சரி வந்தது தான் வந்தீங்க... இருந்து ஏன் சோக கதைய கேட்டுட்டு போங்க... (என்ன? என்ன யோசனை?.. என்னவோ இருந்து சாப்பிட்டுட்டு தான் போகணும்னு சொல்ற மாதிரி இருக்கோ?? )
மைன்ட் வாய்ஸ் கேட்ச் பண்ணுவோம்ல.. ஹிஹிஹி..
எப்பவும் போல தான் பாட்டு கேட்டு கிட்டு.. நா பாட்டுக்கு ப்ளாக் படிச்சமா கமெண்ட் போட்டமான்னு இருந்தேன்.. ஏதோ ஒரு பாட்டு தேடுறதுக்காக நம்ம கூகிள் ல போயி அந்த பாட்டு பேரை போட்டு தேடினேன்... நம்ம கூகிள் ஆச்சே.. சும்மா பக்கம் பக்கமா அந்த பாட்டு பத்தி காமிச்சது.. சரி, நமக்கு இந்த லிங்க் சரியா வரும்னு.. நம்பி.. (அவ்வவ்வ்வ்வ்வ்) கிளிக் பண்ணேன்..
அவ்ளோ தாங்க நடந்ததது... எங்க இருந்து தான் வருமோ தெரியல... சும்மா குபு குபுனு ஒரே ஒரே எரர் மெசேஜ்.... குட்டி குட்டியா விண்டோ ஓபன் ஆகி.. அப்படி அப்படியே ஹாங் ஆகி நிக்குது.. சரி எதுக்கு வம்புன்னு சிஸ்டம் ஆப் பண்ணிட்டேன்..
அப்புறமா மெதுவா எட்டி பார்த்தேன்.. , திரும்பவும் அதே எரர் மெசேஜ்.. மத்த எதையும் ஓபன் பண்ணாவே விடலை.. எல்லாம் ஓவர்..
சரி நமக்கு தெரிஞ்ச நாலு விஷயம் வச்சு, முயற்சி பண்ணலாம்னா... ஹ்ம்ம் ஹ்ம்ம்.. அதுக்கெல்லாம் வழியே இல்லாம... லேப்டாப் ஏதேதோ எரர் மெசேஜ் சொல்லிட்டே இருந்தது.. முக்கியமா அது வொர்க் பண்ணாம போன விஷயம், யாஹூ மேசென்ஜெர், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரெர், MSN மேச்சென்ஜெர்..
இது எதுமே வொர்க் பண்ணலன்னா.. அப்புறம் ஆன்லைன் எதுக்குன்னு நீங்க சொல்றது கேட்குது....
இத்தன கூத்துல என் தம்பி கிட்ட வேற, போன் பண்ணி.. மணிக்கணக்கா பேசி.... ( சரி பண்றேனாம்.. ) ஒன்னும் கதைக்கு ஆவல.. அப்புறம் கடைசியா, என் தம்பி.. சொன்னங்க பேசாம சிஸ்டம் பார்மட் (போமட்) பண்ணிட வேண்டியது தான்னு.. ஏதோ, புண்ணியத்துக்கு ஒரு நண்பர் உதவியோட என் லேப்டாப், சரி பண்ணியாச்சு.. வரும் செவ்வாய் முதல் மீண்டும் ப்ளாக் உலகிற்கு என்ட்ரி குடுக்க வேண்டியது தான்..
ஒரு வாரம் கூட முழுசா ஆகலை, லேப்டாப் பிரச்னை வந்து, அதுக்குள்ள நா செம டென்ஷன் ஆய்ட்டேன்.. கம்ப்யூட்டர் இல்லாம காப்பி தண்ணி கூட இறங்காது போலிருக்கே..??
அதுலயும், மனசனுக்கு எவ்ளோ முக்கியமான வேலைங்க இருக்கு கம்ப்யூட்டர்ல...
ப்ளாக் படிக்கணும்
கமெண்ட் போடணும்
போஸ்டிங் போடணும்
வந்த கமெண்டுக்கு பதில் போடணும்
ஆர்குட் போகணும்...
