topbella

Friday, January 14, 2011

திரும்பிப் பார்க்கிறேன்....! (தொடர் பதிவு)

இந்த தொடர் பதிவிற்கு என்னை அழைத்த தோழி கௌசல்யா-விற்கு, நன்றி..! 2010 -ல் நான் செய்த பெரிய சாதனை (ஹி ஹி.. உங்களுக்கெல்லாம் சோதனைன்னு சொல்லலாம்) இந்த பதிவுலகிற்கு வந்தது தாங்க...! அதில் உண்மையான உறவாகவும், நட்பாகவும்...நிறைய பேர் கிடைச்சிருக்கீங்க... ரொம்ப நன்றி..!

அப்புறம் சென்ற வருடம் நடந்த சில, பல விசயங்களை சொல்றேன்..!

லக்ஷ்மன் ஸ்ருதி கான்செர்ட்
இங்க உள்ள தமிழ் சங்கத்தில் நடந்த கான்செர்ட்-டிற்கு பிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து போனோம்.. அங்கே கிருஷ், மகதி, மாலதி லக்ஷ்மன் இவங்களை எல்லாம் சந்தித்தது.....அப்புறம் முதல் தடவையா டான்ஸ் எல்லாம் வேற ஆடினோம்.. (ஹி ஹி.. அதப் பாத்து எத்தனை ஜீவன் பாதிக்கப் பட்டாங்களோ.. தெரியல.. இன்னும் புள்ளி விவரம் கைக்கு வரலை.. சரி அதை விடுங்க.. அது நடந்து முடிந்த கதை.. இப்போது தொடங்கிய பிரச்சினைக்கு வாரும்.. அச்சச்சோ.... ஒன்னுமில்லைங்க.. நேத்து திருவிளையாடல் படம் பார்த்தேன்.. அந்த பாதிப்பு தான்... நீங்க ஒண்ணும் பயப்படாதீங்க.. )

சின்னக் குயில் சித்ரா கான்செர்ட்
இது நடந்தது ஒரு மலையாள சங்கத்தில்... (அதெல்லாம் இருக்கட்டும்மா.. நீ அங்க போயி என்ன பண்ணினன்னு தானே கேக்க நினச்சீங்க...) எல்லாம் ஒரு இசை ஆர்வம் தான்..  சித்ராவின் இனிமையான குரலில்.. நிறைய மலையாள பாட்டு பாடினாங்க.. இசைக்கு ஏது மொழி? நாங்களும் ரசித்தோம்.. அப்புறம் சித்ரா, அவங்க.. இங்க யாராச்சும் தமிழ் ரசிகர்கள் இருக்கிங்களான்னு கேட்டாங்க.. உடனே... எச்ச்சச்ச்ச்சச்ச்ச்ஸ் ன்னு.... விசில் அடிச்சு ஆர்ப்பாட்டம் பண்ணியாச்சு. அதுக்கு பின்னாடி நிறைய தமிழ் பாட்டு பாடினாங்க. ரொம்ப சந்தோசமா இருந்தது..!

தமிழ் சங்கம்.. கதம்பம் பத்திரிக்கை
நான் எழுதிய கவிதைகள்... "என்னுயிர் நீயன்றோ....", "எனக்காய்ப் பிறந்தவனே.." மற்றும் "பாடுவோர் பாடினால்..." லக்ஷ்மன் ஸ்ருதி கான்செர்ட் குறித்த எனது ஆர்டிகிள் இவை எல்லாம், கதம்பம் இதழில் வெளியானது.. இப்படி அங்கீகாரம் கிடைத்தது, இதுவே முதல் முறை..! மனதிற்கு சந்தோசமா இருந்தது..!

