topbella

Friday, September 10, 2010

அமெரிக்க வாழ்க்கை ....பாகம் 1

அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்  வணக்கம்..... சில நண்பர்கள் இந்த தலைப்பில், உங்க பாணியில் எழுதுங்களேன் என்று கேட்டுக்கொண்டதால் எழுத முயற்சி செய்யப் போகிறேன்.. ஓகே ஓகே.. அப்படியே ஒரு ப்ளோவில செந்தமிழ் வந்திருச்சு.. சரி இப்ப நம்ம பேச்சு நடைக்கு போவமா...?? ஹ்ம்ம். எங்க இருந்து தொடங்கறது..?  (எங்கிருந்தாவது தொடங்கம்மா.. மனுஷனுக்கு 1008 வேலை வெட்டி இருக்குன்னு சொல்றது கேட்டிருச்சு....) 

சில பல விஷயங்கள் எனக்கு தெரிஞ்சத சொல்றேன்.. நா இங்க வந்த புதுசுல.. ரொம்ப ஆச்சர்யப் பட வச்ச விஷயம்... இங்க உள்ள ரோடுகள்... நல்ல விஸ்தாரமா, சுத்தமா.... அவங்க அவங்க... ட்ராபிக் சிக்னலுக்கு மதிப்பு குடுத்து வண்டி ஓட்டுறது... எல்லாமே..!!


அதிலும், இங்க உள்ள ரோடுகளில் இடத்திற்கு தகுந்தாற்போல ஸ்பீட் லிமிட்ஸ்... போர்டு அங்கங்கே இருக்கும்... (அதை சரியாக கடைபிடிக்கலன்னா சகல மரியாதையோட... மாம்ஸ் வருவாங்க.. அதாங்க அமெரிக்கா போலீஸ் காரங்களை சொன்னேன்) அவங்க வருவதே ஒரு அழகு தான்.. சும்மா பளிச் பளிச்னு ரெண்டு மூணு கலர்-ல லைட் போட்டு... சர்ருன்னு வந்து உங்க வண்டி பின்னாடி வந்து நிப்பாங்க பாருங்க.. அட அட.. என்ன அழகு? என்ன அழகு..?? (ஹ்ம்ம் கும்ம்... சரி சரி மேட்டருக்கு வரேன்.. அழகை ரசிக்க விட மாட்டேங்குறாங்க..) அதிலும்.. இங்க உள்ள மாம்ஸ்.. எல்லாம் கொஞ்சம் ஸ்மார்ட்டாவே வேற இருப்பாங்க.. அதாவது... எக்ஸ்ட்ரா பிட்டிங்க்ஸ் (நா தொப்பைய சொன்னேன்) ஏதும் இல்லாம..! (அதுக்காக ஸ்பீடா போய் எல்லாம் டிக்கெட் வாங்க கூடாதுப்பா).



ஏதோ ஒரு காரணத்தால் மாம்ஸ் உங்க வண்டிய நிறுத்தினா.. இறங்கி வந்து, ஸ்டைல்-ஆ உங்க லைசென்ஸ் ப்ளீஸ்... னு கேப்பாங்க.. அப்புறமா.. உங்கள எதுக்காக நிறுத்தினேன் தெரியுமான்னு  கேப்பாங்க.. அப்பாவியா மூஞ்ச வச்சிட்டு தெரியல ஆபீசர்-னு சொன்னா, நீங்க என்ன தப்பு பண்ணிங்களோ அத சுட்டி காட்டி... பிறகு அதுக்கு என்ன நடவடிக்கையோ அதை எடுப்பாங்க.. (சில நேரங்கள்-ல கொஞ்சம் ஸ்பீட்-ஆ போனதுக்கு பிடிச்சா... தற்காலிகமா எச்சரிக்கை பண்ணி விட்ருவாங்க) இல்லைன்னா டிக்கெட் எழுதி கொடுத்துட்டு போயிருவாங்க.. (டிக்கெட் என்பது.. உங்க டிரைவிங் ஹிஸ்டரியை பாதிக்கும்.. பைனும் கட்ட வேண்டி வரும்..) (அதெல்லாம் சரி.. இம்புட்டு விலாவாரியா சொல்றியே... சொந்த அனுபவமான்னு எடக்கு மடக்கா கேள்வி கேக்க பிடாது.. சொல்லிட்டேன்...)

சரி சரி.. முக்கியமான  விஷயம் சொல்றேன் கேளுங்க.. டிக்கெட்-ம் எழுதி குடுத்துட்டு ஸ்டைல்-ஆ "ஹவ் அ நைஸ் டே" ன்னு வேற சொல்லிட்டு போவாங்க.. (அவ்வ்வ்வ்.. அதான் டிக்கெட் எழுதிட்டியே.. அதுக்கு அப்புறம் எங்க நைஸ் டேன்னு..... பீலிங்க்ஸ்சோட போக வேண்டியது தான்).

அப்புறம் இன்னொரு விஷயம்.. பிடிச்சது.... இங்க ரோடுகள்ல எங்கேனும் விபத்து நடந்தால் உடனடியா... (அதாவது.. உண்மையில் உடனடியா) போலீஸ், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டி எல்லாம் வந்திருவாங்க.. அந்த சின்சிஆரிட்டி எனக்கு ரொம்ப பிடிக்கும்.. வந்து தேவை இல்லாம வள வளன்னு பேசாம... மட மடன்னு விசாரிச்சு, வேலைய முடிக்கிறாங்க. உண்மையில் பாராட்ட வேண்டிய விஷயம்ங்க.. 

என்னோட சொந்த அனுபவத்தில் இதை பார்த்தேன்.. நாங்க ஒரு முறை விபத்தில் சிக்கிக் கொண்டோம்.. அப்போ மோதிய வேகத்தில் காரில் உள்ள ஏர் பாக் (airbag ) வெளியில் வந்து.. செம ஷாக்.. வண்டி முன்பகுதி அப்பளம் போல் ஆகிவிட்டது.. எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாம தப்பியது கடவுள் ஆசி தான்.. அந்த நேரம் தான் கண்கூடா பாத்தேன்.. எவ்ளோ சீக்கிரம் போலீஸ், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகள் வந்ததுன்னும், எவ்ளோ வேகமா வேலை செஞ்சாங்கன்னும்...! இருந்த அதிர்ச்சியில் கூட கவனித்தேன்.. முதலுதவி செய்றவங்க.. என்கிட்டயும், என் கணவர் கிட்டயும் திரும்ப திரும்ப.. "ஆர் யூ ஓகே....?" ன்னு கேட்டுட்டே இருந்தாங்க.. எனக்கு கொஞ்சம் மோதிய வேகத்தில் கழுத்து வலி இருந்தது, அதை சொல்ல பயம்.. (எங்க நா சொன்னா ஆம்புலன்ஸ்-ல ஏத்தி கூட்டிட்டு போயிருவாங்களோன்னு தான்.. எனக்கு ஆஸ்பத்திரி என்றாலே பயம்... தெனாலி ஸ்டைல்ல படிங்க...) எங்க கார் "டோட்டல்" ஆகி விட்டது... (டோட்டல் அப்படின்னா.. இனிமேல் உபயோகிக்க முடியாத அளவு)

நா அடிக்கடி யோசிப்பேன்.. நம்ம ஊர்ல எங்கயும் விபத்து நடந்தா.. அத போலீஸ்ல சொல்றதுக்கே நம்ம ஆளுங்க தயங்குவாங்க.. காரணம் என்னன்னு நமக்கே தெரியும்..படங்கள்ல சில நேரம் காமெடி-ஆ காட்டுற விஷயம்... ஆனா நெஜத்துல அதான் உண்மை. விபத்து நடந்த இடத்துக்கு வந்து... சுத்தி கட்டம் போட்டு... படம் வரைஞ்சு இவங்க விசாரணை பண்றதுக்குள்ள.. கிழிஞ்சிரும்.. அதுல வேற ரொம்ப லாஜிக்-ஆ கேள்வி எல்லாம் வேற கேப்பாங்க.. நீ  எத்தன டிகிரி ஆங்கிள்ல வந்து மோதினே...அவன் எப்படி போய் விழுந்தான்னு... அறிவா கேப்பாங்க..!