பேஸ்புக் போகணும்.....
இப்படி எவ்வளவோ இருக்காக்கும்..!! இதெல்லாம் யாரு புரிஞ்சிக்கறாங்க..
ஒரு படத்துல வடிவேலு சொல்ற மாதிரி, ஒன்னுமே செய்யாம சும்மா இருக்கறது, எவ்ளோ கஷ்டம்னு சும்மா இருக்கறவனுக்குத் தான் தெரியுமாம்.. அதானே....!!
ச ச ச.. எம்புட்டு முக்கியமான வேலைங்க எல்லாமே...கம்ப்யூட்டர் இல்லாம என்னத்த பண்ண முடியும்...?? என்ன நா சொல்றது சரி தானே??
மண்டை காய்தல் என்றால் என்னன்னு..இப்போ இப்போ யாராவது என்ன கேளுங்க.. கரெக்ட்-ஆ சொல்வேன்.. :D
இதனால.. சகல நண்பர், நண்பிகளுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால், வைரஸோ, ஆட்-அவேரோ, ஸ்பை-வேரோ... எல்லாம் உள்ள வராம இருக்க தகுந்த பாதுகாப்புடன் வலை உலகத்தில் உலா வருக...!!
எல்லாருக்கும் ரொம்ப நன்றிங்கோ..!!
51 comments:
உங்கள் மீள் வருகை பார்த்ததும் ,
கண்கள் பனித்தன..இதயம் இனித்தது....!!!!!!! Ha ha he he...
//ஒன்னுமே செய்யாம சும்மா இருக்கறது, எவ்ளோ கஷ்டம்னு சும்மா இருக்கறவனுக்குத் தான் தெரியுமாம்.. அதானே....!!//
அதானே அத சொன்னா நம்மள பைத்தியம்னு சொல்லும் இந்த உலகம் !!!! :D :D
நீங்க கேட்ட பாட்டு என்னனு சொல்லவே இல்லை. அப்பத்தான் உங்க கணினி ஏன் சேட்டை பண்ணுச்சுனு சொல்ல முடியும்.
உங்க கணினி கதையை கேட்டதும் நானும் ஒரே crying.
அப்புறம் சரியாயிடுச்சு அப்படி படித்ததும் தான்
நிம்மதி ஆச்சு.
அப்புறம் அது என்ன பாட்டு சொல்லவே இல்லையே ?
உண்மைதான் நானும் உணர்ந்திருக்கிறேன் இதன் பாதிப்பை . பகிர்வுக்கு நன்றி !
ஆமா ஆனந்தி..நீங்க ரொம்ப பிஸியா இருக்கீங்க.....ஆவ்வ்வ்வ்வ்..சும்மா இருப்பது எவ்வளவு பிஸிண்ணு இண்ணைக்கு தான் தெரிஞ்சுகிட்டேன்.
//மண்டை காய்தல் என்றால் என்னன்னு..இப்போ இப்போ யாராவது என்ன கேளுங்க.. கரெக்ட்-ஆ சொல்வேன்.. //
சொல்லுங்க .சொல்லுங்க சொல்லுங்க சொ...ல்.....லு.....ங்....க
எனக்கு என்னவோ நீங்க சுறா படத்தின் பாட்டை தேடி இருப்பீங்க என்று நினைக்கிறேன்...ஹா..ஹா..
ஆனந்தி, அடடா உங்கள் மடி கணிணியை பூச்சி கடிச்சிடுச்சா???? நான் உங்களை தேடாத இடம் இல்லை. நான் கணிணியில் சில சைட்டுகள் அவாய்ட் பண்ணி விடுவேன். அங்கு போனால் கட்டாயம் பூச்சி கடிக்கும். அனுபவம் பேசுது.
நல்ல ஆண்டி வைரசை பயன்படுத்துங்கள்
link click panrappa parthu click pannanum
ha ha ha.... :))))))))))
அந்த வைரஸ் பேரு என்ன தெரியுமா....