எந்திரன் படம்
பொதுவா இங்கே வெளியாகிற எல்லா படங்களும் பார்ப்பதில்லை.. ஒரு சில படங்களுக்கு தான் போறதே.. எந்திரன்... ஏற்படுத்திய எதிர்பார்ப்பில் தியேட்டர் போனோம்.. முதல் பாதி படம் முழுக்க.. சீட் ஓரத்துல உக்காந்து பாக்குற மாதிரி விறு விறுன்னு தான் இருந்தது.. அப்புறம் இரண்டாம் பாதி..தான் கொஞ்சம் படம் எப்போ முடியும்னு நினைக்க வச்சிருச்சு.. ரஜினி எப்பவும் போல்.. சூப்பர் ஸ்டார் தான்.. இப்படத்திலும்..! ஆனாலும் எனக்கென்னவோ ரஜினியை படத்தில் இங்கும் அங்கும் சொருகியது போல இருந்தது.. ஏன்னா ரஜினி வருவதை விட.. படத்தில் ரோபோட், கிராபிக்ஸ்.. தான் ஜாஸ்தி ஆக்கிரமிப்பு.

தெலுங்கு அசோசியேஷன் தீபாவளி ப்ரோக்ராம்
(சரி சரி.. உங்க பீலிங்க்ஸ் புரிது... இங்க என்ன பண்ணேன்னு தானே யோசிக்கிறீங்க..) மீண்டும் அதே.. இசை, கலை ஆர்வம் தாங்க.. கலைக்கு மொழி ஒரு தடையா இருக்கலாமா? இங்கே என் பொண்ணு, மற்றும் அவள் கூட உள்ள குட்டீஸ்...சேர்ந்து  MSS அவர்களின், "கீதகுனிக்குதக்க...." பாடலுக்கு பரதநாட்டியம் ஆடினாங்க..  அதில் கிருஷ்ண லீலைகள் குறித்த காட்சிகள் எல்லாம் வரும், குழந்தைகளின் முகபாவம் எல்லாம் பார்க்க ரொம்ப சந்தோசமா இருந்தது.. (இன்னும் திருத்தமா வரலை.. ஆனா..விடா முயற்சியா நானும், என் பொண்ணும் அடி பிடி சண்டை போட்டு கத்துக்கறோம்.. சாரி.. கத்துக்க வைக்கிறேன்.....)

பால ராமாயணம்.. டிராமா
இங்கே என் குழந்தைகள் செல்லும் ஸ்லோகம்  வகுப்பில், பால ராமாயணம் டிராமா போட்டோம்.. அதில் எல்லா பசங்களும்.. ரொம்ப அழகா.. வசனம் எல்லாம் மறக்காம பேசி, நடிச்சாங்க.. ரொம்ப பெருமையா இருந்தது.. நினைத்ததை விடவும், குழந்தைகளின் பங்களிப்பு.. அபாரமா இருந்துச்சு.. சந்தோசமா இருந்தது.. :-) அது எனக்கு மிகவும் மறக்க முடியாத நிகழ்வு...!

மன்மதன் அம்பு
அவ்வ்வ்வவ்.. இது ஒரு பெரிய சோக கதை.. ஒரு பிரண்ட் தீவிர கமல் ஃபேன்... அவங்க என்னை படத்துக்கு கூப்டாங்க.. நா என்ன பண்ணி இருக்கணும், சிவனேன்னு அவங்களோட போயிருக்கனும்.. அத விட்டு போட்டு... என்னோட மத்த பிரண்ட்சையும் வாங்க...போலாம்னு கிளப்பிட்டு போனேன்.... என்னை ஒரு கொடுமை.. நொந்து போய்ட்டேன்... முதல் பாதியாவது ஏதோ, பார்க்கிற மாதிரி இருந்துச்சு..... ரெண்டாம் பாதி.... ஹ்ம்ம் ஹும்ம்... ஒண்ணும் சொல்றதுக்கில்லங்க.. ஏதோ, கூட்டிட்டு போனதுக்கு.. கொல பண்ணாம விட்டாகளே.. அது வரையில் ஓகே... :D 

