காவல் காரனாய்
முன் சென்று
காத்திருக்கும் வலிகளை
தாங்கிக் கொண்டு
வாழ்க்கையின் வலிகளை
ஏந்திக்கொண்டு
வருத்தங்களை எல்லாம்
வாங்கிக்கொண்டு
வாழ்க்கைப் பள்ளத்தில்
நாம் வீழாதிருக்க
வழுக்கும் இடங்களில்
வலிகளைத் தவிர்க்க
இணைப்புப் பாலமாய்
நிழலைத் தந்து
இதயப் பாலமாய்
இல்லம் ஆண்டு
இராணுவ வீரராய்
கடுமை கொண்டு
ஈரத்தை உள்ளுக்குள்
இனிதாய் மறைத்து
தான் காணா வெற்றியை
நாம் காணப் பாடுபடும்
தந்தையரை அன்புத்
தாயுமானவரை
தனக்கென வாழாத
தயாளக் கருணையை
சொல்லத் தெரியாச்
சொந்தமதைச்
சொத்தாய்க் காத்திடுவோம்
சோதிக்காது பார்த்திடுவோம்
உணர முயற்சிப்போம்
உயர்த்தியே ரசிப்போம்!
~நெல்லை அன்புடன் ஆனந்தி
ஜூலை 01, 2023
0 comments:
Post a Comment