topbella

Wednesday, December 29, 2010

எனக்கு பிடித்த 2010 பாடல்கள்..! (தொடர் பதிவு)


எனக்கு பிடித்த 2010 பாடல்கள்..... தொடர் பதிவிற்கு சௌந்தர் அழைத்திருந்தாங்க.... ஒரு தரமாவது, தொடர் பதிவை... கூப்பிட்டதும் எழுதி விடணும்னு... ஒரு ஆசை.. யாரும் அதிர்ச்சி ஆக வேணாம், குறிப்பா சௌந்தர்... ஹிஹி.. நாங்களும், உடனே தொடர் பதிவு எழுதுவமாக்கும்... 

எனக்கு பிடிச்ச 10 பாடல்களை, உங்களோட பகிர்ந்து கொள்கிறேன்...!   


காதல் அணுக்கள் உடம்பில் ....எந்திரன்

  • பாடியவர்: விஜய் பிரகாஷ், ஷ்ரேயா கோஷல் 
  • இசை: A. R. ரஹ்மான் 
  • பாடலாசிரியர்: வைரமுத்து
காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை
ந்யூட்ரான் எலெக்ட்ரான் 
உன் நீலக்கண்ணில் மொத்தம் எத்தனை
உன்னை நினைத்தால்
திசுக்கள் தோறும் ஆசை சிந்தனை
அய்யோ... சனா ...சனா ...ஒரே வினா



பூக்கள் பூக்கும் தருணம் ....மதராசபட்டினம்

  • பாடியவர்: ஹரிணி, ரூப் குமார், ஆண்ட்ரியா, G.V. பிரகாஷ் குமார்
  • இசை: G.V. பிரகாஷ் குமார் 

பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே, பார்த்ததாரும் இல்லையே
உலரும் காலை பொழுதை முழுமதியும் பிரிந்து போவதில்லையே
நேற்றுவரை நேரம் போக வில்லையே, உனதருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே, இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே... இது எதுவோ?



மன்னிப்பாயா .... விண்ணை தாண்டி வருவாயா

  • பாடியவர்: A.R. ரஹ்மான், ஷ்ரேயா கோஷல் 
  • இசை: A.R. ரஹ்மான் 
  • பாடலாசிரியர்: தாமரை
    கடலினில்  மீனாக  இருந்தவள்  நான் 
    உனக்கென  கரை  தாண்டி  வந்தவள்  தான்
    துடித்திருந்தேன்  தரையினிலே
    திரும்பிவிட்டேன்  என்  கடலிடமே...
    ம்ம்ம்ம்...

    ஒரு  நாள்  சிரித்தேன், மறு நாள்  வெறுத்தேன்
    உனை  நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே

    மன்னிப்பாயா ....  மன்னிப்பாயா....  மன்னிப்பாயா....



    காதல் வந்தாலே.....சிங்கம் 

    • பாடியவர்: பாபா சேகல், பிரியதர்ஷினி 

    • இசை: தேவிஸ்ரீ பிரசாத் 



    காதல் வந்தாலே காலு ரெண்டும் தன்னாலே
    காத்தா சுத்துதே உந்தன் பின்னாலே
    ஆசை வந்தாலே ஐ லவ் யூ சொன்னாலே..
    கண்ணு ரெண்டும் சுத்துதே உந்தன் முன்னாலே
    திட்டம் போட்டு பார்த்து திமிராய் பேசி
    என்னை நீ வளைச்ச .. ஓ யே.. ஓ.
    .



    என் காதல் சொல்ல நேரம் இல்லை .....பையா 

    • பாடியவர்: தன்வி, யுவன் சங்கர் ராஜா

    • இசை: யுவன் சங்கர் ராஜா


    என் காதல் சொல்ல நேரம் இல்லை
    உன் காதல் சொல்ல தேவை இல்லை
    நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
    உண்மை மறைத்தாலும் மறையாதடி...


    உன் கையில் சேர ஏங்கவில்லை
    உன் தோளில் சாய ஆசையில்லை
    நீ போன பின்பு சோகம் இல்லை
    என்று பொய் சொல்ல தெரியாதடி....





    அவள் அப்படி ஒன்றும் அழகில்லை .....அங்காடி தெரு 

    • பாடியவர்: வினீத் ஸ்ரீனிவாசன், ரஞ்சித், கோரஸ்
    • இசை: விஜய் அன்டனி 
    • பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்

    அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
    அவளுக்கு யாரும் இணை இல்லை
    அவள் அப்படி ஒன்றும் கலர் இல்லை

    ஆனால் அது ஒரு குறை இல்லை...



    நீயும் நானும் வானும் மண்ணும் ......மைனா

    • பாடியவர்: பென்னி தயால், ஷ்ரேயா கோஷல்
    • இசை: D .இம்மான்
    • பாடலாசிரியர்: ஏக்நாத்

    நீயும் நானும் வானும் மண்ணும் 
    நெனச்சது நடக்கும் புள்ள
    வீசும் காத்தும் கூவும் குயிலும்
    நெனைச்சது கெடைக்கும் புள்ள 

    நடந்தா அந்த வானத்துக்கும் நன்றி சொல்லுவேன்
    கெடைச்சா கொஞ்சம் நட்சத்திரம் அள்ளித்தருவேன்






    கைய புடி கண்ணப் பாரு ....மைனா

    • பாடியவர்: நரேஷ் அய்யர், சாதனா சர்கம்
    • இசை: D. இமான் 
    • பாடலாசிரியர்: யுகபாரதி

    கையப்புடி  கண்ணப்பாரு உள் மூச்ச வாங்கு
    நெஞ்சோடு நீ
    கொஞ்சம் சிரி எட்டு வையி தோள் சாய்ந்து தூங்கு
    இப்போது நீ
    மெதுவா பாரு எதையாவது
    பனிபோல் நீங்கும் சுமையானது
    இனிமேலே...



    யார் இந்த பெண்தான் .....பாஸ் என்கிற பாஸ்கரன் 

    • பாடியவர்: ஹரிசரண்
    • இசை: யுவன் சங்கர் ராஜா
    • பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்

    யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே 
    இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
    என்னை பார்க்கிறாள்.... ஏதோ கேட்கிறாள்.....
    எங்கும் இருக்கிறாள் ஹோ ஹோ ஹோ..



    ஹோசனா ......விண்ணைத்தாண்டி வருவாயா 

    • பாடியவர்: விஜய் பிரகாஷ், சுசேன் டி'மெல்லோ, ப்ளேஸ்
    • இசை: A.R.ரஹ்மான் 
    • பாடலாசிரியர்: தாமரை, ப்ளேஸ் 
    என் இதயம், உடைத்தாய் நொறுங்கவே
    என் மறு இதயம், தருவேன் நீ உடைக்கவே 

    Oh Ooh Ooho ஹோசனா.. ஹோசனா.. Ohh Ohh
    அந்த நேரம் அந்தி நேரம்
    கண் பார்த்து கந்தலாகி போன நேரம் ஏதோ ஆச்சே.....




    இவ்ளோ நேரம் பொறுமையா என்னுடைய பகிர்வை படித்த உங்களுக்கு.. நன்றிங்க :-))

    Wednesday, December 22, 2010

    எனக்குப் பிடித்த 10 ரஜினி படங்கள்...!! -தொடர் பதிவு

    ரஜினி நடித்த படங்களில் எனக்கு ரொம்ப பிடிச்ச படங்கள் வரிசை படுத்த சொல்லி சௌந்தர் தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருக்காங்க... கால தாமதத்திற்கு மன்னிக்கவும்..

    பொதுவா ரஜினி படம்னாலே ஒரு க்ரேஸ் உண்டு... எனக்கு முக்கியமா ரஜினி கிட்ட பிடிச்சது, அவரு ஸ்டைல்... அப்புறம் டீசென்ட் நடிப்பு.. நம்பி குடும்பத்தோட போயி ரஜினி படம் பாக்கலாம்... தர்மசங்கடங்கள் எதுவும் இருக்காது..! சரி ரொம்ப வளவளக்காம, லிஸ்ட் பார்ப்போமா...? இதுல எது முதல் இடம், எது பத்தாவது இடம்னு எல்லாம்  சொல்ல முடியாது.. எல்லாமே.. எனக்கு ரொம்ப பிடித்த டாப் 10 ரஜினி படங்கள் தான்..!

