இளைச்சவனுக்கு எள்ளு
கொழுத்தவனுக்குக் கொள்ளு என்பார்கள்
#கொள்ளுப்பொடி
2 கப் - கொள்ளு
1/2 கப் - கடலைப்பருப்பு
20 - காய்ஞ்ச மிளகாய் (விருப்பத்திற்கேற்ப)
பெருங்காயம் - 1 டீஸ்பூன்
பூண்டு - 4 (தொலியுடன்)
உப்பு
கொள்ளு, கடலைப்பருப்பு, காய்ஞ்ச மிளகாய் தனித்தனியே சில துளி எண்ணெய் சேர்த்து பொன் நிறமாக வறுக்கவும்.
சூடாக வறுத்த பருப்பில் நடுவில் காயம் சேர்த்து மூடவும்.
ஆறியபின் முதலில் வறுத்த மிளகாயை அரைக்கவும். அதில் பருப்பு, கொள்ளு, காயம், உப்பு சேர்த்து திரிக்கவும்.
நன்கு திரித்த பின் பூண்டை தொலியோடு சேர்த்து 2,3 சுற்று சுற்றி எடுக்கவும்.
சூடான சோற்றில் நெய்யுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
#நெல்லை_அன்புடன்_ஆனந்தி
#என்_சமையலறையில்
0 comments:
Post a Comment