topbella

Friday, March 25, 2011

என் பெயர் வந்த காரணம்... தொடர்பதிவு...!


எல்லாரும் ஏற்கனவே வேண்டுமட்டும் எழுதி முடிச்சிட்டீங்க... இதுல நா வேற, புதுசா என்னத்த சொல்றது..... இருந்தாலும், சௌந்தர் மற்றும் அமைதிச்சாரல் என்னை மதிச்சு தொடர் பதிவு எழுத சொல்லிருக்காக..  அந்த மருவாதிக்காகத்தேன் எழுதுறேன்...! நீங்களும் கொஞ்சம் படிச்சிட்டு போங்கப்பு...! ( (@சௌந்தர்...என்ன உள்குத்துல எழுதச் சொன்னீங்களோ... யாருக்கு தெரியும்? அவ்வவ்)          அது ஒரு அழகிய காலை வேளை.. விடிந்தும் விடியாத விடியற்காலை பொழுது..... சூரியன் எழவா? விழவா? என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்க..... பறவைகளின் மெல்லிய கீச் ஒலிகள்...... தெருக்களில் ஆட்கள் நடந்து செல்லும் அரவம்.... உறக்கத்தில் இருந்து மெதுவாய் விழித்து எழுந்தாள்..........
விரைந்து எழுந்த சூரியன்
விடியற் காலை என்றது...
குதூகலமான குயிலின் இசையில்..
கும்மிருட்டும் கூடி மறைந்தது...!                       
          ஹ்ம்ம் கும்ம்.. நல்லா கதை கேட்பீங்களே... இப்படி எல்லாம் சொல்லி ஒரு பில்ட்-அப்ப குடுக்கலாம்னு ஒரு ஆசை தான்... எனக்கே தெரியுது, இது கொஞ்சம் ஓவருன்னு.. ஹி ஹி ஹி... சாரி பார் தி டிஸ்டர்பன்ஸ்...!

          என் அம்மாவழி உறவில், அம்மா தான் பெரிய பெண் என்பதால், நான் தான் முதல் பேத்தி... நான் பிறந்த போது, கொஞ்சம் சிரமப்பட்டுத் தான் பிறந்தேனாம்... (தொப்புள் கொடி சுற்றி இருந்ததாம்) என் ஆச்சியின் (அப்பாவின் அம்மா) பெயரத் தான் எனக்கு வச்சாங்க.. அப்பொழுதெல்லாம், மாமியார் பெயர் சொல்லி அழைக்க முடியாதென்பதால், எனக்கு அழைக்கும் பெயராக ஆனந்தின்னு வச்சாங்க...!  

          ஒருவேளை நா எப்பவும் சந்தோசமா இருக்கணும்னு இந்த பேர் வச்சாங்களோ என்னவோ..! நான் முடிந்தவரை சந்தோசமா இருக்கறது, மட்டும் இல்லை, என்னை சேர்ந்தவர்களையும் சந்தோசமா இருக்க வைக்க முயற்சி பண்ணுவேன்..!

          வீட்டின் முதல் பேத்தி என்பதால்....செல்லம் ஜாஸ்தி தான்..!  ஆளுக்கு ஒரு பேர் வச்சி செல்லமா கூப்பிடுவாங்க....! (அதெல்லாம் என்னன்னு கேக்கப் பிடாது...)

          எஸ். கே. அவங்க, கல்பனாவின் பெயர் காரணம் ஒரு நாள் சொல்லப் போயி, நானும் ஆர்வத்தில் என் பெயர் காரணமும், சொல்லுங்கள் என்று கேட்டு அறிந்தேன்... அது இப்போ சமயத்துல என்னமா யூஸ் ஆகுது பாருங்க.. நன்றி எஸ்.கே.!