    தளபதி...!


    தளபதி படத்தில் மம்முட்டியுடன் ரஜினி, கலக்கி இருப்பார்.. ரெண்டு பேருமே, ஒருவரை ஒருவர் மிஞ்சிய நடிப்பு.. சூர்யா என்ற கேரக்டர்-ஆகவே மாறியிருப்பார்... அன்னையின் பாசத்தை காட்டும் இடங்களில் நமக்கு கண்ணீர் வருவதை தவிர்க்க முடியாது.. தேவாவாக வரும் மம்மூட்டி ஒவ்வொரு இடத்திலும் "என் நண்பன்டா... என் தளபதி..டா..." ன்னு சொல்ற இடமெல்லாம் அந்த வார்த்தைக்கு பொருத்தமான..... கம்பீரமான ஒரு கதாபாத்திரம் ரஜினியாக மட்டுமே இருக்க முடியும்... இந்த படத்தில் வரும் "சின்னத் தாயவள்........", "யமுனை ஆற்றிலே.........", "சுந்தரி கண்ணால் ஒரு சேதி........." சரி விடுங்க.. எல்லா பாட்டுமே ரொம்ப பிடிக்குங்க...

    எஜமான்....!

    ஆஹா... எனக்கு ரொம்ப பிடிச்ச படம்.. வீட்டில் அதிகம் தியேட்டர் போயி படம் பார்க்கும் வழக்கம் இல்லை.. வெகு அபூர்வமாகத்தான் செல்வதுண்டு... அப்படி நான் பார்த்த படங்களில் எஜமான் மறக்க முடியாத படம்.. நெப்போலியனுடன் மோதும் போதும், மனைவியிடம் காட்டும் அன்பின் போதும்... மக்களிடம் காட்டும் அக்கறையின் போதும், நடந்து வரும் கம்பீரத்திலும்....... ரஜினி ரஜினி தான்... கலக்கி இருப்பார்.. இதில் வரும்.. "ஆலப்போல் வேலப்போல்.....", "ஒரு நாளும் உனை மறவாத....", "நிலவே முகம் காட்டு....." பாடல்கள் சூப்பர்ர்ர்...!!

    பாட்ஷா......!

    என்னை கவர்ந்த இன்னொரு ரஜினி படம் என்றால், அது பாட்ஷா...தான்... ஸ்டைலுக்கு ரஜினி-ன்னு சொன்னா மிகையாது... அவ்ளோ செமையா இருக்கும் இதுல அவர் நடிப்பு.. தங்கைக்காக மெடிக்கல் காலேஜ் சீட் வாங்க போகும் காட்சி.. இன்னமும் கண்முன் நிற்கிறது... அந்த காட்சியில், ரஜினி.. ரூமை விட்டு வெளியில் வரும் போது.. தங்கை.. என்ன ஆச்சு அண்ணா... னு கேக்கும் போது.. உனக்கு சீட் கண்டிப்பா உண்டும்மான்னு சொல்லும் போது... எப்படி அண்ணா? என்ன சொன்னிங்க.. என்ன சொன்னிங்கன்னு..? கேக்கும் தங்கையிடம்........அசால்ட்டா.... உண்மைய சொன்னேன்....னு சொல்ற இடம்... செம செம.. அச்சோ... எனக்கு இப்போ கூட விசில் அடிக்க தோணுது...

    அண்ணாமலை...!

    ரஜினி, குஷ்பூ... சூப்பர் நடிப்பு ரெண்டு பேருமே.. லேடீஸ் ஹாஸ்டல் உள்ள ரஜினி வர சீன்ஸ் எல்லாம்... செம காமெடி.. ரஜினி, ஒரு இடத்துல "கண்ணா.... கூட்டி கழிச்சு பாரு.. எல்லாம் கரெக்ட்-ஆ இருக்கும்-னு" சொல்ற இடம்.. ரொம்ப பிடிக்கும்.. இதுலயும் நட்பின் முக்கியத்துவம் இருக்கும்... இதில வர... "கொண்டையில் தாழம்பூ.....", "அண்ணாமலை அண்ணாமல....", "ஒரு பெண் புறா....".. பாட்டெல்லாம் நல்லா இருக்கும்..


    சிவாஜி...!

    ரொம்ப நாளைக்கு பிறகு.. புது ஸ்டைல்ல வந்த ரஜினி படம்.. "ஒரு கூடை சன்லைட்..." சாங் சூப்பர்....ஹிட்.. அதுல ரஜினி கலர்... ஹ்ம்ம்ம்... சூப்பர்...! வாங்க பழகலாம்..னு படம் முழுக்க சாலமன் பாப்பையா, ராஜா வோட ரஜினி பண்ற கூத்து பாத்து பாத்து ரசிக்கலாம்.. வீட்டில் சென்சஸ் ஆபீசர் மாதிரி வந்து பண்ற கலாட்டா தான் ஹைலைட்... அதிலும், அந்த காமெடி முடிவுல... லிவிங்க்ஸ்டன் என்டர் ஆகி.. "லக லக லக லக..."ன்னு சொல்லறது ஒரே காமெடி தான்.. இதுல வர "சஹானா...." பாட்டு, படமாக்கப்பட்ட விதம் அட்டகாசமா இருக்கும்.. ரொம்ப பிடிச்ச சாங்..

    சந்திரமுகி...!

    சொல்லவே தேவை இல்ல...இந்த சூப்பர் டூப்பர் ஹிட் படம் பத்தி.. வடிவேலு..ரஜினி காமெடி பெஸ்ட் இந்த படத்துல.. "மாப்பு வசிட்டன்யா ஆப்பு...." ஃபேமஸ் டயலாக்...! அதே மாதிரி.. வேட்டையனா வர ரஜினி.. சொல்ற "லக லக லக லக.............." ல தியேட்டர் அதிரும்.. "ரா ரா.........சரசுக்கு ரா ரா...", "கொஞ்ச நேரம்..கொஞ்ச நேரம்...." இந்த பாட்டெல்லாம் எனக்கு ரொம்பவும் பிடிச்ச பாடல்கள்... ஜோதிகா, சந்திரமுகியா மாறுற இடமெல்லாம் நல்லா இருக்கும்..!

    படையப்பா...!

    இந்த படத்தில் சிவாஜி, ரஜினி காம்பினேஷன் கலக்கல்.. ரம்யா கிருஷ்ணன், நீலாம்பரியா... அட்டகாசமா நடிச்சிருப்பாங்க.. சிங்க நடை போட்டு.. சிகரத்தில் ஏறு.... பாடல்-ல.. சொல்ற மாதிரி.. ரஜினி சிங்கம் மாதிரி தான் நடந்து வருவார்.. இந்த படத்துல வர.. "சுத்தி சுத்தி வந்தீக...", "மின்சார கண்ணா...என் மன்னா", "வெற்றி கொடி கட்டு..." பாட்டெல்லாம் ரொம்ப நல்லா இருக்கும்..!
     
    Mr. பாரத்...!

    சத்யராஜ், ரஜினி காம்பினேஷன்... ரொம்ப நல்லா இருக்கும்.. இது ஒரு கிளாச்சிக் ஸ்டோரி தான்.. அம்மாவிற்கு துரோகம் பண்ணின அப்பாவை தேடி கண்டுபிடிச்சு, தாயின் சபதம் நிறைவேற்றல்..! இடையில் வர சலசலப்பெல்லாம் ரசிக்கிற மாதிரி இருக்கும்... "பச்ச மிளகா அது காரம் இல்ல....", "எந்தன் உயிரின்..", பாடல்கள் மற்றும், ரொம்ப ரொம்ப... ஹிட் ஆனா.. "என்னம்மா கண்ணு..." சாங்.. டாப்..!
     
    நான் அடிமை இல்லை...!

    எப்பவும் போல, நாயகியை ரவுடிகளிடம் இருந்து மீட்கும் ரஜினி, மீது காதல் கொண்டு, தன் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக தொடங்கிய பிரச்சினைகள்.  தன்மானம் மிக்க கதாநாயகன், கருத்து வேறுபாட்டில் நாயகியைப் பிரிந்து, பின்னர் இருவரும் சேர்வது தான் படம்.. ஸ்ரீதேவியும், ரஜினியும்... போட்டி போட்டு சூப்பர்-ஆ நடிச்சிருப்பாங்க.. அதில் வரும் "ஒரு ஜீவன் தான்.. உன் பாடல் தான்..." ரொம்ப ரொம்ப பிடிச்ச சாங்.. அப்போ உள்ள ஸ்டைலில் சோகப் பாட்டும் இதே சாங் வரும்.
     
