topbella

Wednesday, October 20, 2010

மழை...!!!


வானிலே உன் ஜாலம் முடித்து
பூமியில் புதியதாய் வீழ வந்தாய்...!!

வெயிலில் தகிக்கும்
வெப்பக் காலத்தில் நீ
வீழ்ந்தாய் என்றால்
விளக்கமேதும் தேவை இல்லை...!!
வேண்டிய நேரத்தில்
வேண்டாமலே வந்தாயே.... இனி
வேறென்ன வேண்டும் என்பாரே..!!

உழுதும் முடித்து விட்டு
உரமும் இட்டு வைத்து
உயிரைக் கையில் பிடித்து
உனை நோக்கி ஏங்கும் போது
உடனே நீ வந்தாயென்றால்
உள்ளமெல்லாம் உவகை அன்றோ..!!

பூத்திருந்த பூவெல்லாம் நீ
தீண்டிச் சென்ற வெட்கத்தில்..
பூமியின் வெட்கை தனை
போக்கும் பொருட்டாய்
புதிதாய் விழ வந்து
புரட்சி தான் செய்வாயோ..!!

காதலர்கள் கூடும் இன்பக்
காரிருள் வேளையிலே
கருத்தாய் நீ வந்தாயென்றால்
கட்டியணைத்த வண்ணம் உனைக்
கண்கொட்டாமல் கண்டு களிப்பாரே..!!

அளவாய் நீ வந்தால்
அழகாய் பூக்கும் பூக்கள்....
ஆக்ரோஷம் நீ கொண்டால்
அழிந்தே போவதேனோ..!!

நிஜமாய் உனை நினைக்கும் போது
நெஞ்சில் சுகமாய் ஒரு ஸ்பரிசம்...
மழை வளமாய் மண்ணில் பெய்தால்
மாந்தர் தம் மனமும் சுகம் பெறுமே..!!

.....அன்புடன் ஆனந்தி

73 comments:

Sanjay said...

ஒஹ் நீங்க தான் "மழை" ஸ்ரேயாவா?? :D :D

//வேண்டிய நேரத்தில்
வேண்டாமலே வந்தாயே.... இனி
வேறென்ன வேண்டும் என்பாரே..!//
ஆஹா...

//உயிரைக் கையில் பிடித்து
உனை நோக்கி ஏங்கும் போது
உடனே நீ வந்தாயென்றால்
உள்ளமெல்லாம் உவகை அன்றோ..//
ஓஹோ....

//கட்டியணைத்த வண்ணம் உனைக்
கண்கொட்டாமல் கண்டு களிப்பாரே..!!//
ஓகே ஓகே.....

//நிஜமாய் உனை நினைக்கும் போது
நெஞ்சில் சுகமாய் ஒரு ஸ்பரிசம்...//
எச்சக்ட்லி.... :D :D

எல் கே said...

//உடனே நீ வந்தாயென்றால்
உள்ளமெல்லாம் உவகை அன்றோ..!!
//

உண்மைதான்

//கட்டியணைத்த வண்ணம் உனைக்
கண்கொட்டாமல் கண்டு களிப்பாரே..!!/

அப்படியா இல்லையே ??

//மழை வளமாய் மண்ணில் பெய்தால்
மாந்தர் தம் மனமும் சுகம் பெறுமே..!!//

உண்மைதான்

நல்ல கவிதை ஆனந்தி

Anonymous said...

//பூத்திருந்த பூவெல்லாம் நீ
தீண்டிச் சென்ற வெட்கத்தில்..//
அருமையான உருவகம்..

//நிஜமாய் உனை நினைக்கும் போது
நெஞ்சில் சுகமாய் ஒரு ஸ்பரிசம்...//
ம் ம்.. நினைக்கும் போதே சுகம்..
நைஸ்:)

சௌந்தர் said...

வானிலே உன் ஜாலம் முடித்து
பூமியில் புதியதாய் வீழ வந்தாய்...!!////

யாரை பார்க்க வந்தாய் நீ


அளவாய் நீ வந்தால்
அழகாய் பூக்கும் பூக்கள்....
ஆக்ரோஷம் நீ கொண்டால்
அழிந்தே போவதேனோ..!!////

இந்த மழைக்கு இது தான் வேலை

சுந்தரா said...