கரோகியில் பாடியது
பிரண்ட் ஒருத்தங்க.. ரொம்ப அழகா பாடுவாங்க...   அவர், கரோகி மெஷின், வச்சிருக்கார்.. ஒரு கெட் டுகதர் பார்ட்டி-க்கு.. அவருடன் சில பாடல்கள் பாடுவதாய் ஏற்பாடு.. (இது நாள் வரை வீட்டில் சும்மா பாடுறது, அப்புறம் ஐயப்பன் பூஜையில் பாடுறது.. அவ்ளோ தான்...இப்போ மட்டும் என்ன? சூப்பர் சிங்கர்-லயா பாடிட்டேன்னு கேக்கத் தோணுமே...) அப்புறம்.. பாட ஆரம்பிக்கும் போதே.. மைக் கைல வந்ததும்...உதறல் தான்.. முதல்.. பாட்டு சகிக்கல... ஏதோ, பாத்து வாசிச்ச மாதிரி இருந்தது... அப்புறம் போக போக.. ஏதோ சுமாரா வந்தது... (ஹலோ பாட்டைத் தான் சொல்றேன்.... ஏடாகூடமா தின்க் பண்ணப் பிடாது... என்ன கொடும சரவணா? ன்னு தானே.. சொல்ல நினச்சீங்க.. ஹிஹி.. தெரியுமே.. தெரியுமே..!) கரோகி-யில் பாடியது இது தான் முதல் முறை..!!

சரி சரி பேச்சு பேச்சா இருக்கட்டும்... நோ வயலன்ஸ்... நினைவலை கொஞ்சம் ஓவரா தான் அடிச்சிருச்சு.. இத்தோட நிறுத்திக்கிறேன்...! பொறுமையாய் படித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்...நன்றிகள் பல..!

உங்க எல்லாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!!


முத்தான தை திரு நாளில்
நம் சொத்தான சூரியனை
வணங்கி தத்தம் வித்தான
குடும்பத்தாருடன் எல்லா 
வளமும்  பெற்று வாழ்வாங்கு 
வாழ வாழ்த்துக்கள்...!!




....அன்புடன் ஆனந்தி 

60 comments:

Sanjay said...

உங்களுக்குள்ள மூணு சித்ரா, ஆறு சுஷீலா, பன்னிரண்டு ஆஷா போஷா இருக்காங்கனு தெரியாம போச்சே!!!!!!:D :D

ஒரு வீடியோவ போடறது..!!:P

நினைவலை கொஞ்சம் ஓவரா தான் அடிச்சிருச்சு.. //
அடிச்ச அடில குளிச்சிட்டோம்..!! :D

தை திருநாளில் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்..!! ;-)

தமிழ் உதயம் said...

கடற்கரை மணல், அலைகள்... அழிகின்ற 2010
மலரும் 2011... படம் அருமை. பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

ஆர்வா said...

சந்தோஷமான நினைவுகள் உங்களுக்கு இந்த வருடமும் தொடரட்டும் தோழி.. பொங்கல் வாழ்த்துக்கள்

சாந்தி மாரியப்பன் said...

ஆஹா!!.. வருங்கால லதா மங்கேஷ்கரா நீங்க??.. சொல்லவேயில்ல :-))

உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்..

இம்சைஅரசன் பாபு.. said...

நல்ல தான் திரும்பி பார்த்து இருக்கீங்க .......
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

உங்களுக்கும் தைப்பொங்கல் வாழ்த்துக்கள் ஆனந்தி..

அன்புடன் நான் said...

தமிழ் உதயம் சொல்லியதுபோல அந்த படம் மிக பிடித்திருந்தது... (தத்துவமாக)

உங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

சௌந்தர் said...

நல்ல வேளை நீங்க இங்க பாட்டு பாடலை நாங்க தப்பித்தோம்....இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்...!

அன்புடன் நான் said...