    எந்திரன்...!

    ரொம்ப நாள் கழிச்சு, அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, வெளி வந்த படம்.. முதல் பாதி, விறு விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் அட்டகாசமா இருந்தது.. இரண்டாம் பாதியில், முழுக்க முழுக்க கிராபிக்ஸ் ஆக்கிரமிப்பு.. ரஜினியின் நடிப்பை இன்னும் கொஞ்சம் பார்க்க முடியவில்லை என்று சின்ன வருத்தம்..  கிளைமாக்ஸ்-ல் கிராபிக்ஸ்.. உண்மையில் டாப்... வசியாக வரும் ரஜினியோ, அலட்டாமல் நடிப்பு என்றால், சிட்டி-யாக வரும் ரஜினி, ஒரே கலகலப்பில், வில்லன் ரோபோ-வாக வரும் ரஜினி.. நடிப்பில் கலக்கல்.. சிட்டியாக வரும் ரோபோ... "ஹூ இஸ் தட் செல்லாத்தா? " ன்னு கேக்குற இடம், செம செம...காமெடி.. அதே மாதிரி தான் வில்லன் ரோபோ-வாக வரும் ரஜினி "சோல்ஜர்ஸ் ரோடேட் யுவர் ஹெட்ஸ்...."ன்னு சொல்ற இடமும்....அதிரடி தான்..! இதில் வரும் "காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை...." சூப்பர் சாங்..

    ஸூஊஊஉ.. எப்பா சாமி ஒரு வழியா எழுதி முடிச்சிட்டேன்.. இந்த தொடர் பதிவுக்கே...இம்புட்டு நாள் எடுத்திருக்கேன்... இந்த அழகுல... தொடர் பதிவு சீக்கிரம் எழுதலன்னா, அடுத்த தொடர் பதிவுக்கு கூப்பிடுவோம்-னு மிரட்டல் வேற.. எவ்ளோ அடியைத் தான் தாங்குறது...!

    நா நார்மல் பதிவு எழுதரதுலயே ரொம்ப சுறுசுறுப்பு.. இதுல தொடர் பதிவு... ஹ்ம்ம்.. எப்படியும் சமாளிப்போம்ல...!

    ஆத்தா நா பாசாயிட்டேன்னு.........கத்தனும் போல இருக்கு.. (ஹ்ம்ம் கும்ம்....அத நாங்க சொல்லணும்..... அதானே... ஹிஹி.. .. உங்க மைன்ட் வாய்ஸ் கேக்குதுங்க..) சரி சரி.. பயப்புடாதீங்க.. அப்படி எல்லாம் சொல்லாம கொள்ளாம செய்ய மாட்டேன்.. ரெம்ப நன்றிங்க.. வந்து, பொறுமையா படிச்சதுக்கு...!!

    மீண்டும் உங்களை சந்திக்கும் வரை.. உங்களிடம் இருந்து விடை பெறுவது ஆனந்தி....!


    Friday, December 17, 2010

    எங்கள் வீடு....!!



    ஆறு அறைகள் கொண்ட
    அம்சமான மாளிகை....
    என் அப்பா தன் அன்னையின்
    பெயரில் கட்டிய அன்பு ஆலயம்...

    குருவிகளாய் நால்வர் நாங்கள் 
    கும்மாளமிட்டு கூடி வாழ்ந்த இடம்...
    இளம் பச்சை நிறத்தில்
    வெளி வண்ணப் பூச்சும்
    அடர் அரக்கு நிறத்தில் அதன்   மேல்
    அழகாய் எழுத்துக்களும்...

    வெளியில் நின்று பார்த்தாலே
    வெகுவாய் கவரும் தென்னை மரங்களும்
    உள்ளே நுழைந்ததும்
    உபசரிக்கும் அழகு ரோஜாக்களும்
    நெஞ்சை அள்ளும் டிசம்பர் பூக்களும்
    கூட்டமாய் கூடி நிற்கும்
    குரோட்டன்ஸ் செடிகளும்...

    அப்படியே உள்ளே வந்தால்
    அங்குமிங்கும் கனகாம்பரமும்..
    அழகழகாய் பூத்திருக்கும்
    அடுக்குச் செம்பருத்திப் பூக்களும்...

    பாத்திகளில் பாங்காய் சிரிக்கும்
    கீரை வகைகளும்...
    பக்கத்திலேயே வளர்ந்து நிற்கும்
    பப்பாளி  மரமும்....

    கொத்து கொத்தாய் காய்த்திருக்கும்
    கொய்யா மரமும்....
    சிரித்தாற்போல் சித்திரமாய்
    சீத்தாப்பழ மரமும்...

    அணில் வந்து கடிக்காமலிருக்க
    அங்கங்கே அப்பா கட்டி வைத்த
    ஆவின் பால் பாலிதீன் பைகளும்...

    அதை தாண்டி இப்புறம் வந்தால்
    அழகான துளசி மாடமும்...
    அதற்குள்ளே அம்சமாய் ஒரு
    அகல் விளக்கும்...

    இத்தனை தவிரவும்
    இதர  பல செடி, கொடிகளுடன்
    இயற்கையுடன் ஒன்றி
    இன்பமாய் வாழ்ந்த வீடு
    எங்கள் வீடு....!!


    இது அத்தனையும் எங்கள் வீட்டில் உண்டு... அதெல்லாம் இப்போ ரொம்ப மிஸ் பண்றேன்..... அம்மா, அப்பா, உடன் பிறந்தோர், சொந்த பந்தம் மட்டும் இல்லாம நம்ம வாழ்ந்த வீடும் நமது வாழ்வின் அங்கமாகவே மாறி விடுவது.... உண்மைதானே...!!


    பகிர்வைப் படித்ததற்கு நன்றிகள் பல...!!


    (பி. கு.:  இந்த மஞ்சள் செம்பருத்தி எங்கள் வீட்டில் பூத்த மலர்....!! )

    ...அன்புடன் ஆனந்தி

    Wednesday, December 8, 2010

    காரக் குழம்பு....!!


    தேவையான பொருட்கள்:

    வெங்காயம் - பெரிது 1              
    தக்காளி - பெரிது 1
    பூண்டு - 5 பல்
    மிளகாய்ப் பொடி - 2 டீஸ்பூன்
    மல்லிப்பொடி - 2 டீஸ்பூன் 
    காய் - கத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய் எது பிடித்தமோ அந்த காய்..
    புளி - சின்ன எலுமிச்சை அளவு (ஊற வைத்து சாறு எடுக்கவும்)


    தாளிக்க:

    கடுகு - 1 / 4 ஸ்பூன்
    வெந்தயம் - ஒரு சிட்டிகை
    சீரகம் - 1 / 4 ஸ்பூன்
    கறிவேப்பிலை - கொஞ்சம்

    அரைக்க:

    தக்காளி - 1 பெரிது
    சீரகம் -  1 / 4 ஸ்பூன்
    தேங்காய் - 5 டேபிள் ஸ்பூன்
    (இவை எல்லாமும் சிறிது தண்ணீர் விட்டு, நன்கு மசிய அரைத்துக் கொள்ளவும்)

    செய்முறை:
            
    ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

    அதில் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், பூண்டு போட்டு சிறிது நேரம் வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியதும், நறுக்கிய காயைப் போட்டு, சிறிது நேரம் வதக்கி பின்  நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்கு வதங்கியதும், அதில் மிளகாய் பொடி, மல்லிப்பொடி சேர்த்து, வதக்கி, கரைத்து வைத்திருக்கும் புளி சாரைச் சேர்க்கவும்.

    குழம்பிற்கு தேவையான அளவு உப்பு, தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும்.. பொடி வாசனை போனதும், அரைத்து வைத்துள்ள மசாலா (தக்காளி, சீரகம், தேங்காய் கலவை) சேர்த்து நன்கு கொதிக்க விட்டு எண்ணெய் தெளிய ஆரம்பிக்கவும் இறக்கவும்.

    இதை சூடான சாதத்தில் விட்டு, அப்பளம் சேர்த்து சாப்பிடலாம்...!!

