டிசம்பர் 06, 2025
சனிக்கிழமை மதியம் 1:00-3:00 மணி வரை
மிச்சிகனில் திரு. இரா. கள்ளப்பிரான் (இராகன்) அவர்களின் "உள்ளம் இரண்டும் ஒன்றும்" புதினம் வெளியிடப்பட்டது.
முனைவர் கவிஞர் பாலநேத்திரம் அவர்கள் நூலை வெளியிட்டு சிறப்புரை வழங்கினார்.
கவிஞர் எழுத்தாளர் நெல்லை அன்புடன் ஆனந்தி அவர்கள் முதல் பிரதியை பெற்றுக்கொண்டு சிறப்புரை வழங்கினார்.
திரு. அனந்தபத்மநாபன் வாழ்த்துரை வழங்கினார்.
சுமார் 70 பேருக்கு மேல் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாட்டாளர்கள் திரு. ராம், திருமதி. கோமதி, கவிஞர் புதுயுகன், திருமதி. அரிணி ஆகியோருக்கு வாழ்த்துகள்.
இலக்கியத்திற்காக இணைந்த இக்கூட்டம் நேர்த்தியான முறையில் சிறப்பாக நடைபெற்றது.
நேரக்காப்பை சரியான முறையில் கடைபிடித்து நிகழ்ச்சி சரியான நேரத்தில் நிறைவு செய்யப்பட்டது.
சுவையான மதிய உணவும் பேக் செய்யப்பட்டு கொடுக்கப்பட்டது.
இதுபோன்ற நிகழ்வுகள் மனதிற்கு நிறைவையும் மகிழ்ச்சியையும் தருகிறது.
பின்புலமாக இணைந்து உழைத்த விழாக்குழுவினர் அனைவருக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துகள்.
~ நெல்லை அன்புடன் ஆனந்தி
விழாப் புகைப்படங்கள் சில:
விழா குறித்த தினமலர் செய்தி:
https://www.dinamalar.com/world-news-nri-ta/united-states/tamil-news/tamil-book-launch-in-michigan/18850விழாவின் காணொளிகள் சில:



1 comments:
சிறப்பு
Post a Comment