ஆனந்தி

பெயர் விளக்கம் - மகிழ்ச்சி, இன்பம்


இப்பெயரை உடையவர்கள் இயற்கையாகவே நட்பை விரும்புபவர்களாகவும் மற்றவர்களை சமூகரீதியாகவும் வணிகரீதியாகவும் புரிந்துகொள்பவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் அதிகம் வீட்டை நேசிப்பவர்களாக இருப்பார்கள். இவர்களின் ஒரு சிறிய பலவீனம் காலதாமதம். சில சமயங்களில் தங்கள் திட்டங்களை ஏதோ ஒரு காரணத்திற்காகவோ கவனம் செலுத்த முடியாததாலோ தள்ளிப் போடுவார்கள்.


பெரும்பாலும் இதில் சொல்லியிருப்பது, எனக்கு ஒத்துப் போகும்.. அதிலும், அந்த கால தாமதம்... மேட்டர்...... (சரி சரி.. போ போ.. அதான் ஊருக்கே தெரியுமேன்னு சொல்றது கேட்டுருச்சி...) ரெம்பவே கரெக்ட்...!

எனக்கும் என் பெயர் பிடிக்கும்... எனக்கு ஆனந்தமாய் இருக்க பிடிக்கும்...! நா இருக்குற இடமும், கலகலப்பா இருக்கணும்னு தான் ஆசைப்படுவேன்..! என் அம்மா கூட சில நேரங்களில், ஒரு 10 நிமிஷம்.....ஒரு இடத்துல அமைதியா உக்காரு... உனக்கு 50 ரூபாய் தரேன்னு சொல்வாங்க... ஹி ஹி... நாங்க எப்புடி... ஒரு தரம் கூட அந்த அம்பது ரூபாய, வாங்கினது கிடையாது...!

ஸப்பாஹ்ஹ்ஹ்ஹ.... ஒரு வழியா என் கடமை முடிந்தது, நாளைக்கு நாலு பேர், தொடர் பதிவு எழுதாம விட்டுட்டேன்னு குறை சொல்லிறப் பிடாது இல்லியா...? அதுக்குத் தான்...இந்த பதிவு..!

இவ்ளோ நேரம்...... (பல்லக் கடிச்சிட்டு...) பொறுமையா... படிச்ச உங்க பேரு என்னாங்க....? முடிந்தால் சொல்லிட்டு போங்களேன்....! நன்றிகள் பல...!


~அன்புடன் ஆனந்தி (படம்: நன்றி கூகிள்)

43 comments:

dheva said...

உங்க போட்டோ நல்லா இருக்கு..........! உங்க பேர பத்தி சொல்ல என்ன இம்புட்டு ரோசனைன்னு கேக்குறேன்...?

//அது ஒரு அழகிய காலை வேளை.. விடிந்தும் விடியாத விடியற்காலை பொழுது..... சூரியன் எழவா? விழவா? //

ஓ.. சூரியன் கேட்டுச்சாக்கும்.....ம்ம்ம்ம் சரி............

//ஹ்ம்ம் கும்ம்.. நல்லா கதை கேட்பீங்களே... //

அப்போ இது கதையில்லையா..நெசமா........ச்சே போர் போங்க..! ஆனந்தின்னு ஒரு பேரு இதுக்கு வெளக்கம் கேட்டா 6 மாச புள்ளை கூட சொல்லும் அதுக்கு எம்புட்டு பில்டப்பு....!

//எனக்கும் என் பெயர் பிடிக்கும்... எனக்கு ஆனந்தமாய் இருக்க பிடிக்கும்...! நா இருக்குற இடமும், கலகலப்பா இருக்கணும்னு தான் ஆசைப்படுவேன்..! என் அம்மா கூட சில நேரங்களில், ஒரு 10 நிமிஷம்.....ஒரு இடத்துல அமைதியா உக்காரு... உனக்கு 50 ரூபாய் தரேன்னு சொல்வாங்க...//

நான ஆயிரம் USD தரேன் முடியுமா?????? (முடியாதுன்ற நம்பிக்கையில பந்தயம் கட்டியாச்சு)

பல்லை கடிச்சிகிட்டு ரொம்ப பொறுமையா படிச்சு முடிச்சாச்சு.....பேரெல்லாம் எதுக்குங்க.. ச்ச்சும்ம கூகில்ல தட்டுங்க தன்னால வந்து விழும் பேரு...!

