topbella

Thursday, January 20, 2011

அமெரிக்க வாழ்க்கை .....பாகம் 6

ரொம்ப நாளா இந்த தொடரை எழுத நினைத்து..இயலாமல் போய்விட்டது..! கால தாமதத்திற்கு மன்னிக்கவும்..!


இதற்கு முந்தைய பாகம் 5


          என் சின்ன பொண்ணை, நீயும் டான்ஸ் கிளாஸ் போறயான்னு கேட்டேன்.. உடனே யோசிக்காம பதில் வந்தது.. நோ அம்மா...ன்னு..!! ஏண்டான்னு? கேட்டேன்.. அதுக்கு அவ சொல்றா, "யு அண்ட் அக்கா, ஆல்வேஸ் பைட்ன்னு...!"ஆஹா, புள்ள நம்ம போடுற குஸ்தில பயந்து போயி தான் டான்ஸ் கிளாஸ் வேணாம்னு சொல்லுது..! எப்படியாச்சும், தேத்தி அடுத்த விஜயதசமியில்  டான்ஸ் கிளாஸ் சேக்கணும்னு பிளான் வச்சிருக்கேன்.. பாப்போம்..! (உடனே.. வரிஞ்சு கட்டிட்டு சண்டைக்கு வரபிடாது.. அதான் புள்ள, வேணாம்னு சொல்லுதே விட வேண்டியது தானேன்னு...) ஒரு நாள்.. அவ அக்கா மாதிரி டான்ஸ் கத்துக்கணும்னு சொல்றா.. ஒரு நாளா வேணாம்னு சொல்றா..! சரி ஒரு முடிவுக்கு வரட்டும்னு வெயிட் பண்றேன்..!


          இதெல்லாம் தவிர இங்கே ஸ்லோகம் கிளாஸ்-னு இருக்கு. ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் நடக்கும், 10 மணி முதல் 11 :30 மணி வரைக்கும் ஸ்லோகம், அப்புறம் ராமாயணம் கதை, சொல்வாங்க.. அதுக்கு பிறகு, தமிழ் பாடம் எடுப்பாங்க. என் குட்டீஸ் ரெண்டு வருஷமா போறாங்க.. ரொம்பவும் உபயோகமான கிளாஸ் இது. நம் பண்பாடு விட்டுப் போகாம இருக்க உதவியா இருக்கு. என் குட்டீஸ் ரெண்டும் சேர்ந்து எதாவது ஸ்லோகம் சொல்லும் போது, பார்க்க சந்தோசமா இருக்கும். ஸ்லோகம் முடிந்ததும், தமிழ் சொல்லித் தராங்க.. இப்போ என் குட்டீஸ்.. எழுத்துக் கூட்டி வாசிக்க முயற்சி செய்றாங்க....  (சரி நம்மளும், உருப்படியா ஏதோ பண்றோம்னு ஒரு திருப்தி தான்).மொத்தத்தில் எல்லா கிளாஸ்-ம் சேர்த்து விட்டுட்டு நாம புல் டைம் டிரைவர் ஆக வேண்டியது தான்..!


(இந்த படம் வருட கடைசியில் ஸ்லோகம் கிளாஸ்-இல் போட்ட பாலராமாயணம் நாடகம்)

          மத்தபடி இங்கே நம்ம பண்டிகைகள் எல்லாமே ஊரில் கொண்டாடுவதைப் போலவே விமரிசையா கொண்டாடுறோம்.. நவராத்திரியில் கொலு வைப்பது எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம்... அத பத்தி கொஞ்சம் சொல்லணும். குட்டீஸ்-க்காக தான் கொலு வைக்க ஆரம்பித்தேன். இப்போ 3 வருஷமா வச்சிட்டு இருக்கேன். நவராத்திரி தொடக்கத்திலயே அந்த பரபரப்பு வந்திரும். எல்லா பிரண்ட்ஸ்-யும் கூப்பிட்டு குங்குமம் குடுக்கறது பெரிய சந்தோசம்.  தோழி மேனகா, கொலு வைக்கறது பத்தி ஒரு பதிவு போட சொல்லி சொன்னாங்க.. அத தனி பதிவா போடறேன்..! (அடுத்த கொலுவுக்குள் பதிவு போட்டு விடுகிறேன் மேனகா...என் சுறுசுறுப்பு விவகாரம் தான் உங்களுக்கு தெரியுமே...!!)