அப்புறம் எங்கயாச்சும் ட்ராபிக் சிக்னல் லைட் வொர்க் ஆகலன்னா, அங்க உடனே போலீஸ் கார்ஸ் வந்து நின்னு.. ஸெல்ப் சிக்னல்ஸ் காமிச்சு ஒழுங்கு  பண்றாங்க.. அதாவது.. பொது மக்களோட ட்ராபிக் அனுபவம் குழப்பமில்லாம நடக்கறதுக்கு..! இங்க.. பெரும்பாலும் (ஏன், அப்படி சொல்றேன்னா இங்கயும்.. நீ என்ன ரூல்ஸ் போடறது.. நா என்ன அத பாலோ பண்றதுன்னு அலையுற ஆளுகளும் திரியுதுங்க) எல்லாரும் டிராபிக் சிக்னல்ஸ், ஸ்பீட் லிமிட், ஸ்டாப் சைன் எல்லாத்துக்கும் மதிப்பு குடுக்குறாங்க.. 


ஒரு சின்ன நகைச்சுவை சம்பவம்.. என் கணவர் சொன்னது...


இவங்களுக்கு தெரிஞ்ச நண்பர் ஒருவர்.. ப்ரீவே-ல  (நெடுஞ்சாலை மாதிரி) போயிட்டு இருக்கும் போது, கொஞ்சம் ஸ்பீட் அதிகமாக செல்லவே, மாம்ஸ் வந்து லைட் போட்டு, வண்டிய நிறுத்தி லைசென்ஸ் கேட்ட்ருக்காங்க.. நம்ம ஆளு, "ஏன் ஆபீசர்.. ஏன் என்னைய நிறுத்தினீங்க... நா சரியா தானே வந்தேன்.. ஏன்னு சொல்லுங்க.."ன்னு கேட்டிருக்கார்.. போலீஸ் ஆபீசர்-ம் பொறுமையா.. "முதல்ல உங்க லைசென்ஸ் ப்ளீஸ்" அப்படின்னு கேட்டிருக்கார்.. இவரு ரெம்ப ஸ்டைல்-ஆ இந்தாங்கன்னு அவரோட "இன்டர்நேஷனல் லைசென்ஸ்" ஐ கொடுத்திருக்கார்.. போலீஸ் ஆபீசர் டென்ஷன் ஆய்ட்டாராம்... "சார், நீங்க இந்த லைசென்ஸ் வச்சு இங்க வண்டி ஓட்ட கூடாது.. இங்க உள்ள லைசென்ஸ் இல்லாம... வண்டியே ஓட்ட கூடாதுன்னு" சொல்லி.. அதுக்கு என்ன ஆக்க்ஷன் எடுக்கணுமோ அதை செஞ்சாராம்.. அமெரிக்கா போலீசையே கலக்கிய நண்பர்னு சொல்லி சிரிச்சாங்க..
(இங்கே  எந்த மாநிலத்தில் இருக்கிறோமோ, அங்க உள்ள லைசன்ஸ் கண்டிப்பா வேணும்)

இதுல இருந்து நா சொல்ல வருவது, என்னவென்றால்... இங்க உள்ள டிராபிக் சிஸ்டம் அருமையா இருக்குங்க.. நம்ம நாட்டிலும் அப்படி வந்தால் ரொம்ப சந்தோசமா இருக்கும்.. ஹ்ம்ம்.. "இப்ப வருமோ..... எப்ப வருமோ....அரசியல் வாதிங்க மனசு வச்சா அப்ப வருமோ...?? ".. ரஜினியோட பாட்டு.. ஒரு கோலக்கிளி.... அந்த மெட்டுல பாடுறேன்.. :-)) அடுத்த பாகத்தில் சந்திப்போம்..!!


109 comments:

Sanjay said...

அருமையான ஆரம்பம்...: )

//இங்க உள்ள ரோடுகள்... நல்ல விஸ்தாரமா, சுத்தமா...//

அதாவது ரோட்லேயே சோத்த கொட்டி குழம்ப ஊத்தி குளைச்சு சாப்டலாம்னு சொல்லுங்க...:D :D

//"ஹவ் அ நைஸ் டே" ன்னு வேற சொல்லிட்டு போவாங்க.. (அவ்வ்வ்வ்.. அதான் டிக்கெட் எழுதிட்டியே.. அதுக்கு அப்புறம் எங்க நைஸ் டேன்னு..... பீலிங்க்ஸ்சோட போக வேண்டியது தான்).//

ஹா ஹா ஹா...சூப்பரப்பு :D

//இந்தாங்கன்னு அவரோட "இன்டர்நேஷனல் லைசென்ஸ்" ஐ கொடுத்திருக்கார்.. //
உடனே போலீஸ்கார், தொப்பி தொப்பிநு சொல்லி இருப்பாரோ??? :D

கோலக்கிளி.... //
இலவு காத கிளி தான் பொருத்தமா இருக்கும் ...!!!!!!!

சௌந்தர் said...

. அட அட.. என்ன அழகு? என்ன அழகு..??///

அழகு ஆபத்து இருக்கு தெரியாத உங்களுக்கு

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

வாவ்... கலக்கல் ஆனந்தி... அமெரிக்கன் டிராபிக் சிஸ்டம் பத்தி தீசிசே எழுதலாம் போல இருக்கே நீங்க...அதுவும் உங்க ஸ்டைல்ல நகைச்சுவை கலந்து சொன்னது கலக்கல்... கலக்குங்க மேடம்... படிக்கக் நாங்க ரெடி.. .அடுத்த பார்ட் எழுத நீங்க ரெடியா? ஹா ஹா அஹ

சௌந்தர் said...

அப்பாவியா மூஞ்ச வச்சிட்டு///

அப்போ மட்டும் நம்பிடுவார

ஹிஸ்டரியை பாதிக்கும்..////

ஹிஸ்டரினா STD தானே

(அதெல்லாம் சரி.. இம்புட்டு விலாவாரியா சொல்றியே... சொந்த அனுபவமான்னு எடக்கு மடக்கா கேள்வி கேக்க பிடாது.. சொல்லிட்டேன்...)/////

ஏன் கேக்குறோம் அதான் தெரியுதே சொந்த அனுபவம்

நாட்டிலும் அப்படி வந்தால் ரொம்ப சந்தோசமா இருக்கும்.. ஹ்ம்ம்.. "இப்ப வருமோ..... எப்ப வருமோ..////

வரும் ஆனா வராது.....

சௌந்தர் said...

டராபிக் பற்றி நகைசுவையா,உங்க எழுத்து நடையில் சொல்லி இருப்பது சூப்பர் உங்களுக்கு விபத்து நடந்து அதிர்ச்சியாக இருந்தது. நல்ல வேளை

தமிழ் உதயம் said...

அமெரிக்க ஆபீசர் பத்தி அழகா சொல்லிட்டீங்க.

அருண் பிரசாத் said...

நல்ல விஷயங்கள் தான். நானும் வெளிநாட்டில் சாலைவிதிமுறைகளை மதிப்பது கண்டு வியந்தது உண்டு.

நம் நாட்டில், இதெல்லாம் கனவு

என்னது நானு யாரா? said...

