topbella

Thursday, June 3, 2010

மசால் கடலை...!!

என்னங்க.. எல்லாரும் சௌக்கியமா.?? சரி, வாங்க அப்படியே ஒரு காஃபி சாப்பிட்டுட்டு, சூடா மசால் கடலையும் சாப்பிடலாம்.. :)
ஹலோ, கடலைன்னதும் வேற எதுவும் யோசிக்காம ரெசிபி பாருங்க.. :)

மசால் கடலை


தேவையான பொருட்கள்:


வேர்கடலை - 2 கப்
கடலை மாவு - 1 / 4 கப்
மிளகாய்த்தூள் - 2 tsp
கரம் மசாலா - 1 / 2 tsp (பிரியப்பட்டால்)
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
 செய்முறை:

ஒரு அகலமான பாத்திரத்தில் வேர்கடலை, கடலை மாவு, மிளகாய்த்தூள், கரம் மசாலா, கிள்ளிய கறிவேப்பிலை, உப்பு இவற்றை நன்கு கலந்து கொண்டு, பிறகு.. சிறிது சிறிதாக உள்ளங்கையில் தண்ணீர் எடுத்து... அதை கலவையில் கலக்கவும்.. ஒரே நேரத்தில் மொத்தமாக தண்ணீர் விட கூடாது.. கலவை, உதிரியாக இருக்க வேண்டும்..


பின் ஒரு வாணலியில், எண்ணெய் சூடாக்கி கொஞ்சம் கொஞ்சமாக, உதிர்த்து விட்டு, பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.. மிகவும் எளிதான செய்முறை.. ஆனால் தண்ணீர் தெளித்து கடலையை கலப்பதில் தான் இருக்கிறது...  விஷயம்... :)

For Friends who dont know Tamil.. :)

Needed things:
Raw Peanuts - 2 cups
Gram Flour - 1/4 cup
Red Chilli powder - 2 tsp
Garam masala powder - 1/2 tsp (optional)
Curry leaves - little
Salt as needed. 

Method:

In a big vessel add peanuts, gram flour, red chilli powder, garam masala powder, chopped curry leaves,salt. Mix everything well, then add little by little water, by sprinkling it on top then mix it well. Do not add too much water at once.. The mix has to be in separate grains..

Now, heat some oil in a vessel, and add little by little at a time, and fry it until golden color.. Its very simple and delicious recipe.. but, the whole trick is in mixing the nuts only.. :)


40 comments:

Sanjay said...

கடலை தானே?? ஜோரா போடலாமே...ச்சே சாப்டலாமே :P :P
மாஸ்டர் பொட்டலம் பார்சல்...!!! : )

LK said...

ஹ்ம்ம் நல்லாவே இருக்கு கடலைய வறுக்க வேண்டித்தான். அட சாப்பிடதாங்க

Jaleela said...

ரொம்ப ஜோர் ஆனந்தி. அடிக்கடி சும்மா வருப்போம் இது வேர்கட்லை பகோடாவா?

என் பையனுக்கு ரொம்ப பிடிக்கும்.

maharaj2006 said...

ada kadali masala sory masala kadalai very jor sabita sory korikka thonuthu


maha

maharaj2006 said...

hallo masala kadalai very jore udane korikka thanuthu shop i thedi aliayamal home l ready


maha sivasri valli

S Maharajan said...

ஏங்க கொஞ்சூண்டு இந்த கடலையும்
ஒரு கப் காபி சாப்பிடவும் US வர சொல்லுறிங்களே, டிக்கெட் சார்ஜ் கொடுபிங்களா?

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

ம்ம்............

அருமை

Madhavan said...

கலக்கிப் போறிச்சிட்டீங்க...

யாதவன் said...

மசால் கடலை அருமையான ருசி
நன்றி

ஜில்தண்ணி said...

கடலை பகோடான்னு சொல்லுவாங்களே அதுதானா இது,இல்ல வேறயா
ஃபோட்டோ நீங்களே எடுத்ததா ஆனந்தி,நல்லாவே இருக்கு

Geetha Achal said...

சூப்பராக சுவையாக இருக்கின்றது...அருமை...

bakthawar said...

