topbella

Monday, April 5, 2010

காரணம் யாரோடி..??

பதிவுலகில் என் பயணம்  தொடங்கிய கதை...
காரணம் யாரோடி..??
 
  
அடர் கேசமும் உனக்கு அழகு தானோ? உன்
அன்பாலே நீ அனைவரையும் ஆட்டி வைப்பதேனோ?
ஆரம்பத்தில் உனை அதிகம் அறியா விடினும்
அறிந்த பிறகோ உன்னிடம்
அன்பு அதிகம் என்றே சொல்வேனடி..!
அனைத்தையும் எளிதாகவே எடுத்துக்கொள்ளும்
உன் மனோதிடம் கண்டே வியந்தேனடி...!
உன்னைப்போல் ஓரளவேனும் இருக்க முடிந்தால்
உவகையுடன் இவ்வுலகிலே வலம் வருவேனடி...!
பதிவுலகிற்கு  என்னை நீ
பரவசமாய் அழைத்து வந்தாய்..!
நீ அறிந்தவற்றை எல்லாம்
என்னுடன் அன்புடனே பகிர்ந்தும் கொண்டாய்..!
நன்றி உனக்கு நான் சொல்லவும் வேண்டுமோ
இல்லை எனதன்பாலே உனை நான்
கொள்ளை கொள்ளவும் வேண்டுமோ..!

காலங்கள் செல்லச் செல்ல நம்
நட்பின் ஓட்டமும் விரிவாகட்டும்..!
உன்னுடன் கைகோர்த்து பதிவுலகில்
உற்சாகமாய் வலம் வர காத்திருக்கும் அன்பு தோழி....!
                                        ..... ஆனந்தி


என் அன்பிற்குரிய தோழி சித்ராவிற்கு இந்த இடுகை பரிசு..!!                      

55 comments:

பித்தனின் வாக்கு said...

ஆகா சித்ராவிற்கு நல்ல பரிசு. பதிவுலகிக்கு உங்களை அழைத்ததும் இல்லாமல், கவிதை வேற பாட வைத்து விட்டார். நல்லா சொல்லியிருக்கிங்க.

அடர் கேசம் அழகுன்னு சொல்லியிருக்கீங்க, ஓ இதுதான் அழகான இராட்சசியா? ஓகே சாலமன் சார் ஏன் பயந்து போய் இருக்கார்ன்னு புரியுது.

ஹலோ ஆனந்தி கோவப்படாதீங்க. சித்ரா எங்க ஊட்டு அம்மினி. இப்படித்தான் கலாய்ப்போம். இதுபோல நிறைய சொந்தங்களையும் அன்பையும்,கூடவே ஹிம்சையும் நீங்க பதிவுலகில் பார்க்கலாம். நன்றி.

Sanjay said...

அழகு அழகு உங்கள் நட்பு அழகு....

திருஷ்டி படாமல் இருக்க வாழ்த்துக்கள்.... : ) : )

LK said...

அருமையான பரிசு

சைவகொத்துப்பரோட்டா said...

அட!!!!
நட்புக்கு நன்றியை கூட
கவிதையாக செதுக்கி
விட்டீர்களே!!
வாழ்த்துக்கள்.

Chitra said...

அன்புடன் ஆனந்தி, உணர்ச்சி வசப்படாதீங்க. ப்லாக் ஆரம்பிக்க உதவியதற்கும் ஆலோசனைகளுக்கும், அடுத்த முறை ஊருக்கு போகும் போது கடலை மிட்டாய் பாக்கெட், ரெண்டு வாங்கிட்டு வாங்க என்றுதான் சொன்னேன். கவிதையை கொடுத்திட்டீங்களே........ !
அப்போ கடலை மிட்டாய் பாக்கெட் கிடையாதா?

நாடோடி said...

ப‌திவுல‌கில் தொட‌ர்ந்து க‌ல‌க்க‌ என‌து வாழ்த்துக்க‌ள்...

Ananthi said...

