உங்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்...!!
இந்த நல்ல நாளில் என்னைத் தொடரும் நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன்...!!
உங்கள் நட்பிற்கு, இந்த பூங்கொத்து...! நன்றிகள் பல...!!
மிக்சர்...!!
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 6 கப்
அரிசி மாவு - 1 கப்
முந்திரி பருப்பு - 1 / 2 கப்
வேர்க்கடலை - 1 கப்
அவல் - 1 கப்
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயம் - 1 / 2 டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி - 1 குழி கரண்டி
கடலை பருப்பு - 1 / 2 கப் (4 மணி நேரம் ஊறவைக்கவும்)
ஓமம் பொடித்தது - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
காரா பூந்தி:
3 கப் கடலை மாவை தோசை மாவை விட, கொஞ்சம் இளக்கமாக கரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணையை சூடாக்கி, அந்த எண்ணெய் மேல், கண் கரண்டி அல்லது ஜல்லிக் கரண்டியை பிடித்துக் கொண்டு, ஒரு குழிகரண்டி கரைத்த மாவை கரண்டி மேல் ஊற்றி, இன்னொரு கரண்டியால் அதை தேய்த்து விடவும்.. கார பூந்தி, சத்தம் அடங்கி வெந்ததும் எண்ணெய் வடிய விட்டு, ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.. பாதி மாவினை ஊற்றி முடித்த பின், மீதி மாவில் விரும்பிய கலர் சேர்த்து பூந்தி செய்யலாம்.. மிக்சர் கலர் புல்லாக இருக்கும்..
ஓமப்பொடி:
3 கப் கடலை மாவு, 1 கப் அரிசி மாவு, வெண்ணெய், ஓமம் இவற்றை தேவையான தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும். மாவு ரொம்ப கெட்டியாகவோ, ரொம்ப தளர்வாகவோ இல்லாமல் ஓரளவு ஓம அச்சில் பிழியும் விதம் இருக்க வேண்டும். இடியாப்பம் பிழியும் குழலில் இந்த மாவை எடுத்து, சூடான எண்ணையில் பெரிய வட்டமாக பிழிந்து, இரு புறமும் திருப்பி, சத்தம் நின்றதும் எடுக்கவும்.
சூடான எண்ணையில் முந்திரி பருப்பு, அவல், கறிவேப்பிலை, வேர்க்கடலை இவற்றை பொறித்து எடுக்கவும்.
(சின்ன குறிப்பு: வேர்க்கடலை, அவல், முந்திரி, கறிவேப்பிலை இவற்றை பொரிக்கும் முன்பு, எண்ணையின் அளவை குறைத்துக்கொள்ளுங்கள்.. ஏனெனில், இவைகள் பொறித்த பின்பு மிச்சம் வரும் எண்ணையை உபயோகிக்க முடியாது.. கலங்கல் ஆகி விடும்)
ஊற வைத்த கடலை பருப்பை, நன்கு தண்ணீர் இல்லாமல் வடிகட்டி, ஒரு பேப்பர்-இல் தண்ணீர் வடிய விட்டு, பிறகு, அதையும் எண்ணையில் போட்டு, சத்தம் அடங்கும் வரை வேக வைத்து, எண்ணெய் வடிய விட்டு எடுத்து வைக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் செய்து வைத்துள்ள காராபூந்தி, ஓமப்பொடி, மற்றும் வறுத்து வைத்துள்ள பெருங்காயம், வேர்க்கடலை, கடலை பருப்பு, முந்திரி பருப்பு, கறிவேப்பிலை, அவல், மிளகாய்ப் பொடி, தேவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
சுவையான மிக்சர் தயார்..!!!
Friday, November 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
40 comments:
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
மிக்ஸர் சூப்பரா இருக்குங்க ஆனந்தி!
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
தீபாவளி அன்னிக்கு மிக்சரா...
வாழ்த்துக்கள்.
இனிய தீபாவளி வாழ்த்துகள்......!
காலையில் இருந்து ஸ்வீட்ஸ் சாப்பிட்டு திகட்டி போச்சு .....நீங்க கொடுத்த மிக்ஸர் சாப்பிட்ட பிறகு இப்ப o.k.... ரொம்ப தேங்க்ஸ் ஆனந்தி ...!!
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
super snack mixer Ananthi.
Happy Diwali.
தீபாவளி நல்வாழ்த்துக்கள்... தீபாவளி பலகாரம் செய்ய உதவிய உங்கள் பதிவுக்கு நன்றி. வாழ்த்துக்கள்
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்,..
மிக்ஸர் குறிப்பு சூப்பர்
மிக்ஸர் சூப்பராயிருக்குப்பா....இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...
இதயம் நிறைந்த தீபத் திருநாள் வாழ்த்துக்கள். இந்த நன்னாளில் உங்களின் அகமும் புறமும் மலர்ந்து சிறந்திட வாழ்த்துகிறேன்.
