topbella

Friday, November 11, 2011

நெருங்கி நீ வர....!!!

அரும்பி வந்த அன்பினால்
அன்பே உன்னை
விரும்பி அழைக்கிறேன்..!


நெருங்கி நீ வர வேண்டும்
எனத் துடிக்கும் நெஞ்சம்
நிகழ்வில் என் செய்யுமென
நிச்சயமாய் நானறியேன்..!


வாய்ப்பேச்சில் என்னை
வசமிழக்கச் செய்து விட்டு
வக்கனையாய் வாதாடி
வம்பிழுத்துச் செல்வதே
உனது வாடிக்கை..!


நாட்கள் செல்ல செல்ல
நாயகன் உன் நினைவு
நாட்டியமாடும் என்னுள்ளே
நடக்கும் என்றே 
நான் நம்பிக்கையின் வாசலில்...!

...அன்புடன் ஆனந்தி 

20 comments:

சாந்தி மாரியப்பன் said...

கவிதை ஜூப்பரா இருக்கு ஆனந்தி..

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

ரொம்ப நன்றிங்க :)

சௌந்தர் said...

வாய்ப்பேச்சில் என்னை
வசமிழக்கச் செய்து விட்டு
வக்கனையாய் வாதாடி
வம்பிழுத்துச் செல்வதே
உனது வாடிக்கை..!///

அட அட அட என்னமா இருக்கு செம

சௌந்தர் said...

நாட்கள் செல்ல செல்ல
நாயகன் உன் நினைவு
நாட்டியமாடும் என்னுள்ளே//

பாட்டு பாடுராரோ..????

Vijaya Vellaichamy said...

நல்ல காதல் கவிதை :)

'பரிவை' சே.குமார் said...

அருமையான கவிதை... சகோதரி.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@சௌந்தர்
ரொம்ப நன்றி..!
ஹா ஹா.. நக்கலா? :)
கருத்துக்கு நன்றி சௌந்தர்!

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@விஜி
ரொம்ப நன்றிங்க விஜி :)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@சே. குமார்
கருத்துக்கு ரொம்ப நன்றிங்க!

Surya Prakash said...

அருமையான கவிதை சகோ ..............

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான கவிதை

தமிழ்வாசி பிரகாஷ் said...

அருமையான வரிகள். தொடர்ந்து எழுதலாமே.... அப்பப்போ வரீங்க...


நம்ம தளத்தில்:
ஹையோ! எவ்ளோ அருமையான படங்கள்! சூப்பரோ சூப்பர்!!

ராஜா MVS said...

கவிதை அருமை... சகோ

வாழ்த்துகள்...

middleclassmadhavi said...

//நம்பிக்கையின் வாசலில்...!// அருமை

Paru said...

கவிதைஅருமை. வார்தகள் அருமை.நம்பிக்கை
நிறைவேற வாழ்த்துக்கள்

Nandhini said...

கவிதை அருமை...செம..வாழ்த்துக்கள் ஆனந்தி:)

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அருமையான கவிதை.. ......................................................................... நாட்கள் செல்ல செல்ல
நாயகன் உன் நினைவு
நாட்டியமாடும் என்னுள்ளே
நடக்கும் என்றே
நான் நம்பிக்கையின் வாசலில்...! பிடித்த வரிகள்

சித்தாரா மகேஷ். said...

//வாய்ப்பேச்சில் என்னை
வசமிழக்கச் செய்து விட்டு
வக்கனையாய் வாதாடி
வம்பிழுத்துச் செல்வதே
உனது வாடிக்கை..!//

ம் ம்.உண்மைதான்.அருமை சகோதரி.

சிவகுமாரன் said...

நம்பிக்கை பலிக்கட்டும்.
வாழ்த்துக்கள்

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@சூர்யபிரகாஷ்

வாங்க. கருத்துக்கு நன்றி!



@ஸ்டார்ஜன்

வாங்க. நலமா? நன்றிங்க!



@தமிழ்வாசி -பிரகாஷ்

வாங்க.. ஹ்ம்ம்.. கண்டிப்பா எழுத முயற்சி செய்கிறேன்.

கருத்துக்கு நன்றி.



@ராஜா MVS

வாங்க.. நன்றிங்க



@middleclassmadhavi

வாங்க.. நன்றிங்க :)



@பாரு

தேங்க்ஸ் பாரு :))



@நந்தினி

தேங்க்ஸ்டா.. நந்து! :)



@தோழி பிரஷா

வாங்க.. ரொம்ப நன்றி :)



@சித்தாரா மகேஷ்

வாங்க... ஹ்ம்ம்.. ரசித்து சொன்ன கருத்துக்கு நன்றிங்க ;)



@சிவகுமாரன்

வாங்க... வாழ்த்துக்கு நன்றிங்க :)

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)