topbella

Tuesday, October 5, 2010

என்னுயிர் நீயன்றோ..!!


ஆசையில் தேடி வந்தேன்
காதலால் கனிந்து நின்றேன்
உறவாய் உனை எண்ணியே
உள்ளமதில் பூட்டி வைத்தேன்...!
என் உள்ளுணர்வு உனை வெல்ல
உன் உள்ளமெங்கும் நானே என்றாய்
மன்னவனே உனைக் கண்டதும்
மாறாத என் நேசம்
மடை திறந்த வெள்ளமாய்...!
நீ மறுபேச்சு பேசாமல்
மையலுடன் எனை நோக்க
மங்கை என் மனதில்
என்னென்னவோ எண்ண அலைகள்..!
உன் கண்கள் பேசிய காதலில்
கட்டுண்டு நான் இருக்க...
எனையே பார்த்திருந்து விட்டு
இனி ஒருபோதும்
உனைப் பிரியேன் என்றாய்..!
நெற்றியில் குங்குமம் இட்டு
உன் நிழலாய் நானிருப்பேன் என்றாய்..
கண்மணியே உன்னை நான்
காலமெல்லாம் காத்திருப்பேன் என்றாய்..!
உன் காதலின் உச்சத்தில்
என் கண்களில் நீர்த் துளி..!
இனி என் உயிர் என்னைப் பிரியினும்
உன்னை நான் பிரியேனே...!

...அன்புடன் ஆனந்தி


(படம்:  நன்றி கூகிள் இமேஜஸ்)

 

61 comments:

Sanjay said...

சப்பா.....இப்போவாச்சும் வந்து சேர்ந்தாரே, வழக்கமா விட்டுட்டு விட்டுட்டு தானே போவாரு :D :D

உன் காதலின் உச்சத்தில்
என் கண்களில் நீர்த் துளி..!

சும்மா நச்சுனு இருக்கு.....

கலக்குற கண்ணா கலக்குற ;-)

எல் கே said...

அழகான கவிதை .. நல்ல போட்டோ

சௌந்தர் said...

ஆசையில் தேடி வந்தேன்
காதலால் கனிந்து நின்றேன்
உறவாய் உனை எண்ணியே
உள்ளமதில் பூட்டி வைத்தேன்..///

சாவி எங்க???

Anonymous said...

காதல் நதி கரை புரண்டு ஓடுகிறது :)
அருமை ஆனந்தி!

சௌந்தர் said...

////என் உள்ளுணர்வு உனை வெல்ல
உன் உள்ளமெங்கும் நானே என்றாய்
மன்னவனே உனைக் கண்டதும்
மாறாத என் நேசம்
மடை திறந்த வெள்ளமாய்...!////

வெள்ள எச்சரிக்கை விடுங்க

////உன் கண்கள் பேசிய காதலில்
கட்டுண்டு நான் இருக்க...
எனையே பார்த்திருந்து விட்டு
இனி ஒருபோதும்
உனைப் பிரியேன் என்றாய்..!////

கண்களால் பேசி இருக்காங்க


////என் கண்களில் நீர்த் துளி..!
இனி என் உயிர் என்னைப் பிரியினும்
உன்னை நான் பிரியேனே...!////

இனி எப்போதும் பிரிய முடியாது

RVS said...

செலக்ட் பண்ணிய படமும் அருமை கவிதையும் அருமை.

Kousalya Raj said...

//மன்னவனே உனைக் கண்டதும்
மாறாத என் நேசம்
மடை திறந்த வெள்ளமாய்...!//

உணர்வுகளை கொட்டி ஒரு கவிதை அருமை தோழி.

Anonymous said...

இந்த காதல் கவிதை கடலில் கரைந்து விட்டேன் நான் ஆனந்தி..

சைவகொத்துப்பரோட்டா said...

கவிதையோடு படமும் கொள்ளை அழகு.

அருண் பிரசாத் said...

நல்ல கவிதை

செல்வா said...

