யாரும் கலரை பார்த்து பயப்பட வேண்டாம்... டேஸ்ட் சூப்பர்-ஆவே இருக்கு. கண்டிப்பா செஞ்சு பாருங்க.
தேவையான பொருட்கள்:
ராகி மாவு - 3 கிண்ணம்
அரிசி மாவு - 2 கிண்ணம்
உளுந்து மாவு - 1 கிண்ணம்
பெருங்காயம் பொடி - சிட்டிகை
எள் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர்
எண்ணெய்
செய்முறை:
எளிமையான செய்முறை... குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். செஞ்சு பார்த்து சொல்லுங்க.
~அன்புடன் ஆனந்தி
தேவையான பொருட்கள்:
ராகி மாவு - 3 கிண்ணம்
அரிசி மாவு - 2 கிண்ணம்
உளுந்து மாவு - 1 கிண்ணம்
பெருங்காயம் பொடி - சிட்டிகை
எள் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர்
எண்ணெய்
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
- உளுந்து மாவை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
- அதனுடன் அரிசி மாவு, ராகி மாவு, உப்பு, எள், காயம், வெண்ணெய் கலந்து தேவையான தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.
- தேன்குழல் (முறுக்கு) அச்சில் மாவை போட்டு, மிதமான சூட்டில் உள்ள எண்ணையில் பிழிந்து, பொறித்து எடுக்கவும்.
- (சத்தம் அடங்கியதும் எடுத்து விட வேண்டும்... ராகி நிறத்தில் பொன்னிறம் எல்லாம் கண்டு பிடிக்க முடியாது)
எளிமையான செய்முறை... குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். செஞ்சு பார்த்து சொல்லுங்க.
~அன்புடன் ஆனந்தி
6 comments:
இந்த கையில கட்டுவாங்களே, அது தானே இது???!!!:P :D :D
இல்ல இல்ல.. நம்ம வசதி தான்..
ஒரு ஹெல்த்தி ரெசிப்பி சொல்லித்தந்தா.. இப்படி தான் நக்கல் பண்ணனும்..! :)
கருத்துக்கு ரெம்ப தேங்க்ஸ்..!
எளிமையான செய்முறை, செய்து பார்க்க வேண்டும். பகிர்வுக்கு நன்றி ஆனந்தி!
சூப்பர்.பார்சல் ப்ளீஸ்.
@சஞ்சய்
ஹி ஹி.. அது ராக்கி.. இது ராகி.. :)
@ப்ரியா
தேங்க்ஸ் ப்ரியா.. கண்டிப்பா செஞ்சு பாருங்க. :)
@ஆசியா ஒமர்
வாங்க.. ரொம்ப தேங்க்ஸ். அனுப்பிட்டேன். :))
நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
நன்றி
யாழ் மஞ்சு
Post a Comment