topbella

Tuesday, October 26, 2010

அமெரிக்க வாழ்க்கை .....பாகம் 5

முந்தைய பதிவுகள்: பாகம் 1 , பாகம் 2 , பாகம் 3 , பாகம் 4

            இங்கே உள்ள பாடத்திட்டம் பத்தி சொல்லணும்.. எலிமெண்டரி லெவல் (5 ஆம் வகுப்பு வரை) ரொம்ப எளிமையா தான் இருக்கும். இங்க உள்ள பெரும்பாலான பேரன்ட்ஸ் வீட்டில் பாடம் சொல்லிக்கொடுத்திருவாங்க. நம்ம ஊரில் டியூஷன் மாதிரி, இங்கயும் நிறைய பேர் சொல்லித்தராங்க.. அதுல எதாவது ஒண்ணுல சேர்த்து விட்டுட்டு படற பாடு இருக்கே? (அதுக படுற பாடு போதாதுன்னு, நாமளும் சேர்ந்து படணும்)..

          முதல்ல எல்லாம் நல்லாத் தான் போகும்.. கொஞ்ச நாள்லயே குட்டீஸ்-கு போர் அடிக்க ஆரம்பிச்சிரும்.. 10 நிமிஷத்துல முடிக்க வேண்டிய வேலைய மணிக்கணக்கா யோசனை பண்ணி அவுங்க முடிக்கறதுக்குள்ள.. நமக்கு பியூஸ் போயிரும்.  இந்த அழகுல இவரு வேற கடமை தவறாம போன் பண்ணி, என்னம்மா.. ஸ்கூல்-ல இருந்து வந்தாச்சா? (பின்னே ஸ்கூல் முடிஞ்சு வராம எங்க போவும்) சாப்பாடு குடுத்தாச்சா? (ஏன் குடுக்கலேன்னா வந்து குடுக்க போறீங்களா?) ஹோம் வொர்க் பண்ண வச்சிரு..! (அதானே பார்த்தேன்... சரி ரைட்ட்டு) இதான் டெய்லி ரொட்டின் கேள்வி.. நா கூட ஒரு நாள் சொன்னேன்.. "ஏங்க, பேசாம இந்த டயலாக் எல்லாம் ரெகார்ட் பண்ணி டெய்லி, 3 மணிக்கு நானே ஒரு தரம் ப்ளே பண்ணி கேட்டுக்கரேன்னு...!".
(படிக்கச் சொன்னா எங்க பாத்துட்டு இருக்கு பாருங்க)

            பொதுவா இங்க பள்ளிப் பாடத் திட்டம் எளிமையா இருந்தாலும், மிடில் ஸ்கூல் லெவல் வரும் போது பிள்ளைங்க கஷ்டப் படக் கூடாதுன்னு தான் இந்த மாதிரி டியூஷன் எல்லாம் சேர்த்து விடறது.  இன்னொரு கூத்து உங்க கிட்ட சொல்லியே ஆகணும். என் குழந்தைகள் இப்போ தான் எலிமெண்டரி லெவல் இல்லையா? அதனால எனக்கு சில பல விஷயங்கள் இன்னும் தெரிய ஆரம்பிக்கவில்லை. அதாவது, இங்க SAT , ஸ்பெல்லிங் பீ, MATH QUIZ ... இந்த மாதிரி விஷயங்கள் நிறைய இருக்குங்க.  ஒரு நாள் குட்டீஸ்-ஐ டியூஷன் கிளாஸ் கூட்டிட்டு போயிருந்தேன். அவங்க உள்ள போய்ட்டாங்க, நான் waiting ஹாலில் உக்காந்திருந்தேன்.

          எப்பவும் போல் மற்ற பெற்றோர் இருந்தாங்க.. அதில் தெரிந்த இருவர் இருக்கவே ஏதோ கேட்டாங்க பேசிட்டு இருந்தோம்.  திடீர்னு, அவங்க என் பொண்ணு OCA போறா, உங்க பொண்ணு எங்க போறான்னு கேட்க, நானும், (ஏதோ, அந்த ஸ்பெஷல் கிளாஸ் மாதிரி ஏதோ அனுப்புறாங்கன்னு நினச்சு) ஓ.. ரொம்ப நல்லது. நான் இன்னும்  என் பொண்ணை அப்படி ஏதும், சேக்கலை என்று சொன்னேன்.. அவங்க அதுக்கு ஏன் அவ ஸ்கூல் போகலியானு கேட்டாங்க.. இல்லையே,  ஸ்கூல் போறான்னு சொன்னேன். அப்புறம் தான் தெரிஞ்சது, அவங்க OCA னு ஏதோ MCA ரேஞ்-ல சொன்னது அவங்க ஸ்கூல் பேரோட சுருக்கம்னு... ஸூஊஊ... கொஞ்ச நேரத்துல நாம தான் நம்ம புள்ளைய ஒண்ணுலயும் சேக்கல போலன்னு பீலிங்க்ஸ் ஆயி போச்சு போங்க.. ஏண்டா..... ஸ்கூல் பேர முழுசா சொன்னாத் தான் என்ன? மனுசங்களுக்கு  பீதிய கிளப்பி விட்டுட்டு...!!
            அப்புறம் இதெல்லாம் தாண்டி பெண் குழந்தைனா பாட்டு, டான்ஸ், ஸ்கேடிங், டென்னிஸ்.....இந்த மாதிரி நிறைய கிளாஸ் இருக்கு. ஆண் குழந்தைக்கு பாட்டு, வயலின், பியானோ, சாக்கர், கராத்தே.........இந்த மாதிரி நிறைய கிளாஸ் இருக்கு. என் பொண்ண, டான்ஸ் கிளாஸ்-ல சேர்த்து விட்டேன். அவ ஆடுறாளோ இல்லியோ, வீட்டில அவளை ஆட வைக்க நா ஆடுறேன்.. (ஒரு பேச்சுக்கு சொன்னேன்.. உடனே அப்படியான்னு கேக்க பிடாது...). என்னைப் பொறுத்த வரையில் எத்தனை கிளாஸ் சேர்க்கிறோம் என்பது முக்கியம் இல்லை, எதாச்சும் ஒண்ணுல சேர்த்தாலும் அத உருப்படியா செய்ய வைக்கணும்.. அவ்ளோ தாங்க...!