//என் கண்களில் நீர்த் துளி..!
இனி என் உயிர் என்னைப் பிரியினும்
உன்னை நான் பிரியேனே...!//

உண்மைலேயே நல்ல இருக்குங்க ..
அதுவும் இல்லாம கவிதை எழுதறவங்க பாதிப்பேரு அலுவாசு கவிதையே எழுதறது .. நீ என்ன விட்டு போய்ட்ட அப்படி இப்படின்னு .
இந்த மாதிரி நல்ல கவிதை தான் படிக்கரக்கு நல்ல இருக்கும் ..!

Ramesh said...

சூப்பர்..பிரிவுத்துயர் கவிதைகள் சீரிஸ் முடிஞ்சு..இனி தலைவனோட சேர்ந்த மயக்கக் கவிதைகளா..கலக்குங்க..அருமையான கவிதை

Starjan (ஸ்டார்ஜன்) said...

அழகான வரிகளில் ஒரு காதல் கவிதை.. ரொம்ப நல்லாருக்கு ஆனந்தி..

சசிகுமார் said...

படம் அருமை கவிதை அதைவிட அருமை வாழ்த்துக்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல கவிதை.அதற்கேற்ற படம்,லே அவுட்டும் ஓகே ரகம்.வாழ்த்துக்கள்

ஹேமா said...

கவிதை வரிகள் அன்பையும்...படமும் கவிதை சொல்லுது ஆனந்தி.

நிலாமதி said...

படமும் கவிதையும் அழகு. பாராட்டுக்கள்

சுந்தரா said...

கவிதை, படம் ரெண்டுமே அழகு!

மங்குனி அமைச்சர் said...

நல்லா இருக்கு மேடம்

Unknown said...

கிருஷ்ணன் தீராத விளையாட்டுப் பிள்ளை. அழகான வரிகள்.

எம் அப்துல் காதர் said...

// ஆசையில் தேடி வந்தேன்
காதலால் கனிந்து நின்றேன்//

யாருங்க அது..
இருங்க படிச்சிட்டு வர்றேன்

எம் அப்துல் காதர் said...

// மங்கை என் மனதில் என்னென்னவோ எண்ண அலைகள்..!
எனையே பார்த்திருந்து விட்டு இனி ஒருபோதும் உனைப் பிரியேன் என்றாய்..! //

ஆஹா நல்ல நல்ல வரிகளாய் சொல்லி மனதை இலகுவாக்கி, அடடா.. இனிமே நீங்க அன்புடன் ஆனந்தி இல்லை. கவிஞர் ஆனந்தி என்று பெயர் சூட்டி மகிழ்கிறோம்.

r.v.saravanan said...

கவிதையும் அழகு படமும் அழகு

Anonymous said...

ரசிச்சு எழுதி இருக்கிங்க..உணர்வுகள் எழுத்தால் வடிந்த கவிதை ..சூப்பர்

பவள சங்கரி said...

புகைப்படமும், கவிதையும் இரண்டும் அழகு........வாழ்த்துக்கள்.

அன்பரசன் said...

//உன் காதலின் உச்சத்தில்
என் கண்களில் நீர்த் துளி..!
இனி என் உயிர் என்னைப் பிரியினும்
உன்னை நான் பிரியேனே...!//

நச் வரிகள்.
அருமை.

சிவராம்குமார் said...

உச்சி முதல் பாதம் வரை காதல் போல! அருமை ஆனந்தி!

மோகன்ஜி said...

நல்ல கவிதை !பாதி கவிதையை படமே சொல்கிறது

Thenammai Lakshmanan said...

அன்பு வெள்ளம் இழுத்து வந்துருச்சு ஆனந்தி..:))

dheva said...

//(படம்: நன்றி கூகிள் இமேஜஸ்)//

உங்க நேர்மை எனக்கு பிடிச்சு இருக்கு.

//கவிதை: நன்றி ஆனந்தி//

இது என்னோட நேர்மை....

Akila said...

superb kavithai....

http://akilaskitchen.blogspot.com

Regards,
Akila

Aathira mullai said...

கவிதைக்கு படமா? படத்துக்கு கவிதையா? ஒன்றை ஒன்று போட்டி போட்டுக்கொண்டு...ஜொலிக்கிறது ஆனந்தி.

Aathira mullai said...

கவிதைக்கு படமா? படத்துக்கு கவிதையா? ஒன்றை ஒன்று போட்டி போட்டுக்கொண்டு...ஜொலிக்கிறது ஆனந்தி.

