topbella

Tuesday, January 25, 2011

ஒரு வேண்டுதல்...!



உயிர் மூச்சை வரியாக்கி...
உன் உறவை கருவாக்கி....
உள்ளுணர்வை அதில் ஊற்றி..
உன்னிடமே ஒரு வேண்டுதல்...!

காலம் சென்றாலும்
காதோரம் நரைத்தாலும்
உன் கைகோர்த்து காலாற 
நடந்திடவே வேண்டும்..!

உன் கண்ணிரண்டும் கவி பாட
என் எண்ணமெங்கும் 
எதுவோ ஓட.....
எப்போதும் தப்பாமல்
என்னுடனே நீ வேண்டும்..!

அருகில் அமர்ந்தாலும் உன் 
அன்பில் நான் நனைந்தாலும்
ஒற்றைக் கண்ஜாடை தன்னில்
ஓராயிரம் கவி பேசிட வேண்டும்...!

நித்தமும்  காணாவிடினும்
நிமிடம் நீங்காமல் பேசாவிடினும்
நினைவிலேனும் நீங்காத
நிச்சயமான வரம் வேண்டும்...!

 ~அன்புடன் ஆனந்தி 


55 comments:

dheva said...

ஏங்க கவிதை நல்லா இருக்குங்க அதை விட்டுத்தள்ளுங்க

சில கேள்விகள்.....

//உன் கண்ணிரண்டும் கவி பாட
என் எண்ணமெங்கும்
எதுவோ ஓட.....//

ஏங்க என்னங்க ஓடுச்சு? பாம்பா, பல்லியா பூரானா.. பாத்து அடிச்சுடுங்க..

//உயிர் மூச்சை வரியாக்கி...
உன் உறவை கருவாக்கி....
உள்ளுணர்வை அதில் ஊற்றி..
உன்னிடமே ஒரு வேண்டுதல்...!//

ரெண்டு கப்லயா ஊத்தி கொடுங்க....உள்ளுணர்வத்தான்....

கவிதை நல்லா இருக்குங்க ஆனந்தி..(வேற வழி....!)

dheva said...

சரி வேண்டுதல்னு சொல்லியிக்கீங்க....

காவடி எடுப்பீங்களா?

டவுட்டு :))))

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நல்லாயிருக்கு ஆனந்தி.

S Maharajan said...

கவிதை நல்லா இருக்குங்க

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

nice nice. .. mybest wishes to you!

Sanjay said...

கலக்கல்
கலக்கல்
கலக்கல்
கலக்கல்
கலக்கல்
அஞ்சு பந்திக்கு அஞ்சு கலக்கல்...!!!:D
மொத்ததுல கலக்கலோ கலக்கல்..!!!

பிச்சு உதறிட்டீங்க போங்க..!!;-)

test said...

Nice! :-)

Thanglish Payan said...

Fanstastic ..

Nice poet.

Thanglish Payan said...

Fanstastic ..

Nice poet.

கோநா said...

arumai ananthi.

தமிழ் உதயம் said...

நல்லா இருக்குங்க கவிதை.

சாந்தி மாரியப்பன் said...

கவிதை நல்லாருக்குங்க..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

கவிதை super ஆனந்தி...

Mugundan | முகுந்தன் said...

//உயிர் மூச்சை வரியாக்கி...
உன் உறவை கருவாக்கி....
//

அருமையான வரிகள்,சகோதரி.

Unknown said...

கவிதை நல்லாயிருக்கு.
வரிகள் super.

தினேஷ்குமார் said...

அருமையா சொல்லியிருக்கீங்க சகோ கவிதை நன்று

Unknown said...

//காலம் சென்றாலும்காதோரம் நரைத்தாலும்உன் கைகோர்த்து காலாற நடந்திடவே வேண்டும்..!//

ரசனையான வரிகள். பரபரப்பு குறைந்திருந்திரும் அந்த நரைக்கூடிய நாள்களில் மட்டும் தான் உண்மை அன்பின் அருமையை முழுவதும் ரசிக்க முடியுமா?

Unknown said...

நீங்கள் கேட்கும் நீங்காத வரம் கிடைக்கட்டும்..

சுந்தரா said...

கவிதை நல்லாருக்குங்க.

Prabu M said...

இனிமையான கவிதை :)
திகட்டாத இனிமை....

ஜீவன்பென்னி said...

