topbella

Tuesday, July 20, 2010

உன் மௌனம்..!உன்னை நெருங்க நினைத்தேன்...
நீ விலகியே நின்றாய்...
விரும்பும் இதயம் விலகி நின்றால்
வெடித்து சிதறுகிறதே உள்மனம்..!
உன் மௌனத்தின்
இடைவெளி நீண்டதால்..
என் மனதிற்குள்
ஆயிரம் சலனங்கள்..!
ஓராயிரம் வார்த்தைகள்
சொல்ல நினைத்தும்
உன் மௌனத்தால்
என்னை ஊமையாக்கினாய்..!
நீ பேசினால்
சொர்க்க சுகம் என்றால்..
பேசாமல் இருந்தால்
நரக வேதனை அன்றோ?

உன் மௌனம்
கலைக்க வழியின்றி..
உள்ளன்பை உன்னிடமே..
உளறி கொட்டினேன்..!

அதெப்படி உன்னால் மட்டும்
எந்த பாதிப்பும்
இல்லாத மாதிரி
இப்படி இருக்க முடிகிறது...??

Thursday, July 15, 2010

தொடரும் உள்ளங்களுக்கு நன்றி..நன்றி..நன்றி..!!!

வெற்றி வெற்றி வெற்றி...!!
(எனக்கு என்ன சொல்லன்னே தெரியலயே? என்னன்னு சொல்வேன், எப்படி சொல்வேன்...?)

முதலில் என்னையும் நம்பித் தொடரும் 100 நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்...! என்னைத் தொடராமலயே, எனக்கு பின்னூட்டம் அளித்து தொடர்ந்து உற்சாகப் படுத்தும் நண்பர்களுக்கும் என் நன்றிகள்..!!

முதல் முறையாக, என்னைத் தொடரும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும், உங்கள் நட்பைப் பாராட்டி ஒரு விருது (பரிசு) தரேன்.. மறுக்காம வாங்கிக்கொள்ளுங்கள்..!


நண்பர்கள் கிட்ட கலாட்டாவா பேசறது, கவிதை-என்கிற பெயரில் எதாவது கிறுக்குவது, புது புதுசா எதாவது சமையல் செஞ்சு பாக்கறது, வீட்டை அழகு படுத்தி பாக்கறது, பிரண்ட்ஸ் கூட சேர்ந்து கும்மி அடிக்கறது, ஷாப்பிங் போறது.... இதெல்லாம் மட்டுமே என் உலகமாக இருந்தது..


இந்த பதிவுலகில், நான் வந்து சேர என் தோழி சித்ரா காரணம்..!

இங்க வந்து, நிறைய புது நண்பர்கள் கிடைத்திருக்காங்க..! நிறைய, புது தகவல்கள் தெரிஞ்சிக்க முடியுது.. இதுவும் ஒரு குடும்பம் போல தான் எனக்கு தோணுகிறது..!


உங்க  உற்சாகமான பின்னூட்டங்கள் தான் என்னை மேலும் மேலும் எழுத வைக்கிறது..!


இந்த 100 நண்பர்கள் தொடர்தல் பற்றி.. என்னிடம் பேட்டி எடுக்க, நம்ம சுடுதண்ணிப் புகழ் ஜெய்லானி வந்திருக்காக.. ( என்ன கொஞ்சம் ஓவர் பில்ட்-அப்பா இருக்கோ? சரி சரி.. இன்னிக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.. :D :D )ஜெய்லானி: வாழ்த்துக்கள் ஆனந்தி..

ஆனந்தி:  நன்றி ஜெய்லானி..

ஜெய்லானி: இப்ப தான் மார்ச் மாசத்துல இருந்து எழுத ஆரம்பிச்சீங்க..அதுக்குள்ள followers -ல சதம் அடிச்சிட்டீங்களே..!

ஆனந்தி: (கண்களை துடைத்துக் கொண்டு) ஒன்னும் பயப்பட வேணாம்.. ஆனந்த கண்ணீர் தான்.. என்னத்த சொல்றது, ஜெய்..   அத்தனையும்,  பாசக்கார பய புள்ளைங்களா இல்ல இருக்கு..!

ஜெய்லானி: உங்களுடைய நோக்கம் தான் என்ன..?

ஆனந்தி: (யாருயா இவரு.... அவன் அவன் நோக்கம் வச்சி எழுதினாலே ரவுண்டு கட்டி அடிக்கிறானுங்க..) இப்போதைக்கு மத்தவங்கள கொடும படுத்தாம இருக்கறது..

ஜெய்லானி: இந்த விருது விருதுன்னு உங்களுக்கு குடுக்குறாங்களே... அத ஏன் நீங்க மத்த யாருக்கும் தரது இல்ல? (மவளே மாட்டினியா.. மாட்டினியா..)

ஆனந்தி: (ஆஹா.. போட்டு வாங்கறது இது தானோ? ) அதாவது... மத்தவங்களுக்கு விருது குடுக்கற அளவுக்கு, நான் இன்னும் பெரிய ஆள் இல்லைங்க..!

ஜெய்லானி: அது சரி...! 

ஆனந்தி: ரொம்ப நன்றிங்க.. என்ன மதிச்சு பேட்டி எடுக்க வந்ததுக்கு.. இப்போ எனக்கு அவசரமா ஒரு பதிவு போடற வேலை இருக்குங்க.. நா வரட்டுமா..!!

