topbella

Wednesday, July 14, 2010

எலியின் எகத்தாளம்...!!

ரொம்ப நாளாவே இந்த எலி மேட்டர் சொல்ல நினச்சு, மறந்து மறந்து போகுது.. இன்னிக்கு விடறதா இல்ல.. எப்படியும் சொல்லிற வேண்டியது தான்..!


ஓகே.. எங்க இருந்து ஆரம்பிக்கறது.. சரி, என் வண்டியில் இருந்து ஆரம்பிக்கலாம்.. எங்கும் வெளியூர்  போனால், வழியில் எதாவது சாப்பிட ஸ்நாக்ஸ் வாங்கி வண்டியில் வைத்து சாப்பிடுவது வழக்கம்... அப்படி ஏதும், நொறுக்கு தீனி சாப்பிட்டு, அங்கங்கே எதுவும் சிதறி இருக்கும் போல இருக்கு..


அப்போ அப்போ, வண்டிய கிளீன் பண்றதும் உண்டு தான்.. அதிலும் சில பல, மிஸ் ஆகி இருக்கும் போல..  இத ஏன் திரும்ப திரும்ப சொல்றேன்னு இப்போ தெரியும் உங்களுக்கு..சில மாதங்களுக்கு ஒரு தரம், வண்டிக்கு ஆயில் சேன்ஜ் பண்ணனும்... அப்படியே வண்டி மெயிண்டனன்ஸ் பண்ணனும்..   அதுக்காக வண்டிய எடுத்துட்டு போய் விட்டாச்சு.. அதுல பாருங்க.. சுமாரா ஆயில் சேன்ஜ்க்கு 20 முதல் 30 டாலர் வரை செலவு ஆகும்.... அப்புறம் மெயிண்டனன்ஸ்-க்கு ஒரு 100 முதல் 150 டாலர் வரை ஆகும்...


டீலர் போன் பண்ணி, 500 டாலர் ஆகும்னு சொன்னாங்க.. எங்களுக்கு பேரதிர்ச்சி... :O

என்னது 500 டாலர்-ஆ??? நம்ம என்ன பென்ஸ் காரை-யா மெயிண்டனன்ஸ்க்கு விட்டோம்-னு எங்களுக்கே டவுட் வந்திரிசின்னா பாருங்களேன்..!!


ஏன், எதுக்கு..?? வண்டியில ஏதும் பிரச்சனையா-னு கேட்டா.. வண்டியோட, முகப்பு  பானர்-ஐ திறந்து காமிச்சாங்க... அங்க தான் மேட்டரே....!! உள்ளே இருந்த வயர் எல்லாம் கடிச்சு, லாலி பாப் குச்சி, சாக்லேட் பேப்பர், இன்னும் இதர பல சாமான் செட்டோட... எலி குடும்பம் நடத்திட்டு இருந்திருக்கு.


"ஏன்டா, நீ வீடு கட்டி விளையாட என் வண்டி தானா கிடைச்சதுன்னு..??" எலி கிட்ட கேக்கவா முடியும்.. அவ்வ்வ்வவ்வ்வ்வவ்...


வேற என்ன பண்றது, கேட்ட பணத்த குடுத்துட்டு வண்டி சரி செஞ்சு வாங்கிட்டு வந்தாச்சு.. அதுல இருந்து, யாரவது எதாவது சாப்பாடு பொருள் வண்டியில கீழ போட்டா செம டென்ஷன் ஆகுது..  ஹ்ம்ம்.. என் பிரச்சினை எனக்கு....!!

இந்த பிரச்சனைக்கு அப்புறம், வண்டி ஓட்டும் போதும், உள்ளூர பயம் தான்.. எலி உள்ள இருக்குமோன்னு..!! அதனால, எப்பவும் அலர்ட்டா தான் வண்டி  ஓட்றேனாக்கும்...! :D :Dசரி அப்போ, நா கிளம்பட்டா...?? இன்னொரு, எலி மேட்டர் இருக்கு, பிறகு சொல்றேன்..! பதிவை படித்தவர்களுக்கு நன்றிகள் பல..!