//வேண்டிய நேரத்தில்
வேண்டாமலே வந்தாயே.... இனி
வேறென்ன வேண்டும் என்பாரே..!//

:)

//கட்டியணைத்த வண்ணம் உனைக்
கண்கொட்டாமல் கண்டு களிப்பாரே..!!//

இதுவேறயா?!

மழை நல்லாருக்கு ஆனந்தி :)

சசிகுமார் said...

//உழுதும் முடித்து விட்டு
உரமும் இட்டு வைத்து
உயிரைக் கையில் பிடித்து
உனை நோக்கி ஏங்கும் போது
உடனே நீ வந்தாயென்றால்
உள்ளமெல்லாம் உவகை அன்றோ..!!//

அருமையான வரிகள் அந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை.

logu.. said...

\\நிஜமாய் உனை நினைக்கும் போது
நெஞ்சில் சுகமாய் ஒரு ஸ்பரிசம்...\\

Mazhai.. mannai mattumalla..
manathaium nanaithu sellum.. eppothum.

சாந்தி மாரியப்பன் said...

மழை ஜூப்பரா,ஜில்லுன்னு இருக்கு :-)

கவி அழகன் said...

Supper

இளங்கோ said...

"மழையை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது எல்லோருடைய மனமும் கடவுள் தன்மையை அடைந்து விடுகிறது. யாரும் யாருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள் போல தோன்றுவார்கள் மழையின்போது."
-- ரெயினீஸ் ஐயர் தெரு நாவலில் வண்ணநிலவன்.

மழை கவிதை அழகு.

தமிழ் உதயம் said...

மழை கவிதை மலை க்க வைக்கிறது.

தினேஷ்குமார் said...

//அளவாய் நீ வந்தால்
அழகாய் பூக்கும் பூக்கள்....
ஆக்ரோஷம் நீ கொண்டால்
அழிந்தே போவதேனோ..!!//

அருமையான வரிகள் தோழி

Anonymous said...

அப்பப்பா இந்த மழைபடுத்தும் பாடு ஆனந்திக்கே ஆனந்தமா?

அருண் பிரசாத் said...

ரொம்ப நனையாதீங்க, ஜலதொஷம் பிடிச்சிக்கும்

Ramesh said...

//அளவாய் நீ வந்தால்
அழகாய் பூக்கும் பூக்கள்....
ஆக்ரோஷம் நீ கொண்டால்
அழிந்தே போவதேனோ..!!

சூப்பர் வரிகள்... அசத்தல் ஆனந்தின்னு மாத்திக்கோங்க உங்க பிளாக்க..

Unknown said...

///கட்டியணைத்த வண்ணம் உனைக்
கண்கொட்டாமல் கண்டு களிப்பாரே..!!///

கரெக்டு..

நல்லா எழுதியிருக்கீங்க..

Madhavan Srinivasagopalan said...

"ரெயின் ரெயின் கோ அவே... "க்கு எதிர் பாட்டா.. நல்லா இருக்கு..

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல கவிதை...

சைவகொத்துப்பரோட்டா said...

அழகு! மழைப்படம் கொள்ளை அழகு.

'பரிவை' சே.குமார் said...

மழை நல்லாருக்கு.

Mathi said...

migavum arumai aananthi...

Starjan (ஸ்டார்ஜன்) said...

வாவ்.. கவிதை ரொம்ப நல்லாருக்கு ஆனந்தி..s

Thanglish Payan said...

Superb..

seika kathal malaiyai..

aval kudal kollum man meithu

kudal vasani nesam seika..

செல்வா said...

//உழுதும் முடித்து விட்டு
உரமும் இட்டு வைத்து
உயிரைக் கையில் பிடித்து
உனை நோக்கி ஏங்கும் போது
உடனே நீ வந்தாயென்றால்
உள்ளமெல்லாம் உவகை அன்றோ..!!//

இந்த வரிகள் கலக்கல்ங்க ..
எங்க ஊர்ல நாங்களும் இப்படிதான் ..!!

NADESAN said...

