( ஆஹா.. என்னையும் மதிச்சு தொடர் பதிவு எழுத கூப்பிட்டிருக்காங்க.. என்ன சொல்லன்னே தெரியல.. அழைப்பிற்கு.. ரொம்ப ரொம்ப நன்றி..)
பதிவுலகில் முதல் முறையாக....
எனக்கு பிடித்த 10 படங்களை பற்றி பகிர்ந்து கொள்ளும் இந்த தொடர்பதிவுக்கு என்னை அழைத்த சைவகொத்துபரோட்டா அவர்களுக்கு எனது நன்றி... நன்றி :)
விதிகள்:
1. தமிழ்ப் படங்கள் மட்டுமே
(ஹி ஹி.. எப்படியும் நம்ம மத்த மொழி படங்கள்ல வீக்கு..)
2. குறைந்த பட்சம் எடுத்த வரைக்கும் திருட்டி டிவிடியாவது வந்திருக்க வேண்டும்.
(சரி... ரைட்டு....)
3. அடல்ட்ஸ் ஒன்லி படங்கள் அனுமதி இல்லை (நியூ உட்பட)
(சரி... ஓகே.. நீங்க சொன்ன சரி தான்..)
சரி வாங்க.. ஒன்று, இரண்டுன்னு வரிசை படுத்திரலாம்..!!
1 . தில்லானா மோகனாம்பாள்..
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒரு நாதஸ்வர வித்வான், நாட்டியப் பேரொளி பத்மினி பரத நாட்டியக் கலைஞர்.. இவர்களின் சந்திப்பு, மோதலில் தொடங்கி பின்பு போட்டியில் தொடர்ந்து.. அதன் முடிவில் இருவரும் இணைவது... இருக்கே.. அட அட.. சூப்பர் படம் போங்க.. மனோரமா, T.S.பாலையா இவங்க ரெண்டு பேர் பண்ற காமெடி.. கலக்கல்ஸ்.
இதில் வரும், "நலம்தானா...??" பாடலும், "மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன??" பாடலும்.... கேட்டுகிட்டே இருக்க தோணும்..!!
2 எஜமான்
நம்ம சூப்பர் ஸ்டார் படம்.. வானவராயனாக வரும் ரஜினியின் நடிப்பு தூள்.. கொஞ்சி பேசி, ரஜினியின் அத்தை மகளாக வரும் மீனாவும் நடிப்பில் அசத்தல்.. மீனா கர்ப்பமாக இருக்கும் போது, ஒரு பட்டாம்பூச்சியை காட்டி அது வேணும்னு சொல்ல, ரஜினி அதை பிடித்து தர ஊர் முழுக்க சுத்தி வருவது... செம காமெடி கலந்த காதலை சொல்லும்.. இப்படத்தில் வரும்.. "ஆலப்போல் வேலப்போல்..", மற்றும் "நிலவே முகம் காட்டு.." பாடல்கள்...சூப்பரா இருக்கும்..
3 முதல் மரியாதை..
சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி.. இவங்க இணைந்து நடித்த இந்த படம்... அன்பில்லாத மனைவி அமைந்தால்... ஒரு ஆணின் உலகம் எப்படி இருக்கும் என்பதை உணர்த்தும் விதமாய் இப்படம்.... ஊர் ஜனங்க தெய்வமா மரியாதையாக பார்க்கும் சிவாஜி, வீட்டில் மனைவியின் இயல்பினால்... தலை கவிழ்ந்து நடந்து செல்வதும்.. அந்த ஊருக்கு பரிசல் ஓட்டும் பெண்ணாக வரும் ராதாவின் அன்பில், நெகிழ்வதும்... பார்க்க பார்க்க அருமை.. இதில் வரும்.. "வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம்", மற்றும் "அடி நீதானா.. அந்தக் குயில்.." பாடல்கள் சூப்பர்..
4 காதல் கோட்டை..
எனக்கு ரொம்ப பிடிச்ச படம்.. சூர்யா-வாக வரும் அஜித், கமலி-யாக வரும் தேவயானி ரெண்டு பேரும் பார்க்காமலே ஒருவரை ஒருவர் காதலிக்கிறாங்க.. ஒரு பரீட்சைக்கு போகும் தேவயானி ட்ரெயினில் பர்சை தொலைக்க, நம்ம அஜித் அந்த பர்ஸில் உள்ள அட்ரஸுக்கு அதை மெயில் பண்ண.. தேவயானி அதற்கு நன்றி சொல்லி கடிதம் எழுத... மீண்டும் அஜித் கடிதம் எழுத.. இப்படியா அவங்க காதல் டெவலப் ஆகுங்க.. கடைசியில வீட்டில் கல்யாணம் பண்ண சொல்லி நெருக்கடி வர தேவயானி அஜித்தை தேடி வருகிறார்.. வந்த இடத்தில் அஜித் கண்முன்னே இருந்தும் யாரென்று தெரியாமல் அவர்கள் சண்டை போடுவதும்... கடைசியில் தான் அனுப்பிய பரிசான ஸ்வட்டரை வைத்து அடையாளம் காண்பதும்... அடடா...சூப்பருங்க.... "நலம் நலமறிய ஆவல்...", "வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா.." பாடல்கள் அருமை..
