topbella

Wednesday, June 23, 2010

இன்ஸ்டன்ட் பால் கோவா...!!!

 

தேவையான பொருட்கள்:

கன்டன்ஸ்டு மில்க் (அல்லது) மில்க்மெய்ட் - 1 கப்
பால் பவுடர் -  1 / 4 கப்
கெட்டி தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்

(கன்டன்ஸ்ட் மில்க்கில் சுகர் இருப்பதால் அதுவே போதுமானது.. தனியாக சுகர் சேர்க்க தேவை இல்லை )

செய்முறை:

ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் மேற்சொன்ன அனைத்து பொருட்களையும் கலந்து, மைக்ரோவேவ் ஓவனில்  ஒரு 4 - 6  நிமிடங்கள் வைக்கவும்..
இடை இடையே வெளியில் எடுத்து நன்கு கலந்து திரும்ப வைக்கவும்..
6 அல்லது 7 நிமிடங்களில்...சூடான...சுவையான... பால்கோவா தயார்..!!


INSTANT PAAL GOVA: 
NEEDED THINGS:

CONDENSED MILK (or) MILK MAID - 1 CUP
DRY MILK POWDER - 1/4 CUP
GHEE - 1 TBSP
CURD - 1 TBSP

METHOD:

In a deep microwavable dish, add condensed milk, dry milk powder, ghee, curd.. mix everything, and microwave it for 4-6 minutes..
In between take it out... mix well and keep it again..
From 6- 7 minutes, hot and tasty paalgova is ready...!!

70 comments:

Sanjay said...

பால்கோவா வாங்கினால் மரக்கன்று இலவசம்...!!!
இன்றே நாடுங்கள் ஆனந்தி ஸ்வீட் ஸ்டால்....
வைட் ஹவுஸ்,அமெரிக்கா...(எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது) :D :D :D

Chitra said...

உங்கள் வீட்டு செடியில் காய்த்த பால்கோவா நல்லா இருக்குதுங்க.... அந்த செடி எங்கே கிடைக்கும்?

GEETHA ACHAL said...

மிகவும் அருமையான ஸ்வீட்...எங்கள் வீட்டிலும் இதனை அடிக்கடி செய்வது உண்டு....

Mrs.Menagasathia said...

மிகவும் ஈஸியான ரெசிபி..சூப்பர்ர்!!

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அய்யா !
மொத்தமும் எனக்குத்தான் . அருமையாக செய்து இருகிறீகள் . நாங்களும் விரைவில் செய்வோம்ல . பகிர்வுக்கு நன்றி

கமலேஷ் said...

எளிமையான செய் முறையாக தெரிகிறது..முயற்சி செய்யலாம் .
ஆனா side effect எதுவும் இருக்குமா..

ஜெய்லானி said...

பால் தெரியும் அதென்னங்க கோவா . எனக்காக பால் சென்னை . பால் மும்பை ரெஸிபி போடுங்களேன்..

ஜெய்லானி said...

பாக்கும் போதே ஜொள்ள்ள்ள்ள்ள் வடியுது.. சூப்பர்

நாடோடி said...

ச‌ட்டென்ற‌ பால்கோவா
த‌ட்டில் மிளிர்கிற‌தே!!!
அட‌டே!!!!
ஆச்ச‌ரிய‌குறி!!!

அமைதிச்சாரல் said...

எங்க வீட்டிலும் இதை அடிக்கடி செய்றதுண்டு.செய்யும்போதெல்லாம் கொசுவத்தியை கிளப்பி விட்டுடும். அதப்பத்தி ஒரு பதிவே போடணும்.

இத்தனூண்டு செடியில இவ்வளவு பால்கோவா காய்ச்சிருக்கா!!! நம்பவே முடியலை :-))))

LK said...

paarka nalla irukkun thanks for sharing

Anonymous said...

ரொம்ப ஈஸியான ரெசிபி ...சூப்பர்

Anonymous said...