கூகிளாடக்ஸ் (ஹீ ஹீ ஹீ)
கூகுள் எல்லா லிங்கயும் நம்பாதீங்க...
எப்படியோ "பிரபல பதிவர் ஆனந்தி கனிப்பொறியை வைரஸ் தாக்கியது எப்படி"
சன் நியுஸ்-ல போட்டுட்டாங்க தெரியுமா.
இதுபோன்ற நேரங்களில் முதலில் டாஸ்க்மேனேஜர் வழியாக திறந்திருக்கும் தளங்களை மூடிவிட்டு பிரச்சினையை சரி செய்யலாமே அதுவும் சரியாக விட்டால் சேப்மோடில் சென்று ரீஸ்டோர் பாயிண்ட் வழியாகவும் முயற்சி செய்து பார்த்திருக்கலாம்
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
நெருப்பு நரியில் இந்த ஆட் ஆன் https://addons.mozilla.org/en-US/firefox/addon/3456/ இனைப்பது மூலமாகவும் பாதுகாப்பான் முறையில் இனையம் உலவலம்.
இது இண்டரட்நெட் எக்ஸ்புளோரருக்கானது
http://www.mywot.com/en/download/ie
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
நான் கூட நினைத்தேன் நம்ம (நோட் திஸ் பாயிண்ட்)மீரா ஜாஸ்மின கானுமேன்னு?
நீங்க சொன்ன மாதிரி ’’எவ்ளோ கஷ்டம்னு சும்மா இருக்கறவனுக்குத் தான் தெரியும்’’’
என் கம்பியூட்டரும் அடிக்கடி மண்டையை போடுது.சரி பண்ணி குடுங்கன்னா நீ என்ன வேலையா பாக்றேன்னு பதில் கேள்வி?
ஏ யாரப்பா அங்க பவர்கட் பன்னுங்க இந்த பொம்பள்ள பின்னூட்டதில் பதிவே போடும்...
கண்ண கட்டி நடு காட்டுல விட்ட மாதிரி இருந்திருக்குமே....! மனசு படக் படக்குனு அடிச்சிருக்குமே.... நமக்கும் உலகத்துக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி தோணியிருக்குமே....
ஹா... ஹா... ஹா.....அருளிலாருக்கு அவ்வுலகம் இல்லை...பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை....கணிணி இல்லார்க்கு எவ்வுலகமும் இல்லை....ஆனந்தி....!
ஹா... ஹா... ஹா.....அருளிலாருக்கு அவ்வுலகம் இல்லை...பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை....கணிணி இல்லார்க்கு எவ்வுலகமும் இல்லை....ஆனந்தி....!
......ha,ha,ha,.....
Ananthi, you are back!
//ஹா... ஹா... ஹா.....அருளிலாருக்கு அவ்வுலகம் இல்லை...பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை....கணிணி இல்லார்க்கு எவ்வுலகமும் இல்லை....ஆனந்தி....!//
Nice one
இதுக்குதான் மூணு நாலு கணினி ரெடியா வச்சிக்கனும்கறது...
(என்ன? என்ன யோசனை?.. என்னவோ இருந்து சாப்பிட்டுட்டு தான் போகணும்னு சொல்ற மாதிரி இருக்கோ?? )
மைன்ட் வாய்ஸ் கேட்ச் பண்ணுவோம்ல.. ஹிஹிஹி..////////////
எங்க மைன்ட் வாய்சையே கேட்ச் பண்ணுற நீங்க எப்படி வைரஸ் உங்க கம்ப்யூட்டரை கேட்ச் பண்ணவிட்டீங்க
எதுவும் இல்லாமல் இருந்துவிடலாம்.அனுபவித்துவிட்டு இல்லாமல் இருப்பது அது ரொம்ப கொடுமை.கணினி இல்லைன்னு அதை அனுபவிப்பவர்களுக்குதான் தெரியும் அந்த கொடுமை....
//
ஹா... ஹா... ஹா.....அருளிலாருக்கு அவ்வுலகம் இல்லை...பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை....கணிணி இல்லார்க்கு எவ்வுலகமும் இல்லை....ஆனந்தி....!
