"ஈன்றெடுத்த அன்னை சொல்லி அறிந்த உறவே...ஈரேழு பிறவிக்கும் எனை ஆளும் அன்பு உருவே...!"
அப்பா என்று சொன்னதும்... எனக்கு ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள்..! பொதுவாக சொல்வதுண்டு.. பெண் குழந்தைக்கு அப்பாவையும் , ஆண் குழந்தைக்கு அம்மாவையும் தான் பிடிக்குமாம்...! எது எப்படியோ, என் விசயத்தில் அது முற்றிலும் உண்மை.. எனக்கு என் அம்மா என்றால் எவ்வளவு உயிரோ அதற்கு ஒரு படி மேல் என் அப்பா...!
என் தந்தை இயல்பிலேயே மிகவும், சாந்தமானவர்.. யாரையும் அதட்டி பேசி நான் பார்த்ததில்லை... வேலை பார்த்த இடத்திலும் அப்படியே.. என் அப்பாவுடன் வேலை செய்தவர்கள் எல்லோருக்குமே என் அப்பாவிடம் அதீத அன்பு கலந்த மரியாதை...!
எதிலும் நிதானம் தவறாது
எச்சரிக்கையுடன் எடுத்துச்
செய்ய எங்கே பயின்றீர்கள்...
பொறுமைக்கு இலக்கணம்பொறுப்புக்கு உதாரணம்....!
எனக்கு என் அப்பா எப்பவுமே ஒரு ஹீரோ தான்..! எப்பவாச்சும் வீட்ல சின்ன சின்ன சண்டை வந்தாலும்... நா அப்பா சைடு தான்.. சரியோ தப்போ அப்பாவை தான் சப்போர்ட் பண்ணுவேன்.. என் அம்மா, "உங்க அப்பாவுக்கு ஆபீஸ் வேல தான் முக்கியம்..,. பேசாம அங்கயே குடியிருக்க சொல்லுன்னு".. சொல்லுவாங்க.. அவ்ளோ சின்சியர் வொர்க்கர்.. அப்பாவுக்கு முதல் மனைவி என்றால் வேலை தான்..! இதற்கு காரணம், "செய்வன திருந்தச் செய்" என்பது அப்பாவின் கொள்கை...!
ஏற்றுச் செய்த வேலையில்
எவரேனும் தடுத்தாலும்
ஏதும் குறை வராமல்
எல்லோரும் மதிக்கும் வண்ணம்
எப்படியப்பா உழைத்தீர்கள்...!
என் அப்பா வேலை செய்தது.. தமிழ் நாடு சிவில் சப்ளைஸ் கார்பரேஷன். அசிஸ்டன்ட் மேனேஜர் பதவி.. இதில் முக்கியமாக.. ரேஷன் கடைகளில் சூபர்வைஸ் பண்ற நேரங்களும் உண்டு.. அங்கே வேலை செய்பவர்கள் , தன்னோட கஷ்டத்துல எப்பவாச்சும், சீனி, பாமாயில்...... இந்த மாதிரி ஏதாச்சும் ஒரு பொருளை திருட்டுத்தனமா கொண்டு போயிருவாங்க.. அப்போ, அப்பா தான் அதற்கு மெமோ எழுதி அனுப்பணும்.. அப்போ சொல்வாங்க, பாவம் கஷ்ட படுற பசங்க... ஏதோ எடுக்குறாங்க.. எனக்கு புரியுதுன்னு சொல்வாங்க. அப்பா, இது வரை ஒருவரிடமும் கை ஏந்தியது கிடையாது... எனக்கு அந்த விசயத்தில் என் அப்பாவை நினைத்து ரொம்பவே பெருமை.. ஆபீஸ்-ல சொல்லக் கேட்டிருக்கிறேன்.. தங்கமான ஆபிசர், கை சுத்தமானவர்ன்னு..!
