topbella

Thursday, September 16, 2010

அமெரிக்க வாழ்க்கை ....பாகம் 2


நான் எழுதிய கல்யாண வைபோகமே.... பதிவை தொடருமாறு நண்பர்கள் ஆசையாக, ஆர்வமாக விரும்பி கேட்டதால்... (நா எப்படா கேட்டேன்னு எல்லாம் கேக்கபிடாது) நான் அதை அமெரிக்க வாழ்க்கை தொடரில் தொடரலாம்னு நினைக்கிறேன்.. (ஆமாமா,  ரெம்ப சீக்கிரம் தொடர்ந்திட்டன்னு சொல்றது கேட்டுருச்சி. ஹிஹி...
இவ்ளோ நாள் ஒண்ணா மண்ணா பழகிட்டு என் சுறுசுறுப்பு பத்தி உங்களுக்கு தெரியாதாங்க.. )


நா ஏதோ விளையாட்டா 1008 விஷயம் இருக்குன்னு சொன்னேன்.. ஆனா நீங்க இவ்ளோ சீரியஸா வெயிட் பண்றீங்க போல இருக்கு.. :)

சரி... எங்க விட்டேன்... ஹ்ம்ம்..  ஏர்போர்ட்ல இருந்து வெளில வந்து பாத்தா 6 - 7 இன்ச் பனி... இவரோட ப்ரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து, லிமோசின்-ல எங்கள பிக்கப் பண்ண ஏற்பாடு பண்ணியிருந்தாங்க.. அது என்னங்க... அவ்ளோ நீள காரு.. ஒரு பக்கம் நானும், மறுபுறம் அவரும், மற்றும் சில ப்ரண்ட்சும் கூட வந்தாங்க... எல்லாரும் ஏதேதோ பேசிட்டு வந்தாங்க.. எனக்கு தான் ஒன்னும் மண்டையில ஏறல.. (ஏறிட்டா மட்டும்.....என்ன செஞ்சிரப் போறேன்)

என் கவலை எல்லாம், இவ்ளோ குளிரில் இங்க எப்படி இருக்கபோறோம்னு  தான்.. இவங்க தங்கி இருந்த அப்பாட்மெண்டுக்கு கூட்டிட்டு போனாங்க.. எல்லாரும் அறிமுகப்படுத்திட்டு போய்ட்டாங்க.. எங்களுடன் ரெண்டு மூன்று பிரண்ட்ஸ் மட்டும் தங்கி இருந்தாங்க..


காலைல முதல் வேலையா பொறுப்பா காஃபி போடலாம்னு பாத்தா பால் இல்லை... பிரண்ட் ஒருத்தங்க.. இதோ பொறுங்க.. வாங்கிட்டு வரேன்னு போயிட்டு, திரும்பி வரும் போது ஒரு பெரிய பிளாஸ்டிக் கேன் பாலை தூக்கிட்டு வந்தார்.. கிட்ட தட்ட மூணே முக்கால் லிட்டர்...!!  நானும், என்னடா இது அமெரிக்கால காஃபி போட பால் கேட்டா... அபிஷேகமே பண்ணிரலாம் போல இருக்கேன்னு நினச்சேன்..!

எல்லா பொருளுமே.. கொஞ்சம் சைஸ் பெரிது தான்... போல..! நம்ம சமைக்கிற அழகு தான் ஊருக்கே தெரியுமே.. இருந்தாலும்... நா காரக்குழம்பு செய்யிற ஐடியா-ல கத்தரிக்காய், வெங்காயம்  கேட்டேன்.. அவங்களும், மின்னல் வேகத்துல போயி வாங்கிட்டு வந்தாங்க.. கத்தரிக்காய் சைஸ் பாத்து, அசந்து போய்ட்டேன்..!  எப்படியோ சமையல் புக் பாத்து ஒரு மாதிரியா காரக்குழம்பு, செஞ்சு முடிச்சேன்.. அந்த ஏரியாவே ஒரு யுத்த களமா ஆயிருச்சு.. அதையும், (நா பீல் பண்ண கூடாதுன்னு...இருக்கும் போல) நல்லா இருக்குன்னு சாப்ட்டாங்க எல்லாரும்..! பாவம் அவங்க கஷ்டம் அவங்களுக்கு..!

அவங்க எல்லாம் கிளம்பி வேலைக்குப்  போனதும்,  வீடே வெறுச்சோடி இருக்கும்... உண்மையிலயே எனக்கு தனியா இருக்க பயமா இருக்கும்.. அப்போ தான் அம்மா, அப்பா நினைப்பு வேற வரும்.. வேற என்ன... ஓரமா உக்காந்து... பிழிஞ்சு பிழிஞ்சு அழுது பீல் பண்ணிட்டு இருப்பேன்...!


கொஞ்ச  நாள்லயே அதை பாத்துட்டு, இது கதைக்கு ஆவாதுன்னு நினச்சாங்க போல... நிறைய தமிழ் பட வீடியோஸ் எடுத்து தந்தாங்க... இவ்ளோ நாள் பார்க்காத கணக்குக்கும் சேர்த்து வச்சு.. அவ்ளோ படம் பாத்திருக்கேன்... இப்பெல்லாம் படம் பார்க்கணும்னு சொன்னாலே எரிச்சலா இருக்கு.. பின்னே, பனிஷ்மென்ட் மாதிரி அவ்ளோ படம் பாத்தா?


