topbella

Monday, August 23, 2010

தொடர்பதிவு...... பதிவுலகில் நான்..!!!

ஒரு வழியா தோழிகள் அப்பாவி தங்கமணி, காயத்ரி  அவங்க, குடுத்த தொடர் பதிவை எழுதி முடிச்சாச்சு.. அடுத்து, "பதிவுலகில் நான்...!!" தொடர் பதிவிற்கு, அழைத்த தோழிகள்  சந்த்யா, மற்றும் ப்ரியாவிற்கு  நன்றி..!!


1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

அன்புடன் ஆனந்தி
 
2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

ஆனந்தி தான் உண்மையான பெயர்...
(வாங்க பேசலாம் வாங்க..னு தான் வைக்க நினச்சேன்.... சரி விஜய் டிவி -ல ஏற்கனவே ஒரு ப்ரோக்ராம் அந்த பேர்ல வருதுன்னு விட்டுட்டேன்)

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
(அது ஒரு பெரிய்ய கதை.. என்ன என்ன? எங்க கிளம்பிட்டீக..... இருங்கப்பா ச.... வாய திறக்க விட மாட்டேங்கறாங்க... அப்படி எல்லாம் ஒன்னும் சொல்லல.. பயம் வேணாம்..)

எனக்கு கவிதை (சுமாரான கிறுக்கல் தான்) எழுத பிடிக்கும்... என் தோழி சித்ரா அவங்க எழுதுற ப்ளாக் அப்பப்ப படிப்பேன்.. ஒரே ஜாலி-யா எழுதுவாங்க.. விளையாட்டா ஒரு நாள் நீங்க ஏன் ப்ளாக் எழுத கூடாதுன்னு அவங்க கேட்டு.. அப்படியே கை, கால் எல்லாம் எடுத்து வச்சேங்க..!
 
4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

நான் இன்னும் பிரபலம் எல்லாம் இல்லைங்க....!! இன்ட்லி, தமிழ்10 , ரெண்டிலும் பதிவு செய்வேன்.. முடிஞ்ச வரைக்கும் மற்ற பதிவுலக நண்பர்களுக்கு பின்னூட்டம் இட (நல்ல கவனிக்கணும்...) முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்..!  மற்றும், வலைச்சரத்தில் நண்பர்கள் சைவ கொத்துப்பரோட்டா, அக்பர், தேனம்மை அக்கா, தேவா இவங்க எல்லாரும் என்னையும் அறிமுகம் செய்தாங்க..! அவங்களுக்கு என் நன்றி..!
(எச்சூச்மி....  இந்த சன் டிவி, ஜெயா டிவி, சூர்யா டிவி, விஜய் டிவி... அப்புறம் இந்த பிபிசி, CNN இதுல எல்லாம் சின்னதா ஒரு விளம்பரம் குடுக்க ஆசை தான்.... ஆமா நா எழுதுற எழுத்துக்கு இது ஒண்ணு தான் குறைச்சல்னு டீசெண்டா விட்டுட்டேன்..)

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

இல்லை.. சொந்த விஷயம் எதுவும் பகிர்வது இல்லை..என் அனுபவங்களை பகிர்ந்து  கொண்டதுண்டு..   (ஏன்? எதுக்கு? இல்ல எதுக்குன்ரேன்.... நல்லாத் தானே போயிட்டு இருக்கு.. நம்மளா ஏன் சும்மா போறவங்கள சொரிஞ்சு விடணும்....)

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

(அன்புடன் ஆனந்தி, அசத்தல் ஆனந்தி, அழகு ஆனந்தி, அரட்டை ஆனந்தி, அல்வா ஆனந்தி........ இப்படி எல்லாம் சொல்வேன்னு நினைச்சீங்களாக்கும்.. ஹி ஹி... ஒன்னே ஒண்ணு..... கண்ணே கண்ணு........தாங்க...)

அன்புடன் ஆனந்தி..

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

மத்தவங்க மனசு கஷ்டப்படுற மாதிரி யாரும் எழுதினா கோவம் வரும்... (வந்தாத் தான் என்ன செஞ்சு கிழிச்சிருவன்னு கேக்கப் பிடாது...)

பொறாமை... இல்ல யார் மேலயும் பொறாமை வந்ததில்லை.. எல்லாருமே அவங்க அவங்க எழுத்துல தனிச்சு நிக்கிறாங்க.... அப்புறம் எதுக்கு பொறாமை படணும்? 
(உண்மை என்னன்னா.. நா கொஞ்சம் சோம்பேறி... அதுக்கெல்லாம் டைம் இல்லிங்கோ...)