    வந்தது தான் வந்தீங்க... ஒரு வாய் சாப்பிட்டு போங்க...! :-))





    (காரம், புளிப்பு அவரவர் தேவைக்கு ஏற்ப கூட்டி குறைத்துக் கொள்ளலாம்....)

           









    Tuesday, November 30, 2010

    வற்றாத உன் நினைவு...!!!


    வளர் பிறை நிலவாய்
    வஞ்சி என் நெஞ்சத்தில்
    வற்றாத உன் நினைவுகள்..!

    பால் நிலவைக் காண்கையில்
    எல்லாம் நான் செய்த
    பாக்யமாய் உன் உறவு..!

    பகலும் என்னுடன் பகை கொள்ள
    இரவும் என்னிடம் இம்சை செய்ய
    உன் உறவிற்காய் உருகும் நான்..!

    தொடரும் நாட்களில்
    தொடவும் கூடாதென்றாய்..
    தொலைவில் நிற்கையிலும்
    தொல்லை செய்கிறாய்...!

    அன்பின் வலி என்னை
    உன்னருகில் இழுக்கையில்
    அருகில் வந்தாலோ
    அந்நியனாய் ஆகின்றாய்..!

    நித்திரையில் கூட உன்
    நினைவலைகள் தொடர..
    சித்ரவதை செய்துவிட்டு
    சிரித்துச் செல்கிறாயே..!

    கண்ணாமூச்சி ஆட்டம் ஆட
    கண்ணாளா உனக்குக்
    காலம் கூட இருக்கிறதா என்ன?

    கற்கண்டாய் இனிக்கும் உன்
    சொற்கொண்டு என்னை
    சூறையாடி சென்று விட்டு
    இனி வேறென்ன என்பாயே..
    என்னவென்று நான் சொல்ல..!

    உறவென்று வந்தாய் என்
    உள்ளத்தைத் தைத்தாய்...
    உருகும் பனியாய்
    உன் நினைவில் நான்..!!

    நிமிடங்கள் ஒவ்வொன்றும்
    இமைக்காமல் நீ உழைக்க
    என் நினைவும் கூட
    உனக்கு வருமோ என்று
    நெகிழ்ந்தே நான் கேட்க...

    நினைவில் நின்றவளை
    நெஞ்சில் நிறைந்தவளை
    நெருங்க இயலாமல்
    இரும்பாய் நான் என்றாய்...!!

                                  .....அன்புடன் ஆனந்தி

    Thursday, November 18, 2010

    அமெரிக்காவில் ஐயப்பன்...!

    மலை ஏறும் காலம்


    ஹாய் எல்லாரும் எப்படி இருக்கீங்க.. இப்போ இங்கே ஐயப்பன் சாமிக்கு, மாலை போட்டு மலை ஏறும் காலம்... நிறைய நண்பர்கள் மாலை போட்டு மலைக்கு போவாங்க.. இங்கே ஐயப்பன் கோவில் உள்ள ஊருக்கு செல்வது வழக்கம்.. இதில் ஒருவர் குருசாமியாய் இருக்க, உடன் செல்பவர்கள் அவரிடம் இருந்து, மாலை அணிந்து கொள்வாங்க..

              இதில் குட்டி குட்டி பசங்களும் சில நேரம் மாலை போட்டு, கன்னிச் சாமியாக செல்வதுண்டு.. அந்த குழந்தைங்க ஆவலா விரும்பி மாலை போட்டுக் கொள்வதும், அதற்கான சில விதிமுறைகளை, முழு மனதுடன் செய்வதும், உண்மையில் பார்க்கவே சந்தோசமா இருக்கும்..!

    மாலை போட்டிருக்கும்  சமயத்தில், ஒவ்வொரு வார கடைசியிலும், ஒருத்தங்க வீட்டில் பூஜை இருக்கும்.. அங்கே ஐயப்பன் பாடல்கள் எல்லாரும் ஒன்றாகப் பாடி வழிபடுவது மனதிற்கு ரொம்ப மகிழ்ச்சியைக் கொடுக்கும்.. எப்பவும் கூட்டுப் பிரார்த்தனைக்கு மதிப்பு அதிகம் தானே..

              அப்படி பூஜைக்கு போகும் போது, ஒவ்வொருவர் வீட்டிலும் ஐயப்பனை அழகாக அலங்கரித்து, சுவையாய் பிரசாதம் எல்லாம் சமைத்து, ஒரே குடும்பமாய் எல்லோரும் சேர்ந்து பூஜை செய்றது உண்மையில் நல்ல விஷயம்..! அப்படிப்பட்ட நேரங்களில் கோவிலுக்கு சென்று வந்த மன நிறைவு, திருப்தி இருக்கும்..!!


     
    இதில் மாலை போடுறவங்க தவிர, மத்த குடும்பமும் இணைந்து தான் பஜன்ஸ் எல்லாம் போவோம்.  முதலில் விநாயகரில் ஆரம்பித்து சிவன், அம்மன், ......பிறகு ஐயப்பன் பாடல்கள் பாடுவது வழக்கம்.. குருசாமி, அம்மன் பாடல்கள் பாடும் நேரம் வரும் போது, பெண்கள் பக்கம் திரும்பி "மாளிகை புறம்" பாடுங்கன்னு சொல்வாங்க..

                     எங்க குரூப் எப்போவும் கொஞ்சம் கலாட்டா பண்ற குரூப் தான்.. சரியான வாலுங்க தான்.. ரொம்ப பக்தியா எல்லாரும் உக்காந்திருக்கும் போது, என் பிரண்ட்.. என் காதுக்குள்ள "நிலவைக் கொண்டு வா...கட்டிலில் கட்டி வை...." னு சொல்ல... எனக்கு சிரிப்பு அடக்க முடியாம... முகம் எல்லாம் சிவந்து.. கீழ குனிஞ்சு ஒரே சிரிப்பு..... அப்புறம் எப்படியோ சமாளிச்சு பாடியாச்சு..
     
    இதே போல தான் போன வருஷம், எல்லாரும் பக்தியா பாடிட்டு இருக்கும் போது இன்னோர் விஷயம் நடந்தது.. சில சுவாமி பாடல்களை சினிமா சாங் மெட்டில் பாடுவது மாதிரி, "செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் ......." பாடல் மெட்டில், "எந்நாளும் தேடும் பொன்னான ஐய்யன்....."ன்னு பாடிட்டு இருந்தோம்.. அந்த பிரண்ட்டும் பக்கத்தில் உக்காந்து நல்ல பாடிட்டு இருந்தோம்...

                     திடீர்னு சரணம், முடிஞ்சி பல்லவி ஆரம்பிக்கும் இடத்தில், நம்ம ஆளு உணர்ச்சி வசப்பட்டு "எந்நாளும் தேடும்....."னு பாடறதுக்கு பதில் "செந்தாழம் பூவில்......."னு அவங்க பாட... அவ்ளோ தான்.... அவங்க பக்கத்தில் இருந்த நாங்க அத்தனை பேரும், பயங்கர சிரிப்பு வந்து அடக்கவும் முடியாம, புடவை தலைப்பால வாய பொத்தி சிரிப்பை அடக்கரதுக்குள்ள........... ஒரு வழி ஆய்ட்டோம்..! இந்த மாதிரி, மறக்க முடியாத பல சந்தோசமான தருணங்கள் இருக்குங்க..!!

     
    இந்த பூஜை நேரங்கள்ல வார வாரம் ஒரு வீட்டு பூஜைல போய் நல்ல பாடி, நல்லாவே சாப்பிட்டு ஒரு சுற்று எக்ஸ்ட்ரா ஆயிருவோம்.. ஆனா ஒண்ணு, இந்த மாதிரி பூஜை-கள்ல கலந்துக்கறது, பசங்களுக்கும் நம்ம கலாச்சாரம் தெரியறதுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.. குழந்தைகளையும் பாட வைக்கிறோம்..

                        அவங்களுக்கும் ஏதோ அச்சீவ் பண்ண திருப்தி..! எல்லா பாட்டும் முடிஞ்சு, படிப்பாட்டு பாடும் போது, குழந்தைகளும் சேர்ந்து ஒண்ணா பாடும் போது, நம்மையும் அறியாமல் ஒரு சிலிர்ப்பு ஏற்படத் தான் செய்கிறது..! எல்லாம் முடிஞ்சு, அய்யனுக்கு, "ஹரிவராசனம்...." பாடும் நேரமும்.... என் மனதை தொடும் தருணம்..!!
     
