topbella

Sunday, April 18, 2010

இதமான இளவேனில்....!!!



சப்பாஹ்..... ஒரு வழியா குளிர் காலம் முடிஞ்சு இளவேனிற்காலம் தொடங்கியாச்சு.... ஏதோ, பனியைப் பார்க்க நல்லா இருக்கும் தான்.. ஆனா.. ரொம்ப பாதுகாப்பா வீட்டுக்குள்ள உக்காந்துகிட்டு பாக்க தான் நல்லா இருக்கும்.. ( நீ நல்லா இருக்கியா?? நா நல்லா இருக்கேன்னு கேட்டுக்கற மாதிரி தான்.....!! )


வெளில கிளம்பனும்னாலே... செம கடியா இருக்கும்... முதல்ல ஒரு டிரெஸ்ஸை போட்டு, அதுக்கு மேல விண்டர் ஜாக்கெட் போட்டு, , கையில க்லௌஸ் போட்டு, கால்ல சாக்ஸ் போட்டு, பூட்ஸ் போட்டு, தலையில விண்டர் காப் போட்டு......சொல்றதுக்கே டயர்ட்ஆ இருக்கே... அப்போ எங்க நிலமைய யோசிங்க.. யார் வீட்டுக்கும் போகணும்னா, ஒரு கடைக்குப் போகணும்னா கூட.. இத்தன செட் அப்பா தான் போகணும்..  (ஒரு வழியா கிளம்பி, போறதுக்குள்ள போகிற ஆசையே போயிரும்...!!)


இதுல வேற 1008 லொள்ளு.. பனியில நடக்கும் போது பார்த்து நடக்கணும்...


கொஞ்சம் அப்படி, இப்படி பாக்காம, ஸ்டைல்-ஆ நடந்தோம்.. தொலைஞ்சோம்.. பனியில, வழுக்கி  விழற வாய்ப்பு ஜாஸ்தி....!! அப்படி மீறி விழுந்தா, உங்க பாடி உங்க கண்ட்ரோல்-ல இருக்காது...!! (ஹ்ம்ம்ம்ம்ம்ம் ... என் பிரச்சன எனக்கு.. அத ஏன் இப்போ ஞாபக படுத்திட்டு..)


அப்புறம்..சரியாக கவர் பண்ணி போகலன்னா உடம்புக்கு வேற வந்திரும்..!!


பனியில வண்டி ஓட்டுற மாதிரி ஒரு கொடும எங்கயும் கிடையாது..!! நாம சொல்றத வண்டி கேக்காது, வண்டி சொல்றத ரோடு கேக்காது...!! நெசமா தான் சொல்றேன்.. டிரைவிங் ரொம்ப கஷ்டங்கோ....!!


இப்படியாக..சில பல தொல்லைகள் குளிர் காலத்தில் இருக்கிற காரணத்தினால்...நான் வசந்தமே வருக வருக...என்று இரு கை நீட்டி வரவேற்கிறேன்..!!


வசந்தத்தை உணர்த்தும் விதமாக... என் வீட்டு தோட்டத்தில் மலர்ந்த மலர்களை...உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்....!!



மனதைக் கவரும் 
மஞ்சள் மலரே...
மயக்கத்தை தருவதேன்
சொல்லு மலரே..!!



வெளிச்சத்தை உணர்த்தும்
வெள்ளை மலரே..!! உன்னை..
வீதியை அலங்கரிக்க
விட்டது யாரோ??

(இங்க கவர்மென்ட்ல இருந்து.. எங்க தெருவில உள்ள எல்லா வீட்டு முன்னாடியும் வச்சிருக்காங்க..)


வசந்தத்தை வரவேற்கும்
வண்ண மலரே..
உன் வண்ணத்தின் அழகில்
என் எண்ணத்தில்
என்னென்ன  ஏகாந்தம்...!!




விரிந்தும் விரியாத
ட்யுலிப் மலரே.. 
கண்ணுக்கு விருந்தாய்
வந்ததென்ன சொல்லு மலரே..!!