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

இப்போ கேட்டேங்களே ஒரு கேள்வி.. அது கேள்வி..! முதல் முதலாக, என்னை பாராட்டியவங்க.... தோழி சித்ரா, சஞ்சய், LK , செல்வா அண்ணா, பிரியா, தாரபுரத்தான்,
R .கோபி, மைதிலி கிருஷ்ணன், மெல்லினமே மெல்லினமே, நந்தினி, அண்ணாமலையான், கீதா. ஏதோ, கின்னஸ் அவார்ட் வாங்கின மாதிரி பீலிங்க்ஸ்....ஆச்சு..

(இது தவிர... நம்ம ரஜினி சார், கமல் சார், தல அஜீத், சூர்யா, சியான் விக்ரம்... இவுக எல்லாமும் கூட வாழ்த்து சொன்னாங்க.... நோ பீலிங்க்ஸ்.. எல்லாம் என் கனவில தான்...)

10. கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

நான்..... என்னத்த சொல்ல... ஹ்ம்ம்.. எளிமையா, ஜாலி-யா, அன்பா, பாசமா இருப்பேன்.. எனக்கு அதிகம் தெரியாத விசயங்களில் தலையிடுவதோ, கருத்து தெரிவிப்பதோ பிடிக்காது. பின்னூட்டம், வோட், மற்றும் பாலோவர்ஸ்  மட்டுமே... ஒருவரின் திறமையை கணிப்பது இல்லை என்பதை உறுதியாக நம்புபவள்.


(அப்புறம்... இன்னும் என்னைப்  பத்தி நிறைய சொல்லலாம் தான்... ஆனா அத எல்லாம் கேக்கறதுக்கு நீங்க இருக்கனுமே... ) அதனால.... இத்துடன் செய்தி தொகுப்பு நிறைவடைகிறது... நன்றி வணக்கம்....!!

இந்த தொடர் பதிவை தொடர.... நண்பர் பிரியமுடன் ரமேஷை  அழைக்கிறேன்...!!


85 comments:

Sanjay said...

//அது ஒரு பெரிய்ய கதை.. என்ன என்ன? எங்க கிளம்பிட்டீக..... இருங்கப்பா ச.... வாய திறக்க விட மாட்டேங்கறாங்க...அப்படி எல்லாம் ஒன்னும் சொல்லல.. பயம் வேணாம்...//

ஹா ஹா இது தான் ஆனந்தி டச்.....இயல்பான எழுத்து.... ;-)

//சுமாரான கிறுக்கல் தான்//
யாரு நம்ம பார்த்திபன் மாதிரியா???:P :D

//இதுல எல்லாம் சின்னதா ஒரு விளம்பரம் குடுக்க ஆசை தான்....//
கவலைபடாதீங்க, ஆனந்தி பான் கிளப் சார்பா மவுன்ட் ரோட்ல ஒரு 100 அடி கட் அவுட் வச்சிரலாம்....!!!!:D :D

//எளிமையா, ஜாலி-யா, அன்பா, பாசமா இருப்பேன்.. //
யாவரும் இன்புற்றிருத்தல் அன்றி யாதொன்றறியோம் பராபரமே...அப்டியே இருங்க மாறிடாதீங்க....

தொடர்ந்து கலக்குங்க....: ) : )

Jey said...

அம்மனி... பதில்கள் சுவாரஸ்யமா இருந்தது..., சூப்பர்..:)

(பெரிய பிரபலங்கள் ஏற்கனவே கனவுல வந்து பாராட்டிருக்காங்க... இனி நாங்க பாராட்டினா...கண்டுக்கவா போரீங்க...

Ramesh said...

இயல்பான பதில்களால அசத்திட்டீங்க ஆனந்தி...அப்புறம்...தொடர் பதிவுக்கு என்னையும் மதிச்சு கூப்பிட்டிருக்கிங்களே...எனக்கு அழுகை அழுகையா வருது....என் லிங்க கொடுத்து என்ன தொடர்பதிவுக்கு கூப்பிட்டத பாத்தவுடன்...அந்த சந்தோசத்துல....உங்களுக்கு குறைஞ்சது 20, 25 ஓட்டாவது போட்டுடணும்னு முயற்சி பண்ணினேன்...ம்ச்ச்....ஒருத்தருக்கு ஒரு ஓட்டுதானாமே....

Menaga Sathia said...

very interesting answers!!