நான் கேட்டுகொண்டதற்கு இணங்க, நீங்க இந்த தொடரை ஆரம்பிச்சிருப்பதற்கு ரொம்ப நன்றி ஆனந்தி!!

ரொம்ப அருமையான ஒரு தொடக்கம். எல்லா விஷயங்கள் பற்றியும் எழுதுங்கள். படிக்க காத்திருக்கின்றேன்.

அடிக்கடி நம்ப கடைபக்கமும் வந்து போங்க...

நட்புன்னு சொன்னாலே Give and Take Policy தானே

உங்க ஸ்டைல்ல கலக்குங்க...

Madhavan Srinivasagopalan said...

சரியான ஆரம்பம்.. மொதல்லேயே, பாதுக்காப்பு பற்றி சொல்லியிருக்கீங்க.. நல்ல விஷயம்.. தொடர்ந்து எழுதுங்க..

ஸ்ரீராம். said...

இங்க ரோடுகள்ல எங்கேனும் விபத்து நடந்தால் உடனடியா... (அதாவது.. உண்மையில் உடனடியா) போலீஸ், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டி எல்லாம் வந்திருவாங்க."//

நம்மூர்ல ஆர்டர் செய்த பிசா வர்ற வேகத்துல கூட ஆம்புலன்ஸ் வர்றதில்லைன்னு ஒரு எஸ் எம் எஸ் படித்த நினைவு...!

சிவராம்குமார் said...

நல்ல தொடக்கம் ஆனந்தி! அப்படியே தொடருங்கள்!!

Akila said...

roada pathi sonnathey arumai... ungal mana kashtaththaiyum rajini stylela sonnathu arumaiyo arumai...

like to hear more from u....

Anonymous said...

Very interesting and informative too. Natural flow..with humour.

Expecting Part-II :)

Gayathri said...

unga vandi accident achunu padichathum konjam adhirchi..paathu thozhi gavanama irunga..kadavul ennikum unga kood iruppar..
neenga americavai varnikkum vidam arumai

kavisiva said...

ஆனந்தி உங்க பாணியிலேயே அழகா சொல்லி அமர்க்களமா ஆரம்பிச்சிருக்கீங்க தொடரட்டும்.

நம்ம ஊர் ஆஃபிசர்கள் ஆக்சிடெண்ட் நடந்த இடத்துல வந்து என்னென்ன பண்ணுவாங்கன்னு நான் நேர்லயே அனுபவித்தேனே அவ்வ்வ்வ்

சைவகொத்துப்பரோட்டா said...

தொடருங்க ஆபிசர் :))

Srini said...

Nalladhu... Inga irukkara Maams'kku thamizh theriyaadhu... Therinjaa ticket thaan... Nicely Done...

முனியாண்டி பெ. said...

It's good start and you are covered almost all regarding ticket.

Gnana Prakash said...

நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.. நம்ம நாட்ட கெடுக்குறது அரசியல்வாதிகள்தான்..

எல் கே said...

நல்ல விவரிப்பு. இப்ப இங்கயும் அழகா விளக்கு போட்டுக்கிட்டு வராங்க. மாமுல் வாங்க.. தொடருங்கள் அமெரிக்காவை பற்றி தெரிந்து கொள்ள ஆவலுடன் உள்ளேன்

aavee said...

போலிஸ் உங்க நண்பன்னு நம்ப ஊர்லே பாத்திருப்போம்.. ஆனா இங்க உண்மையாவே எதாவது பிரச்சனைனா தோள் கொடுக்க முன்னாடி நிப்பாங்க..

நல்லா ஆரம்பிச்சுருக்கீங்க!! அழகான அமெரிக்காவை நீங்க எப்படி காட்டுறீங்கன்னு பாக்கலாம்!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல தொடக்கம் சகோதரி.. அருமையாக உங்க பாணியிலையே சொல்லியிருக்கீங்க..

என்ன தான் அமெரிக்காவா இருந்தாலும் நம்ம ஊர் மாதிரி வருமா......

நிகழ்காலத்தில்... said...

நல்ல தொடக்கம், ஆரம்பத்திலேயே காரைப்போல் வேகம் எடுக்கிறது

வாழ்த்துகள்

Anonymous said...

ஆனந்தி ரொம்ப அருமையா இருக்கு உங்க அமெரிக்க வாழ்கை அனுபவம் ..படங்களும் சூப்பர் ஆ இருக்கு . பாகம் ரெண்டில் உங்க வீடு போட்டோ கூட போட்டால் நல்லா இருக்கும்

நான் பார்த்ததில் நிறையை பேர்க்கு அமெரிக்க ன்னு சொன்னாலே ஒரே வெறுப்பு தான் ஆனா நம்ம ஊரே காட்டிலும் அவங்க நாடே நல்லா ஆளர மாதிரி தான் எனக்கு தோன்றது ..
அங்கே நடக்கற அக்சிடென்ட் எல்லாம் ரொம்ப பயங்கரமா இருக்குமே எப்பிடியோ கடவுள் கிருபையால் உங்க யார்க்கும் ஒன்னும் ஆகலே .கடவுள்கு நன்றி ...எப்போதும் கேர் புல்லா வண்டி ஓட்ட சொல்லுங்க உங்க ஹஸ் கிட்டே ..

பகிர்வுக்கு நன்றி .விநாயகர் சதுர்த்தி நல வாழ்த்துக்கள் தோழி

'பரிவை' சே.குமார் said...

அருமையான ஆரம்பம்.
பகிர்வுக்கு நன்றி .விநாயகர் சதுர்த்தி நல வாழ்த்துக்கள்.

ஜீவன்பென்னி said...

Dubailayum same mams and same fines. enna thevaipatta unga dikya thoranthu velaiyum parpanga.

Unknown said...

அமெரிக்க அனுபவங்கள் அருமை.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சஞ்சய்
//அருமையான ஆரம்பம்...: ) ///

......ஹ்ம்ம்... டொட்ட... டொயிங் :-))

////அதாவது ரோட்லேயே சோத்த கொட்டி குழம்ப ஊத்தி குளைச்சு சாப்டலாம்னு சொல்லுங்க...:D :D ///

.....ஆமா... அப்படியே... சாப்ட்டு போட்டு.. ஒரு துண்டை விரிச்சு ஓரமா படுக்கவும் செய்யலாம்... :P :P

//"ஹவ் அ நைஸ் டே" ன்னு வேற சொல்லிட்டு போவாங்க.. (அவ்வ்வ்வ்.. அதான் டிக்கெட் எழுதிட்டியே.. அதுக்கு அப்புறம் எங்க நைஸ் டேன்னு..... பீலிங்க்ஸ்சோட போக வேண்டியது தான்).//
ஹா ஹா ஹா...சூப்பரப்பு :D ////

.....ஒரு ஆளு பீலிங்க்ஸ்ல புலம்பினா... என்ன சிரிப்பு? இல்ல என்ன சிரிப்புங்கரேன்....??? :D :D :P

//இந்தாங்கன்னு அவரோட "இன்டர்நேஷனல் லைசென்ஸ்" ஐ கொடுத்திருக்கார்.. //
உடனே போலீஸ்கார், தொப்பி தொப்பிநு சொல்லி இருப்பாரோ??? :D ///

.....அவரு தொப்பி தொப்பின்னு சொன்னாரோ... இல்ல அவர் போட்ருந்த தொப்பிய கழட்டிட்டு...
ஸூஊஊஊஊ..... எங்கே இருந்து கிளம்புரானுங்க..???? ன்னு தலை சொரிஞ்சாரோ..??