தமிழ் உதயம் சொல்லியதுபோல அந்த படம் மிக பிடித்திருந்தது... (தத்துவமாக)

உங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

அருண் பிரசாத் said...

பல வீரவிளையாட்டுகள் தான் போல....

உங்களை நீங்களே கலாய்சிட்டா நாங்க என்ன சொல்லு கலாய்கறது

மங்குனி அமைச்சர் said...

இம்ம்ம் ................... நடக்கட்டும் , நடக்கட்டும்.............. பொங்கல் வாத்துக்கள்

Unknown said...

அருமை! வாழ்த்துக்கள்!

middleclassmadhavi said...

2010 நல்ல வருஷமாகத்தான் இருந்திருக்கு. 2011 இன்னும் நினைவில் நிற்கக் கூடிய சந்தோஷ வருஷமாக அமைய வாழ்த்துகள் - பொங்கல் வாழ்த்துகளும்

கவிநா... said...

நல்ல, நகைச்சுவையா சொல்லியிருக்கீங்க உங்க அனுபவத்தை....

மாணவன் said...

இனிமையான நினைவலைகள்....

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

logu.. said...

\\எல்லாம் ஒரு இசை ஆர்வம் தான்.. \\

Veetla iruntha thoonga vida matenguranganu anga poi thoongittu..

Inga vanthu isai arvamnu buildppa?

logu.. said...

\\அப்புறம் முதல் தடவையா டான்ஸ் எல்லாம் வேற ஆடினோம்..\\

Hayyo.. ekkuthappa ethum agaliye?
sunami.. boogampam ethum varaliya?

Atleast antha kattidamavathu idinju vilunthirukanume?

logu.. said...

\\ஒரு கெட் டுகதர் பார்ட்டி-க்கு.. அவருடன் சில பாடல்கள் பாடுவதாய் ஏற்பாடு..\\

inimel intha vibareetha vilatellam
mootakatti vachidunga..

Ram said...

நல்லா திரும்பி பாத்திருக்கீங்க.. தை திருநாள் நல்வாழ்த்துக்கள்...

Philosophy Prabhakaran said...

கரோகியில் பாடிய அனுபவம் நல்லா இருந்துச்சு...

மறுபடி கிளியோபாட்ரா பற்றி ஒரு பதிவு போட்டிருந்தேன்... பார்க்கவில்லையா...

கவி அழகன் said...

கடவுளே இதனை பெரிய விடயங்கள் செய்திருகிறேர்கள் அருமையான படைப்பு பொங்கல் வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

ஆனந்தி பாட்டு பாடுவாங்களா? ஆச்சரியமா இருக்கே

சி.பி.செந்தில்குமார் said...

பதிவு சூப்பர். மன்மதன் அம்பு பற்றி சொன்னது உங்களுக்குள்ள நல்ல காமெடி சென்ஸ் இருக்குன்னு காண்பிக்குது

Madhavan Srinivasagopalan said...

பொங்கல் வாழ்த்துக்கள்..

கோநா said...

உங்களுக்கும் வாழ்த்துக்கள் அன்புடன் ஆனந்தி.

இளங்கோ said...

பொங்கல் வாழ்த்துக்கள்

Unknown said...

உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் பாடகி ஆனந்தி.. :-)

Unknown said...

hiiii ananthi

pavthivu migavum arumai.

wishing u and ur family a very happy pongal.

Unknown said...

hiiii ananthi

pavthivu migavum arumai.

wishing u and ur family a very happy pongal.

ஜெயந்த் கிருஷ்ணா said...

உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்..

சுபத்ரா said...

பிரபல பாடகி ஆனந்தி அக்காவிற்கும் அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

ரிஷபன்Meena said...

பொங்கல் வாழ்த்துக்கள்!!


அங்கே மஞ்சள் கொத்து கரும்பு எல்லாம் கிடைக்குமா ?