இவ்ளோ பூக்கள் தான் இப்போதைக்கு பூத்திருக்கு...
மிச்ச சொச்சம் எதாச்சும் பூத்தா... பூவோட வரேங்க...!!
வந்ததற்கு ரொம்ப நன்றி..!!
மறக்காம கொஞ்சம் பூக்கள் எடுத்துட்டு போங்க...!!

...அன்புடன் ஆனந்தி




55 comments:

Sanjay said...

ஆஹா கண்ணுக்கு குளிர்ச்சியா இதமா தான் இருக்கு...
தினமும் காலையில் இப்படி ஒரு பதிவு போடவும்.....நாள் நல்லதா அமையும்....!!!!!! : ) : )

எல் கே said...

இதெல்லாம் நாங்க இப்ப இப்படி பார்த்தான் உண்டு. கன்னுகேட்டின தூரம் வரைக்கும் வறட்சிதான் இங்க.. பூக்களும் அதற்கு உங்கள் அகவிதை வரிகளும்அருமை
வாழ்த்துக்கள் ஆனந்தி

எல் கே said...

//தினமும் காலையில் இப்படி ஒரு பதிவு போடவும்.....நாள் நல்லதா அமையும்....!!//

repeat

Chitra said...

பனியில வண்டி ஓட்டுற மாதிரி ஒரு கொடும எங்கயும் கிடையாது..!! நாம சொல்றத வண்டி கேக்காது, வண்டி சொல்றத ரோடு கேக்காது...!! நெசமா தான் சொல்றேன்.. டிரைவிங் ரொம்ப கஷ்டங்கோ....!!

....... அனுபவம் பேசுகிறது, இங்கே....... மலர்களின் கவிதைகளில் மிகவும் ரசித்து அனுபவித்து எழுதி இருக்கீங்க. :-)

'பரிவை' சே.குமார் said...

//மனதைக் கவரும்
மஞ்சள் மலரே...
மயக்கத்தை தருவதேன்
சொல்லு மலரே..!!//

மலர்களின் கவிதைகளில் மிகவும் ரசித்து அனுபவித்து எழுதி இருக்கீங்க... அருமை.

R.Gopi said...

ஆஹா...

கண்ணுக்கு விருந்தளித்த பூக்களின் வாசம் இங்கு வரை வருகிறதே...

கண்களுக்கும், நாசிக்கும் நல்விருந்தாம் இந்த பூக்கள்...

இந்த காலை இனிய காலையானது அற்புதமான பூக்களால்...

வாழ்த்துகள் ஆனந்தி....

ISR Selvakumar said...

மெயின் பிக்சருக்கு முன்னாடி ”அசாமில் வெள்ளம்னு” நியுஸ் ரீல் ஓட்டற மாதிரி...
உங்க கவிதையை வாசிக்கறதுக்கு முன்னாடி ”அமெரிக்காவில் இளவேனில் காலம்னு” நாலு பாரா ஓட்டிட்டீங்க.. அதுவும் உங்க பேச்சைக் கேட்காத காரை வச்சி ஓட்டியிருக்கீங்க...

நல்லா இருக்கு.. உங்க கவிதையும், இளவேனிலுக்கு நீங்க தந்திருக்கிற வரவேற்பும்.

ISR Selvakumar said...

மெயின் பிக்சருக்கு முன்னாடி ”அசாமில் வெள்ளம்னு” நியுஸ் ரீல் ஓட்டற மாதிரி...
உங்க கவிதையை வாசிக்கறதுக்கு முன்னாடி ”அமெரிக்காவில் இளவேனில் காலம்னு” நாலு பாரா ஓட்டிட்டீங்க.. அதுவும் உங்க பேச்சைக் கேட்காத காரை வச்சி ஓட்டியிருக்கீங்க...

நல்லா இருக்கு.. உங்க கவிதையும், இளவேனிலுக்கு நீங்க தந்திருக்கிற வரவேற்பும்.

நாடோடி said...

ம‌ல‌ர்க‌ளின் புகைப்ப‌ட‌ங்க‌ள் அனைத்தும் அருமை........க‌விதையும்.

சைவகொத்துப்பரோட்டா said...

ரைட்டு, இன்னும் கொஞ்சம் பூ கொடுங்க :))

உங்களை தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்,
படித்து பார்த்து தொடரவும்,

S Maharajan said...