ப்ரியமுடன் வசந்த் said...

//பின்னூட்டம், வோட், மற்றும் பாலோவர்ஸ் மட்டுமே... ஒருவரின் திறமையை கணிப்பது இல்லை என்பதை உறுதியாக நம்புபவள்.//

this is 100% sure..!

எல்லா பதிலும் க்யூட்!

எம் அப்துல் காதர் said...

//பெரிய பிரபலங்கள் ஏற்கனவே கனவுல வந்து பாராட்டிருக்காங்க... இனி நாங்க பாராட்டினா... கண்டுக்கவா போரீங்க... //

ஆமா பாஸ்,, அதுவுமில்லாத,, <> வேற...சரி சரி..நாங்க புறப்படுறோம் மேடம். நாங்க டிவிலையே பாத்துக்குறோம். பதில்கள் எல்லாம் சும்மா கலக்கலா இருந்துச்சுன்னு ஒரு தபா சொல்லிட்டு போலாம்னுதான் வந்தேன். வர்ர்ட்டா. ஹா..ஹா..

எம் அப்துல் காதர் said...

//பெரிய பிரபலங்கள் ஏற்கனவே கனவுல வந்து பாராட்டிருக்காங்க... இனி நாங்க பாராட்டினா... கண்டுக்கவா போரீங்க... //

ஆமா பாஸ்,, அதுவுமில்லாத,, (இந்த சன் டிவி, ஜெயா டிவி, சூர்யா டிவி, விஜய் டிவி... அப்புறம் இந்த பிபிசி, CNN இதுல எல்லாம்) வேற...சரி சரி..நாங்க புறப்படுறோம் மேடம். நாங்க டிவிலையே பாத்துக்குறோம். பதில்கள் எல்லாம் சும்மா கலக்கலா இருந்துச்சுன்னு ஒரு தபா சொல்லிட்டு போலாம்னுதான் வந்தேன். வர்ர்ட்டா. ஹா..ஹா..

நசரேயன் said...

//எனக்கு கவிதை (சுமாரான கிறுக்கல் தான்) எழுத பிடிக்கும்...என் தோழி சித்ரா அவங்க எழுதுற ப்ளாக் அப்பப்ப படிப்பேன்.//

இதெல்லாம் சித்ரா டீச்சர் வேலைதானா ?

நசரேயன் said...

தமிழ்மண பட்டைய போடுங்க

ஜெய்லானி said...

ஜெய்லானீஈஈஈஈஈ ....?

எஸ் மேடம்....!!!

ஜெய்லானி said...

//இல்லை.. சொந்த விஷயம் எதுவும் பகிர்வது இல்லை..என் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதுண்டு.. //

அடங்கொப்பரானே...அப்ப அந்த எலி மேட்டர் , சொந்த மேட்டர் இல்லையா...???அவ்வ்வ்

ஜெய்லானி said...

//என் தோழி சித்ரா அவங்க எழுதுற ப்ளாக் அப்பப்ப படிப்பேன்.. ஒரே ஜாலி-யா எழுதுவாங்க.. //

சித்ரா டீச்சர் ,நீங்க வெட்டிப்பேச்சின்னு சொல்றீஙக . இவங்க ஜாலியா எழுதுறீங்கன்னு சொல்றாங்க. அப்போ எது நிஜம் .

ஜெய்லானி said...

//நான் இன்னும் பிரபலம் எல்லாம் இல்லைங்க....!!//

மீரா போட்டோவை வச்சிகிட்டு இந்த நக்கல்தானே வேண்டாங்கிறது.

ஜெய்லானி said...

//பின்னூட்டம், வோட், மற்றும் பாலோவர்ஸ் மட்டுமே... ஒருவரின் திறமையை கணிப்பது இல்லை என்பதை உறுதியாக நம்புபவள்.//

அட அட ....செம உள் குத்து.. புரிகிறவங்களுக்கு புரியும் ...இதுக்காகவே ஒரு விருது + ஆயிரம் டாலர் பணமுடிப்பு + செப்பு பட்டையம் தரனும்


உண்மையான தைரியமாக நேர்மையான பதில் .

ஜெய்லானி said...

//நான்..... என்னத்த சொல்ல... ஹ்ம்ம்.. எளிமையா, ஜாலி-யா, அன்பா, பாசமா இருப்பேன்.. எனக்கு அதிகம் தெரியாத விசயங்களில் தலையிடுவதோ, கருத்து தெரிவிப்பதோ பிடிக்காது. //

இப்பிடியே இருங்க ..யாருக்காகவும் மாத்தீகாதீங்க ஹி..ஹி.. (( இதுவும் செம உள்குத்தால்ல இருக்கு ))

ஜெய்லானி said...

