topbella

Wednesday, June 1, 2011

ஏமாற்றம்...!


HD wallpaper: girl, sad, crying, raining, rain drops, window, people, woman  | Wallpaper Flare

ஆயிரம் விஷயங்கள் 
அம்சமாய் நடக்கும்.....
அப்போதெல்லாம் 
திருப்தி இல்லை...!

ஏதோ ஒன்று 
எதேச்சையாய்
எட்டிப் போகும்...
எல்லாம் போனதாய்
எக்கச்சக்க வேதனை...! 

நினைத்தது  எல்லாம் 
நிழலில் மெய்த்து பின் 
நிஜத்தில் பொய்க்கும் போது 
வாழ்வின் நிதர்சனம்
வந்து நிற்கும் அங்கே...!


சுருக்கமாய் ஒரு விஷயம்
எதிர்ப்பார்ப்பைக் குறைத்து  
ஏக்கங்கள் களைந்தால்
ஏமாற்றங்கள் தவிர்க்கலாம்...!

~அன்புடன் ஆனந்தி 



24 comments:

தினேஷ்குமார் said...

உண்மைதான் சகோ எதிர்பார்ப்பையும் ஏக்கங்களையும் கலைந்தால் தான் ஏமாற்றத்தை தவிர்க்க முடியும் .....

இல்லாமலும் இருக்க முடியாது
இருந்தும் இழக்க முடியாது............

சி.பி.செந்தில்குமார் said...

கவிதை நல்லாருக்கு.. மேடம்

ஷர்புதீன் said...

நல்லாவே இல்லைன்னு சொன்ன., பசங்க கும்மிடுவானுங்க., ஆதலினால் பொய்யாகவே நன்றாக இல்லை

Anonymous said...

//சுருக்கமாய் ஒரு விஷயம்
எதிர்ப்பார்ப்பைக் குறைத்து
ஏக்கங்கள் களைந்தால்
ஏமாற்றங்கள் தவிர்க்கலாம்...!//


நச் மெசேஜ்...
நல்லா இருக்கு.

Anonymous said...

இரண்டாவது பத்தி என்னை யாரோ சவுக்கால் அடிப்பது மாதிரி இருந்தது ஆனந்தி... நான் அப்படி தான் ஒரு சின்ன விஷயத்துக்கே உடைந்து போகும் ரகம்...ஏமாற்றம் எனக்குள் ஏற்படுத்துமா மன மாற்றம்?

sathishsangkavi.blogspot.com said...

//நினைத்தது எல்லாம்
நிழலில் மெய்த்து பின்
நிஜத்தில் பொய்க்கும் போது
வாழ்வின் நிதர்சனம்
வந்து நிற்கும் அங்கே...!//

அற்புதமான வரிகள்...

இராஜராஜேஸ்வரி said...

வாழ்வின் நிதர்சனம்
வந்து நிற்கும் அங்கே...!//

எதிர்பார்ப்பைக் குறைத்தால்
ஏமாற்றம் குறையுமென்ற
வாழ்க்கைத்தத்துவம் உணர்த்திய
அருமையான கவிதைக்குப்
பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

கூடல் பாலா said...

உண்மைதான் ......

நிரூபன் said...

ஏமாற்றத்திற்கான காரணத்தையும், ஏமாற்றத்தைத் தவிர்ப்பதற்குரிய வழி முறைகளையும் உங்களின் கவிதை அழகாகச் சொல்கிறது சகோ.

கவி அழகன் said...

உலக்கை போற இடம் பாக்கமாட்டம் ஊசி போற இடம் பாப்பம்

தமிழ்வாசி பிரகாஷ் said...

நினைத்தது எல்லாம்
நிழலில் மெய்த்து பின்
நிஜத்தில் பொய்க்கும் போது
வாழ்வின் நிதர்சனம்
வந்து நிற்கும் அங்கே...!>>>
உண்மைதான் வாழ்வின் அர்த்தம் புரியும் அங்கே...

r.v.saravanan said...

நல்லா இருக்கு

குணசேகரன்... said...

நீங்க சொல்றது கரெக்ட்..nice words..