    ஆனா ஒரே ஒரு கஷ்டம் என்னன்னா.... இப்பவே இங்க குளிர் காலம் ஆரம்பம் ஆயிருச்சு.. சில பிரண்ட்ஸ் வீடுகள் தூரமா இருக்கும் பட்சத்தில் குளிர்ல போயிட்டு திரும்ப வரதெல்லாம் கொஞ்சம் சிரமம்... அதுவும் குழந்தைகளை வச்சிட்டு ஏறி இறங்கி...வரதெல்லாம் கஷ்டமா இருக்கும்... ஆனா, அதையெல்லாம் தாண்டி கூட்டு பிரார்த்தனை, நண்பர்களை சந்திக்கறது.... இந்த சந்தோசம் எல்லாம் மேலோங்கி நிக்கறதுல மத்த எல்லாம் அடி பட்டு போய் விடும். விளையாட்டா, சொல்றதுண்டு.. ஐயப்பனே அமெரிக்கா வந்தா, காலில் ஷூ, ஷாக்ஸ் போட்டுட்டு தான் போகணும் போல..!
     
    இப்போ தாங்க... நா இந்த பதிவு எழுதிட்டு இருக்கும் போது, ஒரு தோழி கூப்பிட்டு வர சனிக்கிழமை பூஜைக்கு வரச் சொல்லி இருக்காங்க.. அப்புறம் என்னங்க.. ஸ்டார்ட் மூஜிக்..... (ஓஹ்ஹ்ஹ்.. சாரி சாரி.. ஸ்டார்ட் பூஜை...) தான்...!! அப்புறமா சந்திக்கலாம்..!
     
    ...நன்றி..!

    (இந்த படங்கள் எல்லாம் என் தோழி வீட்டு ஐயப்ப பூஜையில் எடுத்தது)


    Wednesday, November 10, 2010

    உன்னைக் காண்கையில்...!!


    நினைவில் நின்றவன்
    என் கண்ணெதிரே நிற்க
    விழி இமைக்காமல் அவனை
    விசித்திரமாய் நான் நோக்க...!!

    அருகில் நிற்கும் அவனை
    அணைக்கத் துடிக்கும் நெஞ்சம்
    அவசரமாய் மனம் மாற்றி
    அங்கிருந்தே அகன்றதென்ன..!!

    காரணம் நீ சொன்னாலும்
    அதை நான் கருத்தில் கொண்டாலும்
    என் கண்ணனைக் காண்கையில்
    கட்டவிழ்ந்த கன்றாய் என்
    காதல் மனம் செல்வதென்ன...!!

    உன் மேல் கோபம் வருவதில்லை
    அது வந்தாலும் நிற்பதில்லை...!
    நீ பார்க்கும் பார்வையிலும்
    பேசும் வார்த்தையிலும்
    நான் பனித்துளியாய் கரைவதென்ன..!!

    ஓர் நிமிடம் உன்னருகில் வந்தாலும்
    ஒரு முறை உன் ஸ்பரிசம்
    என் மேல் பட்டாலும்
    நட்டு வைத்த பூச்செடியாய் நான்
    நாணித் தான் போனதென்ன..!!
     
    ......அன்புடன் ஆனந்தி
     

    Friday, November 5, 2010

    மிக்சர்...!!

    உங்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்...!!

    இந்த நல்ல நாளில் என்னைத்  தொடரும்  நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன்...!!

    உங்கள் நட்பிற்கு, இந்த பூங்கொத்து...! நன்றிகள் பல...!!

    மிக்சர்...!!

    தேவையான பொருட்கள்:

    கடலை மாவு - 6 கப்
    அரிசி மாவு - 1  கப்
    முந்திரி பருப்பு - 1 / 2 கப்
    வேர்க்கடலை - 1 கப்
    அவல் - 1 கப்
    கறிவேப்பிலை - 1 கொத்து
    பெருங்காயம் - 1 / 2 டீஸ்பூன்
    மிளகாய்ப் பொடி - 1 குழி கரண்டி
    கடலை பருப்பு - 1 / 2 கப் (4 மணி நேரம் ஊறவைக்கவும்)
    ஓமம் பொடித்தது - 1 டீஸ்பூன்
    வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    காரா பூந்தி:

    3 கப் கடலை மாவை தோசை மாவை விட, கொஞ்சம் இளக்கமாக கரைத்துக் கொள்ளவும்.  ஒரு வாணலியில் எண்ணையை சூடாக்கி, அந்த எண்ணெய் மேல், கண் கரண்டி அல்லது ஜல்லிக் கரண்டியை பிடித்துக் கொண்டு, ஒரு குழிகரண்டி கரைத்த மாவை கரண்டி மேல் ஊற்றி, இன்னொரு கரண்டியால் அதை தேய்த்து விடவும்.. கார பூந்தி, சத்தம் அடங்கி வெந்ததும் எண்ணெய் வடிய விட்டு, ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.. பாதி மாவினை ஊற்றி முடித்த பின், மீதி மாவில் விரும்பிய கலர் சேர்த்து பூந்தி செய்யலாம்.. மிக்சர் கலர் புல்லாக இருக்கும்..

    ஓமப்பொடி:

    3 கப் கடலை மாவு, 1 கப் அரிசி மாவு, வெண்ணெய், ஓமம்  இவற்றை தேவையான தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும். மாவு ரொம்ப கெட்டியாகவோ, ரொம்ப தளர்வாகவோ இல்லாமல் ஓரளவு ஓம அச்சில் பிழியும் விதம் இருக்க வேண்டும். இடியாப்பம் பிழியும் குழலில் இந்த மாவை எடுத்து, சூடான எண்ணையில் பெரிய வட்டமாக பிழிந்து, இரு புறமும் திருப்பி, சத்தம் நின்றதும் எடுக்கவும்.

    சூடான எண்ணையில் முந்திரி பருப்பு, அவல், கறிவேப்பிலை, வேர்க்கடலை இவற்றை பொறித்து எடுக்கவும்.

    (சின்ன குறிப்பு: வேர்க்கடலை, அவல், முந்திரி, கறிவேப்பிலை இவற்றை பொரிக்கும் முன்பு, எண்ணையின் அளவை குறைத்துக்கொள்ளுங்கள்.. ஏனெனில், இவைகள் பொறித்த பின்பு மிச்சம் வரும் எண்ணையை உபயோகிக்க முடியாது.. கலங்கல் ஆகி விடும்)

    ஊற வைத்த கடலை பருப்பை, நன்கு தண்ணீர் இல்லாமல் வடிகட்டி, ஒரு பேப்பர்-இல் தண்ணீர் வடிய விட்டு, பிறகு, அதையும் எண்ணையில் போட்டு, சத்தம் அடங்கும் வரை வேக வைத்து, எண்ணெய் வடிய விட்டு எடுத்து வைக்கவும்.

    ஒரு பெரிய பாத்திரத்தில் செய்து வைத்துள்ள காராபூந்தி, ஓமப்பொடி, மற்றும் வறுத்து வைத்துள்ள பெருங்காயம், வேர்க்கடலை, கடலை பருப்பு, முந்திரி பருப்பு, கறிவேப்பிலை, அவல், மிளகாய்ப் பொடி, தேவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.


    சுவையான மிக்சர் தயார்..!!!


    Tuesday, October 26, 2010

    அமெரிக்க வாழ்க்கை .....பாகம் 5

    முந்தைய பதிவுகள்: பாகம் 1 , பாகம் 2 , பாகம் 3 , பாகம் 4

                இங்கே உள்ள பாடத்திட்டம் பத்தி சொல்லணும்.. எலிமெண்டரி லெவல் (5 ஆம் வகுப்பு வரை) ரொம்ப எளிமையா தான் இருக்கும். இங்க உள்ள பெரும்பாலான பேரன்ட்ஸ் வீட்டில் பாடம் சொல்லிக்கொடுத்திருவாங்க. நம்ம ஊரில் டியூஷன் மாதிரி, இங்கயும் நிறைய பேர் சொல்லித்தராங்க.. அதுல எதாவது ஒண்ணுல சேர்த்து விட்டுட்டு படற பாடு இருக்கே? (அதுக படுற பாடு போதாதுன்னு, நாமளும் சேர்ந்து படணும்)..

