இதயத்தில் சுமக்க
இசைந்த உன்னுள்ளம்...
இயல்பாய் இருப்பதில்
இறுக்கம் எதற்கோ?
இரு கரம் நீட்டியே
அணைக்கா விடினும்
இனிதாய் ஓர் வார்த்தை
இயம்பத் தயக்கம் ஏனோ?
உனதருகில் நகர்கின்ற
ஒவ்வோர் நொடியும்..
உனக்குள் அமிழ்ந்து விட
ஆசை கொண்டேன்..
கண்களில் தொடர்ந்த
காதல் பயணம்...
கல்லறை வரையிலும்
தொடரக் கூடும்..
கண்களால் கைது செய்து
கள்வனே உன்னை
காலமெல்லாம் என்னில்
சிறை வைத்தேன்...
நெஞ்சைத் தொட்டு
நிஜமாய் சொல் ஒன்று..
எவ்வாறு எனை நீ
மறந்தாய் இன்று?
29 comments:
//இதயத்தில் சுமக்க
இசைந்த உன்னுள்ளம்...
இயல்பாய் இருப்பதில்
இறுக்கம் எதற்கோ?//
எதற்கோ???ன்னு மெரட்றீங்களா?
//இரு கரம் நீட்டியே
அணைக்கா விடினும்
இனிதாய் ஓர் வார்த்தை
இயம்பத் தயக்கம் ஏனோ?//
பார்ர்ரா.........மறுபடியும் ஏனோன்னு மிரட்றாங்க!
//கண்களில் தொடர்ந்த
காதல் பயணம்...
கல்லறை வரையிலும்
தொடரக் கூடும்...//
இல்ல தெரியாமத்தான் கேக்குறேன்........கல்லறையில போயிமா....ஒரு மனுசன தொந்தரவு பண்ணனும்?
//கண்களால் கைது செய்து
கள்வனே உன்னை
காலமெல்லாம் என்னில்
சிறை வைத்தேன்...//
நீங்க போலிஸா...?????? சொல்லவே இல்லை...வாரண்ட் எல்லாம் வச்சுக்கோங்க....
//நெஞ்சைத் தொட்டு
நிஜமாய் சொல் ஒன்று..
எவ்வாறு எனை நீ
மறந்தாய் இன்று?//
இம்புட்டையும் செஞ்சு புட்டு இவுக கேள்வி கேப்பாகளாம்....அந்த அப்புராணி மனுசன் பதில வேறச் சொல்லணுமாம்...????? இது என்ன நியாயம் யுவர் ஆனர்!!!!
ஜோக்ஸ் அப்பார்ட்...........கவிதை நல்லா இருக்குங்க அப்டீன்னு சொல்லுவேன்னு தானே எதிர் பாக்குறீங்க.....ஹா ஹா ஹா!!!!
அப்போ வர்ர்ர்ர்ட்டா!!!!!
ஆஆஆஅ... எவ்ளோ பெரிய கமெண்ட்ட்டு.....!!!!!!!!!
Pinniteenga!!!! :)
@Devinth
என்னதுங்க.. கூடையா?? :)
நன்றிங்க.
wow!!realy touching..Ananthi...
//எவ்வாறு எனை நீ
மறந்தாய் இன்று?//
இப்படி கவுஜ வருமுன்னு தெரியாம இருந்து இருக்கும்
ஃஃஃஃஃஎவ்வாறு எனை நீ
மறந்தாய் இன்று?ஃஃஃஃ இறுதி வரியில் உச்சியில் அடிச்சிட்டிங்களே..
அருமை அருமை..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என் மலர் விழியை கண்டிங்களா ?
கவிதை சூப்பர் போங்க....எனக்கு ஒரு உண்மை தெரியனும்....ஏன் உங்க கவிதையில் வரும் தலைவன் எப்போதும் பாராமுகத்துடன் இருக்கிறார்....கொஞ்சம் டிங்கரிங் செய்து சரிசெய்யணும் .....ஹ ஹ ஹ .....
Nice! :-)
இதயத்தில் சுமக்க
இசைந்த உன்னுள்ளம்...
இயல்பாய் இருப்பதில்
இறுக்கம் எதற்கோ?///
எவ்வளவு இறுக்கம்...??
இரு கரம் நீட்டியே
அணைக்கா விடினும்
இனிதாய் ஓர் வார்த்தை
இயம்பத் தயக்கம் ஏனோ?///
ம்ம்ம் இறுக்கம் தயக்கம் சூப்பர்ங்க..
கண்களில் தொடர்ந்த
காதல் பயணம்...
கல்லறை வரையிலும்
தொடரக் கூடும்..///
வேணாம் வேணாம் ஏன் அங்கே போய் கவிதை எழுத வா....
கண்களால் கைது செய்து
கள்வனே உன்னை
காலமெல்லாம் என்னில்
சிறை வைத்தேன்...////
ஆயுள் தண்டனையா..பாவம் அவர் உங்கள நேசம் கொண்டதுக்கு தண்டனையா..???
நெஞ்சைத் தொட்டு
நிஜமாய் சொல் ஒன்று..
எவ்வாறு எனை நீ
மறந்தாய் இன்று?////
ஒரு நாள் மறந்ததற்கு இப்படியா அந்த பச்சபுள்ளைய மிரட்டுறது...
கவிதை, உண்மையில் நல்லா தொடருங்கள்.
வேணாம் சொன்னா மட்டும் நிறுத்தவா போறீங்க..!!!!