வந்த புதிதில்.. இந்தியா-வில் நாம் பேசி பழகிய  இங்கிலீஷ்-ம், இங்கே அமெரிக்காவில் பேசுற இங்கிலீஷ்-உம் வேற மாதிரி இருந்தது..   வீட்ல தனியா இருக்கும் போது, போன் வந்தா எடுக்கறதே இல்ல..எல்லாம் ஒரு பயம் தான்.. போன்-ஐ எடுத்து அவங்க எதாவது பாஸ்ட் இங்கிலீஷ்ல சொல்லி.. எனக்கு புரியாம மெசேஜ் சொல்ல முடியாம போயிருமோன்னு தான்..! சில நேரங்கள்-ல தைரியத்த வரவழைத்து போன்-ஐ எடுத்தா "ஹாய்.. கேன் ஐ ஸ்பீக் டு யுவர் பேரன்ட்ஸ்... 
ஆர் எனி அடல்ட்ஸ் இன் தி ஹவுஸ்  ஸ்வீட் ஹார்ட்??" னு கேட்டு மானத்த வாங்குவாங்க.. முதல்ல.. கடுப்பா வந்தது... ஆமா எங்க அம்மா, அப்பா இந்தியால இருக்காங்கன்னு சொல்லணும் போல வரும்..

அமெரிக்கா வந்ததும், கிட்டத்தட்ட...எல்லா கனவான்களும் பண்ற ஒரு முக்கியமான டியூட்டி எங்கள கார் டிரைவிங் கத்து குடுத்து லைசென்ஸ் வாங்க வைக்கிறது தான்.. அப்பவும் சிக்கல் ஆச்சு.. டிரைவிங் ஸ்கூல் போனா, எங்கடா அவன் சொல்லித்தறது நமக்கு புரியாம, வண்டிய கொண்டு போய் எங்கயும் முட்டிட்டு நிக்க கூடாதேன்னு நினச்சு.. நீங்களே சொல்லித் தாங்கன்னு இவர் கிட்ட பொறுப்ப குடுத்தாச்சு.. அப்புறம் என்ன.. எல்லா அர்ச்சனையும் வாங்கி.. (தலையில குட்டு ஒண்ணு தான் வாங்கலை.... அவ்ளோ பொறுமையை டெஸ்ட் பண்ணிட்டோம்ல....ஹிஹி)

அதிலும், எங்க ஆளு விண்டர்ல வண்டி ஓட்ட கத்துகிட்டியானால், எங்கயும் வண்டி ஓட்ட ஈசியா இருக்கும்னு சொல்லி வண்டி கத்துக்க வச்சார்.. எப்படியோ, படிச்சி கிழிச்சு ரிட்டன் டெஸ்ட் எழுதி பாஸ் பண்ணி, வண்டி ஓட்டி காமிச்சு ப்ராக்டிகல்  டெஸ்ட்-டிலும் பாஸ் பண்ணிட்டேன்... (ஒரே அட்டெம்ப்ட் தான் தெரியுமா?? )

(தொடரும்...........)

உங்க எல்லாருடைய ஆதரவிற்கும்  ரொம்ப ரொம்ப நன்றிங்க... :) 
                                                                                                         
(நன்றி: கூகிள் இமேஜஸ்)


90 comments:

Sanjay said...

//நீங்க எல்லாரும் இவ்ளோ ஆசையா, ஆர்வமா கேட்டதால //
நா கேக்கல...மக்களே நீங்க யாரும் கேட்டீங்க??? :D :D

புத்தகம் பார்த்து குழம்பு வச்ச நீங்க இப்போ சமையல் குறிப்பு எழுதுறீங்கனு நினைக்கும் போது, (மேஜர் ஸ்டைலில் படிக்கவும்....)எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு...ஐ ஆம் ரியல்லி ப்ரௌட் ஆப் யூ....

ஆர் எனி அடல்ட்ஸ் இன் தி ஹவுஸ் ஸ்வீட் ஹார்ட்???"
ஹா ஹா ஹா.....கைபிள்ள இந்த அவமானம் உனக்கு தேவையா?? :D

அனுபவங்கள் அருமை.... தொடர்ந்து எழுதவும்...போலாம் ரைட்....;-)

எம் அப்துல் காதர் said...

naan தான் 1 st

எம் அப்துல் காதர் said...

இல்ல யார் 1 st வந்தாலும் நான் தான் 1 st ன்னு சொல்லணும் சரியா??

எம் அப்துல் காதர் said...

இருங்க படிச்சிட்டு வர்றேன்

எம் அப்துல் காதர் said...

// வண்டி ஓட்டி காமிச்சு ப்ராக்டிகல் டெஸ்ட்-டிலும் பாஸ் பண்ணிட்டேன்... (ஒரே அட்டெம்ப்ட் தான் தெரியுமா?? ) //

நெசமா வாவ்வ்வ்வவ்வ்வ் (என் கண்ணு பட்டுப் போச்சு, உடனே சுத்திப் போடுங்க!!) க்கி..க்கி

'பரிவை' சே.குமார் said...

நல்ல நகைச்சுவை உணர்வுடன் எழுதியிருக்கீங்க.
ரொம்ப நல்லாயிருக்கு.

சிவராம்குமார் said...

எல்லா சமையல் கட்டிலேயும் புருஷங்கதான் பரிசோதனை எலிகள்... உடனே வரிஞ்சி கட்டிட்டு சொந்த கதையான்னு கேக்க கூடாது!!!

எம் அப்துல் காதர் said...

