topbella

Wednesday, April 14, 2010

கார் சாவி காணாமல் போன கதை..


 
** சித்ரா, பித்தன் அவர்களை தொடர்ந்து..
** கொசுவத்தி சுத்தியதால் வந்த நினைவு..
பதிவுலகம்.... இந்த வாரம்ம்ம்ம்.... தொலைச்ச கதையெல்லாம் தோண்டுற வாரம்....
(டிவி-ல வர "குங்குமம்" விளம்பரம் மாதிரி படிச்சுக்கோங்க...)

சரி நம்ம கதைக்கு போவமா...??

அன்றொரு நாள்.. 
என் மகளை.. எப்பவும் போல.. ..பரத நாட்டியம் கிளாஸ்-கு கூட்டிட்டு போனேன் அன்னிக்கு ஒரு ஸ்பெசல் டே.. குழந்தைகள் மேடை ஏறும் முன்னாடி, ஒத்திகை பார்க்கும் நாள்.. அதனால மொத்த குழந்தைகள், அவங்க பெற்றோர்-னு ஒரே கூட்டம்..


எப்பவும் போல வண்டிய பார்க் பண்ணிட்டு..கையில கீஸ் எடுத்துட்டு.. கிளாஸ் உள்ள போனேன்.. (அவ்வளவு தான் ஞாபகம் இருக்கு).. ஒரு ஒரு க்ரூப்பா ஆடினாங்க..  ஹ்ம்ம்ம்ம்.... எல்லாம் நல்லாத் தான் போச்சு....


எல்லாம் முடிஞ்ச பிறகு.. டீச்சர் கிட்ட பை எல்லாம் சொல்லிட்டு, பந்தாவா ஹாண்ட்பாக் எடுத்துட்டு, வெளில வந்து கார் சாவிய தேடுறேன்....தேடுறேன்... கிடைக்கவே இல்ல..! அப்ப கூட ஒன்னும் பெருசா பயப்படல.. நாம யாரு..??

கிளாஸ் உள்ள வரும் முன்னாடி, பின்னாடி.. என்னென்ன பண்ணினேன் எல்லாம் யோசிச்சு யோசிச்சு பாத்து.. டான்ஸ் கிளாஸ் முழுக்கத்  தேடியாச்சு.. எங்கயும் சாவி இல்ல.. இந்த லட்ச்சனத்துல என்னோட கார் சாவியுடன், வீட்டு சாவி, வீட்டு செக்யூரிட்டி அலாரம் கீ... எல்லாம் இருந்தது வேற..  அப்போ தான் டென்ஷன் ஆரம்பம் ஆச்சு... இப்ப வீட்டுக்கும் போக முடியாது..


அப்புறம் என்ன..?? (ஆபத்பாண்டவன்........இருக்கவே இருக்காரே?) என் ஹஸ்பன்ட்டுக்கு போன் பண்ணி, (அவர் கொடுத்த ப்ரீ அர்ச்சனையையும் வாங்கிட்டு........ஹிஹிஹி.....அதெல்லாம் பப்ளிக்-ல சொல்லி இமேஜ் ஸ்பாயில் பண்ண பிடாது.......) ஸ்பேர் கீ கொண்டு வர சொல்லி, கார் எடுத்துட்டு போனோம்.. ஆனா..அன்னிக்கு முழுக்க தூக்கமே வரல.. ஒரே பயம்.. யாரும் வேண்டாதவங்க கையில கீஸ் கிடசிருமொன்னு...தான்..


அப்புறம் ஒரு வழியா.. சாமிய வேண்டிக்கிட்டு தூங்கிட்டேன்.. விடிஞ்ச பிறகு, ஒரு பிரண்ட் போன் பண்ணி, ரொம்ப ரொம்ப சாரி.. என் சின்ன பொண்ணு தான் எங்க கீஸ் மாதிரியே இருக்குன்னு, எங்க வீட்டுக்கு எடுத்துட்டு வந்துட்டா.. இப்ப தான் கவனிச்சேன்னு சொன்னாங்க.. (ரொம்ப நல்லத்தான் கவனிக்கிறாங்க....)


