topbella

Saturday, October 15, 2011

சுத்தம் காத்து சுகாதாரம் பேணுக...!


சுத்தம் பேணுவதில்... இப்போதெல்லாம் எவ்வளவோ முன்னேற்றம் தெரிந்தாலும் இன்னமும் பொது இடங்களில் அதை பலர் பின்பற்றுவதில்லை.  பஸ் ஸ்டாண்டில்.... மற்றும் பலர் வந்து போய்கொண்டிருக்கும் இடங்களில்.... வெற்றிலை போட்டு துப்புவதும், மூக்கை சிந்தி போடுவதும்.... நீங்களே மனச தொட்டு சொல்லுங்க... யாராச்சும்... பஸ்ஸ்டாண்ட்ல... பயம் இல்லாம உக்கார முடியுமா?? நடுரோட்டில் நடந்து போகும் போது தான் சிலர்.. காறி துப்புவாங்க.. அதையும்... எதிரில் வரும் சக மனிதனின் மேலே விழுந்து விடுமோன்னு ஒரு அபிப்பிராயம் கூட இல்லாம துப்பிட்டு போய்ட்டே இருப்பாங்க...!

இன்னும் சில பேர்... பஸ்-ல், ரயிலில் போகும் போது ஜன்னல் ஓரமா உக்காந்து கிட்டு... அவுக சாப்பிட்டு முடிச்சதும்... ரெம்ப பொறுமையா... ஜன்னல் வழியா கைய வெளிய விட்டு... எச்சில் கைய கழுவுவாங்க..! அது அடிக்கிற காத்துல.. அடுத்தடுத்த கம்பார்ட்மன்ட்-ல இருக்குற அத்தனை பேருக்கும்.. அபிசேகம் பண்ணி விடும்!

சின்ன விசயங்களில் நாம் கவனம் செலுத்தி வந்தால் பல உபாதைகளில் இருந்து தப்பிக்க முடியும்.. உதாரணமா, என் அப்பா அடிக்கடி சொல்ற விஷயம், குடிக்கும் நீர் தவிர, எது சாப்பிட்டாலும் உடனே வாய் கொப்பளித்து விடுவது.. பற்களில் வரும் பல வித பிரச்சினைகளை சரி செய்து விடும்.  இன்று வரை, பின்பற்றுகிறேன்.. எந்த விதமான பல் பிரச்சினைகள் இன்றி!

இன்னொரு விஷயம்... நான் சுத்தமாக வெறுப்பது.. திறந்த வெளிகளில்....பஸ் நிறுத்தங்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களை வாங்கி உண்பது! நீங்க நல்லா கவனிச்சு பாருங்க... வந்து போகிற.. அத்தனை பேருந்தில் இருந்தும் வெளிப்படும்.. புகை எல்லாம் அடிச்சு.. காற்றில் பறக்கும் தூசிகளும் மேலே பட்டு... இதுக்கு மேல வந்து உக்காரும் பூச்சிகள்.. வேறு!  தயவு செய்து.. இப்படி திறந்த வெளிகளில் விற்கும் பதார்த்தங்களை வாங்காதீங்க! (இப்போது எவ்வளவோ முன்னேற்றம் இருந்தாலும் இன்னும் சில பேர் இப்படி வெளியே கவனமில்லாது வாங்கி உண்ணத் தான் செய்கிறார்கள்)

எங்கே வெளியூர் சென்றாலும் எளிமையான உணவு பொருட்களை உடன் எடுத்துச் செல்வது நல்லது!  ரயில்களில் இடையில் வந்து விற்கப்படும் உணவு பதார்த்தங்களில் சுத்தம் எதிர்பார்க்க முடியாது தான்...!  குறிப்பாக எண்ணெய் பலகாரங்கள்... கூடவே கூடாது! அப்படி ஒருவேளை, உங்களுக்கு உணவு எடுத்து வர வசதி படவில்லை என்றால்.. குறைந்த பட்சம்.. பழங்கள்.. பிஸ்கட் இந்த மாதிரி எதாச்சும் சாப்பிடுவது மேல்!