//// கோலக்கிளி....
இலவு காத கிளி தான் பொருத்தமா இருக்கும் ...!!!!!!! ////

.....ஹ்ம்ம்.. எஸ்.. கரெக்ட்-ஆ சொன்னிங்க.. :-)))
வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்கோ..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///சௌந்தர் said...

. அட அட.. என்ன அழகு? என்ன அழகு..??///

அழகு ஆபத்து இருக்கு தெரியாத உங்களுக்கு///

ஆமாமா... ஜெயில்..களி... நமக்கு எதுக்கு ஊர்வம்பு??
நல்லா கிளப்புறாங்க பீதிய... அவ்வ்வ்வ்
ரெம்ப நன்றி சௌந்தர்.. :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///அப்பாவி தங்கமணி said...

வாவ்... கலக்கல் ஆனந்தி... அமெரிக்கன் டிராபிக் சிஸ்டம் பத்தி தீசிசே எழுதலாம் போல இருக்கே நீங்க...அதுவும் உங்க ஸ்டைல்ல நகைச்சுவை கலந்து சொன்னது கலக்கல்... கலக்குங்க மேடம்... படிக்கக் நாங்க ரெடி.. .அடுத்த பார்ட் எழுத நீங்க ரெடியா? ஹா ஹா அஹ ////

ஆமா ஆமா... நா கொஞ்சம் தான் சொல்லிருக்கேன்..
ஹா ஹா... எஸ் எஸ்.. நா ரெடி தாங்க..
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///சௌந்தர் said...

அப்பாவியா மூஞ்ச வச்சிட்டு///

அப்போ மட்டும் நம்பிடுவார ///


...அவரு நம்பினாலும் இங்க ஒரு ஆளு போட்டு குடுக்க ரெடி மாதிரியே...இருக்கே???

///ஹிஸ்டரியை பாதிக்கும்..////
ஹிஸ்டரினா STD தானே ///


....இல்ல, ISD ...!! :D :D


////(அதெல்லாம் சரி.. இம்புட்டு விலாவாரியா சொல்றியே... சொந்த அனுபவமான்னு எடக்கு மடக்கா கேள்வி கேக்க பிடாது.. சொல்லிட்டேன்...)/////

ஏன் கேக்குறோம் அதான் தெரியுதே சொந்த அனுபவம் ///


.....எம்பூட்டு அறிவு இந்த புள்ளைக்கு... ஹ்ம்ம்.. என்னத்த சொல்ல...


நல்லா இருங்க மக்கா... நல்லா இருங்க.... (சிவாஜி ஸ்டைல்..... ஆஹ்ஹ்ஹ )

////நாட்டிலும் அப்படி வந்தால் ரொம்ப சந்தோசமா இருக்கும்.. ஹ்ம்ம்.. "இப்ப வருமோ..... எப்ப வருமோ..////

வரும் ஆனா வராது.....////


..........இப்போ சொன்னிங்களே....இது இது.. தான் சூப்பர் அப்பு.... :-)))


ரொம்ப நன்றி சௌந்தர்..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//சௌந்தர் said...

டராபிக் பற்றி நகைசுவையா,உங்க எழுத்து நடையில் சொல்லி இருப்பது சூப்பர் உங்களுக்கு விபத்து நடந்து அதிர்ச்சியாக இருந்தது. நல்ல வேளை///

ஹ்ம்ம்..ரொம்ப நன்றி சௌந்தர்...
ஆமாங்க... கடவுள் ஆசி தான்..
உங்க அக்கறைக்கு நன்றி :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//தமிழ் உதயம் said...


அமெரிக்க ஆபீசர் பத்தி அழகா சொல்லிட்டீங்க.//

ஹா ஹா.. ரொம்ப நன்றிங்க.. :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///அருண் பிரசாத் said...

நல்ல விஷயங்கள் தான். நானும் வெளிநாட்டில் சாலைவிதிமுறைகளை மதிப்பது கண்டு வியந்தது உண்டு.

நம் நாட்டில், இதெல்லாம் கனவு///

ஹ்ம்ம்.. சரி தான்..

"கனவு மெய்ப்பட வேண்டும்....."

வருகைக்கு நன்றி அருண்.. :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//என்னது நானு யாரா? said...

நான் கேட்டுகொண்டதற்கு இணங்க, நீங்க இந்த தொடரை ஆரம்பிச்சிருப்பதற்கு ரொம்ப நன்றி ஆனந்தி!!

ரொம்ப அருமையான ஒரு தொடக்கம். எல்லா விஷயங்கள் பற்றியும் எழுதுங்கள். படிக்க காத்திருக்கின்றேன்.

அடிக்கடி நம்ப கடைபக்கமும் வந்து போங்க...

நட்புன்னு சொன்னாலே Give and Take Policy தானே

உங்க ஸ்டைல்ல கலக்குங்க...///

வாங்க வாங்க... எஸ்... உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்..
ரொம்ப நாளாவே.. யோசனை இருந்தது...ஸ்டார்டிங் ட்ரபுள்..
உங்கள் கருத்தும் என்னை ஊக்குவிக்க காரணமாய் அமைந்தது..

ஹ்ம்ம்.. ரொம்ப நன்றிங்க..
எஸ், கண்டிப்பாக எழுத முயல்கிறேன்...

ஆமாங்க.. நான் உங்களை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறேன்..
வருகைக்கு நன்றி.. :-)

Riyas said...

//(எங்கிருந்தாவது தொடங்கம்மா.. மனுஷனுக்கு 1008 வேலை வெட்டி இருக்குன்னு சொல்றது கேட்டிருச்சு....)//
எப்புடி கண்டுபுடிச்சிட்டிங்களே..

ஆரம்பமே அசத்தல்..
நீங்க அமெரிக்காவுலயா இருக்கிங்க சொல்லவேயில்ல..
//டிக்கெட்-ம் எழுதி குடுத்துட்டு ஸ்டைல்-ஆ "ஹவ் அ நைஸ் டே" ன்னு வேற சொல்லிட்டு போவாங்க//

அவ்வளவு நல்லவங்களா..

//டிக்கெட் என்பது.. உங்க டிரைவிங் ஹிஸ்டரியை பாதிக்கும்//

ஹிஸ்டரின்னா வரலறுதானே

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///Madhavan said...

சரியான ஆரம்பம்.. மொதல்லேயே, பாதுக்காப்பு பற்றி சொல்லியிருக்கீங்க.. நல்ல விஷயம்.. தொடர்ந்து எழுதுங்க..///

ஹ்ம்ம்.. ரொம்ப நன்றிங்க.. :-))
கண்டிப்பா எழுதறேன்..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///ஸ்ரீராம். said...

இங்க ரோடுகள்ல எங்கேனும் விபத்து நடந்தால் உடனடியா... (அதாவது.. உண்மையில் உடனடியா) போலீஸ், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டி எல்லாம் வந்திருவாங்க."//

நம்மூர்ல ஆர்டர் செய்த பிசா வர்ற வேகத்துல கூட ஆம்புலன்ஸ் வர்றதில்லைன்னு ஒரு எஸ் எம் எஸ் படித்த நினைவு...! ////

ஹா ஹா ஹா....
செம தூள்...எஸ். எம். எஸ் போங்க.. :-))))
ரொம்ப நன்றிங்க..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///சிவராம்குமார் said...

நல்ல தொடக்கம் ஆனந்தி! அப்படியே தொடருங்கள்!!///

கண்டிப்பாக.. ரொம்ப நன்றிங்க :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///Akila said...

roada pathi sonnathey arumai... ungal mana kashtaththaiyum rajini stylela sonnathu arumaiyo arumai...

like to hear more from u....///

ஹ்ம்ம்..
தேங்க்ஸ் எ லாட்....அகிலா.. :-)))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///ராதை/Radhai said...

Very interesting and informative too. Natural flow..with humour.

