topbella

Saturday, March 19, 2011

நிறுத்தி விடு....!

சுனாமியில் பாதிக்கப்பட்ட உயிர்களுக்கு சமர்ப்பணம்......


அத்தனை அழிவிற்கும் பின்
அழகாய்த் தான் உரு கொண்டேன்
அண்டை நாட்டவர் பாராட்டி
அசந்து நோக்கும் வண்ணம்
அத்தனையும் செய்து வந்தேன்...

என்ன தவறு செய்தேன் என்றே
எம்மக்களை எட்டி உதைத்தாய்
எதிர்பார்க்கா நேரம் அன்றோ
எப்படியோ போகட்டும் என்றே
எல்லை மீறி இயங்கி விட்டாய்....

நீ நிற்காது அடித்ததில்....
பெண்டு பிள்ளைகளும் அன்றோ
பேரலையில் சிக்கித் தவித்தர்..
கொன்றேனும் உன் கொள்கை பரப்ப
கொடுங்கோபம் தான் கொண்டாயோ...

பேரழிவால் பெரும் சோதனை
தத்தம் வீட்டையும் இழந்து
தன் சொந்த பந்தம் தொலைத்து...
நாட்டு மக்கள் எல்லாம்
நாதியற்று நடு ரோட்டினிலே...

அத்தனையும் போனால் கூட
ஆண்டுக்குள் பெற்றுவிடலாமே...
நீ கொண்டு போனதென்ன
நின்று திரும்பப்பெறும்...
நித்திரையா.. இல்லை நிதியா...

நின்று நிலைத்து வாழ
எண்ணிய எம் உயிர்களை
நித்திரையில் கொண்டு சென்றே
நீங்காப் பழிக்கு ஆளானாயோ...

ஆனது ஆகட்டும் என்றே...
ஆக்ரோஷ நடனம் ஆடிவிட்டாய்..
நிறுத்து உன் ஆவேசத்தை
நிம்மதியாய் வாழ விடு
நினைத்தும் பார்க்க முடியாது
இவ்வாறு இனியோர் இழப்பை...!

~அன்புடன் ஆனந்தி 

22 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

மக்களை பேரழிவிலிருந்து காத்திடு இறைவா...


எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு

Unknown said...

நம் சார்பிலும் ஜப்பானிய மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..

Unknown said...

நல்கவிதை

Unknown said...

கவிதை வரிகளில் ஜப்பான் மக்களுக்கான அனுதாபம் வலியாக வெளிப்படுகிறது.

Mythili (மைதிலி ) said...

மனிதன் சீண்டியதின் பெயரிலேயே இயற்க்கை சீறிகிறது... இது இயற்க்கை இந்த உலகில் உள்ள மக்கள் எல்லோருக்கும் விடும் எச்சரிக்கை..

சாந்தி மாரியப்பன் said...

பாதிப்பிலிருந்து சீக்கிரமே மீண்டு வரட்டும் அந்த மக்கள்..

மதுரை சரவணன் said...

மனம் வலிக்கிறது.. வாழ்த்துக்கள்

pichaikaaran said...

பேரழிவில் இருந்து எழுந்து வர தேவையான ஆற்றலை, அந்த இயற்கைதான் தர வேண்டும்...

அழிவும் அதுதான்... ஆற்றலும் அதுதான்

'பரிவை' சே.குமார் said...

மனம் வலிக்கிறது...
ஜப்பானிய மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..

சிந்தையின் சிதறல்கள் said...

அனுதாபங்கள் அத்தனை உயிர்களுக்கும்
வரிகளில் சோகம்
அருமை

logu.. said...

\\சுனாமியில் பாதிக்கப்பட்ட உயிர்களுக்கு சமர்ப்பணம்......\\

மேற்கொண்டு படிக்க முடியலங்க.

( நெனச்சாலே துக்கம் கண்ண கட்டுதுங்க )

சி.பி.செந்தில்குமார் said...

அஞ்சலிகள்

சௌந்தர் said...

கோவமான வார்த்தைகளோடு கவிதை
இனி இது போல் எப்போதும் நடக்க கூடாது

Nandhini said...

சுனாமியை பற்றிய கவிதையில் கோபக்கனல் வீசுகிறது.....படிக்கும் பொழுது ஜப்பானிய மக்களை நினைத்து நெஞ்சம் பாரமாக இருந்தது.

சாந்தி மாரியப்பன் said...

உங்களை தொடர்பதிவுக்கு அழைச்சிருக்கேன்..

http://amaithicchaaral.blogspot.com/2011/03/blog-post_22.html

Yaathoramani.blogspot.com said...

மனதின் வலி சிதறாமல் அப்படியே
படைப்பிலும் பிரதிபலிக்கிறது
வெல்ல முடியாததையெல்லாம்
வென்று காட்டிய ஜப்பான் மக்கள்
நிச்சயம் இதையும் வென்று காட்டுவார்கள்
மனம் தொட்ட பதிவு தொடர வாழ்த்துக்கள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

மனம் வலிக்கிறது.மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..

Thenammai Lakshmanan said...

கொடும் சோகம்தான்..:((

Ranjith said...

vazhai poo arumai...@ranjith www.ranjithpoems.blogspot.com @ www.keerthanikal.blogspot.com

தீபிகா said...

சமயத்துக்கு ஏற்ப கவிதை..

இராஜராஜேஸ்வரி said...

நிறுத்து உன் ஆவேசத்தை
நிம்மதியாய் வாழ விடு
பாதிப்பிலிருந்து சீக்கிரமே மீண்டு வரட்டும் அந்த மக்கள்.

சுரேஷ் சீதாராமன் said...

www.pudhukavithaigal.blogspot.com

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)