இதெல்லாம் செய்றது நமக்கு சரிப்பட்டுவராது.. கிச்சன் என்றாலே அலர்ஜி..
ஒரு பார்சல் அனுப்பி வைங்கோ.. சாப்பிட்டு பார்த்து சொல்றேன் எப்படின்னு..
Deepavali Greetins Aanandhi.
வித்யாசமாய் இனிப்பிற்கு பதில் காரம். நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள்
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
சூப்பர் மிக்சர்...
ஒரு பெரிய பாத்திரத்தில் செய்து வைத்துள்ள காராபூந்தி, ஓமப்பொடி, மற்றும் வறுத்து வைத்துள்ள பெருங்காயம், வேர்க்கடலை, கடலை பருப்பு, முந்திரி பருப்பு, கறிவேப்பிலை, அவல், மிளகாய்ப் பொடி, தேவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.////
ம் இந்த கலவை நல்லா இருக்கு...!
இதை யார் முதலில் சாப்பிட்டது...?
அந்த முதல் நபர் ரொம்ப தைரியசாலி தான்...!
ஒரு ப்ளேட் மிக்சர் பார்சல்... நம்மளால செஞ்சு எல்லாம் சாப்பிட முடியாது... ஒரு முட்டை ஆப்பாயில் போடுறதுக்குள்ள முட்டி பேந்துடுது... இதுல மிக்சர் வேறையா...
deepawali nal vaazhthukal....
mixture looks superb..... deepawali kavithai ethum kidayatha?????
Nice
மிக்ஸர் சூப்பரா இருக்கு
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் தீபாவளி வாழ்த்துக்கள் ஆனந்தி!
எப்போ பார்சல் அனுப்புவீங்க? :)
மிக்சர் அருமை! இனிமை!
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
நான்கூட தலைப்பை பாத்ததும், பல விசயங்களை கலந்து சொல்லி இருப்பீங்க போலன்னு நினைச்சேன் :))
பூங்கொத்தை எடுத்துகிட்டேன்.
வாழ்க வளமுடன்..
வாழ்க வளமுடன்..
தீபாவளி வாழ்த்திற்கு மிக்க நன்றி ஆனந்தி....
உங்களுக்கான வாழ்த்து இதோ :
நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
http://edakumadaku.blogspot.com/2010/11/blog-post.html
கூடவே என் மற்றொரு வலையில் கமல்ஹாசன் அவர்களுடன் ஒரு நேர்காணல்....
மன்மத அம்பு - கப்பலில் காதல் http://jokkiri.blogspot.com/2010/11/blog-post.html
Mixer Super.
ஏதேது சமையல் சாம்ராஜ்ஜிய ராணியா நீங்க? சமைச்சுப் பார்த்து யார்கிட்ட கொடுத்து டெஸ்ட் செய்றீங்க? அந்த வெள்ளை எலி யாரு? அதாங்க Guinean pig!!!
மிக்சர் ஓகே..பக்கத்துல இருக்கிற ரெண்டு ஐட்டமும் எப்டி செய்றதுன்னு சொல்லவே இல்ல!!! :D :D :D
நீங்க சொன்ன அந்த சிறு குறிப்பு மிகவும் உபயோகமான ஒன்று ..
நன்றி ஆனந்தி !!
http://marumlogam.blogspot.com/2010/11/blog-post_08.html
அப்படியே ஒரு ஸ்வீட்டும் குடுத்திடுங்க .....நன்றி வாழ்த்துக்கள்
மிக்ஸர் சூப்பர். ஜமாய்ங்க ஜமாய்ங்க,இந்த கலங்கல் எண்ன்ணைக்குன்ன்னே ஒரு டீ வடிகட்டி வைத்து கொள்ளனும், பொரித்து முடித்த்தும், ஆறியதும் வடிகட்டி, குழம்பு, ரசம் எதறகாவது பயன் படித்திக்கலாம். இல்லை பிரை அயிடங்களுக்கும் பயன் படுத்தலாம்
ஹாய்,, ஆனந்தி.. தமிழ் 10 ல இணைக்கலையா?புது பதிவு போடலையா?
அடடா , தீபாவளி அன்னிக்கு வராம போயிட்டேனே ..
சரி இருந்தாலும் மிக்சர் நல்லாத்தான் இருக்குங்க அக்கா ..
Belated Diwali wishes..
eppa paru..
kottikirathulaye mukkiyama irukkangappaa...
கொஞ்சம் இல்ல ரொம்பவே தாமதமா வந்துட்டேன்...ஆனந்தி இருந்தலும் மிக்சர் ஒரு மிக்சாகத்தான் இருக்கு...
வாழ்த்துக்களும், கருத்துக்களும் அளித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி :-))
Briyani pathiyum solveengala?
http://signincomputers.blogspot.com/
Post a Comment