topbella

Wednesday, October 13, 2010

அமெரிக்க வாழ்க்கை ....பாகம் 4

அப்புறம் அடுத்து முக்கியமா சொல்ல விரும்பும் விஷயம்.. இங்க உள்ள ஸ்கூல்ஸ். எலிமெண்டரி லெவல் வரைக்கும் ஓரளவு குழந்தைகளை கஷ்டப் படுத்தாத பாடத் திட்டமாகத் தான் இருக்கும்.. இங்கே பள்ளி நேரம்... எலிமெண்டரி ஸ்கூல்க்கு காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரையில்.. ஸ்கூல்ல இருந்து குறிப்பிட்ட தொலைவில், நம்ம வீடு இருந்தால், ஸ்கூல் பஸ் வரும்.... இங்கே பள்ளிகளில், வாலண்டீரிங் (volunteering ) வொர்க் இருக்கும்.. அதாவது, பெற்றோர் தங்களால் முடிந்த நேரத்தில் அந்த வகுப்பிற்கோ, அல்லது பள்ளிக்கோ உதவி செய்றது. நான் கடந்த 3 வருஷமா என் குட்டீஸ் ஸ்கூல்-ல லைப்ரரி, மற்றும் வகுப்பில் ஹெல்ப் பண்றேன்....இதுல என்ன வசதின்னா.. வகுப்பில் என்னென்ன நடக்கிறதுன்னு நாமும் தெரிஞ்சிக்கலாம். நம்ம குழந்தைக்கும் நம்ம உதவி செய்றதுல சந்தோசமா இருக்கும். கிளாஸ் ரூம்-இல் ஹெல்ப் பண்ணும் போது, குட்டி குட்டி குழந்தைகள்.. "ஹாய்...."னு சொல்லி அன்பா "hug " பண்றது அழகா இருக்கும். அவங்களுக்கு எதாச்சும் சொல்லித் தரும் போது, ரொம்ப தீவிரமா கேள்வி கேக்கிறது சிரிப்பா வரும்.. நண்டு மாதிரி இருந்துட்டு கேக்குற கேள்வி எல்லாம்....செம காமெடியா இருக்கும்.. எப்படி தான் இப்புடி தின்க் பன்னுதுகளோன்னு.." இருக்கும். ஒரு குழந்தை .. என்கிட்டே.. "யூ ஆர் லுக்கிங் லைக் அபி..!" அப்படின்னு சொல்லுச்சு. (ஆமாம்மா.. நா தான் என் மக மாதிரியே இருக்கேன்..னு சொன்னேன்..) அதை மழலையில் கேட்பதற்கு அழகா இருக்கும். அதிலும் சில குட்டீஸ்.. "ஹாய் மாம்..." னு சொல்லும் பாருங்க.. அப்போ அடுத்த குட்டி, "ஷி இஸ் நாட் யுவர் மாம்...., ஷி இஸ் காயூ'ஸ் மாம்..." னு விளக்கம் சொல்லும். நல்லா இருக்குங்க அந்த பீல்.