59 comments:

Sanjay said...

//உள்ளே இருந்த வயர் எல்லாம் கடிச்சு, லாலி பாப் குச்சி, சாக்லேட் பேப்பர், இன்னும் இதர பல சாமான் செட்டோட... எலி குடும்பம் நடத்திட்டு இருந்திருக்கு....//

:D :D :D :D

பேசாம Bonnet குள்ள ஒரு பூனைய விட்ட்ருங்க, பிரச்சினை தீர்ந்திரும்... ;-) :D

//சரி அப்போ, நா கிளம்பட்டா...??//
எங்க கார் டிக்கிகுள்ள என்ன இருக்குனு பார்கவா??? :D :D :D

தமிழ் உதயம் said...

இப்ப அலர்ட் ஆனந்தியாயிட்டீங்க. சரியா.

Mrs.Menagasathia said...

எலி குடும்பம் நடத்திருக்கா..அடக்கடவுளே!!!!!! ம்ம்ம் இப்போ உஷாராயிட்டிங்களா....

ஜெய்லானி said...

//சரி அப்போ, நா கிளம்பட்டா...?? இன்னொரு, எலி மேட்டர் இருக்கு, பிறகு சொல்றேன்.///


அப்ப தலைப்பு எலித்தொடர்-ன்னு சொல்லுங்க

ஜெய்லானி said...

//அப்போ அப்போ, வண்டிய கிளீன் பண்றதும் உண்டு தான்//

அப்ப வண்டிய கிளின் பண்ணி ஒரு 6 மாசம் இருக்குமா..அத முதல்ல சொல்லாம எலி குடும்பமாம்..ஹா..ஹா..

ஜெய்லானி said...

//500 டாலர்-ஆ??? நம்ம என்ன பென்ஸ் காரை-யா மெயிண்டனன்ஸ்க்கு விட்டோம்-னு//

ரொம்பவும் சீப்பா இருக்கே.ஹி..ஹி..

மதுரை சரவணன் said...

எலி மேட்டர் நிஜம் எனக்கும் இந்த அனுபவம் உண்டு. பகிர்வுக்கு நன்றி.

சே.குமார் said...

எலி குடும்பம் நடத்திருக்கா.... அடக்கடவுளே!!!
ம்ம்ம்... இப்போ அலர்ட் ஆனந்தியாயிட்டீங்களா..!

poorna said...

இப்படி ஒரு எலி கதையை நான் கேட்டதே இல்லை.

இனி நானும் உசாரா இருப்பேன்.

sema eli kathai :)

LOSHAN said...

ஹா ஹா. எலி மேட்டர் சூப்பர்..
எங்கள் வீட்டில் நான் நடத்திய எலி வேட்டை பற்றி முன்பொரு தடவை இப்படித் தான் கொட்டித் தீர்த்தேன்.

உங்கள் அடுத்த எலிக் கதை எதிர்பார்க்கிறேன்

vanathy said...

எப்படிப்பா?? அந்த எஞ்சின் சூட்டில் உயிர் வாழ்ந்தார்கள்??? இரும்பால் செய்யப்பட்ட எலிகளா?? நல்லா தேடிப்பாருங்க, ஆனந்தி. இன்னும் எங்கையாச்சும் நிற்பார்கள்.

நாடோடி said...

எலி க‌தை ந‌ல்லா இருக்கு... க‌டைசியா பூனை ப‌ட‌ம் போட்டிருக்கீங்க‌.. அடுத்து பூனை க‌தையா?..

rk guru said...

எலி போய் பூனை எப்போது வரும்......

Sukumar Swaminathan said...

Nice...!!

சௌந்தர் said...

ப.மு.க.சார்பில் எலிகள் அழிக்கப்படும் என்று தெரிவித்து கொள்கிறோம்.....

r.v.saravanan said...

எலி குடும்பம் நடத்திட்டு இருந்திருக்கு.


