topbella

Monday, May 23, 2011

உயிரில் கலந்த உறவு...!


உதிரத்தில் உனை ஊற்றி
உன் பெயரை எனில் ஏற்றி
உள்ளார்ந்த அன்பினாலே
ஊமையாய் வலம் வந்தேன்...

எத்தனை திங்கள் என்று
எனக்கேதும் புரியவில்லை
எதிர்பார்க்காமல் என்னால்
இருக்கவும் முடியவில்லை..

நினைத்த மாத்திரத்தில்
கலைத்து விட இது கருவுமல்ல
கசக்கி எறிந்து விடவோ
இது காகிதமும் அல்ல....

நினைவோடும் உயிரோடும்
ஒன்றாகி விட்ட உரு...!
ஏனோ உன் நிம்மதிக்காய்
என்னெதிரில் நீ இருந்தும்
எவரோ போல் நானிருந்தேன்...

என்னை அசைய விடாமல்
எதிர்த்து நிற்கும் காதலிடம்
நான் என்ன சொல்லி
இசையைச் செய்வேன்...

உணர்வில் கலந்த உறவை
உயிராய் மாறி விட்ட திருவை
உனது நிம்மதிக்காய் ஒன்றும்
இல்லாதது போல் இன்று நான்..!


...அன்புடன் ஆனந்தி

19 comments:

தினேஷ்குமார் said...

கவிதை நல்லாருக்கு சகோ ....

எனினும் மனம் கணக்கத்தான் செய்கிறது

r.v.saravanan said...

கவிதை வரிகள் நன்று ஆனந்தி

Anonymous said...

வரிகள் கச்சிதம் ..

தமிழ்வாசி பிரகாஷ் said...

அருமையான கவிதை வரிகள்.

கவி அழகன் said...

நினைத்த மாத்திரத்தில்
கலைத்து விட இது கருவுமல்ல

இது என்ன வரி
கரு அவ்வளவு கீழ்த்தரமாய் போய்விட்டதா

இதை தவிர மற்ற வரிகள் எல்லாம் எனக்கு பிடிச்சிருக்கு

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@யாதவன்

//நினைத்த மாத்திரத்தில்
கலைத்து விட இது கருவுமல்ல

இது என்ன வரி
கரு அவ்வளவு கீழ்த்தரமாய் போய்விட்டதா//

...அப்படி அர்த்தம் இல்லைங்க.. உயிராய் மதிக்க வேண்டிய கருவைக் கூட கலைத்து விடும் அபாயம் உண்டு.. ஆனால் மனதில் தோன்றிய உறவான காதலை கலைப்பது இயலாத காரியம்.. என்ற பொருளில் எழுதினேன். உங்கள் கருத்திற்கு நன்றி :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@தினேஷ்குமார்

...வருகைக்கும், கருத்திற்கும் நன்றிங்க :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@r.v. saravanan

...கருத்திற்கு நன்றிங்க :)


@கந்தசாமி

...கருத்திற்கு நன்றிங்க :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@தமிழ்வாசி

...கருத்திற்கு நன்றி :)

sathishsangkavi.blogspot.com said...

..என்னை அசைய விடாமல்
எதிர்த்து நிற்கும் காதலிடம்
நான் என்ன சொல்லி
இசையைச் செய்வேன்.....

அற்புதமான வரிகள்...

வரிக்கு வரி வார்த்தை விளையாடி இருக்கிறது...

logu.. said...

\\உணர்வில் கலந்த உறவை
உயிராய் மாறி விட்ட திருவை
உனது நிம்மதிக்காய் ஒன்றும்
இல்லாதது போல் இன்று நான்..!
\\

மற்க்க முடியாத வரிகள்.
ந்ன்றி.

சசிகுமார் said...

கவிதை அருமை
தமிழ்மணம்- 7
இன்ட்லி - 11
ஹா ஹா

செந்தில்குமார் said...

"உயிரில் கலந்த உறவு...!"


ஆனந்தி...

உதிரத்தில் உனை ஊற்றிஉன் பெயரை எனில் ஏற்றிஉள்ளார்ந்த அன்பினாலேஊமையாய் வலம் வந்தேன்...
எத்தனை திங்கள் என்றுஎனக்கேதும் புரியவில்லைஎதிர்பார்க்காமல் என்னால் இருக்கவும் முடியவில்லை..

ம்ம்ம்... கலக்குங்க...

Anonymous said...

கவிதை காதலாய்..

கவி அழகன் said...

ஆனந்தி இந்த கருத்தை வாசிபெர்களோ இலையோ தெரியாது ( பிந்திவிட்டது ) காதலை கலைத்தாலும் கருவை கலைக்காத பெண்கள் தான் அதிகம் அதனால் தான் அப்பா பெயர் தெரியா பிள்ளைகள் எண்கள் சமுகத்தில் அதிகம்

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@யாதவன்..

ஹ்ம்ம்.. உங்கள் கருத்திலும் உண்மை இருக்கிறது.

என்னைப் பொறுத்த வரையில் காதலும், கருவும்... இரண்டுமே புனிதமானது தாங்க.

உங்களின் கருத்திற்கு நன்றி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

கவிதையின் ஒவ்வொருவரிகளும் அருமை ஆனந்தி.. ரசித்து படித்தேன்

சித்தாரா மகேஷ். said...

"உதிரத்தில் உனை ஊற்றி
உன் பெயரை எனில் ஏற்றி
உள்ளார்ந்த அன்பினாலே
ஊமையாய் வலம் வந்தேன்...
நினைத்த மாத்திரத்தில்
கலைத்து விட இது கருவுமல்ல
கசக்கி எரிந்து விடவோ
இது காகிதமும் அல்ல...."

ஒவ்வொரு வரிகளும் அருமையாக இருக்கிறது அக்கா........

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சங்கவி
ரொம்ப நன்றிங்க.. ரசித்து கருத்து சொன்னதற்கு..! :)


@logu
உங்க கருத்திற்கு ரொம்ப நன்றிங்க :)


@சசிகுமார்
என்னங்க.. ஆச்சு.. எத்தனை வோட்-ன்னு பார்க்க தான் வந்தீங்க போல.
நன்றிங்க :)


@ஷர்புதீன்
வருகைக்கு நன்றிங்க :)



@செந்தில்குமார்
ஹ்ம்ம்.. ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றிங்க :)



@தமிழரசி
வாங்க தமிழ்.. ரொம்ப நன்றிங்க :)


@நந்தலாலா இணைய இதழ்
மிக்க நன்றிங்க.. வருகிறேன்.. அழைப்பிற்கு நன்றி :)


@தோழி பிரஷா
ரொம்ப நன்றிப்பா... ரசித்து படித்ததில் சந்தோசம்.. :)


@சித்தாரா மகேஷ்
தேங்க்ஸ் சித்தாரா.. :)

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)