Starjan (ஸ்டார்ஜன்) said...

பகிர்வு அருமை ஆனந்தி.....

உங்களுக்கு என்னுடைய இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

Priya said...

சந்தோஷமான நினைவுகள்...
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஆனந்தி!

Vijiskitchencreations said...

ஆனந்தி பொங்கல் வாழ்த்துக்கள்.
ஒரே கலைநயமா போன் வருடம் கொண்டடிங்க. எனக்கும் கலை என்றால் ரொம்ப பிடிக்கும்.
நிங்க எந்த மாகானத்தில் இருக்கிங்க,என்று தெரிந்துக்கலாமா?
முடிந்தால் என்னோட க்ரியேஷன்ஸ் ஐடிக்கு ஒரெ மெயில் அனுப்பறிங்களா?

இங்கும் சித்ரா வந்தாங்க, ஏ.ஆர் வந்திருந்தாங்க. ஹரிஹரன்.
தமிழ்,தெலுகு,மலையாளாம், கன்னடகூடா குஜாரத்தி அசோஷியன் போன்ற பல் அசோஷியன்ஸ் இர்க்கு நல்ல ஜாலியா இருக்கும்ப்பா.
எனக்கு ஒரு தோழி இருக்காங்க அவங்க பேர் ஆனந்தி அவஙகளும் நல்ல பாடுவாங்க. அதுதான் ஒரு சின்ன சந்தேகம்?

Kousalya Raj said...

அடடா என்ன ஆனந்தி இப்படி அழ வச்சிடீங்க...?!!

Kousalya Raj said...

பின்ன உங்க பதிவை படிச்சிட்டு சிரிச்சி சிரிச்சி கண்ணீர் வந்தா அழுறேனு தானே அர்த்தம்...?! :)))

வாவ்... ரொம்ப நல்லா இருக்குப்பா நீங்க திரும்பி பார்த்தது.

மிக ரசித்தேன் உங்கள் எழுத்தை...!

என் அழைப்பை ஏற்று திரும்பி பார்த்ததுக்கு நன்றி தோழி.

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் ஆனந்தி.

ஜெய்லானி said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!! :-)

Unknown said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

S Maharajan said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!! :-)

'பரிவை' சே.குமார் said...

சந்தோஷமான நினைவுகள்.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@சஞ்சய்
ஹா ஹா ஹா... சூப்பர்...!! அத்தனையும் சேர்ந்ததுல தான், ஒரு குரலும் சரியா வரல போலிருக்கு :-))
ஏன்....?? எல்லாரும் நல்லா இருக்கறது பிடிக்கலியாக்கும்??? :த

ஹா ஹா ஹா.. சரி சரி.. அப்பிடியாச்சும் குளிச்சீகளே...?? ஒரு சமூக சேவை செஞ்ச திருப்தி போங்க..!! :))

ரொம்ப தேங்க்ஸ்.. :-))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@தமிழ் உதயம்
வாங்க.. ரொம்ப நன்றிங்க.. உங்களுக்கும் வாழ்த்துக்கள்..:-)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@கவிதை காதலன்
வாங்க.. ரொம்ப நன்றிங்க.. :-)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@அமைதிச்சாரல்
ஹா ஹா.. நீங்க வேறங்க..!! சும்மா ஏதோ.. சொதப்பிட்டு வந்தேன்..
வாழ்த்துக்கு நன்றிங்க.. :-)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@இம்சை அரசன் பாபு
ஹா ஹா.. வாங்க. ஏதோ முடிஞ்சத திரும்பி பார்த்தேன்.. :-)
நன்றிங்க.



