பிஞ்சுக் குழந்தையையும்
வஞ்சி அழகையும்
மிஞ்சும் வண்ணம்
வகையாய் வாரிக்கொண்ட
வட்ட வெண்ணிலவே...!
வெட்ட வெளி வானத்தில்
வெகுளியாய் உன் உலா..நட்சத்திரக் கூட்டத்தில்
நாயகியே நீ தானோ...!
உள்ளக் கிடங்கில்
முழு நிலவாய் நீ தோன்றி
முத்தமிட்ட குழந்தையைப் போல்
மொத்தமாய் தோன்றி விட்டு
சத்தமின்றி மறைவதும் ஏனோ?
நங்கை முகம் மலர்ந்தால்
அவள் முழு நிலவாய்...
அவள் கன்னம் சிவந்து
தலை கவிழ்ந்தாலோ
தணிக்கும் பௌர்ணமியாய்...!
நீ தேய்ந்து மறைந்த வேளையில்
உனைத் தேடத் துடிக்கும் மனது
வசீகரமாய் நீ வளரும் போது
வந்தே உனைச் சேரச் சொல்லும்...!
குற்றாலச் சாரல் போல்
குளிர் நிலவில் கொண்டவனுடன்
குதூகலமாய் பேசுகையில்
குறையாத அன்புடனே
பறை சாற்றும் காதல் அங்கே...!
...அன்புடன் ஆனந்தி
34 comments:
me first
//கொஞ்சு தமிழையும்
பிஞ்சுக் குழந்தையையும்
வஞ்சி அழகையும்
மிஞ்சும் வண்ணம்
வகையாய் வாரிக்கொண்ட
வட்ட வெண்ணிலவே...!//
புதுசா இருக்கு!
அருமை! :-)
நிலவு கவிதை நல்லாருக்கு
வாங்க சரவணன் :)
கருத்துக்கு நன்றிங்க..!
@ஜீ
நன்றிங்க :)
ulagathileye ,enakku piditha nilavu.arumayana kavidhai.vaazhthukkal.
பௌர்ணமி நிலவொளிப்போல் பிரகாசிக்கிறது தங்கள் கவிதை....
வாழ்த்துக்கள்..
நிலா... காதல்... கவிதை... பிடிக்காமல் போகுமா.
@சசிகுமார்
ரொம்ப தேங்க்ஸ் :)
@savitha ramesh
எனக்கும் குளிர் நிலா-வை ரொம்ப பிடிக்குங்க.
தேங்க்ஸ் :)
@கவிதை வீதி..சௌந்தர்
கருத்துக்கு ரொம்ப நன்றிங்க :)
@தமிழ் உதயம்
சரியா சொன்னிங்க... ரொம்ப நன்றிங்க :)
வெட்ட வெளி வானத்தில்வெகுளியாய் உன் உலா..
நட்சத்திரக் கூட்டத்தில்
நாயகியே நீ தானோ...!
கண்டிப்பா அவங்க தான் நாயகி ...நலமா தோழி...
நங்கை மகம் மலர்ந்தால்
அவள் முழு நிலவாய்...
தோழி இங்கே முகம்னு வரணுமா?.....publish பண்ணாதிங்க
வசீகரமாய் நீ வளரும் போது
வந்தே உனைச் சேரச் சொல்லும்...!
அழகான வரிகள்...முழுநிலா அதோடு பக்கத்துல அம்மா மடி இல்லாட்டி நம் மனதிற்கு பிடித்த நண்பர்கள் அந்த நிலவொளியில் இருந்தால்...சூப்பர் அஹ இருக்கும்ல...
குளிர் நிலவில் கொண்டவனுடன்
குதூகலமாய் பேசுகையில்
குறையாத அன்புடனே
பறை சாற்றும் காதல் அங்கே...!
ஹி ஹி இத இத இத தான் எதிர்பாத்தேன்....நல்லா இருக்கு தோழி நிலவின் கவிதை....
@ரேவா
வாங்க... நான் நலம்.. நீங்க நலமா?
ஆமாங்க.. நாயகியே தாங்க.. :)
@ரேவா
ஆமாங்க... நெஜமா அப்படி இருக்கவும் ஒரு குடுப்பினை வேணுங்க :)
ஹா ஹா ஹா... நீங்க ரசிச்சு சொன்ன அத்தனை கருத்திற்கும் ரொம்ப நன்றிங்க.
உங்க அன்பான நட்பிற்கு நன்றி :-)
நிலாக்கவிதை அருமை..
இவ்வளவு பெருமையை வாரிக்கொண்ட நிலா நம்மை பற்றி என்ன நினைக்கிறது. கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்.