'பரிவை' சே.குமார் said...

அழகான கவிதை...

நெல்லை விவேகநந்தா said...

ஆசையில் தேடி வந்தேன்
காதலால் கனிந்து நின்றேன்...
- ஆரம்பமே அசத்தல்

ஸ்ரீராம். said...

கவிதையின் அழகு படத்திலும்..!

சீமான்கனி said...

//உன் காதலின் உச்சத்தில்
என் கண்களில் நீர்த் துளி..!
இனி என் உயிர் என்னைப் பிரியினும்
உன்னை நான் பிரியேனே...!//

நெஞ்சுக்குள் தஞ்சம் புகுந்த வரிகள் கவிதையாய்...அழகு ஆனந்தி...

Mahi said...

படமும் கவிதையும் அருமையா இருக்குங்க ஆனந்தி!

Mahi said...

ஆனந்தி,உங்களுடன் ஒரு விருதைப் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.விருதினைப் பெற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.
http://mahikitchen.blogspot.com/2010/10/blog-post_07.html

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

simply superbnga Ananthi

http://rkguru.blogspot.com/ said...

அருமையான கவிதை வரிகள்.........வாழ்த்துகள்

Thanglish Payan said...

Superb kavithai.

http://thanglishpayan.blogspot.com/

Thanglish Payan said...

Superb Kavithai
http://thanglishpayan.blogspot.com/

ஜெய்லானி said...

நல்ல கவிதை..!!

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@சஞ்சய்

ஆமா இப்போ வந்தாச்சு.. :-))
உங்க கமெண்டும் நச்....னு இருக்கு.....
தேங்க்ஸ் கண்ணா தேங்க்ஸ்.. :D :D

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@LK
ரொம்ப தேங்க்ஸ்



@@சௌந்தர்
ஹா ஹா ஹா.. சாவிய தான் காணோம்.. :-))



@@Balaji saravana
ரசித்ததற்கு ரொம்ப நன்றிங்க.. :-)



@@சௌந்தர்
ஹா ஹா ஹா..
என்னது இது.. காமெடி பண்ணிட்டு இருக்கீங்க.. :-)))
எஸ் எஸ்.. கண்களால் பேசியிருக்காங்க
கரெக்ட்... மிக சரியான விடை...
சௌந்தர்-கு ஒரு கிப்ட் குடுங்க..பா..
ரொம்ப தேங்க்ஸ் ..



@@RVS
ரசித்து இட்ட கருத்திற்கு நன்றிங்க... :)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@Kousalya
ரசித்ததற்கு ரொம்ப நன்றிப்பா... :-))




@@தமிழரசி
ஹ்ம்ம்ம்... ரொம்ப நன்றிங்க.. :-)




@@சைவக்கொத்துபரோட்டா
ரசித்து கருத்து சொன்னதற்கு ரொம்ப நன்றிங்க.. :-))





@@அருண் பிரசாத்
தேங்க்ஸ் அருண்... :-)




@@ ப.செல்வக்குமார்
ரொம்ப ரொம்ப நன்றி..
உங்க கருத்து படித்து உண்மையில் மகிழ்ச்சி..
ரொம்ப தேங்க்ஸ் :-))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@பிரியமுடன் ரமேஷ்
ஹா ஹா ஹா..
என்னமா கண்டுபிடிக்கிறீங்க... ??
சூப்பர் கமெண்ட் போங்க.. :-))
தேங்க்ஸ்..




@@ஸ்டார்ஜன்
ரசித்து படித்ததற்கு ரொம்ப நன்றிங்க.. :-))



@@சசிகுமார்
ரொம்ப ரொம்ப நன்றிங்க.. :-))




@@ சி.பி.செந்தில்குமார்
ஆஹா.. எல்லாம் விரிவா சொல்லிட்டீங்க
ரொம்ப தேங்க்ஸ் :-))




@@ஹேமா
ஹ்ம்ம்...ரொம்ப நன்றி ஹேமா :-)))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@நிலாமதி
ரொம்ப நன்றிங்க :-))



@@சுந்தரா
ரொம்பவும் நன்றிங்க.. :-))




