topbella

Thursday, April 12, 2012

நல்வரவு நந்தன ஆண்டே...!


நாளை பிறக்கப் போகும்
நந்தன ஆண்டிலாவது
ஆள்பவர் அமளி துமளி இன்றி
மின் இணைப்பு மிளிரட்டும்...

அன்பின் அணைப்பில்
ஆண்டும் கழியட்டும்...
இன்பமான உறவுகள்
இனிதே மலரட்டும்...

துன்பங்கள் நீக்கியே ஆண்டவன்
துணை இங்கு நிற்கட்டும்..
இல்லை என்ற சொல் இன்றி
எங்கும் ஏகாந்தம் நிலைக்கட்டும்..

நாளுக்கொரு சொல் சொல்வார்
நட்பு விலகி நன்மை விளையட்டும்...
நான் எனதென்ற அகங்காரம் நீங்கி
நாம் நமதென்ற நல்லெண்ணம் ஓங்கட்டும்..

இயற்கையின் சீற்றம்
இல்லாமல் போகட்டும்...
எல்லாம் வல்ல ஏக இறை
எம்முடன் இருந்து ஆளட்டும்...!

அனைவருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!



~அன்புடன் ஆனந்தி



(படம்: கூகிள், நன்றி)

9 comments:

மகேந்திரன் said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

சசிகலா said...

இனிய
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Ramani said...

அருமையான வருடப் பிறப்புக் கவிதை
மனம் கவர்ந்தது.வாழ்த்துக்கள்

தங்களுக்கும் தங்க்ள் குடும்பத்தாருக்கும் இனிய
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

சூரிய ஒளியின் துணையில் (சோலார்) மின் இணைப்பு மிளிரட்டும்! வைகறைப் பொழுதின் வெளிச்சம் எல்லார் வாழ்விலும் பரவட்டும்! இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

Asiya Omar said...

//நான் எனதென்ற அகங்காரம் நீங்கி
நாம் நமதென்ற நல்லெண்ணம் ஓங்கட்டும்..//
அருமை.நல்வாழ்த்துக்கள் ஆனந்தி.

r.v.saravanan said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஆனந்தி

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@மகேந்திரன்
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி.



@சசிகலா
வாழ்த்துக்கும், வருகைக்கும் நன்றி.



@ரமணி
மிக்க நன்றி. வாழ்த்துக்கும், வருகைக்கும் நன்றி.



@ஸ்ரீராம்
உண்மை தான்.. புது வருடத்தில் நடக்கட்டும். வாழ்த்துக்கு நன்றி.

நெல்லை விவேகநந்தா said...

நாளும் நல்ல நாள்தான்
நம் மனம் விரும்பினால்...
நாளும் இனிமைதான்
நாம் நினைத்தால்...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ஆசியா ஒமர்
வாங்க.. ரொம்ப நன்றிங்க :)


@r v saravanan
மிக்க நன்றிங்க :)


@நெல்லை விவேகநந்தா
ஹ்ம்ம்.. உண்மை தான். நாளும் இனிமையாக நல்லதே நினைப்போம்.
மிக்க நன்றி. :)

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)