HAI ANANTHI


ITS A TASTY DISH , I LIKED

Mrs.Menagasathia said...

சூப்பராயிருக்கு ஆனந்தி!!!

ஜெய்லானி said...

தேவையான பொருட்களில் தண்ணீரை சேர்க்காததை கண்டித்து.நான் வெளி நடப்பு செய்கிறேன் .

thenammailakshmanan said...

வீட்டில் செய்தது இல்லைடா ஆனந்தி..:))

vanathy said...

ஆனந்தி, நல்லா இருக்கு. எங்கே ஆளைக் காணவில்லை. திரும்ப பூச்சி கடிச்சிடுச்சோ?

Priya said...

நம்ம ஊர் லாலா கடை ஞாபகம் வருது !!! நாக்கு ஊறுதே ! நம்ப ஊரை ரொம்ப மிஸ் பண்ணுறேன் இப்ப !!!

மங்குனி அமைச்சர் said...

//வேர்கடலை - 2 கப்///

வேறோடயா ? வேர் இல்லாமலா ?

//கடலை மாவு - 1 / 4 கப்///

இந்த பிகர் கூட போடுவாங்களே அந்த கடலையா ?


//கரம் மசாலா - 1 / 2 tsp (பிரியப்பட்டால்)///

யார் மேல பிரியப்பட்டா ?


//கறிவேப்பிலை - சிறிது//

ஆட்டு கரியா? , இல்லா அடுப்பு கரியா ?

Ananthi said...

@சஞ்சய்
//கடலை தானே?? ஜோரா போடலாமே...ச்சே சாப்டலாமே :P :P
மாஸ்டர் பொட்டலம் பார்சல்...!!! : ) //

வாங்க சார் வாங்க.. என்ன மசால் கடலை மட்டும் தானா..?? இல்ல காபி-யும் உண்டா?? :D
ஆர்டர் சரியா குடுக்கறது?? :P :P

Ananthi said...

@LK
// ஹ்ம்ம் நல்லாவே இருக்கு கடலைய வறுக்க வேண்டித்தான். அட சாப்பிடதாங்க //

என்ன உங்க அம்மிணி இன்னும் வரலியோ?? இன்னும் நீங்களே வறுத்துட்டு இருக்கீங்க?
நன்றி..

@ஜலீலா
//ரொம்ப ஜோர் ஆனந்தி. அடிக்கடி சும்மா வருப்போம் இது வேர்கட்லை பகோடாவா?
என் பையனுக்கு ரொம்ப பிடிக்கும்.//

ஹ்ம்ம்.. வாங்க ஜலீலா.. ஆமாங்க.. எனக்கும் ரொம்ப பிடிக்கும்.. நன்றி. :)

@maharaj2006

//ada kadali masala sory masala kadalai very jor sabita sory korikka thonuthu //


வாங்க அண்ணா. நன்றி..


//hallo masala kadalai very jore udane korikka thanuthu shop i thedi aliayamal home l ரெடி//


கரெக்ட்.. வீட்ல பண்ண முடியற ஈஸி ரெசிபி.. நன்றி :)

Ananthi said...

@மகராஜன்
//ஏங்க கொஞ்சூண்டு இந்த கடலையும்
ஒரு கப் காபி சாப்பிடவும் US வர சொல்லுறிங்களே, டிக்கெட் சார்ஜ் கொடுபிங்களா?//

வாங்க மகராஜன்.. குடுத்துட்டா போச்சு.. நன்றி.. :)

@உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com )
//ம்ம்............
அருமை //
வாங்க.. நன்றி..:)

@மாதவன்
//கலக்கிப் போறிச்சிட்டீங்க...//

வாங்க மாதவன்.. நன்றி :)

@யாதவன்
//மசால் கடலை அருமையான ருசி
நன்றி//

வாங்க யாதவன்.. நன்றி.. :)

@ஜில்தண்ணி
//கடலை பகோடான்னு சொல்லுவாங்களே அதுதானா இது,இல்ல வேறயா
ஃபோட்டோ நீங்களே எடுத்ததா ஆனந்தி,நல்லாவே இருக்கு//

வாங்க.. அதே தான்..!! நானே வீட்ல செஞ்சு போட்டோ எடுத்தது தான்.. நன்றி :)

Ananthi said...