// ...."ஹாய்.. கேன் ஐ ஸ்பீக் டு யுவர் பேரன்ட்ஸ்... ஆர் எனி அடல்ட்ஸ் இன் தி ஹவுஸ் ஸ்வீட் ஹார்ட்??" னு கேட்டு மானத்த வாங்குவாங்க.. முதல்ல.. கடுப்பா வந்தது... //

சரி.. சரி.. கூல்..அப்ப உங்க குரல் சின்ன புள்ளைட மாதிரி இருக்குமா?? சொல்லவே இல்ல. ஹா.. ஹா..

என்னது நானு யாரா? said...

இன்னைக்கி என்னா எல்லா தங்கமணிகளும் தங்களோட சமையல் யுத்தத்தில தோத்துபோன கதையா சொல்றாங்க!

இன்னைக்கு அப்படி ஒரு ராசியான நாளா? அங்க என்னடான்னா, அப்பாவி அக்கா, அவங்க இட்லி புராணம் சொல்றாங்க!

இங்க நீங்க காரகுழம்பை சொதப்பினதை சொல்றீங்க! என்ன நடக்குதுன்னே புரியல! எல்லோருமே சொல்லி வைச்சிட்டு பதிவுகளை போடறீங்களா என்ன?

ஜெய்லானி said...

//எப்படியோ, படிச்சி கிழிச்சு ரிட்டன் டெஸ்ட் எழுதி பாஸ் பண்ணி, வண்டி ஓட்டி காமிச்சு ப்ராக்டிகல் டெஸ்ட்-டிலும் பாஸ் பண்ணிட்டேன்... (ஒரே அட்டெம்ப்ட் தான் தெரியுமா?? ) //

இங்கே ( ஷார்ஜா ) ஃபைல் ஓப்பன் பண்ணவே ஒரு வருஷம் பிடிக்கும்.. 6 வருஷம் போயும் லைசன்ஸ் கிடைக்காத ஆளும் இருக்கு..அங்கே ஈஸிதான் போல ...!! :-))

ஜெய்லானி said...

//இருந்தாலும்... நா காரக்குழம்பு செய்யிற ஐடியா-ல கத்தரிக்காய், வெங்காயம் கேட்டேன்..//

ஓஹ் வந்த முதல் நாளே கார குழம்பாஆஆஆஆஆஆஆஆ.....ஒரு வெஜ் பிரியாணி இப்படி செஞ்சி அசத்திடக்கூடாது...!!!!!..?

Mahi said...

/உங்க எல்லாருடைய ஆதரவிற்கும் ரொம்ப ரொம்ப நன்றிங்க... :) /அப்படின்னா??
2 பாகத்தோட முடிக்கப்போறீங்களா என்ன?

ஒரே அட்டம்ப்டிலே பாஸா?? சூப்பருங்க!

கமலேஷ் said...

ரொம்ப நல்ல பகிர்வுங்க...


நகைச்சுவையோடு இருக்கு...

தொடருங்கள்..

vanathy said...

லிமோசீன்ல வந்தீங்களா?? நல்ல ரொமான்டிக் அனுபவம் தான்.


ஜெய், என்ன புகையுது ஷார்ஜா பக்கம் இருந்து. இங்கு டிரைவிங் டெஸ்ட் கஷ்டம் தான். எங்க திறமையை மெச்சாமல் ஈஸி என்று போகிற போக்கில் சொல்லக் கூடாது அவ்வ்வ்வ்வ்...

//சரி.. சரி.. கூல்..அப்ப உங்க குரல் சின்ன புள்ளைட மாதிரி இருக்குமா?? சொல்லவே இல்ல//
எனக்கும் அப்படி நடந்திருக்கு. இதெல்லாம் பிறப்பில் வாறது, நாட்டாமை.

தாராபுரத்தான் said...

பகுதி..பகுதியா சோதிக்கிறாயேம்மா?

சௌந்தர் said...

///பதிவை தொடருமாறு நண்பர்கள் ஆசையாக, ஆர்வமாக விரும்பி கேட்டதால்..///
யார் அந்த அறிவாளி

//நா காரக்குழம்பு செய்யிற ஐடியா-ல கத்தரிக்காய், வெங்காயம் கேட்டேன்.. சமையல் புக் பாத்து ஒரு மாதிரியா காரக்குழம்பு, செஞ்சு முடிச்சேன்..///

கார குழம்புக்கு சமையல் புக்கா?

சைவகொத்துப்பரோட்டா said...

பாகம் - 3 எப்போ?

இம்சைஅரசன் பாபு.. said...

சிரிக்கும்படியான நகைச்சுவையுடன் எழுதிய பதிவு

இம்சைஅரசன் பாபு.. said...

//அமெரிக்கா வந்ததும், கிட்டத்தட்ட...எல்லா கனவான்களும் பண்ற ஒரு முக்கியமான டியூட்டி எங்கள கார் டிரைவிங் கத்து குடுத்து லைசென்ஸ் வாங்க வைக்கிறது தான்//

இல்லேனா நாங்க தானே கஷ்டபடனும் வரும்போது பெரிய லிஸ்ட கொடுத்து தலைல கட்டிவிடு

Madhavan Srinivasagopalan said...

//உங்க எல்லாருடைய ஆதரவிற்கும் ரொம்ப ரொம்ப நன்றிங்க... :) //

Written test pass பண்ணதுக்கா?

super.. continue.

Anonymous said...

Nice :)

சௌந்தர் said...

ஜெய்லானி said...
//இருந்தாலும்... நா காரக்குழம்பு செய்யிற ஐடியா-ல கத்தரிக்காய், வெங்காயம் கேட்டேன்..//

ஓஹ் வந்த முதல் நாளே கார குழம்பாஆஆஆஆஆஆஆஆ.....ஒரு வெஜ் பிரியாணி இப்படி செஞ்சி அசத்திடக்கூடாது...!!!!!..??////

@@@ஜெய்லானி
ஜெய்லானி அந்த புக் எங்க விற்பனை செய்றாங்க அதையும் சொல்லி வாங்கி கொடுங்கள்

துளசி கோபால் said...

