topbella

Wednesday, June 23, 2010

இன்ஸ்டன்ட் பால் கோவா...!!!

 

தேவையான பொருட்கள்:

கன்டன்ஸ்டு மில்க் (அல்லது) மில்க்மெய்ட் - 1 கப்
பால் பவுடர் -  1 / 4 கப்
கெட்டி தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்

(கன்டன்ஸ்ட் மில்க்கில் சுகர் இருப்பதால் அதுவே போதுமானது.. தனியாக சுகர் சேர்க்க தேவை இல்லை )

செய்முறை:

ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் மேற்சொன்ன அனைத்து பொருட்களையும் கலந்து, மைக்ரோவேவ் ஓவனில்  ஒரு 4 - 6  நிமிடங்கள் வைக்கவும்..
இடை இடையே வெளியில் எடுத்து நன்கு கலந்து திரும்ப வைக்கவும்..
6 அல்லது 7 நிமிடங்களில்...சூடான...சுவையான... பால்கோவா தயார்..!!


INSTANT PAAL GOVA: 
NEEDED THINGS:

CONDENSED MILK (or) MILK MAID - 1 CUP
DRY MILK POWDER - 1/4 CUP
GHEE - 1 TBSP
CURD - 1 TBSP

METHOD:

In a deep microwavable dish, add condensed milk, dry milk powder, ghee, curd.. mix everything, and microwave it for 4-6 minutes..
In between take it out... mix well and keep it again..
From 6- 7 minutes, hot and tasty paalgova is ready...!!

Thursday, June 17, 2010

ஏனோ இன்னும் தாமதம்....??


ஓர்  நாள்...... உன்னுடன்
ஒழுங்காய் பேசவில்லை எனில்..
ஒளியற்று போவதேனோ என் முகமே..!

என் செய்தாய் என் அன்பே
எப்பொழுதும் உன் நினைவே..!

உன் குரலில் தான் என் ஜீவன் உளதோ?
உன் வார்த்தையில் தான் என் வசந்தம் உளதோ?

கண் மூடி யாசித்தேன்....
கடிதம் ஒன்று நீ வரைந்தாய்..
வரைந்த கடிதத்தில்..
வடிவாக உன் முகம் கண்டேன்..!

எனை மீட்க எப்போது வருவாயோ?
ஏங்குகிறேன் உன் வரவிற்காய்....
ஏனோ இன்னும் தாமதம் என்னுயிரே..?

......அன்புடன் ஆனந்தி

Thursday, June 10, 2010

பாடுவோர் பாடினால்.....!!

என்ன இப்படி ஒரு தலைப்புன்னு.. யோசிக்கிறீங்களா.? பொறுங்க, பொறுங்க.. சொல்றேன்.. இங்கே நாங்கள் வசிக்கும் இடத்தில் உள்ள தமிழ் சங்கத்தில் லக்ஷ்மன் ஸ்ருதி, அவர்களின் இன்னிசை விழா, நடந்தேறியது.. நடந்ததற்கான காரணம், இந்தியாவில் உள்ள, படிப்பு வசதியற்ற குழந்தைகளுக்கு உதவும் நோக்கத்தில், இந்த விழா ஏற்பாடு..!!

(சரி சரி, இவ்ளோ நேரம் சீரியஸா ஏனென்று காரணம் சொல்லியாச்சு.. இப்புடு சூடு எப்படி என்ஜாய் பண்ணோம் என்று.. )


நாங்க, ஒரு 18 பேரு, விழாவிற்கு கிளம்பி போனோம்...!! சீக்கிரம் போனால் நல்ல இடத்தில உட்கார்ந்து, பாடுபவர்களை ரசிக்கலாம் என்று.. ரொம்ப சீக்கிரமாவே போய்ட்டோம்.. (பாடுபவர்களில் முக்கியமான ஒருத்தருக்ககவே போனோம்.. ஹிஹி.. யார் தெரியுமா.. கிருஷ்... (ஜூன் போனால் ஜூலை காற்றே..... பாடலை பாடியவர்...) ஹ்ம்ம்ம்.. என்ன வாய்ஸ்.. என்ன வாய்ஸ்... கிருஷ் உடன் பாட, மகதி, மாலதி லக்ஷ்மன், TMS அவர்களின் மகன், எல்லாரும் வந்திருந்தாங்க....!! 


சீக்கிரம் போனதால, பிடித்த மாதிரி ஒரு இடத்துல உக்காந்தோம்.. முதலில் மகதி வந்து, "அலை பாயுதே கண்ணா... என் மனம் அலை பாயுதே....." பாட..... ஆண்கள் அனைவரும் ஒரே விசிலுடன் கூடிய ஆர்ப்பாட்டம் தான்.. அடுத்து, கிருஷ் வந்து, "ஜூன் போனால்...", "ஒரு சின்ன தாமரை...", "நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை..." பாட........ எங்க பங்குக்கு சும்மா இருப்போமா, நாங்களும் விசில், பறக்க... ஒரே ஆர்ப்பாட்டம் தான்.. அந்த நிமிடங்களில் குழந்தையாகவே மாறி விட்டோம் என்று சொல்லணும்..!!