பால்கோவாவின் படத்தை பார்க்கும் போதே வாயில் எச்சில் ஊறுகிறதே...
ஆனந்தி நீங்க அதிகமா பால்கோவா சாப்பிட வேண்டாம்,
அப்புறம், நீங்க ரொம்ப குண்டாயிருவீங்க...
அதனால அந்த பால்கோவாவை, என்னோட addresskku door delivery பண்ண முடியுமா?

Madhavan said...

what for those not having M.Oven?

சௌந்தர் said...

அம்மா கிட்ட சொல்லி செய்ய சொல்கிறேன் சூப்பர் பால்கோவா

வெறும்பய said...

மிகவும் அருமையான ஸ்வீட்..

பகிர்வுக்கு நன்றி

சசிகுமார் said...

பால்கோவா நான் விரும்பி சாப்பிடும் ஒரே ஒரு இனிப்பு வகை, அதை வீட்டிலேயே செய்ய சொல்லிகொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி உங்கள் புகழ் மென்மேலும் உயர ஏன் மனமார்ந்த வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

இது பால் கோவா அல்ல... உடனடியாக செய்ய முடிவதால் அது பாகோ...!.

Jaleela Kamal said...

பால் கோவா நல்ல இருக்கு உடனே ஈசியாக செய்யும் ஈசி இனிப்பு.

Ananthi said...

@சஞ்சய்
/// பால்கோவா வாங்கினால் மரக்கன்று இலவசம்...!!!
இன்றே நாடுங்கள் ஆனந்தி ஸ்வீட் ஸ்டால்....
வைட் ஹவுஸ்,அமெரிக்கா...(எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது) :D :D :D ///

அய்ய்ய்ய்ய்ய்.... ரொம்ப நல்ல விளம்பரம் பண்றீங்க...
கம்பெனி சார்பா போனஸ் உண்டு... வந்து கலெக்ட் பண்ணிக்கோங்க.. :D :D

மறக்காம அந்த மரக்கன்றையும் வாங்கிட்டு போங்க.. ;-)):P :P

ப்ரின்ஸ் said...

பால்கோவா என்னங்க புளிக்குது. ஓ!! தயிர் ஒரு கப் விட்டுட்டேன் போல இருக்கே...

S Maharajan said...

மிகவும் அருமையான ஸ்வீட்..

Ananthi said...

@Chitra said...

/// உங்கள் வீட்டு செடியில் காய்த்த பால்கோவா நல்லா இருக்குதுங்க.... அந்த செடி எங்கே கிடைக்கும்? ///


ஹிஹி.. ஆமா...எங்க வீட்ல காய்ச்சது தான்... ஒரு செடி வேணா ப்ரீயா தரேன்.. :D :D


நன்றி சித்ரா..

@GEETHA ACHAL said...

/// மிகவும் அருமையான ஸ்வீட்...எங்கள் வீட்டிலும் இதனை அடிக்கடி செய்வது உண்டு.... ///


ஹ்ம்ம்... ஓஹோ... சூப்பர் ...நீங்களும் என்னுடன் சேர்ந்த பால்கோவா ப்ரியை போல இருக்கு :D :D


நன்றி கீதா..

@Mrs.Menagasathia said...

/// மிகவும் ஈஸியான ரெசிபி..சூப்பர்ர்!! ///


ஹ்ம்ம்.. ரொம்ப நன்றி மேனகா.. :)

Ananthi said...

@..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

/// அய்யா ! மொத்தமும் எனக்குத்தான் . அருமையாக செய்து இருகிறீகள் . நாங்களும் விரைவில் செய்வோம்ல . பகிர்வுக்கு நன்றி ///


ஹ்ம்ம்.. செய்யுங்க செய்யுங்க.. எப்படி வந்ததுன்னு சொல்லுங்க.. :)


நன்றி பனித்துளி சங்கர்..

@கமலேஷ் said...

/// எளிமையான செய் முறையாக தெரிகிறது..முயற்சி செய்யலாம் .
ஆனா side effect எதுவும் இருக்குமா.. ///


ஹாஹாஹா.. சைடு எப்பெக்ட் என்னங்க இருக்க போகுது... நிறைய சாப்பிட்டா சைடு-ல எப்பெக்ட் இருக்கும் :D

நன்றி கமலேஷ் :)

Ananthi said...