அடுத்து நான் பார்த்து ரொம்ப வருத்தப்படும் விஷயம்... குப்பைத் தொட்டி தவிர எல்லா இடத்திலும் குப்பை எறிதல்! எந்த இடம்ன்னு பாக்கறது இல்லை.. கையில் உள்ள குப்பையை அங்கயே எரிந்து விடும் சிறந்த குணம்...நம்மில் பலருக்கு உண்டு..! வெளி நாடுகளில்.. போயி. அப்படி ரோடுகளில் குப்பை போட முடியுமாங்க? இல்ல.. நீங்க போட்டா தான் சும்மா விட்டுருவாங்களா?  பப்ளிக் லிட்டெரிங்..ன்னு சொல்லி.. பைசா வசூல் பண்ணிருவாங்க. (அதாங்க ஃபைன் போட்டிருவாங்க). 

அது ஏன்.. நமக்குன்னு வரும் போது மட்டும் எதையும் ஃபாலோ பண்றதில்லை..! வேதனையான விஷயம் தான்!

நம்ம ஊர்ல பெரியவங்க அப்பவே சொல்லி வச்சிருக்காங்க.. "கந்தை ஆனாலும்... கசக்கிக் கட்டு", "கூழ் ஆனாலும் குளித்துக் குடி..."ன்னு!  இதுக்கு விளக்கம்.. ஊருக்கே தெரியும்.. இருந்தாலும் சொல்றேன்..  உடுத்துற துணி கிழிஞ்சு இருந்தா கூட பரவாயில்லை.. ஆனா அழுக்கா இருக்கக் கூடாது.. அதனால சுத்தமா துவைத்து கட்டுன்னு சொல்றாங்க..! அதே போல தான்.. குடிப்பது கஞ்சியோ, கூழோ பரவாயில்லை.. ஆனா அதையும் சுத்தமா குளிச்சிட்டு சாப்பிடுன்னு.. சொல்றாங்க!

சில கடைகளில், டீ கிளாஸ் கழுவுவதைப் பார்க்க நேர்ந்தால்.. ஜென்மத்துக்கும் வெளியில் டீ, காபி குடிக்க மாட்டோம்...! அம்புட்டு சுத்தமா கழுவுவாங்க! ஒரு பக்கெட் தண்ணீர் வைத்து ஓராயிரம் கிளாஸ்.. கழுவி சாதனை புரிவாங்க. சின்ன குழந்தைகளுக்கு இளம் வயதில் இருந்தே... சில விசயங்களை சொல்லிக் கொடுத்தோமானால், காலத்துக்கும் அவங்களுக்கு நன்மையா இருக்கும்.. எப்போ, எங்க வெளில போயிட்டு வந்தாலும் கைய சோப்பு போட்டு கழுவ சொல்றது.... அப்புறம் எந்த பொருள் சாப்பிடறதா இருந்தாலும், கைய சுத்தமா கழுவிட்டு சாப்பிடறது.... காலை எழுந்ததும்..., இரவு படுக்கும் முன்பும்... இரு வேளையும் பல் துலக்குவது... இந்த மாதிரி இப்பவே சொல்லித் தரலாம்!

"இந்திய நாடு... என் வீடு.. இந்தியன் என்பது என் பேரு...ன்னு" சொல்றோம்.. சொல்றதோட சரி... அதை எத்தனை பேர் செய்றாங்க..?? சொல்றதொட நில்லாமல்.....நம்ம வீட்டை எப்படி பேணி சுத்தமா பாதுகாப்போமோ.. அதே போல நம் நாட்டையும் நினைத்தாலே... சுபீட்சம் அடைய முடியும்!

(பி.கு: திறந்த வெளிகளில், பஸ் நிறுத்தங்களில்.. வியாபாரம் செய்து பிழைக்கும் ஏழை வியாபாரியின் பிழைப்பை கெடுப்பதல்ல என் நோக்கம். அவர்களும், சுத்தமாக வைத்திருந்தால்... அவர்கள் உட்பட... அனைவருக்கும் நலம்)

காசு பணம் ஆயிரம் சம்பாதிச்சு.... என்னங்க புண்ணியம்??? நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...!!! சுத்தம் பேணி... நம்மைக் காத்து....நம் சுற்றமும் காக்க!!!