நிலவைப்போலவே குளுமையாக இருக்கு உங்க கவிதை,சூப்பர்..
அருமையான நிலவு கவிதை
புகைப்படம் அருமை
super..... nallarukkungga.
அந்த நிலவை போல உங்கள் கவிதையும், அருமை...
கவிதை அருமை வாழ்த்துகள்
ரொம்ப நல்லாருக்குப்பா..
நிலவே நீ தான் யாருக்கு சொந்தமடி..!!
எஸ் ஜே சூர்யவுக்கா, இல்ல அர்ஜுனுக்கா??!!! :D :D
/////கொஞ்சு தமிழையும்
பிஞ்சுக் குழந்தையையும்
வஞ்சி அழகையும்
மிஞ்சும் வண்ணம்
வகையாய் வாரிக்கொண்ட
வட்ட வெண்ணிலவே...!////
நிலவை போன்ற அழகான வரிகள்....மிகவும் ரசித்தேன்....
நிலவின்
நிழலில்
நின்று
நினைவுகளை
நிற்காமல்
நீளமாய்
நீலமாய்
நிலமாய்
நீந்தவிட்டு
நிதர்சனங்களை
நீக்கமற
நிலை
நிறுத்திய
நிகழ்த்திய ..................
இரத்தின கவிதை
நன்றி
வாழ்த்து
பாராட்டு ............
குதூகலமாய் பேசுகையில்
குறையாத அன்புடனே//
நிலவும் மலரும் கவிதைக்குப் பாராட்டுக்கள்.
கொஞ்சு தமிழையும் பிஞ்சுக் குழந்தையையும் வஞ்சி அழகையும் மிஞ்சும் வண்ணம்வகையாய் வாரிக்கொண்ட வட்ட வெண்ணிலவே...!
வெட்ட வெளி வானத்தில்வெகுளியாய் உன் உலா..
நட்சத்திரக் கூட்டத்தில்
நாயகியே நீ தானோ...!
உள்ளக் கிடங்கில்
முழு நிலவாய் நீ தோன்றி
முத்தமிட்ட குழந்தையைப் போல்
மொத்தமாய் தோன்றி விட்டு
சத்தமின்றி மறைவதும் ஏனோ?
நிலா...கவிதை
அசத்தல்..... ஆனந்தி....
உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்... நேரம் உள்ள போது பாருங்கள்... நன்றி... சுட்டி இதோ... http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_06.html
அருமை அருமை
முழு நிலவின் படமும் பதிவும்
மிக மிக அருமை
வளர் நிலவாய் தங்கள்
பதிவுகள் தொடரவாழ்த்துக்கள்
அருமையானா நிலாவும், கவிதையும். நல்ல இருக்கு
@தோழி பிரஷா
ரொம்ப நன்றிங்க பிரஷா.. :))
@சாகம்பரி
ஹ்ம்ம்.. நல்ல கேள்வி தான்.. கேட்டு பார்கிறேன்.. சொன்னால் சொல்கிறேன்.. :)
நன்றிங்க
@asiya omar
வாங்க.. ரொம்ப நன்றிங்க :)
@யாதவன்
ரொம்ப நன்றிங்க :)
@கலாநேசன்
ரொம்ப நன்றிங்க :)
(ஏன் கவிதை சரி இல்லையா?? சும்மா தான் கேட்டேன் )
@ஜீவன்பென்னி
ஹ்ம்ம். ரொம்ப தேங்க்ஸ் :)
@கந்தசாமி
வாங்க.. ரொம்ப நன்றிங்க :)
@ரிஷபன்
வருகைக்கு நன்றிங்க :)
@அமைதிச்சாரல்
வாங்க... ரொம்ப நன்றிப்பா... :)
@சஞ்சய்
ஹா ஹா ஹா... கேட்டு தான் சொல்லோனும்...
நல்லா வருது டவுட்ட்டு..!!!!!!!
@நந்தினி
தேங்க்ஸ் நந்து :)
@A.R. ராஜகோபாலன்
உங்கள் கவி பாராட்டிற்கு... நன்றிங்க.. :)
@ராஜராஜேஸ்வரி
கருத்துக்கு ரொம்ப நன்றிங்க :)
@செந்தில்குமார்
ரொம்ப தேங்க்ஸ் செந்தில் :)
@அப்பாவி தங்கமணி
தேங்க்ஸ் பா... படித்து விட்டேன் எல்லா வாரமும்..!
அசத்தல்.. வாழ்த்துக்கள்..!
@Ramani
உங்களின் வாழ்த்திற்கு நன்றிகள் :)
@Jaleela Kamal
வாங்க.. ரொம்ப நன்றிங்க :)
Post a Comment