ஸப்பாஹ்ஹ்ஹ்ஹ.... ஒரு வழியா கீஸ் கெடச்சதுன்னு சந்தோசப்பட்டேன்.. இதுல ஜோக் என்னன்னா.. எங்க குரூப் ல இருந்த எல்லா பிரண்ட்கும் போன் பண்ணி கேட்டேன்.. என்னோட கார் கீஸ் பாத்தாங்கலான்னு.. அதுல இப்ப கால் பண்ணின பிரண்டும் ஒருத்தங்க.. ஒரு பக்கம் கீஸ் கிடைச்சது சந்தோசம் தான்னாலும், இத நா போன் பண்ணப்பவே நல்லா பாத்து சொல்லிருக்க கூடாதான்னு நினச்சேன்... (என்ன சின்ன புள்ளத் தனமா இருக்குன்னு சொல்லலாம் தான் ... ஆனா எடுத்துட்டு போனதே ஒரு சின்ன புள்ளையாச்சே...!!)


கீஸ் தொலைந்ததும், ஒரே ஒரே அட்வைஸ் / என்கொயரி.... நீ ஹாண்ட்பாக் சரியா க்ளோஸ் பண்ணி இருக்க மாட்டே, கார் லாக் பண்ணும் போது கீழ போட்டுட்டியா... எனக்கு எதுவும் சரியா ஞாபகம் இல்லையா, அதான் வாய மூடிட்டு அமைதியா இருந்தேன்.. வேற என்ன பண்றது??? உங்க ரவுண்டு என்ஜாய்-னு விட்டுட்டேன்..


இதுல என் ஹஸ்பண்ட், அடுத்த மாசம் வெளியூர் போகிற வேலை இருந்தது.. ... அதை வேற சொல்லி, ஏதோ, நா இருந்தேன் வந்து பிக்-அப் பண்ண முடிஞ்சது, ஊர்ல இல்லன்னா என்ன பன்னிருப்பன்னு, அறிவுப்பூர்வமா கேள்வி வேற..!!   தெரிஞ்சா சொல்ல மாட்டோமா....!! நல்லா  கேக்குறாங்க  கேள்வி...!!


இப்படி வர போற பிள்ளைங்க சாவி எடுத்துட்டு போகும்னு நா என்னத்த கண்டேன்..!!

இதனால.. ஊரு சனங்களுக்கு தெரிவிக்கறது என்னன்னா.. எங்க போனாலும்  உங்கள்  உடைமைகளை கவனமாக  பார்த்துக்கோங்க..!!

 ஓகே ஓகே.. கொசுவத்தி சுத்தி நின்னுருச்சு.... படிச்ச எல்லாருக்கும் ரொம்ப நன்றிங்கோ..!!  மீண்டும்  வருக..!!


46 comments:

Sanjay said...

இப்ப தான் கவனிச்சேன்னு சொன்னாங்க.. (ரொம்ப நல்லத்தான் கவனிக்கிறாங்க....)
ஹா ஹா ஹா ஹா ஹா ...........செம செம செம......!!!!!!!!!!:D :D :D

(என்ன சின்ன புள்ளத் தனமா இருக்குன்னு சொல்லலாம் தான் ... ஆனா எடுத்துட்டு போனதே ஒரு சின்ன புள்ளையாச்சே...!!)
ஹி ஹி ஹி....

//வேற என்ன பண்றது??? உங்க ரவுண்டு என்ஜாய்-னு விட்டுட்டேன்..
ஊர்ல இல்லன்னா என்ன பன்னிருப்பன்னு, அறிவுப்பூர்வமா கேள்வி வேற..!! தெரிஞ்சா சொல்ல மாட்டோமா....!! நல்லா கேக்குறாங்க கேள்வி...!!///

ஹா ஹா ஹா.....கலக்குறீங்க போங்க....!!!!!!!!!!!!!:D :D :D

வழக்கம் போல இயல்பான எழுத்துநடை......I ENJOYED...!!!

இராகவன் நைஜிரியா said...

// கொசுவத்தி சுத்தியதால் வந்த நினைவு.. //

கொசு வத்தி நல்லாவே சுத்தியிருக்கு.

// வெளில வந்து கார் சாவிய தேடுறேன்....தேடுறேன்... கிடைக்கவே இல்ல..! //

தேடினேன்... தேடினேன்... கிளாசின் மூலைவரை, ஸ்கூலின் கார்னர் வரை, காரின் கதவு வரை வந்து தேடினேன் என்று சொல்லாம விட்டீங்களே...