@ஜெய்லானி said...

/// பால் தெரியும் அதென்னங்க கோவா . எனக்காக பால் சென்னை . பால் மும்பை ரெஸிபி போடுங்களேன்.. ///


ஹிஹிஹி... இது புதுசா இருக்கே?? சரி விடுங்க.. ரெசிபி போட்ருவோம் :D :D

@ஜெய்லானி said...

/// பாக்கும் போதே ஜொள்ள்ள்ள்ள்ள் வடியுது.. சூப்பர் ///

ஹாஹா.. ஒன்னும் கவலை படாதீங்க.. எங்ககிட்ட பால்கோவா வாங்கினா, துடச்சிக்க துண்டு ப்ரீ... :D :D :D
ரொம்ப நன்றி ஜெய்லானி :)

@நாடோடி said...

/// ச‌ட்டென்ற‌ பால்கோவா
த‌ட்டில் மிளிர்கிற‌தே!!!
அட‌டே!!!!
ஆச்ச‌ரிய‌குறி!!! ///


ஆஹா.. பால்கோவா பார்த்து கவிதையே எழுதிட்டீங்க.. ரொம்ப சூப்பர்.. :)


நன்றி நாடோடி.. :)

Ananthi said...

@அமைதிச்சாரல் said...

/// எங்க வீட்டிலும் இதை அடிக்கடி செய்றதுண்டு.செய்யும்போதெல்லாம் கொசுவத்தியை கிளப்பி விட்டுடும். அதப்பத்தி ஒரு பதிவே போடணும்.///


ஹாஹாஹா... :D :D :D போடுங்க போடுங்க..

/// இத்தனூண்டு செடியில இவ்வளவு பால்கோவா காய்ச்சிருக்கா!!! நம்பவே முடியலை :-)))) ///


ஆமாங்க... நம்புங்க.. :)


ரொம்ப நன்றி..

@LK said...

/// paarka nalla irukkun thanks for sharing ///


ரொம்ப நன்றி

@sandhya said...


/// ரொம்ப ஈஸியான ரெசிபி ...சூப்பர் ///


ரொம்ப நன்றி சந்த்யா :)

Ananthi said...

@FIRE FLY said...


/// பால்கோவாவின் படத்தை பார்க்கும் போதே வாயில் எச்சில் ஊறுகிறதே...
ஆனந்தி நீங்க அதிகமா பால்கோவா சாப்பிட வேண்டாம்,
அப்புறம், நீங்க ரொம்ப குண்டாயிருவீங்க...
அதனால அந்த பால்கோவாவை, என்னோட addresskku door delivery பண்ண முடியுமா? ///


ஹ்ம்ம்.. சரிங்க.. ரொம்ப நன்றி.. :)

@Madhavan said...


/// what for those not having M.Oven? ///


I have not tried in the stove top.. maybe you can give it a try :)


thanks for the comment Madhavan :)

Ananthi said...

@சௌந்தர் said...


/// அம்மா கிட்ட சொல்லி செய்ய சொல்கிறேன் சூப்பர் பால்கோவா ///

ஹ்ம்ம்.. கண்டிப்பா செய்ய சொல்லுங்க

ரொம்ப நன்றி...

@வெறும்பய said...


/// மிகவும் அருமையான ஸ்வீட்.. ///


ரொம்ப நன்றிங்க :)

Ananthi said...

@சசிகுமார் said...


/// பால்கோவா நான் விரும்பி சாப்பிடும் ஒரே ஒரு இனிப்பு வகை, அதை வீட்டிலேயே செய்ய சொல்லிகொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி உங்கள் புகழ் மென்மேலும் உயர ஏன் மனமார்ந்த வாழ்த்துக்கள் ///


ஹ்ம்ம்.. எனக்கும் ரொம்ப பிடித்த ஸ்வீட்..


ரொம்ப நன்றி சசிகுமார்.. :)

@ஸ்ரீராம். said...