'அளவாய் நீ வந்தால்
அழகாய் பூக்கும் பூக்கள்....
ஆக்ரோஷம் நீ கொண்டால்
அழிந்தே போவதேனோ'

படித்தேன் மகிழ்ந்தேன் ரசித்தேன்
வாழ்க வளமுடன்
நெல்லை பெ. நடேசன்
துபாய் ,அமீரகம்

ஜெய்லானி said...

நல்ல கவிதை..!!

மாணவன் said...

மழை போலவே ஜில்லென்று இருந்தது கவிதை ஒவ்வொரு வரிகளும் ரசிக்கும்படியாக உள்ளது அருமை
”அளவாய் நீ வந்தால்
அழகாய் பூக்கும் பூக்கள்....
ஆக்ரோஷம் நீ கொண்டால்
அழிந்தே போவதேனோ..!!”

மனதை தொட்ட வரிகள்...

Kousalya Raj said...

மழை காதல்....!

Gayathri said...

அம்மா இங்க மழையே இல்லையே கடுப்பா இருக்கு..

உங்க கவிதை அருமை

எஸ்.கே said...

மழைக் கவிதை அருமை! வாழ்த்துக்கள்!

எஸ்.கே said...

மழைக் கவிதை அருமை! வாழ்த்துக்கள்!

அன்பரசன் said...

//நிஜமாய் உனை நினைக்கும் போது
நெஞ்சில் சுகமாய் ஒரு ஸ்பரிசம்...//

ம்...

நிலாமதி said...

உங்கள் கவிதை மழை ...........அழகாய் சொல்ல பட்டு இருக்கிறது. பாராட்டுக்கள்.i

Menaga Sathia said...

very nice kavithai!!

Gnana Prakash said...

nalla irukku

Gnana Prakash said...

nalla irukku

மோகன்ஜி said...

பூச்சாரல் கவிதை!

நெல்லை விவேகநந்தா said...

மழையும் அளவோடுதான் வர வேண்டும் என்ற அழகான கவிதை தொகுப்பு மிக அருமை

Nandhini said...

/////உழுதும் முடித்து விட்டு
உரமும் இட்டு வைத்து
உயிரைக் கையில் பிடித்து
உனை நோக்கி ஏங்கும் போது
உடனே நீ வந்தாயென்றால்
உள்ளமெல்லாம் உவகை அன்றோ..!!////

அருமையான வரிகள்.....மழை அழகு.

Jayanthy Kumaran said...

wow...enjoyd this lovely post..
very interesting ...

Tasty Appetite

Philosophy Prabhakaran said...

Again a good one from u mam... என்னது நீங்கதான் "மழை" ஸ்ரேயாவா... அவ்வவ்வ்வ்வ்...

எம் அப்துல் காதர் said...

எல்லோரும் கவிதையை அக்கு வேற ஆணி வேறா பிரித்து மேய்ந்த பிறகு வந்திருக்கேன்.கன்னத்தில் கைவைத்தபடியே ரசித்து படித்து விட்டு, மலைத்து போய் அப்படியே மழையை ரசித்தவனாக.... நான்!!!

சி.பி.செந்தில்குமார் said...

கவிதையில் கலக்கும் கனிகையே (அட க-னாவுக்கு க-னா எனக்கும் வருதே)நல்ல கவிதை,என்னைக்கவர்ந்த வரிகள் >>>

பூத்திருந்த பூவெல்லாம் நீ
தீண்டிச் சென்ற வெட்கத்தில்..>>>

தூள்

சி.பி.செந்தில்குமார் said...

ஒரு கோ இன்சிடெண்ட் பாருங்க ,40 வது கமெண்ட்டும் நாந்தான்,இண்ட்லில 40வது ஓட்டும் நாந்தான்

priyamudanprabu said...

ARUMAI ANANTHI

ப்ரியமுடன் வசந்த் said...

ரசனை!

ஆர்வா said...

ரசனை ரசனை... ரகளையாய் ஒரு ரசனை

ஆர்வா said...

ரசனை ரசனை... ரகளையாய் ஒரு ரசனை

Unknown said...

அருமையான பதிவு வாழ்த்துக்கள்

r.v.saravanan said...