// கிளாஸ் உள்ள வரும் முன்னாடி, பின்னாடி.. என்னென்ன பண்ணினேன் எல்லாம் யோசிச்சு யோசிச்சு பாத்து.. //

சின்ன குழந்தைகள் ஆட்டத்தைப் பார்த்தபின்னாடி அதுக்கு அப்புறம் நடந்தது எதுவுமே ஞாபகத்தில் இல்லை போலிருக்கு. அவங்க ஆட்டத்தில் மெய் மறந்துட்டீங்கன்னு நினைக்கின்றேன்.

// (அவர் கொடுத்த ப்ரீ அர்ச்சனையையும் வாங்கிட்டு.//

அர்ச்சனை பண்ணுவதற்கு முன்னாடி அர்சனை டிக்கெட் வாங்கினாரான்னு கேளுங்க..

//கீஸ் தொலைந்ததும், ஒரே ஒரே அட்வைஸ் //

உலகத்தில் இனாமா கொடுக்க முடிஞ்ச ஒரே விஷயம் அட்வைஸ் தாங்க...

//ஊரு சனங்களுக்கு தெரிவிக்கறது என்னன்னா.. எங்க போனாலும் உங்கள் உடைமைகளை கவனமாக பார்த்துக்கோங்க..!!//

ஷ்யூர்ங்க..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சஞ்சய்

//இப்ப தான் கவனிச்சேன்னு சொன்னாங்க.. (ரொம்ப நல்லத்தான் கவனிக்கிறாங்க....)
ஹா ஹா ஹா ஹா ஹா ...........செம செம செம......!!!!!!!!!!:D :D :D //

ஹி ஹி ஹி.... தேங்க்ஸ்.. :)

//(என்ன சின்ன புள்ளத் தனமா இருக்குன்னு சொல்லலாம் தான் ... ஆனா எடுத்துட்டு போனதே ஒரு சின்ன புள்ளையாச்சே...!!)
ஹி ஹி ஹி....//

இப்படி தான் எனக்கும் தோனுச்சு..:D :D

//வேற என்ன பண்றது??? உங்க ரவுண்டு என்ஜாய்-னு விட்டுட்டேன்..
ஊர்ல இல்லன்னா என்ன பன்னிருப்பன்னு, அறிவுப்பூர்வமா கேள்வி வேற..!! தெரிஞ்சா சொல்ல மாட்டோமா....!! நல்லா கேக்குறாங்க கேள்வி...!!///

ஹா ஹா ஹா.....கலக்குறீங்க போங்க....!!!!!!!!!!!!!:D :D :D //
நீங்க ரசித்து படிச்சதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்...சஞ்சய்..

//வழக்கம் போல இயல்பான எழுத்துநடை......I ENJOYED...!!!
வெரி வெரி ஹாப்பி.... உங்க கமெண்ட் பார்த்து... :D :D
thanks for your continuos support..!!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//கொசு வத்தி நல்லாவே சுத்தியிருக்கு//

ஹி ஹி....

//தேடினேன்... தேடினேன்... கிளாசின் மூலைவரை, ஸ்கூலின் கார்னர் வரை, காரின் கதவு வரை வந்து தேடினேன் என்று சொல்லாம விட்டீங்களே...//
அதே தாங்க... கரெக்ட் ஆ சொன்னிங்க..

//சின்ன குழந்தைகள் ஆட்டத்தைப் பார்த்தபின்னாடி அதுக்கு அப்புறம் நடந்தது எதுவுமே ஞாபகத்தில் இல்லை போலிருக்கு. அவங்க ஆட்டத்தில் மெய் மறந்துட்டீங்கன்னு நினைக்கின்றேன்//
எஸ்.. அது கூட காரணமா இருக்கலாம்..

//அர்ச்சனை பண்ணுவதற்கு முன்னாடி அர்சனை டிக்கெட் வாங்கினாரான்னு கேளுங்க.//
ஹி ஹி.. அவர தான் கேக்கணும்..

//உலகத்தில் இனாமா கொடுக்க முடிஞ்ச ஒரே விஷயம் அட்வைஸ் தாங்க..//

ரொம்ப கரெக்ட்... :D
உங்க வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி..

Unknown said...

உங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் .

பதிவுகளை இணைக்க இங்கு செல்லவும் 

ஓட்டளிப்புப் பட்டை பெற இங்கு செல்லவும் 

நன்றி
தமிழ்10.காம் குழுவினர்

Chitra said...

