னஸ் அவார்ட் வாங்கின மாதிரி பீலிங்க்ஸ்....ஆச்சு..

(இது தவிர... நம்ம ரஜினி சார், கமல் சார், தல அஜீத், சூர்யா, சியான் விக்ரம்... இவுக எல்லாமும் கூட வாழ்த்து சொன்னாங்க.... நோ பீலிங்க்ஸ்.. எல்லாம் என் கனவில தான்...)

10. கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

நான்..... என்னத்த சொல்ல... ஹ்ம்ம்.. எளிமையா, ஜாலி-யா, அன்பா, பாசமா இருப்பேன்.. எனக்கு அதிகம் தெரியாத விசயங்களில் தலையிடுவதோ, கருத்து தெரிவிப்பதோ பிடிக்காது. பின்னூட்டம், வோட், மற்றும் பாலோவர்ஸ்  மட்டுமே... ஒருவரின் திறமையை கணிப்பது இல்லை என்பதை உறுதியாக நம்புபவள்.


(அப்புறம்... இன்னும் என்னைப்  பத்தி நிறைய சொல்லலாம் தான்... ஆனா அத எல்லாம் கேக்கறதுக்கு நீங்க இருக்கனுமே... ) அதனால.... இத்துடன் செய்தி தொகுப்பு நிறைவடைகிறது... நன்றி வணக்கம்....!!

இந்த தொடர் பதிவை தொடர.... நண்பர் பிரியமுடன் ரமேஷை  அழைக்கிறேன்...!!


Wednesday, August 11, 2010

"காண்டாமிருகமும் பேபி சோப்பும்....." -தொடர் பதிவு

"காண்டாமிருகமும் பேபி சோப்பும்....." தொடர் பதிவிற்கு என்னை அழைத்து.... ரெம்பக் கஷ்டமான ஒரு பதிவைப் போடச்  சொன்ன  தோழி காயத்ரிக்கு  ரெம்ப நன்றி..... !! (காயத்ரிக்கு  என் மேல என்ன கோவமோ... ???)

மொத்த பதிவர் கிட்டயும் அடி வாங்கி குடுக்காம.... உங்க ஆசை தீராது போல இருக்கு.....!! இதுக்கு நீங்க காண்ட்ஸ் மாதிரி எதாவது ஆசைப்பட்டிருக்கலாம்... அவ்வவ்...சரி எதையாவது சொல்லி, உங்க குழந்தைய சமாளிக்க ட்ரை பண்றேன்.

காயத்ரி அவங்க குடுத்த கதையின் தொடக்கம்....

“ ஒரு காட்டுல ஒரு காண்டாமிருகம்..அதுக்கு ரொம்ப நாளா பேபி சோப்பு போட்டு குளிக்கனுமுன்னு ஆசையாம்.. ஆனால் காட்டுல கடையே இல்லையாம்..அங்கே ஒரு மங்கி வந்துச்சாம்…........"

இப்போ நம்ம ரீலு... சாரி ப்பீலு... (அதாங்க பீலிங்க்ஸ்ச சொன்னேன்... இப்பவே சொல்லிட்டேன்... கதைய படிச்சிட்டு.. வர பின் விளைவுகளுக்கு  நான் பொறுப்பு இல்லிங்கோ.. )


அங்க வந்த மங்கி கிட்ட, காண்டாமிருகம் "மங்கி பையா... மங்கி பையா.." எனக்கு பேபி சோப்பு போட்டு குளிக்க ஆசைன்னு சொல்லிச்சாம்... அதுக்கு அந்த மங்கி, "கண்ணா காண்ட்ஸ்.... இங்க காட்டில அதெல்லாம் கிடைக்காது..." நீ வேணா ஒன்னு பண்ணு... நம்ம தலைவர் கிட்ட போயி கொஞ்சம் காசு வாங்கிட்டு வா... நா ஊருக்குள்ளார போயி உனக்கு சோப்பு வாங்கியாரேன்னு சொல்லிச்சாம்...!


உடனே... காண்ட்சும் ஒரே குஷி ஆகி, தலைவரான காட்டு ராஜாவைப் பார்க்க போச்சாம்... காட்டு ராஜா யாரு தெரியுமா?? நம்ம சிங்க ராசா தான்... (அவர் தன்னோட குகைக்குள்ள... புல் மீல்ஸ் அடிச்சிட்டு குப்புற படுத்து கிடந்தார்...) நம்ம காண்ட்ஸ்-கு சிங்க ராசாவ எழுப்பறதுக்கு ஒரே பயம்... (பாதியிலே எழுப்பி பாதுஷா மாதிரி கடிச்சு தின்ருசின்னா?? எதுக்கு ஏழரைன்னு......) ராசா எந்திரிக்க வரை.... குகை வாசலிலேயே காத்து கிடந்தது...