5 மௌன ராகம்..
கிளாசிக் ஹிட்.... ரேவதியும், கார்த்திக்கும் காதலிக்கிறாங்க..... துடிப்பான கார்த்திக் போலீஸ் ஷூட்டிங்-ல இறந்து போயிறார்.. வீட்டினர் கட்டாயத்தினால் ரேவதி, மோகன் கல்யாணம் நடக்குது.. பிடிப்பில்லாமலே இருக்கும் ரேவதியை, மோகன் தனது ஆர்ப்பாட்டம் இல்லாத அன்பினால், ரேவதியை தன்னை விரும்ப வைக்க முயற்சி செய்ய... ரேவதியும் பிடிவாதமாக இருக்க.. ஒரு முறை மனைவியை வெளியில் அழைத்து செல்லும் போது... உனக்கு என்ன வேண்டும் கேள் என்று சொல்ல... ரேவதியோ .. எனக்கு விவாகரத்து வேண்டும் எனச் சொல்ல..... அத்துடன் மோகன் ஒரு வார்த்தை பேசாமல்.. விவாகரத்து பத்திரம் கையெழுத்திட்டு கொடுத்து விடுகிறார்... அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் கிளைமாக்ஸ் .. இப்படத்தில் "மன்றம் வந்த தென்றலுக்கு....", "பனி விழும்....", "நிலாவே வா..." பாடல்கள் அருமை..
6. பம்மல் கே. சம்மந்தம்..
கமலும், சிம்ரனும் நடிச்ச.. இந்த படம்.. காமடி கலாட்டா தான்.. கல்யாணமே செய்து கொள்ளப் போவதில்லை என்று இருக்கும் கமல், சிம்ரனை சந்தித்த பிறகு, எப்படி மாறுகிறார் என்பதே கதை.. டாக்டராக வரும் சிம்ரன், நடிப்பில் கமலுக்கு இணையாக நடிச்சிருக்காங்க.. முழுக்க முழுக்க ரசிச்சு பாக்கலாம்...
7. காதலுக்கு மரியாதை..
இந்த படம் விஜயோட நல்லா படங்கள்ல ஒண்ணு.. ரொம்ப ரம்யமான காதல் கதை.. பாசமான அண்ணன்களுக்கும், காதலனுக்கும் இடையில் ஷாலினி படும் அவஸ்தை பார்க்க பார்க்க அழகு.. ஆர்ப்பாட்டம் இல்லாத அம்சமான கதை.. இதுல வர "என்னைத் தாலாட்ட வருவாளோ..??", "ஒரு பட்டாம் பூச்சி.." பாடல்கள் சூப்பர்..
8 மொழி
இந்த படம் எனக்கு ரொம்ப பிடிச்ச படம். வாய் பேசாத, காது கேளாத ஜோதிகாவை, பிரிதிவிராஜ் காதலிக்கும் அழகான கதை.. காதலை சொன்னதும் ஏற்றுக் கொள்ளாத ஜோ-வை எப்படி சம்மதிக்க வைக்கிறார் என்பது கதை.. "கண்ணால் பேசும் பெண்ணே ....", "பேசா மடந்தையே....", பாடல்கள் ரொம்ப அருமை.. :)
9 மூன்றாம் பிறை
ஹ்ம்ம்.. ரொம்ப பிடிச்ச படம்.. சுய நினைவு இல்லாம, குழந்தை போல் இருக்கும் ஸ்ரீதேவி, ஒரு சந்தர்ப்பத்தில் கமலிடம் வந்து சேர்கிறார்.. வழி தவறி வந்து விடும், மனநிலை சரியில்லாத ஸ்ரீதேவியை கமல் குழந்தை மாதிரி பார்த்துகொள்வது அருமை... ஸ்ரீதேவியிடம், அளவுக்கு அதிகமாக அன்பு வைக்கிறார் கமல், ஒரு கட்டத்தில் ஸ்ரீதேவிக்கு மனநிலை சரியானதும்... ரொம்ப சந்தோசப்பட.. அதே நேரம்.. ஸ்ரீதேவி, தான் பைத்தியமாக இருந்ததையே மறந்தது மட்டும் இல்லாம.. கமலையும் சேர்த்து மறந்து போறாங்க.. ஒரே ஒரே சோகம்ஸ்.. ஆனா கமல், ஸ்ரீதேவி நடிப்பு... கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்.. இதில் வரும் " கண்ணே கலைமானே...." , "பூங்காற்று...." பாடல்கள் சூப்பரோ சூப்பர்..