....... (தொடரும்)


(படங்கள்: நன்றி கூகிள்)
            

76 comments:

Sanjay said...

ஏங்க, பேசாம இந்த டயலாக் எல்லாம் ரெகார்ட் பண்ணி டெய்லி, 3 மணிக்கு நானே ஒரு தரம் ப்ளே பண்ணி கேட்டுக்கரேன்னு...! சொன்னேன்.

ஹா ஹா What an Idea Ananthiji :D :D

அப்புறம் தான் தெரிஞ்சது, அவங்க OCA னு ஏதோ MCA ரேஞ்-ல சொன்னது அவங்க ஸ்கூல் பேரோட சுருக்கம்னு... //
அய்யா மறுபடியும் பல்பா??? ஹா ஹா :D :D

//என்னைப் பொறுத்த வரையில் எத்தனை கிளாஸ் சேர்க்கிறோம் என்பது முக்கியம் இல்லை, எதாச்சும் ஒண்ணுல சேர்த்தாலும் அத உருப்படியா செய்ய வைக்கணும்.. அவ்ளோ தாங்க. //
டாட்.....;-)

Sanjay said...

//என்னைப் பொறுத்த வரையில் எத்தனை கிளாஸ் சேர்க்கிறோம் என்பது முக்கியம் இல்லை, எதாச்சும் ஒண்ணுல சேர்த்தாலும் அத உருப்படியா செய்ய வைக்கணும்.. அவ்ளோ தாங்க. //

இது ஏதோ மறைமுகமா BLOGGERS அஹ் சொல்ற மாத்ரி இல்ல இருக்கு :D :D

மோகன்ஜி said...

ஆனந்தி! நலமா? உங்கள் பதிவு ஆச்சரியமாயும்,ஸ்வாரஸ்யமாயும் இருந்தது. குழந்தைகளுக்கு தமிழும் நீங்களே கற்றுத் தருகிறீர்கள் தானே?
அவசியம் தமிழ் சொல்லித் தாருங்கள்.
குட்டீசின் போட்டோவை போடுங்களேன்.

மதுரை சரவணன் said...

சுவைப்பட சொல்லி உள்ளீர்கள். அனைத்துப்பதிவுகளையும் விரைவில்படித்து விடுகிறேன். படிப்பில் உள்ள சுவாரசியம் , எழுத்தில் மகிவும் அருமையாக வந்துள்ளது. வாழ்த்துக்கள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க ஆனந்தி.. தொடருங்கள்.

ILA (a) இளா said...

//எதாச்சும் ஒண்ணுல சேர்த்தாலும் அத உருப்படியா செய்ய வைக்கணும்//
இதென்னது சிறுபுள்ளத்தனமா கருத்தெல்லாம் சொல்லிகிட்டு.. வாபீஸ் வாங்குங்க

அன்பரசன் said...

Going well..

நசரேயன் said...

//என்னைப் பொறுத்த வரையில் எத்தனை கிளாஸ் சேர்க்கிறோம் என்பது முக்கியம் இல்லை, எதாச்சும் ஒண்ணுல சேர்த்தாலும் அத உருப்படியா செய்ய
வைக்கணும்..//

தத்துவம் 930

Anisha Yunus said...

//"ஏங்க, பேசாம இந்த டயலாக் எல்லாம் ரெகார்ட் பண்ணி டெய்லி, 3 மணிக்கு நானே ஒரு தரம் ப்ளே பண்ணி கேட்டுக்கரேன்னு...!".//

ஹா ஹா ஹா... நல்ல காமெடி ஆனந்திக்கா. இன்னிக்குதான் பதிவுல எக்கச்சக்கமா சந்தோஷத்தை பாக்கறேன். நல்லா எழுதியிருக்கீங்க. ஹி ஹி...இன்னும் அதன் பாதிப்பு இருக்கு. ஆமா மாசத்துக்கு ஒரு 'day' (ex:mother's day, father's day...etc) வருதே...அதையெல்லாம் எப்படி சமாளிக்கிறீங்க??

எஸ்.கே said...

very nice!

Anonymous said...