ஸ்கூல் பஸ்-இல் டிரைவர், சின்ன பசங்களை முன் வரிசையில் உக்கார வச்சு, வீட்டில் விடும் போதும், பாரன்ட்ஸ் பஸ்-ஸ்டாப்பில் இருந்தா மட்டும் தான் இறக்கி விடுவாங்க. அதே போல, இங்க பள்ளிகளில் முன் பின் தெரியாதவங்க அவ்ளோ ஈஸியா குழந்தைகளை அப்ப்ரோச் பண்ண முடியாது. யார் வந்தாலும், போனாலும் பிரான்ட் ஆபீஸ்-ல எழுதிட்டு தான் போக முடியும். இங்கே பள்ளிப் படிப்பு முழுவதும், இலவசம் தான். நாம இங்கே கட்டுகிற வரிப் பணத்தில் தான், பள்ளிகள், நூலகம், மற்றும் இதர பலவும் நடக்கிறது. அது மட்டும் இல்லாம, பாடப் புத்தகம்...அது இதுன்னு எதற்கும் பணம் வசூலிப்பதும் இல்லை. ஸ்கூல் தொடக்கத்தில் ஒரு சில பொருட்கள் கேட்பதோடு சரி.. பிக்கல், பிடுங்கல் இல்லாம இருக்கும்..என் பொண்ணு, முதலில் ஸ்கூல் தொடங்கி கொஞ்ச நாளா வீட்டுக்கு வரும் போது, பஸ்ல இருந்து இறங்கினதும், என் கிட்ட ஒரு பேப்பர் குடுப்பா... என்னன்னு பாத்தா.. ரெண்டு பொம்மை வரைஞ்சு அம்மா, காயு அப்படி எழுதி இருப்பா.. ஒரு ஹார்ட் படம் போட்டு, ஐ லவ் அம்மா-ன்னு எழுதி இருப்பா.. எனக்கு அத பாத்ததும், ரெம்ம்ம்ம்ம்ம்ப பெருமையா இருக்கும்.. கொஞ்சம் நாள் ஸ்கூல் பழகினதும், திரும்பவும் அதே போல பேப்பர் வரும்.. ஆனா இந்த முறையும் அதுல ரெண்டு பொம்மை இருக்கும், அதே ஹார்ட் படம்..... அதே ஐ லவ் ........... ஆனாஆஆஅ அம்மாக்கு, பதில் மிஸ். மெல்செர்ட்-னு இருக்கும்.. அதாங்க என் பொண்ணோட டீச்சர்.. ஹ்ம்ம்.. சரி ஏதோ, ஒண்ணு மண்ணா இருந்து ஒழுங்கா படிச்சா சரிதான்.. என்ன சொல்றீங்க??

இங்கே பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது என்பதே கிடையாது.. இவ்ளோ ஏன்?? பெத்த நாமளே அவங்கள அடிச்சோம்னு வெளில தெரிஞ்சா ப்ராப்ளம் தான். இங்க 911 னு ஒரு நம்பர் ஒண்ண, இந்த புள்ளைங்க கிட்ட சொல்லிகுடுத்துர்றாங்க.. (நாம ரொம்ப அலெர்ட்டா இருக்க வேண்டியதா இருக்கு ) எப்போ வேணுமானாலும், பிரச்சனை  என்றால் உடனே அந்த நம்பருக்கு போன் செய்யலாம்... வெளியில் பார்க்கும் சின்ன குழந்தைகளை... நம் இஷ்டத்திற்கு எல்லாம் தொட்டு, கொஞ்சுவதோ பேசுவதோ கூடாது.. ஒரு வகையில் இந்த கட்டுப்பாடு, ரொம்பவும்  அவசியமான ஒண்ணுன்னு தான் எனக்கு தோணுதுங்க.. முன்னப்பின்ன தெரியாதவங்க குழந்தைகளை நெருங்க முடியாது பாருங்க.. 

அப்புறம், கிளாஸ்-ல "ரூம் மாம்" னு ஒரு கான்செப்ட் இருக்கு. (அப்ப்டின்னா... ரூம்ல  இருக்கற எல்லாருக்கும் மாம்-ஆ ன்னு தத்துப்பித்துன்னு கேக்க கூடாது)  அது என்னன்னு கேட்டீங்கன்னா.. (ஹலோ.. யாராவது கேளுங்களேன்....) பள்ளித் தொடக்கத்தில் யாராச்சும் ஒரு பேரண்ட் "ரூம் மாம்" ஆக நியமிக்கப்படுவாங்க. போன வருஷம், நா தான் ரூம் மாம்-ஆக இருந்தேன்.. எப்படி ஆனேன்ன்னு அந்த சோக கதையை நீங்க தயவு செஞ்சு கேட்டாகணும்.... அதாகப்பட்டது, என் மகளின் வகுப்பில், பள்ளி தொடங்கியும் யாரும் ரூம் மாம்-ஆக வாலண்டீர் பண்ணலன்னு அவளோட  டீச்சர் சொன்னாங்க.. உடனே நம்ம தான் இருக்கமே... உங்களுக்கு யாரும் முன்வரலன்னா என்னைக் கூப்பிடுங்க-ன்னு சொல்லிட்டு வந்தேன்.. சரியா 2 நிமிஷத்திலேயே அவங்க டீச்சர் கிட்ட இருந்து ஈமெயில்... "ஹே...வி ஹாவ் அ வாலண்டியர் " னு.....!!! ஒஹ்ஹ்ஹ... ஒகே.... ஓகே.. இப்படி தான் நாமளா போயி.. தலைய குடுக்கணும்.. (ஒரு பேச்சுக்கு சொன்னா.. பய புள்ளைங்க இப்படியா சீரியஸ்-ஆ எடுத்துக்கறது)

