topbella

Wednesday, March 16, 2011

தக்காளி கிச்சடி / கொத்சு :


தேவையான பொருட்கள்:
தக்காளி - 4 
வெங்காயம் - 2
மல்லி இலை - சிறிது 

மசாலா (அரைக்க):
தேங்காய் - 1 துண்டு
பொட்டு கடலை - 5 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 7 / 8 (காரத்திற்கேற்ப)
புளி - சிறிது
உப்பு - தேவையான அளவு 

தாளிக்க:
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1 / 2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 / 2 டீஸ்பூன்
பெருங்காயம் - சிட்டிகை

செய்முறை:

          முதலில் தக்காளி, வெங்காயம் இவற்றை பெரிய பெரிய துண்டுகளாய் நறுக்கி, அதை பிரஷர் குக்கரில் வேக வைத்து கொள்ளவும். (பாத்திரத்திலும் வேக வைக்கலாம்).

          தக்காளி, வெங்காயம் ஆறியதும், அதை நன்கு மசித்துக் கொள்ளவும். (தேவைப்பட்டால் மிக்சியில் ஒரு சுத்து விட்டு அரைத்துக் கொள்ளலாம்), ரொம்பவும் மையாக அரைத்து விட கூடாது.

          ஒரு பாத்திரத்தில், சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும், கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து, அதனுடன் மசித்த தக்காளி கலவை, மற்றும், அரைத்த மசாலா, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். (தண்ணீர் வேண்டுமளவு சேர்த்துக்கொள்ளலாம்).

நன்கு கொதித்ததும், மல்லி இலை போட்டு இறக்கவும்.இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாய் இருக்கும்.


Tomato Kichadi / Kothsu:

Needed Ingredients:
Tomato - 4
Onion - 2
Cilantro leaves - little
Masala (To Grind):
Coconut - 5 tblsp (1 Big Piece)
Dalia (Roasted Channa dal) - 5 tblsp
Green Chillies - 7/8 (to your taste)
Tamarind - little bit
For seasoning:
Currileaves - little
Mustard Seeds - 1/2 tsp
Urad dhal - 1/2 tsp
Hing (Asafoetida) - pinch
Method:
First Cut the Tomatoes, and Onions into Big Chunks and Pressure Cook them. (You can cook them in stovetop too).
After it cools down, mash them coarsely. (If needed we can use Mixie to mash them, but do not mash them too much).
In a Pan, put some oil, add mustard seeds, urad dal, currileaves, hing to it. Once the mustard seeds pops, add  the Mashed tomato, onion mix, Ground masala, Needed salt, Needed water. Let it boil, till the masala smell goes off.
Garnish with Cilantro leaves. Tastes good with Idli or Dosai.~அன்புடன் ஆனந்தி 

27 comments:

Sanjay said...

(தேவைப்பட்டால் மிக்சியில் ஒரு சுத்து விட்டு அரைத்துக் கொள்ளலாம்//
கையாள தான் சுத்தி விடனுமா??!!! :D :D

சண்டை வந்தா மூஞ்சில பூசவும் யூஸ் பண்ணலாமா??!!!:D :D

Menaga Sathia said...

சூடான் இட்லி,தோசையுடன் இந்த கோத்சுவை சாப்பிட்டால் இன்னும் சாப்பிட்டுட்டே இருக்கலாம்..சூப்பரா இருக்குப்பா..

அப்புறம் உங்க மேல கோபம்..இன்னும் கொலு பதிவை போடவேயில்லை,நீங்க போடுறதுக்குள்ள இந்த கொலுவும் வந்துடும் போல...

Mahi said...

நல்லா இருக்கு ஆனந்தி! நெக்ஸ்ட் டைம் இட்லிக்கு செய்து பார்க்கிறேன்.

/தேவையான பொருட்கள்:தக்காளி - 4/னு சொல்லிட்டு 3 தக்காளி மட்டும் வைச்சிருக்கீங்க போட்டோல? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :) ;)

மதுரை சரவணன் said...

thanks for sharing... elimaiyaa irukku.vallthhtukkal

GEETHA ACHAL said...

சூபப்ராக இருக்கின்றது...பொட்டுகடலை சேர்த்து இருப்பது சூபப்ராக இருக்கும்..

அது என்ன கிச்சடி...

ம.தி.சுதா said...

////ஒரு பாத்திரத்தில், சிறிது எண்ணெய் விட்டு, ////

நல்ல எண்ணெய் தானே.. ஹ..ஹ..ஹ. பகிர்வுக்கு நன்றியுங்க..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.

ம.தி.சுதா said...

////ஒரு பாத்திரத்தில், சிறிது எண்ணெய் விட்டு, ////

நல்ல எண்ணெய் தானே.. ஹ..ஹ..ஹ. பகிர்வுக்கு நன்றியுங்க..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.

logu.. said...

மறுபடியும் ஆரம்பிசுடாய்ங்க அலப்பறைய..