பனியோட சேர்ந்த "கனி"வான
கவிதையும் நல்லா இருங்குங்க

ஸ்ரீராம். said...

அழகிய மலர்களின் படங்கள்...

Ganesh Babu said...

ஆனந்தி உங்கள் பதிவுகள் அருமை

தமிழர், மற்றும் தமிழ் வலை பதிவர்களுக்காக tamilar.co.cc என்று புதிய தளத்தை ஆரம்பித்து உள்ளேன், அதில் சேர்ந்து தமிழர்களுடன் உரையாடுங்கள், அது twitter+tamilish போன்றதொரு சேவை.

இப்படிக்கு
டென்த் ரிசெல்டுக்கு வெயிட் பண்ணும் மாணவன்

கணேஷ் பாபு

Ahamed irshad said...

//மறக்காம கொஞ்சம் பூக்கள் எடுத்துட்டு போங்க...!!//

எங்களையெல்லாம் நம்பி! சொல்லிட்டீங்க..

பூக்கள் அழகு,
^
^
உண்மையிலேயே உங்க வீட்லதான் பூத்ததா?....

தமிழ் உதயம் said...

படங்கள், கவிதை இரண்டுமே- பூவும் வாசமும் போல் அருமை.

= YoYo = said...

இப்படியும் எழுதலாமா
அருமை ஆனந்தி

\\இவ்ளோ பூக்கள் தான் இப்போதைக்கு பூத்திருக்கு...
மிச்ச சொச்சம் எதாச்சும் பூத்தா... பூவோட வரேங்க...!!\\

அப்ப எனக்கு சீப்'பூ' எடுத்துட்டு வாங்க

Priya Venkat said...

\\\கொஞ்சம் அப்படி, இப்படி பாக்காம, ஸ்டைல்-ஆ நடந்தோம்.. தொலைஞ்சோம்.. பனியில, வழுக்கி விழற வாய்ப்பு ஜாஸ்தி....!! அப்படி மீறி விழுந்தா, உங்க பாடி உங்க கண்ட்ரோல்-ல இருக்காது...!! (ஹ்ம்ம்ம்ம்ம்ம் ... என் பிரச்சன எனக்கு.. அத ஏன் இப்போ ஞாபக படுத்திட்டு..)////

ரொம்ப சரியா சொன்னீங்க :D

ஆனந்தி வீட்டு பூக்களும் கவி பாடுதே !!!!p

ஜில்தண்ணி said...

சூப்பரப்பு அந்த பூ படம்
பகிர்ந்துகொண்ட ஆனந்திக்கு
ஒரு சொம்பு ஜில் தண்ணி

மெல்லினமே மெல்லினமே said...

pookkal romba azhga irukkunga!

vanathy said...

very nice & cute looking flowers!!

Anonymous said...

இளவேனில் அருமை, போடோக்ராப்ஸ் ரொம்ப நல்லா இருக்குதுங்க....நல்லா கவிதை எழுதுறீங்க, போடோக்ராப்ஸ் சூப்பரா எடுகிறீங்க, இதெல்லாம் எப்படி உங்களால மட்டும் முடியுது? நீங்க கிரேட் ஆனந்தி....

ஆனால் நீங்க சென்னை ரோட்ல வந்து வண்டி ஒட்டி பாருங்க (மழை காலத்தில்) வெறுத்து போயிருவீங்க....

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@சஞ்சய்

//ஆஹா கண்ணுக்கு குளிர்ச்சியா இதமா தான் இருக்கு...
தினமும் காலையில் இப்படி ஒரு பதிவு போடவும்.....நாள் நல்லதா அமையும்....!!!!!! : ) : )//

ஹ்ம்ம் ஹ்ம்ம்... நல்ல ஐடியா தான்..

ரசித்ததற்கு... ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்..!! :) :)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@LK
// இதெல்லாம் நாங்க இப்ப இப்படி பார்த்தான் உண்டு. கன்னுகேட்டின தூரம் வரைக்கும் வறட்சிதான் இங்க.. பூக்களும் அதற்கு உங்கள் அகவிதை வரிகளும் அருமை
வாழ்த்துக்கள் ஆனந்தி //

உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி..