Nice one.

அலைகள் பாலா said...

நல்லா இருக்கு

Kousalya Raj said...

தோழி நலமா ...? இந்த அமெரிக்க வாழ்க்கை பற்றிய பதிவு நல்லா இருக்குப்பா...எழுத்தில் நகைசுவை மிளிர்கிறது.

வாழ்த்துக்கள்...தொடருங்கள்.

Unknown said...

AUNTY..
NEENGA YEN
VATHA KULAMBU PATHI DETAILA CHOLAVILAI..

PADHIVU SUPER..

Unknown said...

ANTHA englishla pesura idam...ohgonu erunthucu aunty..!

sirithu kondey erunthen..
really nice.

வல்லிசிம்ஹன் said...

லிமோசின்ல ஆரம்பிச்ச வாழ்க்கை காரக் க்குழம்பு, டிரைவிங் லெசன் வரை வந்துட்டது. குளிரை எப்படி சமாளிச்சீங்க:)

ரொம்ப அழகா எழுதறீங்க. இப்படியே அமெரிக்கத் தங்கமணிகள் எல்லாம் எழுதினா எவ்வளவு நல்லா இருக்கும்:)

சீமான்கனி said...

//"ஹாய்.. கேன் ஐ ஸ்பீக் டு யுவர் பேரன்ட்ஸ்...
ஆர் எனி அடல்ட்ஸ் இன் தி ஹவுஸ் ஸ்வீட் ஹார்ட்??" னு கேட்டு மானத்த வாங்குவாங்க..//

அமெரிக்கா பல்ப்பா!!! சிரிச்சு முடியல நல்லா ரசிக்கும்படியான பகிர்வு வாழ்த்துகள்....

தமிழ் உதயம் said...

எப்படியோ, படிச்சி கிழிச்சு ரிட்டன் டெஸ்ட் எழுதி பாஸ் பண்ணி, வண்டி ஓட்டி காமிச்சு ப்ராக்டிகல் டெஸ்ட்-டிலும் பாஸ் பண்ணிட்டேன்... //

அமெரிக்கால மட்டும் வண்டி ஓட்டுங்க. இந்தியால வேண்டாம்

VELU.G said...

நல்லா இருக்குங்க

//
. எப்படியோ, படிச்சி கிழிச்சு ரிட்டன் டெஸ்ட் எழுதி பாஸ் பண்ணி, வண்டி ஓட்டி காமிச்சு ப்ராக்டிகல் டெஸ்ட்-டிலும் பாஸ் பண்ணிட்டேன்... (ஒரே அட்டெம்ப்ட் தான் தெரியுமா?? )
//

அப்படியே ரோட்ல ஓட்டிட்டு போய் (யார் மேல விட்டேன்னு) சக்ஸஸ் பன்னின அனுபவத்தையும் போடுங்க மேடம்

பாஸ் செய்ததற்கு வாழ்த்துக்கள்

janaki said...

its vary interesting continue pannina nalla irukum

சசிகுமார் said...

நல்ல பகிர்வு வாழ்த்துக்கள்.

Anonymous said...

'நான் எழுதிய கல்யாண வைபோகமே.... பதிவை தொடருமாறு நண்பர்கள் ஆசையாக, ஆர்வமாக விரும்பி கேட்டதால்... (நா எப்படா கேட்டேன்னு எல்லாம் கேக்கபிடாது)"

நான் கேட்டேனா ???

சரி என் தோழி மனம் நோக கூடாது சும்மா சொன்னே பா

ஒரே அட்டெம்ப்ட் ல licence வாங்கினது நான் நம்பறேன் சரியா

"எப்படியோ சமையல் புக் பாத்து ஒரு மாதிரியா காரக்குழம்பு, செஞ்சு முடிச்சேன்.. அந்த ஏரியாவே ஒரு யுத்த களமா ஆயிருச்சு.. அதையும், (நா பீல் பண்ண கூடாதுன்னு...இருக்கும் போல) நல்லா இருக்குன்னு சாப்ட்டாங்க எல்லாரும்..! பாவம் அவங்க கஷ்டம் அவங்களுக்கு..!"

பாவம் ஹி ஹி ..

"தொடரும் " ன்னு போடா மறந்து போச்சா ?மீதி அமெரிக்கன் வாழ்கையே பத்தி படிக்க ஆவலோட வெய்டிங் ..

dheva said...

நல்லா இருக்கு கட்டுரை.....பகிர்வுக்கு நன்றி.

prince said...

(தலையில குட்டு ஒண்ணு தான் வாங்கலை.... அவ்ளோ பொறுமையை டெஸ்ட் பண்ணிட்டோம்ல....ஹிஹி)

ஹிஹிஹிஹிஹிஹிஹிஹி!!

r.v.saravanan said...

நல்ல நகைச்சுவை யா எழுதியிருக்கீங்க.
நல்லாயிருக்கு.

நாடோடி said...

அனுப‌வ‌ம் ந‌ல்லா இருக்குங்க‌.. :)

Thenammai Lakshmanan said...