          அடுத்து இங்க உள்ள தமிழ் சங்கம்... வருடத்தில் நாலைந்து முறையாவது, கண்டிப்பாக ப்ரோக்ராம் இருக்கும்... வரும் வாரங்களில் கூட பொங்கல் நிகழ்ச்சி இருக்கு..! அங்கே போனா.. நம்ம பிரண்ட்ஸ் எல்லாரையும் ஒரு சேர பார்ப்பது ரொம்ப ஜாலி-ஆ இருக்கும்... நம்ம ஊர்ல கல்யாண வீட்டிற்கு போல சந்தோசம் இங்கே கிடைக்கும்.. கலர் கலராக, அழகு அழகாக எல்லாரும் டிரஸ் பண்ணிட்டு வந்திருப்பதை பார்ப்பதே விருந்து தான்..! பெரும்பாலும் பெண்கள் எல்லாம் சேர்ந்து தான் இந்த ப்ரோக்ராம் எல்லாம் போறது.... வெயிட்..வெயிட்... நோ டென்ஷன்.. அது ஏன்னா.. எங்க குட்டீஸ் சின்ன பசங்களா இருக்கறதால.. அங்க போயி கொஞ்ச நேரத்தில் அவங்களுக்கு போர் அடிக்குது.... எப்போ வீட்டுக்கு போகலாம்னு கேட்டுட்டே இருப்பாங்க..... அதனால... நிம்மதியா வீட்லயே இருந்து விளையாடட்டும்னு ஒரு நல்ல எண்ணத்தில் தான் நாங்க மட்டும் போறது...! (அதாகப் பட்டது... எங்க தொல்லை இல்லாம அவங்களும் கொஞ்சம் நிம்மதியா இருக்கட்டுமேன்னு தான்... எப்புடி.. எங்க டூ இன் ஒன் ஐடியா..!)


          அப்புறம் போன வாரம் கொண்டாடிய பொங்கல்..... நம்ம ஊரில் வைப்பது போல், வெளியில் எல்லாம் வைத்து பொங்கல் விட முடியாது.. இப்போ இங்கே, கடுமையான பனிக்காலம் வேற..! வெளியில் முழுக்க முழுக்க ஐஸ் தான் இருக்கும்..! (உணர்ச்சி வசப்பட்டு வெளியில போனா..... பொங்கப்பானை....எல்லாம் இருக்கும்.. நம்ம தான் இருக்க மாட்டோம்.. அம்புட்டு குளிரு...) ஆனால், நம்ம ஊரில் செய்வது போல், முந்தைய நாட்களில், காய்கறிகள், கரும்பு.. எல்லாம் வாங்கி வந்து.. பொங்கல் அன்று விளக்கு ஏற்றி, சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் விதமாய் காய்கள், பழங்களுடன் படைத்து, வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கலிட்டு.. பூஜை செய்தோம்..! நீங்களும் அது தான் செஞ்சிருப்பீங்க.... ஏதோ உங்க கிட்ட என்னோட சந்தோசத்தை பகிர்ந்துக்கறேன்..!


.......(தொடரும்)

(படங்கள்: எல்லாம் சொந்த படங்கள் தான்..)


40 comments:

Sanjay said...

"யு அண்ட் அக்கா, ஆல்வேஸ் பைட்ன்னு...!//
ஹா ஹா சூப்பர்...!!!

ஆஹா, புள்ள நம்ம போடுற குஸ்தில பயந்து போயி தான் டான்ஸ் கிளாஸ் வேணாம்னு சொல்லுது..!!

அப்போ பேசாம WWEகு அனுப்புங்க!!:D :D

சரி நம்மளும், உருப்படியா ஏதோ பண்றோம்னு ஒரு திருப்தி தான்//

வாழ்க வளமுடன் ;-)

மொத்தத்தில் எல்லா கிளாஸ்-ம் சேர்த்து விட்டுட்டு நாம புல் டைம் டிரைவர் ஆக வேண்டியது தான்..!//
மீடற்கு மேல, கீழலாம் வாங்குவீங்களா??:D :D

எங்க தொல்லை இல்லாம அவங்களும் கொஞ்சம் நிம்மதியா இருக்கட்டுமேன்னு தான்..//
தலை கீழா இல்ல நடக்குற மாதிரி தோணுது....:P

உணர்ச்சி வசப்பட்டு வெளியில போனா..... பொங்கப்பானை....எல்லாம் இருக்கும்.. நம்ம தான் இருக்க மாட்டோம்.. அம்புட்டு குளிரு//

ஹா ஹா ஹா...செம SENSE OF HUMOUR!! :D

சாந்தி மாரியப்பன் said...

பொங்கல் நல்லாருக்குப்பா..

Krishnaveni said...

very nice write up about american life, pongal photo looks great

dheva said...

அதானே ..அமெரிக்கா பாகம் எங்கடான்னு பார்த்தென்....