//என்னைப் பொறுத்த வரையில் எத்தனை கிளாஸ் சேர்க்கிறோம் என்பது முக்கியம் இல்லை, எதாச்சும் ஒண்ணுல சேர்த்தாலும் அத உருப்படியா செய்ய வைக்கணும்..//
பஞ்ச் மாமே பஞ்ச் :))

//அவ ஆடுறாளோ இல்லியோ, வீட்டில அவளை ஆட வைக்க நா ஆடுறேன்.. //
என்ன ஆடுறீங்க பரதமா, இல்ல டிஸ்கோவா..

//ஒரு பேச்சுக்கு சொன்னேன்.. உடனே அப்படியான்னு கேக்க பிடாது...//
அப்புடித் தான் கேட்போம்..

இவண்,
சொல் பேச்சு கேக்காதோர் சங்கம்..
தலையாட்டாம் பட்டி..
உலகெங்கும் கிளைகள் உண்டு..ஹி ஹி.. :))

மாணவன் said...

அருமை சகோ,

அழகாகவும் ரொம்ப சுவாரசியமாகவும்
அமெரிக்க வாழ்க்கைப்பற்றி எழுதுகிறீர்கள்
அதுவும் நம்ம மண்மனம் மாறாமல்
சூப்பர்...

”அப்புறம் தான் தெரிஞ்சது, அவங்க OCA னு ஏதோ MCA ரேஞ்-ல சொன்னது அவங்க ஸ்கூல் பேரோட சுருக்கம்னு... ஸூஊஊ... கொஞ்ச நேரத்துல நாம தான் நம்ம புள்ளைய ஒண்ணுலயும் சேக்கல போலன்னு பீலிங்க்ஸ் ஆயி போச்சு போங்க.. ஏண்டா..... ஸ்கூல் பேர முழுசா சொன்னாத் தான் என்ன? மனுசங்களுக்கு பீதிய கிளப்பி விட்டுட்டு...!!
கலக்கல்

“அவ ஆடுறாளோ இல்லியோ, வீட்டில அவளை ஆட வைக்க நா ஆடுறேன்.. (ஒரு பேச்சுக்கு சொன்னேன்.. உடனே அப்படியான்னு கேக்க பிடாது...). என்னைப் பொறுத்த வரையில் எத்தனை கிளாஸ் சேர்க்கிறோம் என்பது முக்கியம் இல்லை, எதாச்சும் ஒண்ணுல சேர்த்தாலும் அத உருப்படியா செய்ய வைக்கணும்.. அவ்ளோ தாங்க...! ””

உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு

வாழ்க வளமுடன்
நட்புடன்
மாணவன்

எல் கே said...

// (ஒரு பேச்சுக்கு சொன்னேன்.. உடனே அப்படியான்னு கேக்க பிடாது...).///

கேக்க மாட்டோமே

/அவங்க OCA னு ஏதோ MCA ரேஞ்-ல சொன்னது அவங்க ஸ்கூல் பேரோட சுருக்கம்னு..//

செம பல்ப்

சிவராம்குமார் said...

என்னடா காமடியாவே போய்கிட்டு இருக்கே! கருத்து இல்லையேன்னு பார்த்தேன்....

||என்னைப் பொறுத்த வரையில் எத்தனை கிளாஸ் சேர்க்கிறோம் என்பது முக்கியம் இல்லை, எதாச்சும் ஒண்ணுல சேர்த்தாலும் அத உருப்படியா செய்ய வைக்கணும்.. அவ்ளோ தாங்க...! \\

இருக்குதே!!!

சைவகொத்துப்பரோட்டா said...

//பீலிங்க்ஸ் ஆயி போச்சு போங்க.. ஏண்டா..... ஸ்கூல் பேர முழுசா சொன்னாத் தான் என்ன? மனுசங்களுக்கு பீதிய கிளப்பி விட்டுட்டு...!!//

ஹா..ஹா... பல்பு வாங்கினாலும் நல்ல சமாளிப்பு!! இந்த அப்ரோச் நல்லா இருக்கு :))

கவி அழகன் said...

அருமை அருமை கலக்கிறிங்க

சௌந்தர் said...

இவரு வேற கடமை தவறாம போன் பண்ணி, என்னம்மா.. ஸ்கூல்-ல இருந்து வந்தாச்சா?////

அக்கறையா கேட்டா கூட என்னவெல்லாம் சொல்றாங்க

என்னைப் பொறுத்த வரையில் எத்தனை கிளாஸ் சேர்க்கிறோம் என்பது முக்கியம் இல்லை, எதாச்சும் ஒண்ணுல சேர்த்தாலும் அத உருப்படியா செய்ய வைக்கணும்..////

பஞ்ச டயலாக் வேறையா

சுந்தரா said...

//என்னைப் பொறுத்த வரையில் எத்தனை கிளாஸ் சேர்க்கிறோம் என்பது முக்கியம் இல்லை, எதாச்சும் ஒண்ணுல சேர்த்தாலும் அத உருப்படியா செய்ய வைக்கணும்.. அவ்ளோ தாங்க...! //

அதேதான்...அதுபோதும்.

ரசிச்சு சிரிக்கவச்ச பதிவு ஆனந்தி :)

Madhavan Srinivasagopalan said...

