ஒரு வழியா லைசென்ஸ் வாங்கி.. இந்த ஊருக்குள்ள...யாருக்கும் பிரச்சன ஏதும் இல்லாம வண்டி ஓட்டிட்டு இருக்கேங்க.. அதுல பாருங்க.. ஒரு விசேஷம்.. என்னால மத்தவங்களுக்கு தான் பிரச்சின இல்லன்னு சொன்னனே தவிர... எனக்கு சில பல தொல்லைகள்....!
ஒரு முறை வெளியூர் போயிட்டு வீடு திரும்பினோம்.. அப்போ வந்ததும், தலை வலிக்குது ஒரு காஃபி குடிச்சா தேவலாம்னு தோனுச்சு.. நீங்க போயிட்டு வாங்கன்னு சொன்னா... நம்ம ஆளு அப்போ தான், இப்போ தானே இவ்ளோ நேரம் டிரைவ் பண்ணிட்டு வந்தேன்.. நீ போயிட்டு வாயேன்னு சொல்ல, கர்ர்ர்ர் னு எரிச்சலாகி சரி..கோவப்பட்டா காஃபி வருமா?? போயி வண்டிய எடுத்தேன்... அப்போ நாங்க இருந்த அபார்ட்மென்ட்-டில் கார் விட ஷெட் இருந்தது. அதிலிருந்து வண்டியை பாக்-அப் பண்ணும் போது... அந்த பில்லர்ல ஒரு இடி இடிச்சி, அங்கயே நின்னுட்டேன்... மவளே காஃபி ரொம்ப முக்கியம் இப்போ? னு என்னையே திட்டிட்டு இருந்தேன்...
இது போலத் தான் இன்னொரு முறை ஆச்சு.. வெளியூர் செல்ல, பிளான் பண்ணிட்டு, AAA ஆபீஸ் போய் மேப்ஸ் (maps ) வாங்கிட்டு வந்திருன்னு சொல்லிட்டு வேலைக்கு போய்ட்டாங்க.. நானும் பந்தாவா கிளம்பி போயி... மேப் எல்லாம் கேட்டு வாங்கிட்டு, வெளில வந்து, வண்டிய ஸ்டார்ட் பண்ணி ரிவர்ஸ்-ல பின்னாடி வரதுக்கு பதிலா.... அவ்வ்வ்வவ் ஆக்சிலரேட்டர் அழுத்தி முன்னாடி வேகமா போய்ட்டேன்..... அப்புறம் என்ன, டமால் தான்... அங்க இருந்த சிமெண்ட் பார்-ல மோதி, பிரான்ட் பம்பர் உடைஞ்சு தொங்கிட்டு இருந்தது.... ஆக்சிடன்ட் ஆனா.. AAA கு போன் பண்ணுவோம்... ஆனா AAA வாசல்லயே ஆக்சிடென்ட் பண்ணிட்டனே....!! என்னத்த சொல்ல.. ! (AAA என்பது இங்கே உள்ள இன்சூரன்ஸ் ஆபீஸ் )
இந்த மாதிரி... அப்பப்ப வீர சாஹசம் எல்லாம் செய்றது உண்டுங்க.. அதெல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லி, பேர டேமேஜ் பண்ண வேணாம்னு பாக்குறேன்..
அடுத்து, இங்க அமெரிக்கா-ல என்னை கவர்ந்த விஷயம், இங்க உள்ள கடைகளில் எல்லா பொருளுக்கும் (Expiration Date ) காலாவதி தேதி... போட்டிருப்பாங்க..
அந்த தேதி முடியறதுக்குள்ள... நீங்க வாங்கின பொருளில் ஏதேனும், பிரச்சினை வந்த கொண்டு போய்க் கொடுத்தால் ஒரு வார்த்தை சொல்லாமல் மாற்றி கொடுத்து விடுவாங்க. (உடனே..ஏன் நம்ம ஊர்ல கூட தான் இருக்குன்னு....கேட்டு சண்டைக்கு வரப்பிடாது..) இத ஏன் ஸ்பெஷல்-ஆ சொல்றேன்னா.. இங்க உள்ள இந்தியன் கடைகளில்.. எதாச்சும் சில பொருளை எடுத்து பாத்தீங்கன்னா தெளிவா எக்ஸ்பயரி தேதியை கிளீன்-ஆ சொரிஞ்சு வச்சிருப்பாங்க...! என்ன பண்றது.. ஒன்னும் பண்ண முடியாது.
