(போன வருடம் எங்கள் வீட்டு கொலுவில் எடுத்தது)
நிறைந்த அமாவாசையில்
நினை நினைத்து வேண்டியபடி
முதற் கடவுள் கணேசனை
முதலிலே எடுத்து வைத்து...
அருகருகே அம்மனவள்
துணிவை தாங்கி துர்க்கையாய்
விஜயம் செய்யும் லக்ஷ்மியாய்
சாந்தமாய் சரஸ்வதியாய்!
அடுத்தடுத்த படிகளிலே
அருகிருந்தே பார்க்கத்தோன்றும்
அஷ்ட லட்சுமிகள் அம்சமாய்
அமர்ந்து ஆட்சி செய்ய...
அறுபடை வீடுகளில்
ஆண்டி முதல் அரச கோலத்தில்
அழகு முருகன் ஆசி தர....
பத்து அவதாரங்களில்
பரம்பொருள் அங்கே...
பவித்திரமாய் காட்சி தர...
வெண்ணை திருடும் கண்ணன்
விஷமமாய் வீற்றிருக்க
கோபியர் மயங்கும் கிருஷ்ணன்
குழலூதி எமை இழுக்க...
சின்ன குழந்தைகள்
சிரித்தே மகிழ்ந்திட
உற்றார் உறவினர்
உடன் வந்து கலந்திட...
ஐயிரண்டு நாட்களிலும்
அமிர்தமாய் பிரசாதம் செய்து
அம்பாள் அவளை எண்ணி
...அன்புடன் ஆனந்தி
21 comments:
அம்பிகையை நினைத்தாலே வேண்டுவன அனைத்தும் கிட்டும் சகோ .... அருமையான கவிதை வரிகள்
நல்ல வரிகள்...நல்ல சிந்தனை...வாழ்த்துக்கள்
நவமணிகள் கோர்த்து வந்த
நவ ராத்திரி மாலை.
அருமைக் கவி.
அழகாய் இருக்கு கவி ...
நல்ல அழகான கடவுளை பற்றிய கவிதை..
பாராட்டுக்கள்.
http://sempakam.blogspot.com
அருமையான கவிதை வரிகள்..வாழ்த்துக்கள் சகோ
கவிதையும்,கொலு அலங்காரமும் ரொம்ப அழகாக இருக்குப்பா...நவராத்திரி வாழ்த்துக்கள்..
ம்ஹூம்,இந்த கொலுவும் வந்துடுச்சு ஆனா எப்படி கொலு ஒவ்வொரு படியிலும் வைப்பதுன்னு மட்டும் கடைசிவரை சொல்லவேயில்லை போங்க....
கவிதை ரொம்ப நல்லா இருக்கு சகோதரி.
நம்ம பக்கமெல்லாம் வந்து ரொம்ப நாளாச்சு போல.
nalla kavithai..kolu vaikka thayaar aayiteengala?
கவிதையும் கொலு அலங்காரமும் சூப்பரா இருக்கு சுண்டல்லாம் கிடையாதா?
முதல் முதலாக எழுதிய பக்தி கலந்த கவிதை மிக அருமை. நவராத்திரி வாழ்த்துக்கள்
அன்போடு அழகிய கவிதை....
வாழ்க வளமுடன்.
""சின்ன குழந்தைகள்
சிரித்தே மகிழ்ந்திட
உற்றார் உறவினர்
உடன் வந்து கலந்திட...""
-அழகா சொல்லிருகீங்க..
நவராத்திரி கொலுவுக்கு
எங்களையெல்லாம் கூப்பிடமாட்டிங்களா..?
Kavithai nalla irukku !!!
Timing Kavithai :)
நவராத்திரி நாளில் நல்ல ஒரு பதிவு. நன்றி.
அழகான கொலு....அழகாய் இருக்கு கவிதை வரிகள்...வாழ்த்துக்கள்.
அருமையான கவிதை வரிகள்...நல்ல சிந்தனை
அப்பொ அப்போ இங்கேயும் வந்து தலகாட்டுங்க
http://vairaisathish.blogspot.com
உங்க கொலு அருமையா இருக்கு. கவிதையும் அருமை.
அருமை
@தினேஷ்குமார்
ஆமாங்க..வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்! :)
@ரெவரி
வருகைக்கு மிக்க நன்றி!
@மகேந்திரன்
கருத்திற்கு நன்றிங்க.
@கந்தசாமி
கருத்திற்கு நன்றி
@விடிவெள்ளி
பாராட்டிற்கு நன்றிங்க.
@விக்கியுலகம்
கருத்திற்கும், வாழ்த்திற்கும் நன்றிங்க.
@S Menaga
ஹ்ம்ம்ம்.. ரொம்ப தேங்க்ஸ் பா..
ஹா ஹா... சொல்றேன் சொல்றேன். அவ்வ்வ்வ்..!
@சே. குமார்
வாங்க.. கருத்திற்கு ரொம்ப நன்றி. வரேங்க.
@lekha
நன்றி லேகா. நல்ல படியா கொண்டாடி முடிச்சாச்சு. (என்ன ஒரு சுறு சுறுப்பு பாருங்க எனக்கு.. :) )
@Lakshmi
வாங்க... கண்டிப்பா உண்டு.. வாங்க. :))
கருத்திற்கு நன்றிம்மா.
@பாரு
ரொம்ப தேங்க்ஸ் டா... :)
@V N Thangamani
கருத்திற்கு நன்றிகள்.
@சின்னதூரல்
கண்டிப்பா கூப்பிடுவேன். எல்லாரும் வாங்க. :)
நன்றி
@Thanglish Payan
ரொம்ப நன்றிங்க.
@சந்திர வம்சம்
கருத்திற்கு நன்றி.
@நந்தினி
தேங்க்ஸ் டா.. :)
@வைரை சதிஷ்
கருத்திற்கு நன்றி. வருகிறேன்.
@priyaram
ரொம்ப நன்றிங்க :)
@மாய உலகம்
கருத்திற்கு நன்றி!
கொலு அலங்காரம் வரிகளிலும்...
இப்படி ஒரு கொலு..
முதல் முறையாக என் பார்வையில்
Post a Comment