Expecting Part-II :) ////

தேங்க்ஸ் ராதை.. :-))
எஸ்.. சீக்கிரம் எழுத முயற்சி பண்றேன்..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///Gayathri said...

unga vandi accident achunu padichathum konjam adhirchi..paathu thozhi gavanama irunga..kadavul ennikum unga kood iruppar..
neenga americavai varnikkum vidam அருமை//


ஆமாங்க.. கடவுள் ஆசி.. ஒன்னும் ஆகலப்பா..

ஹ்ம்ம்.. உங்க அன்பிற்கு ரொம்ப நன்றி தோழி..

தேங்க்ஸ் காயத்ரி.. :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//kavisiva said...

ஆனந்தி உங்க பாணியிலேயே அழகா சொல்லி அமர்க்களமா ஆரம்பிச்சிருக்கீங்க தொடரட்டும்.

நம்ம ஊர் ஆஃபிசர்கள் ஆக்சிடெண்ட் நடந்த இடத்துல வந்து என்னென்ன பண்ணுவாங்கன்னு நான் நேர்லயே அனுபவித்தேனே அவ்வ்வ்வ்////

ரொம்ப நன்றிங்க.. கவி..
உங்களுக்கு நேர் அனுபவமே இருக்கா...??
சரி சரி.. நோ பீலிங்க்ஸ்... இட்ஸ் ஒகே.. இட்ஸ் ஒகே..
வருகைக்கு நன்றிங்க..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///சைவகொத்துப்பரோட்டா said...

தொடருங்க ஆபிசர் :))///

ஹ்ம்ம்..கண்டிப்பாங்க..
ரொம்ப நன்றி :-))

Unknown said...

அதாவது ரோட்லேயே சோத்த கொட்டி குழம்ப ஊத்தி குளைச்சு சாப்டலாம்னு சொல்லுங்க...:D :D
--appadi elam pana mudiathu..
mams vantha fine kata vendi varum.athuku hotela poiey saptu vantralam...

Unknown said...

realy nice..
nanum america vanthapila eruku..

ennathan erunthalum nama
ooru kondu kuli road pola varuma...

Unknown said...

நம் நாட்டில், இதெல்லாம் கனவு--Dr.ABJ ENNA choli erukrkaru????kanau kana cholii...sariya..

Unknown said...

meendum varuvomula..

r.v.saravanan said...

நல்ல தொடக்கம் ஆனந்தி தொடருங்கள் படிக்க காத்திருக்கிறோம்

நாடோடி said...

உங்க‌ள் பாணியில் அருமையாய் எழுதி இருக்கீங்க‌. தொட‌ருங்க‌ள். :)

சௌந்தர் said...

Riyas said...நீங்க அமெரிக்காவுலயா இருக்கிங்க சொல்லவேயில்ல..///
@@@Riyas said...
என்ன இப்படி சொல்லிட்டிங்க அமெரிக்கா போய் ஆனந்தி சொன்னா போதும் பச்ச குழந்தை கூட அங்க வீட்டுக்கு வழி சொல்லும்

கமலேஷ் said...

நல்ல தொடக்கம்.. அப்படியே தொடருங்கள்!!

Priya said...

ஆனந்தி, மிக அழகா தொடங்கி இருக்கிங்க.வாழ்த்துக்கள்.
உங்களைப் போலதான் தோழி நானும்! இங்கு வந்தவுடன் என்னை கவர்ந்த முதல் விஷயம் இங்குள்ள‌ ரோடுகள் மற்றும் டிராஃபிக் சிக்னலும்தான்.

//(அதாவது.. உண்மையில் உடனடியா)//... எஸ்! இங்கேயும் (பிரான்ஸில்) கூட போலீஸ், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டி எல்லாம் உண்மையிலேயே உடனடியா வருவாங்க.இதை போல உலக நாடுகள் அனைத்தும் மாறினால் எவ்வளவு நல்லா இருக்கும்:)!!!!

vanathy said...

ம்ம்.. நல்லா இருக்கு. இங்குள்ள மக்கள் சாலை விதிகளை மிகவும் மதிக்கிறார்கள். படங்கள் அழகா இருக்கு.

Mythili (மைதிலி ) said...

Yeah, the roads and the rules are good.... eppo ithai india la kadai pidippaangannu thaan theriyala.

dheva said...

என்னிக்கு லைஸ்சென்ஸ் எடுத்தமோ என்னைக்கு கார் ஓட்டா ஆரம்பிச்சமோ அப்பவே... இவை எல்லாம் பேக்கேஜா வாங்கிகிட்டோம்....


சமூகம் சார்ந்த வாழ்க்கை நமது நாட்டில்...! அரசு சார்ந்த வாழ்க்கை வளர்ந்த நாடுகளில்...அங்கே சமூகத்தை விட ...அரசின் உதவிகள் அதிகம்...!


டிக்கட் நிறைய வாங்கி இருப்பீங்களோ....?

சசிகுமார் said...

வாழ்த்துக்கள் தோழி அருமையாக எழுத்தி இருக்கீங்க

jay said...

//இங்க உள்ள ரோடுகள்... நல்ல விஸ்தாரமா, சுத்தமா...//

மலேசியாவிலும் அப்படி தான் ஆனந்தி, இங்கே பரோட்டாவும் போடலாம்....
இந்தியாவில் அரசியல்வாதி மட்டும் அல்லாமல், அதிக மக்கள் தொகை பிரச்சனையும் ஒரு காரணமுன்னு சொல்லலாம்...

jay said...

Superb Aananthi...

சிங்கக்குட்டி said...

நல்ல பகிர்வு ஆனந்தி, நிறைய இது போல் உங்கள் பகுதியை பற்றி நிறைய எழுதுங்கள்.

Unknown said...

அன்பிற்கினிய ஆனந்தி...,

"உங்க பாணியிலேயே அழகா சொல்லி அமர்க்களமா ஆரம்பிச்சிருக்கீங்க தொடரட்டும்"

இரண்டாம் பாகத்தில் பதிவை ஒரே கலரில் எழுதினால் நன்றாக இருக்கும். அதேபோல் அடைப்புக்குறிக்குள் உள்ள உங்கள் மனசாட்சியின் கமெண்டுகளை பதிவோடு பொருத்தமாக இணைத்து விடுங்கள். - இது எனது கருத்து.

நன்றி..,
மரங்களோடு மனிதம் வளர்ப்போம்...
அன்புடன் ச.ரமேஷ்.

ஜெய்லானி said...

// எங்க இருந்து தொடங்கறது..? //


ஏர் போர்ட்ட விட்டு வெளியில வந்ததிலிருந்து தொடங்கனும் :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///Srinivasan said...

Nalladhu... Inga irukkara Maams'kku thamizh theriyaadhu... Therinjaa ticket thaan... Nicely Done...//


....ஹா ஹா ஹா...!!


தேங்க்ஸ் ஸ்ரீநி :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

////முனியாண்டி said...


It's good start and you are covered almost all regarding ticket.///


நினைவில் வந்ததை எல்லாம், சொல்ல முயல்கிறேன்..


உங்க வருகைக்கு நன்றிங்க. :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//Gnana Prakash said...


நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.. நம்ம நாட்ட கெடுக்குறது அரசியல்வாதிகள்தான்..///


ஹ்ம்ம்.. என்னத்த செய்யறது.. நம்ம நாட்டிலும் விழிப்புணர்வு வந்து அவங்களா பாத்து எதாச்சும் செஞ்சா தான்.


உங்க வருகைக்கு நன்றி.. :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//LK said...