/// இது பால் கோவா அல்ல... உடனடியாக செய்ய முடிவதால் அது பாகோ...!. ///


ஹா ஹா :D :D


புது பேருக்கு ரொம்ப தேங்க்ஸ் :)

Ananthi said...

@Jaleela Kamal said...


/// பால் கோவா நல்ல இருக்கு உடனே ஈசியாக செய்யும் ஈசி இனிப்பு. ///


ஹ்ம்ம்ம்.. ஆமாங்க ரொம்ப ஈசி...!


ரொம்ப நன்றி :)

@ப்ரின்ஸ் said...


/// பால்கோவா என்னங்க புளிக்குது. ஓ!! தயிர் ஒரு கப் விட்டுட்டேன் போல இருக்கே...///


ஹ்ம்ம் கும்ம்.. எதையும் ஒழுங்கா பார்த்து செய்யறதில்ல..


கரெக்டா போடுங்க..பிரின்ஸ்..


ரொம்ப நன்றி.. :)

Ananthi said...

@S Maharajan said...


/// மிகவும் அருமையான ஸ்வீட்.. ///


ரொம்ப நன்றிங்க.. :)

Kasu Sobhana said...

சர்க்கரை தேவை இல்லையா?

மங்குனி அமைச்சர் said...

என்ன ஒரு அருமையான ரெசிபி ? எவ்வளவு பெரிய அழகான செய்முறை சொல்லிருகிங்க .. சே ...சூப்பருங்க , பென்டாஸ்டிக் , அருமை , பின்னிட்டிங்க , எச்சலன்ட் , மார்வலஸ் ..............................................

இதுக்கு பேசாம் அரை கிலோ பால்கோவா வாங்கி 3 நிமிடம் ஓவன் ல வச்சா , சூடான சுவையான பால்கோவா ரெடி

மங்குனி அமைச்சர் said...

என்ன ஒரு அருமையான ரெசிபி ? எவ்வளவு பெரிய அழகான செய்முறை சொல்லிருகிங்க .. சே ...சூப்பருங்க , பென்டாஸ்டிக் , அருமை , பின்னிட்டிங்க , எச்சலன்ட் , மார்வலஸ் ..............................................

இதுக்கு பேசாம் அரை கிலோ பால்கோவா வாங்கி 3 நிமிடம் ஓவன் ல வச்சா , சூடான சுவையான பால்கோவா ரெடி

மங்குனி அமைச்சர் said...

ஆமா உங்க ஊருல பால்கோவாவுக்கு சுகர் எல்லாம் போடா மாட்டிகளா ???

மங்குனி அமைச்சர் said...

Jaleela Kamal said...

பால் கோவா நல்ல இருக்கு உடனே ஈசியாக செய்யும் ஈசி இனிப்பு. ////


என்னது இனிப்பா , மேடம் சும்மா ஆனந்தி மேடத்த கிண்டல் பனாதிக , நானும் தேடி தேடி பாத்தேன் எங்கயுமே அவுங்க சுகர் சேக்கல

r.v.saravanan said...

வீட்டில் செய்து பார்க்க சொல்கிறேன் பகிர்வுக்கு நன்றி

ஜில்தண்ணி said...

// மங்குனி அமைச்சர் said...

என்னது இனிப்பா , மேடம் சும்மா ஆனந்தி மேடத்த கிண்டல் பனாதிக , நானும் தேடி தேடி பாத்தேன் எங்கயுமே அவுங்க சுகர் சேக்கல //

அதான எங்கயுமே சக்கரை சேர்க்கலையே

எனக்கு ஒரு 50 கிராம் பார்சல்

Ananthi said...

@ Kasu Sobhana said...
//// சர்க்கரை தேவை இல்லையா?///

இல்லங்க.. சர்க்கரை தேவை இல்ல.. கண்டன்ஸ்ட் மில்க்கில் உள்ள சுகரே போதும்..!!