ஹாய்.. கேன் ஐ ஸ்பீக் டு யுவர் பேரன்ட்ஸ்...
ஆர் எனி அடல்ட்ஸ் இன் தி ஹவுஸ் ஸ்வீட் ஹார்ட்??" னு கேட்டு மானத்த வாங்குவாங்க.. முதல்ல.. கடுப்பா வந்தது... ஆமா எங்க அம்மா, அப்பா இந்தியால இருக்காங்கன்னு சொல்லணும் போல வரும்..
//

ஹாஹாஹா செல்லம் கலக்குறே..:))

surivasu said...

//பிழிஞ்சு பிழிஞ்சு அழுது பீல் பண்ணிட்டு இருப்பேன்//

எழுத்தில் நகைச்சுவை மிளிர்கிறது...
வாழ்த்துக்கள்...தொடருங்கள்..

Sridhar said...

நல்ல பதிவு. அமெரிக்கா புதுசா வர்ற எல்லாரும் இப்படி தான் பீல் பண்ணறாங்க.

Sridhar said...

நல்ல பதிவு. அமெரிக்கா புதுசா வர்ற எல்லாரும் இப்படி தான் பீல் பண்ணறாங்க.

மாதேவி said...

ரசித்துச் சிரித்தேன்.

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா.. ரொம்ப நகைச்சுவை நடையா இருக்குங்க உங்களோடது. ரசிச்சு வாசிக்க முடிஞ்சது.

ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கீங்க போல.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னங்க நல்லா கொண்டுவந்துட்டு சட்டுன்னு இப்பிடி பாதியில முடிச்சிட்டீங்க?

அருண் பிரசாத் said...

சிரிச்சு சிரிச்சு வயறு வலி. நல்ல பதிவு, தொடருங்கள்

Menaga Sathia said...

very interesting pa..continue..

ரிஷபன் said...

கலகலப்பா சொல்றீங்க.. ஆனா அந்த நேரத்துல (அவங்க எல்லாம் கிளம்பி வேலைக்குப் போனதும், வீடே வெறுச்சோடி இருக்கும்...) இருந்த டென்ஷன்.. சொன்ன விதத்துல மறைஞ்சு போச்சு.

RVS said...

காரக் குழம்பு வைக்கறதும்... கார் ஓட்றதும் பத்தி நல்லா எழுதி இருக்கீங்க ஆனந்தி.. வாழ்த்துக்கள்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

மழைக்காகிதம் said...

Good Article.. I tried the same Brinjal two days before and It came Good.. In India I dont know How to cook? But USA Changed ma life.. U have to mention about the expiry date Printed in all Products.. Include some more Pictures in between your msg..

Thanks you

Raja

ஆனந்தி.. said...

/ஹாய்.. கேன் ஐ ஸ்பீக் டு யுவர் பேரன்ட்ஸ்...
ஆர் எனி அடல்ட்ஸ் இன் தி ஹவுஸ் ஸ்வீட் ஹார்ட்??" /
ஹேய்..ஆனந்தி..!!மதுரை ஆனந்தி நலம்..அமெரிக்கா ஆனந்தி ஓகே வா?? துரையம்மா இங்கிலிபிசு ல எல்லாம் பேசி இருக்கு..அம்மாடி..கேட்டவங்க நர்சரி ஸ்கூல் இல் சேர்ந்து எ,ஏ,பி,பீ, படிக்கிறதா கேள்வி..மெய்யாலுமா ஆனந்தி?? :-)

Anisha Yunus said...

ம்ம்ம்ம்... நடத்துங்க!! இதுல 1008 இல்ல அதுக்கும் மேலவே நமக்கு சமாச்சாரம் கிடைக்கும். ஏன்னா...அப்பிடிதான் அமெரிக்காவும் இருக்கு, அமெரிக்கான்னா வாய் பிளந்து பாக்கற நம்ம ஜனங்களும்!!

மோகன்ஜி said...

நகைச்சுவை உணர்வோடு சுவாரஸ்யமா எழுதி இருக்கீங்க.. காரக்குழம்புக்கு தாளிக்கும் போது ஒரு ஸ்பூன் அன்பு, ரெண்டு ஸ்பூன் பாசமும் சேர்த்து தாளிச்சு கொட்டி உங்களவருக்கு பரிமாறுங்க சகோதரி . வாழ்த்துக்களுடன்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

மொதல் நாளே காரக்குழம்பா... ஐயோ பாவம்... அப்பவே அவருக்கு புரிஞ்சு போய் இருக்கும்... என்னன்னு எல்லாம் சொல்ல மாட்டேன்... ஹா ஹா அஹ

//ஹாய்.. கேன் ஐ ஸ்பீக் டு யுவர் பேரன்ட்ஸ்... ஆர் எனி அடல்ட்ஸ் இன் தி ஹவுஸ் ஸ்வீட் ஹார்ட்??"//
ஹா ஹா ஹா.. .இது தான் சூப்பர்...

//நீங்களே சொல்லித் தாங்கன்னு இவர் கிட்ட பொறுப்ப குடுத்தாச்சு//
கிழிஞ்சது க்ரிஷகிரி... ஏன் இப்படி சொந்த செலவுல சூனியம்? ஹா ஹா அஹ

தெய்வசுகந்தி said...

malarum nianivukal ! M!!!!!!!!!!1

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சஞ்சய்

ஹலோ...நீங்களும் தானே கேட்டீங்க... அப்புறம் என்ன மக்கள் கிட்ட கேள்வி?? :D :D
ஹா ஹா ஹா.. தேங்க் யூ... தேங்க் யூ... மேஜர் சார்... :-))
அதானே....இது தேவையா....?? :-))

ரெம்ப தேங்க்ஸ்... :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@எம். அப்துல் காதர்