@பித்தனின் வாக்கு
//அடர் கேசம் அழகுன்னு சொல்லியிருக்கீங்க, ஓ இதுதான் அழகான இராட்சசியா? ஓகே சாலமன் சார் ஏன் பயந்து போய் இருக்கார்ன்னு புரியுது. //

ஹிஹிஹி.. எனக்கே இப்ப ஒரு டவுட்டு வருது.. சித்ரா அடிக்க வராதீங்க..!!

//ஹலோ ஆனந்தி கோவப்படாதீங்க. சித்ரா எங்க ஊட்டு அம்மினி. இப்படித்தான் கலாய்ப்போம். இதுபோல நிறைய சொந்தங்களையும் அன்பையும்,கூடவே ஹிம்சையும் நீங்க பதிவுலகில் பார்க்கலாம். //

ச..ச.. இதுல கோவப்பட என்ன இருக்கு? இப்படி சொந்தங்கள் பார்கையில் எனக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

Ananthi said...

@சஞ்சய்

//அழகு அழகு உங்கள் நட்பு அழகு....
திருஷ்டி படாமல் இருக்க வாழ்த்துக்கள்....//

ரொம்ப தேங்க்ஸ் சஞ்சய்.. எஸ், இப்படி நண்பர்கள் அமைவதற்கும் குடுத்து வைத்திருக்க வேண்டும்..:)

அந்த விதத்தில் நான் அதிர்ஷ்டசாலி தான்.. வாழ்த்துக்கு நன்றி.. :)

Ananthi said...

@lk

//அருமையான பரிசு //

ரொம்ப நன்றி.. கார்த்திக்.

Ananthi said...

@சைவகொத்துபரோட்டா

//நட்புக்கு நன்றியை கூட
கவிதையாக செதுக்கி
விட்டீர்களே!!
வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி.. உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்..!

Ananthi said...

@சித்ரா
// உணர்ச்சி வசப்படாதீங்க. ப்லாக் ஆரம்பிக்க உதவியதற்கும் ஆலோசனைகளுக்கும், அடுத்த முறை ஊருக்கு போகும் போது கடலை மிட்டாய் பாக்கெட், ரெண்டு வாங்கிட்டு வாங்க என்றுதான் சொன்னேன். கவிதையை கொடுத்திட்டீங்களே........ ! அப்போ கடலை மிட்டாய் பாக்கெட் கிடையாதா? //

கடலை மிட்டாயும், ஜாங்கிரியும்....கண்டைனர்ல வருதுன்னு சொன்னனே..!! என் ப்ளாக்ல உபயம்: சித்ரா-னு போட இருந்தேன்..! ;) ;)

Ananthi said...

@நாடோடி

//ப‌திவுல‌கில் தொட‌ர்ந்து க‌ல‌க்க‌ என‌து வாழ்த்துக்க‌ள்...//

உங்க வருகைக்கும், வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி.

Vishy said...

அழகான கவிதை..பதிவுலகத்திற்கு உங்களை வருக வருக என வரவேற்கிறோம்..

எல்லாம் சரி - சித்ரா ஓட்றதிற்கு ஒரு நல்ல ஆள் தேவைப்படுது.. அதனால இந்த பதிவை இத்தோட விட்டுட்டு இன்னும் கொஞ்சம் “spicy" பதிவா பகிர கோறுகிறோம். உங்ககிட்ட இருந்து “நிறய” எதிர்பார்க்கிறோம் :)

மைதிலி கிருஷ்ணன் said...

அய்யோ... அய்யோ...அவ்வ் ...... நான் எழுத வேண்டிய கவிதையை நீ முந்திகிட்டு எழுதிட்டியே ஆனந்தி.... இதையேத்தான் நானும் மனசுல நினைச்சிருந்தேன். நீ வெளியில சொல்லிட்ட.. சரி போன போகட்டும் இந்த கவிதையை என் சார்பாவும் என் அருமை தோழி, பதிவுலக பிரபலம் சித்ராவுக்கு சமர்பிக்கிறேன்..... ஆனந்தி உன்ன அப்பறமா கவனிச்சுக்கிறேன்...