ஆல் மக்கள்ஸ்ஸ்ஸ்...
இதுல ஏதோ உள்குத்து இருந்திட போகுது.. உஷாரா இருங்கப்பு.

'பரிவை' சே.குமார் said...

thanks for sharing...

Asiya Omar said...

simply superb.

Geetha6 said...

அருமை மேடம்.

middleclassmadhavi said...

தக்காளி சட்னி/கொத்சு என்று இருக்கணுமோ தலைப்பு - எங்க ஊரில கிச்சடின்னா உப்புமா மாதிரி...!!

தோசையும் கொத்சுவும் பார்க்கவே சாப்பிடும் ஆவலைத் தூண்டுகின்றன..

சாருஸ்ரீராஜ் said...

இன்று காலை தோசைக்கு இது தான் ஆனால் நான் பொட்டுகடலை சேர்த்தது இல்லை அடுத்த முறை டிரை பண்ணுகிறேன்

Akila said...

tomato kothsu loooks divine..
DNSW: F Roundup
Dish Name Starts with G
Learning-to-cook
Regards,
Akila

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

This is my favourite... I do it so often (easy too...thats the real secret... ha ha...:)

I don't add onion though...this is a super recipe too...thanks

Its a lovely combination for chappathi also Ananthi...try sometime...:)

சாந்தி மாரியப்பன் said...

பொட்டுக்கடலை சேர்த்து வித்தியாசமா இருக்கு..

Unknown said...

Kosthu super....arumaya irukku dosai kooda.

ஜெய்லானி said...

தேவையான பொருள்ள உப்பு இல்லவே இல்லை ... :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சஞ்சய்
நீங்க சுத்தினாலும் சரி, இல்ல உங்க கையால சுத்தினாலும் சரி...
ஆனா.. எந்த டேமேஜ்-க்கும் நா பொறுப்பு இல்ல...சரியா?
(என்னமா தின்க் பண்றாங்கப்பா... ஸூஊஉ)

அது உங்க இஷ்டம்.. எதிராளி ரியாக்ஷன் பொறுத்தது.. :D :D

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@S. Menaga
ரொம்ப தேங்க்ஸ் பா... :-))

ரொம்ப ரொம்ப சாரி... நானும், அடுத்த கொலுவே வந்திரும் போல இருக்கு.. பேசாம அப்பவே போட்டால் உபயோகமா இருக்குமேன்னு தான் நினச்சேன்பா... :)
நோ கோவம்ஸ்.. ப்ளீஸ்....!! :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@Mahi
கண்டிப்பா செய்து பாருங்க..
ஹா ஹா ஹா.. இது செம... தட்டில் அவ்ளோ தான் இடம் இருந்ததுப்பா :-)))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@மதுரை சரவணன்
கருத்திற்கும், வருகைக்கும் நன்றிங்க :)@Geetha Achal
வாங்க.. அம்மா அப்படி தான் சொல்வாங்க... அதனால் அதே பெயர் வச்சிட்டேன்.. :)


@ம. தி. சுதா
ஹா ஹா... உங்க இஷ்டம் தான்.. நல்லெண்ணெய் அல்லது கடலெண்ணெய்.. :)
நன்றி


@logu
அது ஏன் இந்த கொலைவெறி.... நா ரெசிப்பி போட்டா மட்டும்... எங்க இருந்து தான் வரீங்களோ... தெரியலயே... இருந்தாலும்... உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி :)


@சே. குமார்
வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க :)


@asiya omar
Thanks for the comment :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@Geetha6
கருத்துக்கும், வருகைக்கும் நன்றிங்க :)


@middleclassmadhavi
கரெக்ட் தாம்பா... ஆனா.. அம்மா அப்படி சொல்லியே எனக்கு பழகி போச்சுங்க..
ரொம்ப நன்றிங்க :)


@சாருஸ்ரீராஜ்
ஹ்ம்ம்... கண்டிப்பா ட்ரை பண்ணுங்க.. உங்களுக்கு பிடிக்கும் :)
தேங்க்ஸ்..


@Akila
Thanks a lottt Akila.. :-)))


@அப்பாவி தங்கமணி
ஹா ஹா... அது என்னவோ உண்மை தான்.. :-)
கண்டிப்பா ட்ரை பண்றேன் பா... தேங்க்ஸ்..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@அமைதிச்சாரல்
வாங்க... தேங்க்ஸ்.. ஆமாங்க.. நல்லா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. :-))


@savitha ramesh
தேங்க்ஸ் பா... நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.. :-))@ஜெய்லானி
சரி சரி.. போட்டாச்சு போட்டாச்சு.. நன்றி :)

r.v.saravanan said...

நன்றி ஆனந்தி

Unknown said...

yum yum ananthi

going to try it today. will let u know :))))

Menaga Sathia said...

உங்களின் இந்த கொத்சு செய்தேன்..சுவை சூப்பரா இருந்தது ஆனா உங்க அளவுக்கு கொத்சு கலர் வரல...மிக்க நன்றி!!

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)