நல்ல விவரிப்பு. இப்ப இங்கயும் அழகா விளக்கு போட்டுக்கிட்டு வராங்க. மாமுல் வாங்க.. தொடருங்கள் அமெரிக்காவை பற்றி தெரிந்து கொள்ள ஆவலுடன் உள்ளேன்//


ஹா.. ஹா.. அது சரி..


உங்க வருகைக்கு நன்றி. :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//கோவை ஆவி said...


போலிஸ் உங்க நண்பன்னு நம்ப ஊர்லே பாத்திருப்போம்.. ஆனா இங்க உண்மையாவே எதாவது பிரச்சனைனா தோள் கொடுக்க முன்னாடி நிப்பாங்க..

நல்லா ஆரம்பிச்சுருக்கீங்க!! அழகான அமெரிக்காவை நீங்க எப்படி காட்டுறீங்கன்னு பாக்கலாம்!!//


கரெக்ட்.. சரியா சொன்னிங்க.. ஹ்ம்ம்.. என்னால் முடிந்த அளவு முயற்சி பண்றேங்க..


உங்க வருகைக்கு நன்றி.. :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//வெறும்பய said...

நல்ல தொடக்கம் சகோதரி.. அருமையாக உங்க பாணியிலையே சொல்லியிருக்கீங்க..

என்ன தான் அமெரிக்காவா இருந்தாலும் நம்ம ஊர் மாதிரி வருமா...... ///


ரொம்ப நன்றிங்க.. ஹ்ம்ம்.. அதுவும் சரி தான்... :-)


இங்க வசிப்பதால் உள்ள நிறை, குறை பற்றி கூறத்தான் இந்த முயற்சி.. :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//நிகழ்காலத்தில்... said...

நல்ல தொடக்கம், ஆரம்பத்திலேயே காரைப்போல் வேகம் எடுக்கிறது

வாழ்த்துகள்//


ஹா ஹா... நன்றிங்க.. கார்-ஐ ஆக்சிடென்ட் பண்ணாம கொண்டு போய் சேர்க்கிறேன்..


வருகைக்கு நன்றிங்க.. :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//sandhya said...

ஆனந்தி ரொம்ப அருமையா இருக்கு உங்க அமெரிக்க வாழ்கை அனுபவம் ..படங்களும் சூப்பர் ஆ இருக்கு . பாகம் ரெண்டில் உங்க வீடு போட்டோ கூட போட்டால் நல்லா இருக்கும்

நான் பார்த்ததில் நிறையை பேர்க்கு அமெரிக்க ன்னு சொன்னாலே ஒரே வெறுப்பு தான் ஆனா நம்ம ஊரே காட்டிலும் அவங்க நாடே நல்லா ஆளர மாதிரி தான் எனக்கு தோன்றது ..
அங்கே நடக்கற அக்சிடென்ட் எல்லாம் ரொம்ப பயங்கரமா இருக்குமே எப்பிடியோ கடவுள் கிருபையால் உங்க யார்க்கும் ஒன்னும் ஆகலே .கடவுள்கு நன்றி ...எப்போதும் கேர் புல்லா வண்டி ஓட்ட சொல்லுங்க உங்க ஹஸ் கிட்டே ..

பகிர்வுக்கு நன்றி .விநாயகர் சதுர்த்தி நல வாழ்த்துக்கள் தோழி//


வாங்க சந்த்யா.. ரொம்ப நன்றிப்பா.. ஹ்ம்ம்.. சரிங்க..


ஆமாங்க.. கடவுள் ஆசியில் தப்பித்தோம்.. கண்டிப்பா சொல்றேன் தோழி.


உங்களுக்கும், என் வாழ்த்துக்கள்.. வருகைக்கும், அன்பிற்கும் நன்றி.. :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//சே.குமார் said...

அருமையான ஆரம்பம்.
பகிர்வுக்கு நன்றி .விநாயகர் சதுர்த்தி நல வாழ்த்துக்கள்.//


ரொம்ப நன்றிங்க.. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.. :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//ஜீவன்பென்னி said...

Dubailayum same mams and same fines. enna thevaipatta unga dikya thoranthu velaiyum parpanga //


ஹா ஹா.. ஊரு ஊருக்கு மாம்ஸ்.. போல இருக்கு.


உங்க வருகைக்கு நன்றிங்க. :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//கலாநேசன் said...

அமெரிக்க அனுபவங்கள் அருமை.//


ரொம்ப நன்றிங்க.. :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//Riyas said...

//(எங்கிருந்தாவது தொடங்கம்மா.. மனுஷனுக்கு 1008 வேலை வெட்டி இருக்குன்னு சொல்றது கேட்டிருச்சு....)//
எப்புடி கண்டுபுடிச்சிட்டிங்களே..


******ஹா ஹா.. இது தெரியாதாக்கும்.. தானா வரதுங்க.. எல்லாம்.. :-))



///ஆரம்பமே அசத்தல்.
நீங்க அமெரிக்காவுலயா இருக்கிங்க சொல்லவேயில்ல..///


*****இப்ப சொல்லிட்டனே... சந்தோசமா..?? ஆமாங்க.. அமெரிக்கால தான் இருக்கேன்.. :-)



//டிக்கெட்-ம் எழுதி குடுத்துட்டு ஸ்டைல்-ஆ "ஹவ் அ நைஸ் டே" ன்னு வேற சொல்லிட்டு போவாங்க//
அவ்வளவு நல்லவங்களா..//


*****ஆமா ஆமா.. அவ்வ்வ்வவ்வ்வ்

//டிக்கெட் என்பது.. உங்க டிரைவிங் ஹிஸ்டரியை பாதிக்கும்//
ஹிஸ்டரின்னா வரலறுதானே//


******இல்ல, பூகோளம்.. எங்க இப்படி..??


உங்க வருகைக்கு ரொம்ப நன்றிங்க.. :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//siva said...
அதாவது ரோட்லேயே சோத்த கொட்டி குழம்ப ஊத்தி குளைச்சு சாப்டலாம்னு சொல்லுங்க...:D :D
--appadi elam pana mudiathu..
mams vantha fine kata vendi varum.athuku hotela poiey saptu vantralam...//

******ஹா ஹா ஹா.. அது சரி.. வேணும்னா..மாம்சுக்கும் ஒரு உருண்டை சோறு குடுத்துரலாம்.. :-))

///realy nice..
nanum america vanthapila eruku..

ennathan erunthalum nama
ooru kondu kuli road pola varuma...///

*****ஹ்ம்ம்.. அதுவும் கரெக்ட் தான்.. நம்ம ஊர் நம்ம ஊர் தான்.. :-))

///siva said...

நம் நாட்டில், இதெல்லாம் கனவு--Dr.ABJ ENNA choli erukrkaru????kanau kana cholii...sariya..///

******ஹா ஹா ஹா.. செம சிரிப்ப்பா வருது.... :D :D

"இப்போ கனா காணும் காலங்கள்........" :-))))

//siva said...

meendum varuvomula..///

*****ஹா ஹா.. வாங்க வாங்க..:-))

வருகைக்கும், கருத்திற்கும் நன்றிங்க..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//r.v.saravanan said...

நல்ல தொடக்கம் ஆனந்தி தொடருங்கள் படிக்க காத்திருக்கிறோம்//

*****ரொம்ப நன்றிங்க.. கண்டிப்பாக.. தொடர்கிறேன்.. :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///நாடோடி said...
உங்க‌ள் பாணியில் அருமையாய் எழுதி இருக்கீங்க‌. தொட‌ருங்க‌ள். :)//


*****ரொம்ப நன்றிங்க.. எஸ்.. கண்டிப்பாக தொடர்கிறேன்.. :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///சௌந்தர் said...

