topbella

Monday, October 10, 2011

இயற்கையின்... இலையுதிர்க்காலம்...!!!

          காலையில் சிலு சிலுன்னு காற்றில் அசைந்து கொண்டிருக்கிற மரங்களை பார்க்கும் போது... எனக்கு தோணியது..! 

இங்கே இப்போ "இலையுதிர்க்காலம்"...! ஒரு ஒரு இலையாக... உதிர்ந்து.. சாலை எங்கும்... காற்றில் பறந்து கிட்டு இருக்கு. இந்த செடி, கொடி, மரங்களுக்கு தான் எவ்ளோ பெரிய மனசு.....!!

           (உதிர்ந்து கொண்டிருக்கும் இலைகள்...)

 
(உள்ளம் தொடும் வண்ண மாற்றம்....)

வசந்த காலம் வந்ததும்.. வகையாக துளிர்த்து.. பச்சை பசேலென்று பல வண்ண நிறங்களில் மலர்களை கொடுத்து நம் கண்ணுக்கு விருந்தாய் கடை விரித்துக் காட்சி தருகிறது...! வீட்டுக்கு உள்ளே இருந்து...தே வெளியே பார்த்தாலும், வெளியில் எங்கும் வண்டியில் செல்லும் போதும்.. சாலையின் இருபுறமும்.... காணும் பசுமையின் அழகை என்னவென்று சொல்வது...!

வசந்த காலம் ஆரம்பிக்கும் போதே... தோட்டத்தில் கவனித்து வந்தால்... தரையினை முட்டி.. மெதுவாக.. முளைத்து வெளி வரும்.. சிறு சிறு குருத்துக்களை காண்கையில்.. எல்லை இல்லா ஆனந்தம்..! இயற்கை.. தன் கடமையில் இருந்து ஒரு போதும் தவறுவது இல்லை.

சிறு தளிரில் இருந்து தொடங்கி..... அவை வளர்ந்து.... பெரிதாகி... மொட்டு விட்டு பூக்கும் போது.. நமக்கு ஏதோ.. சாதித்து விட்ட திருப்தி.. பாவம்.. முழு வேலையும் செய்ததென்னவோ அவைகள் தான்.

இத்தனை வளர்ச்சியும்.. மலர்ச்சியும்...... ஐந்தே மாதங்கள் தான்.. அதற்குள் குளிரத் தொடங்கி... இலையுதிர்க் காலம் வந்தே விட்டது.... அப்படி தன்னை முழுதாக உதிர்க்கும் போதும்..... தன் அழகால் நம்மை ஆனந்தப் படுத்தித் தான் செல்கிறது.. இந்த படங்களை பாருங்க... எங்கள் வீட்டின் பின்னால் உள்ள மரங்கள்....!உதிரத் தொடங்கும் வேளையிலும்
உனதழகால் எனது உள்ளம்...
தீண்டிச் சென்றாய்!ஐந்து மாதம் தானே... அதற்கு எதற்கு... அனாவசியமா அலட்டிக்கொள்ள வேண்டும்..ன்னு நினைத்திருந்தா இந்த அழகு நமக்கு கிடைக்குமா...!  அத்தனை இலைகளும்.. உதிர்ந்து... பனிக்காலத்தில் சிலையென உறைந்து... அப்பவும்.. பனி படர்ந்து... பார்க்க அம்சமாய் இருக்கும்.

இயற்கை தனது... வேலையைச் செய்ய.. யாரும் தூண்டி விட தேவை இருக்க வில்லை... தனது வாழ்க்கை சுழற்சியை எவ்வித தங்கு தடையுமின்றி... எதையும் எதிர்பார்க்காது... தவறாமல் செய்து வரும் இயற்கையை வணங்குகிறேன்!

என்னவோ போங்க.... என்ன தான்...... இயற்கையின் அமைப்பில் எல்லாமே அழகு என்று சொன்னாலும்... இலைகள் உதிர்ந்து போவதை பார்க்கும் போது... லேசான..... வருத்தம் இருக்கத்தான் செய்கிறது!

சரி பரவாயில்ல விடுங்க... இன்னும் ஒரு ஆறேழு மாதத்தில் திரும்ப வந்து விடுமே...! விடுமுறைக்கு சென்று இருப்பதாக நினைத்துக் கொள்கிறேன்.

(என்னோட பிரண்ட் எடுத்த படம்... நன்றி: வர்ஷா & ரங்கேஷ் )


...அன்புடன் ஆனந்தி 

18 comments:

Unknown said...

இது தான் பதிவு. பதிவு சூப்பர் தலைவா.