@ சித்ரா
//....... அனுபவம் பேசுகிறது, இங்கே....... மலர்களின் கவிதைகளில் மிகவும் ரசித்து அனுபவித்து எழுதி இருக்கீங்க. :-)//

ஆமா.. ;) ரொம்ப தேங்க்ஸ் சித்ரா..

@ சே.குமார்

//மலர்களின் கவிதைகளில் மிகவும் ரசித்து அனுபவித்து எழுதி இருக்கீங்க... அருமை.//

ரொம்ப நன்றி குமார்.. :)

@ R.கோபி

//ஆஹா...
கண்ணுக்கு விருந்தளித்த பூக்களின் வாசம் இங்கு வரை வருகிறதே...
கண்களுக்கும், நாசிக்கும் நல்விருந்தாம் இந்த பூக்கள்...
இந்த காலை இனிய காலையானது அற்புதமான பூக்களால்...
வாழ்த்துகள் ஆனந்தி.... //

உங்க வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி.. கோபி..!!

@ r.selvakkumar
//மெயின் பிக்சருக்கு முன்னாடி ”அசாமில் வெள்ளம்னு” நியுஸ் ரீல் ஓட்டற மாதிரி...
உங்க கவிதையை வாசிக்கறதுக்கு முன்னாடி ”அமெரிக்காவில் இளவேனில் காலம்னு” நாலு பாரா ஓட்டிட்டீங்க.. அதுவும் உங்க பேச்சைக் கேட்காத காரை வச்சி ஓட்டியிருக்கீங்க...
நல்லா இருக்கு.. உங்க கவிதையும், இளவேனிலுக்கு நீங்க தந்திருக்கிற வரவேற்பும்.//

ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா..!! :)

@ நாடோடி
//ம‌ல‌ர்க‌ளின் புகைப்ப‌ட‌ங்க‌ள் அனைத்தும் அருமை........க‌விதையும்//

ரொம்ப நன்றிங்க.. :)

@ சைவகொத்துப்பரோட்டா
//ரைட்டு, இன்னும் கொஞ்சம் பூ கொடுங்க :)) //

கண்டிப்பா... ரொம்ப நன்றி..!!

//உங்களை தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்,
படித்து பார்த்து தொடரவும் //

என்னை, முதன் முதலில் தொடர் பதிவிற்கு அழைத்தது நீங்க தான்.. :)
ரொம்ப நன்றி.. தொடர்கிறேன் விரைவில்..!!

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ S Maharajan
//பனியோட சேர்ந்த "கனி"வான
கவிதையும் நல்லா இருங்குங்க//

ரொம்ப நன்றி.. மகாராஜன்..

@ ஸ்ரீராம்.
//அழகிய மலர்களின் படங்கள்...//

ரொம்ப நன்றி.... ஸ்ரீராம்..!!

@ Ganesh Babu
//ஆனந்தி உங்கள் பதிவுகள் அருமை //
ரொம்ப நன்றி..!!

//தமிழர், மற்றும் தமிழ் வலை பதிவர்களுக்காக tamilar.co.cc என்று புதிய தளத்தை ஆரம்பித்து உள்ளேன், அதில் சேர்ந்து தமிழர்களுடன் உரையாடுங்கள், அது twitter+tamilish போன்றதொரு சேவை.
இப்படிக்கு
டென்த் ரிசெல்டுக்கு வெயிட் பண்ணும் மாணவன் //

அழைப்புக்கு நன்றி...!!

@ அஹமது இர்ஷாத்

// எங்களையெல்லாம் நம்பி! சொல்லிட்டீங்க..
பூக்கள் அழகு,
^
^
உண்மையிலேயே உங்க வீட்லதான் பூத்ததா?....//

அட.. ஆமாங்க... சத்தியமா எங்க வீட்டில் பூத்த மலர்கள் தான்...
ரொம்ப நன்றி.. :)

அண்ணாமலையான் said...