கேட்ட வரம் எல்லாம் கிடச்சுதுங்களா?????

Mahi said...

கவிதை நல்லாருக்குங்க ஆனந்தி!

Philosophy Prabhakaran said...

கவிதை சூப்பரா இருக்கு மேடம்...

Philosophy Prabhakaran said...

உங்ககிட்ட இருந்து வெரைட்டியா எதிர்ப்பாக்குறோம் மேடம்...

மாணவன் said...

எல்லாருமே கவிதை நல்லாருக்கு, சூப்பர் அருமை.. என்று சொல்லிட்டாங்க...

அதான் ஒரு சேஞ்சுக்கு
.
.
.
.
.
.
.
.
.
.
கவிதை பிரமாதம் :-)))

மாணவன் said...

//நித்தமும் காணாவிடினும்நிமிடம் நீங்காமல் பேசாவிடினும்நினைவிலேனும் நீங்காதநிச்சயமான வரம் வேண்டும்...!//

வரம் கிடைக்கனுமுன்னா தவம் செய்யனுமே???

வரம் சீக்கிரமே கிடைக்க வாழ்த்துக்கள்...

Anonymous said...

ஏகப்பட்ட வேண்டுதல் கேட்டுட்டு ”ஒரு வேண்டுதல்”னு தலைப்பு வச்சிருக்கீங்க?! ;) ( ஏதோ என்னால முடிஞ்சது ) ஹி ஹி..
கவிதை நல்லாயிருக்கு ஆனந்தி!

சௌந்தர் said...

காலம் சென்றாலும்
காதோரம் நரைத்தாலும்
உன் கைகோர்த்து காலாற
நடந்திடவே வேண்டும்..!///

எங்க உங்க வீட்டு வெளிய நடந்து போங்க


ஒற்றைக் கண்ஜாடை தன்னில்
ஓராயிரம் கவி பேசிட வேண்டும்...!///

இந்த ஒரு கவிக்கே முடியலை இன்னுமா அவர் கிட்ட மட்டும் தனியா சொல்லுங்க

சௌந்தர் said...

dheva said...
சரி வேண்டுதல்னு சொல்லியிக்கீங்க....

காவடி எடுப்பீங்களா?

டவுட்டு :))))///

இல்லை இவங்க வரம் எல்லாம் கேக்குறாங்க தீ மிதித்தால் தான் வரம் கிடைக்கும்...

ISR Selvakumar said...

தங்ஸ்,
எனக்கு இன்று திருமண நாள்.
அதை தெரிந்து வைத்துக் கொண்டு பொருத்தமாக கவிதை எழுதிட்டியோ?
அருமை!

Anonymous said...

காதலின் ஒரே எதிர்ப்பார்ப்பு இது தானே ஆனந்தி..கவிதை ரொம்ப பிடிச்சது..

NADESAN said...

nalla kavitahi

Nellai P.Nadesan
Duabi

'பரிவை' சே.குமார் said...

ஒரு வேண்டுதல்...

ஓராயிரம் சொல்கிறது.
கவிதை அருமை சகோதரி.

logu.. said...

\\நித்தமும் காணாவிடினும்
நிமிடம் நீங்காமல் பேசாவிடினும்
நினைவிலேனும் நீங்காத
நிச்சயமான வரம் வேண்டும்...!\\

Fentastic...

தமிழ் said...

அருமை

Priya said...

வரம் கிடைக்கட்டும்.... வேண்டுதல் பலிக்கட்டும்!
வாழ்த்துக்கள் ஆனந்தி!

சி.பி.செந்தில்குமார் said...

aanandhi.. the rhyme is ok..

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@தேவா
//ஏங்க கவிதை நல்லா இருக்குங்க அதை விட்டுத்தள்ளுங்க//
....அவ்வ்வ்வ்.. கவிதைய விட்டுத் தள்ளனுமா?? சரி ரைட்ட்டு.....
அப்புறம்??

//சில கேள்விகள்.....//
...சரி கேளுங்க..

//ஏங்க என்னங்க ஓடுச்சு? பாம்பா, பல்லியா பூரானா.. பாத்து அடிச்சுடுங்க..//
.....ஹும்ம் கும்ம்.. இத கேக்கத் தான், இம்புட்டு அவசரமா...ஓடி வந்து கமெண்ட் போட்டீகளாக்கும்..