ஒரு வழியா சிங்க ராசா...முழிச்சு... சோம்பல் முறிச்சு ஒரு "ரோர்ர்ர்ர்ரர்ர்ர்ர் "-ன்னு உறுமி முடிச்சதும்... காண்ட்ஸ் மெதுவா உள்ள எட்டி பாத்தது... சிங்க ராசா... யாரடா அங்க... எட்டி பாக்கிறதுன்னு கேட்டதும், காண்ட்ஸ் சிங்கம் முன்னாடி போயி... ஒன்னும் இல்ல ராஜா... எனக்கு ஒரு உதவி கேக்க வந்தேன்.. என்று சொல்லிச்சாம்... என்ன வேணும் சொல்லுன்னு சிங்கம் கேட்டதும்... காண்ட்ஸ் தன்னோட பேபி சோப்பு கதைய சொல்லிச்சாம்..


ராஜாவும், அதுக்கு நா என்னடா பண்ண முடியும்ன்னு கேட்டதாம்.. காண்ட்ஸ்... உடனே... ராஜா ராஜா.. எனக்கு கைமாத்தா ஒரு 10 ரூவா குடுத்தியானா.... நா ஒரு பேபி சோப்பு வாங்கி... நானும் குளிச்சிட்டு, உனக்கும் பாதி சோப்பு தரேன்னு சொல்லிச்சாம்.. இம்புட்டு நாளும் குளிக்காம, அசிங்கமா இருந்த சிங்கமும் அதை நம்பி, "அட நம்மளும் தான் ஒரு தேஜஸ் ஆகலாம்னு..." 10 ரூவா குடுத்து அனுப்பிச்சாம்....


நேரே அந்த ரூவாய எடுத்திட்டு, மங்கி கிட்ட போயி குடுத்து... எப்படியாவது பேபி சோப்பு வாங்கிட்டு வான்னு காண்ட்ஸ் சொல்லிச்சாம்.. மங்கியும் ஒரே குஷில பேபி சோப்பு வாங்க போச்சாம்.. ஊருக்குள்ள வந்ததும், மங்கிக்கு எங்க போயி பேபி சோப்பு வாங்கன்னே தெரியலையாம்..!


உடனே.. ஒரு மரத்து மேல உக்காந்து வர போகிற குட்டி பாப்பாவை எல்லாம் பார்த்துட்டே இருந்துச்சாம்... அப்புறம் திடீர்னு ஒரு ஐடியா வந்து... ஒரு பாப்பா பாமிலி-யை பாலோ பண்ணிட்டே அவங்க வீட்டுக்கு போயிரிச்சாம்.. அந்த பாப்பாவோட அம்மா, கொஞ்சம் நேரம் கழிச்சு, பாப்பாவை குளிக்க வைக்க பேபி சோப்பை எடுத்துட்டு, பாப்பாக்கு தண்ணீர் ஊத்திட்டு இருக்கும் போது, மங்கி அலேக்கா அந்த வடையை... (சாரி பழக்க தோஷம்...) அந்த சோப்பை எடுத்துட்டு காட்டுக்குள்ள ஓடிருச்சாம்..


நேரே போயி, காண்ட்ஸ் கிட்ட நடந்த எல்லாமும் சொல்லிச்சாம்.. காண்ட்ஸ்-க்கும் ஒரே சந்தோசம்.. இப்போ தான் சோப்பு ப்ரீயாவே கிடைச்சிருச்சே... சிங்கத்து கிட்டே போயி... எனக்கு சோப்பு எல்லாம் வேண்டாம்.. இந்தா உன் 10 ஓவான்னு குடுத்திருச்சாம்....! சிங்கத்துக்கு எப்படியாவது... குளிச்சு... முழுகி... மணக்கலாம்னு பாத்தா வடை போச்சேன்னு ... சை.. திரும்பவும் சாரிங்கோ........சோப்பு போச்சேன்னு.... பீலிங்க்ஸ்ல ஒரு பாட்டு பாடுச்சாம்.....