மழை கவிதை நல்ல ரசனையுடன்

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@சஞ்சய்
ஆமா தெரியாதா.. (என்னா குசும்பு.....!! :D )
என்ன என்ன..!!!
ரொம்ப ரசித்து கமெண்ட் பண்ணிட்டீங்க.. :-)))
தான்க் யூ.. தான்க் யூ..! :-))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@LK
உங்க கருத்திற்கு நன்றி :-)






@@Balaji saravana
ரசித்ததற்கு ரொம்ப நன்றிங்க. :-))





@@சௌந்தர்
ஆமா... யாரை பார்க்க வந்தாய்? எந்த முகத்தோடு வந்தாய்...??
நல்லா கேக்குறாங்க கேள்வி??? :-))
ஆமா... பாவம் அது வேலைய ஒழுங்கா பாக்கட்டும்... :-)
தேங்க்ஸ் சௌந்தர்.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@சுந்தரா
ரசித்ததற்கு நன்றிங்க.. :-))




@@சசிகுமார்
எஸ்... நீங்க சொல்றது சரி தான்..
வருகைக்கு நன்றிங்க.. :-))





@@logu ..
ஆமாங்க.... சரியா சொன்னிங்க.. நன்றி :-))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@அமைதிச்சாரல்
ஹா ஹா ஹா...
ரொம்ப தேங்க்ஸ்.. :-))





@@யாதவன்
ரொம்ப தேங்க்ஸ் :-)







@@இளங்கோ
வண்ணநிலவனின் வரிகள் அருமை..
உங்க வருகைக்கு நன்றிங்க :-))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@தமிழ் உதயம்
மழை...மலைக்க.....பின்றீங்க போங்க..
வருகைக்கு நன்றிங்க :-))





@@dineshkumar
ரொம்ப நன்றிங்க :-))





@@தமிழரசி
ஹா ஹா ஹா... எஸ் எஸ்..
எனக்கு மழை பெய்வதை பார்க்க பிடிக்கும்...
வருகைக்கு நன்றிங்க.. :-)))




@@அருண் பிரசாத்
ஹா ஹா .. ஒகே ஒகே..
வருகைக்கு நன்றிங்க. :-))





@@பிரியமுடன் ரமேஷ்
ரொம்ப தேங்க்ஸ்... புது பேர் எல்லாம் தரீங்க.. :-))






@@பதிவுலகில் பாபு
வாங்க.. ரொம்ப தேங்க்ஸ் :-))







@@Madhavan
ஹா ஹா ஹா... ஆமாமா எதிர் பாட்டு தான்.. :-)
வருகைக்கு நன்றிங்க.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@வெறும்பய
வாங்க... ரொம்ப நன்றிங்க :-))





@@சைவகொத்துப்பரோட்டா
வாங்க.. ரொம்ப நன்றிங்க.. :-))
(எல்லாம் கூகிள் உபயம் தான்)





@@சே. குமார்
வாங்க.. ரொம்ப நன்றிங்க.. :-)






@@Mathi
வாங்க. ரொம்ப நன்றிங்க.. :-)






@@Starjan (ஸ்டார்ஜன்)
வாங்க.. ரொம்ப தேங்க்ஸ் :-))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@Thanglish Payan
ஹ்ம்ம்.... வாங்க..
ரொம்ப நன்றிங்க :-))





@@ப. செல்வக்குமார்
ஹ்ம்ம்... வாங்க செல்வா..
ரொம்ப நன்றிங்க.. ரசித்து உங்கள் கருத்து சொன்னதற்கு.. :-)







@@NADESAN
வாங்க. ரொம்ப சந்தோசங்க.. :-))






@@ஜெய்லானி
வாங்க ஜெய்.. ரொம்ப தேங்க்ஸ் :-))






@@மாணவன்
வாங்க... ரசித்ததற்கு ரொம்ப நன்றிங்க.. :-)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@Kousalya
வாங்க.. ஆமாங்க.. மழைக் காதல்...
ரொம்ப தேங்க்ஸ் :-)





@@Gayathri
ஹா ஹா ஹா.. வாங்க. தேங்க்ஸ் பா.. :-))
(வேணும்னா நா மழையை ரூட் மாத்தி விடறேன்)






@@எஸ். கே.
வாங்க.. ரொம்ப நன்றிங்க :-)