உங்க பேர வம்புடன் ஆனந்தின்னு மாத்திக்குங்க.. ஏன்னா இங்க தமிழ் நாட்டோட நெலமையும் மக்களோட கஷ்டத்தையும் நல்லா தெரிஞ்சுக்கிட்டே இப்டி பதிவ போட்டு வயித்தெரிச்சல கெளப்புறீங்களே.. நியாயமா?

prince said...

//இளவேனிற்காலம் தொடங்கியாச்சு...// இளவேனிற்காலம் அப்படின்னு சொல்றதுக்கே எவ்வளவு இதமா இருக்கு

//மறக்காம கொஞ்சம் பூக்கள் எடுத்துட்டு போங்க...!!// நானு கொஞ்சம் துலிப் மலர்களை அள்ளிக்கறேன்...

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@தமிழ் உதயம்
//படங்கள், கவிதை இரண்டுமே- பூவும் வாசமும் போல் அருமை.//

உங்க அழகான கருத்துக்கு நன்றி...!!

@+யோகி+
//இப்படியும் எழுதலாமா
அருமை ஆனந்தி //

ரொம்ப நன்றி.. யோகி..!

\\அப்ப எனக்கு சீப்'பூ' எடுத்துட்டு வாங்க//

கண்டிப்பா.. எடுத்துட்டு வரேன்.. :)

@Priya

//ரொம்ப சரியா சொன்னீங்க :D //


தேங்க்ஸ் பிரியா..!!

//ஆனந்தி வீட்டு பூக்களும் கவி பாடுதே !!!! //


ஹ்ம்ம் ஹ்ம்ம்.. அது சரி.. ரொம்ப நன்றி பிரியா..!! :)

@ஜில்தண்ணி
//சூப்பரப்பு அந்த பூ படம்
பகிர்ந்துகொண்ட ஆனந்திக்கு
ஒரு சொம்பு ஜில் தண்ணி//

ரொம்ப நன்றி.. உங்க கருத்துக்கும், ஜில் தண்ணிக்கும்.. :)

@மெல்லினமே மெல்லினமே
//pookkal romba azhga irukkunga!//

ரொம்ப தேங்க்ஸ்..!!

@vanathy
//very nice & cute looking flowers //

தேங்க்ஸ் வானதி.. உங்க ப்ளாக் போஸ்டிங் கிளிக் பண்ணேன்.
வொர்க் ஆகலங்க.. இன்னிக்கு ட்ரை பண்றேன்.. :)

@FIRE FLY
//இளவேனில் அருமை, போடோக்ராப்ஸ் ரொம்ப நல்லா இருக்குதுங்க....நல்லா கவிதை எழுதுறீங்க, போடோக்ராப்ஸ் சூப்பரா எடுகிறீங்க, இதெல்லாம் எப்படி உங்களால மட்டும் முடியுது? நீங்க கிரேட் ஆனந்தி....

ஆனால் நீங்க சென்னை ரோட்ல வந்து வண்டி ஒட்டி பாருங்க (மழை காலத்தில்) வெறுத்து போயிருவீங்க....//

ரொம்ப நன்றி.. உங்க வாழ்த்துக்கு..!!

ஓ.. சென்னை-ல வண்டி ஓட்டி அனுபவம் இல்லங்க..!!

@அண்ணாமலையான்
//உங்க பேர வம்புடன் ஆனந்தின்னு மாத்திக்குங்க.. ஏன்னா இங்க தமிழ் நாட்டோட நெலமையும் மக்களோட கஷ்டத்தையும் நல்லா தெரிஞ்சுக்கிட்டே இப்டி பதிவ போட்டு வயித்தெரிச்சல கெளப்புறீங்களே.. நியாயமா? //

வாங்க.. வாங்க.. நண்பர்கள் எல்லாம் வெயில்ல கஷ்ட படுறீங்களே-னு உங்க கண்ணுக்கு குளிர்ச்சியா போட்டேங்க..!!
வருகைக்கு ரொம்ப நன்றி..!!

@ப்ரின்ஸ்

//இளவேனிற்காலம் அப்படின்னு சொல்றதுக்கே எவ்வளவு இதமா இருக்கு //

ம்ம்ம்ம்.. கரெக்ட் தான்.. நன்றி.. :)

// நானு கொஞ்சம் துலிப் மலர்களை அள்ளிக்கறேன்...//

கண்டிப்பா.. அதுக்கு தானே கொண்டு வந்தேன்.. :)

Mythili (மைதிலி ) said...