//
தேவா சொன்னா கரெக்டா இருக்குமுங்கோ
நீங்க பட்டப்பாட்ட சொன்னா இங்க எத்தனை பேருக்கு சந்தோசம் பார்த்தீங்களா, comment ல எத்தனை ஹா ஹா ஹா! பத்தாததுக்கு நான் வேற மூணு ஹா!! கஷ்டத்தைகூட எவ்வளவு நகைசுவையா சொல்றீங்க... அது எனக்கு பிடிச்சிருக்கு
//கம்ப்யூட்டர் இல்லாம என்னத்த பண்ண முடியும்...?? என்ன நா சொல்றது சரி தானே??//.........உண்மைதான் ஆனந்தி!
நான் கூட ஒருமுறை இப்படி தவிச்சது உண்டு.
//''ச ச ச.. எம்புட்டு முக்கியமான வேலைங்க எல்லாமே...கம்ப்யூட்டர் இல்லாம என்னத்த பண்ண முடியும்...?? என்ன நா சொல்றது சரி தானே??''//
மிகவும் சரி ஆனந்தி.
"கண்ணுடையர் என்பவர் கணிணியுள்ளார் முகத்திரண்டு
புண்ணுடையர் கணிணி இல்லாதவர்."
ஆனந்தி....
நீங்கள் சொல்வது மிகவும் உண்மை.
"காலை கடன்களில் ஒன்று கணினியை ஆன் செய்வது." :D :D
ஓ..நம்ம கேசுக நிறையப்பேர் இருக்கிறாங்கோ..கையை வைத்து கொண்டு கம்முன்னு இருக்க வேணும்மல்ல..அப்படீன்னு என் சின்ன பொண்ணு சிடுசிடுன்னு வருவா.
@சஞ்சய்
//உங்கள் மீள் வருகை பார்த்ததும் ,
கண்கள் பனித்தன..இதயம் இனித்தது....!!!!!!! Ha ha he he...//
அடடா.. இப்படி டச் பண்ணிட்டீங்களே.. :)
//ஒன்னுமே செய்யாம சும்மா இருக்கறது, எவ்ளோ கஷ்டம்னு சும்மா இருக்கறவனுக்குத் தான் தெரியுமாம்.. அதானே....!!//
அதானே அத சொன்னா நம்மள பைத்தியம்னு சொல்லும் இந்த உலகம் !!!! :D :D ///
ஹிஹிஹி .. உங்களுக்கு தெரியுது.. எனக்கு தெரியுது.. உலகத்துக்கு தெரியலயே..?? :)
@ தமிழ் உதயம்
//நீங்க கேட்ட பாட்டு என்னனு சொல்லவே இல்லை. அப்பத்தான் உங்க கணினி ஏன் சேட்டை பண்ணுச்சுனு சொல்ல முடியும்//
வாங்க.. இது வம்பு தான்.. ஒரு இளையராஜா சாங் சர்ச் பண்ணேன்..
ரொம்ப நன்றி :)
@ S மகாராஜன்
//உங்க கணினி கதையை கேட்டதும் நானும் ஒரே crying.
அப்புறம் சரியாயிடுச்சு அப்படி படித்ததும் தான்
நிம்மதி ஆச்சு.
அப்புறம் அது என்ன பாட்டு சொல்லவே இல்லையே ?//
வாங்க.. ஹ்ம்ம்.. ஒரு இளையராஜா சாங் தான்..