@@அன்பரசன்
வாங்க.. ரொம்ப நன்றி :-)





@@நிலாமதி
வாங்க. ரொம்ப நன்றிங்க.. :-))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@Mrs . Menagasathia
வாங்க.. தேங்க்ஸ் பா.. :-))





@@Gnana Prakash
வாங்க.. ரொம்ப தேங்க்ஸ்.. :-)





@@மோகன்ஜி
வாங்க.. ரொம்ப நன்றிங்க :-))





@@நெல்லை விவேகாநந்தா
வாங்க.. ரசித்ததற்கு ரொம்ப நன்றிங்க.. :-))





@@Nandhini
வாங்க.. தேங்க்ஸ் நந்தினி :-))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@Jay
வாங்க.. ரொம்ப தேங்க்ஸ்.. :-))





@@philosophy prabhakaran
வாங்க... ரொம்ப தேங்க்ஸ்.. :-))
ஹா ஹா.. அது சும்மா.. நீங்க பயப்படாதீங்க.. :-)





@@எம். அப்துல் காதர்
ஹா ஹா ஹா...
ஹ்ம்ம்ம்.. வாங்க ரசித்ததற்கு நன்றிங்க.. :-))






@@சி. பி. செந்தில்குமார்
ஹா ஹா ஹா..
வாங்க செந்தில்.. கலக்குறீங்க..
ரொம்ப தேங்க்ஸ்... :-))

எஸ் எஸ்.. 40th கமெண்ட், மற்றும், 40th வோட்....தேங்க்ஸ்.. :-))






@@பிரியமுடன் பிரபு
வாங்க. ரொம்ப தேங்க்ஸ் :-)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@ப்ரியமுடன் வசந்த்
வாங்க.. ரொம்ப தேங்க்ஸ்.. :-))






@@கவிதை காதலன்
ஹ்ம்ம்ம்.... வாங்க.. ரொம்ப நன்றி :-))






@@மகாதேவன்-V .K .
வாங்க. ரொம்ப நன்றிங்க.. :-)






@@r .v . saravanan
வாங்க. ரொம்ப நன்றிங்க. :-))

சிவராம்குமார் said...

//காதலர்கள் கூடும் இன்பக்
காரிருள் வேளையிலே
கருத்தாய் நீ வந்தாயென்றால்
கட்டியணைத்த வண்ணம் உனைக்
கண்கொட்டாமல் கண்டு களிப்பாரே..!!//
அருமை!

dheva said...

மழையை யாரிங்கு மழையாய் பார்த்தது? என்ற வைரமுத்துவின் வரிகள்தான் நினைவுகு வருகிறது!


ஆமாம் மழை எக்சைட்மெண்ட்ல ஓவரா நனைஞ்சுடாதீங்க......அப்புறம்...ஜுரம் வந்துடப்போகுது...!

மழை - சிலிர்ப்பு!

Mahi said...

உங்க ஊர் மழையா ஆனந்தி? போட்டோ சூப்பரா இருக்கு!
கவிதையும் அருமை!

Padhu Sankar said...

Well written .Do drop by
http://www.padhuskitchen.com
when u find time

ராஜகோபால் said...

//அளவாய் நீ வந்தால்
அழகாய் பூக்கும் பூக்கள்....
ஆக்ரோஷம் நீ கொண்டால்
அழிந்தே போவதேனோ..!!//

நல்லாருக்கு

நான் நினைக்கும் பொது நீ வந்தால்
நான் சிரிப்பேன் .
நான் இரக்கும் பொது நீ வந்தால்
நி அழுவாய்.

Thenammai Lakshmanan said...

படமும் கவிதையும் அருமை ஆனந்தி..

piramanayagam said...

supper
Piramma

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Good one Ananthi

Muniappan Pakkangal said...

Aakrosham nee kondaal......nice Anandhi.

S கணேஷ் said...

"mazhai" - vaanam ezhuthum
oru azhagaana kavithai...

your kavithai so nice....

பால்ராஜ் said...

வசீகரமான வார்த்தைகள்,வாழ்த்துக்கள்...

பால்ராஜ் said...

வாசீகரமான வாரத்தைகள், வாழ்த்துக்கள் !

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)