அப்போ வர்ர்ர்ட்ட்டா!

Devinth said...

அருமையான பெயர்காரணம் !!! :)
அப்படியே என்னோட பெயருக்கும் என்ன காரணம்னு கொஞ்சம் சொலுங்களேன் :P

ம.தி.சுதா said...

அனந்தம் வந்தத-- ஆனந்தி -- லே... அருமைங்கோ..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகில் சமூகபதிவாளனாக என்னை முத்திரை குத்திய முக்கிய சாதனை
இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...

ப்ரியமுடன் வசந்த் said...

//உங்க போட்டோ நல்லா இருக்கு..........!//

ha ha ha ha

50 ரூவா :-))

நல்லா கதை சொல்றீங்க :)

ஜெய்லானி said...

யோசிக்கிறதை பார்த்தா கொஞ்சம் ஓவராதான் தெரியுது :-)) நா படத்தை சொன்னேன்

Unknown said...

@ ananthi...

sooper. very interesting.. :))

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

உங்க பெயரைப் போலவே, அதுக்கு நீங்க கொடுத்த விளக்கமும் அருமை!!

Unknown said...

Naanum kadhayo nu nammbi padikka arambichen....ippadi emathi putteemgale... :(

சி.பி.செந்தில்குமார் said...

ஆனந்தம் ஆனந்தம் பாடும்....மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்..1000 1000 காலம் உங்க பிளாக்கு மொக்கை போடும்...ஹா ஹா

Unknown said...

அம்பது ரூவா மேட்டர் சூப்பர். என்னையும் கூட இப்படிச் சொல்லி இருக்காங்க.

சௌந்தர் said...

( (@சௌந்தர்...என்ன உள்குத்துல எழுதச் சொன்னீங்களோ... யாருக்கு தெரியும்? அவ்வவ்)////

உள்குத்து எல்லாம் இல்லை உங்களை தான் மிரட்டி எழுத சொல்ல முடியும் அதான்...!!!

அது ஒரு அழகிய காலை வேளை.. விடிந்தும் விடியாத விடியற்காலை பொழுது..... சூரியன் எழவா? விழவா? என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்க..... ////

பாருடா பிறக்கவேயில்லை அதுக்குள்ள என்னமா நோட்பண்ணி இருக்காங்க

என் ஆச்சியின் (அப்பாவின் அம்மா) பெயரத் தான் எனக்கு வச்சாங்க.. ////

அந்த பெயர் என்ன..?????


ஆளுக்கு ஒரு பேர் வச்சி செல்லமா கூப்பிடுவாங்க....! (அதெல்லாம் என்னன்னு கேக்கப் பிடாது...)/////

ஸூஊஊ எதுக்கு இந்த தொடர் பதிவு இந்த மாதரி பெயர் சொல்ல தான் அதை கேக்க கூடாதுந என்ன அர்த்தம்


சில சமயங்களில் தங்கள் திட்டங்களை ஏதோ ஒரு காரணத்திற்காகவோ கவனம் செலுத்த முடியாததாலோ தள்ளிப் போடுவார்கள்.////

ஒரு சின்ன திருத்தம் சில சமையம் இல்லை பல சமயம்


ஒரு 10 நிமிஷம்.....ஒரு இடத்துல அமைதியா உக்காரு... உனக்கு 50 ரூபாய் தரேன்னு சொல்வாங்க... ///

நான் 500 ரூபாய் தரேன் உக்காருங்க(ஒரு மணிநேரம் சும்மா உட்கார முடியுமா வடிவேல் சொல்வாரே அதை நினைச்சு பாருங்க)நாளைக்கு நாலு பேர், தொடர் பதிவு எழுதாம விட்டுட்டேன்னு குறை சொல்லிறப் பிடாது இல்லியா...? அதுக்குத் தான்...இந்த பதிவு..!////

ம்ம்ம்ம் இதோடா.... ரொம்ப தான்...