              முதல்ல எல்லாம் நல்லாத் தான் போகும்.. கொஞ்ச நாள்லயே குட்டீஸ்-கு போர் அடிக்க ஆரம்பிச்சிரும்.. 10 நிமிஷத்துல முடிக்க வேண்டிய வேலைய மணிக்கணக்கா யோசனை பண்ணி அவுங்க முடிக்கறதுக்குள்ள.. நமக்கு பியூஸ் போயிரும்.  இந்த அழகுல இவரு வேற கடமை தவறாம போன் பண்ணி, என்னம்மா.. ஸ்கூல்-ல இருந்து வந்தாச்சா? (பின்னே ஸ்கூல் முடிஞ்சு வராம எங்க போவும்) சாப்பாடு குடுத்தாச்சா? (ஏன் குடுக்கலேன்னா வந்து குடுக்க போறீங்களா?) ஹோம் வொர்க் பண்ண வச்சிரு..! (அதானே பார்த்தேன்... சரி ரைட்ட்டு) இதான் டெய்லி ரொட்டின் கேள்வி.. நா கூட ஒரு நாள் சொன்னேன்.. "ஏங்க, பேசாம இந்த டயலாக் எல்லாம் ரெகார்ட் பண்ணி டெய்லி, 3 மணிக்கு நானே ஒரு தரம் ப்ளே பண்ணி கேட்டுக்கரேன்னு...!".
    (படிக்கச் சொன்னா எங்க பாத்துட்டு இருக்கு பாருங்க)

                பொதுவா இங்க பள்ளிப் பாடத் திட்டம் எளிமையா இருந்தாலும், மிடில் ஸ்கூல் லெவல் வரும் போது பிள்ளைங்க கஷ்டப் படக் கூடாதுன்னு தான் இந்த மாதிரி டியூஷன் எல்லாம் சேர்த்து விடறது.  இன்னொரு கூத்து உங்க கிட்ட சொல்லியே ஆகணும். என் குழந்தைகள் இப்போ தான் எலிமெண்டரி லெவல் இல்லையா? அதனால எனக்கு சில பல விஷயங்கள் இன்னும் தெரிய ஆரம்பிக்கவில்லை. அதாவது, இங்க SAT , ஸ்பெல்லிங் பீ, MATH QUIZ ... இந்த மாதிரி விஷயங்கள் நிறைய இருக்குங்க.  ஒரு நாள் குட்டீஸ்-ஐ டியூஷன் கிளாஸ் கூட்டிட்டு போயிருந்தேன். அவங்க உள்ள போய்ட்டாங்க, நான் waiting ஹாலில் உக்காந்திருந்தேன்.

              எப்பவும் போல் மற்ற பெற்றோர் இருந்தாங்க.. அதில் தெரிந்த இருவர் இருக்கவே ஏதோ கேட்டாங்க பேசிட்டு இருந்தோம்.  திடீர்னு, அவங்க என் பொண்ணு OCA போறா, உங்க பொண்ணு எங்க போறான்னு கேட்க, நானும், (ஏதோ, அந்த ஸ்பெஷல் கிளாஸ் மாதிரி ஏதோ அனுப்புறாங்கன்னு நினச்சு) ஓ.. ரொம்ப நல்லது. நான் இன்னும்  என் பொண்ணை அப்படி ஏதும், சேக்கலை என்று சொன்னேன்.. அவங்க அதுக்கு ஏன் அவ ஸ்கூல் போகலியானு கேட்டாங்க.. இல்லையே,  ஸ்கூல் போறான்னு சொன்னேன். அப்புறம் தான் தெரிஞ்சது, அவங்க OCA னு ஏதோ MCA ரேஞ்-ல சொன்னது அவங்க ஸ்கூல் பேரோட சுருக்கம்னு... ஸூஊஊ... கொஞ்ச நேரத்துல நாம தான் நம்ம புள்ளைய ஒண்ணுலயும் சேக்கல போலன்னு பீலிங்க்ஸ் ஆயி போச்சு போங்க.. ஏண்டா..... ஸ்கூல் பேர முழுசா சொன்னாத் தான் என்ன? மனுசங்களுக்கு  பீதிய கிளப்பி விட்டுட்டு...!!




                அப்புறம் இதெல்லாம் தாண்டி பெண் குழந்தைனா பாட்டு, டான்ஸ், ஸ்கேடிங், டென்னிஸ்.....இந்த மாதிரி நிறைய கிளாஸ் இருக்கு. ஆண் குழந்தைக்கு பாட்டு, வயலின், பியானோ, சாக்கர், கராத்தே.........இந்த மாதிரி நிறைய கிளாஸ் இருக்கு. என் பொண்ண, டான்ஸ் கிளாஸ்-ல சேர்த்து விட்டேன். அவ ஆடுறாளோ இல்லியோ, வீட்டில அவளை ஆட வைக்க நா ஆடுறேன்.. (ஒரு பேச்சுக்கு சொன்னேன்.. உடனே அப்படியான்னு கேக்க பிடாது...). என்னைப் பொறுத்த வரையில் எத்தனை கிளாஸ் சேர்க்கிறோம் என்பது முக்கியம் இல்லை, எதாச்சும் ஒண்ணுல சேர்த்தாலும் அத உருப்படியா செய்ய வைக்கணும்.. அவ்ளோ தாங்க...!

    ....... (தொடரும்)


    (படங்கள்: நன்றி கூகிள்)


    Wednesday, October 20, 2010

    மழை...!!!


    வானிலே உன் ஜாலம் முடித்து
    பூமியில் புதியதாய் வீழ வந்தாய்...!!

    வெயிலில் தகிக்கும்
    வெப்பக் காலத்தில் நீ
    வீழ்ந்தாய் என்றால்
    விளக்கமேதும் தேவை இல்லை...!!
    வேண்டிய நேரத்தில்
    வேண்டாமலே வந்தாயே.... இனி
    வேறென்ன வேண்டும் என்பாரே..!!

    உழுதும் முடித்து விட்டு
    உரமும் இட்டு வைத்து
    உயிரைக் கையில் பிடித்து
    உனை நோக்கி ஏங்கும் போது
    உடனே நீ வந்தாயென்றால்
    உள்ளமெல்லாம் உவகை அன்றோ..!!

    பூத்திருந்த பூவெல்லாம் நீ
    தீண்டிச் சென்ற வெட்கத்தில்..
    பூமியின் வெட்கை தனை
    போக்கும் பொருட்டாய்
    புதிதாய் விழ வந்து
    புரட்சி தான் செய்வாயோ..!!

    காதலர்கள் கூடும் இன்பக்
    காரிருள் வேளையிலே
    கருத்தாய் நீ வந்தாயென்றால்
    கட்டியணைத்த வண்ணம் உனைக்
    கண்கொட்டாமல் கண்டு களிப்பாரே..!!

    அளவாய் நீ வந்தால்
    அழகாய் பூக்கும் பூக்கள்....
    ஆக்ரோஷம் நீ கொண்டால்
    அழிந்தே போவதேனோ..!!

    நிஜமாய் உனை நினைக்கும் போது
    நெஞ்சில் சுகமாய் ஒரு ஸ்பரிசம்...
    மழை வளமாய் மண்ணில் பெய்தால்
    மாந்தர் தம் மனமும் சுகம் பெறுமே..!!

    .....அன்புடன் ஆனந்தி

    Wednesday, October 13, 2010

    அமெரிக்க வாழ்க்கை ....பாகம் 4

    அப்புறம் அடுத்து முக்கியமா சொல்ல விரும்பும் விஷயம்.. இங்க உள்ள ஸ்கூல்ஸ். எலிமெண்டரி லெவல் வரைக்கும் ஓரளவு குழந்தைகளை கஷ்டப் படுத்தாத பாடத் திட்டமாகத் தான் இருக்கும்.. இங்கே பள்ளி நேரம்... எலிமெண்டரி ஸ்கூல்க்கு காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரையில்.. ஸ்கூல்ல இருந்து குறிப்பிட்ட தொலைவில், நம்ம வீடு இருந்தால், ஸ்கூல் பஸ் வரும்.... இங்கே பள்ளிகளில், வாலண்டீரிங் (volunteering ) வொர்க் இருக்கும்.. அதாவது, பெற்றோர் தங்களால் முடிந்த நேரத்தில் அந்த வகுப்பிற்கோ, அல்லது பள்ளிக்கோ உதவி செய்றது. நான் கடந்த 3 வருஷமா என் குட்டீஸ் ஸ்கூல்-ல லைப்ரரி, மற்றும் வகுப்பில் ஹெல்ப் பண்றேன்....