எங்க அம்மா கூட சில சிமயம் கோவத்துல சொல்வாங்க.. ஊருக்குள்ள ரேஷன் கடை சூப்பர்வைஸ் பண்ணப் போறேங்கன்னு தெரிஞ்சாலே.. உங்களுக்கு என்னங்க... சார் சீனி, பாமாயில்... எது வேணா கொண்டு வந்திருவாங்கன்னு...! அவங்களுக்கு என்ன தெரியும்.. உங்கள பத்தின்னு..!
வெளியில் ஒரு டீ / காபி கூட குடிக்க மாட்டாங்க.. வீட்டில் இருந்து சாப்பாடு கையில் எடுத்துப் போவாங்க. அதற்காக வருடம் ஒருமுறை.. என் கையால் அப்பாவிற்கு வயர் கூடை பின்னிக்கொடுப்பேன். அப்பாவுக்கு அதுல ஒரு சென்டிமன்ட்.. அப்படியே என் ஆச்சி (அப்பாவின் அம்மா) படத்திற்கும் ஒரு மாலை பின்னி போடுவேன். எனக்கு இப்போது நினைத்தாலும் நெஞ்சத்தை நனைக்கும் நிமிடங்கள் அவை..!உண்மை, ஒழுக்கம் இதைஉயிராய் மதித்து அன்றோ..உற்றார் போற்றும் வண்ணம்உயரிய பதவி கண்டீர்...!
என் கை புனைந்த கூடையதில்உங்கள் பசி போக்கும் உணவிருக்கஎன் பாசமதை சேர்த்து வைத்துபத்திரமாய் சுமந்ததென்ன...!
அப்புறம் இன்னொரு விஷயம் என் அப்பாவிடம் நான் கற்றுக்கொண்டது.. என்ன செலவு செய்தாலும் அதை ஒரு நோட்டில் குறித்து வைப்பாங்க.. மாதம் பிறந்ததும்... சம்பள பணம் கொண்டு சுவாமியிடம் வைத்து, வணங்கி விட்டு, அதை அம்மா கையில் கொடுத்து பிறகு, வீட்டுச் செலவு அத்தனையும் மஞ்சளில் ஆரம்பித்து, எங்க ரெண்டு பேர் (என் தம்பியும், நானும்) டியூஷன் பீஸ், பால், பேப்பர், காய்கறி..... அத்தனையும் அழகா பிரிச்சி எழுதி வைப்பாங்க.
இன்று வரை என் கண்ணுக்குள்ளயே இருக்கு, அந்த முத்தான எழுத்துக்கள். இன்னொரு நல்ல குணம், எதற்கும் ஆவேசப்படாம பொறுமையா இருப்பாங்க. யார் மனசும் நோகும் படி பேச மாட்டாங்க. என் அம்மா, அப்பாவைப் போல் பெற்றவங்க கிடைக்க நாங்க உண்மையில் குடுத்து வைத்திருக்கனும்..!
மிடில் கிளாஸ் குடும்பம் தான் என்றாலும்.. எங்களின் நியாயமான ஆசைகளை ஒரு நாளும் நிறைவேற்றத் தவறியதில்லை.. என் பெற்றோர்...! படிப்பு, உடை, உணவு... எதுவாய் இருந்தாலும்.. அவர்களால் முடிந்த அளவு செய்து, எங்களை எந்த குறையும் இல்லாம வளர்த்தாங்க.
சின்ன வயசுல நான் இப்படி இருக்கணும்னு நினைத்தேன், அப்படி படிக்கணும்னு நினைத்தேன்.... ஆனா நடக்கல... அப்படி சில பேர் சொல்லி கேட்டிருக்கிறேன்.. அப்படி எல்லாம் எந்த குறையும் சொல்ல முடியாத படி, எங்களை நல்ல விதமாக வளர்த்து ஆளாக்கிய என் பெற்றோருக்கு இந்த பதிவு சமர்ப்பணம்...!
அப்பா உங்கள் அன்பின் நினைவில்
உங்கள் ஆசியின் அணைப்பில்......!
.....அன்பு மகள் ஆனந்தி
40 comments:
.....
அப்பா .........உன்னுடைய கண்டிப்பும் .........
நாங்கள் படித்து உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்ற ........