படிப்பதற்கு சுவையாக உள்ளது, நீங்கள் எழுதிய விதம், மேட்டரு

அருண் பிரசாத் said...

//என்னைப் பொறுத்த வரையில் எத்தனை கிளாஸ் சேர்க்கிறோம் என்பது முக்கியம் இல்லை, எதாச்சும் ஒண்ணுல சேர்த்தாலும் அத உருப்படியா செய்ய வைக்கணும்.. அவ்ளோ தாங்க...!//

அட என்ன ஒரு சிந்தனை!

மங்குனி அமைச்சர் said...

ஆஜர் டீச்சர்

Ramesh said...

ரொம்ப இயல்பா எழுதறீங்க.. தொடருங்க..

Sid said...

excellent attempt to write in free style
please change your profile picture
why a actress picture?

எம் அப்துல் காதர் said...

// (படிக்கச் சொன்னா எங்க பாத்துட்டு இருக்கு பாருங்க) //

நீங்க எதிரில் நின்னு அப்படி கேள்வி கேட்கும் போது உங்களை தானே பார்த்துக் கிட்டிருக்கும் ஹி..ஹி..

எம் அப்துல் காதர் said...

//அவ ஆடுறாளோ இல்லியோ, வீட்டில அவளை ஆட வைக்க நா ஆடுறேன்.. (ஒரு பேச்சுக்கு சொன்னேன்.. உடனே அப்படியான்னு கேக்க பிடாது...). //

சரி சரி..!! நாங்க கேக்கலை நீங்களே சொல்லிடுங்க..

Geetha6 said...

nice!

Menaga Sathia said...

நகைச்சுவையோடு சூப்பரா சொல்லிட்டீங்க ஆனந்தி!!

செல்வா said...

அட அமெரிக்க வாழ்க்கைய இவ்வளவு அழகா சொல்லிருக்கீங்க .,
அதிலும் அந்த OCA போறது சூப்பர் .. நானும் கூட அது என்னமோ கிளாஸ் அப்படின்னுதான் நினைச்சேன் .. ஹி ஹி ஹி ..

Unknown said...

hi ananthi...


உங்கள் அனைத்து பதிவும் மிகவும் அருமை.

keep up the good, awesome work.

:-) b

vanathy said...

விடுங்க! இந்த ரங்ஸ் எல்லோருமே இப்படி தான் ஓவரா பிலிம் காட்டுவாங்க. என் ஆ.காரரும் இதே தான்.
நீங்க பரவாயில்லை டான்ஸ் கிளாஸ் மட்டும். சில பிள்ளைகளின் அம்மாக்கள் பாட்டு, டான்ஸ், ஸ்கேட்டிங், ....இப்படி எல்லா க்ளாஸ்லையும் சேர்த்து விட்டுட்டு, அவங்க செய்யும் அலப்பறை தாங்க முடியாது.

ஜீவன்பென்னி said...

சிரிக்கிறத தவற வேற என்ன செய்யுறது........ :)

சாந்தி மாரியப்பன் said...

அமெரிக்காவானாலும், ஆண்டிப்பட்டியானாலும், இங்கே சொல்லியிருக்கிற விஷயங்கள் ஒண்ணுபோலத்தான் இருக்கும் போலிருக்கு.. :-))))

logu.. said...

\\என்னைப் பொறுத்த வரையில் எத்தனை கிளாஸ் சேர்க்கிறோம் என்பது முக்கியம் இல்லை, எதாச்சும் ஒண்ணுல சேர்த்தாலும் அத உருப்படியா செய்ய வைக்கணும்.. அவ்ளோ தாங்க...! \\

இந்த ஒன்றரை லைன்
சொல்றதுக்கு ஒன்றரை
பக்கம் பில்டப்பா?

ங்கொக்க மக்க
எட்றா அருவாள..

Thanglish Payan said...

Please OCA expansion sollunga :)

Really Superb..

'பரிவை' சே.குமார் said...

ஆனந்தி...
சுவைப்பட சொல்லி உள்ளீர்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

பிராக்கட்ல சொன்ன கமெண்ட்ஸ் எல்லாம் அருமை,ஆனந்தி வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

பதிவு போட்டா சொல்றதில்லையா?சாரி ஃபார் லேட் கமெண்ட்

சி.பி.செந்தில்குமார் said...

உங்க குட்டீஸ் ஃபோட்டொவையும் போடலாமே

dheva said...

கண்டிப்பா OCAல சேத்து விடுங்க பிள்ளைங்கள.. இன்னுமா சேர்க்கல..

( ஒரு பதில் சொல்றதுக்கு முன்னால ஓராயிரம் தடவை யோசிக்க வேணாம்....ஹா..ஹா..ஹா)

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பிள்ளைங்க வளரட்டும்.. நாம திரு திருன்னு முழிச்சுகிட்டு இருக்க வேண்டியதுதான். கல்வி முறையும், டெக்கினாலஜியும் வளர்ந்து வரும் இக்காலங்களில் பெற்றோர்களும் கூடுமான வரை சமகால நிகழ்வுகளை விளங்கி தங்களின் புரிதலை அதிகப்படுத்திக் கொள்வது நல்லது. அப்போதுதான் பிள்ளைகள் என்ன சொல்கிறார்கள் என்றே நமக்கு விளங்கும்

சரி நான் பாட்டுக்கு கமெண்ட் போட்டுட்டு போய்கிட்டே இருக்கேன். பதிவுலக விதிமுறைபடி கமெண்ட் போட வேணாமா.. இப்டிச் சூடு...