10 தெனாலி..
செம காமெடி... இந்த படத்துல கமல் நடிப்பு அட்டகாசம். எதற்கு எடுத்தாலும் பயம், பயம்-னு சொல்லிட்டு, டாக்டராக வரும் ஜெயராமனிடம் கமல் வந்து சேர்கிறார்.. அவர் குணமாகிறாரா ? இல்ல டாக்டரை லூசாக்குறாரா ...? என்பது தான் கதை.. ஒரு வேல் ஒண்ண வச்சிக்கிட்டு கமல் பண்ற கூத்து செம ஜோக்... இதில் வரும் "இஞ்சேருங்கோ....", "சுவாசமே... சுவாசமே..." பாடல்கள் தூள்.. :)
சப்பாஹ்.. ஒரு வழியா சொல்லி முடிச்சிட்டேன்.. இவ்வளவு நேரமும் பொறுமையா இந்த பதிவை படிச்ச உங்களுக்கு ரொம்ப நன்றி..
எனக்கு பிடித்த படங்கள் உங்களுக்கும் பிடிச்சிருந்தா.... நினைத்ததை கொஞ்சம் சொல்லிட்டு போங்க ப்ளீஸ்... !!
48 comments:
குறைந்த நேரத்தில் பத்து படங்களை மிக விரைவாக பார்த்து முடித்தது போல இருந்தது உங்களின் விமர்ச்சனம். ஒற்றுமை என்னனா எனக்கும் அனைத்து படங்களும் பிடிக்கும்! நன்றி.
மூன்று படங்கள் o.k
எனக்கு பிடித்த சில படங்கள் இதில் உள்ளன.
You have mentioned "Kathaluku Mariyathai" is Vijay's one of the best movie.... Really did he act more good movies.....
Rather does he even act???
எட்டு படம் லவ் மற்றும் இரண்டு படம் காமெடி.
காதலுக்கு மரியாதை!!!!!!!!!
காமெடிக்கு சூப்பர்!!!!!!!!!
ஹ்ம்ம் எல்லாமே சூப்பர் மூவீஸ்...!!
If i ever make the same list THILLANA MOGANAAMBAAL will be on top in mine too ;-)
Super collections
Excellant Collection.
nalla vimarsanamum kosurai.
nalla irukku
ஹை!! நல்ல தொகுப்பு!! அதோட அந்த படங்களோட
கதையும் கொடுத்த பாணியும் நல்லா இருக்கு.
Very good movie selections. I like Kamal movies very much.
முதல் மரியதை,மூன்றாம் பிரை
ம்ம்ம் நல்ல ரசனை தான் போங்க:))
@Kousalya
//குறைந்த நேரத்தில் பத்து படங்களை மிக விரைவாக பார்த்து முடித்தது போல இருந்தது உங்களின் விமர்ச்சனம். ஒற்றுமை என்னனா எனக்கும் அனைத்து படங்களும் பிடிக்கும்! நன்றி. //
வாங்க கௌசல்யா.. ரொம்ப நன்றி.. :)
@Madumitha
//மூன்று படங்கள் o.k //
வாங்க மதுமிதா.. நன்றி :)
@தமிழ் உதயம்
//எனக்கு பிடித்த சில படங்கள் இதில் உள்ளன //
வாங்க.. ஹ்ம்ம்.. ரொம்ப நன்றி.. :)
@Raghav
//You have mentioned "Kathaluku Mariyathai" is Vijay's one of the best movie.... Really did he act more good movies.....
Rather does he even act???//
For me, I felt he did acted some good movies.. especially in Kadhalukku Mariyathai.. he didnt overdo he roll.. no punch dialogues.. liked it :)
@ஜெய்லானி
//எட்டு படம் லவ் மற்றும் இரண்டு படம் காமெடி.
காதலுக்கு மரியாதை!!!!!!!!!
காமெடிக்கு சூப்பர்!!!!!!!!! //
வாங்க ஜெய்லானி.. அழகா வரிசை படுத்திடீங்க..:)
@Sanjay
//ஹ்ம்ம் எல்லாமே சூப்பர் மூவீஸ்...!!