ஓகே.. நீங்க சொன்னா சரி தான்.. நீங்க தான் 1st ..!!
எல்லாரும் கேட்டுக்கோங்க.. அப்துல் காதர் தான் 1st ...
சரி ஓகே... படிச்சாச்சா??
சுத்தி போட்டாச்சு... :-))
உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சே. குமார்

ரொம்ப நன்றிங்க..உங்க கருத்துக்கு.. :-))@சிவராம்குமார்
ஹா ஹா ஹா.. இவ்ளோ சொன்னபிறகு கேட்பேனா...??
ஹ்ம்ம் ஹும்ம்.... :-)))

நன்றிங்க..
@எம். அப்துல் காதர்
ஹலோ... நீங்க வேற வெறுப்பேத்தாதீங்க....
நன்றிங்க..@என்னது நானு யாரா?
ஹா ஹா... அதெல்லாம் ஒன்னும் இல்லங்க..
ரொம்ப நன்றி

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ஜெய்லானி
ஓ... அவ்ளோ மோசமாவா அங்க இருக்கு லைசென்ஸ் வாங்குறது??
நல்ல வேலை நாங்க அங்க இல்லை... ஹி ஹி... :-))

ஹ்ம்ம் கும்ம்.. வெஜ். பிரியாணி முத நாளே...??? சுத்தம்...
இதுவாச்சும் குழம்பு சொதப்பினால் சோறாவது மிஞ்சும்.... :-))
@Mahi
ஹா ஹா ஹா..
இல்லங்க.. தொடரும் தான்... போட மறந்துட்டேன்... :-))
எஸ் எஸ்.. ஒரே அட்டம்ப்ட்...
ரொம்ப நன்றிங்க@கமலேஷ்
ரொம்ப நன்றிங்க... கண்டிப்பா தொடர்கிறேன்..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@தாராபுரத்தான்
ஹா ஹா..
ரொம்ப நன்றிங்க..

@சௌந்தர்
ஹலோ.. நீங்களும் தான் அந்த அறிவாளியில் ஒருத்தர்... :-)))
ஆமா... அப்போ நாங்க பேபி கிளாஸ்...

நன்றி சௌந்தர்
@சைவகொத்துப்பரோட்டா

சீக்கிரமே போட முயல்கிறேன்...
நன்றிங்க...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@இம்சைஅரசன் பாபு

ரொம்ப நன்றிங்க...
ஹா ஹா.. சரியா சொன்னிங்க
@Madhavan

ஹா ஹா ஹா.. இல்லைங்க.. பொறுமையா படிச்சதுக்கு..
தேங்க்ஸ்
@Balaji Saravana

நன்றிங்க..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சௌந்தர்
ரெம்ப நன்றிங்க....
இவ்ளோ கச்டபடுரதுக்கு, சார் நீங்களே அதை வாங்கி குடுங்க..
@துளசி கோபால்
ரொம்ப தேங்க்ஸ்...@அலைகள் பாலா
ரொம்ப நன்றிங்க...@Kousalya
ரொம்ப நன்றி தோழி...
வாழ்த்துக்கும் நன்றிப்பா..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@siva
ஹலோ.. அது வத்த குழம்பு இல்லம்மா... காரக் குழம்பு....
ரொம்ப தேங்க்ஸ்..@வல்லிசிம்ஹன்
அதை ஏன் கேக்குறீங்க.. ஒரு பெரிய அங்கியா வாங்கி போட்டுடேன்..
ரொம்ப நன்றிங்க.. :-))

Riyas said...

//நா ஏதோ விளையாட்டா 1008 விஷயம் இருக்குன்னு சொன்னேன்.. ஆனா நீங்க இவ்ளோ சீரியஸா வெயிட் பண்றீங்க போல இருக்கு//

அப்புடி இல்லயே...

//ஹாய்.. கேன் ஐ ஸ்பீக் டு யுவர் பேரன்ட்ஸ்...
ஆர் எனி அடல்ட்ஸ் இன் தி ஹவுஸ் ஸ்வீட் ஹார்ட்??"//

ஹா ஹா... சின்னப்புள்ளத்தனமா இல்ல

சௌந்தர் said...

@@@ஆனந்தி

///இவ்ளோ கச்டபடுரதுக்கு, சார் நீங்களே அதை வாங்கி குடுங்க.////

என்ன வாங்கி தரனும் ஒரு வெஜ் பிரியாணி யா இல்லை புக் வாங்கி தரணுமா

சௌந்தர் said...

சௌந்தர் said...
கார குழம்புக்கு சமையல் புக்கா?///

Ananthi said...
ஆமா... அப்போ நாங்க பேபி கிளாஸ்...////

இப்போ மட்டும் எல்லாம் சரியா நடக்குதா நேத்து தான் அண்ணன் போன் பண்ணி சொன்னார் குழம்புலே ஒரே உப்பு

அண்ணாமலை..!! said...