படிச்ச உங்க பேரு என்னாங்க....? முடிந்தால் சொல்லிட்டு போங்களேன்....! ////

நான் யாருன்னு எனக்கே தெரியலை இதுல பேர் வேற தெரியனுமா..???


ரொம்ப நல்லா இருந்துச்சு உங்க பெயர் காரணம் .....(இப்படி தான் சொல்லணும் வேற என்ன சொல்ல)
thanks ....;)

Asiya Omar said...

பகிர்வு அருமை,அந்த 50 ரூ மேட்டர் எனக்கும் ஒத்து போகும்.

சௌந்தர் said...

ஐயோ பாருங்க உங்க போட்டோ பத்தி சொல்ல மறந்துட்டேன் சின்ன வயசுல நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க

cheena (சீனா) said...

அன்பின் ஆனந்தி

பரவா இல்லையே - பயங்கர பில்டப்பு கொடுத்து பெயர்க்காரணம் சொல்லிடீங்க - தொடர் பதிவு எழுதாத பதிவர்னு யாரும் சொல்லிடப்பிடாதுன்னு எழுதிட்டீங்க - பலே பலே

logu.. said...

\\ஆளுக்கு ஒரு பேர் வச்சி செல்லமா கூப்பிடுவாங்க....! (அதெல்லாம் என்னன்னு கேக்கப் பிடாது...)\\\

ஹி..ஹி.. சொல்லலேன்னாலும் கொஞ்சமா ரோசன பண்ணி பாத்தோமுல்ல..

( கழுதை.. கபோதி பயபுள்ளை.. அப்டீன்னு கூப்ட்ருப்பாய்ங்களோ # டவுட்டு )

சசிகுமார் said...

//ஸப்பாஹ்ஹ்ஹ்ஹ.... ஒரு வழியா என் கடமை முடிந்தது, நாளைக்கு நாலு பேர், தொடர் பதிவு எழுதாம விட்டுட்டேன்னு குறை சொல்லிறப் பிடாது இல்லியா...? //

ஹா ஹா ஹா

கமலேஷ் said...

தேவா கமென்ட்
சிரிப்பு தாங்க முடியலை.

பகிர்வுக்கு நன்றி சகோதரி.

ISR Selvakumar said...

எப்படியோ ஆளாளுக்கு தன்னுடைய பெயர் வந்த காரணத்தை யோசிக்க வைத்துவிட்டது.
சூப்பர் தங்கை... இரசித்துப் படித்தேன்.

jothi said...

//இப்படி எல்லாம் சொல்லி ஒரு பில்ட்-அப்ப குடுக்கலாம்னு ஒரு ஆசை தான்..//

உண்மையிலேயே பில்ட‌ப் சூப்ப‌ர்தான்

'பரிவை' சே.குமார் said...

அம்பது ரூவா மேட்டர் சூப்பர்...
அருமையான பெயர்காரணம் !!!

Unknown said...

mudiyalai...
but imp info..

mahi sw-eng india

r.v.saravanan said...

பகிர்வுக்கு நன்றி ஆனந்தி

Mythili (மைதிலி ) said...

பூன போட்டோ எதுக்குங்கோஓஓஓஓ?? ந்ல்ல பேர் விளக்கமுங்கோ....

ரிஷபன் said...

ஆனந்தமாய் இருப்பதும் பிறர் ஆனந்தம் கெடாமல் நடப்பதும்..
அப்புறம் என்ன.. அதாங்க வாழ்க்கை.. நல்ல பெயர்.. நல்ல பதிவு.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

இந்தத் தொடர் பதிவு படித்துவிட்டு
ரொம்ப ஆனந்தப்பட்டேன். (அப்பாடா
முடிந்தது)

மோகன்ஜி said...