அப்புறம் இங்க அமெரிக்கன் கடைகளில் பொருட்கள் வாங்கும் போது, 30 முதல் 90 நாட்கள் வரை, திரும்ப குடுக்க பாலிசி உண்டு.. அது உண்மையில் உபயோகமான பாலிசி. வாங்கிய துணி சைஸ் சரியில்லைன்னா கொண்டு போய் குடுத்து வேற மாத்திட்டு வரலாம். (ஆனா...அதையும் மிஸ் யூஸ் பண்ற ஆளுங்களும் இருக்காங்க..) எல்லா கடைகளிலும் பெரும்பாலும் கஸ்டமர் கேர் நல்லாவே இருக்கும். வாங்கிய பொருளை... அப்படியே பத்திரமாய் கொண்டு போய் குடுத்து மாத்திட்டு வந்திரலாம்.. எதுவும் தேவை இல்லாத கேள்விகளோ, அல்லது, முகத்தில் எரிச்சலை காட்டுவதோ பெரும்பாலும் இருக்காது. நம்ம ஊர்ல எதுவும் மாற்ற இந்த வசதி இருப்பதில்லை.. (ஆனா. நம்ம ஊர் மக்கள் கூட்டத்திற்கு... இப்படி பாலிசி வச்சா.. பின்னே கடையை இழுத்து மூடிட்டு போக வேண்டியது தான்.. அதுவும் இருக்கு...)
.....தொடரும்
(நன்றி: கூகிள் இமேஜஸ்)

Wednesday, September 29, 2010
Wednesday, September 22, 2010
நமக்குள் நாம்...!!
உனக்குள் நான் என்றாய்...
எனக்குள் நீ என்றாய்...
நமக்குள் நாம் ஆவது எப்போது??
ஓர் நாள் பேச்சில்...
ஓராயிரம் வார்த்தைகள் நான் பேச..
ஓர் நொடிப் பார்வையில்
எனை ஊமையாக்கி விட்டாயே...!!
பார்த்துக் கொண்டிருந்தாலே..
பரவசம் ஆகிறதே....
பட்டெனத் தொட்டு விட்டு
பரிதவிக்க விட்டு
வேடிக்கை பார்க்கிறாய்..!!
எதிர்பார்க்கா நேரத்தில்
என்னருகில் நீ வந்து...
எதேச்சையாய் வருவது போல்
எனையணைத்து நீ சென்றாய்...!!
எதிர்பார்ப்பை ஏற்படுத்தி
எனை ஏங்கச் செய்வதில் தான்
எத்தனை சுகம் உனக்கு..!
...அன்புடன் ஆனந்தி
எனக்குள் நீ என்றாய்...
நமக்குள் நாம் ஆவது எப்போது??
ஓர் நாள் பேச்சில்...
ஓராயிரம் வார்த்தைகள் நான் பேச..
ஓர் நொடிப் பார்வையில்
எனை ஊமையாக்கி விட்டாயே...!!
பார்த்துக் கொண்டிருந்தாலே..
பரவசம் ஆகிறதே....
பட்டெனத் தொட்டு விட்டு
பரிதவிக்க விட்டு
வேடிக்கை பார்க்கிறாய்..!!
எதிர்பார்க்கா நேரத்தில்
என்னருகில் நீ வந்து...
எதேச்சையாய் வருவது போல்
எனையணைத்து நீ சென்றாய்...!!
எதிர்பார்ப்பை ஏற்படுத்தி
எனை ஏங்கச் செய்வதில் தான்
எத்தனை சுகம் உனக்கு..!
...அன்புடன் ஆனந்தி
Thursday, September 16, 2010
அமெரிக்க வாழ்க்கை ....பாகம் 2
நான் எழுதிய கல்யாண வைபோகமே.... பதிவை தொடருமாறு நண்பர்கள் ஆசையாக, ஆர்வமாக விரும்பி கேட்டதால்... (நா எப்படா கேட்டேன்னு எல்லாம் கேக்கபிடாது) நான் அதை அமெரிக்க வாழ்க்கை தொடரில் தொடரலாம்னு நினைக்கிறேன்.. (ஆமாமா, ரெம்ப சீக்கிரம் தொடர்ந்திட்டன்னு சொல்றது கேட்டுருச்சி. ஹிஹி...