//ரெண்டு கப்லயா ஊத்தி கொடுங்க....உள்ளுணர்வத்தான்....///
.....அவ்வ்வ்வவ்வ்வ்.. ஏன் ஏன்ன்ன்ன்????? இருங்க வரேன்...

//கவிதை நல்லா இருக்குங்க ஆனந்தி..(வேற வழி....!)//

......அட கடவுளே.... நா என்ன பண்ணுவேன்...?

ரொம்ப நன்றிங்க தேவா.. (என்னா வில்லத்தனம்ம்ம்ம்??? )



//சரி வேண்டுதல்னு சொல்லியிக்கீங்க....

காவடி எடுப்பீங்களா?

டவுட்டு :)))//

ச ச... காவடி இல்ல.. கரகம் எடுப்பேன்.. என்ன டவுட்-ஆ இருந்தாலும்... பதட்டப் படாம, நின்னு நிதானமா கேட்டுட்டு போங்க... ஒன்னியும் அவசரம் இல்ல...!

(கிர்ர்ர்ரர்ர்ர்ர்... நல்லா வருதுங்க டவுட்ட்டு......)

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@தோழி பிரஷா
வாங்க.. உங்க கருத்துக்கு ரொம்ப நன்றிங்க.. :)



@@S Maharajan
வாங்க... ரொம்ப நன்றிங்க.. :-)



@@மாத்தி யோசி
வாங்க.. ரொம்ப தேங்க்ஸ் தேங்க்ஸ்.. :-)

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@சஞ்சய்

ஹா ஹா ஹா.. :-))))

ரெம்ப ரெம்ப ரெம்ப ரெம்ப ரெம்ப தேங்க்ஸ்..
//பிச்சு உதறிட்டீங்க போங்க..!!;-) //

என்னத்த..?? சொல்லவே இல்ல.. எச்சூஸ்மி... பாராட்டுறீங்களா.. திட்றீங்களா...
ஒரு மைல்ட் டவுட்ட்டு.. ஹி ஹி ;)

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@ஜீ
வாங்க.. ரொம்ப நன்றிங்க.. :)



@@Thanglish Payan
வாங்க.. ரொம்ப தேங்க்ஸ் :)



@@கோநா
வாங்க.. ரொம்ப நன்றிங்க :)


@@தமிழ் உதயம்
வாங்க.. ரொம்ப நன்றிங்க :-)


@@அமைதிச்சாரல்
வாங்க.. ரொம்ப தேங்க்ஸ் :-)


@@அப்பாவி தங்கமணி
வாங்க.. தேங்க்ஸ் புவனா.. :)

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@எண்ணத்துப்பூச்சி
வாங்க.. கருத்துக்கு நன்றிங்க :)


@@poorna
வாங்க...ரொம்ப தேங்க்ஸ் ;-)



@@தினேஷ்குமார்
வாங்க.. ரொம்ப நன்றிங்க உங்க கருத்துக்கு :-)



@@பாரத்... பாரதி
//ரசனையான வரிகள். பரபரப்பு குறைந்திருந்திரும் அந்த நரைக்கூடிய நாள்களில் மட்டும் தான் உண்மை அன்பின் அருமையை முழுவதும் ரசிக்க முடியுமா?//

...அப்படின்னு நினைக்கிறேன்.. நம்புறேன் :-)
கருத்துக்கு நன்றிங்க.

//நீங்கள் கேட்கும் நீங்காத வரம் கிடைக்கட்டும்//

...ரொம்ப நன்றிங்க :-))



@@சுந்தரா
வாங்க. ரொம்ப நன்றிங்க :)

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@பிரபு எம்
வாங்க.. ரொம்ப நன்றிங்க :)



@@ஜீவன்பென்னி
வாங்க.. ஹா ஹா.. இன்னும் கிடைக்கலை.. :-)
கிடைக்கும்னு நம்புறேன்..
நன்றிங்க



@@Mahi
வாங்க.. ரொம்ப தேங்க்ஸ் மஹி :)



@@Philosophy Prabhakaran
வாங்க.. ரொம்ப நன்றிங்க :-)

//உங்ககிட்ட இருந்து வெரைட்டியா எதிர்ப்பாக்குறோம் மேடம்...//
...என்னங்க பண்றது..
உலகையே ஆளும் காதல் தான் கவிதையில் பெரும்பாலும் வந்து விடுகிறது..

