topbella

Tuesday, May 4, 2010

எனக்காய்ப் பிறந்தவனே...!!



எனக்காய்ப் பிறந்தவனே..
ஏன் இத்தனை ஊடல் என்னிடம்...!!

நான் வடித்த வரிகளிலே...
நீ இருக்கும் இடம் அறிவாயே..
நீ இருக்கும் என் மனதினை
நானுனக்குச் சொல்லவும் வேண்டுமோ?

சொல்லத்தான் வந்தேன் நான்.. எனை நீ
அள்ளித்தான் சூடிக்கொண்டாய்..
சொல்லியும் உனக்குப் புரியவில்லையா..இல்லை
நான் சொன்னது தான் புரியவில்லையா?

உன்னிரண்டு கை தழுவக்
காத்திருக்கும்.. என்னிலையை..
உன்னிடம் சொல்கின்றேன்..
உதவிக்கு வருவாயா?

வண்டாடும் சோலையிலே
மலர்ச் செண்டாக நானிருக்க
கொண்டாட வந்தவனே... எனைத்
திண்டாடும் படி ஏன் செய்தாய்?

.....அன்புடன் ஆனந்தி

55 comments:

Sanjay said...

//சொல்லத்தான் வந்தேன் நான்.. எனை நீ அள்ளித்தான் சூடிக்கொண்டாய்...//

ஆஹா ஆஹா....

//வண்டாடும் சோலையிலே மலர்ச் செண்டாக நானிருக்க கொண்டாட வந்தவனே... எனைத் திண்டாடும் படி ஏன் செய்தாய்? //

சாய்ச்சுபுட்டீங்களே..... கவித கவித...கலக்கல்!!!!!! : )

நாடோடி said...

க‌டைசி வ‌ரிக‌ள் ந‌ச்சுனு இருங்குங்க‌... சூப்ப‌ர்..

எல் கே said...

:)

ISR Selvakumar said...

ஆனந்தி,
படமும் வரிகளும் (குறிப்பாக வண்டாடும் சோலையிலே)ஜில்லென்று இருக்கிறது.

Chitra said...

வண்டாடும் சோலையிலே
மலர்ச் செண்டாக நானிருக்க
கொண்டாட வந்தவனே... எனைத்
திண்டாடும் படி ஏன் செய்தாய்?


..... superb! அசத்திட்டீங்கமா. பாராட்டுக்கள்!

dheva said...

//சொல்லத்தான் வந்தேன் நான்.. எனை நீ
அள்ளித்தான் சூடிக்கொண்டாய்..
சொல்லியும் உனக்குப் புரியவில்லையா..இல்லை
நான் சொன்னது தான் புரியவில்லையா?//


சொல்லியும் புரியவில்லையா.....இல்லை...சொன்னதுதான் புரியவில்லையா.....காதலின் வேகத்தை அதிகாரப் பூர்வமாக அறிவிகிறது இவ்வரிகள்....! நன்றாக இருக்கிறது...ஆனந்தி....!

எல் கே said...

காதல் சொல்லும் அருமையான வரிகள்...

காதலில் தவிக்க விடுதலும் தவித்தலும் இயல்புதானே ..

மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ஆனந்தி ...

movithan said...

அருமை.;-)

S Maharajan said...

//நான் வடித்த வரிகளிலே...
நீ இருக்கும் இடம் அறிவாயே..
நீ இருக்கும் என் மனதினை
நானுனக்குச் சொல்லவும் வேண்டுமோ?//

ஆஹா அருமை!
உங்களவருகாக எழுதிய கவிதையா?

Unknown said...

//வண்டாடும் சோலையிலே
மலர்ச் செண்டாக நானிருக்க
கொண்டாட வந்தவனே... எனைத்
திண்டாடும் படி ஏன் செய்தாய்?//

இது சூப்பர் .. நல்ல கவிதை

ஜில்தண்ணி said...

\\வண்டாடும் சோலையிலே
மலர்ச் செண்டாக நானிருக்க
கொண்டாட வந்தவனே... எனைத்
திண்டாடும் படி ஏன் செய்தாய்?\\

ரூம் போட்டு யோசிச்சியிருப்பீங்களோ,அடடா எப்படி இப்படி எல்லாம் எழுதுகிறீர்கள்
படித்ததும் மிரண்டு போய் விட்டேன்

செந்தில்குமார் said...

உன்னிரண்டு கை தழுவக்
காத்திருக்கும்.. என்னிலையை..
உன்னிடம் சொல்கின்றேன்..
உதவிக்கு வருவாயா?

வண்டாடும் சோலையிலே
மலர்ச் செண்டாக நானிருக்க
கொண்டாட வந்தவனே... எனைத்
திண்டாடும் படி ஏன் செய்தாய்?

