topbella

Saturday, April 18, 2026

உயரிய விருது வழங்கும் விழா

தமிழால் இணைவோம்  - உலகத் தமிழ்ப்_பேரியக்கம்  [ Tamilal Inaivom UTK ]

உயரிய விருது வழங்கும் விழா

விழா நிகழ்வு எண்: 7927
விருது: மதிப்புறு முனைவர்

நிகழ்வு தேதி: 17.04.26

விருதாளர்: 
தங்கமங்கை நெல்லை அன்புடன் ஆனந்தி

நம்மில் பலர் தான் உண்டு மற்றும் தன் பிள்ளைகள் வேலைகள் என்று மட்டும் இருப்பார்கள் . அவ்வாறு இல்லாமல் பிறருக்கு சிறிதளவேனும் பயனளிக்கும் செயல்களை செய்பவர்கள் சான்றோர் ஆகிறார்கள். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு குடும்பப் பொறுப்பு என்பதே  சுமைகள்தான். நாள்தோறும் அந்த நேரங்களில் மிதந்து மிச்சம் வைத்து பொது சேவைகளில் நீந்துவது கூடுதல் பளு. அந்த சுமையையும் சுகமாக சுமப்பதை பெண்கள் அஞ்சுவதில்லை, நேர சமானம் செய்யும் திறமையும் கைவசமாக்கி உள்ளனர்.
அதன் விளைவு இன்று மொழிநேசம், தாய் நாட்டுப் பற்றுதல், படைப்புலகப் பகிர்வு, தலைமைப் பண்பு என்று ஏகப்பட்ட சேவைகளில்  பெண்பிள்ளைகள் அதிக அளவிலே ஈடுபடுகிறார்கள். அப்படிப்பட்ட ஒருவராக அடையாளம் காண்பவர் தான்
நமது தமிழால் இணைவோம் இயக்கத்தின் ஆகச் சிறந்த சேவையாற்றும் தங்க மங்கை நெல்லை அன்புடன் ஆனந்தி அவர்கள். அமெரிக்க நாட்டிலே வாழும் தாய் மொழிப் பற்றாளர். நிகழ்ச்சி தொகுப்பாளர், பொழிவாளர், எழுத்தாளார், படைப்பாளர்,
பாடகர் என்று பல அடைமொழிகளுடன் பணியாற்றுபவர். தமிழால் இணைவோம் அனைத்து விருதுகளையும் மற்றும் பல்வேறு அமைப்புகளின் விருதுகளையும் வாரி அணைத்துக்கொண்டு ஆக்கச் செயல்களில் ஈடுபடுபவர்.

அவருடைய தன்னலமற்ற சேவையைப் பாராட்டி தமிழால் இணைவோம் உலகத் தமிழ்ப் பேரியக்கம் நெல்லை அன்புடன் ஆனந்தி அவர்களுக்கு
 மதிப்புறு முனைவர் என்ற உயரிய விருதை வழங்கி மகிழ்கிறது.

அவர்களுடைய இந்த ஒப்பற்ற பணிகள் மேலும் சிறக்க தமிழால் இணைவோம் நிறுவனர், கௌரவத் தலைவர், தலைமைச் செயலாளர், மாவட்ட மற்றும் கூட்டு மாவட்ட ஆளுநர்கள், சங்கத் தலைவர்கள் பங்கேற்பாளர்கள் அனைவரும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். நல்வாழ்த்துக்கள்!
தோழமையுடன்
மீனா திருப்பதி
துணைத்தலைவர்
தமிழால் இணைவோம்

0 comments:

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)