சுசி said...

பயணத்தை நல்ல படி தொடர வாழ்த்துக்கள் :))

Ananthi said...

@Vishy

//அழகான கவிதை..பதிவுலகத்திற்கு உங்களை வருக வருக என வரவேற்கிறோம்.. //

ரொம்ப நன்றி.. வருகைக்கும், வாழ்த்திற்கும்..!! :) :)

//எல்லாம் சரி - சித்ரா ஓட்றதிற்கு ஒரு நல்ல ஆள் தேவைப்படுது.. அதனால இந்த பதிவை இத்தோட விட்டுட்டு இன்னும் கொஞ்சம் “spicy" பதிவா பகிர கோறுகிறோம். உங்ககிட்ட இருந்து “நிறய” எதிர்பார்க்கிறோம் :) //

கண்டிப்பா.. நா ரெடி நீங்க ரெடியா?? :D :D

தமிழ் உதயம் said...

சித்ராவும், ஆனந்தியும் பதிவுலகை கலக்கட்டும்.

r.selvakkumar said...

மைதிலி எழுத நினைத்ததை ஆனந்தி எழுதிவிட்டதால், ஆனந்தி கொடுக்க நினைத்த கமர்கட் மற்றும் ஜாங்கிரி அடங்கிய கண்டெயினரை மைதிலி தரவேண்டும் (எனக்கு - நான் இரண்டு கமர்கட் மற்றும் ஜாங்கிரியை சித்ராவுக்கு தந்துவிடுகிறேன்).

Ananthi said...

@தமிழ் உதயம்

//சித்ராவும், ஆனந்தியும் பதிவுலகை கலக்கட்டும்.//

ரொம்ப நன்றி.. உங்க வருகைக்கும், வாழ்த்துக்கும்..

Ananthi said...

@செல்வா அண்ணா

//மைதிலி எழுத நினைத்ததை ஆனந்தி எழுதிவிட்டதால், ஆனந்தி கொடுக்க நினைத்த கமர்கட் மற்றும் ஜாங்கிரி அடங்கிய கண்டெயினரை மைதிலி தரவேண்டும் (எனக்கு - நான் இரண்டு கமர்கட் மற்றும் ஜாங்கிரியை சித்ராவுக்கு தந்துவிடுகிறேன்) //

சப்பாஹ்... அண்ணா.... கடைசியில யாரு யாருக்கு கண்டைனர் அனுப்பனும்.. அத சொல்லிவிட்டு போங்க..!!
ரொம்ப நன்றி..

ஸ்ரீராம். said...

நட்பே கவிதை..கவிதைக்கே கவிதையா? ஆஹா...நன்று..நன்று..

சே.குமார் said...

ஆகா சித்ராவிற்கு நல்ல பரிசு. பதிவுலகிக்கு உங்களை அழைத்ததும் இல்லாமல், கவிதை வேற பாட வைத்து விட்டார். நல்லா சொல்லியிருக்கிங்க.

அருமையான பரிசு

பித்தனின் வாக்கு said...

// ஹிஹிஹி.. எனக்கே இப்ப ஒரு டவுட்டு வருது.. சித்ரா அடிக்க வராதீங்க..!! //

அது!! அது!! இப்பப் புரியுதுங்களா? சாலமன் சார் ஜய்யோ பாவம்.


சித்ரா, என் தங்கையா இருந்தும் வெறும் கடலை முட்டாய், ஜாங்கிரிதான. நெல்லை மைக்கிரோன்ன்னு சொல்ற அந்த வெள்ளை டொப்பி போட்ட மாதிரி ஒரு அயிட்டம் இருக்குமே ((சோயா மாவு + முட்டை இதான் அங்கு காஸ்ட்லி,தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு வருவதாக கேள்வி). அதையும் சேர்த்து கேட்டு வாங்கி எனக்கும் அனுப்பு. இப்படி யாராவது மாட்டுன்னா மொட்டை அடிக்க வேண்டியதுதான்.