(என்ன சின்ன புள்ளத் தனமா இருக்குன்னு சொல்லலாம் தான் ... ஆனா எடுத்துட்டு போனதே ஒரு சின்ன புள்ளையாச்சே...!!)

.....ha,ha,ha,ha,.....
நல்ல கலக்"கீ"ல் அனுபவம்........!
புத்தாண்டு வாழ்த்துக்கள்!

சைவகொத்துப்பரோட்டா said...

"கதை" நல்லா இருக்கு, இதோட
அடுத்த பாகம் எப்போ :))

ஜில்தண்ணி said...

//கொசுவத்தி சுத்தியதால் வந்த நினைவு..//

நானும் அப்பளேர்ந்த்து சுத்திகிணே இருக்கன்
தல தான் சூத்துது தலைவி

//. (அவ்வளவு தான் ஞாபகம் இருக்கு).//

உங்களுக்கு என்ன அம்னீசியாவா.

// சாமிய வேண்டிக்கிட்டு தூங்கிட்டேன்..//

இன்னா சாமிய வேண்டிகினீங்க அய்யனாரா இல்லை ஆபத்பாண்டவனா

எல் கே said...

nalla vivarippu

எல் கே said...

//இந்த லட்ச்சனத்துல என்னோட கார் சாவியுடன், வீட்டு சாவி, வீட்டு செக்யூரிட்டி அலாரம் கீ... எல்லாம் இருந்தது வேற.. //

suttham/...

எல் கே said...

//// (அவர் கொடுத்த ப்ரீ அர்ச்சனையையும் வாங்கிட்டு./////
archanayoda niruthitare... santhosa padanum

எல் கே said...

//இப்படி வர போற பிள்ளைங்க சாவி எடுத்துட்டு போகும்னு நா என்னத்த கண்டேன்..!!//

namathan correcta irukonum. pullaingala solli

S Maharajan said...

//இதுல என் ஹஸ்பண்ட், அடுத்த மாசம் வெளியூர் போகிற வேலை இருந்தது.. ... அதை வேற சொல்லி, ஏதோ, நா இருந்தேன் வந்து பிக்-அப் பண்ண முடிஞ்சது, ஊர்ல இல்லன்னா என்ன பன்னிருப்பன்னு, அறிவுப்பூர்வமா கேள்வி வேற..!!//

பார்டா!

//தெரிஞ்சா சொல்ல மாட்டோமா....!! நல்லா கேக்குறாங்க கேள்வி...!!//

அதானே!

எல் கே said...

aduthatha enna tolaika porenga...

ISR Selvakumar said...

ஹா..ஹா..ஹா...
தங்கை சித்ராவைத் தொடர்ந்து இன்னொரு பெண் நகைச்சுவை பதிவர் ரெடியாகிவிட்டார்.

ஆனந்தி, சித்ரா எப்போதோ கொசுவத்தி கொளுத்துவதை நிறுத்தவிட்டார். இப்போ மாவு கிரைண்டர் சுற்றிக் கொண்டிருக்கிறார்.

நாடோடி said...

//அப்புறம் என்ன..?? (ஆபத்பாண்டவன்........இருக்கவே இருக்காரே?) //

தொலைத்த‌ பொருட்களுக்காக‌ வாங்கி க‌ட்டி கொள்வ‌து த‌னி சுக‌ம் தான்.. கொசுவ‌ர்த்தி ந‌ல்லா இருக்கு....

'பரிவை' சே.குமார் said...

வழக்கம் போல இயல்பான எழுத்து.
கலக்குறீங்க.

மங்குனி அமைச்சர் said...

நல்லா யோசனை பண்ணி சொல்லுங்க , கார் "கீ"ய நீங்க தொலசின்களா ? இல்ல கார் "கீ " உங்கள தொலசிடுத்தா ?
இல்ல உங்களுக்கு பயந்து கார் "கீ" அதுவா தொலைஞ்சு போச்சா ?

ஜெய்லானி said...

//இப்படி வர போற பிள்ளைங்க சாவி எடுத்துட்டு போகும்னு நா என்னத்த கண்டேன்..!!//

அந்த சின்ன புள்ள உங்களை தூக்கிட்டு போகாம விட்டதே .எங்க பாட்டி மாதிரி இருக்கீங்கன்னு .

ஸ்ரீராம். said...