வருஷ தொடக்கத்தில் ஒரு ஒரு குழந்தையிடமும், பார்ட்டி மணின்னு 8 டாலர் வசூல் பண்ணுவாங்க.  அந்த பணம் வைத்து தான், வருஷம் முழுசும் வர செலிப்ரேஷன் டைம்-ல கிளாஸ் ரூம்-இல் பார்ட்டி வைக்க சாப்பாடு மெனு, ஒண்ணு ரெண்டு கேம்ஸ், குட்டிஸ்கு ஒரு கிப்ட் எல்லாம் ஏற்பாடு பண்ணனும்..எல்லா பேரன்ட்ஸ்-ம் சேர்ந்து ஆளுக்கு ஒரு டிஷ் செய்து கொண்டுவந்து, பார்ட்டி அட்டென்ட் பண்றது நல்லா இருக்கும்.. (அதெல்லாம் சரி தான்...... ஆனா அந்த ஏற்பாடு பண்றது, கிப்ட் வாங்கறதுக்கு உள்ள அலைச்சல்...இதெல்லாம் கொஞ்சம் லைட்டா மண்ட காயும்... அவ்ளோ தான்.. வேற ஒன்னும் இல்லை...) இந்த படம், கிறிஸ்துமஸ் டைம்-ல நான் ஏற்பாடு செய்த மெனு..!(.......தொடரும்)

(படம்: நன்றி கூகிள்)

70 comments:

Sanjay said...

//"யூ ஆர் லுக்கிங் லைக் அபி..!" அப்படின்னு சொல்லுச்சு. (ஆமாம்மா.. நா தான் என் மக மாதிரியே இருக்கேன்..னு சொன்னேன்..) //
ஹா ஹா சோ கியூட்....

//"ஷி இஸ் நாட் யுவர் மாம்...., ஷி இஸ் காயூ'ஸ் மாம்..." //
பயபுள்ளைங்க விலாட்டா இருந்தாலும் அல்லாட்டா தான் இருக்காங்க :D :D

//நல்லா இருக்குங்க அந்த பீல்//
ஹ்ம்ம் நல்லா தான் இருக்கு....

//ஒரு பேச்சுக்கு சொன்னா.. பய புள்ளைங்க இப்படியா சீரியஸ்-ஆ எடுத்துக்கறது)//
இத தான் நம்ம டக்லஸ் அண்ண அடிக்கடி சொல்லுவாரு..ஆப்பு அங்கங்க......:D :D

சூப்பர்...கண்டிநியூ....!!!

'பரிவை' சே.குமார் said...

குட்டீஸ் கூட பழகுறது... அவங்க பேச்சை கேட்கிறதெல்லாம் சந்தோஷமானவை...
அந்த அனுபவத்தை அழகாக பகிர்ந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் சகோதரி.

நானானி said...

நல்லாருந்துது. நான் கூட கலிபோர்னியா சென்ற போது ஒரு ‘மாம்’ கூட விசிட்டராகப் போயிருந்தேன். ரொம்ப சுவாரஸ்யமாயிருந்தது. குழந்தைகளோடு நேரம் செலவளிக்க கசக்குமா என்ன?

Menaga Sathia said...

mm interesting..antha party menus super pa...

Anisha Yunus said...

ஹ்ம்ம்....இன்னும் சொல்லுங்க...எனக்கே ஜுஜ்ஜூவை சீக்கிரம் பள்ளிக்கூடத்துல சேர்த்துரலாமான்னு தோணுது!!

:))

Anonymous said...