ரொம்ப நன்றி.. :)

@மங்குனி அமைச்சர் said...
//// என்ன ஒரு அருமையான ரெசிபி ? எவ்வளவு பெரிய அழகான செய்முறை சொல்லிருகிங்க .. சே ...சூப்பருங்க , பென்டாஸ்டிக் , அருமை , பின்னிட்டிங்க , எச்சலன்ட் , மார்வலஸ் ..............................................///

ரொம்ப நன்றிங்க... :D

/// இதுக்கு பேசாம் அரை கிலோ பால்கோவா வாங்கி 3 நிமிடம் ஓவன் ல வச்சா , சூடான சுவையான பால்கோவா ரெடி ///


ஆஹா.. பிசினஸ்கு வேட்டு வெச்சிருவீங்க போல இருக்கே.. :D :D


போங்க சார்.. போயி பால்கோவா வாங்கி சுட பண்ணி சாப்பிடுங்க..


ரெம்ப நன்றி....உங்க உதவிக்கு..!!!

@மங்குனி அமைச்சர் said...

/// ஆமா உங்க ஊருல பால்கோவாவுக்கு சுகர் எல்லாம் போடா மாட்டிகளா ??? ///


ஹலோ.. கன்டென்ஸ்ட் மில்க்கில் சுகர் இருக்கும்...!!


தனியா சுகர் போடா தேவை இல்லை... :D :D

/// என்னது இனிப்பா , மேடம் சும்மா ஆனந்தி மேடத்த கிண்டல் பனாதிக , நானும் தேடி தேடி பாத்தேன் எங்கயுமே அவுங்க சுகர் சேக்கல ///

மணிக்கொருதரம்..... சரி விடுங்க...
அமைச்சரே.... கண்டென்ஸ்ட் மில்க்கில் சுகர் இருக்கும்...சுகர் இருக்கும்... சுகர் இருக்கும்...
என்பதை தெரிவித்து கொள்கிறேன்.. :D :D :D

Ananthi said...

@r.v.saravanan said...

/// வீட்டில் செய்து பார்க்க சொல்கிறேன் பகிர்வுக்கு நன்றி ///

ஹ்ம்ம்.. கண்டிப்பா செய்ய சொல்லுங்க.. ரொம்ப நன்றிங்க.. :)

@ஜில்தண்ணி said...

// மங்குனி அமைச்சர் said...

என்னது இனிப்பா , மேடம் சும்மா ஆனந்தி மேடத்த கிண்டல் பனாதிக , நானும் தேடி தேடி பாத்தேன் எங்கயுமே அவுங்க சுகர் சேக்கல //

/// அதான எங்கயுமே சக்கரை சேர்க்கலையே

எனக்கு ஒரு 50 கிராம் பார்சல் ////

சப்பாஹ்... முடியல..
சரி இன்னொரு தரம் சொல்றேன்... கண்டென்ஸ்ட் மில்க்கில் சுகர் இருக்கும்..அதுவே போதுமானது.. :D :D
ரொம்ப நன்றி :)

Ananthi said...

*** சுகர் சேர்க்க வேண்டுமா என்று நிறைய பேருக்கு டவுட் வந்துருச்சி....!!

இப்போது ரெசிப்பியில் குறிப்பிட்டு இருக்கிறேன்..

கருத்துக்கு நன்றி.. :)***

க.பாலாசி said...

இவ்ளோ சுலபமா பால்கோவா செய்யறது.. சரி மைக்ரோ ஒவன் எங்கிட்ட இல்லைங்க நான் என்ன பண்றது?

மங்குனி அமைச்சர் said...

Ananthi said...

*** சுகர் சேர்க்க வேண்டுமா என்று நிறைய பேருக்கு டவுட் வந்துருச்சி....!!

இப்போது ரெசிப்பியில் குறிப்பிட்டு இருக்கிறேன்..

கருத்துக்கு நன்றி.. :)***////
இத மொதல்லே சென்சிருக்கலாம்ல , எகல மாதிரி படிக்காத பயபுள்ளைகளுக்கு அது என்னமோ சொன்னிகளே இம் .. அதுதான் கண்டென்ஸ்ட் மில்க்கில் அதுல சுகர் இருக்கும்ன்னு எப்படி தெரியும்? , அதுல நீங்க வேற கமண்ட்ஸ் எல்லாம் மொத்தமா பப்ளிஸ் பண்ணிட்டு , ஒரே பதிலா 4 கேள்விக்கு ஒரே பதிலா சொல்ரிக

அண்ணாமலை..!! said...