நல்ல தோழி போங்க..

நல்ல அனுபவங்கள்..

க.பாலாசி said...

//எங்க போனாலும் உங்கள் உடைமைகளை கவனமாக பார்த்துக்கோங்க..!!//

சரிங்க.. இனிமேலாவது சூதானமா நடந்திக்குங்க....

Priya said...

//என்ன சின்ன புள்ளத் தனமா இருக்குன்னு சொல்லலாம் தான் ... ஆனா எடுத்துட்டு போனதே ஒரு சின்ன புள்ளையாச்சே...!!//.......ம்ம... நைஸ்.
நல்லா எழுதி இருக்கிங்க!

Jj said...

Please visit http://jillunucinema.com

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@தமிழினி

//உங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் .//

மிக்க நன்றி.. இணைத்து விட்டேன்..!!

@சித்ரா
//.....ha,ha,ha,ha,.....
நல்ல கலக்"கீ"ல் அனுபவம்........!
புத்தாண்டு வாழ்த்துக்கள்!//

ஹிஹிஹி... தேங்க்ஸ்மா.

@ சைவகொத்துப்பரோட்டா
//"கதை" நல்லா இருக்கு, இதோட
அடுத்த பாகம் எப்போ :))//

அடுத்த எப்பவாவது எதையாவது தொலைச்சா பாகம் 2 ...எழுதறேன்..

@ ஜில்தண்ணி
//நானும் அப்பளேர்ந்த்து சுத்திகிணே இருக்கன்
தல தான் சூத்துது தலைவி//

இன்னோர் முறை சுத்த விடுங்க.. எதாவது வரும்.. :)

//உங்களுக்கு என்ன அம்னீசியாவா//
இல்லையே.. ஜஸ்ட் மறதி..

//இன்னா சாமிய வேண்டிகினீங்க அய்யனாரா இல்லை ஆபத்பாண்டவனா//
அய்யனாருன்னவே கொஞ்சம் பயம்.. இப்ப ஏன் அவர பத்தி....!!

@LK
//namathan correcta irukonum. pullaingala solli //

கரெக்ட் சார்.. ரொம்ப நன்றி..

@ S Maharajan

கருத்துக்கும், வருகைக்கும் நன்றி..

@LK
// aduthatha enna tolaika porenga...//

தொலைச்சிட்டு சொல்றனே..!!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ r.selvakkumar
//ஹா..ஹா..ஹா...
தங்கை சித்ராவைத் தொடர்ந்து இன்னொரு பெண் நகைச்சுவை பதிவர் ரெடியாகிவிட்டார்.
ஆனந்தி, சித்ரா எப்போதோ கொசுவத்தி கொளுத்துவதை நிறுத்தவிட்டார். இப்போ மாவு கிரைண்டர் சுற்றிக் கொண்டிருக்கிறார்.//

சித்ரா-வை தான் கேக்கணும்..!!
ரொம்ப நன்றி அண்ணா...!!

@ நாடோடி
//தொலைத்த‌ பொருட்களுக்காக‌ வாங்கி க‌ட்டி கொள்வ‌து த‌னி சுக‌ம் தான்.. கொசுவ‌ர்த்தி ந‌ல்லா இருக்கு....//

ஹிஹி.. ரொம்ப நன்றி..

@ சே.குமார்
//வழக்கம் போல இயல்பான எழுத்து.
கலக்குறீங்க.//

ரொம்ப நன்றி... குமார்..

@ மங்குனி அமைச்சர்
//நல்லா யோசனை பண்ணி சொல்லுங்க , கார் "கீ"ய நீங்க தொலசின்களா ? இல்ல கார் "கீ " உங்கள தொலசிடுத்தா? இல்ல உங்களுக்கு பயந்து கார் "கீ" அதுவா தொலைஞ்சு போச்சா? //

ஹா ஹா ஹா...
இதில் நான் எந்த பிரிவை சேர்ந்தவள் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.. :D :D

@ ஜெய்லானி
// அந்த சின்ன புள்ள உங்களை தூக்கிட்டு போகாம விட்டதே .எங்க பாட்டி மாதிரி இருக்கீங்கன்னு//

ஏன்? ஏன்? இந்த கொல வெறி..?? நா பாட்டின்னா நீங்க யாராம்??

