உன் கண்கள் குளமென்றால்
அதில் கண்ணீர் துளியாவேன்..
உன் கைகள் சிறையென்றால்
அதில் ஆயுள் கைதி ஆவேன்..
நீ மாலை வெயிலென்றால்
அதன் மஞ்சள் நிறமாவேன்..
நீ சோலை குயிலென்றால்
அதன் கூவும் குரலாவேன்..
நீ வண்ண மலரென்றால்
அதன் வாசம் நானாவேன்..
நீ மின்னும் நிலவென்றால்
அதன் குளுமை நானாவேன்..
நீ வான் முகில் என்றால்
அதில் வானவில் ஆவேன்..
நீ தேன்சுவை என்றால்
அதன் தித்திப்பு நானாவேன்...
நீ எண்ணமென்றால்
நான் எழுத்தாவேன்...
நீ வண்ணமென்றால்
நான் மலராவேன்...
நீ விதையென்றால்
அதன் விருட்சம் ஆவேன்..
நீ கதையென்றால்
அதன் கரு ஆவேன்..
நீ கவிதையென்றால்
அதன் மொழியாவேன்..
நீ காவியம் என்றால்
அதன் நாயகி ஆவேன்..
நீ அருவியானால்
கொட்டும் நீராவேன்..
என் இறுதியென்றால்
உன் மடி சேர்வேன்..!!!
...அன்புடன் ஆனந்தி
(படம்: கூகிள், நன்றி)
3 comments:
கவிதை அருமை....
அப்போ அப்போ வந்தாலும் அசரடிக்கும் கவிதைகளில் கலக்குறீங்க சகோதரி...
வாழ்த்துக்கள்.
Wonderful poem! Very soft and breezy!
அருமை. நல்ல கவிதை. ரசித்தேன். நமது வலைத்தளம் : சிகரம்
Post a Comment