தேவையான பொருட்கள்:
பன்னீர் - 1 கப்
கீரை - 3 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1/4 ஸ்பூன்
மிளகாய் வத்தல் பொடி - 1 டீஸ்பூன்
சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்
மல்லிப்பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் பொடி - சிறிது
பால் (அல்லது) க்ரீம் - சிறிதளவு
செய்முறை:
- பன்னீரை சின்ன சின்ன துண்டுகளாக்கி, எண்ணையில் பொரித்து தனியே வைக்கவும்.
- கீரையை உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேகவைத்து, மிக்சியில் அரைத்து கொள்ளவும். (ரொம்பவும் மையாய் அரைக்க வேண்டியதில்லை)
- ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், சீரகம் போட்டு பொரிந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். (சிறிது உப்பு சேர்த்து வதக்கினால் சீக்கிரம் வதங்கி விடும்)
- வெங்காயம் நன்கு வதங்கியதும், பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
- தக்காளியும் நன்கு வெந்ததும்.. அதில் மிளகாய்ப்பொடி, சீரகப்பொடி, மல்லிப்பொடி, கரம் மசாலா பொடி சேர்த்து நன்கு வதக்கவும்.
- இதில் அரைத்து வைத்த கீரையை சேர்த்து, அதில் தேவைக்கேற்ப உப்பும் சேர்க்கவும்.
- நன்கு கொதித்ததும், பொரித்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து, அத்துடன் சிறிது பால் அல்லது க்ரீம் சேர்த்து இறக்கவும்.
...அன்புடன் ஆனந்தி
9 comments:
கீரையுடன் புதிய குறிப்பு... செய்து பார்ப்போம்... நன்றி சகோ...
ஆமாம்.... பனீரை எப்போ சேர்க்கணுமுன்னு சொல்லலையே!!!!
தாளிக்கும்போது கொஞ்சம் கஸூரி மேத்தி ( உலர்ந்த வெந்தயக்கீரை) சேர்த்து தாளிக்கணும்.
@திண்டுக்கல் தனபாலன்
கருத்திற்கு நன்றி. செய்து பாருங்கள்.
@துளசி கோபால்
மன்னிக்கவும்.. சேர்த்து விட்டேன். அடுத்த முறை கஸுரி மேத்தி சேர்த்து செய்து பார்க்கிறேன்.
மிக்க நன்றி.
புது குறிப்பு... பார்க்க அழகா இருக்கு...
சாப்பிட்டு பார்க்கத்தான் வெய்ட்டிங்..
பன்னீர் பாலக்...
சில நாட்களுக்கு முன்னர் நண்பர் ஒருவர் பாலக்கோட பன்னீர் சேர்த்து செய்வாங்களே தெரியுமான்னு கேட்டார்... தெரியாதுன்னு சொல்லிட்டு மறந்துட்டேன்.
இப்ப பார்த்துட்டமுல்ல... இந்த வாரம் அவருக்கு பாலக் பன்னீர்தான்....
எங்களுக்கும் பிடிச்ச அயிட்டம். துள்சிக்கா சொன்ன மாதிரி கஸூரி மேத்தி சேர்க்கும்போது இன்னும் வாசனையா, ருசியாயிருக்கும்.
கீரையுடன், பன்னீரா?! செஞ்சு பார்க்குறேன்
Sounds so good. Ymmmmmmm!
@சங்கவி
கருத்துக்கு நன்றி.
@சே. குமார்
ஹ்ம்ம்.. செய்து பாருங்கள். கருத்துக்கு நன்றி.
@அமைதிச்சாரல்
ஹ்ம்ம்.. அடுத்த முறை செஞ்சிரலாம். கருத்துக்கு நன்றி.
@ராஜி
ஹ்ம்ம்.. செஞ்சு பாருங்க. கருத்துக்கு நன்றி.
@விஜி
கருத்துக்கு நன்றி விஜி.
Post a Comment