ஆனந்தி, வர வர ப்லாக் எப்போ போஸ்ட் பண்ணுறீங்கண்ணே தெரிய மாட்டேங்குதுப்பா...
பூக்க்ள் எல்லாமே அழகா இருக்கு.. வசந்தத்தின் அழகு அத நேரிடையா பார்த்தபோது தான் தெரிந்த்து..
நானும் நிறைய போட்டோஸ் எடுத்து வச்சிருக்கேன்...

ஜெய்லானி said...

எத்தனை தடவை விழுந்தீங்கன்னு கடைசி வரை சொல்லலியே ஹி..ஹி..
பூக்கள் + கவித + அனுபவம் = பாஸ்

பித்தனின் வாக்கு said...

நல்ல பதிவு. பூக்களின் படங்கள் அருமை. என் வீட்டுத்தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப் பார் ந்னு பாடலாம் போல.

நானும் கொஞ்சம் டியூலிப் பூக்களைப் பறித்துக் கொள்கின்றேன்.

dheva said...

ஆனந்தி.. இதை விட சிறப்பா....வசந்த காலத்தை யாரும் வரவேற்க முடியாது....! மலர்களின் புகைப்படமும்...குட்டிக் கவிதைகளும் உங்களின் வசந்த காலத்தை...கோடை தொடங்கிக்கொண்டு இருக்கும் துபாய்க்கு மனதளவில் இறக்குமதி செய்ததில் எங்களாலும் வசந்த காலத்தை உணர முடிந்தது....

உயிர்ப்பான பதிவு....வாழ்த்துக்கள்!

Nandhini said...

இளவேனில்.... அருமை. வாழ்த்துக்கள் ஆனந்தி.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ஜெய்லானி
//எத்தனை தடவை விழுந்தீங்கன்னு கடைசி வரை சொல்லலியே ஹி..ஹி..//

அதெல்லாமா பப்ளிக்-ல பேசுவாங்க...! :D :D

// பூக்கள் + கவித + அனுபவம் = பாஸ் //

ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்... :) :)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@Mythili Krishnan (மைதிலி கிருஷ்ணன்)
//ஆனந்தி, வர வர ப்லாக் எப்போ போஸ்ட் பண்ணுறீங்கண்ணே தெரிய மாட்டேங்குதுப்பா...
பூக்க்ள் எல்லாமே அழகா இருக்கு.. வசந்தத்தின் அழகு அத நேரிடையா பார்த்தபோது தான் தெரிந்த்து..
நானும் நிறைய போட்டோஸ் எடுத்து வச்சிருக்கேன்...//

ஹ்ம்ம் ஹ்ம்ம்.. ஓகே ஓகே.. :)
ரொம்ப தேங்க்ஸ் மைதி.. ஆமா, நேரில் பார்க்க இன்னும் அழகு தான்..
உங்க போட்டோஸ் சீக்கிரம் போடுங்க.. :D

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ பித்தனின் வாக்கு
//நல்ல பதிவு. பூக்களின் படங்கள் அருமை. என் வீட்டுத்தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப் பார் ந்னு பாடலாம் போல.//

ரொம்ப நன்றி.. ஓ.. அழகா பாடுங்களேன்.. கேட்க நாங்க ரெடி..!! :)

//நானும் கொஞ்சம் டியூலிப் பூக்களைப் பறித்துக் கொள்கின்றேன்.//

கண்டிப்பா... எடுத்துக்கோங்க.. நன்றி.. :)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ dheva
//ஆனந்தி.. இதை விட சிறப்பா....வசந்த காலத்தை யாரும் வரவேற்க முடியாது....! மலர்களின் புகைப்படமும்...குட்டிக் கவிதைகளும் உங்களின் வசந்த காலத்தை...கோடை தொடங்கிக்கொண்டு இருக்கும் துபாய்க்கு மனதளவில் இறக்குமதி செய்ததில் எங்களாலும் வசந்த காலத்தை உணர முடிந்தது....