Riyas said...நீங்க அமெரிக்காவுலயா இருக்கிங்க சொல்லவேயில்ல..///
@@@Riyas said...
என்ன இப்படி சொல்லிட்டிங்க அமெரிக்கா போய் ஆனந்தி சொன்னா போதும் பச்ச குழந்தை கூட அங்க வீட்டுக்கு வழி சொல்லும்///


*****ஹா ஹா ஹா.. சௌந்தர் உங்களுக்கு இந்த வம்பு ஆகாது.. என்னது இது?? ஒரு வெள்ளை குழந்தைய, இல்ல ஒரு கருப்பு குழந்தைய கேட்டா கூட சொல்லிருக்கும்... :D :D :D :D

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///கமலேஷ் said...

நல்ல தொடக்கம்.. அப்படியே தொடருங்கள்!!///


*****ரொம்ப நன்றிங்க.. எஸ், கண்டிப்பா தொடர்கிறேன்.. :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//Priya said...

ஆனந்தி, மிக அழகா தொடங்கி இருக்கிங்க.வாழ்த்துக்கள்.
உங்களைப் போலதான் தோழி நானும்! இங்கு வந்தவுடன் என்னை கவர்ந்த முதல் விஷயம் இங்குள்ள‌ ரோடுகள் மற்றும் டிராஃபிக் சிக்னலும்தான்.

//(அதாவது.. உண்மையில் உடனடியா)//... எஸ்! இங்கேயும் (பிரான்ஸில்) கூட போலீஸ், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டி எல்லாம் உண்மையிலேயே உடனடியா வருவாங்க.இதை போல உலக நாடுகள் அனைத்தும் மாறினால் எவ்வளவு நல்லா இருக்கும்:)!!!!///


******வாழ்த்துக்கு நன்றி தோழி.. :-) ஹ்ம்ம்... அப்படியா??


கரெக்ட் தான்... நானும் அதையே தான் நினைக்கிறேன்..


ரொம்ப நன்றிங்க.. :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///vanathy said...

ம்ம்.. நல்லா இருக்கு. இங்குள்ள மக்கள் சாலை விதிகளை மிகவும் மதிக்கிறார்கள். படங்கள் அழகா இருக்கு//


*******நன்றிங்க வாணி... ஆமாங்க.. என்னை ரொம்ப கவர்ந்தது அதனால தான்.. :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//Mythili Krishnan (மைதிலி கிருஷ்ணன்) said...

Yeah, the roads and the rules are good.... eppo ithai india la kadai pidippaangannu thaan theriyala./////


*****ஹ்ம்ம்.. ஆமா மைதிலி.. தேங்க்ஸ்.. மா :-)))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//dheva said...

என்னிக்கு லைஸ்சென்ஸ் எடுத்தமோ என்னைக்கு கார் ஓட்டா ஆரம்பிச்சமோ அப்பவே... இவை எல்லாம் பேக்கேஜா வாங்கிகிட்டோம்....

சமூகம் சார்ந்த வாழ்க்கை நமது நாட்டில்...! அரசு சார்ந்த வாழ்க்கை வளர்ந்த நாடுகளில்...அங்கே சமூகத்தை விட ...அரசின் உதவிகள் அதிகம்...!

டிக்கட் நிறைய வாங்கி இருப்பீங்களோ....?////

******ஹா ஹா... சரி சரி.. எல்லாம் நல்ல டீல் தானே.. தேவா..??
ஹ்ம்ம்.. எஸ்.. கரெக்ட்டா சொன்னிங்க..
நக்கலா?? அதெல்லாம் ஒன்னும் இல்லை.. (ஒரு உதாரணம் சொல்ல முடியலப்பா....)

வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.. :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///சசிகுமார் said...

வாழ்த்துக்கள் தோழி அருமையாக எழுத்தி இருக்கீங்க///

*****உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க.. சசி.. :-)))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

////jay said...

//இங்க உள்ள ரோடுகள்... நல்ல விஸ்தாரமா, சுத்தமா...//

மலேசியாவிலும் அப்படி தான் ஆனந்தி, இங்கே பரோட்டாவும் போடலாம்....
இந்தியாவில் அரசியல்வாதி மட்டும் அல்லாமல், அதிக மக்கள் தொகை பிரச்சனையும் ஒரு காரணமுன்னு சொல்லலாம்...///


*****ஹா ஹா ஹா.. சூப்பர் போங்க.. :-))


எஸ், அதுவும் ஒரு காரணம் தான்.. வருகைக்கு நன்றிங்க.. :-)

///jay said...

Superb Aananthi...///


*****தேங்க்ஸ் ஜெய்.... :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///சிங்கக்குட்டி said...

நல்ல பகிர்வு ஆனந்தி, நிறைய இது போல் உங்கள் பகுதியை பற்றி நிறைய எழுதுங்கள்./////


****ரொம்ப நன்றிங்க... கண்டிப்பாக எனக்கு தெரிந்தவற்றை எழுதுகிறேன் :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//S.ரமேஷ். said...

அன்பிற்கினிய ஆனந்தி...,

"உங்க பாணியிலேயே அழகா சொல்லி அமர்க்களமா ஆரம்பிச்சிருக்கீங்க தொடரட்டும்"

இரண்டாம் பாகத்தில் பதிவை ஒரே கலரில் எழுதினால் நன்றாக இருக்கும். அதேபோல் அடைப்புக்குறிக்குள் உள்ள உங்கள் மனசாட்சியின் கமெண்டுகளை பதிவோடு பொருத்தமாக இணைத்து விடுங்கள். - இது எனது கருத்து.

நன்றி..,
மரங்களோடு மனிதம் வளர்ப்போம்...
அன்புடன் ச.ரமேஷ்.///


*****ரொம்ப நன்றிங்க ரமேஷ்.. :-))


கண்டிப்பாக.. செய்கிறேன்.. உங்கள் கருத்திற்கு நன்றிங்க..!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///ஜெய்லானி said...

// எங்க இருந்து தொடங்கறது..? //

ஏர் போர்ட்ட விட்டு வெளியில வந்ததிலிருந்து தொடங்கனும் :-))///

******சரி ரைட்ட்டு........ தொடங்கிட்டா போகுது.. :-))
வருகைக்கு நன்றிங்க...!

துளசி கோபால் said...

கொன்னுட்டீங்க.

ரசித்தேன் & சிரித்தேன்:-)

Anonymous said...

ஆனந்தி என்னமா எழுதுற...பேச்சுநடை..கவிதை நடை..நகைச்சுவை நடை..நீ ஒரு என்ச்யச்லோபிடியா..
எப்பப்பா...எங்கேயோ போயுட்டீங்க...
நான் ரொம்ப பெருமை படுறேன்..
இவ்ளோ பெரிய அறிவாளியா நம்மளையும் மதிச்சு பேசுதுன்னு..
சில நேரங்களில் நீங்களும் லூசுதாங்க ..என்கிட்டயும் பேசுறியே..

அருமையான பதிவு..வாழ்த்துகள்..
எழுதுங்க...எழுதுங்க..
எழுதிகிட்டே இருங்க..

Unknown said...

Hi Anandhi,

Arumaiyaana katurai!!!

Dr.Sameena@

www.myeasytocookrecipes.blogspot.com
www.lovelypriyanka.blogspot.com
www.samsondentalclinic.blogspot.com

Vijiskitchencreations said...

நல்லா இருக்கு நிறய்ய விஷயங்கள் இருக்கு.மேலும் மேலும் எழுதிட்டே போகலாம்.

அண்ணாமலை..!! said...

அமெரிக்க(இந்தியப்) பெண்ணே..
கலக்குங்க!

Raja said...

he he he.. You told the Fact, But compare the Population with India sister.. When I came here I was Little bit surprised.. Latter I found tat Population Cause is the Main Problem in INDIA.