@Geetha Achal
// சூப்பராக சுவையாக இருக்கின்றது...அருமை...//

வாங்க கீதா.. நன்றி.. :)

@bakthawar
//HAI ANANTHI
ITS A TASTY DISH , I LIKED //

welcome ... thanks for the comment :)

@Mrs.Menagasathia
// சூப்பராயிருக்கு ஆனந்தி!!!//

வாங்க வாங்க.. ரொம்ப நன்றி :)

Ananthi said...

@ஜெய்லானி
//தேவையான பொருட்களில் தண்ணீரை சேர்க்காததை கண்டித்து.நான் வெளி நடப்பு செய்கிறேன்//

சரி சரி..வாங்க வாங்க.. இதுக்கு கோவிச்சிகிட்டா எப்படி..?? :D :D
அதென்ன.. தண்ணிய மட்டும் நீங்க விடறீங்க இல்ல.!!
நன்றி :)

@thenammailakshmanan

//வீட்டில் செய்தது இல்லைடா ஆனந்தி..:)) //
வாங்க அக்கா.. ஆமா வீட்ல செஞ்சேன்.. :)
சாப்பிட வாங்க.. :D :D
நன்றி..

r.selvakkumar said...

எனக்கு இந்தக் கடலையும் பிடிக்கும், அந்தக் கடலையும் பிடிக்கும். கடலை சாப்பிட்டுக் கொண்டே, கடலை போட்டுக் கொண்டே, கடலை இரசிப்பதும் பிடிக்கும்.

இரசிப்பு எனக்கு.. ரெசிப்பி என் மனைவிக்கு!

Ananthi said...

@வானதி
//ஆனந்தி, நல்லா இருக்கு. எங்கே ஆளைக் காணவில்லை. திரும்ப பூச்சி கடிச்சிடுச்சோ?//

வாங்க வாணி.. இல்லங்க.. வெளியூர் போயிருந்தேன்.. வந்தாச்சு..

ரொம்ப நன்றி.. :)

@ மங்குனி அமைச்சர்
///வேர்கடலை - 2 கப் //
வேறோடயா ? வேர் இல்லாமலா ?///

** ஹா ஹா.. :D :D
அது உங்க இஷ்டம்..

//கடலை மாவு - 1 / 4 கப்///
இந்த பிகர் கூட போடுவாங்களே அந்த கடலையா ?

**ஆஹா.. இந்த வேலை தான் பாக்குறீங்க போல இருக்கே..:D :D

//கரம் மசாலா - 1 / 2 tsp (பிரியப்பட்டால்)///
யார் மேல பிரியப்பட்டா ?

** என்ன்ன்ன்ன்ன்னது ? ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல இருக்கு..:D

//கறிவேப்பிலை - சிறிது//
ஆட்டு கரியா? , இல்லா அடுப்பு கரியா ?

**ஹா ஹா.. முடியல.. எப்புடி இப்படி.. :) நன்றி :)

Ananthi said...

@ r.selvakkumar
//எனக்கு இந்தக் கடலையும் பிடிக்கும், அந்தக் கடலையும் பிடிக்கும். கடலை சாப்பிட்டுக் கொண்டே, கடலை போட்டுக் கொண்டே, கடலை இரசிப்பதும் பிடிக்கும்.
இரசிப்பு எனக்கு.. ரெசிப்பி என் மனைவிக்கு! //

ஹ்ம்ம் ஹ்ம்ம்.. ஓகே ஓகே..
ரொம்ப நல்லது.. நீங்க தொடர்ந்து உங்க வேலைய தொடருங்க அண்ணா.. :)
இரசிப்பு ... ரெசிப்பி .... பின்றீங்க போங்க.. நன்றி.. :)

Thamizh Senthil said...

marina ku vanthingnaa kadalai vitthu orae songla periya aalaa aagidalaam :-)

Mythili Krishnan (மைதிலி கிருஷ்ணன்) said...

நீ செய்து கொடுத்த மசால் கடலையின் ருசி இன்னும் என் வாயில் இருந்து போகவில்லை.. மனதிலிருந்தும்.
அருமையான ருசி...

ப்ரின்ஸ் said...