@@தோழி பிரஷா
வாங்க.. நன்றிங்க.. :-)


@@சி. கருணாகரசு
வாங்க.. ரொம்ப நன்றிங்க.. :-)


@@சௌந்தர்
ஹா ஹா.. இருக்கட்டும்.. ஒரு நாளைக்கு அதையும் செஞ்சிருவோம்...:)
தேங்க்ஸ்

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@அருண் பிரசாத்
ஹா ஹா.. எஸ் எஸ்.. எல்லாம் உங்க டெக்குநீக் தாங்க..
சும்மா கிண்டல் பண்ணேன்..
அட.. கலாய்க்கலங்க.....நெசமா தான் சொன்னேன்..
திரும்பி பார்த்த எல்லாமே.. நடந்தவை தான்.. :-))


@@மங்குனி அமைச்சர்
ஹா ஹா... சரி சரி....
வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க... :-)


@@ஜீ...
வாங்க.. வாழ்த்துக்கு நன்றி :)


@@middleclassmadhavi
வாங்க. ஆமாங்க.. உங்க வாழ்த்திற்கு ரொம்ப நன்றிங்க.. :-)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@கவிநா...
வாங்க.. ரொம்ப சந்தோசம்.. ரசித்து படித்ததற்கு நன்றி :-)



@@மாணவன்
வாங்க. ரொம்ப நன்றிங்க :-)



@@logu..
ஹா ஹா ஹா... அதெல்லாம் இல்லியே..

ஹ்ம்ம் ஹும்ம்.. ஒன்னும் ஆகலை... பூகம்பம் வரலை.....
ஹி ஹி.. இல்லியே.. விழலியே...

ஹா ஹா.. யாரு தடுத்தாலும்.. எங்கள் இசை ஆர்வம் நிற்காது :-))
ரொம்ப நன்றிங்க..

ஆயிஷா said...

பகிர்வு அருமை.

பொங்கல் வாழ்த்துக்கள்

jokkiri said...

2010 நினைவுகள், கொசுவர்த்தி அழகாக சுற்றியுள்ளது...

நிறைய விஷயங்களை உங்களுக்கே உரிய நகைச்சுவையுடன் சொல்லி இருக்கிறீர்கள் ஆனந்தி...

என்னங்க நீங்க எந்திரன் படத்துல ரஜினிய சொருகிய மாதிரி இருந்ததுன்னு சொல்றீங்க...

ரோபோவா நடிச்சு இருக்காரே.. அதுக்காகவே தலைவரை பாராட்ட வேணாமா...

மன்மதன் அம்பு பார்த்து நீங்கள் தைரியசாலி என்று நிரூபித்தமைக்கு நன்றி... கூடவே அதற்கு ஈக்குவலா வந்த இன்னொரு மெகா மொக்கை விருதகிரியையும் பார்த்திருக்கலாமே..

டான்ஸ் வேற ஆடினீங்களா? ஸ்டேஜுக்கு ஒண்ணும் டேமேஜ் இல்லையே!!

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@தம்பி கூர்மதியன்
வாங்க.. ஆமாங்க.. முயற்சி பண்ணேன்.. நன்றிங்க :-)



@@Philosophy Prabhakaran
வாங்க.. ஓ... பாக்குறேங்க.. வருகைக்கு நன்றி.. :)



@@யாதவன்
வாங்க.. ஹா ஹா.. அதெல்லாம் குட்டி குட்டி அனுபவக் கலவை தாங்க...
நன்றி :)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@சி. பி. செந்தில்குமார்
வாங்க.. ஹா ஹா.. எனக்கே ஆச்சர்யம் தான்.. (ஏதோ, கொஞ்சம் பாடுவேன்)
உங்க கருத்திற்கு ரொம்ப நன்றி.. :)


@@Madhavan Srinivasagoplan
வாங்க.. வாழ்த்துக்கு நன்றிங்க :-)



@@கோநா
வாங்க.. வாழ்த்துக்கு நன்றிங்க :-)



@@இளங்கோ
வாங்க.. வருகைக்கு நன்றிங்க :-)


@@பதிவுலகில் பாபு
ஹா ஹா.. வாங்க.. வாழ்த்துக்கு நன்றிங்க :-)