உங்க வருகைக்கு நன்றிங்க....! இந்தப் பூக்களும், சாக்லட்டும் உங்களுக்கு தான்..!

Wednesday, July 14, 2010

எலியின் எகத்தாளம்...!!

ரொம்ப நாளாவே இந்த எலி மேட்டர் சொல்ல நினச்சு, மறந்து மறந்து போகுது.. இன்னிக்கு விடறதா இல்ல.. எப்படியும் சொல்லிற வேண்டியது தான்..!


ஓகே.. எங்க இருந்து ஆரம்பிக்கறது.. சரி, என் வண்டியில் இருந்து ஆரம்பிக்கலாம்.. எங்கும் வெளியூர்  போனால், வழியில் எதாவது சாப்பிட ஸ்நாக்ஸ் வாங்கி வண்டியில் வைத்து சாப்பிடுவது வழக்கம்... அப்படி ஏதும், நொறுக்கு தீனி சாப்பிட்டு, அங்கங்கே எதுவும் சிதறி இருக்கும் போல இருக்கு..


அப்போ அப்போ, வண்டிய கிளீன் பண்றதும் உண்டு தான்.. அதிலும் சில பல, மிஸ் ஆகி இருக்கும் போல..  இத ஏன் திரும்ப திரும்ப சொல்றேன்னு இப்போ தெரியும் உங்களுக்கு..சில மாதங்களுக்கு ஒரு தரம், வண்டிக்கு ஆயில் சேன்ஜ் பண்ணனும்... அப்படியே வண்டி மெயிண்டனன்ஸ் பண்ணனும்..   அதுக்காக வண்டிய எடுத்துட்டு போய் விட்டாச்சு.. அதுல பாருங்க.. சுமாரா ஆயில் சேன்ஜ்க்கு 20 முதல் 30 டாலர் வரை செலவு ஆகும்.... அப்புறம் மெயிண்டனன்ஸ்-க்கு ஒரு 100 முதல் 150 டாலர் வரை ஆகும்...


டீலர் போன் பண்ணி, 500 டாலர் ஆகும்னு சொன்னாங்க.. எங்களுக்கு பேரதிர்ச்சி... :O

என்னது 500 டாலர்-ஆ??? நம்ம என்ன பென்ஸ் காரை-யா மெயிண்டனன்ஸ்க்கு விட்டோம்-னு எங்களுக்கே டவுட் வந்திரிசின்னா பாருங்களேன்..!!


ஏன், எதுக்கு..?? வண்டியில ஏதும் பிரச்சனையா-னு கேட்டா.. வண்டியோட, முகப்பு  பானர்-ஐ திறந்து காமிச்சாங்க... அங்க தான் மேட்டரே....!! உள்ளே இருந்த வயர் எல்லாம் கடிச்சு, லாலி பாப் குச்சி, சாக்லேட் பேப்பர், இன்னும் இதர பல சாமான் செட்டோட... எலி குடும்பம் நடத்திட்டு இருந்திருக்கு.


"ஏன்டா, நீ வீடு கட்டி விளையாட என் வண்டி தானா கிடைச்சதுன்னு..??" எலி கிட்ட கேக்கவா முடியும்.. அவ்வ்வ்வவ்வ்வ்வவ்...


வேற என்ன பண்றது, கேட்ட பணத்த குடுத்துட்டு வண்டி சரி செஞ்சு வாங்கிட்டு வந்தாச்சு.. அதுல இருந்து, யாரவது எதாவது சாப்பாடு பொருள் வண்டியில கீழ போட்டா செம டென்ஷன் ஆகுது..  ஹ்ம்ம்.. என் பிரச்சினை எனக்கு....!!

இந்த பிரச்சனைக்கு அப்புறம், வண்டி ஓட்டும் போதும், உள்ளூர பயம் தான்.. எலி உள்ள இருக்குமோன்னு..!! அதனால, எப்பவும் அலர்ட்டா தான் வண்டி  ஓட்றேனாக்கும்...! :D :Dசரி அப்போ, நா கிளம்பட்டா...?? இன்னொரு, எலி மேட்டர் இருக்கு, பிறகு சொல்றேன்..! பதிவை படித்தவர்களுக்கு நன்றிகள் பல..!

Tuesday, July 6, 2010

தூது போகாதே...!!
துள்ளித் திரிந்த என்னை...
தூதாய் அனுப்பினாய் பெண்ணே...
தூது சென்ற பாவம்...
எனைச் சேர்ந்த நெஞ்சோ தூரம்...!!
தூரம் சென்ற உறவை எண்ணி..
என்னிரு கண்ணிலும் ஈரம்..
ஓரமாய் ஒதுக்க நினைத்தும் கூட
மனம் பாரமாய் வலிப்பதும் ஏனோ..??
சரி.. விடு..
யாருக்கில்லை இந்த பாரம்..
காலம் சென்றால் கவலை போகும்....!!


நண்பர்களாகவே இருந்தாலும், யாருக்காகவும் தூது செல்வதற்கு முன், பல முறை யோசித்துச் செய்ய வேண்டும்..! இது நான் கற்ற பாடம்..!


உதவி செய்வதாய் உன் நினைப்பு.. அது
உனக்கு நீயே வைத்துக்கொள்ளும் ஆப்பு..!!

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)