" கதை ரொம்ப சுவாரஸ்யமா இருக்குங்க; நீங்க ரொம்ப நல்லா எழுதுறீங்க. இவ்ளோ எழுதுறத பார்த்தா நீங்களே ஒரு டீச்சர்தான்னு நினைக்கிறேன். சும்மா பின்றீங்க..கலக்குறீங்க... (அச்சோ ஒரு பாரவ காப்பி பண்ணி அருமைன்னு சொல்லனுமே ..வெயிட்...)

//என் குழந்தைகள் இப்போ தான் எலிமெண்டரி லெவல் இல்லையா? அதனால எனக்கு சில பல விஷயங்கள் இன்னும் தெரிய ஆரம்பிக்கவில்லை. அதாவது, இங்க ஸாT , ஸ்பெல்லிங் பீ, MஆTH QஊஈZ ... இந்த மாதிரி விஷயங்கள் நிறைய இருக்குங்க. ஒரு நாள் குட்டீஸ்-ஐ டியூஷன் கிளாஸ் கூட்டிட்டு போயிருந்தேன். அவங்க உள்ள போய்ட்டாங்க, நான் நைடிங் ஹாலில் உக்காந்திருந்தேன். //

நீங்க வெயிட் பண்ணிட்டு இருந்த இந்த இடம் செம டச்சிங் அசத்திட்டீங்க.

சரிங்க மறக்காம எனக்கு PRESENT போட்டுருங்க.....

அப்போ வர்ர்ர்ர்ட்டா!

dheva said...

கண்டிப்பா OCAல சேத்து விடுங்க பிள்ளைங்கள.. இன்னுமா சேர்க்கல..

( ஒரு பதில் சொல்றதுக்கு முன்னால ஓராயிரம் தடவை யோசிக்க வேணாம்....ஹா..ஹா..ஹா)

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பிள்ளைங்க வளரட்டும்.. நாம திரு திருன்னு முழிச்சுகிட்டு இருக்க வேண்டியதுதான். கல்வி முறையும், டெக்கினாலஜியும் வளர்ந்து வரும் இக்காலங்களில் பெற்றோர்களும் கூடுமான வரை சமகால நிகழ்வுகளை விளங்கி தங்களின் புரிதலை அதிகப்படுத்திக் கொள்வது நல்லது. அப்போதுதான் பிள்ளைகள் என்ன சொல்கிறார்கள் என்றே நமக்கு விளங்கும்

சரி நான் பாட்டுக்கு கமெண்ட் போட்டுட்டு போய்கிட்டே இருக்கேன். பதிவுலக விதிமுறைபடி கமெண்ட் போட வேணாமா.. இப்டிச் சூடு...

" கதை ரொம்ப சுவாரஸ்யமா இருக்குங்க; நீங்க ரொம்ப நல்லா எழுதுறீங்க. இவ்ளோ எழுதுறத பார்த்தா நீங்களே ஒரு டீச்சர்தான்னு நினைக்கிறேன். சும்மா பின்றீங்க..கலக்குறீங்க... (அச்சோ ஒரு பாரவ காப்பி பண்ணி அருமைன்னு சொல்லனுமே ..வெயிட்...)

//என் குழந்தைகள் இப்போ தான் எலிமெண்டரி லெவல் இல்லையா? அதனால எனக்கு சில பல விஷயங்கள் இன்னும் தெரிய ஆரம்பிக்கவில்லை. அதாவது, இங்க ஸாT , ஸ்பெல்லிங் பீ, MஆTH QஊஈZ ... இந்த மாதிரி விஷயங்கள் நிறைய இருக்குங்க. ஒரு நாள் குட்டீஸ்-ஐ டியூஷன் கிளாஸ் கூட்டிட்டு போயிருந்தேன். அவங்க உள்ள போய்ட்டாங்க, நான் நைடிங் ஹாலில் உக்காந்திருந்தேன். //

நீங்க வெயிட் பண்ணிட்டு இருந்த இந்த இடம் செம டச்சிங் அசத்திட்டீங்க.

சரிங்க மறக்காம எனக்கு PRESENT போட்டுருங்க.....

அப்போ வர்ர்ர்ர்ட்டா!

dheva said...

கண்டிப்பா OCAல சேத்து விடுங்க பிள்ளைங்கள.. இன்னுமா சேர்க்கல..