ம்.. சூப்பர்...
//ஹலோ.. யாராவது கேளுங்களேன்....//
நாங்க கேட்டுக் கிட்டு தான இருக்கோம்.. அதுக்குள்ள தூங்கிட்டோம்னு நினைச்சிட்டீங்களா ;)

//ஆனாஆஆஅ அம்மாக்கு, பதில் மிஸ். மெல்செர்ட்-னு இருக்கும்.. //
எத்தன நாள் தான் உங்கலேய சொல்றது ஒரு சேஞ்சுக்கு.. :))

எல் கே said...

கடைசி படத்துல இருக்கற ஐடம்ச எனக்கு பார்சல் பண்ணுங்க ஆனந்தி

சைவகொத்துப்பரோட்டா said...

ம்...நம்ம ஊர் ஸ்கூல் எல்லாம், பீஸில் மட்டுமே குறியா இருக்கு.

சௌந்தர் said...

இங்கே பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது என்பதே கிடையாது.. இவ்ளோ ஏன்?? பெத்த நாமளே அவங்கள அடிச்சோம்னு வெளில தெரிஞ்சா ப்ராப்ளம் தான்.///

பார்த்து இருங்க உள்ளே வைத்து விட போறாங்க


அது என்னன்னு கேட்டீங்கன்னா.. (ஹலோ.. யாராவது கேளுங்களேன்....)///

மச்சி நீ கேளு..மச்சி நீ கேளு சொல்லுங்க வேற வழி(வலி)

ஹே...வி ஹாவ் அ வாலண்டியர் " னு.....!!!ஒஹ்ஹ்ஹ... ஒகே.... ஓகே.. இப்படி தான் நாமளா போயி.. தலைய குடுக்கணும்..////

அதுக்கு தான் அமைதியா இருக்கணும்

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமையான பகிர்வு... பயணங்கள் தொடரட்டும்...

thiyaa said...

நீர வந்து பாக்கணும் போல இருக்கு

Anonymous said...

interesting post da...

கவி அழகன் said...

சுவாரிசியமான பயணம் கலக்குங்க

சி.பி.செந்தில்குமார் said...

ஓ,நீங்க ஃபாரீனா?் ம் ம் நடத்துங்க.மழலை என்றாலே மகிழ்ச்சிதான்,அது பற்றிய பகிர்வும் நெகிழ்ச்சிதான்.

sathishsangkavi.blogspot.com said...

கலக்கல் பயணம்...

அருண் பிரசாத் said...

நல்ல பகிர்வு + புது விஷயங்கள்

சசிகுமார் said...

நம்ம ஊரு லாரி போல இருக்கு

பவள சங்கரி said...

அருமை ஆனந்தி.......இதேப் பதிவை நான் போட வேண்டும் என திட்டமிட்டிருந்தேன். சமீபத்தில் அமெரிக்கா சென்று திரும்பியபோது என்னை மிகவும் கவர்ந்த விடயங்களுள் இதுவும் ஒன்று......அழகாகச் செய்திருக்கிறீர்கள்.......வாழ்த்துக்கள்.

Unknown said...

நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

Madhavan Srinivasagopalan said...

படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது..

மின்மினி RS said...

ரொம்ப இன்ட்ரஸ்டா இருக்கு.. மேலும் தொடருங்கள்.

Unknown said...

ரொம்ப அருமையா எழுதியிருக்கு , இதை நான் மலையாளத்திலே மொழி பெயர்த்து என்னுடைய ப்ளோகில் பிரசுரிக்க விரும்புகிறேன். அதற்க்காக உங்கள் அனுமதியை நாடுகிறேன். உங்களையும் மலையாள வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தவும் விரும்புகிறேன்.

இப்படிக்கு ,
அன்புடன்,
கே.பி.சுகுமாரன் , மலையாளம் ப்லோகர்.

kpsuku@gmail.com

இளங்கோ said...

Nice.

Unknown said...

ஸ்கூல் அனுபவங்கள், அருமை!

அந்தச் சின்னப் புள்ளைங்க கேக்குறதுக்கு அவ்வளவு சீக்கிரம் பதில் சொல்ல நம்மால முடியாது. சுத்திச் சுத்திக் கேக்குங்க!!

வாலண்டியரா 'மாட்டுனோம்னா' கொஞ்சம் கஷ்டம்தான்!