முயற்சி செய்கிறேன்.. கருத்துக்கு நன்றிங்க :)



@@மாணவன்
ஹா ஹா ஹா.. வாங்க

நன்றிங்க ரொம்ப :) (நாங்களும் சேஞ்சா நன்றி சொல்வோம்)

//வரம் கிடைக்கனுமுன்னா தவம் செய்யனுமே??? //

....ஆமா.. கண்டிப்பா.. தவம் இன்றி கிடைக்குமா என்ன?


//வரம் சீக்கிரமே கிடைக்க வாழ்த்துக்கள்//

....உங்க வாழ்த்திற்கு நன்றிங்க.. :)

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@சௌந்தர்

//எங்க உங்க வீட்டு வெளிய நடந்து போங்க //

....பின்னே... உங்க வீட்டுக்கு வெளிலயா நடக்கப் போறோம்..


//இந்த ஒரு கவிக்கே முடியலை இன்னுமா அவர் கிட்ட மட்டும் தனியா சொல்லுங்க//

....அதெப்புடி.. அம்புட்டு சீக்கிரம் உங்கள எல்லாம் விட்ருவேனா..
அதெல்லாம் முடியாது.. :)


//இல்லை இவங்க வரம் எல்லாம் கேக்குறாங்க தீ மிதித்தால் தான் வரம் கிடைக்கும்..///

...ஹ்ம்ம் கும்ம்.. சாமியே சும்மா இருந்தாலும்.. நீங்க விட மாட்டிங்க போல இருக்கே..
ஹலோ.. சாமி விஷயம்.. நோ விளையாட்டு.. மீ பாவம்.. :-)





@@r. selvakumar
வாங்க அண்ணா.. :-)))
ரொம்ப சந்தோசம். உங்களுக்கும், அண்ணிக்கும்.... இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..!






@@தமிழரசி
வாங்க.. சரியா சொன்னிங்க..
ரொம்ப நன்றிங்க :-)

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@NADESAN
வாங்க.. நன்றிங்க :)





@@சே. குமார்
வாங்க.. ஆமாங்க.. ரொம்ப நன்றி :-)





@@logu..
வாங்க.. ரொம்ப தேங்க்ஸ் :)





@@சி. பி. செந்தில்குமார்
வாங்க.. கருத்துக்கு நன்றிங்க :-)

சௌந்தர் said...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...
@@சௌந்தர்

//எங்க உங்க வீட்டு வெளிய நடந்து போங்க //

....பின்னே... உங்க வீட்டுக்கு வெளிலயா நடக்கப் போறோம்..////

அடிக்கிற குளிர்ல வெளிய நடந்து போவாங்கலாம்

Unknown said...

கவிதை நல்லா இருக்கு ஆனந்தி..

arasan said...

அற்புதமான வரிகளை உள்ளடக்கிய கவிதை ...

சிறப்பா இருக்குங்க ... வாழ்த்துக்கள்

Nandhini said...

இந்த கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சது....நல்லாருக்கு ஆனந்தி....One of your best....super...super...

ஆயிஷா said...

கவிதை நல்லா இருக்கு ஆனந்தி.

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

//அடிக்கிற குளிர்ல வெளிய நடந்து போவாங்கலாம்//

நாங்க அதெல்லாம்.. நல்லா கவர் பண்ணிட்டு போவோம்..

எங்களுக்கும் சம்மர் வரும்...
அப்போவும் போவோம்.. :-))

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@ஜெ. ஜெ.
வாங்க.. ரொம்ப நன்றிங்க :-)



@@அரசன்
வாங்க.. ரசனைக்கு நன்றிங்க :-)



@@நந்தினி
வாங்க நந்து.. தேங்க்ஸ் டா ;-)




@@ஆயிஷா
வாங்க.. ரொம்ப நன்றிங்க :-)

R.Gopi said...

ஆனந்தி....

உணர்வை வார்த்தெடுத்து நீங்கள் வடித்த கவிதை மனதை உருக்கி விட்டது...

வாழ்த்துக்கள் ஆனந்தி....

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

வாங்க கோபி.. ரசித்து சொன்ன கருத்திற்கு ரொம்ப நன்றி :-)

செந்தில்குமார் said...

ம்ம்ம்..ஆனந்தி

அழகான வரிகள் ...
நித்தமும் காணாவிடினும்நிமிடம் நீங்காமல் பேசாவிடினும்நினைவிலேனும் நீங்காதநிச்சயமான வரம் வேண்டும்...!

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)