Ananthi said...

@ஸ்ரீராம்

//நட்பே கவிதை..கவிதைக்கே கவிதையா? ஆஹா...நன்று..நன்று....//

வாழ்த்துக்கும்..வருகைக்கும் நன்றி..

Ananthi said...

@பித்தனின் வாக்கு
//தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு வருவதாக கேள்வி). அதையும் சேர்த்து கேட்டு வாங்கி எனக்கும் அனுப்பு. இப்படி யாராவது மாட்டுன்னா மொட்டை அடிக்க வேண்டியதுதான்.//

ஆமா.. அது பேரு மெக்ரூன்ஸ்.. ரொம்ப பேமஸ் ஸ்நாக் தான்.. அத இங்கயே பண்றேன்..

மீண்டும் உங்கள் வருகைக்கு நன்றி..

Ananthi said...

@சே.குமார்

//ஆகா சித்ராவிற்கு நல்ல பரிசு. பதிவுலகிக்கு உங்களை அழைத்ததும் இல்லாமல், கவிதை வேற பாட வைத்து விட்டார். நல்லா சொல்லியிருக்கிங்க.//

பதிவு உலகிற்கு வருமுன்பே கவிதை எழுதுவது என் வழக்கம்.. :D

என் தோழி.. என்னை இங்கு அழைத்ததற்கு அதுவும் ஒரு காரணம்..!!

உங்கள் வாழ்த்துக்கு நன்றி..

மங்குனி அமைச்சர் said...

//என் அன்பிற்குரிய தோழி சித்ராவிற்கு இந்த இடுகை பரிசு..!!///


வாழ்த்துக்கள் சித்ரா மேடம் , ஒரு பார்டி வைங்க

அஹமது இர்ஷாத் said...

உங்கள் நட்பு அழகு....


வாழ்த்துக்கள்....

தாராபுரத்தான் said...

உங்கள் நட்பு வாழ்க.

அண்ணாமலையான் said...

very happy

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

Really nice வாழ்த்துக்கள்.

Ananthi said...

@மங்குனி அமைச்சர்

//வாழ்த்துக்கள் சித்ரா மேடம் , ஒரு பார்டி வைங்க//

வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி..

Ananthi said...

@ அஹமது இர்ஷாத்

//உங்கள் நட்பு அழகு.... வாழ்த்துக்கள்....//

உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி..

Ananthi said...

@தாராபுரத்தான்
//உங்கள் நட்பு வாழ்க.//

உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி..

Ananthi said...

@ அண்ணாமலையான்
// very happy //

உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி..

Ananthi said...

@♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫

// Really nice வாழ்த்துக்கள். //

உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி..

Priya said...

சூப்பர் கவிதை ஆனந்தி ! நல்லதொரு பரிசு உங்கள் அன்பு தோழிக்கு !

Ananthi said...

@ப்ரியா
//சூப்பர் கவிதை ஆனந்தி ! நல்லதொரு பரிசு உங்கள் அன்பு தோழிக்கு !//

தேங்க்ஸ் ப்ரியா.. :)

Chitra said...

ஆனந்தி, எல்லா புகழும் இறைவனுக்கே! :-)

LK said...

//ஆனந்தி, எல்லா புகழும் இறைவனுக்கே! :-)/

உங்களை போன்ற தோழி கிடைப்பது அரிது

Ananthi said...

@மைதிலி
//அய்யோ... அய்யோ...அவ்வ் ......நான் எழுத வேண்டிய கவிதையை நீ முந்திகிட்டு எழுதிட்டியே ஆனந்தி.... இதையேத்தான் நானும் மனசுல நினைச்சிருந்தேன். நீ வெளியில சொல்லிட்ட.. சரி போன போகட்டும்//

ஹிஹிஹி.... அன்பு தோழி நமக்குள்ள என்னம்மா?
நா எழுதினா என்ன, நீங்க எழுதினா என்ன?