@ ஸ்ரீராம்
//நல்ல தோழி போங்க..
நல்ல அனுபவங்கள்..//

ரொம்ப நன்றி.. :D :D

Raghav said...

If felt like you were right next to me and explained this story.....
You haven't changed a bit.....

vanathy said...

Very interesting to read. I really enjoyed your writing.

பித்தனின் வாக்கு said...

// ஏன்? ஏன்? இந்த கொல வெறி..?? நா பாட்டின்னா நீங்க யாராம்?? //

இதுல என்ன சந்தோகம் ஆனந்தி, பாட்டி கிட்ட கதை கேக்கும் சின்ன பசங்க (என்னையும் சேர்த்து). நல்லா கொசுவத்தி சுத்திட்டிங்க. சித்ரா பதிவுல ஹெல்ப் மட்டும் பண்ணாங்களா? இல்லை மொத்த ஜடியாவும் கொடுத்தாங்களா? அவங்க பதிவுலக வாரிசு மாதிரி வளர்றீங்க.

ஜெய்லானி said...

@ ஜெய்லானி
// அந்த சின்ன புள்ள உங்களை தூக்கிட்டு போகாம விட்டதே .எங்க பாட்டி மாதிரி இருக்கீங்கன்னு//

ஏன்? ஏன்? இந்த கொல வெறி..?? நா பாட்டின்னா நீங்க யாராம்?? //

நா பச்ச கொயந்த அதான் பச்சை ரோஸா. நீங்க தான் மீரா ஜாஸ்மீன் பாட்டி மாதிரி இருக்கீங்களே ஹி..ஹி..

( ப்ரோபைல் போட்டோவை சொன்னேன் )

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@க.பாலாசி
// சரிங்க.. இனிமேலாவது சூதானமா நடந்திக்குங்க //

சரிங்க.. நன்றி பாலாசி.. :)

@Priya
//....ம்ம... நைஸ்.
நல்லா எழுதி இருக்கிங்க!//

நன்றி...பிரியா.. :)

@பாலா
//Please visit http://jillunucinema.com //

நன்றி...பாலா..

@ராகவ்
//If felt like you were right next to me and explained this story.....
You haven't changed a bit..... //

ஹிஹிஹி.. ரொம்ப தேங்க்ஸ்மா... :)

@vanathy
//Very interesting to read. I really enjoyed your writing //

Thanks a lottttttttt.. :D :D

@பித்தனின் வாக்கு

// இதுல என்ன சந்தோகம் ஆனந்தி, பாட்டி கிட்ட கதை கேக்கும் சின்ன பசங்க (என்னையும் சேர்த்து). நல்லா கொசுவத்தி சுத்திட்டிங்க. சித்ரா பதிவுல ஹெல்ப் மட்டும் பண்ணாங்களா? இல்லை மொத்த ஜடியாவும் கொடுத்தாங்களா? அவங்க பதிவுலக வாரிசு மாதிரி வளர்றீங்க.//

சரி சரி.. ரொம்ப அழுவாதீங்க.. சின்ன பிள்ளயவே இருந்துட்டு போங்க.. காசா பணமா??

சித்ரா, என்னை பதிவுலகிற்கு அழைத்து வந்தாங்க.. மத்தபடி என் எழுத்தில் அவர்கள் தலையீடு இருக்காது.. அனைவரயும் போல் நான் பதிவு போட்டதும், படித்து கமெண்ட் பண்ணுவாங்க..

நன்றி... :D

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ஜெய்லானி

//நா பச்ச கொயந்த அதான் பச்சை ரோஸா. நீங்க தான் மீரா ஜாஸ்மீன் பாட்டி மாதிரி இருக்கீங்களே ஹி..ஹி..
( ப்ரோபைல் போட்டோவை சொன்னேன் )//

ஹ்ம்ம் ஹ்ம்ம்.. ஓகே ஓகே.. பச்ச குழந்தையாவே இருங்க.. நா ஒன்னும் சொல்லலப்பா..

நன்றி.. மீண்டும் உங்க வருகைக்கு.. :D

தக்குடு said...

//இதுல என் ஹஸ்பண்ட், அடுத்த மாசம் வெளியூர் போகிற வேலை இருந்தது.. ... அதை வேற சொல்லி, ஏதோ, நா இருந்தேன் வந்து பிக்-அப் பண்ண முடிஞ்சது, ஊர்ல இல்லன்னா என்ன பன்னிருப்பன்னு// correctuthaaney madam...:)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@தக்குடுபாண்டி

// correctuthaaney madam...:)//

yess...sirrr... :) :)
thanks for coming..