இதுதான் வரிகள்
என வாரி இரைத்து
வார்த்தை வராமல் செய்துவிட்டிற்கள்
வாழ்த்துக்கள் ஆனந்தி

அண்ணாமலை..!! said...

"வண்டாடும் சோலையிலே
மலர்ச் செண்டாக நானிருக்க
கொண்டாட வந்தவனே... எனைத்
திண்டாடும் படி ஏன் செய்தாய்?
"
சந்தங்கள் சொந்தம் கொண்டாடும் வரிகள்!

malar said...

கவிதை நல்ல இருக்கு....

புரிரவங்களுக்கு புரியனுமே....

புரிஞ்சுட்டாலும் தான்....

vanathy said...

ஆஹா, கவிதை அருமை. கலக்குங்க. கடைசி வரிகள் அருமை.

க.மு.சுரேஷ் said...

//சொல்லியும் உனக்குப் புரியவில்லையா..இல்லை
நான் சொன்னது தான் புரியவில்லையா?//
இவ்வரிகள்....! நன்றாக

சொன்னது தான் புரியவில்லை..
பெண்கள் சொல்வதுதான் புரிவதில்லை..
(அனுபவம்)
பாராட்டுக்கள்!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அம்மாடி... கலக்கல் வரிகள்... எதுகையும் மோனையும் துள்ளி விளையாடுது உங்க கவிதைல வாழ்த்துக்கள் ஆனந்தி

ஸ்ரீராம். said...

கவிதையாவே போட்டுத் தாக்கறீங்களே...வண்டாடும் சோலை என்ற வரி M S அம்மாவின் பாட்டு ஞாபகம் வந்தது.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சஞ்சய்
//ஆஹா ஆஹா....//

ஹ்ம்ம் ஹ்ம்ம்.. ஓகே ஓகே :)

// சாய்ச்சுபுட்டீங்களே..... கவித கவித...கலக்கல்!!!!!! : ) //

அச்சச்சோ.. எங்க எங்க..?? எதுவும் ஹெல்ப் வேணுமா?? :D
ரொம்ப தேங்க்ஸ்... :)

Unknown said...

உணர்வுப் பூர்வமான வரிகள் !!! ! ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@நாடோடி
// க‌டைசி வ‌ரிக‌ள் ந‌ச்சுனு இருங்குங்க‌... சூப்ப‌ர்.. //

ரொம்ப தேங்க்ஸ்.. :)

@ r.selvakkumar
//ஆனந்தி,
படமும் வரிகளும் (குறிப்பாக வண்டாடும் சோலையிலே)ஜில்லென்று இருக்கிறது.//

ஹ்ம்ம்.. எனக்கும் உங்க கமெண்ட் பார்த்து ஜில்லென்று ஆகி விட்டது.. அண்ணா..
நன்றி.. :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@Chitra
// ..... superb! அசத்திட்டீங்கமா. பாராட்டுக்கள்!//

ரொம்ப தேங்க்ஸ் சித்ரா.. :) :)

@dheva
//சொல்லியும் புரியவில்லையா.....இல்லை...சொன்னதுதான் புரியவில்லையா.....காதலின் வேகத்தை அதிகாரப் பூர்வமாக அறிவிகிறது இவ்வரிகள்....! நன்றாக இருக்கிறது...ஆனந்தி....! //

ஹ்ம்ம்.. அப்படியும் வைத்துக்கொள்ளலாம், தேவா.. :)

உங்க கமெண்ட்-க்கு ரொம்ப நன்றி.. :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ LK
//காதல் சொல்லும் அருமையான வரிகள்...
காதலில் தவிக்க விடுதலும் தவித்தலும் இயல்புதானே ..
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ஆனந்தி ... //

உங்க கமெண்ட்-க்கு ரொம்ப நன்றி.. :)

@ malgudi
// அருமை.;-) //

ரொம்ப நன்றி :)

Madumitha said...

சும்மா எதுகை மோனைல
அள்ளி விடுறீங்க.
வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் said...

க‌டைசி வ‌ரிக‌ள் ந‌ச்சுனு இருங்குங்க‌... சூப்ப‌ர்..!

prince said...

//வண்டாடும் சோலையிலே
மலர்ச் செண்டாக நானிருக்க
கொண்டாட வந்தவனே... எனைத்
திண்டாடும் படி ஏன் செய்தாய்?//
சும்மா நச்சுன்னு இருக்கு 1@1

வேங்கை said...

கவிதை நல்லா இருக்கு ஆனந்தி

வாழ்த்துக்கள்

Anonymous said...

சொல்லியும் உனக்குப் புரியவில்லையா..இல்லை
நான் சொன்னது தான் புரியவில்லையா"

enta varigal

migavum rasithen..alagana kavithai...ungalai pola.miga yealpai oru kavithai.

valga valamudan
complan surya

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ S Maharajan said...