முறையா வாசல்ல பொங்கல் வச்சு இருக்கலாம்ல.. நீங்க இல்லனாலும் பொங்கப் பானையும் பொங்கலும் மிஞ்சி இருக்கும்ல...!

//நீங்களும் அது தான் செஞ்சிருப்பீங்க.... ஏதோ உங்க கிட்ட என்னோட சந்தோசத்தை பகிர்ந்துக்கறேன்..!//

ஓ. அப்டியா..நன்றிங்க!

பழமைபேசி said...

எந்த ஊர் தமிழ்ச் சங்கமுங்க??

Menaga Sathia said...

நானும் என்னடா இந்த தொடரை காணாமேன்னு பார்த்தேன்... ஒரு வழியா எழுதிட்டீங்க..சீக்கிரம் கொலு பதிவு போடுங்க இல்லன்னா சாமி கண்ணை குத்திடும்...

Nandhini said...

சந்தோசமா இருக்கு படிக்க....பொங்கல் கொண்டாடியது அருமை....அருமை...

வாழ்த்துக்கள் ஆனந்தி..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//அதாகப் பட்டது... எங்க தொல்லை இல்லாம அவங்களும் கொஞ்சம் நிம்மதியா இருக்கட்டுமேன்னு //
பிள்ளைக மட்டுமா இல்ல அவங்க அப்பாக்களுமா? ஜஸ்ட் அ கொஸ்டின்.. நோ டென்ஷன்... ஹா ஹா ஹா...

நாங்களும் சூப்பரா பொங்கல் வெச்சோம்...பிரெண்ட்ஸ் ஏழு பேர் சேந்து ஒரே வீட்டுல கூட்டுறவு பொங்கல்... செம ஜாலியா இருந்தது...

Avargal Unmaigal said...

தமிழ் நாட்டுல பொங்கல் பண்ணினா பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுப்பார்கள்...அது மாதிரி ஏதாவது செய்தீர்களா?இல்லை பக்கத்தில் தமிழ்ர்கள் ஏதுமில்லையா? நெக்ஸ்ட டைம் மறக்காம நியூ ஜெர்ஸிக்கு ஒரு பார்சல் அனுப்புங்க....சுத்த அக்மார்க் பெற்ற மதுரை தமிழன்

Avargal Unmaigal said...

உங்களுடைய முந்தைய பதிவுகளை படித்தேன். நன்றாக எழுதியுள்ளீரகள்...வாழ்த்துக்கள்

Philosophy Prabhakaran said...

இதைப் படிக்கும்போது முந்தய பாகங்களை தவற விட்ட வருத்தம் தோன்றுகிறது... இருக்கட்டும் இனி தொடர்கிறேன்...

கவி அழகன் said...

http://kavikilavan.blogspot.com/

ஊரு விட்டு ஊரு வந்தாலும் பண்பாடு கலாச்சாரம் மாரல வாழ்த்துக்கள்

மாணவன் said...

நடந்த நிகழ்வுகளை யதார்த்தமாக சொல்லியிருக்கீங்க சூப்பர்...

//எல்லாம் சொந்த படங்கள் தான்..)///

படங்கள் அனைத்தும் நல்லாருக்குங்க...

பகிர்வுக்கு நன்றி

இம்சைஅரசன் பாபு.. said...

பொங்கலுக்கு முழு கரும்பு தோகையோட கிடைக்கவில்லையா ????..பண்பாடு மறக்காம அழகா சொல்லி இருக்கீங்க

ராம்ஜி_யாஹூ said...

பகிர்விற்கு நன்றிகள்

Anonymous said...

ரொம்ப இயல்பா சொல்லியிருக்கீங்க ஆனந்தி! :)

//அடுத்த கொலுவுக்குள் பதிவு போட்டு விடுகிறேன் மேனகா...என் சுறுசுறுப்பு விவகாரம் தான் உங்களுக்கு தெரியுமே...//

ரைட் ரைட் ;)

Madhavan Srinivasagopalan said...

வழக்கம்போல சூப்பரா வந்திருக்கு..
தொடரவும்.

சௌந்தர் said...

ரொம்ப சுறுசுறுப்பா பொங்கல் வைத்து கொண்டாடி இருக்கீங்க ம்ம்ம்ம் அது என்ன வெள்ளை கலர்ல இருக்கு அது பாயசம் சொல்லிடாதீங்க

சௌந்தர் said...

Balaji saravana said...
ரொம்ப இயல்பா சொல்லியிருக்கீங்க ஆனந்தி! :)

//அடுத்த கொலுவுக்குள் பதிவு போட்டு விடுகிறேன் மேனகா...என் சுறுசுறுப்பு விவகாரம் தான் உங்களுக்கு தெரியுமே...//

ரைட் ரைட் ;)///

மச்சி என்கிட்ட இந்த போஸ்ட் பத்தி என்ன சொன்னே அதை இங்க சொல்லு

அருண் பிரசாத் said...