@@மங்குனி அமைச்சர்
ரொம்ப நன்றிங்க :-))




@@Shameer
ஹ்ம்ம்.. ஆமாம்..
ரொம்ப நன்றிங்க.. :-))




@@எம். அப்துல் காதர்
ஹா ஹா ஹா.. ஓகே ஓகே.. வாங்க வாங்க, ஒன்னும் அவசரமில்ல..:-))
ரசித்து படிச்சதற்கு ரொம்ப நன்றிங்க..
ஹா ஹா. கவிஞர் ஆனந்தியா...? நன்றிங்க.. :-))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@r . v . saravanan
ரொம்ப நன்றிங்க.. :-))




@@ஆர். கே. சதீஷ்குமார்
வாங்க சதீஷ்.. ரசித்து படித்ததற்கு நன்றிகள். :-))




@@ நித்திலம்-சிப்பிக்குள் முத்து
உங்க கருத்துக்கு நன்றிங்க.. :-))




@@அன்பரசன்
ரொம்ப தேங்க்ஸ் :-))




@@சிவா
ஹ்ம்ம்... ரொம்ப நன்றிங்க. :-))




@@மோகன்ஜி
ஹ்ம்ம்.. எஸ்... ரொம்ப நன்றிங்க.. :-))




@@தேனம்மை லக்ஷ்மணன்
வாங்க அக்கா.. ரொம்ப நன்றி அக்கா.. :-))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@dheva
ஹா ஹா ஹா. தேங்க்ஸ்... :-))
இதுவும் அருமை.. நன்றிங்க..



@@Akila
தேங்க்ஸ் அகிலா... :-))





@@ஆதிரா
ஆஹா... உங்க கருத்திற்கு ரொம்ப நன்றிங்க.. :-))




@@சே. குமார்
நன்றி குமார்... :-))




@@நெல்லை விவேகானந்தா...
ரொம்ப நன்றிங்க :-))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@ஸ்ரீராம்
ஹ்ம்ம்... ரொம்ப நன்றிங்க... :-))



@@சீமான்கனி
ரசித்ததற்கு ரொம்பவும் நன்றிங்க.. :-)))



@@Mahi
வாங்க மகி.. தேங்க்ஸ் பா.. :-))
தோழி உங்கள் அன்பான விருதை பெற்றுக்கொண்டேன்..
ரொம்ப நன்றிங்க.. :-))



@@அப்பாவி தங்கமணி
ரொம்ப தேங்க்ஸ் பா... ;-))




@@rk guru
ரொம்ப நன்றிங்க.. குரு.. :-))



@@Thanglish Payan
ரொம்ப தேங்க்ஸ் பா.. :-))




@@ஜெய்லானி
ரொம்ப நன்றிங்க ஜெய்.. :-))

Unknown said...

Hi Ananthi,

Arumaiyaana kavidhai...

Dr.Sameena@

www.lovelypriyanka.blogspot.com
www.myeasytocookrecipes.blogspot.com

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@Dr.Sameena Prathap

Thanks for your comment.. :-))

தாராபுரத்தான் said...

ரசித்தேன்..நல்லா இருக்குதம்மா..

சிங்கக்குட்டி said...

ரொம்ப நல்லா இருக்குங்க, அதிலும் அந்த படம் சூப்பர் :-)

செந்தில்குமார் said...

அழகான‌ நிழல்படம் இதமான வரிகள் ஆனந்தி .... ம்ம்ம்

அன்புடன் மலிக்கா said...

உன் காதலின் உச்சத்தில்
என் கண்களில் நீர்த் துளி..!//

சூப்பர் ஆனந்திகவிதை கலக்கல்..

Anisha Yunus said...

ம்ம்ம்ம்.....நடக்கட்டும்....நடக்கட்டும்..!!

:D

Unknown said...

கவிதையை காட்டிலும் உங்களது கமெண்ட்ஸ் நல்லா இருக்கு.. கொஞ்சம் பொறாமையாவும் இருக்கு..

logu.. said...

\\உன் காதலின் உச்சத்தில்
என் கண்களில் நீர்த் துளி..!
இனி என் உயிர் என்னைப் பிரியினும்
உன்னை நான் பிரியேனே...!\\

Attagasam..

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)