உயிர்ப்பான பதிவு....வாழ்த்துக்கள்! //

ரசித்ததற்கும், உங்கள் கருத்துக்கும், உங்கள் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி.. :)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ Nandhini
//இளவேனில்.... அருமை. வாழ்த்துக்கள் ஆனந்தி.//

ரொம்ப நன்றி.. :)

அண்ணாமலை..!! said...

ஹை!ஒவ்வொரு பூவுக்கும், ஒவ்வொரு கவிதை!

pichaikaaran said...

" என் வீட்டு தோட்டத்தில் மலர்ந்த மலர்களை...உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்....!!"

அந்த மலர்கள் வாடக் கூடும்...

உங்கள் மனதென்னும் தோட்டத்தில் மலர்ந்த கவிதை பூக்கள் என்றும் மணம் வீசும்

தமிழ் said...

படமும் வரியும் அருமை

மங்குனி அமைச்சர் said...

////வெளில கிளம்பனும்னாலே... செம கடியா இருக்கும்... முதல்ல ஒரு டிரெஸ்ஸை போட்டு, அதுக்கு மேல விண்டர் ஜாக்கெட் போட்டு, , கையில க்லௌஸ் போட்டு, கால்ல சாக்ஸ் போட்டு, பூட்ஸ் போட்டு, தலையில விண்டர் காப் போட்டு......சொல்றதுக்கே டயர்ட்ஆ இருக்கே... அப்போ எங்க நிலமைய யோசிங்க.. யார் வீட்டுக்கும் போகணும்னா, ஒரு கடைக்குப் போகணும்னா கூட.. இத்தன செட் அப்பா தான் போகணும்.. (ஒரு வழியா கிளம்பி, போறதுக்குள்ள போகிற ஆசையே போயிரும்...!!)////


இதுக்கு பேசாம 50 பது கிராம் சூடத்த கொளுத்தி , வாயில போட்டு போங்க

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//வசந்தத்தை உணர்த்தும் விதமாக... என் வீட்டு தோட்டத்தில் மலர்ந்த மலர்களை...உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்....!!//

உங்க ஊர்ல அதுக்குள்ள பூ எல்லாம் பூத்தாச்சா... me still waiting ... எங்க ஊர்ல (கனடா) இப்ப தான் Tulips மொட்டு விட்டுருக்கு. காத்துட்டே இருக்கோம். Super Pictures, thanks for sharing

Deepak Kumar Vasudevan said...

வசந்த காலங்கள் குறித்த எனது கருத்து ஒன்றினை இங்கு பதிவு செய்துள்ளேன்:


http://thamizhththendral.blogspot.com/2010/03/blog-post_22.html

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@அண்ணாமலை..!!
//ஹை!ஒவ்வொரு பூவுக்கும், ஒவ்வொரு கவிதை! //

ஹ்ம்ம்.. உங்கள் வருகைக்கு நன்றி

@பார்வையாளன்
//அந்த மலர்கள் வாடக் கூடும்...
உங்கள் மனதென்னும் தோட்டத்தில் மலர்ந்த கவிதை பூக்கள் என்றும் மணம் வீசும்//

சரியா சொன்னிங்க.. ரொம்ப நன்றி.. :)

@திகழ்
//படமும் வரியும் அருமை//

ரொம்ப நன்றி.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@மங்குனி அமைச்சர்
//இதுக்கு பேசாம 50 பது கிராம் சூடத்த கொளுத்தி , வாயில போட்டு போங்க//

நல்ல ஐடியா தான்.. ஆனா வாயி வெந்து போகுமே...:P :P
ரொம்ப நன்றி.. உங்க வருகைக்கு... :)

@அப்பாவி தங்கமணி
//உங்க ஊர்ல அதுக்குள்ள பூ எல்லாம் பூத்தாச்சா... me still waiting ...
ஆமாங்க.. எல்லாம் ஒன்னு ஒண்ணா பூக்க ஆரம்பிச்சாச்சு.. :)

//எங்க ஊர்ல (கனடா) இப்ப தான் Tulips மொட்டு விட்டுருக்கு. காத்துட்டே இருக்கோம். Super Pictures, thanks for ஷேரிங்//

ஓ.. ஓகே சீக்கிரம் உங்க மலர்களும் மலர்ந்துரும்.. :)
உங்க கமெண்டுக்கு ரொம்ப நன்றி..