பொதுவா, அமெரிக்க ஆரம்பப் பள்ளிப் படிப்பு ரொம்ப 'லைட்'ங்குறதும், ரொம்பவும் கண்டுக்காம ஓவர் சுதந்திரம் குடுக்குறாங்கங்குறதும்... ஒரு குறைதான். ஆனால், பள்ளியிறுதிப் படிப்பில் போட்டு வறுத்து எடுக்குறாங்க. இந்தக் காரணத்தால்தான் நெறைய ட்ராப் அவுட்ஸ்ங்குறதும்...என்னோட தாழ்மையான கருத்து!

செல்வா said...

// "ஹாய் மாம்..." னு சொல்லும் பாருங்க.. அப்போ அடுத்த குட்டி, "ஷி இஸ் நாட் யுவர் மாம்...., ஷி இஸ் காயூ'ஸ் மாம்..." னு//

படிக்கரக்கே நல்லா இருக்குங்க ..!!

செல்வா said...

//பித்துன்னு கேக்க கூடாது) அது என்னன்னு கேட்டீங்கன்னா.. (ஹலோ.. யாராவது கேளுங்களேன்....)//

சரி சரி .. சொல்லுங்க நான் கேக்குறேன் ..!!

செல்வா said...

உண்மைலேயே நல்லா இருக்குங்க . தொடர்ந்து எழுதுங்க .,
நாங்களும் அமெரிக்க வாழ்க்கைய பத்தி தெரிஞ்சிக்கிறோம் ...!!

அகல்விளக்கு said...

wow.... interesting....

ம.தி.சுதா said...

தங்கள் பகிர்வ நல்லாயிரக்க எங்களுக்கம் புது அனுபவம் தருகிறது.. நன்றிகள்

சுந்தரா said...

சுவாரசியமான பதிவு.

பகிர்வுக்கு நன்றி ஆனந்தி!

Gayathri said...

super nalla iruku rombha cutea vum irukku

Gnana Prakash said...

Arumai.........

மோகன்ஜி said...

ஆனந்தி! துள்ளல் நடை!படிக்க உற்சாகமாய் இருக்கிறது.. இன்னும் எழுதுங்க!!

மோகன்ஜி said...

ஆனந்தி! துள்ளல் நடை!படிக்க உற்சாகமாய் இருக்கிறது.. இன்னும் எழுதுங்க!!

சிவராம்குமார் said...

குழந்தைகளோட உலகமே தனிதான்! அந்த அழகும் அந்த அனுபவமும் கோடி கொட்டி கொடுத்தாலும் இனையில்லாதது!!!

ISR Selvakumar said...

//
நாம இங்கே கட்டுகிற வரிப் பணத்தில் தான், பள்ளிகள், நூலகம், மற்றும் இதர பலவும் நடக்கிறது. அது மட்டும் இல்லாம, பாடப் புத்தகம்...அது இதுன்னு எதற்கும் பணம் வசூலிப்பதும் இல்லை. ஸ்கூல் தொடக்கத்தில் ஒரு சில பொருட்கள் கேட்பதோடு சரி.. பிக்கல், பிடுங்கல் இல்லாம இருக்கும்..
//
ம்ம்ம்ம் இந்த மாதிரி இந்தியாவிலயும் நடக்கணும்னு ஏக்கமா இருக்கு.

Volunteering and Room Mom பற்றி என் மகள் படிக்கும் பள்ளியிலும் யோசனை சொல்லலாமே என்று சிந்திக்க ஆரம்பித்திருக்கிறேன்.

இது போன்ற கட்டுரைகளின் பலன் இதுதான்.

பி.கு
தங்கை உன் எழுத்து நடை செம கல..கல..சூப்பர்!

Anonymous said...

பயணங்கள் தொடரட்டும்.
பதிவுகளும் கூட.

Geetha6 said...

very nice!!

Ramesh said...

அருமையா எழுதியிருக்கீங்க ஆனந்தி..நான்தான் விருந்துக்கு கொஞ்சம் லேட்டா வந்துட்டேன் போல..

Starjan (ஸ்டார்ஜன்) said...

நகைச்சுவையுடன் சுவாரசியமா அமெரிக்கா வாழ்க்கையை பற்றி அழகாக சொல்லும்போது எங்களுக்கும் அமெரிக்கா வரணும்போல இருக்கு ஆனந்தி..