//எவ்வாறு எனை நீ
மறந்தாய் இன்று? //
இந்தக் கவிதைய முழுசா படிச்சதாலையா கூட இருக்குமோ? # டவுட்டு ;)
சோகமான கவிதை
வலிக்கிறது பெண்ணின் வேதனை
http://thagavalmalar. blogspot.com/2011/05/blog-post.html உங்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.
தனிமை ததும்ப
சோகம் நிரம்ப
மனம் வெதும்ப
காதல் மொழி
வழி மொழிந்த
கவிதை ,
இதயத்தில் வைத்த
துக்கம் தைத்த
வலி வரிகள் . இது
புறக்கணிப்பின்
புதிய பரிணாமம்
வாழ்த்துக்கள் தோழி !
படத்தில் உள்ள பெண்ணை போலவே உங்கள் கவிதையும் அழகு.
கலக்குறீங்க...
அட.. கவிதைல தாங்க..
////நெஞ்சைத் தொட்டு
நிஜமாய் சொல் ஒன்று..
எவ்வாறு எனை நீ
மறந்தாய் இன்று?////
அருமை தோழி.. இதே கேள்விக்கு தான் ஒரு விடையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன்....
நெஞ்சைத் தொட்டு
நிஜமாய் சொல் //
அருமையாய் கேட்கும் கேள்விக்குப் பாராட்டுக்கள்.
super :)
லவ்லி ஆனந்தி... மறுபடி மறுபடி படிச்சேன்...:)
ரைட்டு...அருமை.
வாவ் கலக்கிட்டிங்க ஆனந்தி சூப்பர்.
//கண்களில் தொடர்ந்த
காதல் பயணம்...
கல்லறை வரையிலும்
தொடரக் கூடும்...//
பிடித்த ரசித்த கவிதை
கண்களில் தொடர்ந்த
காதல் பயணம்...
கல்லறை வரையிலும்
தொடரக் கூடும்..
நெஞ்சைத் தொட்டு
நிஜமாய் சொல் ஒன்று..
எவ்வாறு எனை நீ
மறந்தாய் இன்று?
ம்ம் கவிதை வரிகள் எனக்கு ரெம்ப பிடிசுருக்கு மேடம்
இது உங்கள் இதயத்தின் கேள்வியா???..ச்சும்மாத்தான் கேட்கிறேன்....
http://zenguna.blogspot.com
@சீமான்கனி
உங்க கருத்துக்கு ரொம்ப நன்றிங்க :)
@நசரேயன்
ஹா ஹா ஹா.. அவ்ளோ கொடுமையாவா இருக்கு?? ஹ்ம்ம்
நன்றிங்க :)
@ம.தி.சுதா
உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி.. :)
@நந்தினி
ஹா ஹா ஹா ஹா..
டிங்கரிங்-ஆஆஅ.???? செம செம... ROFL :-))))
தேங்க்ஸ் நந்து.
@ஜீ
நன்றிங்க :)
@சௌந்தர்
ஒரே புழுக்கம்.. அதான் இறுக்கம்... :)
ஹி ஹி ஹி.. ரெம்ப நன்றிங்கோ..
ஹா ஹா ஹா.. ச ச... அவ்ளோ எல்லாம் கொடுமைக்காரி இல்ல...
அப்படியும் வச்சிக்கலாம்
ஹா ஹா ஹா.. பச்ச புள்ள-யா???
ஹ்ம்ம் ஹும்ம்... யார் சொன்னாலும்.. நிறுத்துறதா.. இல்லையே...
நன்றி சௌந்தர். :)
\\நெஞ்சைத் தொட்டு
நிஜமாய் சொல் ஒன்று..
எவ்வாறு எனை நீ
மறந்தாய் இன்று?\\
ம்ம்ம்ம்ம்
@பாலாஜி சரவணா
ஹா ஹா ஹா... ஏங்க அவ்ளோ கொடுமையாவா இருக்குது என் கவிதை??
நன்றிங்க :)
@யாதவன்
கருத்திற்கு நன்றிங்க :)
@குடந்தை அன்புமணி
வருகைக்கு நன்றி :)
@A. R. Rajagopalan
உங்களின் கவிதைக் கருத்திற்கு நன்றிங்க :)
@சிங்கக்குட்டி
ரொம்ப நன்றிங்க :)
@இந்திரா
ஹா ஹா.. ரொம்ப நன்றிங்க :)
@எவனோ ஒருவன்
ஓ.. விரைவில் விடை காண வாழ்த்துக்கள்.
நன்றி :)
@ராஜராஜேஸ்வரி
பாராட்டிற்கு ரொம்ப நன்றிங்க :)
@மாணவன்
நன்றிங்க :)
@அப்பாவி தங்கமணி
ரொம்ப தேங்க்ஸ் பா :)
@தமிழ்வாசி - Prakash
நன்றிங்க :)
@தோழி பிரஷா
ரசித்து கருத்து சொன்னதற்கு தேங்க்ஸ் பா :)
@குணசேகரன்
ஹ்ம்ம்.. ஆமாங்க.. இதயத்தில் தோன்றிய கேள்வி :)
நன்றிங்க
@logu
ஹ்ம்ம்ம்.. வருகைக்கு நன்றிங்க :)
உனதருகில் நகர்கின்ற
ஒவ்வோர் நொடியும்..
உனக்குள் அமிழ்ந்து விட
ஆசை கொண்டேன்..
ம்ம்ம்...மிரட்டல்...
கவிதையில சொன்னேன்....ஆனந்தி
இப்போதாங்க உங்க பதிவுகள படிச்சுகிட்டு வரேன். அருமையான கவிதை
Post a Comment