அதிகம் அலட்டிக்காத நேர்மையான பதில்கள் ... வாழ்த்துக்கள்...!!!
:-)))

தாராபுரத்தான் said...

தெம்புடன் ஆனந்தி...

vanathy said...

super answers!

Unknown said...

very nice interesting answers ananthi.

Unknown said...

very nice interesting answers ananthi.

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல பதில்கள் சகோதரி...

ஸ்ரீ.... said...

தலைவர் ரஜினியே பாராட்டிய பதிவைப் பற்றி நான் என்ன சொல்வது? :) நேர்த்தியான பதில்கள்.

ஸ்ரீ....

நாடோடி said...

வாழ்த்துக்க‌ள், தொட‌ர்ந்து க‌ல‌க்குங்க‌...

சௌந்தர் said...

இதிலும் உங்கள் தனி தன்மை தெரிகிறது

சௌந்தர் said...

(அன்புடன் ஆனந்தி, அசத்தல் ஆனந்தி, அழகு ஆனந்தி, அரட்டை ஆனந்தி, அல்வா ஆனந்தி........ இப்படி எல்லாம் சொல்வேன்னு நினைச்சீங்களாக்கும்.. ஹி ஹி... ஒன்னே ஒண்ணு..... கண்ணே கண்ணு........தாங்க...)///

இப்போவே கண்ணை கட்டுதே..

சௌந்தர் said...

ஜெய்லானிsaid..அடங்கொப்பரானே...அப்ப அந்த எலி மேட்டர் , சொந்த மேட்டர் இல்லையா...???///

அதானே எங்களை யாரும் ஏமாற்ற முடியாது

சௌந்தர் said...

(இது தவிர... நம்ம ரஜினி சார், கமல் சார், தல அஜீத், சூர்யா, சியான் விக்ரம்... இவுக எல்லாமும் கூட வாழ்த்து சொன்னாங்க.... நோ பீலிங்க்ஸ்.. எல்லாம் என் கனவில தான்...////

ஏன் விஜய் வரலையா விஜய் ரசிகர்களே பாருங்கள்...இதை என்னனு கேளுங்க

அருண் பிரசாத் said...

//அன்புடன் ஆனந்தி, அசத்தல் ஆனந்தி, அழகு ஆனந்தி, அரட்டை ஆனந்தி, அல்வா ஆனந்தி........ இப்படி எல்லாம் சொல்வேன்னு நினைச்சீங்களாக்கும்.. ஹி ஹி... ஒன்னே ஒண்ணு..... கண்ணே கண்ணு........தாங்க...)//
முடியல....... உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

கவி அழகன் said...

ஆஹா சூப்பர் கொள்ளை கொண்டுவிட்டீர்கள் பாராட்டுக்கள்

சிங்கக்குட்டி said...

அருமையான பதிவு, ஒரு இடுகை படித்த உணர்வே இல்லை, யாரோ நேரில் பேசியது போல ஒரு எழுத்து நடை.

ரொம்ப நல்லா இருங்குங்க.

Anonymous said...

சூப்பர் பதில்கள் ஆனந்தி ..

"(அன்புடன் ஆனந்தி, அசத்தல் ஆனந்தி, அழகு ஆனந்தி, அரட்டை ஆனந்தி, அல்வா ஆனந்தி........ இப்படி எல்லாம் சொல்வேன்னு நினைச்சீங்களாக்கும்.. ஹி ஹி... ஒன்னே ஒண்ணு..... கண்ணே கண்ணு........தாங்க...)"

இதெல்லாம் உங்க செல்ல பேரு தானே ஹூம் சொல்லவே இல்லை

Unknown said...

அன்பிற்கினிய நண்பியே..,

/ /...பின்னூட்டம், வோட், மற்றும் பாலோவர்ஸ் மட்டுமே... ஒருவரின் திறமையை கணிப்பது இல்லை என்பதை உறுதியாக நம்புபவள்../ /

உண்மைதான்... ஆனால் நான் ஓட்டும் போட்டுவிட்டேன்,பாலோவர்ஸ்-லும் இணைந்து விட்டேன்.
இயல்பான எழுத்துக்கள். - வாழ்த்துக்கள்.

நன்றி..,

மரங்களோடு மனிதம் வளர்ப்போம்...
அன்புடன்..ச.ரமேஷ்.

