நீ நீயாக இரு...~அன்புடன் ஆனந்தி
நினைவுகளில் கூட
தூய்மையாய் இரு...
நிஜத்தில் இரு....
அன்புடன் இரு...
பணிவுடன் இரு..
பாசத்துடன் இரு...
பண்புடன் இரு..
நேர்மையாய் இரு..
நெகிழ்வாய் இரு..
ஏமாளியாய் இராதே...
ஏய்ப்பவனுடன் இராதே...
கடவுளை மறவாதே...
கண்டதை எல்லாம் நம்பாதே...
உண்மையை மறைக்காதே...
உள்ளதனைத்தும் சொல்லாதே...
உறுதியில் பிறழாதே...
உற்சாகத்தை இழக்காதே...
நேசத்தில் மூழ்காதே..
நேர்ந்ததை எல்லாம் நினையாதே..!
படம்: கூகிள், நன்றி.
12 comments:
நாம் நாமாக இருப்பதுதான் ஆத்ம ஞானமோ?
இப்படி இருக்க அப்படியும் நடக்கும் எதையும் நம்பாதே உன்னையும் மறவாதே இருப்பதெதுவும் இழப்பதர்க்கில்லை இனிவை மருந்தாக இன்பங்கள் சூழ நடைப்போடு .... நல்லது சகோ...
Super Kavithai Ananthi!!!
Keep writing.
உண்மையை மறைக்காதே...
உள்ளதனைத்தும் சொல்லாதே
- இவ்விரண்டையும் செய்வது எப்படி?
நேர்ந்ததை எல்லாம் நினையாதே..!
-தவிர்க்க வேண்டிய ஒன்று தான்!
நன்றாக உள்ளது! எளிய தமிழ்! பாமரனுக்கும் புரியும் கவிதை! மேலும் வளர வாழ்த்துக்கள்!
அருமை அருமை
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
@சிந்தனை
நாம் நாமாக இருப்பது ஆத்ம ஞானமா என்பது பற்றி எனக்கு தெரியவில்லை.
ஆனால்... நாம் நாமாக இருப்பதால் நமக்கு அமைதியும், ஆனந்தமும் உறுதி என்று மட்டும் அறிவேன்.
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. :)
@தினேஷ்குமார்
கருத்திற்கு மிக்க நன்றி. :)
@மீனா
தேங்க்ஸ் மீனா... :)
@விஜி
உண்மையை மறைத்து பொய் சொல்ல வேண்டியது இல்லை. ஆனால் அதே சமயம், உள்ளது எல்லாவற்றையும் (உளறுவாயாய்ச்) சொல்ல வேண்டியதும் இல்லை என்பது என் கருத்து... என்ன...?? குழப்பிட்டனோ?? ;)
தேங்க்ஸ் விஜி.
@ரமணி
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. :)
நாம் நாமாக இருப்பது ஆத்ம ஞானமா என்பது பற்றி எனக்கு தெரியவில்லை.//
உங்களுக்கு சந்தேகமா இருந்தா புதுசா பதவி ஏற்ற மதுரை ஆதீனம் கிட்ட கேட்டு பாருங்க..!!! :D :D
புதிய ஆத்திசூடி!
காலத்திற்கு ஏற்றவாறு!
சுருங்கச் சொல்லி விளங்க வைத்தது
நன்று!
புலவர் சா இராமாநுசம்
அருமை!
@சஞ்சய்
ஹா ஹா... இல்ல இருக்கட்டும்.. எனக்கு தெரிஞ்ச வரைக்குமே போதும்.
கருத்துக்கு நன்றி. :)
@புலவர் சா. இராமானுசம்
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஐயா. :)
@கூடல் பாலா
கருத்துக்கு நன்றி..! :)
//நெகிழ்வாய் இரு..
ஏமாளியாய் இராதே...
ஏய்ப்பவனுடன் இராதே...
கடவுளை மறவாதே.
//
அருமையான வரிகள்
@என் ராஜபாட்டை- ராஜா
கருத்துக்கு நன்றி :)
Post a Comment