"ஏன்டா, நீ வீடு கட்டி விளையாட என் வண்டி தானா கிடைச்சதுன்னு..??" எலி கிட்ட கேக்கவா முடியும்..

எலி கிட்டே வாடகை கேட்ருக்க வேண்டியது தானே
ஹா ஹா
பகிர்வுக்கு நன்றி.

Gayathri said...

அட கடவுளே அந்த எலி சோ கியுட் ல ...ம்ம் அது காஸ்ட்லீ எலின்னு சொல்லுங்க..அது வீட்ட நிங்க சுத்தம் செய்ய 500 டலரா ம்ம் அருமை

Anonymous said...

ஆனந்தி உங்க எலி கதை நல்லா இருக்கு இங்கே என் வீட்டிலும் இதே கதை தான் ..ஒரு நாள் கார் வெளியில் பார்க் பண்ணிட்டோம் காலையில் பார்த்தா battery மேலே புழுக்கே போட்டு வெச்சிருக்கா ..இனி உள்ளே எப்பிடி இருக்கோ ???

மங்குனி அமைச்சர் said...

பேசாம பேனட்டுல ஒரு எலி வீடு கட்டி தினமும் நீங்களே சாப்பாடு போட்டிகனா இந்த டென்சன் இருக்காது

மங்குனி அமைச்சர் said...

பேசாம நீங்களே கார் பேனட்ல எலிக்கு ஒரு வீடுகட்டி குடுத்து , தினமும் சாப்பாடு போட்டிகன்னா ஒரு டென்சனும் இருக்காது

ரிஷபன்Meena said...

எதாவாது சாப்பிடற பொருள் இருந்தா தான்னு இல்லை, சும்மா க்ளீனா இருந்தாலும் எலி கடிக்கும்.

எலிக்கு பல்லு எப்பவும் ”துரு துரு” ன்னு தான் இருக்கும், எதையாவது கடிச்சுகிட்டே இருக்கனும். ஆமா அதுவும் பல்லை ஷார்ப்பா வச்சுக்க வேணாமா ?

எலிகடிக்கனும் நேரமிருந்தா நாம் என்ன செய்ய முடியும்.

சசிகுமார் said...

ஹா ஹா ஹா

Anonymous said...

//எப்பவும் அலர்ட்டா தான் வண்டி ஓட்றேனாக்கும்...! :D :D//


சாலை மீதா எலியின் மீதா........

செந்தில்குமார் said...

எலிய குடும்பம் நடத்தவிட்டு விட்டு வாடகை வாங்காம குடுத்துட்டு( டாலரை )வந்திருக்கிரிங்களே ஆனந்தி

ஸ்ரீராம். said...

எலிப் பண்ணை ஆரம்பிக்கற ஐடியா வா? சுந்தரா ட்ராவல்ஸ் என்று பெர்யர் மாற்றி விடவும்.

Nandhini said...

/////////////என்னது 500 டாலர்-ஆ??? நம்ம என்ன பென்ஸ் காரை-யா மெயிண்டனன்ஸ்க்கு விட்டோம்-னு எங்களுக்கே டவுட் வந்திரிசின்னா பாருங்களேன்..!!////////////////

ஹி..ஹி..ஹி..ஹி..ஹா ஹா ஹா

Ananthi said...

@சஞ்சய்
//உள்ளே இருந்த வயர் எல்லாம் கடிச்சு, லாலி பாப் குச்சி, சாக்லேட் பேப்பர், இன்னும் இதர பல சாமான் செட்டோட... எலி குடும்பம் நடத்திட்டு இருந்திருக்கு....//

:D :D :D :D ///

........என் கஷ்டத்த சொன்னா சிரிப்பா வருதாக்கும்..
இருக்கட்டும் இருக்கட்டும்...

/// பேசாம Bonnet குள்ள ஒரு பூனைய விட்ட்ருங்க, பிரச்சினை தீர்ந்திரும்... ;-) :D ///

.......ஹய்... இது நல்ல ஐடியா-வா இருக்கே..! :D :D

////சரி அப்போ, நா கிளம்பட்டா...??//
எங்க கார் டிக்கிகுள்ள என்ன இருக்குனு பார்கவா??? :D :D :D ////

.....ஹா ஹா ஹா.. சஞ்சய்ய்ய்ய்... :D :D

Ananthi said...