இவ்ளோ நாள் ஒண்ணா மண்ணா பழகிட்டு என் சுறுசுறுப்பு பத்தி உங்களுக்கு தெரியாதாங்க.. )
நா ஏதோ விளையாட்டா 1008 விஷயம் இருக்குன்னு சொன்னேன்.. ஆனா நீங்க இவ்ளோ சீரியஸா வெயிட் பண்றீங்க போல இருக்கு.. :)இவ்ளோ நாள் ஒண்ணா மண்ணா பழகிட்டு என் சுறுசுறுப்பு பத்தி உங்களுக்கு தெரியாதாங்க.. )
சரி... எங்க விட்டேன்... ஹ்ம்ம்.. ஏர்போர்ட்ல இருந்து வெளில வந்து பாத்தா 6 - 7 இன்ச் பனி... இவரோட ப்ரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து, லிமோசின்-ல எங்கள பிக்கப் பண்ண ஏற்பாடு பண்ணியிருந்தாங்க.. அது என்னங்க... அவ்ளோ நீள காரு.. ஒரு பக்கம் நானும், மறுபுறம் அவரும், மற்றும் சில ப்ரண்ட்சும் கூட வந்தாங்க... எல்லாரும் ஏதேதோ பேசிட்டு வந்தாங்க.. எனக்கு தான் ஒன்னும் மண்டையில ஏறல.. (ஏறிட்டா மட்டும்.....என்ன செஞ்சிரப் போறேன்)
என் கவலை எல்லாம், இவ்ளோ குளிரில் இங்க எப்படி இருக்கபோறோம்னு தான்.. இவங்க தங்கி இருந்த அப்பாட்மெண்டுக்கு கூட்டிட்டு போனாங்க.. எல்லாரும் அறிமுகப்படுத்திட்டு போய்ட்டாங்க.. எங்களுடன் ரெண்டு மூன்று பிரண்ட்ஸ் மட்டும் தங்கி இருந்தாங்க..
காலைல முதல் வேலையா பொறுப்பா காஃபி போடலாம்னு பாத்தா பால் இல்லை... பிரண்ட் ஒருத்தங்க.. இதோ பொறுங்க.. வாங்கிட்டு வரேன்னு போயிட்டு, திரும்பி வரும் போது ஒரு பெரிய பிளாஸ்டிக் கேன் பாலை தூக்கிட்டு வந்தார்.. கிட்ட தட்ட மூணே முக்கால் லிட்டர்...!! நானும், என்னடா இது அமெரிக்கால காஃபி போட பால் கேட்டா... அபிஷேகமே பண்ணிரலாம் போல இருக்கேன்னு நினச்சேன்..!
எல்லா பொருளுமே.. கொஞ்சம் சைஸ் பெரிது தான்... போல..! நம்ம சமைக்கிற அழகு தான் ஊருக்கே தெரியுமே.. இருந்தாலும்... நா காரக்குழம்பு செய்யிற ஐடியா-ல கத்தரிக்காய், வெங்காயம் கேட்டேன்.. அவங்களும், மின்னல் வேகத்துல போயி வாங்கிட்டு வந்தாங்க.. கத்தரிக்காய் சைஸ் பாத்து, அசந்து போய்ட்டேன்..! எப்படியோ சமையல் புக் பாத்து ஒரு மாதிரியா காரக்குழம்பு, செஞ்சு முடிச்சேன்.. அந்த ஏரியாவே ஒரு யுத்த களமா ஆயிருச்சு.. அதையும், (நா பீல் பண்ண கூடாதுன்னு...இருக்கும் போல) நல்லா இருக்குன்னு சாப்ட்டாங்க எல்லாரும்..! பாவம் அவங்க கஷ்டம் அவங்களுக்கு..!