// ஆஹா அருமை!
உங்களவருகாக எழுதிய கவிதையா?//

ரொம்ப நன்றி :)

@ முரளி

//இது சூப்பர் .. நல்ல கவிதை//


நன்றி முரளி :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ஜில்தண்ணி

\\ரூம் போட்டு யோசிச்சியிருப்பீங்களோ,அடடா எப்படி இப்படி எல்லாம் எழுதுகிறீர்கள்
படித்ததும் மிரண்டு போய் விட்டேன் //

ஹா ஹா.. ரொம்ப நன்றி.. :)

@ செந்தில்குமார்

//இதுதான் வரிகள்
என வாரி இரைத்து
வார்த்தை வராமல் செய்துவிட்டிற்கள்
வாழ்த்துக்கள் ஆனந்தி //

ரொம்ப நன்றி.. செந்தில்குமார்.. :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ அண்ணாமலை..!!
//சந்தங்கள் சொந்தம் கொண்டாடும் வரிகள்!//

ரொம்ப நன்றி.. :)

@malar

//கவிதை நல்ல இருக்கு....
புரிரவங்களுக்கு புரியனுமே....
புரிஞ்சுட்டாலும் தான்.... //

ஹிஹி.. ரொம்ப கரெக்ட்.. தேங்க்ஸ் மலர்.. :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ vanathy
//ஆஹா, கவிதை அருமை. கலக்குங்க. கடைசி வரிகள் அருமை. //

ரொம்ப நன்றி.. வானதி.. :)

@ க.மு.சுரேஷ்

// இவ்வரிகள்....! நன்றாக
சொன்னது தான் புரியவில்லை..
பெண்கள் சொல்வதுதான் புரிவதில்லை..
(அனுபவம்)
பாராட்டுக்கள்! //

ஹ்ம்ம்.. ஓகே..
ரொம்ப நன்றி.. சுரேஷ். :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@அப்பாவி தங்கமணி
//அம்மாடி... கலக்கல் வரிகள்... எதுகையும் மோனையும் துள்ளி விளையாடுது உங்க கவிதைல வாழ்த்துக்கள் ஆனந்தி //

கமெண்ட்-கும், வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி.. :)

@ஸ்ரீராம்.

//கவிதையாவே போட்டுத் தாக்கறீங்களே...வண்டாடும் சோலை என்ற வரி M S அம்மாவின் பாட்டு ஞாபகம் வந்தது //

ஹ்ம்ம்... ரொம்ப நன்றி ஸ்ரீராம்.. :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ Priya
//உணர்வுப் பூர்வமான வரிகள் !!! ! ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் //

ரொம்ப நன்றி பிரியா :D

@ Madumitha
//சும்மா எதுகை மோனைல
அள்ளி விடுறீங்க.
வாழ்த்துக்கள். //

ரொம்ப நன்றி மதுமிதா.. :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ சே.குமார்
//க‌டைசி வ‌ரிக‌ள் ந‌ச்சுனு இருங்குங்க‌... சூப்ப‌ர்..! //

ரொம்ப நன்றி குமார்.. :)

@ ப்ரின்ஸ்

// சும்மா நச்சுன்னு இருக்கு 1@1 //

ரொம்ப நன்றி பிரின்ஸ்.. :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@வேங்கை
//கவிதை நல்லா இருக்கு ஆனந்தி
வாழ்த்துக்கள் //

ரொம்ப நன்றி.. :)

@complan surya

//சொல்லியும் உனக்குப் புரியவில்லையா..இல்லை
நான் சொன்னது தான் புரியவில்லையா"
enta varigal
migavum rasithen..alagana kavithai...ungalai pola.miga yealpai oru kavithai.
valga valamudan //


ரசித்ததற்கும், வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி சூர்யா.. :)

வெங்கட் said...

// நீ இருக்கும் என் மனதினை
நானுனக்குச் சொல்லவும் வேண்டுமோ?
சொல்லத்தான் வந்தேன் நான்.. எனை நீ
அள்ளித்தான் சூடிக்கொண்டாய்.. //

இதுவரை ஓ.கே..
அவர் தான் அள்ளி சூடிக்கொண்டாரே..
அப்புறம் ஏன்

// சொல்லியும் உனக்குப் புரியவில்லையா..இல்லை
நான் சொன்னது தான் புரியவில்லையா? //

இப்படி எழுதினீங்க..?
எனக்கு கொஞ்சம் Confusion-ஆ இருக்கு..
விளக்க முடியுமா..?