@Mrs.Menagasathia
/// எலி குடும்பம் நடத்திருக்கா..அடக்கடவுளே!!!!!! ம்ம்ம் இப்போ உஷாராயிட்டிங்களா....///

ஆமாங்க.. எல்லாம் எடுத்து வண்டிக்குள்ள சேர்த்து வச்சிருந்தது..
ஆமா.. இப்போ உஷார் ஆயாச்சு..
நன்றிங்க.. :-)))

Ananthi said...

@ஜெய்லானி
///அப்ப தலைப்பு எலித்தொடர்-ன்னு சொல்லுங்க///

இல்லையே இல்லையே...:D :D
///அப்ப வண்டிய கிளின் பண்ணி ஒரு 6 மாசம் இருக்குமா..அத முதல்ல சொல்லாம எலி குடும்பமாம்..ஹா..ஹா..//

என்னா ஒரு வில்லத்தனம்.. உங்கள மாதிரியே என்னையும் நினைக்க கூடாது... :D :D

/////500 டாலர்-ஆ??? நம்ம என்ன பென்ஸ் காரை-யா மெயிண்டனன்ஸ்க்கு விட்டோம்-னு//
ரொம்பவும் சீப்பா இருக்கே.ஹி..ஹி../////

ஹா ஹா.. 500 டாலர் உங்க ஊர்ல சீப்பா... :D :D
அது சரிங்க.. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஜெய். :-)))

Ananthi said...

@ஜெய்லானி
///அப்ப தலைப்பு எலித்தொடர்-ன்னு சொல்லுங்க///

இல்லையே இல்லையே...:D :D
///அப்ப வண்டிய கிளின் பண்ணி ஒரு 6 மாசம் இருக்குமா..அத முதல்ல சொல்லாம எலி குடும்பமாம்..ஹா..ஹா..//

என்னா ஒரு வில்லத்தனம்.. உங்கள மாதிரியே என்னையும் நினைக்க கூடாது... :D :D

/////500 டாலர்-ஆ??? நம்ம என்ன பென்ஸ் காரை-யா மெயிண்டனன்ஸ்க்கு விட்டோம்-னு//
ரொம்பவும் சீப்பா இருக்கே.ஹி..ஹி../////

ஹா ஹா.. 500 டாலர் உங்க ஊர்ல சீப்பா... :D :D
அது சரிங்க.. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஜெய். :-)))

Ananthi said...

@மதுரை சரவணன்
///எலி மேட்டர் நிஜம் எனக்கும் இந்த அனுபவம் உண்டு. பகிர்வுக்கு நன்றி./////

ஹா ஹா.. எலி ராஜ்யம் இல்லாத இடமே இல்ல போலிருக்கு..
வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க :-))

Ananthi said...

@சே.குமார்
/// எலி குடும்பம் நடத்திருக்கா.... அடக்கடவுளே!!!
ம்ம்ம்... இப்போ அலர்ட் ஆனந்தியாயிட்டீங்களா..! ///

எஸ். எஸ்.. இப்போ சரியாய் அலெர்ட் ஆய்ட்டோம்ல.. :D :D
வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.. :-))

Ananthi said...

@poorna
///இப்படி ஒரு எலி கதையை நான் கேட்டதே இல்லை.
இனி நானும் உசாரா இருப்பேன்.
sema eli kathai :) ///

ஹ்ம்ம். நடந்தது கலா.. ஜாக்ரதையா இருக்க வேண்டியது தான்..

வருகைக்கு நன்றி :-)))

Ananthi said...

@LOSHAN
////ஹா ஹா. எலி மேட்டர் சூப்பர்..
எங்கள் வீட்டில் நான் நடத்திய எலி வேட்டை பற்றி முன்பொரு தடவை இப்படித் தான் கொட்டித் தீர்த்தேன்.