    இதுல என்ன வசதின்னா.. வகுப்பில் என்னென்ன நடக்கிறதுன்னு நாமும் தெரிஞ்சிக்கலாம். நம்ம குழந்தைக்கும் நம்ம உதவி செய்றதுல சந்தோசமா இருக்கும். கிளாஸ் ரூம்-இல் ஹெல்ப் பண்ணும் போது, குட்டி குட்டி குழந்தைகள்.. "ஹாய்...."னு சொல்லி அன்பா "hug " பண்றது அழகா இருக்கும். அவங்களுக்கு எதாச்சும் சொல்லித் தரும் போது, ரொம்ப தீவிரமா கேள்வி கேக்கிறது சிரிப்பா வரும்.. நண்டு மாதிரி இருந்துட்டு கேக்குற கேள்வி எல்லாம்....செம காமெடியா இருக்கும்.. எப்படி தான் இப்புடி தின்க் பன்னுதுகளோன்னு.." இருக்கும். ஒரு குழந்தை .. என்கிட்டே.. "யூ ஆர் லுக்கிங் லைக் அபி..!" அப்படின்னு சொல்லுச்சு. (ஆமாம்மா.. நா தான் என் மக மாதிரியே இருக்கேன்..னு சொன்னேன்..) அதை மழலையில் கேட்பதற்கு அழகா இருக்கும். அதிலும் சில குட்டீஸ்.. "ஹாய் மாம்..." னு சொல்லும் பாருங்க.. அப்போ அடுத்த குட்டி, "ஷி இஸ் நாட் யுவர் மாம்...., ஷி இஸ் காயூ'ஸ் மாம்..." னு விளக்கம் சொல்லும். நல்லா இருக்குங்க அந்த பீல்.


    ஸ்கூல் பஸ்-இல் டிரைவர், சின்ன பசங்களை முன் வரிசையில் உக்கார வச்சு, வீட்டில் விடும் போதும், பாரன்ட்ஸ் பஸ்-ஸ்டாப்பில் இருந்தா மட்டும் தான் இறக்கி விடுவாங்க. அதே போல, இங்க பள்ளிகளில் முன் பின் தெரியாதவங்க அவ்ளோ ஈஸியா குழந்தைகளை அப்ப்ரோச் பண்ண முடியாது. யார் வந்தாலும், போனாலும் பிரான்ட் ஆபீஸ்-ல எழுதிட்டு தான் போக முடியும். இங்கே பள்ளிப் படிப்பு முழுவதும், இலவசம் தான். நாம இங்கே கட்டுகிற வரிப் பணத்தில் தான், பள்ளிகள், நூலகம், மற்றும் இதர பலவும் நடக்கிறது. அது மட்டும் இல்லாம, பாடப் புத்தகம்...அது இதுன்னு எதற்கும் பணம் வசூலிப்பதும் இல்லை. ஸ்கூல் தொடக்கத்தில் ஒரு சில பொருட்கள் கேட்பதோடு சரி.. பிக்கல், பிடுங்கல் இல்லாம இருக்கும்..



    என் பொண்ணு, முதலில் ஸ்கூல் தொடங்கி கொஞ்ச நாளா வீட்டுக்கு வரும் போது, பஸ்ல இருந்து இறங்கினதும், என் கிட்ட ஒரு பேப்பர் குடுப்பா... என்னன்னு பாத்தா.. ரெண்டு பொம்மை வரைஞ்சு அம்மா, காயு அப்படி எழுதி இருப்பா.. ஒரு ஹார்ட் படம் போட்டு, ஐ லவ் அம்மா-ன்னு எழுதி இருப்பா.. எனக்கு அத பாத்ததும், ரெம்ம்ம்ம்ம்ம்ப பெருமையா இருக்கும்.. கொஞ்சம் நாள் ஸ்கூல் பழகினதும், திரும்பவும் அதே போல பேப்பர் வரும்.. ஆனா இந்த முறையும் அதுல ரெண்டு பொம்மை இருக்கும், அதே ஹார்ட் படம்..... அதே ஐ லவ் ........... ஆனாஆஆஅ அம்மாக்கு, பதில் மிஸ். மெல்செர்ட்-னு இருக்கும்.. அதாங்க என் பொண்ணோட டீச்சர்.. ஹ்ம்ம்.. சரி ஏதோ, ஒண்ணு மண்ணா இருந்து ஒழுங்கா படிச்சா சரிதான்.. என்ன சொல்றீங்க??

    இங்கே பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது என்பதே கிடையாது.. இவ்ளோ ஏன்?? பெத்த நாமளே அவங்கள அடிச்சோம்னு வெளில தெரிஞ்சா ப்ராப்ளம் தான். இங்க 911 னு ஒரு நம்பர் ஒண்ண, இந்த புள்ளைங்க கிட்ட சொல்லிகுடுத்துர்றாங்க.. (நாம ரொம்ப அலெர்ட்டா இருக்க வேண்டியதா இருக்கு ) எப்போ வேணுமானாலும், பிரச்சனை  என்றால் உடனே அந்த நம்பருக்கு போன் செய்யலாம்... வெளியில் பார்க்கும் சின்ன குழந்தைகளை... நம் இஷ்டத்திற்கு எல்லாம் தொட்டு, கொஞ்சுவதோ பேசுவதோ கூடாது.. ஒரு வகையில் இந்த கட்டுப்பாடு, ரொம்பவும்  அவசியமான ஒண்ணுன்னு தான் எனக்கு தோணுதுங்க.. முன்னப்பின்ன தெரியாதவங்க குழந்தைகளை நெருங்க முடியாது பாருங்க.. 

    அப்புறம், கிளாஸ்-ல "ரூம் மாம்" னு ஒரு கான்செப்ட் இருக்கு. (அப்ப்டின்னா... ரூம்ல  இருக்கற எல்லாருக்கும் மாம்-ஆ ன்னு தத்துப்பித்துன்னு கேக்க கூடாது)  அது என்னன்னு கேட்டீங்கன்னா.. (ஹலோ.. யாராவது கேளுங்களேன்....) பள்ளித் தொடக்கத்தில் யாராச்சும் ஒரு பேரண்ட் "ரூம் மாம்" ஆக நியமிக்கப்படுவாங்க. போன வருஷம், நா தான் ரூம் மாம்-ஆக இருந்தேன்.. எப்படி ஆனேன்ன்னு அந்த சோக கதையை நீங்க தயவு செஞ்சு கேட்டாகணும்.... அதாகப்பட்டது, என் மகளின் வகுப்பில், பள்ளி தொடங்கியும் யாரும் ரூம் மாம்-ஆக வாலண்டீர் பண்ணலன்னு அவளோட  டீச்சர் சொன்னாங்க.. உடனே நம்ம தான் இருக்கமே... உங்களுக்கு யாரும் முன்வரலன்னா என்னைக் கூப்பிடுங்க-ன்னு சொல்லிட்டு வந்தேன்.. சரியா 2 நிமிஷத்திலேயே அவங்க டீச்சர் கிட்ட இருந்து ஈமெயில்... "ஹே...வி ஹாவ் அ வாலண்டியர் " னு.....!!! ஒஹ்ஹ்ஹ... ஒகே.... ஓகே.. இப்படி தான் நாமளா போயி.. தலைய குடுக்கணும்.. (ஒரு பேச்சுக்கு சொன்னா.. பய புள்ளைங்க இப்படியா சீரியஸ்-ஆ எடுத்துக்கறது)

    வருஷ தொடக்கத்தில் ஒரு ஒரு குழந்தையிடமும், பார்ட்டி மணின்னு 8 டாலர் வசூல் பண்ணுவாங்க.  அந்த பணம் வைத்து தான், வருஷம் முழுசும் வர செலிப்ரேஷன் டைம்-ல கிளாஸ் ரூம்-இல் பார்ட்டி வைக்க சாப்பாடு மெனு, ஒண்ணு ரெண்டு கேம்ஸ், குட்டிஸ்கு ஒரு கிப்ட் எல்லாம் ஏற்பாடு பண்ணனும்..எல்லா பேரன்ட்ஸ்-ம் சேர்ந்து ஆளுக்கு ஒரு டிஷ் செய்து கொண்டுவந்து, பார்ட்டி அட்டென்ட் பண்றது நல்லா இருக்கும்.. (அதெல்லாம் சரி தான்...... ஆனா அந்த ஏற்பாடு பண்றது, கிப்ட் வாங்கறதுக்கு உள்ள அலைச்சல்...இதெல்லாம் கொஞ்சம் லைட்டா மண்ட காயும்... அவ்ளோ தான்.. வேற ஒன்னும் இல்லை...) இந்த படம், கிறிஸ்துமஸ் டைம்-ல நான் ஏற்பாடு செய்த மெனு..!