ரொம்ப நன்றி.. :)
@♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
//உண்மைதான் நானும் உணர்ந்திருக்கிறேன் இதன் பாதிப்பை . பகிர்வுக்கு நன்றி //
வாங்க. ரொம்ப நன்றி :)
@ Mythili Krishnan (மைதிலி கிருஷ்ணன்)
//ஆமா ஆனந்தி..நீங்க ரொம்ப பிஸியா இருக்கீங்க.....ஆவ்வ்வ்வ்வ்..சும்மா இருப்பது எவ்வளவு பிஸிண்ணு இண்ணைக்கு தான் தெரிஞ்சுகிட்டேன் //
ஹாஹா.. வாங்க மைதி.. ரெம்ப நன்றி :P
இப்ப தெரியுதா நா எவ்ளோ பிஸினு.. :D
@ ஜெய்லானி
////மண்டை காய்தல் என்றால் என்னன்னு..இப்போ இப்போ யாராவது என்ன கேளுங்க.. கரெக்ட்-ஆ சொல்வேன்.. //
சொல்லுங்க .சொல்லுங்க சொல்லுங்க சொ...ல்.....லு.....ங்....க ///
வாங்க வாங்க.. இப்படி எல்லாம் அடம் பண்ண கூடாது.. சொல்றேன் சொல்றேன்..
அதாகப்பட்டது.. மண்டை காய்தல் என்றால்,
இருக்கும் ஆனா வராது.. அப்புறமா வரும் ஆனா வராது.. புரியுதா??
ரொம்ப நன்றி :)
@ நாடோடி
//எனக்கு என்னவோ நீங்க சுறா படத்தின் பாட்டை தேடி இருப்பீங்க என்று நினைக்கிறேன்..ஹா..ஹா..//
வாங்க.ஏன் ஏன் இந்த கொல வெறி ?
சுறா தேடியிருந்தா வைரஸ் வந்திருக்காது.. வேற எதாச்சும் தான் வந்திருக்கும்.. ரொம்ப நன்றி.. :)
@vanathy said...
//ஆனந்தி, அடடா உங்கள் மடி கணிணியை பூச்சி கடிச்சிடுச்சா???? நான் உங்களை தேடாத இடம் இல்லை. நான் கணிணியில் சில சைட்டுகள் அவாய்ட் பண்ணி விடுவேன். அங்கு போனால் கட்டாயம் பூச்சி கடிக்கும். அனுபவம் பேசுது//
ஆமா.. வாணி.. :( ஒரே ஒரே பீலிங்க்ஸ்..
என்னை தேடியதற்கு நன்றி.. ஹ்ம்ம்..
நீங்க சொல்றது சரி தான்..
ரொம்ப நன்றி :)
@ நீச்சல்காரன் said...
// நல்ல ஆண்டி வைரசை பயன்படுத்துங்கள்//
வாங்க.. ஹ்ம்ம். ரொம்ப நன்றி :)
@ LK said...
//link click panrappa parthu click pannanum //
வாங்க.. ரொம்ப நன்றி :)
@ அஷீதா said...
// ha ha ha.... :)))))))))) //
வாங்க.. ரொம்ப நன்றி.. :)
@ ஜில்தண்ணி said...
//அந்த வைரஸ் பேரு என்ன தெரியுமா....
கூகிளாடக்ஸ் (ஹீ ஹீ ஹீ)
கூகுள் எல்லா லிங்கயும் நம்பாதீங்க...//
பேரெல்லாம் நல்ல தான் இருக்கு. பண்ற வேலை தான் சரி இல்ல.. ஹ்ம்ம்..
//எப்படியோ "பிரபல பதிவர் ஆனந்தி கனிப்பொறியை வைரஸ் தாக்கியது எப்படி" சன் நியுஸ்-ல போட்டுட்டாங்க தெரியுமா.//
அப்படியா.. அடடா.. மிஸ் பண்ணிட்டனே.. ரொம்ப நன்றி :)
@ ஜிஎஸ்ஆர் said...
//இதுபோன்ற நேரங்களில் முதலில் டாஸ்க்மேனேஜர் வழியாக திறந்திருக்கும் தளங்களை மூடிவிட்டு பிரச்சினையை சரி செய்யலாமே அதுவும் சரியாக விட்டால் சேப்மோடில் சென்று ரீஸ்டோர் பாயிண்ட் வழியாகவும் முயற்சி செய்து பார்த்திருக்கலாம் //
வாங்க.. ஹ்ம்ம்.. உங்கள் உபயோகமான குறிப்புகளுக்கு ரொம்ப நன்றி.. :)
//நெருப்பு நரியில் இந்த ஆட் ஆன் https://addons.mozilla.org/en-US/firefox/addon/3456/ இனைப்பது மூலமாகவும் பாதுகாப்பான் முறையில் இனையம் உலவலம்.