உங்கள் அடுத்த எலிக் கதை எதிர்பார்க்கிறேன்///

ஹா ஹா.. ஹ்ம்ம்.. எல்லார் வீட்டிலும் எலி வேலைய காட்டியிருக்கு போல இருக்கு..

உங்க வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிங்க :-))))

Ananthi said...

@வானதி
/// எப்படிப்பா?? அந்த எஞ்சின் சூட்டில் உயிர் வாழ்ந்தார்கள்??? இரும்பால் செய்யப்பட்ட எலிகளா?? நல்லா தேடிப்பாருங்க, ஆனந்தி. இன்னும் எங்கையாச்சும் நிற்பார்கள்.///

இல்லைங்க வாணி... வண்டி நிறுத்தியிருக்கும் போது தான் இந்த வேலை எல்லாம் நடந்திருக்கு..
ஹா ஹா.. கண்டிப்பா செக் பண்றேன்..
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.. :-))

Ananthi said...

@@நாடோடி
///எலி க‌தை ந‌ல்லா இருக்கு... க‌டைசியா பூனை ப‌ட‌ம் போட்டிருக்கீங்க‌.. அடுத்து பூனை க‌தையா?..///

ஹா ஹா.. நன்றிங்க..
இல்ல அந்த பூனை தான் எளிய பார்த்த சாட்சி.. :D :D :D

Ananthi said...

@@rk குரு
/// எலி போய் பூனை எப்போது வரும்......///

ஹா ஹா... வருகைக்கு நன்றிங்க.. :-)

@@Sukumar Swaminathan
///Nice...!! ///

வருகைக்கு நன்றிங்க.. :-)

Ananthi said...

@@சௌந்தர்
/// ப.மு.க.சார்பில் எலிகள் அழிக்கப்படும் என்று தெரிவித்து கொள்கிறோம்.....////

ஹா ஹா.. ரொம்ப நன்றிங்க.. :-)))

@@ r.v.சரவணன்
///எலி குடும்பம் நடத்திட்டு இருந்திருக்கு.

"ஏன்டா, நீ வீடு கட்டி விளையாட என் வண்டி தானா கிடைச்சதுன்னு..??" எலி கிட்ட கேக்கவா முடியும்..

எலி கிட்டே வாடகை கேட்ருக்க வேண்டியது தானே
ஹா ஹா
பகிர்வுக்கு நன்றி.////

ஹா ஹா.. ஆமா இல்ல.. அதுத்த முறை.. வாங்கிரலாம்.. :-))
நன்றிங்க..

Ananthi said...

@@காயத்ரி
///அட கடவுளே அந்த எலி சோ கியுட் ல ...ம்ம் அது காஸ்ட்லீ எலின்னு சொல்லுங்க..அது வீட்ட நிங்க சுத்தம் செய்ய 500 டலரா ம்ம் அருமை ///

ஹா ஹா.. எஸ்..காஸ்ட்லி எலி தான்..
வருகைக்கு நன்றி :-))

@@சந்த்யா
///ஆனந்தி உங்க எலி கதை நல்லா இருக்கு இங்கே என் வீட்டிலும் இதே கதை தான் ..ஒரு நாள் கார் வெளியில் பார்க் பண்ணிட்டோம் காலையில் பார்த்தா battery மேலே புழுக்கே போட்டு வெச்சிருக்கா ..இனி உள்ளே எப்பிடி இருக்கோ ???/ ///

ஹா ஹா.. அச்சச்சோ.. ஹ்ம்ம் நல்ல செக் பண்ணுங்கப்பா.. :-)
வருகைக்கு நன்றிங்க..

Ananthi said...

@@மங்குனி அமைச்சர்
/// பேசாம நீங்களே கார் பேனட்ல எலிக்கு ஒரு வீடுகட்டி குடுத்து , தினமும் சாப்பாடு போட்டிகன்னா ஒரு டென்சனும் இருக்காது///

ஹா ஹா.. எலி விரட்ட ஐடியா சொல்லாம.. அதுங்க குடும்பா கும்மி அடிக்க ஐடியா வா..?
வருகைக்கு நன்றிங்க.. :-)))

Ananthi said...