ஆனந்தி ! அழகாய் எழுதியிருக்கிறீர்கள்.
உங்கள் பெயரில் உள்ள ஆனந்தம் என்றென்றும் உங்களை நீங்காது இருக்கட்டும். போட்டோ அழகாய் இருக்கு..எங்க பிடிச்சீங்க?

Nandhini said...

/////இவ்ளோ நேரம்...... (பல்லக் கடிச்சிட்டு...) பொறுமையா... படிச்ச உங்க பேரு என்னாங்க....? முடிந்தால் சொல்லிட்டு போங்களேன்....! நன்றிகள் பல...!///

என் பேரு நந்தினி .....அத்தோட உங்க பேரு வந்த காரணம் தெரிஞ்சிக்கிட்டேன்...மிகவும் அருமை...

Kousalya Raj said...

பேர் வச்சதால ஆனந்தமா இருக்கீங்களா ? ஆனந்தமா சிரிச்சிட்டே இருக்கிறதை பார்த்து ஆனந்தி வச்சாங்களா ?! :)) எப்படியோ பதிவை படிக்க வந்தவங்களையும் ஆனந்தமா மாத்திடீங்க...வாழ்த்துக்கள் !

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//அது ஒரு அழகிய காலை வேளை//
ஆரம்பமே அலப்பறையாத்தான் இருக்கு...அதையே பேரா வெச்சு இருக்கலாம்... ஹி ஹி.. ஜஸ்ட் கிட்டிங் ஆனந்தி...:)))

//என்னை சேர்ந்தவர்களையும் சந்தோசமா இருக்க வைக்க முயற்சி பண்ணுவேன்//
இப்படி பதிவையும் போட்டுட்டு இப்படி பேசினா எப்படி??... மறுபடியும் ஜஸ்ட் கிட்டிங் ஐ சே...;)))

//ஹி ஹி... நாங்க எப்புடி... ஒரு தரம் கூட அந்த அம்பது ரூபாய, வாங்கினது கிடையாது//
அதானே... கோமாவுக்கே போனாலும் கெக்கே பிக்கேனு பேசிட்டு தானே இருப்போம்.. ஹி ஹி.. என்னையும் சேத்து தான் சொல்றேன்...:)

//பொறுமையா... படிச்ச உங்க பேரு என்னாங்க....?//
என் பேரு மீனாகுமாரி... ஹி ஹி... பாட்டு பிடிக்கும்னு சொல்ல வந்தேன்...:)

TamilRockzs said...

தங்களை tamilrockzs official வலைப்பூ குழுமத்தில் பெருமையுடன் அறிமுக படுத்தி இருக்கிறோம் .
நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள் . தங்கள் வரவை எதிர் பார்க்கும் நல்ல உள்ளங்கள் .
பதிவுலகில் பெண்கள் ...... ( http://tamilrockzs.blogspot.com/2011/03/blog-post_28.html )

நன்றி ,
அன்புடன் ,
Admin

www.tamilrockzs.com

www.tamilrockzs.blogspot.com

இராஜராஜேஸ்வரி said...

இவ்ளோ நேரம்...... (பல்லக் கடிச்சிட்டு...) பொறுமையா... படிச்ச உங்க பேரு என்னாங்க....?
ரொம்ப நல்லா இருந்துச்சு....
solluvoomla...

SANKARALINGAM said...

Kousalya said...
பேர் வச்சதால ஆனந்தமா இருக்கீங்களா ? ஆனந்தமா சிரிச்சிட்டே இருக்கிறதை பார்த்து ஆனந்தி வச்சாங்களா ?! :)) எப்படியோ பதிவை படிக்க வந்தவங்களையும் ஆனந்தமா மாத்திடீங்க...வாழ்த்துக்கள் !//
என் கருத்துக்களும், கௌசல்யாவின் கருத்துக்களே.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@தேவா
வாங்க... ரெம்ப நன்றி.. எதையும் யோசிச்சு செய்யுற பரம்பரையாக்கும்..!!