இது இண்டரட்நெட் எக்ஸ்புளோரருக்கானது
http://www.mywot.com/en/download/ie //
ஹ்ம்ம்.. பயனுள்ள தகவல்.. ரொம்ப நன்றிங்க.. :)
@ malar said...
//நான் கூட நினைத்தேன் நம்ம (நோட் திஸ் பாயிண்ட்)மீரா ஜாஸ்மின கானுமேன்னு?
நீங்க சொன்ன மாதிரி ’’எவ்ளோ கஷ்டம்னு சும்மா இருக்கறவனுக்குத் தான் தெரியும்’’’ //
வாங்க மலர்.. ஹ்ம்ம்.. தேடியதற்கு நன்றி.. :)
அதானே.. :D
//என் கம்பியூட்டரும் அடிக்கடி மண்டையை போடுது.சரி பண்ணி குடுங்கன்னா நீ என்ன வேலையா பாக்றேன்னு பதில் கேள்வி?
ஏ யாரப்பா அங்க பவர்கட் பன்னுங்க இந்த பொம்பள்ள பின்னூட்டதில் பதிவே போடும்...//
ஹா ஹா ஹா.. அதெல்லாம் ஒன்னும் இல்ல. கருத்துக்கு ரொம்ப நன்றி..
@ dheva said...
//கண்ண கட்டி நடு காட்டுல விட்ட மாதிரி இருந்திருக்குமே....! மனசு படக் படக்குனு அடிச்சிருக்குமே.... நமக்கும் உலகத்துக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி தோணியிருக்குமே....//
அதே அதே.. :D
//ஹா... ஹா... ஹா.....அருளிலாருக்கு அவ்வுலகம் இல்லை...பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை....கணிணி இல்லார்க்கு எவ்வுலகமும் இல்லை....ஆனந்தி....! //
சூப்பர்.. ரொம்ப கரெக்ட் தேவா.. :)
@ Chitra said...
//ஹா... ஹா... ஹா.....அருளிலாருக்கு அவ்வுலகம் இல்லை...பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை....கணிணி இல்லார்க்கு எவ்வுலகமும் இல்லை....ஆனந்தி....!
......ha,ha,ha,.....
Ananthi, you are back! //
வாங்க.. ஹ்ம்ம்... ரொம்ப நன்றி சித்ரா :)
@Madhavan said...
//ஹா... ஹா... ஹா.....அருளிலாருக்கு அவ்வுலகம் இல்லை...பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை....கணிணி இல்லார்க்கு எவ்வுலகமும் இல்லை....ஆனந்தி....!//
Nice one //
வாங்க.. ரொம்ப நன்றி :)
@ ஸ்ரீராம். said...
//இதுக்குதான் மூணு நாலு கணினி ரெடியா வச்சிக்கனும்கறது...//
ஓஹோ.. வாங்க.. இது நல்ல ஐடியாவா இருக்கே?
ரொம்ப நன்றி.. :)
@ MUTHU said
// (என்ன? என்ன யோசனை?.. என்னவோ இருந்து சாப்பிட்டுட்டு தான் போகணும்னு சொல்ற மாதிரி இருக்கோ?? )
மைன்ட் வாய்ஸ் கேட்ச் பண்ணுவோம்ல.. ஹிஹிஹி..////////////
எங்க மைன்ட் வாய்சையே கேட்ச் பண்ணுற நீங்க எப்படி வைரஸ் உங்க கம்ப்யூட்டரை கேட்ச் பண்ணவிட்டீங்க //
ஏதோ தெரியாம நடந்து போச்சு. பெரிய மனசு பண்ணி..விட்ருங்க..