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@தினேஷ்குமார்
ஆமாங்க.. சரியா சொன்னிங்க.. :)
நன்றி



@சி. பி. செந்தில்குமார்
ரொம்ப நன்றிங்க :)



@ஷர்புதீன்
ஹா ஹா ஹா... ரொம்ப தேங்க்ஸ் :)
(யாரு கும்முவாங்க..?? )



@இந்திரா
கருத்திற்கு ரொம்ப நன்றிங்க :)


@தமிழரசி
வாங்க தமிழ்.. நானும் அதே ரகம் தாம்பா.. மாற்றம் ஏற்பட தான், முயன்று கொண்டிருக்கிறேன்.. உங்களுக்குள்ளும் மாற்றம் ஏற்பட.. வாழ்த்துக்கள்பா..! :)


@சங்கவி
உங்களின் கருத்திற்கு ரொம்ப நன்றிங்க :)


@இராஜராஜேஸ்வரி
உங்களின், கருத்திற்கும், வாழ்த்திற்கும்.. மிக்க நன்றிங்க :)



@koodal bala
கருத்திற்கு நன்றிங்க :)



@நிரூபன்
உங்க கருத்திற்கு ரொம்ப நன்றிங்க :)



@யாதவன்
உண்மை தான்.. நன்றிங்க :)



@தமிழ்வாசி
ஹ்ம்ம்.. உங்க கருத்திற்கு நன்றிங்க :)



@r. v. saravanan
ரொம்ப நன்றிங்க :)




@குணசேகரன்
கருத்திற்கு நன்றிங்க :)

செந்தில்குமார் said...

ஏமாற்றங்கள்...வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று

அன்புடன் ஆனந்தி...

Nandhini said...

கவிதையில் இருக்கும் வரிகள் சில எனக்கும் பொருந்தும்.....மொத்தத்தில் கவிதை அருமை...

Mahi said...

/எதிர்ப்பார்ப்பைக் குறைத்து
ஏக்கங்கள் களைந்தால்
ஏமாற்றங்கள் தவிர்க்கலாம்...!/ம்ம்..புத்திக்குத் தெரியுது,மனசுக்குத் தெரிலையே ஆனந்தி! :)

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@செந்தில்குமார்

ஹ்ம்ம்ம்..சரிதாங்க..!
கருத்துக்கு நன்றி :)

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@நந்தினி

நீங்களும்.. என் கேஸ் தானா !! :)

தேங்க்ஸ் நந்து.

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@மஹி

ஆமாப்பா.. சரியா சொன்னிங்க.. :)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//ஏக்கங்கள் களைந்தால்
ஏமாற்றங்கள் தவிர்க்கலாம்//

ஈரடில புதுக்குறள் போல பெரிய விசயத்த சொல்லிட்டீங்க ஆனந்தி... நடைமுறை தான் எப்படின்னு புரியல...:(

Anonymous said...

////ஆயிரம் விஷயங்கள்
அம்சமாய் நடக்கும்.....
அப்போதெல்லாம்
திருப்தி இல்லை...!

ஏதோ ஒன்று
எதேச்சையாய்
எட்டிப் போகும்...
எல்லாம் போனதாய்
எக்கச்சக்க வேதனை...! ////

அருமையான கவிதை சகோதரி..

அம்பாளடியாள் said...

சுருக்கமாய் ஒரு விஷயம்
எதிர்ப்பார்ப்பைக் குறைத்து
ஏக்கங்கள் களைந்தால்
ஏமாற்றங்கள் தவிர்க்கலாம்...!

உண்மைதான் சகோ நிஜத்தை
அருமையான கவிதைவரிகளால்த்
தந்த உங்களுக்கு மிக்க நன்றி...
வாழ்த்துக்கள்.

சாந்தி மாரியப்பன் said...

//எதிர்ப்பார்ப்பைக் குறைத்து
ஏக்கங்கள் களைந்தால்
ஏமாற்றங்கள் தவிர்க்கலாம்//

ரொம்ப கரெக்ட்.. எதிர்பார்ப்பு இருக்குமிடம் எதுவோ அதுவே ஏமாற்றத்தின் இருப்பிடம்.

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)