Lot of things have to change..

Starjan (ஸ்டார்ஜன்) said...

ட்ரைவிங் ஸ்கூல் ஆரம்பிக்க போறீங்களா... நல்லாவே கிளாஸ் எடுக்கிறீங்க டீச்சர்..

Starjan (ஸ்டார்ஜன்) said...

நாங்க பண்ணுற ஒவ்வொரு தப்புக்கும் மார்க் குறைப்பீங்களா..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//துளசி கோபால் said...
கொன்னுட்டீங்க.....
ரசித்தேன் & சிரித்தேன்:-)//

** ஹா ஹா.. ரொம்ப நன்றிங்க :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//surya said...
ஆனந்தி என்னமா எழுதுற...பேச்சுநடை..கவிதை நடை..நகைச்சுவை நடை..நீ ஒரு என்ச்யச்லோபிடியா..
எப்பப்பா...எங்கேயோ போயுட்டீங்க...
நான் ரொம்ப பெருமை படுறேன்..
இவ்ளோ பெரிய அறிவாளியா நம்மளையும் மதிச்சு பேசுதுன்னு..
சில நேரங்களில் நீங்களும் லூசுதாங்க ..என்கிட்டயும் பேசுறியே..

அருமையான பதிவு..வாழ்த்துகள்..
எழுதுங்க...எழுதுங்க..
எழுதிகிட்டே இருங்க..///

** அச்சச்சோ.. என்ன ஆச்சுங்க சூர்யா..

ஹா ஹா ஹா... அது சரி தான்...

ரொம்ப தேங்க்ஸ்.. உங்க கருத்துக்கு :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///




Dr.Sameena Prathap said...

Hi Anandhi,

Arumaiyaana katurai!!!

Dr.Sameena@

www.myeasytocookrecipes.blogspot.com
www.lovelypriyanka.blogspot.com
www.samsondentalclinic.blogspot.com ////


***ரொம்ப தேங்க்ஸ்.. :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///Vijiskitchen said...

நல்லா இருக்கு நிறய்ய விஷயங்கள் இருக்கு.மேலும் மேலும் எழுதிட்டே போகலாம்.///


***எஸ்.. கரெக்ட் தாங்க.. எழுத முயற்சி பண்றேன்.. :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//அண்ணாமலை..!! said...

அமெரிக்க(இந்தியப்) பெண்ணே..
கலக்குங்க!////

***ஹா ஹா ஹா.. வாங்க.. ரொம்ப தேங்க்ஸ்.. :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///Raja said...

he he he.. You told the Fact, But compare the Population with India sister.. When I came here I was Little bit surprised.. Latter I found tat Population Cause is the Main Problem in INDIA.

Lot of things have to change..///


***எஸ்.. நீங்க சொல்றதும் சரி தான்.. மக்கள்தொகையும் ஒரு மெயின் காரணம் தான்..


உங்க வருகைக்கு நன்றிங்க :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ட்ரைவிங் ஸ்கூல் ஆரம்பிக்க போறீங்களா... நல்லாவே கிளாஸ் எடுக்கிறீங்க டீச்சர்..///


*****ஹா ஹா ஹா.. ஆமாங்க.. இப்ப தான் பிள்ளையார் சுழி போட்ருக்கேன் :-))

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நாங்க பண்ணுற ஒவ்வொரு தப்புக்கும் மார்க் குறைப்பீங்களா..////


****ஆமாமா... ரொம்ப ஸ்ட்ரிக்ட் டீச்சர்.. :-))

உங்க வருகைக்கு நன்றிங்க..

Mahi said...

சமீபத்தில எங்க நண்பர் ஒருவருக்கும் ஆக்ஸிடென்ட் ஆச்சுங்க.அவர்கிட்ட இண்டியன் லைசென்ஸ்&இங்கத்த டெம்ப்ரவரி லைசென்ஸ்-ஐ வச்சு,கார ரென்ட் பண்ணிட்டாராம்.ரெட்லைட்-ஐ கவனிக்காம லெப்ட் டர்ன் பண்ணி,ஒரு ட்ரக்வந்து இவங்கள மோதி,ட்ரக் பின்னாலவந்த இன்னொரு காரும் மோதி..ஒரே களேபரமாகிருக்கு.

கடவுள் புண்ணியத்துல யாருக்கும் எதுவும் ஆகல,ஆனா மூணு காரும் அவுட்டு! இங்கே விபத்து நடந்தாலும்,பயணிகளுக்கு எதுவும் ஆகாதஅளவுக்கு சேஃபா காரை டிஸைன் பண்ணறாங்க. $11 எடுத்த இன்ஸ்யூரன்ஸ் எடுத்திருக்காரு நண்பர்,அவ்வளவுதான்.
மத்தபடி எதுவும் பே பண்ண சொல்லல இதுவரைக்கும்.(ஒரு பாயிண்ட்ட குறைச்சிட்டாங்க,ட்ரைவிங் ரெக்கார்டுல)
எவ்வளவு யூஸ்புல்லா இருக்குன்னு பாருங்க இன்ஷுரன்ஸ்!
அதைப்பத்தியும் சொல்லுங்க ஆனந்தி!

கமண்டில வந்து ப்ளேடு போடுவதற்கு சாரி.:) நல்ல பதிவு.

இங்கே போலீஸை 'ஆஃபீஸர்,ஆஃபீஸர்'-னு கூப்புடறது ஏதோ ஒரு படத்துல கவுண்டமணி செய்யும் காமெடிய நினைவுபடுத்தும் எனக்கு!! LOL!!!

maha said...

america valkai and america road and police super speedna car speedathana pogum


maha

maha said...

vadivelu amricavila irukirathu enakku therium


maha

அன்புடன் பிரசன்னா said...

உங்கள் வர்ணனை நல்ல இருக்கு பேச்சு வசக்கில் இடைக்கிடை கடியுடன்.... சொர்க்கமே சென்றாலும் நம்மூரை போல வருமா?

செந்தில்குமார் said...

உண்மைதான் ஆனந்தி

எனக்கும் அந்த அனுபவம் உண்டு அதிகாலை சுமார் 5மணி அளவில் நான் மற்றும் எனது நண்பர்கள் ஜெனிவாவில் இருந்து நியூயார்க் பயணித்தோம் ம்ம்ம்.. என்ன ஒரு தார்சாலை வழியெங்கும் வழிகாட்டி வார்த்தைகள் இல்லை எனக்கு அது ஒர் தங்கான நினைவுகள்.நிங்கள் சொல்வது போல போலிஸ் நடவடிக்கைகள் .... அவர்களுக்கு ஒரு சலிவுட் இத்தருனத்தில் ...

நீயூயார்க்கில் நாங்கள் எங்கள் வாகனத்தை பார்க் செய்த இடம் தெரியாமல் தவித்த போது அவர்களின் உதவி மறக்கமுடியாதது...

நம்ம ஊரை பற்றி சொல்லவா வேனும்...

ISR Selvakumar said...

ஆனந்தி,
அமெரிக்க டிராபிக் போலீசும், நானும் அப்படின்னு டைட்டில் வச்சிருக்கலாம்!

அடுத்த பாகத்துல இதை ”டோட்டல்” ஆக்கிட்டு, ஃப்ரீவேயை தாண்டி வந்திருவீங்களா?

இருந்தாலும் நம்ம ஊர் போலீசை ஒரு பிடிபிடிக்கறதை நான் கண்டிக்கறேன். அமெரிக்க போலீஸ் வளசரவாக்கத்துல வந்து 5 நிமிஷம் டிராபிக் கண்ட்ரோல் பண்ணினா, அந்த தூசியிலயே லொக்கு லொக்காகி காணாம போயிடுவார்.

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)