மங்குனி அமைச்சர் said...

(எச்சூச்மி.... இந்த சன் டிவி, ஜெயா டிவி, சூர்யா டிவி, விஜய் டிவி... அப்புறம் இந்த பிபிசி, CNN இதுல எல்லாம் சின்னதா ஒரு விளம்பரம் குடுக்க ஆசை தான்.... ஆமா நா எழுதுற எழுத்துக்கு இது ஒண்ணு தான் குறைச்சல்னு டீசெண்டா விட்டுட்டேன்..)///

ஏற்கனவே உங்கள் பிளாக் பத்தி எல்லா டிவி நியுசுளையும் சொன்னாங்களே , நீங்க பார்க்கலையா ?

Unknown said...

நல்லா எழுதியிருக்கீங்க..

மங்குனி அமைச்சர் said...

ஆனா அத எல்லாம் கேக்கறதுக்கு நீங்க இருக்கனுமே... ) அதனால.... இத்துடன் செய்தி தொகுப்பு நிறைவடைகிறது... நன்றி வணக்கம்....!!
///

எப்படி ஆனந்தி கரக்ட்டா அடுத்தவுங்க மனச படிக்கிறிங்க , கிரேட் , அசத்திடிங்க ..... ஹி..ஹி.ஹி /....................

என்னது நானு யாரா? said...

ஒரு இயல்பான நகைசுவை உங்க எழுத்தில இருக்கு! எதாவது பதிவு தொடர், அமெரிக்காவை பத்தி உங்க இயல்பான குறும்பு பாணியில எழுதலாமே!

எல்லோருக்கும் தெரியாத செய்தி அங்கே நிறைய இருக்கும் இல்லையா?

உங்களை தொடர்பவர்களில் நானும் ஒருவன் இப்பொழுது.

புதுசா எழுத வந்திருக்கேன். நான் எழுதியுள்ள பதிவுகளை படிச்சி பாத்து உங்க கருத்தை சொல்லுங்கள்! உங்கள் வருகைக்கு காத்திருக்கிறேன்.

தமிழ் உலகம் said...

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

அண்ணாமலை..!! said...

நீங்க அவுங்களா?
சரி..சரி!
:)

சாருஸ்ரீராஜ் said...

vrey intresting .....

Kousalya Raj said...

அருமையான யதார்த்தமான பதில்கள் தோழி...

சசிகுமார் said...

அருமை தோழி கலக்கலா சொல்லி இருக்கீங்க

Ramesh said...

உங்க அழைப்பிற்கு நன்றி ஆனந்தி...என்னுடைய பதிவின் இணைப்பை இணைத்திருக்கிறேன்...பாருங்கள்...நன்றி

http://rameshspot.blogspot.com/2010/08/blog-post_24.html

ஸ்ரீராம். said...

அருமை.

Gayathri said...

ரொம்ப இனிமையா அழகா எதார்த்தமா எழுதிருக்கிங்க..மிகவும் ரசித்தேன்..

kavisiva said...

அவள் விகடன்ல வர்ற 'அலட்டல் ஆனந்தி' நீங்கதானே?! மீ எஸ்ஸ்ஸ்ஸ்கேஏஏஏஏப்

Unknown said...

very nice answers

kavisiva said...

தண்ணியில் பட்ட பாடு யாரோட சொந்த விஷயமுங்கோ?!

ஒரு சந்தேகம்தானுங்க கேட்டேன்.அதுக்கு ஏங்க இப்பூடி மொறைக்கறீங்க?! :)

Unknown said...

தாராபுரத்தான் said...
தெம்புடன் ஆனந்தி...

This is ...

r.v.saravanan said...

இயல்பான எதார்த்தமான பதில்கள் தொடர்ந்து வெற்றியடைய வாழ்த்துக்கள் ஆனந்தி

Sanjay said...

@ ஜெய்லானீ

//இப்பிடியே இருங்க ..யாருக்காகவும் மாத்தீகாதீங்க ஹி..ஹி.. (( இதுவும் செம உள்குத்தால்ல இருக்கு ))//

ஆர்கா எந்த பால்(Ball) போட்டாலும் கோல்(Goal) போடறானே...:D :D

'பரிவை' சே.குமார் said...