அவங்க எல்லாம் கிளம்பி வேலைக்குப் போனதும், வீடே வெறுச்சோடி இருக்கும்... உண்மையிலயே எனக்கு தனியா இருக்க பயமா இருக்கும்.. அப்போ தான் அம்மா, அப்பா நினைப்பு வேற வரும்.. வேற என்ன... ஓரமா உக்காந்து... பிழிஞ்சு பிழிஞ்சு அழுது பீல் பண்ணிட்டு இருப்பேன்...!கொஞ்ச நாள்லயே அதை பாத்துட்டு, இது கதைக்கு ஆவாதுன்னு நினச்சாங்க போல... நிறைய தமிழ் பட வீடியோஸ் எடுத்து தந்தாங்க... இவ்ளோ நாள் பார்க்காத கணக்குக்கும் சேர்த்து வச்சு.. அவ்ளோ படம் பாத்திருக்கேன்... இப்பெல்லாம் படம் பார்க்கணும்னு சொன்னாலே எரிச்சலா இருக்கு.. பின்னே, பனிஷ்மென்ட் மாதிரி அவ்ளோ படம் பாத்தா?
வந்த புதிதில்.. இந்தியா-வில் நாம் பேசி பழகிய இங்கிலீஷ்-ம், இங்கே அமெரிக்காவில் பேசுற இங்கிலீஷ்-உம் வேற மாதிரி இருந்தது.. வீட்ல தனியா இருக்கும் போது, போன் வந்தா எடுக்கறதே இல்ல..எல்லாம் ஒரு பயம் தான்.. போன்-ஐ எடுத்து அவங்க எதாவது பாஸ்ட் இங்கிலீஷ்ல சொல்லி.. எனக்கு புரியாம மெசேஜ் சொல்ல முடியாம போயிருமோன்னு தான்..! சில நேரங்கள்-ல தைரியத்த வரவழைத்து போன்-ஐ எடுத்தா "ஹாய்.. கேன் ஐ ஸ்பீக் டு யுவர் பேரன்ட்ஸ்...
ஆர் எனி அடல்ட்ஸ் இன் தி ஹவுஸ் ஸ்வீட் ஹார்ட்??" னு கேட்டு மானத்த வாங்குவாங்க.. முதல்ல.. கடுப்பா வந்தது... ஆமா எங்க அம்மா, அப்பா இந்தியால இருக்காங்கன்னு சொல்லணும் போல வரும்..
அமெரிக்கா வந்ததும், கிட்டத்தட்ட...எல்லா கனவான்களும் பண்ற ஒரு முக்கியமான டியூட்டி எங்கள கார் டிரைவிங் கத்து குடுத்து லைசென்ஸ் வாங்க வைக்கிறது தான்.. அப்பவும் சிக்கல் ஆச்சு.. டிரைவிங் ஸ்கூல் போனா, எங்கடா அவன் சொல்லித்தறது நமக்கு புரியாம, வண்டிய கொண்டு போய் எங்கயும் முட்டிட்டு நிக்க கூடாதேன்னு நினச்சு.. நீங்களே சொல்லித் தாங்கன்னு இவர் கிட்ட பொறுப்ப குடுத்தாச்சு.. அப்புறம் என்ன.. எல்லா அர்ச்சனையும் வாங்கி.. (தலையில குட்டு ஒண்ணு தான் வாங்கலை.... அவ்ளோ பொறுமையை டெஸ்ட் பண்ணிட்டோம்ல....ஹிஹி)
அதிலும், எங்க ஆளு விண்டர்ல வண்டி ஓட்ட கத்துகிட்டியானால், எங்கயும் வண்டி ஓட்ட ஈசியா இருக்கும்னு சொல்லி வண்டி கத்துக்க வச்சார்.. எப்படியோ, படிச்சி கிழிச்சு ரிட்டன் டெஸ்ட் எழுதி பாஸ் பண்ணி, வண்டி ஓட்டி காமிச்சு ப்ராக்டிகல் டெஸ்ட்-டிலும் பாஸ் பண்ணிட்டேன்... (ஒரே அட்டெம்ப்ட் தான் தெரியுமா?? )
(தொடரும்...........)
(தொடரும்...........)
உங்க எல்லாருடைய ஆதரவிற்கும் ரொம்ப ரொம்ப நன்றிங்க... :)
(நன்றி: கூகிள் இமேஜஸ்)
Labels:
அனுபவம்,
தொடர் பதிவு
Subscribe to:
Posts (Atom)