@@ரிஷபன்Meena
////எதாவாது சாப்பிடற பொருள் இருந்தா தான்னு இல்லை, சும்மா க்ளீனா இருந்தாலும் எலி கடிக்கும். ///

ஓஹோ... இது வேறயா?? ஹ்ம்ம்.. :-)))

////எலிக்கு பல்லு எப்பவும் ”துரு துரு” ன்னு தான் இருக்கும், எதையாவது கடிச்சுகிட்டே இருக்கனும். ஆமா அதுவும் பல்லை ஷார்ப்பா வச்சுக்க வேணாமா ?///

ஹா ஹா.. :D :D
அதுங்க பல்ல ஷார்ப்பா வைக்க நம்ம property தானா கிடைச்சது..! :-)))

////எலிகடிக்கனும் நேரமிருந்தா நாம் என்ன செய்ய முடியும்.///

இது சொன்னிங்களே ரொம்ப ரொம்ப கரெக்ட்..
வருகைக்கு நன்றிங்க :-)))

Ananthi said...

@@சசிகுமார்
/// ஹா ஹா ஹா///

வருகைக்கு நன்றி சசி.. :-))

@@கோவை குமரன் said...

//எப்பவும் அலர்ட்டா தான் வண்டி ஓட்றேனாக்கும்...! :D :D//
சாலை மீதா எலியின் மீதா........///

ஹா ஹா ஹா.. ரெண்டின் மீதும் தான்..
வருகைக்கு நன்றிங்க.. :-)))

Ananthi said...

@@செந்தில்குமார்
///எலிய குடும்பம் நடத்தவிட்டு விட்டு வாடகை வாங்காம குடுத்துட்டு( டாலரை )வந்திருக்கிரிங்களே ஆனந்தி///

ஹா ஹா ஹா... சரியா சொன்னிங்க..
என்னங்க பண்றது.. எலி நம்மள விட உஷாரா இருக்குதுங்க.. :D :D
வருகைக்கு நன்றிங்க.. :-)))

@@ஸ்ரீராம்
///எலிப் பண்ணை ஆரம்பிக்கற ஐடியா வா? சுந்தரா ட்ராவல்ஸ் என்று பெர்யர் மாற்றி விடவும்.////

ஹா ஹா.. :D :D
வருகைக்கு நன்றி ஸ்ரீராம்.. :-)))

Ananthi said...

@@நந்தினி
/////////////என்னது 500 டாலர்-ஆ??? நம்ம என்ன பென்ஸ் காரை-யா மெயிண்டனன்ஸ்க்கு விட்டோம்-னு எங்களுக்கே டவுட் வந்திரிசின்னா பாருங்களேன்..!!////////////////

ஹி..ஹி..ஹி..ஹி..ஹா ஹா ஹா ////

ஹா ஹா... வருகைக்கு நன்றி நந்தினி :-))

சிபி.செந்தில்குமார் said...

எலிக்கு எகத்தாளம்-ஆனந்தியின் தப்புத்தாளம் (அடடே கவிதை கவிதை) நல்ல காமெடி

Anonymous said...

எலி

Anonymous said...

டைட்டில் ரொம்ப திகிலா இருக்கு....
அச்சச்சோ, எலிய அப்படியெல்லாம் பேசக்கூடாது...எலி கடவுள்...
தினமும் எலிக்கு காலை டிபன், மதியம் லஞ்ச் கொடுங்க ஆனந்தி.

டெய்லி எலிக்கு கொழுக்கட்டை கொடுங்க உங்கள ஒன்னும் பண்ணாது...

மகி said...

ஹஹ்..ஹா!!
நிஜமாங்களா ஆனந்தி? என் கணவர்கிட்ட கண்டிப்பா இதை சொல்லி எச்சரித்து வைக்கணும்!!! :D:D

Mythili Krishnan (மைதிலி கிருஷ்ணன்) said...