டான்ஸ்கிளாஸ் போரதுக்கு சண்டையா? அக்க போரால்ல இருக்கு

தினேஷ்குமார் said...

ஆஹா அமெரிக்கா பொங்கல் ....

மத்தபடி இங்கே நம்ம பண்டிகைகள் எல்லாமே ஊரில் கொண்டாடுவதைப் போலவே விமரிசையா கொண்டாடுறோம்....

ஆஹா கேட்க்கரதுக்கே எவ்வளவு சந்தோஷமா இருக்கு சகோ ...

ஆயிஷா said...

நன்றாக சொல்லியிருக்கீங்க ஆனந்தி.

தொடரவும்.வாழ்த்துக்கள்.

VELU.G said...

எங்க போனாலும் நம்ம பாரம்பரியத்தை மறக்கமா இருக்கறதே பெரிய விஷயம்ங்க

வாழ்த்துக்கள்

Unknown said...

வழக்கம்போல கலக்கல்! :-)

சி.பி.செந்தில்குமார் said...

சண்டைப்போடுவதில் கூட ஒரு சந்தோசம் இருப்பது உறவுகளிடமும் நண்பர்களிடமும்தானே..

ஜோதிஜி said...

ரொம்ப இயல்பா சொல்லியிருக்கீங்க ஆனந்தி! :)

இது தான் நான் சொல்ல வந்தது.

அன்புடன் நான் said...

உங்க அமெரிக்க வாழ்வு இனிதாய் தான் இருக்கு....

வெண்பொங்கல் வெள்ளையா இருக்கு .... அப்படின்னா சக்கரை பொங்கல் சக்கரையாதான இருக்கணும்....???

ஆமினா said...

இப்ப தான் எல்லா பாகமும் படிச்சுட்டு வரேன்...

நல்லா சுவாரசியமா எழுதுறீங்க

logu.. said...

kosuthollai thanga mudila...

NADESAN said...

குழந்தைகளுக்கும் உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்
அன்புடன்
நெல்லை பெ . நடேசன்
துபாய்

S Maharajan said...

பகிர்விற்கு நன்றி

logu.. said...

\\ ஆமினா said...
இப்ப தான் எல்லா பாகமும் படிச்சுட்டு வரேன்...

நல்லா சுவாரசியமா எழுதுறீங்க\\

Hayyoda...
usuroda irukkangala illiyanu phone panni visaringa..

hayyo pavam.

Prabu M said...

ஹாய் சிஸ்டர்....

அமெரிக்க வாழ்க்கையில் தமிழ்மணம்!! சூப்பர்ப்!!
இளமை விகடன் "குட் ப்ளாக்ஸி"ல் இந்தப் பதிவு வந்திருக்கிறது...
வாழ்த்துக்க‌ள் :)

goma said...

அருமையான தொடர்

ஹேமா said...

இயல்பாச் சொல்றீங்க ஆனந்தி !

Prabu M said...

Here's the link:

http://new.vikatan.com/article.php?mid=10&sid=59

இந்த லிங்க்ல "குட் ப்ளாக்ஸ்" பகுதியில் வந்திருக்கு :)
விகடன் குழுமம் அவங்களா தேர்ந்தெடுத்து வெளியிடுறாங்க நம்ம வலைப்பூக்களிலிருந்து... இது ஓர் அருமையான அங்கீகாரம் உங்களுடைய அழகான எழுத்துக்கு.... மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

Thenammai Lakshmanan said...

குழம்பு படைச்சு பார்த்திருக்கேன்.. காய்கறீயைப் படைச்சு என் தங்கச்சி என் கண்ணுல ஆனந்தக் கண்ணீரை வரவழைச்சுட்டா..:))

கோநா said...

தளராத நடையில் தொடர் அருமை ஆனந்தி, வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் said...

அழகா எழுதியிருக்கீங்க...
பொங்கல் நல்லா இருக்கு.... (பார்வைக்கு மட்டுமா?)

செந்தில்குமார் said...

திரும்பி வந்துட்டோம்ல...பொங்கலை கொண்டாடிட்டு...

நல்ல பதிவு ஆனந்தி...
அதாகப் பட்டது... எங்க தொல்லை இல்லாம அவங்களும் கொஞ்சம் நிம்மதியா இருக்கட்டுமேன்னு //
பிள்ளைகளுக்கு இப்படித்தான் எப்பவாது சுகந்திரம் கிடைக்கும் போல ஆனந்தி சரிதானே...

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)