ஆமா.. என்கிட்டே கேட்டுச்சு.. ரொம்ப பீல் பண்ணினா சொல்லுங்க.. நாளைக்கு உங்க ஊட்டு பக்கம், வரச் சொல்றேன்.. :)

அப்டியா.... ஆறு மாச புள்ள சொல்ற அளவுக்கு..நா எப்போ பேமஸ் ஆனேன்... சொல்லவே இல்ல.... :)

அதெல்லாம் முடியாது.. கோடி ரூவா குடுத்தாலும் முடியாது :-)
கூகிள்ல தட்டினேன்... ஏதோ...வார்ரியர்ன்னு வருதுங்கோ..
அவுரா நீங்க.... ஓகே ஓகே.. :-)))
@@தேவிந்த்
ரொம்ப நன்றிங்க..
முடிந்தால் கேட்டு, சொல்றேன்.. :)
@@ம.தி. சுதா
அடடா.. இந்த வரி பாட்ட போட்டு விட்டிருக்கலாமே... :-))
தேங்க்ஸ்


@@ப்ரியமுடன் வசந்த்
ஹிஹிஹி.. ரெம்ப தேங்க்ஸ் :-))
அம்பது ரூவா மேட்டர்...கதை இல்லைங்க..நெசமாத்தேன்.. சொன்னேன்...!@@ஜெய்லானி
ஹா ஹா ஹா.. எதையும் யோசிச்சு தானே செய்வோம்.. :-)
தேங்க்ஸ் ஜெய்

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@பூர்ணா
ஹா ஹா.. தேங்க்ஸ் டா ;)@@ஓ.வ. நாராயணன் ஓனர் ஆப் மாத்தி யோசி
ரொம்ப நன்றிங்க :)
@@சவிதா ரமேஷ்
ஹா ஹா ஹா... ஐ அம் வெரி சாரிங்க..! நோ பீலிங்க்ஸ்.. ஒரு கதை, எழுதிட்டா போச்சு... (அச்சோ..சும்மா சொன்னேன்.. ஓடிராதீங்க பா ) :-)))
தேங்க்ஸ்
@@சி.பி. செந்தில்குமார்
ஹா ஹா ஹா... தேங்க்ஸ் தேங்க்ஸ்.. :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@கலாநேசன்
ஹா ஹா.. ஓ... அப்படியாங்க.. (ஒரே பேமிலின்னு சொல்லுங்க...)
தேங்க்ஸ்
@@சௌந்தர்
அவ்வ்வ்வ்.. அதானே பார்த்தேன்.. :-)

ஹி ஹி... நீங்க ஒரு ஆளு தான் இப்புடி அறிவா நோட் பண்ணி இருக்கீங்க போங்க.. என்னே ஒரு ஞானம்.. :-))

அதெல்லாம் சொல்ல முடியாது :-))
ஹா ஹா ஹா.. ஏன் அதெல்லாம் விழா வாரியா சொல்லிட்டு.. அப்புறம் அதவச்சு நீங்க பதிவு போடவா... :-)

சரி சரி.. கிர்ர்ரர்ர்ர்.. போதும்... அதான் நாங்களே ஒத்துக்கிட்டோம்ல..

ஹா ஹா ஹா... சாரி.. தேவா தரேன்னு சொன்ன, 500 டாலருக்கே...............!!

அச்சோ.. பேர் இல்லாமலா ஊருக்குள்ள சுத்திட்டு திரியுறீங்க.. பார்த்து கவனம்.. :-))

தேங்க்ஸ் சௌந்தர்.. (நானும் நம்பிட்டேன்)
தொடர்பதிவிற்கு அழைத்ததற்கு..!!