Nandhini said...

//வேற என்ன பண்றது??? உங்க ரவுண்டு என்ஜாய்-னு விட்டுட்டேன்.....ஹ ஹ ஹ ஹ..!!! //

ஆனந்தி பிளாஷ்பாக் அருமை...முன்பே தெரிந்த கதை தான்....ஆனாலும் மீண்டும் படிப்தற்கு சுவாரசியமாக இருந்தது.

lekha said...

enjoyed reading ur experience..ummm..finally,u ot ur keys..lucky oye lucky..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ Nandhini
//ஹாஹாஹா....ஆனந்தி பிளாஷ்பாக் அருமை...முன்பே தெரிந்த கதை தான்....ஆனாலும் மீண்டும் படிப்தற்கு சுவாரசியமாக இருந்தது.//

ரொம்ப தேங்க்ஸ்..!!

@ chandralekha
//enjoyed reading ur experience..ummm..finally,u ot ur keys..lucky oye lucky..//

yes, I am. தேங்க்ஸ் லேகா..!!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ Nandhini
//ஹாஹாஹா....ஆனந்தி பிளாஷ்பாக் அருமை...முன்பே தெரிந்த கதை தான்....ஆனாலும் மீண்டும் படிப்தற்கு சுவாரசியமாக இருந்தது.//

ரொம்ப தேங்க்ஸ்..!!

@ chandralekha
//enjoyed reading ur experience..ummm..finally,u ot ur keys..lucky oye lucky..//

yes, I am. தேங்க்ஸ் லேகா..!!

துபாய் ராஜா said...

தங்களுக்கும், குடும்பத்தாருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் இந்த ஆண்டும் இனிய ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.

அட,நீங்களும் நம்ம ஊர்தானா... கவிதைகள் நல்லா எழுதறீங்க.எல்லா பதிவுகளையும் படிச்சு சித்ராக்கா சேக்காளின்னும் தெரிஞ்சுகிட்டேன். வாழ்த்துக்கள். வணக்கம்.

maha said...

he he oru valiya savi ketichitula
kitaikiruthu kitaikum kitihathathu kitaikathu(Thathuvam thaks to Rajini) consternation vanum kavanam


maha

maha said...

he he oru valiya savi ketichitula
kitaikiruthu kitaikum kitihathathu kitaikathu(Thathuvam thaks to Rajini) consternation vanum kavanam


maha

செ.சரவணக்குமார் said...

நல்லா எழுதியிருக்கீங்க.

My days(Gops) said...

இந்த சம்பவத்துக்கு அப்புறம் நீங்க எக்ஸ்ட்ரா ஒரு கீ hand bag ல வச்சி இருக்கிறதா கேள்வி :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//தங்களுக்கும், குடும்பத்தாருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் இந்த ஆண்டும் இனிய ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.//

வாழ்த்துக்களுக்கு நன்றி..

//அட,நீங்களும் நம்ம ஊர்தானா... கவிதைகள் நல்லா எழுதறீங்க.எல்லா பதிவுகளையும் படிச்சு சித்ராக்கா சேக்காளின்னும் தெரிஞ்சுகிட்டேன். வாழ்த்துக்கள். வணக்கம்.//

ஹ்ம்ம்... எல்லா பதிவும் பொறுமையா படித்ததற்கு நன்றி..
வருகைக்கும் நன்றி..!!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@maharaj2006
//he he oru valiya savi ketichitula
kitaikiruthu kitaikum kitihathathu kitaikathu(Thathuvam thaks to Rajini) consternation vanum kavanam //

sappaaahhhhh முடியல... எல்லாரும் ரஜினி மாதிரியே பேசிட்டு திரிங்க..
தேங்க்ஸ் அண்ணா!!

R.Gopi said...

நல்லா சுத்துனீங்க போங்க கொசுவத்திய....

ஹா...ஹா...ஹா... சூப்பர் காமெடி தான்...

கவிதன் said...

நகைச்சுவை பதிவு அருமை!!!

தெரிஞ்சா சொல்ல மாட்டோமா....!! நல்லா கேக்குறாங்க கேள்வி...!!

நல்லா கிளப்புராங்கடா பீதிய....

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)