( ஒரு பதில் சொல்றதுக்கு முன்னால ஓராயிரம் தடவை யோசிக்க வேணாம்....ஹா..ஹா..ஹா)

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பிள்ளைங்க வளரட்டும்.. நாம திரு திருன்னு முழிச்சுகிட்டு இருக்க வேண்டியதுதான். கல்வி முறையும், டெக்கினாலஜியும் வளர்ந்து வரும் இக்காலங்களில் பெற்றோர்களும் கூடுமான வரை சமகால நிகழ்வுகளை விளங்கி தங்களின் புரிதலை அதிகப்படுத்திக் கொள்வது நல்லது. அப்போதுதான் பிள்ளைகள் என்ன சொல்கிறார்கள் என்றே நமக்கு விளங்கும்

சரி நான் பாட்டுக்கு கமெண்ட் போட்டுட்டு போய்கிட்டே இருக்கேன். பதிவுலக விதிமுறைபடி கமெண்ட் போட வேணாமா.. இப்டிச் சூடு...

" கதை ரொம்ப சுவாரஸ்யமா இருக்குங்க; நீங்க ரொம்ப நல்லா எழுதுறீங்க. இவ்ளோ எழுதுறத பார்த்தா நீங்களே ஒரு டீச்சர்தான்னு நினைக்கிறேன். சும்மா பின்றீங்க..கலக்குறீங்க... (அச்சோ ஒரு பாரவ காப்பி பண்ணி அருமைன்னு சொல்லனுமே ..வெயிட்...)

//என் குழந்தைகள் இப்போ தான் எலிமெண்டரி லெவல் இல்லையா? அதனால எனக்கு சில பல விஷயங்கள் இன்னும் தெரிய ஆரம்பிக்கவில்லை. அதாவது, இங்க ஸாT , ஸ்பெல்லிங் பீ, MஆTH QஊஈZ ... இந்த மாதிரி விஷயங்கள் நிறைய இருக்குங்க. ஒரு நாள் குட்டீஸ்-ஐ டியூஷன் கிளாஸ் கூட்டிட்டு போயிருந்தேன். அவங்க உள்ள போய்ட்டாங்க, நான் நைடிங் ஹாலில் உக்காந்திருந்தேன். //

நீங்க வெயிட் பண்ணிட்டு இருந்த இந்த இடம் செம டச்சிங் அசத்திட்டீங்க.

சரிங்க மறக்காம எனக்கு PRESENT போட்டுருங்க.....

அப்போ வர்ர்ர்ர்ட்டா!

Unknown said...

//அவ ஆடுறாளோ இல்லியோ, வீட்டில அவளை ஆட வைக்க நா ஆடுறேன்.. //
I like your writing style!
Best wishes!!

சௌந்தர் said...

சரிங்க மறக்காம எனக்கு PRESENT போட்டுருங்க...../////

ஸ்கூல் முடிந்து பல நாள் ஆச்சி எப்போ வந்து PRESENT சொல்றிங்க...!////

உங்க கமெண்ட் அருமை.. பின்றீங்க..கலக்குறீங்க.இவங்க பதிவை விட உங்க கமெண்ட் நல்லா இருக்கு தேவா....

அமெரிக்க பாகம் 6 தேவா போட்டு இருக்கார்...!

r.v.saravanan said...

என்னைப் பொறுத்த வரையில் எத்தனை கிளாஸ் சேர்க்கிறோம் என்பது முக்கியம் இல்லை, எதாச்சும் ஒண்ணுல சேர்த்தாலும் அத உருப்படியா செய்ய வைக்கணும்..

ரைட்டு

ஜெய்லானி said...

//எதாச்சும் ஒண்ணுல சேர்த்தாலும் அத உருப்படியா செய்ய வைக்கணும்.. அவ்ளோ தாங்க...! //

கரெக்ட்..!! :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@சஞ்சய்
ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நன்றி...!

ஆமாமா ஒரு 40 வாட்ஸ் இருக்கும்.. :D :D

ஹ்ம்ம் கும்ம்.. இந்திரன் எப்பெக்ட் இன்னும் போகலையாக்கும்.. :-)))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@மோகன்ஜி
வாங்க மோகன்ஜி.. நலம் நலமறிய ஆவல். :-))
ரொம்ப நன்றிங்க. ஆமா.. இங்கே குருகுலம்-வகுப்பில் தமிழ் சொல்லித் தராங்க.. வீட்டிலும் முயன்ற வரை முயல்கிறேன்..
(பர்சனல் பிக்சர் எதுவும் போடுவதை தவிர்க்கிறேன்...)
@@மதுரை சரவணன்
வாங்க சரவணன். ரொம்ப சந்தோசம்..
உங்க கருத்திற்கு மிக்க நன்றி. :-)

@@ஸ்டார்ஜன்
வாங்க.. ரொம்ப நன்றிங்க.. :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@ILA (@) இளா
ஹா ஹா ஹா.. சிறுபுள்ளத்தனம் இல்லைங்க..
ஒன்னு சேர்த்து, ஒழுங்கா படிக்க வைக்கரதுக்கே பெண்டு நிமிருது..
அதனால சொன்னேன்.. :-))
நன்றிங்க..