வாங்க சார் வாங்க.. என்ன மசால் கடலை மட்டும் தானா..?? இல்ல காபி-யும் உண்டா?? :D
ஆர்டர் சரியா குடுக்கறது?? :P :P ///

சரியாப்போச்சு ..மாஸ்டர் இங்க ரெண்டு பொட்டலம் பார்சல் ...

(பி கு)காபியை ஒரு flask இல் நிறைத்து அனுப்பவும் சூடு ஆறிட கூடாதில்ல!!

Ananthi said...

@Thamizh Senthil
// marina ku vanthingnaa kadalai vitthu orae songla periya aalaa aagidalaam :-) //
வாங்க சார்.. என்ன ஒரு நல்ல எண்ணம்.. ரெம்ப நன்றிங்கோ :)

@Mythili Krishnan (மைதிலி கிருஷ்ணன்
//நீ செய்து கொடுத்த மசால் கடலையின் ருசி இன்னும் என் வாயில் இருந்து போகவில்லை.. மனதிலிருந்தும்.
அருமையான ருசி... //
வாங்க மைதிலி... ஹ்ம்ம்... ரொம்ப நன்றி.. :) ;)

@பிரின்ஸ்
//சரியாப்போச்சு ..மாஸ்டர் இங்க ரெண்டு பொட்டலம் பார்சல் ...
(பி கு)காபியை ஒரு flask இல் நிறைத்து அனுப்பவும் சூடு ஆறிட கூடாதில்ல!! //

வாங்க பிரின்ஸ்.. வருது எல்லாம்.. பில்லோட அனுப்பி வைக்கிறேன்..
நன்றி :)

soundar said...

அக்கா உங்களுக்கு சமைக்க தெரியுமா?:)

அப்பாவி தங்கமணி said...

இவ்ளோ தானா மசால் கடலை மேட்டர்... சூப்பர்... அழகா விளக்கமா சொன்னீக...சூப்பர்

ஸ்ரீராம். said...

காரசாரமா நல்லா இருக்குங்க...

Ananthi said...

@சௌந்தர்
//அக்கா உங்களுக்கு சமைக்க தெரியுமா?:) //

அதுல உங்களுக்கென்ன சந்தேகம்??
வருகைக்கு நன்றி :

@ ஸ்ரீராம்
//காரசாரமா நல்லா இருக்குங்க...//

வாங்க ஸ்ரீராம். வருகைக்கு நன்றிங்க.. :)

அண்ணாமலை..!! said...

கணினி சரியாயிருச்சாங்க??
நல்ல மசாலா கதைதான்! :)

Ananthi said...

@அண்ணாமலை
//கணினி சரியாயிருச்சாங்க??
நல்ல மசாலா கதைதான்! :) //

வாங்க.. ஆமா சரியா போச்சு.. சரியாய் போகாம விட்ருவமா..??
வருகைக்கு நன்றி.. :)

Anonymous said...

நானும் ஒரு நாள் இந்த மசாலா வேர்கடலை பண்ண கிளம்பினே கடலை மாவில் தண்ணி ஜாஸ்தியா போச்சு அப்புறமென்ன வேர்கடலை பஜ்ஜி தான் சாப்பிட்டேன் ...இனி நீங்க சொன்ன மாதிரி செஞ்சு பார்க்கறேன் .நன்றி

செந்தில்குமார் said...

கொஞ்சம் லேட்டா வந்துட்டேன் ஆனந்தி நல்லாதான் இருக்கு

அதுக்குன்னு கடலயை போட்டு எல்லாரும் வருத்திட்டிங்கலே

S Maharajan said...
ஏங்க கொஞ்சூண்டு இந்த கடலையும்
ஒரு கப் காபி சாப்பிடவும் US வர சொல்லுறிங்களே, டிக்கெட் சார்ஜ் கொடுபிங்களா?


கடந்தவருடம்
அங்கே(us)ல் கடலை கடையை தேடி அலைந்திருக்கிரேன் மகாராஜன்

r.v.saravanan said...

மசால் கடலை சூப்பர் நன்றி

goma said...

ரொம்ப சிம்பிள் ரெசிபி
செய்து சாப்பிட்டு எழுதுகிறேன்

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)