மேலும் தொடருங்கள்.. படிக்க ஆவலாக இருக்கிறது.

ஜெய்லானி said...

:-))))

மங்குனி அமைச்சர் said...

நைஸ் எச்பீரியன்ஸ்

Akila said...

very nice....

r.v.saravanan said...

பயணங்கள் தொடரட்டும்

dheva said...

//யாராவது கேளுங்களேன்....//

அட சொல்லுங்க.. கேட்டுகிட்டுதானே இருக்கோம்....!

நல்லாயிருக்கு ஆனந்தி.. ! இதைப் படிக்கும் போது 1985 களில் எனது ஆரம்பப் பள்ளி வாழ்க்கை நினைவுக்கு வருது. ஆன இந்த மாதிரி இருந்துச்சான்னா இல்லை...

இன்னும் இந்தியப் பள்ளிகளில் (அரசு பள்ளிகள் சொல்றேன்) ஓரளவேனும் குழந்தைகளை டேக் கேர் பண்ணி அன்பா சொல்லிக் கொடுக்குற மெத்தட் வரணும் (இருக்குன்னு யாராச்சும் சொன்னீங்கன்னா.. ஓ.கே..சார் ...ரொம்ப நல்லது)

இந்தியாவில கூட நிறைய பள்ளிகள் இருக்கு ஆனா அது மேல்தட்டு வர்க்கத்துக்கு மட்டும் சொந்தமானதா இருக்கு....

நான் படிச்ச ஸ்கூல் காலங்கள் எல்லாம் டீச்சர்ஸ்னாலே பயம்... பிரம்பும் முட்டி போடச்சொல்லி கட்டும் டின்னும்தான் நினைவுக்க் வருது....

அன்பான சூழல்ல கண்டிப்பான முறையில் இருக்கணும் கல்வி...! சரி தனி பதிவு போட வேண்டிய டாபிக் இது....

கமெண்ட் போட வந்தா போட்டுடு போய்கிட்டே இருன்னு யாரோ முறைக்கிறாங்க....

அப்போ வர்ர்ர்ர்ட்டா!

அன்புடன் மலிக்கா said...

அனுபவத்தை அழகாக பகிர்ந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் ஆனந்தி..

அப்படியே பார்சல் அனுப்பிச்சா நாங்க டேஸ்ட் பார்த்து சொல்லுவோம்..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@சஞ்சய்
ஆமா ஆமா ரொம்ப அலெர்ட் தான்...
உங்கள மாதிரியே தான்... :-)

ஹா ஹா ஹா... அதே அதே..
நாமளா போய் உக்காந்த்துக்கறது... :D :D :D

தேங்க்ஸ் சஞ்சய்.. :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@சே.குமார்
சரியா சொன்னிங்க..
உங்க வருகைக்கு நன்றிங்க.. :-)
@@நானானி
கரெக்ட் தான்... உண்மையில் நல்ல பொழுது போகும்.
நன்றிங்க..

@@Mrs .Menagasathia
தேங்க்ஸ் மேனகா... :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@அன்னு
ஹா ஹா.. சொல்றேன் சொல்றேன்...
தேங்க்ஸ் அன்னு..
@@Balaji saravana
சரி ரைட்டு.... நீங்க கேட்டா சரி தான்...
ஹா ஹா... அப்படி தான் போல...இருக்கு
நன்றிங்க. :-)
@@LK
சாரி... அது கிண்டர்கார்டன் பசங்களுக்கு...!
நன்றிங்க :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@சைவகொத்துப்பரோட்டா
ஹ்ம்ம்.. மாற்றம் வந்தால் நல்லா இருக்கும்
நன்றிங்க.. :-)