    (.......தொடரும்)

    (படம்: நன்றி கூகிள்)

    Tuesday, October 5, 2010

    என்னுயிர் நீயன்றோ..!!


    ஆசையில் தேடி வந்தேன்
    காதலால் கனிந்து நின்றேன்
    உறவாய் உனை எண்ணியே
    உள்ளமதில் பூட்டி வைத்தேன்...!
    என் உள்ளுணர்வு உனை வெல்ல
    உன் உள்ளமெங்கும் நானே என்றாய்
    மன்னவனே உனைக் கண்டதும்
    மாறாத என் நேசம்
    மடை திறந்த வெள்ளமாய்...!
    நீ மறுபேச்சு பேசாமல்
    மையலுடன் எனை நோக்க
    மங்கை என் மனதில்
    என்னென்னவோ எண்ண அலைகள்..!
    உன் கண்கள் பேசிய காதலில்
    கட்டுண்டு நான் இருக்க...
    எனையே பார்த்திருந்து விட்டு
    இனி ஒருபோதும்
    உனைப் பிரியேன் என்றாய்..!
    நெற்றியில் குங்குமம் இட்டு
    உன் நிழலாய் நானிருப்பேன் என்றாய்..
    கண்மணியே உன்னை நான்
    காலமெல்லாம் காத்திருப்பேன் என்றாய்..!
    உன் காதலின் உச்சத்தில்
    என் கண்களில் நீர்த் துளி..!
    இனி என் உயிர் என்னைப் பிரியினும்
    உன்னை நான் பிரியேனே...!

    ...அன்புடன் ஆனந்தி


    (படம்:  நன்றி கூகிள் இமேஜஸ்)

    Wednesday, September 29, 2010

    அமெரிக்க வாழ்க்கை ....பாகம் 3

    ஒரு வழியா லைசென்ஸ் வாங்கி.. இந்த ஊருக்குள்ள...யாருக்கும் பிரச்சன ஏதும் இல்லாம வண்டி ஓட்டிட்டு இருக்கேங்க.. அதுல பாருங்க.. ஒரு விசேஷம்.. என்னால மத்தவங்களுக்கு தான் பிரச்சின இல்லன்னு சொன்னனே தவிர... எனக்கு சில பல தொல்லைகள்....!

    ஒரு முறை வெளியூர் போயிட்டு வீடு திரும்பினோம்.. அப்போ வந்ததும், தலை வலிக்குது ஒரு காஃபி குடிச்சா தேவலாம்னு தோனுச்சு.. நீங்க போயிட்டு வாங்கன்னு சொன்னா... நம்ம ஆளு அப்போ தான், இப்போ தானே இவ்ளோ நேரம் டிரைவ் பண்ணிட்டு வந்தேன்.. நீ போயிட்டு வாயேன்னு சொல்ல, கர்ர்ர்ர் னு எரிச்சலாகி சரி..கோவப்பட்டா காஃபி வருமா?? போயி வண்டிய எடுத்தேன்... அப்போ நாங்க இருந்த அபார்ட்மென்ட்-டில் கார் விட ஷெட் இருந்தது. அதிலிருந்து வண்டியை பாக்-அப் பண்ணும் போது... அந்த பில்லர்ல ஒரு இடி இடிச்சி, அங்கயே நின்னுட்டேன்... மவளே காஃபி ரொம்ப முக்கியம் இப்போ? னு என்னையே திட்டிட்டு இருந்தேன்...


    இது போலத் தான் இன்னொரு முறை ஆச்சு.. வெளியூர் செல்ல, பிளான் பண்ணிட்டு, AAA ஆபீஸ் போய் மேப்ஸ் (maps ) வாங்கிட்டு வந்திருன்னு சொல்லிட்டு வேலைக்கு போய்ட்டாங்க.. நானும் பந்தாவா கிளம்பி போயி... மேப் எல்லாம் கேட்டு வாங்கிட்டு, வெளில வந்து, வண்டிய ஸ்டார்ட் பண்ணி ரிவர்ஸ்-ல பின்னாடி வரதுக்கு பதிலா.... அவ்வ்வ்வவ் ஆக்சிலரேட்டர் அழுத்தி  முன்னாடி வேகமா போய்ட்டேன்..... அப்புறம் என்ன, டமால் தான்... அங்க இருந்த சிமெண்ட் பார்-ல மோதி, பிரான்ட் பம்பர் உடைஞ்சு தொங்கிட்டு இருந்தது.... ஆக்சிடன்ட் ஆனா.. AAA கு போன் பண்ணுவோம்... ஆனா AAA வாசல்லயே ஆக்சிடென்ட் பண்ணிட்டனே....!! என்னத்த சொல்ல.. ! (AAA என்பது இங்கே உள்ள இன்சூரன்ஸ் ஆபீஸ் )

    இந்த மாதிரி... அப்பப்ப வீர சாஹசம் எல்லாம் செய்றது உண்டுங்க.. அதெல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லி, பேர டேமேஜ் பண்ண வேணாம்னு பாக்குறேன்..


    அடுத்து, இங்க அமெரிக்கா-ல என்னை கவர்ந்த விஷயம், இங்க உள்ள கடைகளில் எல்லா பொருளுக்கும் (Expiration Date ) காலாவதி தேதி... போட்டிருப்பாங்க..
    அந்த தேதி முடியறதுக்குள்ள... நீங்க வாங்கின பொருளில் ஏதேனும், பிரச்சினை வந்த கொண்டு போய்க் கொடுத்தால் ஒரு வார்த்தை சொல்லாமல் மாற்றி கொடுத்து விடுவாங்க. (உடனே..ஏன் நம்ம ஊர்ல கூட தான் இருக்குன்னு....கேட்டு சண்டைக்கு வரப்பிடாது..) இத ஏன் ஸ்பெஷல்-ஆ சொல்றேன்னா.. இங்க உள்ள இந்தியன் கடைகளில்.. எதாச்சும் சில பொருளை எடுத்து பாத்தீங்கன்னா தெளிவா எக்ஸ்பயரி தேதியை கிளீன்-ஆ சொரிஞ்சு வச்சிருப்பாங்க...! என்ன பண்றது.. ஒன்னும் பண்ண முடியாது.

    அப்புறம் இங்க அமெரிக்கன் கடைகளில் பொருட்கள் வாங்கும் போது, 30 முதல் 90 நாட்கள்  வரை, திரும்ப குடுக்க பாலிசி உண்டு.. அது உண்மையில் உபயோகமான பாலிசி. வாங்கிய துணி சைஸ் சரியில்லைன்னா கொண்டு போய் குடுத்து வேற மாத்திட்டு வரலாம். (ஆனா...அதையும் மிஸ் யூஸ் பண்ற ஆளுங்களும் இருக்காங்க..) எல்லா கடைகளிலும் பெரும்பாலும் கஸ்டமர் கேர் நல்லாவே இருக்கும்.  வாங்கிய பொருளை... அப்படியே பத்திரமாய் கொண்டு போய் குடுத்து மாத்திட்டு வந்திரலாம்.. எதுவும் தேவை இல்லாத கேள்விகளோ, அல்லது, முகத்தில் எரிச்சலை காட்டுவதோ பெரும்பாலும் இருக்காது. நம்ம ஊர்ல எதுவும் மாற்ற இந்த வசதி இருப்பதில்லை.. (ஆனா. நம்ம ஊர் மக்கள் கூட்டத்திற்கு... இப்படி பாலிசி வச்சா.. பின்னே கடையை இழுத்து மூடிட்டு போக வேண்டியது தான்.. அதுவும் இருக்கு...)

     .....தொடரும்
    (நன்றி: கூகிள் இமேஜஸ்)


    About Me

    My photo
    I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)