உன் கண்ணசைவில்
கண நேரத்தில் எந்தன்
உயிர் மூச்சாகி உந்தன்
காதலில் வீழச் செய்தாய்..
விதி எனக்கு எழுதிய
வேதம் இதுவா என்றே
விந்தை கொண்டேன் என்
சிந்தை வென்றேன்..
ஆதாரம் நீ என்றே
அன்பே உன்னை ஆழமாய்
அகத்தில் பூஜை செய்தே
ஆனந்தம் நான் கொண்டேன்..
யாதாயினும் இக்கணமில்லை
யாம் யாசித்தாலும் நேசித்தாலும்
யாதும் செய்ய இயலாதென்றாய்!
யோசித்தே பார்க்கிறேன்
உன்னை நிதம் நேசித்து
என்னுள் சிவமாய் பூஜித்து
புனர் ஜென்மத்திற்காய்
புதிதாய் பூத்தே காத்திருக்கிறேன்..!
~அன்புடன் ஆனந்தி
(படம்: நன்றி கூகிள்)
12 comments:
மேடம்... ரொம்ப நாள் கழிச்சு எழுதுற மாதிரி தெரியுது... எப்படி இருக்கீங்க...?
யாதாயினும் இக்கணமில்லை
யாம் யாசித்தாலும் நேசித்தாலும்
யாதும் செய்ய இயலாதென்றாய்!//
எனக்கு பிடித்த வரிகள் !!! மிக அருமையான வரிகள் !! :)
எனக்கு பிடித்த வரிகள் !!! மிக அருமையான வரிகள் !! :)
@Philosophy Prabhakaran
நான் நலம்.. நீங்க நலமா? வருகைக்கு நன்றி. :)
@Devinth
எனக்கும் பிடித்த வரிகள் இவை. கருத்துக்கு நன்றி! :)
ஆதாரம் நீ என்றே
அன்பே உன்னை ஆழமாய்
அகத்தில் பூஜை செய்தே
ஆனந்தம் நான் கொண்டேன்..//
அதான் பூஜை ரூம் விட்டு வர மாட்டேன் அடம் பிடிகுறீங்களா..??
யாதாயினும் இக்கணமில்லை
யாம் யாசித்தாலும் நேசித்தாலும்
யாதும் செய்ய இயலாதென்றாய்!//
அச்சோ சோ ஏன் அப்படி சொன்னார் இதோ நான் கேக்குறேன்..
யோசித்தே பார்க்கிறேன்
உன்னை நிதம் நேசித்து
என்னுள் சிவமாய் பூஜித்து
புனர் ஜென்மத்திற்காய்
புதிதாய் பூத்தே காத்திருக்கிறேன்..!//
ரொம்ப நேரம் காத்திருக்கீங்க போல...
:))
வணக்கம், புதியதோர் மகளிர் திரட்டி... புதிய முயற்சி.. உங்களின் அதரவு தேவை...
மங்கையர் உலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது...
நீங்கள் வலைப்பூவில் அல்லது இணையத்தளத்தில் எழுதும் மங்கையரா...?
உங்கள் வலைப்பூ/இணையத்தளம் மகளிருக்கு பயனளிக் கூடியதா?
உங்கள் பதிவுகளை இன்றே இங்கு இணைத்துக்கொளுங்கள்..v
மிக அழகான வரிகள், ரசித்து படித்தேன்.
அருமையான வரிகள் வாழ்த்துக்கள் சகோதரி .மிக்க நன்றி பகிர்வுக்கு .....
யாதாயினும் இக்கணமில்லை
யாம் யாசித்தாலும் நேசித்தாலும்
யாதும் செய்ய இயலாதென்றாய்!
வரிகள் அருமை
ஆதாரம் நீ என்றே
அன்பே உன்னை ஆழமாய்
அகத்தில் பூஜை செய்தே
ஆனந்தம் நான் கொண்டேன்..very nice .
@சௌந்தர்
ஹா ஹா... வாங்க.
அதானே.. கேளுங்க.. கேளுங்க. :))
ஆமா.. ஆமா.. காத்திக்கிட்டு இருக்கேன்!
தேங்க்ஸ் சௌந்தர்.
@மங்கையர் உலகம்
அழைப்பிற்கு நன்றி!
@ப்ரியா
வாங்க ப்ரியா! நலமா.
ரொம்ப நன்றிங்க! :)
@அம்பாளடியாள்
வாங்க. வாழ்த்துக்கு நன்றி. :)
@r v சரவணன்
வாங்க. கருத்துக்கு நன்றி! :)
@பாரு
தேங்க்ஸ் டா... பாரு :))
வரிகள் அனைத்தும்
விழிநோக்கி வரும் அம்பு போல...
ஆனந்தி...அருமை
Post a Comment