ஆனந்தி டச்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சஞ்சய்
ரொம்ப நன்றி.. :-))

பார்த்திபன் மாதிரியா?? ஏன்???? :O :O

மௌண்ட் ரோடு-ல கட் அவுட்டா...???
அவ்வளவெல்லாம் வேணாம்.. எழுத்த பாராட்டி ஒரு பொன்முடிப்பு குடுங்க போதும்.. :D :D

சரிங்க.. நீங்க சொன்னா சரி தான்.. மாறலை :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@jey

ரொம்ப நன்றிங்க.. கனவுல பாராட்டினாலும் பொறுக்கல...!!
பாராட்டுக்கு நன்றி..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ரமேஷ்

தொடர் பதிவு தானே... ஏன் இவ்ளோ பீலிங்க்ஸ்.. இட்ஸ் ஓகே.. :)
ரொம்ப நன்றி.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@மேனகாசாதியா

ரொம்ப நன்றிங்க..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ப்ரியமுடன் வசந்த்
ரொம்ப நன்றிங்க..@எம் அப்துல் காதர்
உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@நசரேயன்

ஆமாங்க. ஆனா நா எழுதுற மொக்கைக்கெல்லாம் பாவம் அவங்க பொறுப்பு இல்ல..
வருகைக்கு நன்றி..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சித்ரா

ரொம்ப நன்றி சித்ரா

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@நசரேயன்

கருத்துக்கு நன்றி..@ஜெய்லானி
எலி மேட்டர் முற்றிலும் சொந்த அனுபவம் தான்.. (என் சொந்த விஷயம் இல்லை)

//மீரா போட்டோவை வச்சிகிட்டு இந்த நக்கல்தானே வேண்டாங்கிறது.//
இணைய தளத்தில் பெண்கள் தங்கள்..உண்மையான புகைப்படம் வெளியிடுவது பாதுகாப்பு இல்லை..
அதனால எனக்கு பிடிச்ச நடிகை போட்டோ போட்ருக்கேன்..
எழுதுறது நா தானே.... மீரா ஜாஸ்மின் இல்லியே???

//அட அட ....செம உள் குத்து.. புரிகிறவங்களுக்கு புரியும் ...இதுக்காகவே ஒரு விருது + ஆயிரம் டாலர் பணமுடிப்பு + செப்பு பட்டையம் தரனும்
உண்மையான தைரியமாக நேர்மையான பதில் .////
உங்களுக்கு என்னங்க பிரச்சன??
இதுல என்ன உள் குத்து-ன்னு எனக்கு தெரியல.. என் கருத்தை தான் சொன்னேன்..

நான் நானா இருக்கத்தான் முயற்சி பண்றேன்.. நன்றி..

உங்க வருகைக்கும், இவ்ளோ கருத்துக்கும் ரொம்ப நன்றி..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@தாராபுரத்தான்
ரொம்ப நன்றிங்க..


@வானதி
ரொம்ப நன்றி


@பூர்ணா
தேங்க்ஸ் பூர்ணா...


@வெறும்பய
ரொம்ப நன்றிங்க..


@ஸ்ரீ
ரொம்ப நன்றிங்க..

@ நாடோடி
வாழ்த்துக்கு நன்றி..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சௌந்தர்
ரொம்ப நன்றி..
கண்ண கட்டினா ஒரு சோடா குடிங்க.. சரியா போகும்..

ஒரு ப்ளாக் தானே...அதுக்கேவா??

யாரும் உங்கள ஏமாத்தல.... அது என்ன சொந்த அனுபவம் தான்..

சாரி.. டைபிங்-ல விட்டு போச்சு.. சேர்த்துக்கோங்க.. :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@அருண் பிரசாத்
சரி விடுங்க.. இதுக்கெல்லாம் பீல் பண்ணா எப்படி???
(என்ன எல்லாரும்....ஒரு ப்ளாக் வச்சதுக்கே இவ்ளோ பீல் பண்றாங்க....அவ்வவ்)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@யாதவன்
ரொம்ப நன்றிங்க..
@ சிங்கக்குட்டி
///ஒரு இடுகை படித்த உணர்வே இல்லை, யாரோ நேரில் பேசியது போல ஒரு எழுத்து நடை.///
ரொம்ப நன்றிங்க..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@sandhya
ஹி ஹி.. சரி விடுங்க..
இப்போ தெரிஞ்சு போச்சே.. :)
ரொம்ப நன்றி......

@மங்குனி அமைச்சர்
நல்ல பாத்தீங்களா?? அது எச்சரிக்கையா இருக்கும்...
சரியா பாருங்க..
ரொம்ப நன்றி

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@பதிவுலகில் பாபு
ரொம்ப நன்றி
@என்னது நானு யாரா?
///ஒரு இயல்பான நகைசுவை உங்க எழுத்தில இருக்கு! எதாவது பதிவு தொடர், அமெரிக்காவை பத்தி உங்க இயல்பான குறும்பு பாணியில எழுதலாமே!