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@வெங்கட்

// நீ இருக்கும் என் மனதினை
நானுனக்குச் சொல்லவும் வேண்டுமோ?
சொல்லத்தான் வந்தேன் நான்.. எனை நீ
அள்ளித்தான் சூடிக்கொண்டாய்.....
இதுவரை ஓ.கே..
அவர் தான் அள்ளி சூடிக்கொண்டாரே..
அப்புறம் ஏன்

// சொல்லியும் உனக்குப் புரியவில்லையா..இல்லை
நான் சொன்னது தான் புரியவில்லையா? //

இப்படி எழுதினீங்க..?
எனக்கு கொஞ்சம் Confusion-ஆ இருக்கு..
விளக்க முடியுமா..? //

சொல்ல வந்ததை..முழுதாய் சொல்லும் முன்னர்..
அள்ளி சூடியதற்கே..... இந்த தொடர் கேள்வி வரிகள்..

(இன்னும் கொஞ்சம் confuse பண்ணி விட்டேனா?? )

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@வெங்கட்

ரொம்ப நன்றி.. :)

ஷஸ்னி said...

சொல்லத்தான் வந்தேன் நான்.. எனை நீ
அள்ளித்தான் சூடிக்கொண்டாய்..

nice

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ ஷஸ்னி
//சொல்லத்தான் வந்தேன் நான்.. எனை நீ
அள்ளித்தான் சூடிக்கொண்டாய்..

nice //

thanks for the comment.. :)

Mythili (மைதிலி ) said...

மீண்டும்... காதல் கவிதை!!!
சூப்பர் மா..வாழ்த்துக்கள்.

pattchaithamizhan said...

Kavithai super, eppadinga ippadi..?

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@Mythili Krishnan (மைதிலி கிருஷ்ணன்)
//மீண்டும்... காதல் கவிதை!!!
சூப்பர் மா..வாழ்த்துக்கள். //

ரொம்ப தேங்க்ஸ் மைதி.. :)

@Thamizh Senthil
//Kavithai super, eppadinga ippadi..?//

செந்தில் தேங்க்ஸ்மா.. :)

Priya said...

Simply superb!

Anonymous said...

superb

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@Priya
// Simply superb! //

தேங்க்ஸ் பிரியா :)

@Ammu Madhu
//superb //

தேங்க்ஸ் அம்மு.. :)

கமலேஷ் said...

கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது...

உங்களுடைய முகம் கவிதையும் படித்தேன்.மிக நன்றாக இருக்கிறது...

வாழ்த்துக்கள் தொடருங்கள்....

karthik said...

nice sister

Anonymous said...

அனைத்து
சகபதிவர்களுக்கும்
உலகத்தில் உள்ள அனைத்து அம்மாவிருக்கும்
அன்னையர்
தின வாழ்த்துக்கள்



வருத்தபடாத வாசிப்போர் சங்கம்
காம்ப்ளான் சூர்யா

Nandhini said...

ஆனந்தி எனக்காய் பிறந்தவனே கவிதை அருமை.....காதல் வரிகளுடன் விளையாடி விட்டீர்கள்...அடேங்கப்பா!!!!!!!!!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@கமலேஷ்
//கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது...
உங்களுடைய முகம் கவிதையும் படித்தேன்.மிக நன்றாக இருக்கிறது...
வாழ்த்துக்கள் தொடருங்கள்.... //

வாங்க கமலேஷ்.. ரொம்ப நன்றி.. :)

@karthik
//nice sister //

தேங்க்ஸ் கார்த்திக்.. :)

@complan surya
//அனைத்து
சகபதிவர்களுக்கும்
உலகத்தில் உள்ள அனைத்து அம்மாவிருக்கும்
அன்னையர்
தின வாழ்த்துக்கள் //
வாங்க சூர்யா.. வாழ்த்துக்கு மிக்க நன்றி.. :)
@Nandhini said...


//ஆனந்தி எனக்காய் பிறந்தவனே கவிதை அருமை.....காதல் வரிகளுடன் விளையாடி விட்டீர்கள்...அடேங்கப்பா!!!!!!!!! //

ரொம்ப நன்றி.. :)

சாந்தி மாரியப்பன் said...

//சொல்லியும் உனக்குப் புரியவில்லையா..இல்லை
நான் சொன்னது தான் புரியவில்லையா?//

கவிதையை ஒருதடவை வாசிச்சு காமிச்சுருக்கலாமே :-))

அருமையா இருக்குங்க.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@அமைதிச்சாரல் said...


/////சொல்லியும் உனக்குப் புரியவில்லையா..இல்லை
நான் சொன்னது தான் புரியவில்லையா?//

கவிதையை ஒருதடவை வாசிச்சு காமிச்சுருக்கலாமே :-))
அருமையா இருக்குங்க. ////

ஹா ஹா.. நல்ல ஐடியா தான்.. வருகைக்கு நன்றி.. :)

r.v.saravanan said...

கவிதை நன்றாக இருக்கிறது

வாழ்த்துக்கள் ஆனந்தி

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)