@@asiya omar
ஹா ஹா ஹா..
ரொம்ப நன்றிங்க :-))
@@சௌந்தர்
ஹா ஹா ஹா... ரெம்ப தேங்க்ஸ்.. :-))))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@cheena (சீனா)
உங்கள் கருத்திற்கும், வரவிற்கும் ரொம்ப நன்றிங்க :)


@@logu
ஹா ஹா ஹா..
வாங்க.. எங்க காணோமேன்னு பார்த்தேன்..
இதெல்லாம் என்னைய கூப்பிடல... வேற யார கூப்டாங்கன்னு தெரியலங்க.. :-)
நன்றி
@@சசிகுமார்
கருத்துக்கு நன்றிங்க :)
@@கமலேஷ்
ஹா ஹா ஹா.. எனக்கும் தாங்க.. நன்றி :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@r. selvakumar
வாங்க அண்ணா.. சந்தோசம் :-))

@@jothi
ஹா ஹா ஹா...
தேங்க்ஸ் ஜோதி :-)

@@சே. குமார்
வாங்க.. ரொம்ப நன்றிங்க :-)


@@Maheswaran
கருத்திற்கு நன்றி :)

@@r.v. saravanan
ரொம்ப நன்றிங்க :)

@@Mythili Krishnan
ஹா ஹா.. சும்மா தான்.. எனக்கு பிடிச்சது அதான் போட்டுட்டேன் :-))
தேங்க்ஸ் மைதீ

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@ரிஷபன்
உங்க கருத்துக்கு ரொம்ப நன்றிங்க :)

@@NIZAMUDEEN
ஹா ஹா ஹா.. எப்படியோ சந்தோசமா இருந்த சரி தாங்க. :)
@@மோகன்ஜி
வாங்க.. ரொம்ப நன்றிங்க :-)
எல்லாம் கூகுளே தான்ங்க..
@@நந்தினி
ஹா ஹா ஹா.. தேங்க்ஸ் டா ;-))
@@Kousalya
வாங்க கௌசல்யா.. ஹா ஹா ஹா.. நல்ல கேள்வி தான்.. (கோழியில் இருந்து முட்டை யா...............)
தேங்க்ஸ்

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@அப்பாவி தங்கமணி
ஹா ஹா.. சரி சரி திட்டப் பிடாது.. :-)

ஹா ஹா.. குட் கொஸ்டின்.. ஐ லைக் யூ.. ;-))

பின்னே.. பேசலேன்னா உயிர் வாழ்வது எப்படி.. என்ன சொல்றீங்க??

ஹா ஹா ஹா... ROFL
செம பேர் போங்க.. உங்கட ஊரு கன்யாகுமாரிங்களா??

தேங்க்ஸ் புவனா..:)
@@TamilRockzs
உங்கள் வலைத் தளத்தில் அறிமுகப் படுத்தியதற்கு ரொம்ப நன்றிங்க.. வாழ்த்துக்கள்..!!
@@இராஜராஜேஸ்வரி
ஹா ஹா ஹா.. உங்களுக்கு ரெம்ப பெரிய மனசுங்க.. :-))
ரொம்ப தேங்க்ஸ்
@@SANKARALINGAM
உங்களின் கருத்திற்கும் நன்றி :-)

Sanjay said...

அப்போ உண்மையான பேர் என்னவா இருக்கும்??

பேச்சியம்மா
பறவை முனியம்மா
செல்லாத்தா
தேனீ குஞ்சரம்மால்

இப்டி ஏதுமா இருக்குமோ ??!!!:D :D

Vanakkam said...

Enaku Eppavo Theriyum Unga Ammaata Antha 5o Ruba Vaanga Mudiyaadathu Sari Sari Ithukellaamaa Feel Panna Mudiyumaaa!!!

painted princess collection said...

Hey ananthi, I liked your blog and the meaning for the Name" Since I am also one more a n a n d h i I thoroughly enjoyed my visit here.
anandhirajan
www.anandhirajansartsncrafts.blogspot.com

Anonymous said...

//அதெல்லாம் என்னன்னு கேக்கப் பிடாது...)//
சரி எல்லாத்தையும் சொல்ல வேண்டாம். ஒரு ஓரிரண்டு பேரைச் சொன்னால் கொறஞ்சா போயிடுவீங்க. அவ்வ்வ்வ்வ்வ்வ்

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)