அமெரிக்க வாழ்க்கையைப் பத்தி கதைகதையா சொல்றாங்கப்பா..!!!
:)

Akila said...

very nice dear.... waiting for your next paagam....

http://akilaskitchen.blogspot.com

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சீமான்கனி

ஹா ஹா ஹா.. அதே அதே...!!
வருகைக்கு நன்றிங்க.. :-))
@தமிழ் உதயம்
ஹா ஹா ஹா.. அப்படியெல்லாம் பயப்பட கூடாதுங்க..
வருகைக்கு நன்றிங்க.. :-))
@VELU .G

ஹா ஹா ஹா.. இன்னும் அந்த மாதிரி எல்லாம் பண்ணலைங்க..
உங்க வாழ்த்திற்கு நன்றிங்க..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@janaki
ஹ்ம்ம்...கண்டிப்பா தொடர்கிறேன்..
நன்றிங்க.. :-))
@சசிகுமார்
வாழ்த்திற்கு நன்றிங்க.. :-))
@sandhya
ஹா ஹா ஹா... சரி விடுங்க..நீங்க கேக்கலை.. :D

நீங்க நம்புறீங்க தானே... அது போதுங்க..
ஹா ஹா.. ரொம்ப பாவபடாதீங்க...வேற ஆளுங்கள எல்லாம் கண்டுபிடிச்சு டெஸ்ட் பண்ண முடியாது..
ஆமாங்க.. தொடரும் போட மறந்துட்டேன்...இப்ப்போ போட்டாச்சு...போட்டாச்சு...
கண்டிப்பா எழுதுறேங்க... நன்றி. :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@தேவா
ரொம்ப நன்றி தேவா... இது உங்க ஊர்ல கட்டுரையா?? அவ்வ்வ்வவ்...
வருகைக்கு நன்றிங்க.. :-))
@பிரின்ஸ்
ஹலோ...என்ன சிரிப்பு..?? இல்ல என்ன சிரிப்புன்றேன்..
ஒரு ஆளு கஷ்டப்பட்டு வண்டி கத்துட்டு இருக்கேன்...
நன்றிங்க. :-))@r .v . saravanan
ரொம்ப நன்றிங்க.. :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@நாடோடி
ரொம்ப நன்றிங்க.. :-))@தேனம்மை லக்ஷ்மணன்
ஹா ஹா ஹா..
தேங்க்ஸ் அக்கா :-))
@சூரியபிரகாஷ் .வா
ரொம்ப நன்றிங்க.. :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@Sridhar
எஸ்.. கரெக்ட் தான்.. உங்க வருகைக்கு நன்றிங்க.. :-)
@மாதேவி
நன்றிங்க... உங்க வருகைக்கும் நன்றி :-)
@விக்னேஷ்வரி
ஹா ஹா.. ஆமாங்க வந்த புதிதில் தான்..இப்போ எல்லாம் பழகி போச்சு..
உங்க வருகைக்கு நன்றிங்க.. :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@பன்னிக்குட்டி ராமசாமி
ஹா ஹா ஹா.. இல்லைங்க.. ரொம்ப எழுதினா..உங்களுக்கு போர் அடிக்குமேன்னு தான்.. :-))
சீக்கிரம் தொடர்கிறேன்.. நன்றிங்க :-)@அருண் பிரசாத்
ஹா ஹா... ஓகே ஒரு சோடா பார்சல்....உங்களுக்கு :-))
தேங்க்ஸ் அருண்..@Mrs .Menagasathia

ரொம்ப தேங்க்ஸ்..மா.. :-)))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ரிஷபன்
ஹ்ம்ம்.. ரொம்ப நன்றிங்க.. உங்க வருகைக்கு.. :-))
@RVS
ஹா ஹா.. என்ன ஒரு அடுக்கு மொழி.. சூப்பர் போங்க
நன்றிங்க.. :-)))
@Raja
Thanks a lot.. Good to know that it came out good.
ya, when the time comes we will learn automattically..
sure.. will do that.. :-))
thanks for coming..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ஆனந்தி
எஸ்..நலம் ஆனந்தி.. எப்படி இருக்கீங்க..?
ஹா ஹா ஹா.. கேட்டு தான் சொல்லணும்..
வருகைக்கு நன்றிங்க.. :-))@அன்னு
ஹா ஹா... ஆமாங்க நிறைய நல்ல விசயமும் இருக்கு.... நல்லது இல்லாத விசயமும் இருக்குங்க
முடிந்த வரை சொல்ல முயற்சி பண்றேன்..
வருகைக்கு நன்றிங்க :-))@மோகன்ஜி
ரொம்ப நன்றிங்க.. ஹ்ம்ம்.. ஓகே ஓகே..
கண்டிப்பா செய்றேன்.... :-))
வருகைக்கு நன்றிங்க..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@அப்பாவி தங்கமணி
ஹா ஹா ஹா... ஏம்ப்பா.....அதான் பாக்க ஈசியா இருந்தது.. ஹிஹி..
சரி சரி..வந்தது தான் வந்தீங்க.. சொல்லிட்டு போங்களேன்...
தேங்க்ஸ் பா...
ஹா ஹா... சூனியம் எல்லாம் இல்ல.. வந்த புதிதில், மொழி புரியாம
டிரைவிங் ஸ்கூல்ல சேர்ந்து.. விபரீதம் வேண்டாமேன்னு தான்... :-)))
வருகைக்கு நன்றிங்க..
@தெய்வசுகந்தி
எஸ்... அதே அதே..
வருகைக்கு நன்றிங்க... :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சௌந்தர்
அது உங்க விருப்பம்.... புக்...அல்லது வெஜ் பிரியாணி..
இல்ல ரெண்டுமே... ஏதோ பாத்து செய்யுங்க??
நன்றிங்க... :-))

ஹா ஹா ஹா...
ஹலோ... ஏன்?? ஒழுங்கா நடக்கலன்னு சொன்னங்களாக்கும்...!!
ஓகே ஓகே....! (இது வேற சைடு-ல நடக்குதா?? )
நன்றி சௌந்தர்..
@அண்ணாமலை
வாங்க.. கதை எல்லாம் ஒன்னும் இல்லங்க..
இங்க பார்த்த, பழகின விசயங்கள உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்..
உங்கள் வருகைக்கு நன்றிங்க.. :-))

Starjan (ஸ்டார்ஜன்) said...