எல்லோருக்கும் தெரியாத செய்தி அங்கே நிறைய இருக்கும் இல்லையா?///

நல்ல கருத்து.. முயற்சி பண்றேன்..

///உங்களை தொடர்பவர்களில் நானும் ஒருவன் இப்பொழுது. ///
ரொம்ப நன்றி

//புதுசா எழுத வந்திருக்கேன். நான் எழுதியுள்ள பதிவுகளை படிச்சி பாத்து உங்க கருத்தை சொல்லுங்கள்! உங்கள் வருகைக்கு காத்திருக்கிறேன்.///
உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சசிகுமார்
ரொம்ப நன்றி


@ரமேஷ்
கண்டிப்பா பாக்குறேன்.. நன்றிங்க..@கலாநேசன்
ரொம்ப நன்றி

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@கே.ஆர்.பி.செந்தில்
ரொம்ப நன்றிங்க..@ஜெய்லானி
கமெண்ட் உங்களுக்கு தான்..@சே.குமார்
ரொம்ப நன்றிங்க..

Starjan (ஸ்டார்ஜன்) said...

(அன்புடன் ஆனந்தி, அசத்தல் ஆனந்தி, அழகு ஆனந்தி, அரட்டை ஆனந்தி, அல்வா ஆனந்தி........ இப்படி எல்லாம் சொல்வேன்னு நினைச்சீங்களாக்கும்.. ஹி ஹி... ஒன்னே ஒண்ணு..... கண்ணே கண்ணு........தாங்க...)

நானும் இத்தன வலைப்பூ இருக்குல்ல நினைச்சேன்.. ரொம்ப அருமையான பதில்கள் ஆனந்தி..

மின்மினி RS said...

பதில்கள் அருமை ஆனந்தி.. வாழ்த்துகள்..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ஸ்டார்ஜன்
ஹா ஹா... நா அத்தனை ப்ளாக் வச்சா நாடு தாங்குமாங்க..??
வருகைக்கு நன்றி..@மின்மினி
ரொம்ப நன்றிங்க..

R.Gopi said...

ஆனந்தி....

பதில்கள் அனைத்தும் கலக்கல் காமெடி ரகம்.....

பெரிய பெரிய பிரபலங்கள்லாம் வந்து பாராட்டிட்டாங்களே... இனிமே எங்கள எல்லாம் கண்டுப்பீங்களான்னு ஒரு ஸ்மால் டவுட்....

//பின்னூட்டம், வோட், மற்றும் பாலோவர்ஸ் மட்டுமே... ஒருவரின் திறமையை கணிப்பது இல்லை என்பதை உறுதியாக நம்புபவள்.//

இது அதிரடி, சரவெடி ஆனந்தி....

//என் தோழி சித்ரா அவங்க எழுதுற ப்ளாக் அப்பப்ப படிப்பேன்.//

அட... நம்ம சித்ரா டீச்சர் வேலையா இது.... நடக்கட்டும்...

//9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..//

இந்த கேள்விக்கான பதிலில் என்னையும் நினைவு வைத்து பெயரை குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி ஆனந்தி..

நிறைய எழுதுங்கள்....

வாழ்த்துக்கள்.....

Nandhini said...

பதில்கள் மிக இயல்பாக இருந்தது......மொத்தத்தில் டாப்பு.....தொடரட்டும் உங்கள் எழுத்து.

kavisiva said...

நான் போட்ட பின்னூட்டத்தை காணோம் :-( காக்கா தூகிட்டு போயிடுச்சா?

இல்ல அலட்டல் ஆனந்தின்னு சொன்னதுக்காக மட்டுறுத்தல் செய்துட்டீங்களா:)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@S .ரமேஷ்
உங்கள் நட்பிற்கும், வாழ்த்திற்கும் நன்றி


@Tamilulagam
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..@அண்ணாமலை
நா அவுங்க இல்ல.. நீங்க யாருங்க??
வருகைக்கு நன்றி

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சாருஸ்ரீராஜ்
ரொம்ப தேங்க்ஸ்..


@கௌசல்யா
ரொம்ப நன்றி தோழி.


@ஸ்ரீராம்
ரொம்ப நன்றிங்க..


@gayathri
ரொம்ப தேங்க்ஸ் தோழி..