செஞ்சா பால்கோவா வருமா?
நம்புவோம்!
:)

Ananthi said...

@க.பாலாசி said...

/// இவ்ளோ சுலபமா பால்கோவா செய்யறது.. சரி மைக்ரோ ஒவன் எங்கிட்ட இல்லைங்க நான் என்ன பண்றது? ///

மைக்ரோ ஓவன் இல்லைன்னா, அடுப்பில் வைத்து செய்து பார்க்கலாம்...!
ரொம்ப நன்றி :)

Ananthi said...

@மங்குனி அமைச்சர்
/// இத மொதல்லே சென்சிருக்கலாம்ல , எகல மாதிரி படிக்காத பயபுள்ளைகளுக்கு அது என்னமோ சொன்னிகளே இம் .. அதுதான் கண்டென்ஸ்ட் மில்க்கில் அதுல சுகர் இருக்கும்ன்னு எப்படி தெரியும்? , அதுல நீங்க வேற கமண்ட்ஸ் எல்லாம் மொத்தமா பப்ளிஸ் பண்ணிட்டு , ஒரே பதிலா 4 கேள்விக்கு ஒரே பதிலா சொல்ரிக ///

ஹிஹிஹி... சரி சரி.. கோச்சுக்காதீங்க..

மில்க் மெய்டு-லயும் சுகர் ஏற்கனவே இருக்குங்க.. :)

இனிமே உடனே உடனே உங்கள மாதிரி சுறுசுறுப்பா பதில் போட ட்ரை பண்றேன்.. :D :D

மன்னிக்க வேண்டும் அமைச்சரே....!!
ரொம்ப ரொம்ப நன்றிங்க.. :-))))

Ananthi said...

@அண்ணாமலை..!! said...

/// செஞ்சா பால்கோவா வருமா?
நம்புவோம்! :) ///

நம்பி செய்யுங்க.. கண்டிப்பா வரும்ங்க..!!
ரொம்ப நன்றி.. :)

செந்தில்குமார் said...

மரத்துல இப்போ பால்கோவா எல்லாம் காய்க்க ஆரம்பிடுச்சா பழமேல்லாம் எங்க பொச்சு

ம்ம்ம்ம் மிகவும் சுலபமான முறையில் பால்கோவா தயாரித்து உள்ளிர்கள் ஆனந்தி .... நைஸ்

Ananthi said...

@செந்தில்குமார் said...

/// மரத்துல இப்போ பால்கோவா எல்லாம் காய்க்க ஆரம்பிடுச்சா பழமேல்லாம் எங்க பொச்சு
ம்ம்ம்ம் மிகவும் சுலபமான முறையில் பால்கோவா தயாரித்து உள்ளிர்கள் ஆனந்தி .... நைஸ் ///

ஹ்ம்ம்... மரத்துல இல்ல..எங்க வீடு கிட்சென்ல.. :)
ரொம்ப நன்றி செந்தில். :)

தக்குடுபாண்டி said...

Palkova suuuuuuper akka!!..:)

Ivan,
Thakkudu,
Thirattipal kindupavargal sangam.
(Doha kilai)

Mythili Krishnan (மைதிலி கிருஷ்ணன்) said...

Paalgova innum en vaayil iniththu kondirukkirathu.. thanks ananthi for the recipe.

சி. கருணாகரசு said...

மிக எளிமையா இருக்குங்க .மிக்க நன்றி.

சி. கருணாகரசு said...

பால் கோவா கவிதை அருமை!

Ananthi said...

@தக்குடுபாண்டி said...

/// Palkova suuuuuuper akka!!..:)
Ivan,
Thakkudu,
Thirattipal kindupavargal sangam.
(Doha kilai).. ////

ரொம்ப நன்றி :)

@Mythili Krishnan (மைதிலி கிருஷ்ணன்) said...