@@அன்பரசன்
வாங்க. ரொம்ப தேங்க்ஸ்.. :-)

@@நசரேயன்
வாங்க... ஒரு கருத்து சொல்ல விட மாட்டாங்களே...!!
ஹ்ம்ம்ம்... இட்ஸ் ஓகே.. :-))
நன்றிங்க..!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@அன்னு
ஹா ஹா ஹா.. வாங்க அன்னு..
ஆமா.. அதென்ன.. குட்டீஸ் ஒரு படம் வரஞ்சு குடுப்பாங்க..
அப்படியே...சமாளிபிகேஷன் தான்.. :-)))


@@எஸ். கே.
வாங்க. ரொம்ப தேங்க்ஸ் :-)
@@Balaji saravana
ஹா ஹா ஹா.. வாங்க சரவணா..
சொல்..பேச்சு கேக்காதோர் சங்கம்.. செம செம :-)))
இதுல உலகெங்கும் கிளைகளா....??? ரைட்ட்டு
நன்றிங்க..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@மாணவன்
வாங்க.. ரொம்ப சந்தோசம்.
உங்க கருத்துக்கு நன்றிங்க. :-))


@@LK
வாங்க கார்த்திக். ரொம்ப தேங்க்ஸ். :-)


@@சிவா
ஹா ஹா ஹா.. வாங்க..
நீங்க கருத்து இருக்கானு செக் பண்ற ஆப்பீசறாங்க? :-))
ரொம்ப நன்றி..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@சைவகொத்துப்பரோட்டா
ஹா ஹா ஹா... சரி சரி விடுங்க..
இதெல்லாமா விளக்கமா சொல்லிக்கிட்டு... :-)))
நன்றிங்க..


@@யாதவன்
வாங்க.. ரொம்ப நன்றிங்க.. :-)@@சௌந்தர்
வாங்க சார்.. இதுல சப்போர்ட் வேற... :-))
ஆமா.. நீங்கல்லாம் பேசுறீங்க.. நா பேச கூடாதா??
தேங்க்ஸ் சௌந்தர்..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@சுந்தரா
வாங்க.. ரொம்ப சந்தோசம்..
நன்றிங்க.. :-))


@@Madhavan
வாங்க மாதவன்.. ரொம்ப சந்தோசம்..
நன்றிங்க.. :-))@@அருண் பிரசாத்
ஹா ஹா ஹா.. ஹலோ இது சிந்தனை இல்லங்க..
சொந்த கருத்தாக்கும்...!! :-))
நன்றிங்க..!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@மங்குனி அமைச்சர்
வாங்க சார்.. ரொம்ப நன்றிங்க.. :-)@@பிரியமுடன் ரமேஷ்
வாங்க.. ரமேஷ். ரொம்ப சந்தோசம்.. நன்றிங்க.. :-))
@@Sid
ரொம்ப நன்றிங்க..
(பர்சனல் விஷயங்கள் தவிர்க்க முயல்கிறேன்..!! அதனால் பிடித்த நடிகையின் படம் போட்டிருக்கிறேன்)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@எம். அப்துல் காதர்
ஹா ஹா ஹா... வாங்க.. அது சரி தான்.. :-))
இது நல்ல ஐடியா-வா இருக்கே.. நீங்களே சொல்லிருங்க. :-)))
ரொம்ப நன்றிங்க

@@Geetha6
வாங்க.. ரொம்ப நன்றிங்க.. :-)@@Mrs .Menagasathia
வாங்க..மேனகா.. ரொம்ப தேங்க்ஸ் பா... :-)))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@ப. செல்வக்குமார்
ஹா ஹா ஹா.. வாங்க செல்வா.. ரொம்ப தேங்க்ஸ்..
என்ன மாதிரியே....தின்க் பண்றீங்கோ...!! :-)))

@@பூர்ணா
வாங்க கலா... ரொம்ப தேங்க்ஸ்மா... :-))@@vanathy
வாங்க.. வாணி. நீங்க சொல்றது சரி தான்.. எனக்கும் அதே எண்ணம் தான்.
ஒரு நேரம் ஒரு விசயத்துல கவனமா இருக்கறது நல்லது.. :-))
நன்றிங்க..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@அமைதிச்சாரல்
ஹா ஹா ஹா.. அதே அதே..
எங்க போனாலும் நம்மள மாத்த முடியுமாங்க.. :-))
நன்றிங்க..


@@logu
ஹா ஹா ஹா... இப்படி எல்லாம் டென்ஷன் ஆவ பிடாது.. :-)
நோ வயலன்ஸ்... கூல் டவுன்.
நன்றிங்க..@@ Thanglish Payan
வாங்க. ரொம்ப தேங்க்ஸ்..
CA stands for Childrens Academy ..!!
முதல் எழுத்து அந்தந்த city பேராக இருக்கும்..!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@சே. குமார்
வாங்க குமார். ரொம்ப நன்றிங்க. :-)


@@சி. பி. செந்தில்குமார்
வாங்க ரொம்ப நன்றிங்க..
//பதிவு போட்டா சொல்றதில்லையா?சாரி ஃபார் லேட் கமெண்ட் ///
பரவாயில்லங்க.. எப்போ வந்தாலும் சந்தோசம் தான்..
(பதிவு போட்டா எல்லாருக்கும் சொல்லும் வழக்கம் இல்லை.. சாரி) :-))

பர்சனல் படங்களை தவிர்க்க முயல்கிறேன்.. நன்றிங்க..!!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@தேவா
ஹா ஹா ஹா.. இன்னும்ம்ம்ம்ம் தான் சேக்கல..!! :-))
சரி ரைட்ட்டு விடுங்க.. அதுக்கு இப்படியா......???