தொடர்ந்து மாலதி வந்து, சும்மா கலக்கு கலக்குன்னு கலக்கிட்டாங்க.. "ஏ..... கொலுசு கடை ஓரத்துல....", "மன்மத ராசா.. மன்மத ராசா....", இந்த மாதிரி ஒரே குத்து சாங்க்ஸ் தான்..

இந்த சாங்க்ஸ் கேட்டதும், 70 வயது மதிக்கத் தக்க, ஒரு ஆன்ட்டி எழும்பி ஆட, எங்க எல்லாருக்கும் கூட உற்சாகம் தொற்றி கொள்ள.. ஹ்ம்ம்ம் ஹ்ம்ம்ம்..

சின்ன பசங்க எல்லாம் ஒன்று சேர்ந்து ஆட..... நாங்களும் ஆட.. மகதியும், மாலதியும் மேடையை விட்டு இறங்கி வந்து, எங்களுடன் சேர்ந்து கொள்ள.. ஒரே ஒரே டான்ஸ் தான்.. அரங்கமே அதிர்ந்தது..!!


சும்மாவா சொல்றாங்க.. பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும் என்று......!! ரொம்ப கரெக்டான வரிகள்....!!

 அந்த ட்ரூப்ல ட்ரம்ஸ் வாசித்தவர், மேடையை விட்டு இறங்கி ஆடியன்ஸ் மத்தியில் வந்து ட்ரம்ஸ் அடிக்க, அவரை சூழ்ந்து நிறைய பேர் ஆட ஆரம்பிக்க.. அடடா.. என்னவென்று சொல்வேன்.. செம ஜாலியா இருந்தது...!!

 சுமார் 8 மணி அளவில் ஆரம்பித்த இன்னிசை மழை... இரவு 12 :10 வரை நடந்தது...!! பாடகர்களும் சரி, லக்ஷ்மன் ஸ்ருதி குழுவில் உள்ளவங்களும் சரி.. கொஞ்சம் கூட சோர்ந்து போகாம, தொடர்ச்சியா பாடிகிட்டே இருந்தாங்க....!!

 ஷோ, பிரேக் டைம்ல மகதி, கிருஷ், மாலதி அனைவரையும் சந்தித்தோம்.. ரொம்ப அலட்டிக்காம  சாதாரணமா அன்பா பழகினாங்க.. மொத்தத்தில் ரொம்ப நாட்களுக்கு பிறகு, எதை பற்றியும் கவலை இன்றி.. ரசித்த மணித்துளிகள் என்று சொல்வேன்...!! இந்த மாதிரி வாய்ப்பு கிடைக்கும் போது, கண்டிப்பா யூஸ் பண்ணிக்கனுங்க...!!


மொத்தத்தில் சின்ன குட்டீஸ் முதல் பெரியவங்க வரை ஆட வைத்த இந்த நிகழ்ச்சி,  மறக்க முடியாத இனிய அனுபவம்...!!

உங்கள் வருகைக்கு மனமார்ந்த நன்றிகள்..!


....அன்புடன் ஆனந்தி

Thursday, June 3, 2010

மசால் கடலை...!!

என்னங்க.. எல்லாரும் சௌக்கியமா.?? சரி, வாங்க அப்படியே ஒரு காஃபி சாப்பிட்டுட்டு, சூடா மசால் கடலையும் சாப்பிடலாம்.. :)
ஹலோ, கடலைன்னதும் வேற எதுவும் யோசிக்காம ரெசிபி பாருங்க.. :)

மசால் கடலை


தேவையான பொருட்கள்:


வேர்கடலை - 2 கப்
கடலை மாவு - 1 / 4 கப்
மிளகாய்த்தூள் - 2 tsp
கரம் மசாலா - 1 / 2 tsp (பிரியப்பட்டால்)
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
 செய்முறை:

ஒரு அகலமான பாத்திரத்தில் வேர்கடலை, கடலை மாவு, மிளகாய்த்தூள், கரம் மசாலா, கிள்ளிய கறிவேப்பிலை, உப்பு இவற்றை நன்கு கலந்து கொண்டு, பிறகு.. சிறிது சிறிதாக உள்ளங்கையில் தண்ணீர் எடுத்து... அதை கலவையில் கலக்கவும்.. ஒரே நேரத்தில் மொத்தமாக தண்ணீர் விட கூடாது.. கலவை, உதிரியாக இருக்க வேண்டும்..


பின் ஒரு வாணலியில், எண்ணெய் சூடாக்கி கொஞ்சம் கொஞ்சமாக, உதிர்த்து விட்டு, பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.. மிகவும் எளிதான செய்முறை.. ஆனால் தண்ணீர் தெளித்து கடலையை கலப்பதில் தான் இருக்கிறது...  விஷயம்... :)

For Friends who dont know Tamil.. :)

Needed things:
Raw Peanuts - 2 cups
Gram Flour - 1/4 cup
Red Chilli powder - 2 tsp
Garam masala powder - 1/2 tsp (optional)
Curry leaves - little
Salt as needed. 

Method:

In a big vessel add peanuts, gram flour, red chilli powder, garam masala powder, chopped curry leaves,salt. Mix everything well, then add little by little water, by sprinkling it on top then mix it well. Do not add too much water at once.. The mix has to be in separate grains..

Now, heat some oil in a vessel, and add little by little at a time, and fry it until golden color.. Its very simple and delicious recipe.. but, the whole trick is in mixing the nuts only.. :)

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)