...அன்புடன் ஆனந்தி 

21 comments:

Unknown said...

ஒவ்வொருத்தரும் யோச்க்க வேண்டிய விஷயங்கள். நல்பதிவு

SURYAJEEVA said...

சுயநலம் இயங்கும் உலகம், எனக்கென்ன என்று செல்லும் போக்கு... நீங்கள் சொல்வது போல் ரொம்ப செய்து பைத்தியக்காரன் என்று பட்டம் வாங்கியது தான் மிச்சம்.. நான் பயப்படல பட்டம் வாங்க, மத்தவங்க யோசிக்கிறாங்களோ என்னவோ..

நம்பிக்கைபாண்டியன் said...

பின்குறிப்பிலும் தெரிகிறது,பொதுநலம்! நல்ல பதிவு

நம்பிக்கைபாண்டியன் said...

பின்குறிப்பிலும் தெரிகிறது,பொதுநலம்! நல்ல பதிவு

நம்பிக்கைபாண்டியன் said...

பின்குறிப்பிலும் தெரிகிறது,பொதுநலம்! நல்ல பதிவு

நம்பிக்கைபாண்டியன் said...

பின்குறிப்பிலும் தெரிகிறது,பொதுநலம்! நல்ல பதிவு

மாலதி said...

நல்ல விளக்கம்

'பரிவை' சே.குமார் said...

//நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...!!! சுத்தம் பேணி... நம்மைக் காத்து....நம் சுற்றமும் காக்க!!!//


Correct... நல்ல பதிவு.

சாகம்பரி said...

இது நுகர்வோர் விழிப்புணர்ச்சியுடனும் சம்பந்தப்பட்டது. ஜீவா சார் சொன்னதுபோல எடுத்துச்சொல்லும்போதே பார்வைகள் மாறுகின்றன. எங்கள் கல்லூரி கேண்டீனிலேயே அஜீனா மோட்டாவை தவிர்க்க செய்ய பெரு முயற்சி எடுக்க வேண்டி இருந்தது. மழைக்கால வியாதிகள் பரவும் நேரத்தில் மிக முக்கியமான பகிர்வு. நன்றி

சாந்தி மாரியப்பன் said...

//நம்ம வீட்டை எப்படி பேணி சுத்தமா பாதுகாப்போமோ.. அதே போல நம் நாட்டையும் நினைத்தாலே... சுபீட்சம் அடைய முடியும்!//

ரொம்ப சரியாச் சொன்னீங்க. ஆனா, நிறையப் பேரு அப்படி இருக்கறதில்லை. அதான் பிரச்சினையே :-)

r.v.saravanan said...

இந்திய நாடு... என் வீடு.. இந்தியன் என்பது என் பேரு...ன்னு" சொல்றோம்.. ? சொல்றதொட நில்லாமல்.....நம்ம வீட்டை எப்படி சுத்தமா பாதுகாப்போமோ.. அதே போல நம் நாட்டையும் நினைத்தாலே... சுபீட்சம் அடைய முடியும்!

good

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post_15.html

middleclassmadhavi said...

நல்ல பகிர்வு!

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஆனந்தி எப்படி இருக்கீங்க.. கணவர் பிள்ளைகள் எல்லோரும் நலமா..

அருமையான கட்டுரை. சுத்தம் பற்றி அழகாக எழுதியிருக்கீங்க ஆனந்தி. பகிர்வுக்கு நன்றி.

Vijaya Vellaichamy said...

மிகவும் நல்ல அறிவுரை. லட்சம் லட்சமாக பணம் வசூல் செய்தாலும் நம்ம மக்கள் திருந்துவதாக தெரியவில்லை. குப்பை போடுவது எனது பிறப்புரிமை என்ப

இராஜராஜேஸ்வரி said...