ரொம்ப நன்றி.. :)
@ Mrs.மேனகசதியா
//எதுவும் இல்லாமல் இருந்துவிடலாம்.அனுபவித்துவிட்டு இல்லாமல் இருப்பது அது ரொம்ப கொடுமை.கணினி இல்லைன்னு அதை அனுபவிப்பவர்களுக்குதான் தெரியும் அந்த கொடுமை....//
வாங்க.. கரெக்ட்.. உங்க கருத்துக்கு நன்றி :)
@ VELU.G said...
//ஹா... ஹா... ஹா.....அருளிலாருக்கு அவ்வுலகம் இல்லை...பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை....கணிணி இல்லார்க்கு எவ்வுலகமும் இல்லை....ஆனந்தி....!//
தேவா சொன்னா கரெக்டா இருக்குமுங்கோ //
கரெக்டுங்கோ.. ரொம்ப நன்றி :)
மீள் வருகையை வரவேற்கிறோம்
@Kousalya said...
//நீங்க பட்டப்பாட்ட சொன்னா இங்க எத்தனை பேருக்கு சந்தோசம் பார்த்தீங்களா, comment ல எத்தனை ஹா ஹா ஹா! பத்தாததுக்கு நான் வேற மூணு ஹா!! கஷ்டத்தைகூட எவ்வளவு நகைசுவையா சொல்றீங்க... அது எனக்கு பிடிச்சிருக்கு//
வாங்க கௌசல்யா.. உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி.. :)
@ Priya said...
//கம்ப்யூட்டர் இல்லாம என்னத்த பண்ண முடியும்...?? என்ன நா சொல்றது சரி தானே??//.........உண்மைதான் ஆனந்தி!
நான் கூட ஒருமுறை இப்படி தவிச்சது உண்டு. //
வாங்க பிரியா.. ஹ்ம்ம் ஹ்ம்ம்... அப்போ உங்களுக்கு நல்லவே புரியுமே?
ரொம்ப நன்றி..
@Nandhini said...
//''ச ச ச.. எம்புட்டு முக்கியமான வேலைங்க எல்லாமே...கம்ப்யூட்டர் இல்லாம என்னத்த பண்ண முடியும்...?? என்ன நா சொல்றது சரி தானே??''//
மிகவும் சரி ஆனந்தி.
"கண்ணுடையர் என்பவர் கணிணியுள்ளார் முகத்திரண்டு
புண்ணுடையர் கணிணி இல்லாதவர்." //
வாங்க.. ஹ்ம்ம்.. குரல் எல்லாம் சுபேரா இருக்கு..
ரொம்ப நன்றி :)
@poorna said...
//ஆனந்தி....
நீங்கள் சொல்வது மிகவும் உண்மை.
"காலை கடன்களில் ஒன்று கணினியை ஆன் செய்வது." :D :D //
ஹ்ம்ம்.. வாங்க.. கருத்துக்கு ரொம்ப நன்றி..
@ தாராபுரத்தான் said...
//ஓ..நம்ம கேசுக நிறையப்பேர் இருக்கிறாங்கோ..கையை வைத்து கொண்டு கம்முன்னு இருக்க வேணும்மல்ல..அப்படீன்னு என் சின்ன பொண்ணு சிடுசிடுன்னு வருவா//
ஹா ஹா.. ஹ்ம்ம்.. சரி தான்.. எததுக்கெல்லாம் செட் சேக்குராங்கப்பா... :)
ரொம்ப நன்றி.
@ஷஸ்னி said..
// மீள் வருகையை வரவேற்கிறோம் ..//
வாங்க.... ரொம்ப நன்றி :)
அருமை...அருமை...வாழ்த்துகள்!
@யாதவன்
//அருமை...அருமை...வாழ்த்துகள்!//
வாங்க யாதவன்.. ரொம்ப நன்றி :)
//ஒன்னுமே செய்யாம சும்மா இருக்கறது, எவ்ளோ கஷ்டம்னு சும்மா இருக்கறவனுக்குத் தான் தெரியுமாம்.. அதானே....!!//
thanks for sharing such nice experience .