உன்னுடைய
ஆசையும் ...........நிறைவேறிவிட்டன.....
அன்று கசந்த கண்டிப்பு இன்று இனிக்கிறது..
..........
அந்த கண்டிப்பு எங்களுக்கு இப்போது வேண்டும் அப்பா ............
உன்னை பார்க்க வேண்டும் பேச வேண்டும் போல இருக்கிறது......
என் கனவிலாவது இன்று நீ வா அப்பா ............ஐ லவ் யூ அப்பா ...........
கொடுத்து வைத்த பெண், கொடுத்துவைத்த அப்பா!!
உங்கள் தந்தைக்கும், உங்கள் கணவருக்கும் தந்தையர் தினவாழ்த்துக்கள்
நெகிழ வைக்கும் பதிவு . இதை பகிர்ந்து கொண்டது பாராட்டுக்கு உரியது
அருமையான பகிர்வு!
அழகாகச் சொல்லி இருக்கின்றிங்க.
தந்தையின் பெருமை அருமை என் தந்தை இறந்த பின்னர் உணர்ந்தேன்.
என்னுடைய 10 வயதிலே என் தந்தை இறந்துவிட்டார். அதன் பின்னர்தான் கஸ்ரம் என்றால் என்ன என்பதனை அறிந்தேன்.
பகிர்வுக்கு நன்றிகள்
அருமையான பதிவு தங்கை..
இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் தம் தந்தையைப் பற்றி ஒரு கணமாவது யோசித்து மகிழ்வார்கள்.
உனக்கு என்றென்றும் உன் தந்தையின் ஆசி நிலைத்திருக்கும்.
தந்தையர் தின வாழ்த்துக்கள் ஆனந்தி!! இந்த பதிவை படிக்கும் போது அப்பா ஞாபகம் வந்துடுச்சு,அப்படியே எண்ணங்கள் மனசுக்குள்ள ஓடுது....
கூடை பிண்ணுவிங்களா அதைப்பற்றி போஸ்ட் போடுங்க..ம்ம்ம்ம்ம் கொலு பதிபை போட்டு முடிக்களா அதுக்குள்ள இந்த பதிவு போட சொல்றேன் ஹா ஹா...
தந்தையர் தின வாழ்த்துக்கள் சகோதரி ...
என் கை புனைந்த கூடையதில்
உங்கள் பசி போக்கும் உணவிருக்க
என் பாசமதை சேர்த்து வைத்து
பத்திரமாய் சுமந்ததென்ன...!//
அருமை..!!!
நெஞ்சம் இனித்தது...கண்கள் பனித்தன..!!:D :D
அருமையான பகிர்வு!
தந்தையின் பெருமை அருமை
பெண் பிள்ளைக்கு அப்பாவதான் பிடிக்கும்., உங்களுக்கு SEGMUND FREUD தெரியுமா?
கிண்டல் இல்லைங்க, இது குறித்து ஒரு பதிவு எழுதி வைத்தயுர்க்கிறேன்
ரொம்ப.. ரொம்ப...நாள் கழிச்சு உருப்படியான ஒரு பதிவு... ஆனந்தி....!
வாழ்க்கை அனுபவம் எல்லாத்தையும் கலந்து உறவோட உன்னதத்த மென்மைய வெளீப்படுத்தியிருக்கீங்க...! அதுவும் அப்பா பற்றி தந்தையர் தினத்துல ஒரு உணர்வுப் பதிவு....!
மற்ற பதிவுகள் எல்லாத்தையும் விட.....இதை ரொம்ப ரசிச்சுப் படிச்சேன்....!!!!!
சூப்பர்ப் ஆனந்தி!
(அப்ப...அப்ப...நல்ல பதிவும் எழுதி ஒண்ணும் செய்ய விடாம பண்ற ஆனந்திக்கு எனது கண்டங்கள்..!
அழகான, அருமையான பகிர்வு.
ஆமாம்...ஒவ்வொரு அப்பாவும் அவங்களுடைய குழந்தைக்கு ஹீரோ மாதிரி தான் தெரிவாங்க...உண்மை...