@kavisiva
அது நா இல்லிங்கோ.....!!!
முறைக்கெல்லாம் இல்ல.. அது என்னோட சொந்த விஷயம் தான்..!!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@R .கோபி
உங்க வருகைக்கும், கருத்திற்கும், வாழ்த்திற்கும் மற்றும் உங்கள் தொடர் ஆதரவிற்கும் நன்றிங்க..@Nandhini
ரொம்ப நன்றி :)@kavisiva
//நான் போட்ட பின்னூட்டத்தை காணோம் :-( காக்கா தூகிட்டு போயிடுச்சா?
இல்ல அலட்டல் ஆனந்தின்னு சொன்னதுக்காக மட்டுறுத்தல் செய்துட்டீங்களா:)///

யாரும் தூக்கிட்டு போகல.. நா பப்ளிஷ் பண்ணேன்.. இதுல வரல.. இப்போ சரி ஆச்சு பாருங்க..
ச ச.. இதுக்காக எல்லாம் அப்படி செய்வாங்களா என்ன??
ரொம்ப நன்றி..

Jaleela Kamal said...

ஆனந்தி உங்கள் பதிவுல பதில் நகைச்சுவையுடன் படிக்க ரொம்ப நல்ல இருக்கு.

Anonymous said...

ஹ்ம்ம்..நன்னாதான் போய்ட்டிருக்கு..கலக்குங்க..

Priya said...

அழைப்பினை ஏற்று பதிவினை தொடர்ந்தமைக்கு நன்றி ஆனந்தி.
பதில்கள் அனைத்தையும் ரசித்து படித்தேன்.

kavisiva said...

//யாரும் தூக்கிட்டு போகல.. நா பப்ளிஷ் பண்ணேன்.. இதுல வரல.. இப்போ சரி ஆச்சு பாருங்க..
ச ச.. இதுக்காக எல்லாம் அப்படி செய்வாங்களா என்ன??
ரொம்ப நன்றி..//

நீங்க அப்படீல்லாம் செய்ய மாட்டீங்கன்னு தெரியும் சும்மா கலாய்ச்சேன் அம்புட்டுதான் :). (ம்ம்ம் எப்படீல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு:D )

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

Ananthi said...
@Jaleela Kamal
//ஆனந்தி உங்கள் பதிவுல பதில் நகைச்சுவையுடன் படிக்க ரொம்ப நல்ல இருக்கு. //

ரொம்ப நன்றிங்க... :)


@padaipali
// ஹ்ம்ம்..நன்னாதான் போய்ட்டிருக்கு..கலக்குங்க.. //

வருகைக்கு நன்றி :)


@Priya
///அழைப்பினை ஏற்று பதிவினை தொடர்ந்தமைக்கு நன்றி ஆனந்தி.
பதில்கள் அனைத்தையும் ரசித்து படித்தேன்///

ரொம்ப நன்றி ப்ரியா..
ரொம்ப லேட் பண்ணிட்டேன் பா.. அதுக்கு மன்னிக்கவும் :-))

ரிஷபன்Meena said...

நகைச்சுவை உங்களுக்கு ரொம்ப இயல்பா எழுத வருது.

கவிதைகள் உங்களுக்கு பிடிக்கும் என்றிருக்கிறீர்கள், இது போல அடிக்கடி எழுதுங்கள்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@ரிஷபன்Meena

/////நகைச்சுவை உங்களுக்கு ரொம்ப இயல்பா எழுத வருது.

கவிதைகள் உங்களுக்கு பிடிக்கும் என்றிருக்கிறீர்கள், இது போல அடிக்கடி எழுதுங்கள்.///


ரொம்ப நன்றிங்க.. கண்டிப்பாக எழுதுகிறேன்.. :-)))
வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க..

எல் கே said...

// முதல் முதலாக, என்னை பாராட்டியவங்க.... தோழி சித்ரா, சஞ்சய், LK , செல்வா அண்ணா, பிரியா, தாரபுரத்தான்,
R .கோபி, மைதிலி கிருஷ்ணன், மெல்லினமே மெல்லினமே, நந்தினி, அண்ணாமலையான், கீதா. ஏதோ, கின்னஸ் அவார்ட் வாங்கின மாதிரி பீலிங்க்ஸ்....ஆச்சு..//

என் பெயரையும் சொல்லி இருப்பதற்கு நன்றி

செந்தில்குமார் said...

நிசர்த்தமான உண்மையை உங்கள் எழுத்துக்களில் ம்ம்ம்ம் ....அருமை ஆனந்தி...

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)