"வேண்டும் ஒரு சோப்பு என்று நானும் ஓர் தவம் இருக்க...
பல்பு மட்டும் ஏன் கொடுத்தாய் மங்கு மங்கியே...."


ஏன் பிறந்தாய் மகனே... மெட்டுல பாடிக்கோங்க...!!

அப்படியே கேமரா-வ கட் பண்ணி காண்ட்ஸ்-ச காட்றோம்.. பேபி சோப்பு போட்டு குளிச்சி.....சும்மா கும்ம்னு பாடிட்டே வரார்.... நீங்களே பாருங்களேன்.. :D :Dசப்பாஹ்.. ஒரு வழியா கதை சொல்லி முடிச்சிட்டேன்... உங்க பாப்பா என்ன சொல்றான்னு கேட்டு சொல்லுங்கப்பா..! யாருங்க அங்க.. ஒரு சோடா ப்ளீஸ்... பொய் சொல்லி சமாளிக்கிறது எம்புட்ட்ட்ட்டு கஷ்டம்....!!


Monday, August 2, 2010

தொடர் பதிவு... கவிதை...!!!

என்னை தொடர் பதிவிற்கு அழைத்த "அப்பாவி தங்கமணி" அவர்களுக்கு நன்றி.. (ஆனா தொடர் பதிவின்ற பேர்ல... ஆப்பு வச்ச மாதிரியே ஒரு  பீலிங்... )


தங்க்ஸ்.. குடுத்த தலைப்பு.. "ஒசாமா பின் லேடன்.."

(என்னா ஒரு வில்லத்தனம்....!!  நல்லாத் தான போயிட்டு இருந்தது... ஏன் ஏன்... இந்த கொல வெறி...?? சரி.. சரி..சமாளிப்போம்.. இந்த சலசலப்புக்கு எல்லாம் நாங்க பயந்திருவோமாக்கும் )


ரு நல்ல விசயமும் இல்லை சொல்வதற்கு...
சாதித்து வாங்கிய  பட்டமிருக்கு இவருக்கு (வில்லன்)....
மாப்பிள்ளை ரேஞ்சுக்கு விளம்பரமிருக்கு....
 
பின்னாடி ஆட்டோ அனுப்ப ஆள் ரெடியா இருக்கு...

லேட் பண்ணாம கவிதை சொல்லிட்டேன்...
டண்டணக்கா டணக்கு நக்கா...


(ஸப்பாஹ்ஹ்ஹ்ஹ.. யாராவது இனி என்னை தொடர் பதிவுக்கு கூப்பிடுவாங்க..?? ஹ்ம்ம் ஹூம்....!)

இதுக்கு நெஜமாவே உங்க ஸ்பெஷல் இட்லி பத்தியே ஒரு கவிதை எழுதியிருக்கலாம்..

தங்கமணியின் இட்லி....


தக்காளிச் சட்னியுடன்
தவறாமல் உண்ண வேண்டியது
தங்கமணியின் இட்லிகள்..

இட்லிக்குப் பேர் போனவர்
இவர் இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர்..

தொடர் பதிவென்ற பெயரில்..
தொடர்கின்ற இவர் குறும்பு...
தொத்து வியாதி போல் தொடரட்டும் இனியிருந்து..

இவர் புகழ் பாடினால்
இலவசம் இருபது இட்லியாம்...
இல்லை இல்லை நான் பாடவில்லை..
இத்தோடு விட்டுவிடுங்கள் என்னை..!


இத்தனை பதிவர் இருக்க
இவர் பதிவை தொடர எனக்கழைப்பு...
இவர் இம்சைக்கும் ஒரு அளவில்லை..!

நன்றி பல உங்களுக்கு..
நான் கிளம்புகிறேன் என் வீட்டுக்கு..!!

மைன்ட் வாய்ஸ் கேட்ருச்சே.. கேட்ருச்சே...
(மவளே இனியும் எதாவது பேசின.. வீட்டுக்கு நாங்களே பார்சல் பண்ணுவோம்ல...)

(பின்ர போ ஆனந்தி..   அப்பாடி.. ஒரு வழியா தங்க்ஸ் இட்லிய வச்சே.. எஸ்கேப் ஆய்ட்டோம்ல.. எப்புடிஈஈ....??? )

நோ வயலன்ஸ்.. ப்ளீஸ்.. எல்லா தொடர்புகளுக்கும் தொடர் பதிவு எழுத சொன்ன தங்கமணியை காண்டக்ட் செய்யவும்.  உங்க வருகைக்கு நன்றி :-)

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)