ரொம்ப நல்ல பகிர்வு...
ரொம்ப உணர்வுபூர்வமா எழுதி இருக்கீங்க ஆனந்தி...தந்தையர் தினத்தன்று மிக அருமையாக உங்கள் பெற்றோருக்கு மரியாதை செய்துவிட்டீர்கள்.
வாழ்த்துக்கள் தோழி.
அருமையான அழகான உணர்வுபூர்வமான பதிவு.
படித்தவர்கள் அனைவருக்கும் தங்கள் தந்தையின் நினைவால் மனது நெகிழ்ந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.
பகிர்வுக்கு நன்றி!
GOOD POST . I read like this post before 2 years i am searching that post.
Good post . i read like this post before 2 years still searching.
நெகிழ வைக்கும் பதிவு . இதை பகிர்ந்து கொண்டது பாராட்டுக்கு உரியதுஉங்கள் தந்தைக்கும், உங்கள் கணவருக்கும் தந்தையர் தினவாழ்த்துக்கள்
என் கை புனைந்த கூடையதில்
உங்கள் பசி போக்கும் உணவிருக்க
என் பாசமதை சேர்த்து வைத்து
பத்திரமாய் சுமந்ததென்ன...!
அருமையான படைப்பு ........
நல்லாயிருக்குங்க...
வாழ்த்துக்கள்..
http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_23.html
தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். கருத்துரைகளை அறியப்படுத்தவும். நன்றி.
Nice :)
மனதை வருடும் விதமாய் இருக்கிறது.
அப்பாக்கள் என்றுமே கிரேட் தான்.
இப்போதைக்கு பிரிவின் துயரால் எப்படி தான் ஆற்றி கொள்வதோ தெரியல
உங்கள் அப்பாவை பற்றி படித்தேன் ....மிகவும் அருமை...
sila neram ethvumey pesamudiathu..
appdiey ulvangitu poida thonum athupola erunthathu ungal pathivu..
miga miga santhosam.vasithathil.
என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....
அப்பவை நினைத்து ஒருகணம் மனம்
இலக வைத்து விட்டீர்....
நன்றி.
namma pakkam,,,,,,,,,,,,,
இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்,,,,oodivanko.
அப்பா அப்பா அப்பா-சொன்ன
அனைத்தும் இனிமை தானப்பா
இப்பா இப்பா இப்பா-இன்று
எழுதக் காரணம் அவரப்பா
ஒப்பா ஒப்பா ஒப்பா-இங்கே
உரைக்க ஒன்றும் இலையப்பா
தப்பா தப்பா தப்பா-ஏதும்
தரவே இல்லை படியப்பா
தந்தது அருமை பெற்றது
பெருமை
புலவர் சா இராமாநுசம்
Nice Post
Nice post
வணக்கம் நண்பரே
உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்... http://www.valaiyakam.com/
ஓட்டுப்பட்டை இணைக்க:
http://www.valaiyakam.com/page.php?page=about
@ஜமுனா
மிக சரியாச் சொன்னிங்க. உங்கள் கமெண்ட் என், மனதை தொட்டது.
நன்றிங்க
@middleclassmadhavi
உங்க கருத்துக்கு ரொம்ப நன்றிங்க :)
@எல்.கே.
மிக்க நன்றிங்க :)
@பார்வையாளன்
உங்க கருத்துக்கு ரொம்ப நன்றிங்க :)
@ஜீ
நன்றிங்க :)
@சந்ரு
உங்க கருத்துக்கு ரொம்ப நன்றிங்க.
உங்கள் வருத்தத்தை பகிர்ந்து கொள்கிறேன்.
@r . selvakkumar
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா. நீங்க வந்ததில் மகிழ்ச்சி. :)
@S . Menaga
ஹா ஹா ஹா.. மேனகா.... இப்பிடித் தான் போட்டு தாக்கணும்.... அவ்வ்வ்வ்.
போடுறேன் பா.. எப்படி யாச்சும், இந்த கொலுவுக்குள்ள... போடுறேன். :D
ரொம்ப தேங்க்ஸ்.