சரி எலி வண்டியில தான் இருக்குண்ணே வச்சுக்குவோமே.... என்ன செய்வீங்களாம்... வே..வே..வே..

Ananthi said...

@சிபி.செந்தில்குமார்
//எலிக்கு எகத்தாளம்-ஆனந்தியின் தப்புத்தாளம் (அடடே கவிதை கவிதை) நல்ல காமெடி//

ஹா ஹா.. என்ன ஒரு கவிதை..!
வருகைக்கு நன்றிங்க :-)@FIRE FLY
//டைட்டில் ரொம்ப திகிலா இருக்கு....
அச்சச்சோ, எலிய அப்படியெல்லாம் பேசக்கூடாது...எலி கடவுள்...
தினமும் எலிக்கு காலை டிபன், மதியம் லஞ்ச் கொடுங்க ஆனந்தி.

டெய்லி எலிக்கு கொழுக்கட்டை கொடுங்க உங்கள ஒன்னும் பண்ணாது...//

ஆமா.. தேங்காய் உடச்சு..சூடன் ஏத்தி சாமி கும்பிடுறேன்..
மூணு வேளை சாப்பாடும் போடறேன்.. (என்னமா ஐடியா குடுக்கறாங்க)
வருகைக்கு நன்றிங்க.. :-)@மகி
///ஹஹ்..ஹா!!
நிஜமாங்களா ஆனந்தி? என் கணவர்கிட்ட கண்டிப்பா இதை சொல்லி எச்சரித்து வைக்கணும்!!! :D:D ///

அட சத்தியமாங்க..
garage ல வண்டி இருந்ததால எலிக்கு வசதியா போச்சு :-)
வருகைக்கும் நன்றிங்க.. :-)@Mythili Krishnan (மைதிலி கிருஷ்ணன்)
///சரி எலி வண்டியில தான் இருக்குண்ணே வச்சுக்குவோமே.... என்ன செய்வீங்களாம்... வே..வே..வே..///

மைதிலி, இந்த மாதிரி எல்லாம் பயம் காட்ட கூடாது...
வருகைக்கு நன்றி :-)

r.selvakkumar said...

எலிக்கு கார் கொடுத்த அமெரிக்க வள்ளல் வாழ்க..வாழ்க...

Raghav said...

I really can't believe this. Ananthi means "Clean freak"...Then how can this happen......

Raghav said...

"Mullaiku ther kodutha Pari,
Elikku Car kodutha Ananthi"

Your name will be there in american history....

manima said...

Elli trruntathu, paravaiyillai. Puli Irruna?

manimaran

Thamizh Senthil said...

குத்துங்க எஜமான் குத்துஙக.... இந்த எலிகளே இப்படிதான் :-D

Ananthi said...

@r.செல்வக்குமார்
///எலிக்கு கார் கொடுத்த அமெரிக்க வள்ளல் வாழ்க..வாழ்க...///

ஹி ஹி... நன்றி.. நன்றி...!!

Ananthi said...

@ராகவ்
/// I really can't believe this. Ananthi means "Clean freak"...Then how can this happen...... ///

ஹிஹி.. அதை ஏன் கேக்குற ராகவா..!!
எலித் தொல்லை தாங்கல... :D :D

///"Mullaiku ther kodutha Pari,
Elikku Car kodutha Ananthi"

Your name will be there in american history.... ///

ஹா ஹா ஹா..
சூப்பர் ராகவா... கலக்குற போ ;-))

Ananthi said...

@manima
// Elli trruntathu, paravaiyillai. Puli Irruna?
manimaran ///

ஹா ஹா ஹா...
புலி இருந்தா என்ன செய்ய? அப்பவே எஸ்கேப் ஆகா வேண்டியது தான்.. :D :D

Ananthi said...

@தமிழ் செந்தில்
/// குத்துங்க எஜமான் குத்துஙக.... இந்த எலிகளே இப்படிதான் :-D ///

ஹா ஹா...
நன்றி செந்தில் :-)

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)