topbella

Monday, September 19, 2011

என்னுயிர் வரமே..!



நரை முடி கலந்த 
நின் சிகை அழகும்
குறை காண முடியா 
குழந்தை மென்சிரிப்பும்
இதயம் ஊடுருவும் 
ஈட்டி போல் பார்வையும்

எண்ணி எண்ணி பேசும்
ஏகாந்த வார்த்தைகளும்
சின்ன சின்ன கோபங்களும்
குளிர் நிலவாய் தாபங்களும்
நின் பாதம் சேர்ந்திடவே..
நிதம் நடக்கும் வேள்வியும்...

சிலந்தி வலை போலே
உன் எண்ணச் சிக்கலில் நான்
சிதறியே போகா வண்ணம்
சில்லென்ற உன் நினைவுகள்...
மாட்டி மீள முடியா உறவே
எனைப்  பிரியா என்னுயிர் வரமே..!

...அன்புடன் ஆனந்தி 

(படம்: நன்றி கூகுள்)

22 comments:

ராஜா MVS said...

~*~சிலந்தி வலை போலே
உன் எண்ணச் சிக்கலில் நான்
சிதறியே போகா வண்ணம்
சில்லென்ற உன் நினைவுகள்...
மாட்டி மீள முடியா உறவே
எனைப் பிரியா என்னுயிர் வரமே..!~*~

மிக அருமையான வரிகள்...
வாழ்த்துகள்..சகோ..

ராஜா MVS said...

தமிழ்10 ல் இணைத்துவிட்டேன்..

மகேந்திரன் said...

வார்த்தைகளை செதுக்கியிருக்கிரீர்கள் சகோதரி..
கவிதை நன்று.

Yaathoramani.blogspot.com said...

உள்ளம் கவரும் மென்மையான
அருமையான கவிதை
தொடர வாழ்த்துக்கள்
த.ம 3

கவி அழகன் said...

மனசை தொடும் இனிய வரிகள்

மகேந்திரன் said...

அன்பு சகோதரி
இன்று உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்த
வாய்ப்பு கிடைத்தமைக்கு மனம் மகிழ்கிறேன்.

இணைப்பு ..

http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_20.html

Paru said...

அருமையான படைப்பு. மிகவும் ரசிக்கும் படி உள்ளது.ஒவ்வொரு வரியும் மிகவும் அருமை. தொடர வாழ்த்துக்கள்

சாந்தி மாரியப்பன் said...

ஜூப்பர் கவிதை.

middleclassmadhavi said...

அனைத்தும் கலந்த அருமையான வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கவிதை!

Manickam said...

Arumai Arumai.Mihavum resithom.manickam kalyani

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@suryajeeva
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!


@ராஜா MVS
கருத்துக்கும், வருகைக்கும் நன்றிகள்!
தமிழ்10 -இல் இணைத்தமைக்கு நன்றி!


@மகேந்திரன்
வருகைக்கும், அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி!


@Ramani
வருகைக்கும், தங்களின் கருத்துக்கும் மிக்க நன்றி!


@கவி அழகன்
கருத்துக்கும், வருகைக்கும் நன்றிங்க!


@மகேந்திரன்
என்னை அறிமுகப் படுத்தியமைக்கு மனமார்ந்த நன்றிகள்! :)


@பாரு
தேங்க்ஸ் டா... தொடர்கிறேன்!! :)


@ரத்னவேல்
வருகைக்கும், தங்கள் கருத்திற்கும் நன்றிகள் ஐயா!


@அமைதிச்சாரல்
வருகைக்கும், கருத்துக்கும்.. ரொம்ப தேங்க்ஸ்!!! :)


@middleclassmadhavi
உங்களின் வருகைக்கும், கருத்துக்கும்.. ரொம்ப நன்றிங்க! :)


@Manickam
கருத்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றிங்க!

சௌந்தர் said...

நரை முடி கலந்த
நின் சிகை அழகும்
குறை காண முடியா
குழந்தை மென்சிரிப்பும்/////


யாரு அஜித்தா...??

சிலந்தி வலை போலே
உன் எண்ணச் சிக்கலில் நான்
சிதறியே போகா வண்ணம்
சில்லென்ற உன் நினைவுகள்...///

spider man...??



மாட்டி மீள முடியா உறவே
எனைப் பிரியா என்னுயிர் வரமே..!///

கிண்டல் பண்ணவே மனசு வரல அம்புட்டு நல்லா இருக்கு :))

நெசமா தான் சொல்றேன் பொய் இல்லை

'பரிவை' சே.குமார் said...

Kavithai Arumai...
Romba Azhaga ezhuthi irukkinga...

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@சௌந்தர்
ஹா ஹா.. இல்லையே இல்லையே..!!! :D

ஆமா.. ஸ்பைடர் மேன்... பேட் மேன்.. கிர்ர்ரர்ர்ர்!!!

ஹா ஹா... ஸப்பாஹ்ஹ்ஹ.. ஒரு வழியா.. தப்பிச்சேன்!
ரொம்ப நன்றி சௌந்தர்! :)



@சே. குமார்
உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

Nandhini said...

அருமை....நல்ல கவிதை...வாழ்த்துக்கள்...

Anonymous said...

மென்மையான கவிதை...நல்லாயிருந்தது...

மாய உலகம் said...

கலக்கல் கவிதை

Anonymous said...

""நரை முடி கலந்த நின் சிகை அழகும்குறை காண முடியா குழந்தை மென்சிரிப்பும்இதயம் ஊடுருவும் ஈட்டி போல் பார்வையும்"""
ஆரம்பமே அருமையா இருக்கு தோழி

'பரிவை' சே.குமார் said...

என்னுயிர் வரமே... தலைப்பே ஆயிரம் அர்த்தம் சொல்கிறது.
கவிதை வரிக்கு வரி அருமை.
வாழ்த்துக்கள்...

Anonymous said...

கவிதை மிக அழகு சகோ!!!

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@நந்தினி
தேங்க்ஸ் டா... :))

@ரெவரி
வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க :)


@மாய உலகம்
வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க! :)

@admn
மிக்க நன்றி! :)


@சின்னதூரல்
ஹ்ம்ம்.. கருத்துக்கு நன்றிங்க! :)



@சே. குமார்
மீண்டும் உங்கள் கருத்திற்கு நன்றிகள்! :)


@ஷீ-நிசி
உங்க வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி! :)

செந்தில்குமார் said...

இதமான வரிகள்...ஆனந்தி...

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)