@கந்தசாமி
மிக்க நன்றிங்க :)
@சஞ்சய்
ரசித்து சொன்ன கருத்துக்கு, ரொம்ப தேங்க்ஸ் சஞ்சய் :)
@S Maharajan
மிக்க நன்றிங்க :)
@ஷர்புதீன்
நீங்க சொல்றது SIGMUND FREUD பத்தியா? உங்கள் பதிவில் பார்க்கிறேன்.
கருத்துக்கு நன்றிங்க
@தேவா
கிர்ர்ர்ரர்ர்ர்ர். (ரெம்ப தேங்க்ஸ்)
ஹ்ம்ம்ம்.. உங்களின் கருத்திற்கு நன்றிங்க.
ஹா ஹா.. ஏன் நக்கல் பண்ண வழி இல்லாம போச்சோ?
நன்றிங்க
@தமிழ்வாசி
மிக்க நன்றிங்க, உங்கள் கருத்திற்கு :)
@GEETHA ACHAL
ஆமாங்க.. உண்மை தான். ரொம்ப நன்றிங்க. :)
@கௌசல்யா
உங்கள் கருத்திற்கும், வாழ்த்திற்கும் ரொம்ப நன்றிங்க. :)
@கரிகாலன்
உங்களின் கருத்திற்கு மிக்க நன்றிங்க :)
@K . S . Muthubalakrishnan
Thanks for the comment. Hope you find that post too. :)
@மாலதி
கருத்திற்கும், உங்கள் வாழ்த்திற்கும் ரொம்ப நன்றிங்க :)
@விடிவெள்ளி
கருத்திற்கு மிக்க நன்றிங்க :)
@இராஜராஜேஸ்வரி
என்னை அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றிங்க.
பார்த்தேன்.. சந்தோசமா இருந்தது. :)
@paru74
ஒரு வழியா.. கமெண்ட் போட தெரிஞ்சாச்சு போல.. தேங்க்ஸ் மா. :)
@ஜலீலா கமல்
ஆமாங்க சரியா சொன்னிங்க. கருத்திற்கு நன்றிங்க :)
@நந்தினி
தேங்க்ஸ் டா :)
@சிவா
ரொம்ப தேங்க்ஸ் சிவா. உங்கள் கருத்தில் இருந்த, கனிவிற்கு நன்றி :)
@அம்பாளடியாள்
உங்க மனவலி என்னன்னு எனக்கு தெரியல.. ஆனா. அது சரியாகனும்னு அந்த ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். வருகைக்கு நன்றி
@dineshar
உங்களின் கருத்திற்கு ரொம்ப தேங்க்ஸ் :)
@விடிவெள்ளி
கண்டிப்பா வரேன்.. லேட் ஆயிருச்சு இருந்தாலும் வரேன். நன்றி அழைப்பிற்கு.
@புலவர் சா. ராமாநுசம்
அய்யா.. உங்களின் கவிதையிலே கருத்தை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி.
மிக்க சந்தோசம். :)
@Paru
என்னடா.. டிசைன் டிசைன்-ஆ ட்ரை பண்றீங்க போல :) தேங்க்ஸ்.
@வலையகம்
மிக்க நன்றிங்க
அருமையான பதிவு.
வாழ்த்துக்கள் அம்மா.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html
அப்பாவை பற்றி உங்களது இந்த பதிவை july 2, 2011-ல் நான் படித்து எனது உணர்வுகளையும் பகிர்ந்துக்கொண்டேன். அதே july 13,2011 -ல் என் தந்தையை இழந்தது வார்த்தையில் சொல்லொலா துயர்வு. அப்பாவின் அருகாமைக்காக ஏங்குகிறோம்.....
nice post about daddy
அருமையான கவிதை.
தங்களின் இந்த கவிதையினை வலைச்சரத்தில் பரிந்துரை செய்துள்ளேன்.
http://blogintamil.blogspot.com/2012/05/blog-post_08.html
உங்கள் அப்பாவைப் பற்றி அருமையாக சொல்லி இருக்கீங்க!
Post a Comment