//இந்த கவிதையை என் சார்பாவும் என் அருமை தோழி, பதிவுலக பிரபலம் சித்ராவுக்கு சமர்பிக்கிறேன்..//

சமர்ப்பிச்சாச்சு... சமர்ப்பிச்சாச்சு...

//ஆனந்தி உன்ன அப்பறமா கவனிச்சுக்கிறேன்...//

மம்மிமிமிமிமிமிமி.......நா எஸ்கேப்புபுபு..............!!

Ananthi said...

@சித்ரா
//ஆனந்தி, எல்லா புகழும் இறைவனுக்கே! :-) //

ஆமா.. ரொம்ப ரொம்ப கரெக்ட்.. :-)

Ananthi said...

@LK

//உங்களை போன்ற தோழி கிடைப்பது அரிது//

You are absolutely right..thanks.

Ananthi said...

//ஆனந்தி சித்துவுக்கே நாமெல்லாம் கவிதை எழுதிக்கிட்டு இருக்கோம் பாரு கட்டுரை எழுதியே பதிவுலக பேரரசியாயிட்ட சித்துவுக்கு அம்மு மயிலு ஆனந்தி மற்றூம் என் சார்பா வாழ்த்துக்கள்//

ஆமா.. அக்கா.. எனக்கு ரொம்ப நாளாவே இந்த மாதிரி எழுத ஆசை!! இப்ப தான் நடந்திருக்கு..!
ரொம்ப தேங்க்ஸ் அக்கா..!!

ஜெய்லானி said...

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்று செல்லவும் .நன்றி
http://kjailani.blogspot.com/2010/04/blog-post_5104.html
###########

சசிகுமார் said...

சித்ராவை பற்றி கூறிய அனைத்து வரிகளுமே அருமை ஆனந்தி, உங்கள் உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

அன்புடன் மலிக்கா said...

நல்லதோழி கிடைப்பது அரிது.

தோழமைக்குள் நற்தூண்டுதல் இருக்கவேண்டும் .

சித்ராவுக்கும் உங்கலூக்கும் அன்பான வாழ்த்துக்கள்.

நீரோடையில் நாட்டுப்புறப்பாடு எழுதியுள்ளேன் பாருங்க..

Mohan said...

கவிதை நல்லாருக்குங்க! உங்கள் நட்பு பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்!

மின்னல் said...

தொடருந்து எழுத வாழ்த்துகள்

Ananthi said...

@ஜெய்லானி
//உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்று செல்லவும் .நன்றி //

எனக்கு கிடைத்த முதல் விருது... நன்றி நன்றி நன்றி...!!

Ananthi said...

@ சசிகுமார்
//சித்ராவை பற்றி கூறிய அனைத்து வரிகளுமே அருமை ஆனந்தி, உங்கள் உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//

மனமார்ந்த நன்றி..சசிகுமார். உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்..

Ananthi said...

@அன்புடன் மலிக்கா

//நல்லதோழி கிடைப்பது அரிது.
தோழமைக்குள் நற்தூண்டுதல் இருக்கவேண்டும் .
சித்ராவுக்கும் உங்கலூக்கும் அன்பான வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி தோழி.. உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்..

//நீரோடையில் நாட்டுப்புறப்பாடு எழுதியுள்ளேன் பாருங்க..//

கண்டிப்பா பாக்கறேன்.. நன்றி..

Ananthi said...

@ மின்னல்
//தொடருந்து எழுத வாழ்த்துகள்//

ரொம்ப நன்றிங்க.. மீண்டும் வருக..

கவிதன் said...

வாழ்த்துக்கள்! நட்பை பெருமைப்படுத்தும் விதமாக உங்கள் கவிதை அருமை!!!
சித்ரா அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!

Anonymous said...

SO CUTE PHOTOS.

AS WELL

KAVITHAI ALSO...

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)