/// Paalgova innum en vaayil iniththu kondirukkirathu.. thanks ananthi for the recipe.///

ஹாய் மைதி, ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் :-)))

Ananthi said...

@சி. கருணாகரசு said...

/// மிக எளிமையா இருக்குங்க .மிக்க நன்றி.///

ரொம்ப நன்றி :)

சி. கருணாகரசு said...

///பால் கோவா கவிதை அருமை!////


ஹ்ம்ம்.. ரொம்ப நன்றி.. :)

வால்பையன் said...

டம்ப்ளரில் ஊத்தி குடிச்சேன்!

Ananthi said...

@வால்பையன் said...


/// டம்ப்ளரில் ஊத்தி குடிச்சேன்! ///

என்னது..?? ஊத்தி குடிச்சீங்களா?? மில்க் ஷேக் பண்ணிட்டீங்களா என்ன??
ரொம்ப நன்றி.. :)

thenammailakshmanan said...

பார்க்கவே நல்லா இருக்கு ஆனந்தி.. எனக்கு அனுப்பி வைடா..ஹிஹ்ஹி

vanathy said...

Super!! nice photo.

தமிழ் மதுரம் said...

அமெரிக்காவில் இருந்து கொண்டு ஊர் மண்வாசனையுடன் சமையலா? கலக்கலான குறிப்பு. நான் இனித் தான் முயற்சி செய்து பார்க்கப் போறன். பகிர்வுக்கு நன்றிகள்.

Ananthi said...

@thenammailakshmanan said...


/// பார்க்கவே நல்லா இருக்கு ஆனந்தி.. எனக்கு அனுப்பி வைடா..ஹிஹ்ஹி ///

அக்கா.. கண்டிப்பா அனுப்பி வைக்கிறேன்... நீங்க வீட்டுக்கு வாங்க.. சூடா செஞ்சு தரேன் ;-))))
நன்றி அக்கா..

@vanathy said...

/// Super!! nice photo. //

தேங்க்ஸ் வானதி... :-))

Ananthi said...

@தமிழ் மதுரம் said...

// அமெரிக்காவில் இருந்து கொண்டு ஊர் மண்வாசனையுடன் சமையலா? கலக்கலான குறிப்பு. நான் இனித் தான் முயற்சி செய்து பார்க்கப் போறன். பகிர்வுக்கு நன்றிகள். //

ஹ்ம்ம். கண்டிப்பா செஞ்சு பாருங்க.. ரொம்ப ரொம்ப நன்றி.. :-))

அப்பாவி தங்கமணி said...

ச்சே... நான் கூட அப்படியே வாங்கி இன்ஸ்டன்ட்ஆ சாப்பிடலாம் போலன்னு ஆசையா வந்தேன்... இப்படி வேலை செய்யனுமா...
போங்க நீங்க... ஹி ஹி ஹி...

Just kidding - thanks for sharing the recipe

maharaj2006 said...

palgova


super

maha

maharaj2006 said...

palgova supermaha

Ananthi said...

@அப்பாவி தங்கமணி

/// ச்சே... நான் கூட அப்படியே வாங்கி இன்ஸ்டன்ட்ஆ சாப்பிடலாம் போலன்னு ஆசையா வந்தேன்... இப்படி வேலை செய்யனுமா...
போங்க நீங்க... ஹி ஹி ஹி...

Just kidding - thanks for sharing the recipe ///

ஹ்ம்ம் ஹ்ம்ம்.. இங்க வாங்க. நீங்க வேலையே செய்யாம பால்கோவ செஞ்சு தரேன்..
இங்க வாங்க நீங்க.. :-))
நன்றி..

Ananthi said...

@maharaj2006

// palgova super //

thanks anna. :)

Gayathri said...

எத்தனை சிம்பிளா சொல்லிகுடுத்துட்டிங்க நன்றி தோழி.

Ananthi said...

@காயத்ரி
/// எத்தனை சிம்பிளா சொல்லிகுடுத்துட்டிங்க நன்றி தோழி. ///

ரொம்ப நன்றி காயத்ரி :-))

shanthibass said...

super madam

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)