தினேஷ்குமார் said...

புகைப்படங்கள் அத்தனையும் மிகமிக அழகு சகோ...

இயற்கைக்குத் தான் எத்தனை முகங்கள் ஆஹா ....

SURYAJEEVA said...

நாகலிங்கப் பூ மரம் என்று தமிழர்களால் பெயர் வைக்கப் பட்ட பிரேசிலை சார்ந்த பீரங்கி குண்டு மரம், இலையுதிர்த்த அடுத்த நாளே துளிர் விட ஆரம்பித்து விடுகிறது.... தரையில் கிடக்கும் மஞ்சள் இலைகளும் மரத்தில் இருக்கும் பச்சை இலைகளும் முரணாய் அழகாய் இருக்கும்

'பரிவை' சே.குமார் said...

உதிரத் தொடங்கும் வேளையிலும்
உனதழகால் எனது உள்ளம்...
தீண்டிச் சென்றாய்!


இலையுதிரும் காலத்தை ரசனையான பகிர்வாக்கியிருக்கிறீர்கள் சகோதரி. வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

ஆம் சகோதரி, அழகாய் தெரியும் இலைகள் உதிர்கையிலே
மனம் கொஞ்சம் வேதனைப்படத்தான் செய்யுது...
நீங்கள் எழுதி இருக்கும் நடை அழகா இருக்கு....

பித்தனின் வாக்கு said...

ippadi kattai parkaiyil alakuthan. but us black bear payamthan varuthu. but its nice and beautifull enjoy. ithukku mattum 10 kavithai eluthalam.

Vijaya Vellaichamy said...

Feelings are mutual:)

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post.html

Nandhini said...

புகைப்படங்கள் சூப்பர், இலையுதிர் அழகு...வாழ்த்துக்கள்.

Meena said...

Romba nalla irukku.. Ananthi

Priya said...

இயற்கையில் எல்லாமே அழகுதான்... புகைப்படங்கள் மிக அழகுடன் இருக்கிறது!

காட்டு பூச்சி said...

நல்ல பதிவு உங்க பிரான்ட் எடுத்த படம் அருமையா இருக்கு

ஸாதிகா said...

கண்ணைக்கவரும் விதம் அழகழகாய் படங்கள்.

Paru said...

சரி பரவாயில்ல விடுங்க... இன்னும் ஒரு ஆறேழு மாதத்தில் திரும்ப வந்து விடுமே...! விடுமுறைக்கு சென்று இருப்பதாக நினைத்துக் கொள்கிறேன்.
இலையுதிர் காலதின் படமும் கட்டுரையும் மிக அருமை

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ஆரூர் முனா செந்திலு
வருக.. உங்க கருத்துக்கு நன்றி!


@தினேஷ்குமார்
வாங்க. உண்மைதாங்க. கருத்துக்கு நன்றி!


@suryajeeva
வாங்க.. அடடா.. அப்படியா? தெரியாத தகவல்.. பகிர்வுக்கு நன்றி.


@சே. குமார்
வாங்க குமார்.. உங்க கருத்திற்கு மிக்க நன்றி.


@மகேந்திரன்
வாங்க. உண்மைதான். உங்கள் கருத்திற்கும், பாராட்டிற்கும் நன்றி.


@பித்தனின் வாக்கு
வாங்க.. நலமா?
ஹ்ம்ம்.. உண்மைதான்.. எழுதிக்கொண்டே இருக்கலாம்.
கருத்திற்கு மிக்க நன்றி.


@விஜயா
வாங்க விஜி.. உண்மை தான். :)
தேங்க்ஸ் பா.


@ரத்னவேல்
வாங்க ஐயா.. தங்கள் கருத்திற்கும், நல்வாழ்த்திற்கும் நன்றி.


@நந்தினி
வாங்க நந்து.. தேங்க்ஸ் டா.. :)


@மீனா
வாங்க.. தேங்க்ஸ் மீனா :)


@ப்ரியா
வாங்க ப்ரியா.. தேங்க்ஸ் பா :)


@காட்டு பூச்சி
வாங்க.. கருத்திற்கு நன்றிங்க. :)@ஸாதிகா
வாங்க.. ரொம்ப நன்றிங்க :)


@பாரு
வாங்க... தேங்க்ஸ் பாரு :)

raji said...

தங்கள் பதிவை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.நேரமிருக்கும் போது பார்க்கவும்

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_22.html

செந்தில்குமார் said...

இயற்கை ரசனையில் ஆனந்தி...அருமை

Unknown said...

அருமையான பதிவு

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)