//நா ஏதோ விளையாட்டா 1008 விஷயம் இருக்குன்னு சொன்னேன்..//

விளையாட்டுக்கே 1008 விஷயம் இருக்குன்னா அப்போ நிஜத்துல நிறைய இருக்கும்போல.. :))

//எல்லாரும் ஏதேதோ பேசிட்டு வந்தாங்க.. எனக்கு தான் ஒன்னும் மண்டையில ஏறல.. (ஏறிட்டா மட்டும்.....என்ன செஞ்சிரப் போறேன்)//

அதானே.. ஏறிட்டா மட்டும்.. :))

///எப்படியோ சமையல் புக் பாத்து ஒரு மாதிரியா காரக்குழம்பு, செஞ்சு முடிச்சேன்.. அந்த ஏரியாவே ஒரு யுத்த களமா ஆயிருச்சு.. அதையும், (நா பீல் பண்ண கூடாதுன்னு...இருக்கும் போல) நல்லா இருக்குன்னு சாப்ட்டாங்க எல்லாரும்..! //

சாப்பிடறதுக்கு நல்லா இருந்ததா.. அவங்களுக்கு ரொம்ப நல்ல மனசு.. :))

/// இவ்ளோ நாள் பார்க்காத கணக்குக்கும் சேர்த்து வச்சு.. அவ்ளோ படம் பாத்திருக்கேன்... இப்பெல்லாம் படம் பார்க்கணும்னு சொன்னாலே எரிச்சலா இருக்கு.. பின்னே, பனிஷ்மென்ட் மாதிரி அவ்ளோ படம் பாத்தா?///

ஆமா கண்டிப்பாக எரிச்சலாத்தான் இருக்கும்.. அருணைச்சலம் படத்துல ரஜினி சொல்வார்.. எனக்கு சின்னவயசுல சுருட்டு பிடிக்கும் பழக்கம் இருந்தது. எங்கப்பா என்னை திருத்த ஒரு ரூம் பூராவும் சுருட்டு வாங்கிவைத்து என்னை அந்த ரூமில் அடைத்துவிட்டார். நானும் சுருட்டுபிடிச்சி சுருட்டுபிடிச்சி திகைச்சுப்போயிட்டேன். அந்த சுருட்டுவாசனை எனக்கு பிடிக்கலை. அதிலிருந்து சுருட்டு பிடிக்கிறதையே விட்டுட்டேன்னு சொல்வார்.

நல்ல பகிர்வு ஆனந்தி..

செந்தில்குமார் said...

பட்டாசு ஆனந்தி ....

முதன் முதலாய்...

ஆர் எனி அடல்ட்ஸ் இன் தி ஹவுஸ் ஸ்வீட் ஹார்ட்???"

இப்படி கேட்ட அனுபவம் உண்டு அப்படியே கிரு கிருன்னு வந்திடுச்சி எனக்கு ...

பிறகு சரியாயிடுச்சி ஆனந்தி அருமையான வார்த்தை கோர்வை..

காரகுழம்பு காரமாக இருந்ததா...சாப்பிட்டவங்களத்தான் கேக்கனும்

வாழ்த்துக்கள்...

சாமக்கோடங்கி said...

அமெரிக்காவில் இப்படிதான் இருக்குமா.. நல்ல விஷயம்.. நல்ல தகவல்..

பத்மநாபன் said...

அமெரிக்க அனுபவங்கள் அருமை ஆனந்தி சகோதரி.....
பிரமாண்ட அமெரிக்காவின் பிரமிப்பில் ஆழ்ந்ததிலிருந்து , படிப்படியாக நாடு பழகியவிதம் தொடரட்டும்.....

priyamudanprabu said...

எப்படியோ சமையல் புக் பாத்து ஒரு மாதிரியா காரக்குழம்பு, செஞ்சு முடிச்சேன்..
///

ம்ம் சாப்பிட்டவங்க பாவம் ,...

priyamudanprabu said...

எழுத்து நடை நல்ல இருக்கு
தொடர்க . .

thiyaa said...

ரொம்ப நல்லாயிருக்கு.

Jey said...

அம்மனி அசத்தல். நல்லா நகைச்சுவையா எழுதிருக்கீக. தொடரவும்.

Muniappan Pakkangal said...

Nice info ananthi.Yezhuthu nadai nalla irukku.

சிங்கக்குட்டி said...

//கேன் ஐ ஸ்பீக் டு யுவர் பேரன்ட்ஸ்...
ஆர் எனி அடல்ட்ஸ் இன் தி ஹவுஸ்//

ஹ ஹ ஹ ஹா தொப்பி தொப்பி (சந்திரமுகி ஸ்டைல்)...!

நினைத்து நினைத்து சிரித்தேன் :-)

ISR Selvakumar said...

தங்கை ஆனந்தி,
முதல் பாகத்துல ப்ரீவேல ஆரம்பிச்சு, மூணே முக்கால் லிட்டர் பால் கேனுக்கு வந்ததும், சரி சப்ஜெக்ட் மாறிடும்னு பார்த்தா, திரும்பவும் டிரைவிங் ஸீட்டுக்குப் போய்ட்ட..

ஆர் எனி அடல்ட்ஸ் இன் தி ஹவுஸ்?? என்று கடுப்பேற்றிய அந்தக் கனவான்கள் இப்போது போன் செய்வதில்லையா?

ஆமா.. அங்க கத்தரிக்காய் என்ன விலை?

Sathish said...

மிகவும் நல்ல பதிவு
http://eyesnotlies.blogspot.com

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)