//ஒன்னுமே செய்யாம சும்மா இருக்கறது, எவ்ளோ கஷ்டம்னு சும்மா இருக்கறவனுக்குத் தான் தெரியுமாம்.. அதானே....!!//
thanks for sharing such nice experience .
அடுத்து இந்தமாதிரி பிராபளம் வந்தா , ஒரு வாளில நல்ல கொதிக்கிற தண்ணிய ஊத்தி அதோட தேவையான் அளவு உப்பு போட்டு , நாலு ஐஸ் கியூப்ஸ் போட்டு அதுக்குள்ள உங்க கம்ப்யுடர் போடுங்க எல்லாம் சரியா போகும்
@ மதுரை சரவணன்
///ஒன்னுமே செய்யாம சும்மா இருக்கறது, எவ்ளோ கஷ்டம்னு சும்மா இருக்கறவனுக்குத் தான் தெரியுமாம்.. அதானே....!!//
thanks for sharing such nice experience . ///
வாங்க சரவணன்... ரொம்ப நன்றி.. :)
@ மங்குனி அமைச்சர்
///அடுத்து இந்தமாதிரி பிராபளம் வந்தா , ஒரு வாளில நல்ல கொதிக்கிற தண்ணிய ஊத்தி அதோட தேவையான் அளவு உப்பு போட்டு , நாலு ஐஸ் கியூப்ஸ் போட்டு அதுக்குள்ள உங்க கம்ப்யுடர் போடுங்க எல்லாம் சரியா போகும்///
ஹா ஹா ஹா.. :D :D
வாங்க வாங்க.. எங்க இன்னும் ஆள காணோமேன்னு பாத்தேன்..
என்ன ஒரு ப்ரில்லியன்ட் ஐடியா..
முதல்லே தெரியாம போச்சே.. ஹ்ம்ம்...
ரொம்ப நன்றி.. :)
புதிய அனுபவம் அப்படின்னு
சொல்லுங்க......
ஆனந்தி
உண்மைதான் கணினி இல்லாமல்
ரொம்ப கஷ்டம்
செந்தில்குமார்.அ.வெ
வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
www.thalaivan.com
நல்லா சொன்னீங்க போங்க... மணிக்கொருதரம் மைல் பாக்கலைனா பைத்தியம் புடிக்கற மாதிரி ஆகி போச்சு நிலைமை...என்ன செய்ய என்ன செய்ய?
@ அப்பாவி தங்கமணி
//நல்லா சொன்னீங்க போங்க... மணிக்கொருதரம் மைல் பாக்கலைனா பைத்தியம் புடிக்கற மாதிரி ஆகி போச்சு நிலைமை...என்ன செய்ய என்ன செய்ய?//
ஹிஹி.. இங்கயும் அதே கதை தான்.. மனசனுக்கு கம்ப்யூட்டர் எவ்ளோ முக்கியமா ஆச்சு பாருங்க.. :D :D
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.. :)
ஆக, எல்லாருமே இப்படித்தான் (addiction) இருக்கீங்க.?
நல்லது நல்லது :)
thookki poottu udaikka vaendiyadhu thaanae..?
antha laptop ku evvalavu kozhuppu..? Rascal yaarkitta adhan vaelaiyai kaattudhu..?
Neenga evvalavu periya aalu..? Unga kittaiye vaalaattuthaa antha laptoppu :-D
கம்ப்யூட்டர்ல...
ப்ளாக் படிக்கணும்
கமெண்ட் போடணும்
போஸ்டிங் போடணும்
வந்த கமெண்டுக்கு பதில் போடணும்
ஆர்குட் போகணும்...
பேஸ்புக் போகணும்.....
இப்படி எவ்வளவோ இருக்காக்கும்..!! இதெல்லாம் யாரு புரிஞ்சிக்கறாங்க..
அதானே சரியா சொன்னீங்க
ரசிக்கும் படி எழுதியிருக்கீங்க நன்றி
அப்படி என்னதான் தேடுநீங்க புதிய இளைய ராஜா பாடு எதாவது தேடி புட்டீங்களா
Post a Comment