@@சௌந்தர்
சரிங்க சார்..
அவ்ளோ வருத்தப்பட்டு ஒன்னும் கேக்க வேணாம்...
சரி தான்... எல்லாம் ஒரு உதவும் மனப்பான்மை தான்...
நன்றி சௌந்தர்..:-)
@@வெறும்பய
ரொம்ப நன்றிங்க.. :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@தியாவின் பேனா
ஆமா... நல்ல அனுபவமா இருக்கும்..
நன்றிங்க.. :-)@@தமிழரசி
ரொம்ப தேங்க்ஸ் :-)
@@யாதவன்
ரொம்ப நன்றிங்க.. :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@சி. பி. செந்தில்குமார்
மகிழ்ச்சி..நெகிழ்ச்சி அசத்துறீங்க போங்க..
ரொம்ப நன்றிங்க.. :-)
@@சங்கவி
ரொம்ப தேங்க்ஸ்.. :-)

@@அருண் பிரசாத்
ரொம்ப நன்றிங்க.. :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@சசிகுமார்
ஹா ஹா ஹா...
லாரி கலர் தான்.. லாரி இல்ல...
நன்றிங்க.. :-))
@@நித்திலம்-சிப்பிக்குள் முத்து
ஓ அப்படியா?
ரொம்ப சந்தோசம்..
உங்க கருத்துக்கு நன்றிங்க.. :-)

@@swetha
தேங்க்ஸ் ஸ்வேதா :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@Madhavan
ரொம்ப நன்றிங்க.. :-)

@@மின்மினி RS
ரொம்ப நன்றிங்க :-)

@@ കെ.പി.സുകുമാരന്‍ അഞ്ചരക്കണ്ടി
கண்டிப்பாக செய்யுங்கள்..
உங்க வருகைக்கு நன்றி.. :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@இளங்கோ
தேங்க்ஸ் :-)

@@தஞ்சாவூரான்
ஆமாங்க... சில நேரம் நமக்கே ஷாக்கிங்-ஆ கேள்வி எல்லாம் வரும்..
ஹா ஹா ஹா.. (சந்தோசம் பாதி.... மண்ட காயுறது மீதி )
கரெக்ட் தான்.. ஆனா.. இவங்க மனப்போக்கு, இளம் பருவத்தில் அதிக உழைப்பு இல்லாமல் அவர்கள் வயதை என்ஜாய் பண்ண விட்டு, மிடில் ஸ்கூலில் பிடிப்பாங்க..
ஒரு வகையில் நல்லது.. ஒரு வகையில் திடீர்னு அதிக உழைப்பு திணித்தல் சரி இல்லாம போகுது.. (அதனால தான், பெரும்பாலான இந்தியன் பெற்றோர்கள் வீட்டிலயே சொல்லிக் குடுத்து விடுகிறோம்)
உங்க வருகைக்கு நன்றிங்க.. :-)

@@ப. செல்வக்குமார்
ஹ்ம்ம்.. ரொம்ப தேங்க்ஸ் :-)

ஹா ஹா .. கேக்குறதுக்கு நன்றி..
சந்தோசங்க.. தொடர்கிறேன்.. :-))
வருகைக்கு நன்றி செல்வா..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@அகல் விளக்கு
ரொம்ப தேங்க்ஸ் :-)
@@ம. தி. சுதா
ரொம்ப சந்தோசங்க...
நன்றி.. :-))

@@சுந்தரா
ரொம்ப நன்றிங்க. :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@Gayathri
ஹ்ம்ம்.. தேங்க்ஸ் பா... ;-))

@@Gnana Prakash
ரொம்ப தேங்க்ஸ்.. :-)


@@மோகன்ஜி
ரொம்ப நன்றிங்க.. :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@சிவா
ரொம்ப சரியா சொன்னிங்க...
வருகைக்கு நன்றிங்க :-)
@@r . selvakkumar
எனக்கும் தான் அண்ணா..
ஹ்ம்ம்.. கண்டிப்பா சொல்லுங்க.
ரொம்ப சந்தோசம்.... :-))

@@இந்திரா
ரொம்ப நன்றிங்க.. :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@Geetha6
தேங்க்ஸ் :-)

@@பிரியமுடன் ரமேஷ்
அப்படி எல்லாம் ஒன்னுமில்லங்க..
ரொம்ப தேங்க்ஸ்.. :-))
@@Starjan (ஸ்டார்ஜன்)
ஓ.. வாங்களேன்... :-)
ரொம்ப நன்றிங்க

