தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
இஞ்சி,பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
மல்லி, புதினா இலை - சிறிது
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
சோம்புத்தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
(பொடி செய்து கொள்ளவும்)
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 1
(அரைத்துக் கொள்ளவும்)
முந்திரி பருப்பு - 15
தேங்காய் - 1/2 கப்
செய்முறை:
- ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் சிறிது வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- பொடித்து வைத்துள்ள கிராம்பு, ஏலக்காய், பட்டை தூளை சேர்த்து வதக்கி, பிறகு பொடியாய் நறுக்கிய தக்காளியை சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
- சிறிது நேரம் மூடி வைத்து வேக விடவும். தக்காளி எண்ணெய் தெளிய வெந்து விடும்.
- இதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து வதக்கி, அரைத்து வைத்திருக்கும் தேங்காய்,முந்திரிப்பருப்பு மசாலாவை சேர்த்து 2 லிட்டர் வரை தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். (கொதித்த பின் தேவையான அளவு கெட்டியாகி விடும்)
- கொதிக்கும் பொழுதே மல்லி, புதினா இலையை சேர்க்கவும்.
- 10 நிமிடங்களில் மசாலா பச்சை வாசனை போக, எண்ணெய் தெளிந்து மேலே வர சால்னா தயார் ஆகிவிடும்.
(சப்பாத்தி, பரோட்டாவுடன் சாப்பிடலாம்... இதில் விருப்பத்திற்கேற்ப சிக்கன் துண்டுகளை வதக்கி சேர்த்தும், முட்டையை அவித்து சேர்த்தும் கூட செய்யலாம் )
...அன்புடன் ஆனந்தி
3 comments:
முட்டையை அவித்து சேர்த்து, செய்து பார்த்திட வேண்டியது தான்... நன்றி சகோதரி...
சால்னா செய்து பார்க்கணும்...
பகிர்வுக்கு நன்றி.
@திண்டுக்கல் தனபாலன்
தகவலுக்கு நன்றிகள்.
Post a Comment