@@poorna
ஹி ஹி ஹி.. ரெம்ப நன்றிங்கோ.. :-)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@வெறும்பய
வாங்க.. வாழ்த்துக்கு நன்றிங்க.. :)



@@சுபத்ரா
ஹா ஹா.. வாங்க.. பிரபல பாடகியா...?அப்படியெல்லாம் ஒன்னும் இல்லிங்கோ...ரொம்ப நன்றி.. :-)


@@ரிஷபன்Meena
வாங்க.. ரொம்ப நன்றிங்க..
ஆமாங்க.. கரும்பு கிடைக்கும், மஞ்சள் கொத்தாய்க் கிடைக்காமல், தனி தனி கிழங்காய் கிடைக்கும்.. :-)


@@Starjan (ஸ்டார்ஜன்)
வாங்க. உங்க கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றிங்க. :-)



@@Priya
வாங்க... தேங்க்ஸ் பிரியா.. :-)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@Vijisveg Kitchen
வாங்க விஜி.. கண்டிப்பா மெயில் பண்றேன்..
ஆமாங்க.. அதுவும் பிரண்ட்ஸ் கூட போனா இன்னுமே ஜாலி தான்.. :-)
உங்க கருத்திற்கு ரொம்ப நன்றி :-)



@@ம. தி. சுதா
வாங்க.. வாழ்த்துக்கு நன்றிங்க :-)


@@Kousalya
ஹா ஹா.. ஏன்ம்பா...? நோ அழுவாச்சி... ப்ளீஸ்.. ;-))

ஹ்ம்ம்.. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.. கௌசல்யா...
எனக்கு இந்த வாய்ப்பு குடுத்ததற்கு நன்றிங்க..
வாழ்த்துக்கு நன்றிங்க.


@@ஜெய்லானி
வாங்க.. வாழ்த்துக்கு நன்றிங்க.. :)


@@இனியவன்
வாங்க. வாழ்த்திற்கு நன்றிங்க.. :)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@S Maharajan
வாங்க.. வாழ்த்திற்கு நன்றிங்க :-)


@@சே. குமார்
ஆமாங்க.. வருகைக்கு நன்றிங்க. :-)


@@ஆயிஷா
வாங்க.. வருகைக்கு நன்றிங்க.. :-)



@@jokkiri
வாங்க.. ரொம்ப நன்றி ரசித்து படித்ததற்கு...!

ஆமாங்க.. சிட்டியா வந்ததெல்லாம் சரி தான்.. இருந்தாலும், சூப்பர் ஸ்டார்-ஐ இன்னமும் படத்தில் யூஸ் பண்ணியிருக்கனுங்க..
அது என்னோட அபிப்பிராயம்.. :-)

ஹா ஹா.. அதே அதே.. என்னோட தைரியத்த.. பாராட்டினதுக்கு ரொம்ப நன்றிங்க.. ஐய்..மாட்டேனே....நா ஒன்னும் அம்புட்டு ஏமாளி இல்லிங்கோ... :)

ஹா ஹா... ஒன்னும் ஆகலைன்னு தான் நினைக்கிறேன்.. :-))
நன்றிங்க..

Unknown said...

2010 பற்றிய சுவையான அலசல்.
இந்த ஆண்டும் உங்கள் படைப்புக்கள் பத்திரிக்கைகளில் வெளிவரட்டும்...
2010 ஆம் வருடம் போலவே, இந்த 2011 ஆண்டும் உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்..

செந்தில்குமார் said...

அருமையான பகிர்வு ஆனந்தி...

Nandhini said...

கொஞ்சமா திரும்பி பார்த்து இருக்கீங்க ஹா ஹா ஹா.........நல்ல நகைச்சுவை.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ம்ம்ம்... திரும்பித்தான் பார்த்திருக்கீங்க...!

r.v.saravanan said...

இனிமையான நினைவலைகள்

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)