@@ஜெய்லானி
தேங்க்ஸ் ஜெய் :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@மங்குனி அமைச்சர்
ரொம்ப தேங்க்ஸ் :-)
@@Akila
தேங்க்ஸ் அகிலா :-)

@@r . v . saravanan
ரொம்ப நன்றிங்க.. :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@தேவா
ஹா ஹா ஹா... சரி சரி கேளுங்க..
எஸ், நீங்க சொல்றது சரி தான்..
அன்பா கேர் பண்ணி சொல்லித்தரலாம் தான்.. :-)
எனக்கும் அதே நிலைமை தான்..
முட்டி....போடுறது தான்... (கிளாஸ் வெளில அப்படி நின்னா மானமே போகும்)
யாரும் முறைக்கலை... :-)
ரொம்ப தேங்க்ஸ்..


@@அன்புடன் மலிக்கா
ரொம்ப தேங்க்ஸ்...
கண்டிப்பா பார்சல் பண்றேன்.. ;-))

நெல்லை விவேகநந்தா said...

நீங்க சொல்றத பார்த்தா அமெரிக்காவுக்கே வந்துவிடலாம் போல் இருக்கே.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அழகான அனுபவங்கள் ஆனந்தி.. :)

Thenammai Lakshmanan said...

மெனுவில என்னவெல்லாம் இருக்கு ஆன்ந்தி..:))

சி.பி.செந்தில்குமார் said...

6 நாள் அகியும் அடுத்த பதிவு போடலையா? ஏன்?பிஸியா?

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@நெல்லை விவேகநந்தா
கண்டிப்பா வரலாமே.. உங்க வருகைக்கு நன்றிங்க.. :-))

@@முத்துலட்சுமி/ muthuletchumi
ரொம்ப நன்றிங்க :-))

@@தேனம்மை லக்ஷ்மணன்
ஹா ஹா... வாங்க அக்கா..
கப் கேக், ப்ரவ்னி, சீஸ், கிராக்கர், குக்கீஸ், க்ரேப்ஸ், ஆரஞ்சு, ஆப்பிள்..... ஜூஸ்.... இதர சில ஐய்டம்ஸ்.... :-))
@@சி. பி. செந்தில்குமார்
வாங்க செந்தில்... ஆமாங்க.. கொலு பிஸி..
இன்னிக்கு போட்டாச்சு.. நன்றி.. :-))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஹா ஹா ஹா... தலை குடுத்த கதை எல்லாம் சூப்பர்... அது நம்ம கூட பொறந்த ஒன்னாச்சே ஆனந்தி... அபி மாம், காயு மாம்... குட் குட்...

எனக்கும் இங்க ஸ்கூல் சிஸ்டம் ரெம்ப பிடிக்கும்... அனாவிசயமா பணம் பிடுங்கரதில்ல...

ஆனா நம்ம புள்ளைய நாமளே அடிக்க கூடாதுங்கறது கொஞ்சம் ஓவர் தான்... ஹா ஹா... நம்மள எல்லாம் அடிக்காம வளத்தி இருந்தா என்ன ஆகறது... அந்த எண்ணத்துல சொன்னேன்... ஹா ஹா

It is great to know that you volunteer at school...great work... keep it up

என்னது நானு யாரா? said...

தகவல்கள் அருமையாக இருக்கு ஆனந்தி! சுவாரஸ்யமாக இருந்ததுப் பதிவு! வாழ்த்துக்கள்

மதுரை சரவணன் said...

புகைப்படங்களில் பள்ளியின் வகுப்பறைகள் மிகவும் கல்ர் புல்லா இருக்கு... இது ஏன் நம் நாட்டில் முடியலா...? நல்ல பகிர்வு.. வாழ்த்துக்கள். பெற்றோர்கள் பள்ளியில் உதவியாக இருப்பது மிகவும் அருமை..

Anonymous said...

ஹி ஹி. இதுக்குத் தான் வாய டைட்டா மூடிட்டு இருக்கனும். ஆனாலும், குழந்தைகளுக்கு செய்வது நல்லாத்தானே இருக்கும். அது சரி, அந்த மஞ்சள் க்யூப்ஸ் என்ன. டேக்கிஸ் அல்வாவா? அத மட்டும் ஒரு பார்சல் அனுப்புங்க.

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)