அதானே.. நா கூட... ஒரு தனி பதிவுக்கு மேட்டர் தேறும் போல இருக்குன்னு நினச்சேன்..! ரெம்ப நன்றிங்க...!!


@@தேவா
உங்க வருகைக்கு ரொம்ப நன்றிங்க.
பகிர்வுக்கு நன்றி. கண்டிப்பாக உங்க வலை தளம் வருகிறேன்.
வாங்க.. :-)))
(இந்த பதில் எப்புடி.....!!!! )

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@ஜீ
வாங்க.. ஜீ.. ரொம்ப தேங்க்ஸ் :-))

@@சௌந்தர்
ஹா ஹா ஹா... சௌந்தர்...
நீங்க பின்றீங்க போங்க... :-)))


@@r .v . saravanan
வாங்க.. ரொம்ப நன்றிங்க. :-)


@@ஜெய்லானி
வாங்க ஜெய்.. ரொம்ப தேங்க்ஸ்.. :-))

சி.பி.செந்தில்குமார் said...

2 பதிவுகளுக்கு இடையே போதிய இடைவெளி எடுத்துக்குவீங்களோ?

kavisiva said...

ஐந்து பாகத்தையும் படிச்சு முடிச்சுட்டேன். ரொம்ப அழகா சுவாரசியமா சொல்லியிருக்கீங்க.

//ஏங்க, பேசாம இந்த டயலாக் எல்லாம் ரெகார்ட் பண்ணி டெய்லி, 3 மணிக்கு நானே ஒரு தரம் ப்ளே பண்ணி கேட்டுக்கரேன்னு...! சொன்னேன்.//

எங்க வீட்டுல வேற ரிக்கார்டட் மெசேஜ் வீட்டுக்கு வீடு வாசப்படி :(

தினேஷ்குமார் said...

நல்ல தொடர் தோழி தொடருங்கள் ஒரு ரெண்டு வரி பேசிக்கலாமா தோழி.........

உலகத்துல எந்த ஸகூல்லையும் டியுஷன் படிக்காம வெற்றி பெறமுடியாத நிலையா
இன்று
பணம் பறிக்கும்
கொல்லையர்கள்
தரணியெங்கும்
தவமிருக்கிறார்கள்
பள்ளித்தளம்
எங்கும்..............

எம் அப்துல் காதர் said...

"ஆனந்தி, தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் எங்களின் மனங்கனிந்த 'தீபாவளி' நல் வாழ்த்துகள்"

மோகன்ஜி said...

தீபாவளி நல வாழ்த்துக்கள் உங்களுக்கும்,குடும்பத்தார்க்கும் ஆனந்தி!

Aathira mullai said...

இந்த இனிமையான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த இறைவனுக்கு நன்றியுடன்..இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துக்கள் தோழி...

மக்கள் மனமெல்லாம் இருள் நீங்கி ஒளி வெள்ளம் சூழ, வன்முறைகள் மறைந்து நன்முறைகள் மலர்ந்து அமைதியும் இன்பமும் எங்கும் நிறைந்திருக்க...

சிங்கக்குட்டி said...

நல்ல பகிர்வு.

நன்றி!

Jaleela Kamal said...

/அவங்க OCA னு ஏதோ MCA ரேஞ்-ல சொன்னது அவங்க ஸ்கூல் பேரோட சுருக்கம்னு..//

hi hi rompa sirippuuu

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

என் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்...

ஏற்றிய தீபம் போல் வாழ்கையில் என்றும் உங்கள் உள்ளத்திலும் பிரகாசம் மலர்ந்திட இறைவனை வேண்டுகிறேன்...

ஜெய்லானி said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ...!! :-))

Unknown said...

என் இனிய தீபாவளி நல்வாத்துக்கள்

Gnana Prakash said...

அழகா உள்ளது ஆனந்தி

அன்புடன் மலிக்கா said...

உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

பதிவு சுவைப்பட சொல்லி உள்ளீர்கள்..

r.v.saravanan said...

தீபாவளி வாழ்த்துக்கள் ஆனந்தி

Kousalya Raj said...

தீபாவளி வாழ்த்துக்கள் தோழி..

Unknown said...

really nice!! best wishes!! :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சி.பி.செந்தில்குமார்

வாங்க. ஹா ஹா ஹா... அதே அதே.. :-))

@kavisiva

வாங்க. ரொம்ப சந்தோசம்பா.. தேங்க்ஸ்.. :-)

ஹா ஹா ஹா.. அங்கும் அதே கதை தானா? ஓகே ஓகே...

@dineshkumar

வாங்க.. உங்களின் கருத்துக்கு ரொம்ப நன்றிங்க..

ஆனால் இங்கே நான் டியூஷன் என்று, குறிப்பிட்டது, நமது தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது.

பள்ளியில் அவுங்க சொல்வது இல்லை..

@எம். அப்துல் காதர்

வாங்க.. உங்க வாழ்த்திற்கு ரொம்ப நன்றிங்க.. :-))

@மோகன்ஜி

வாங்க.. வாழ்த்திற்கு நன்றிங்க. :-))

@சிங்கக்குட்டி

வாங்க. ரொம்ப நன்றிங்க.. :-)

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)