நடைபாதை நளினங்கள்..
வண்ணச் சேர்ப்பில்
வகையாய் மாட்டிக்கொண்டேன்
கடந்து விட முடியாமல்
கரைந்து தான் போகின்றேன்..
எட்டு வைக்கையிலும்
ஏறெடுத்துப் பார்க்கின்றேன்
பட்டு மலரே உன்னை
பார்த்துப் பார்த்து மகிழ்கிறேன்..
குட்டி இதழ் விரித்தே
கும்மாளம் போடுகிறாய்
எட்டிப் போகாமல் எனை நீ
கட்டிப் போடுகிறாய்..
பார்த்த நொடி உன்னால்
பரவசம் ஆகின்றேன்
நடைபாதை நளினமே
நாளை மீண்டும் சந்திக்கிறேன்!
நெல்லை அன்புடன் ஆனந்தி
#photobynellaianbudanananthi
#clicksbyme
#todaysclicks
#myhobby
#mypassion
#mynature



0 comments:
Post a Comment