@தீபக் வாசுதேவன் said...

//வசந்த காலங்கள் குறித்த எனது கருத்து ஒன்றினை இங்கு பதிவு செய்துள்ளேன்:
http://thamizhththendral.blogspot.com/2010/03/blog-post_22.ஹ்த்ம்ல் //

செக் பண்ணிட்டேன்.. நல்ல இருக்கு.. நன்றி.

Anonymous said...

"ennium unga atthila sethukonga pleassssssssss.."

unga blog color fulla erukkunga..
so nice your blog..


nandri valga valamudan
varuthapadtha vaasippor sangam
complan surya.

தக்குடு said...

//வெளிச்சத்தை உணர்த்தும் வெள்ளை மலரே..!! உன்னை.. வீதியை அலங்கரிக்க விட்டது யாரோ?// suuuuuuuper ananthi akka!

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@complan surya

//"ennium unga atthila sethukonga pleassssssssss.."

unga blog color fulla erukkunga..
so nice your blog..


nandri valga valamudan
varuthapadtha vaasippor sangam
complan surya.//

kandippa serthukkalamm..

romba thanks for ur comment :)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ தக்குடுபாண்டி said...
// suuuuuuuper ananthi akka! //

thanks.. just call me ananthi..
thats fine. :)

Priya said...

குளிர் காலங்களின் கஷ்டங்களை அழகா சொல்லி இருக்கிங்க. இந்த பூ பூக்கும் காலம்தான் என்னை கவர்ந்தது.... நானும் கூட இப்படி நிறைய போட்டோஸ் எடுத்து வச்சிருக்கேன்...பதிவில போட!

அழகான புகைப்படங்கள்... குட்டி குட்டி கவிதைகளும் அழகு!!!

கவிதன் said...

உங்கள் பனிமழைக்கால அனுபவம் பற்றி பகிர்ந்தது அருமை!

மலர் கவிதை மனதைக்கொய்து போகிறது ஆனந்தி!

Unknown said...

Hi friend,
I have often be touched by the natural character in you that lets you help everybody even before they ask for it. I have also been amused by your affection towards kids.Now after reading your poems,I was really surprised by the kind of affection and love you have for your flowers. Your poems had added more beauty to your garden flowers, with your poems as crowns. I thought I was lucky to have you in my life but I feel that those flower are even luckier than me.I really admired the way you took you time to admire and appereciate the nature.THUMPS UP.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@Priya

//குளிர் காலங்களின் கஷ்டங்களை அழகா சொல்லி இருக்கிங்க. இந்த பூ பூக்கும் காலம்தான் என்னை கவர்ந்தது.... நானும் கூட இப்படி நிறைய போட்டோஸ் எடுத்து வச்சிருக்கேன்...பதிவில போட!//


ரொம்ப நன்றி பிரியா.. ஹ்ம்ம்.. உங்க படங்களையும் பார்க்க ரெடியா இருக்கேன்..

//அழகான புகைப்படங்கள்... குட்டி குட்டி கவிதைகளும் அழகு!!! //


நன்றி பிரியா.. :)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ கவிதன்
//உங்கள் பனிமழைக்கால அனுபவம் பற்றி பகிர்ந்தது அருமை!
மலர் கவிதை மனதைக்கொய்து போகிறது ஆனந்தி! //

உங்க வரவிற்கும், கமெண்ட்டுக்கும் ரொம்ப நன்றி கவிதன்

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ஈஸ்வரி
// Hi friend,
I have often be touched by the natural character in you that lets you help everybody even before they ask for it. I have also been amused by your affection towards kids.Now after reading your poems,I was really surprised by the kind of affection and love you have for your flowers. Your poems had added more beauty to your garden flowers, with your poems as crowns. I thought I was lucky to have you in my life but I feel that those flower are even luckier than me.I really admired the way you took you time to admire and appereciate the nature.THUMPS UP. //

That was really nice of you.. thanksma..
I am glad to be your friend too.. :)

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)