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...!!! சுத்தம் பேணி... நம்மைக் காத்து....நம் சுற்றமும் காக்க!!!
அருமையான பகிர்வு!

மகேந்திரன் said...

குப்பைத் தொட்டி என்றவுடன் ஐயோ என்றாகிவிட்டது..
எந்த இடத்தில் நிற்கிறார்களோ அங்கிருந்தே விட்டெறிவார்கள்
குப்பையை, அருகில் சென்று போட கூட அவ்வளவு சோம்பேறித் தனம்.
அதுவும் குடியிருப்புகள் நிறைந்த இடங்களில் இருக்கும்
குப்பைத் தொட்டிகளால் எப்போதுமே சுகாதாரக் கேடு தான்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ கலாநேசன்
ஆமாங்க.. உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள்!


@suryajeeva
ஹ்ம்ம்ம்.. உண்மை தாங்க. எனினும் நம்மால் இயன்றதைச் செய்வோம்.
உங்கள் வருகைக்கும், அக்கறையான கருத்திற்கும் நன்றி.

@நம்பிக்கை பாண்டியன்
உங்க கருத்திற்கும், வருகைக்கும் மிக்க நன்றி.


@மாலதி
உங்க வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.


@சே. குமார்
வாங்க. கருத்திற்கு நன்றிங்க!


@சாகம்பரி
ஹ்ம்ம். உண்மை தான். சில நேரங்களில் நல்லது எடுத்துச் செல்லும் நாம்.. கேணையனாய் தெரிகிறோம். என்ன பண்றது.. யாரேனும் ஒருவர், இருவராவது நாம் சொல்லி தம்மை மாற்றிக்கொண்டால் கூட நல்ல விஷயம் தான்.

ஹ்ம்ம்.. ஆமாங்க.. அஜினோ மோட்டோ உடலிற்கு நல்லதில்லைதான். நல்ல விஷயம் செய்து இருக்கீங்க.
வருகைக்கும், கருத்திற்கும் நன்றி. :)


@அமைதிச்சாரல்
ஹ்ம்ம். ஆமாங்க.. என்ன பண்றது.. அப்போ அப்போ.. இப்படி புலம்பியாச்சும் பாப்போம்.
கருத்துக்கும், வருகைக்கும் நன்றிங்க.


@r .v . saravanan
வாங்க.. கருத்திற்கு நன்றி.


@ரத்னவேல்
தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.. ஐயா!


@middleclassmadhavi
வாங்க.. கருத்துக்கு நன்றிங்க.


@ஸ்டார்ஜன்
வாங்க.. அனைவரும் நலம்.. உங்கள் நலமும், குடும்பத்தார் நலமும் அறிய ஆவல்.
கருத்திற்கு ரொம்ப நன்றிங்க!


@விஜயா
ஹ்ம்ம்.. அதுதான் வேதனையா இருக்குங்க.
கருத்துக்கு நன்றி.


@இராஜராஜேஸ்வரி
வாங்க.. கருத்துக்கு நன்றிங்க


@மகேந்திரன்
ஹ்ம்ம்... உண்மை. என்ன செய்வது? குடியிருப்பின் அருகில் இருக்கும் குப்பை தொட்டிகளில்.. முறையாய் குப்பை போடா விட்டால்.. அது காற்றில் அங்கும் இங்கும் பறந்து... துர்நாற்றத்தை ஏற்படுத்தும். :(

அனைவரும் விழிப்புணர்வோடு நடமாடினால் நன்றாய் இருக்கும்
உங்கள் கருத்திற்கு நன்றி.

Coupon Blogger Jay said...

Any idea on how to type in tamil? any open source free software?

justin bieber quizzes

Paru said...

சுத்தம் சுகம் தரும் நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்

செந்தில்குமார் said...

சிந்திக்கவேண்டிய...
வரிகள்...ஆனந்தி...

சிந்திக்க தெரிந்த ஒரே இனம் மனித இனம்...

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)