If i ever make the same list THILLANA MOGANAAMBAAL will be on top in mine too ;-) //
ஹ்ம்ம்.. ஹ்ம்ம்.. ரொம்ப தேங்க்ஸ்.. :)
Same Pinch for Thillaaaa Mohanaambaal.. :D
@S Maharajan
//Super collections //
வாங்க மகாராஜன்.. ரொம்ப நன்றி.. :)
@சே.குமார்
//Excellant Collection.
nalla vimarsanamum kosurai.
nalla irukku //
வாங்க குமார்.. ரொம்ப நன்றி :)
@சைவகொத்துப்பரோட்டா
//ஹை!! நல்ல தொகுப்பு!! அதோட அந்த படங்களோட
கதையும் கொடுத்த பாணியும் நல்லா இருக்கு//
வாங்க.. ரொம்ப நன்றி.. :)
@vanathy
//Very good movie selections. I like Kamal movies very much //
வாங்க வானதி.. ரொம்ப நன்றி.. :)
@ஜில்தண்ணி
//முதல் மரியதை,மூன்றாம் பிரை
ம்ம்ம் நல்ல ரசனை தான் போங்க:))//
வாங்க.. ரொம்ப நன்றி :)
எனக்கு பிடித்த சில படங்களையும் வரிசை படுத்தியிருக்கீங்க... தொகுப்பு நல்லா இருக்குங்க..
நீங்க ரொம்ப பொருமைசாலி தாங்கள்
கஸ்ட்டப்பட்டு எழுதினதை கஸ்டம் இல்லமல் படித்தேன் அருமையான படங்கள்-மிருதங்கசக்கரவ்ர்த்தி-வாழ்க்கை-பலே பண்டியா-அன்ணன் ஒரு கோவில்-வீரபாண்டிய கட்ட பொம்மன்
இன்னும் எத்தனயோ சொல்லலாம் சிவாஜி-கனேசன் நடித்த அத்தனை படங்களும் பிடிக்கும்.
நல்ல அழகான படங்கள்,நேர்தியான வரிசை...
மௌன ராகம் படத்தை எத்தனை தடவை பார்தேன் என்றே நினைவிலை..அதிக எண்ணிக்கையில் பார்த படங்களில் அதும் ஒன்று.
அருமை ஆனந்தி
என்னை கவர்ந்தது தில்லான மோகனாம்பாள்,முதல் மரியாதை மறக்கமுடியாத படங்கள்
காமெடி ரகம் மட்டும்தான் ரெம்ப புடிக்குமோ?
மற்ற வகைகளை லிஸ்ட்ல காணமே!!!
உங்க வரிசையில் ஒரு ஏழுபடம் எனக்கு பிடித்த படங்கள்..
எனக்கு பிடித்த இரண்டு காமெடி படங்கள் இதில் உள்ளன.
சூப்பர்!
உங்கள் தெரிவு தெரிந்து கொண்டோம். பெருமளவு எல்லோருக்கும் பிடித்த படங்கள்...
உங்களுக்கு பிடித்த 10 படங்கள், இவ்வுலகில் உள்ள எல்லா தமிழர்களையும் கவர்ந்த படங்கள்....
சன் டிவீல திரை விமர்சனம் பார்த்தது போல இருக்கு, ஆனால் சன் டிவீல ஒரு படத்தை தான்
திரை விமர்சனம் பண்ணுவாங்க....
ஆனால் ஆனந்தி, நீங்க.....பத்து படங்களை திரை விமர்சனம் செய்துடீங்கலே....கிரேட்....
குறைந்த நேரத்தில் பத்து படங்களை மிக விரைவாக பார்த்தது போல இருந்தது,
உங்கள் சாதனை, கின்னஸ் சாதனை...
இப்போ தமிழ்நாட்ல சில படங்கள் மக்களை கொன்னுட்டு இருக்கு, தயவு செஞ்சு அந்த படத்தை பத்தி
விமர்சனம் பண்ணுங்களேன்....(சுறா, குட்டி பிசாசு, இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்)....
நன்றி...
பத்துப் படங்களும் அருமை ..ஆனா எனக்குப் பிடிச்ச படங்களே இருக்கு..ஆனந்தி..:))
உங்கள் தொடர் பதிவை படித்து மகிழ்ந்தேன்....தெரிந்த கதைகள்தான் என்றாலும் அருமையாக இருந்தது. தொடர்ந்து எழுதுங்கள். சைவகொத்துபரோட்டாவை போல், உங்களை எழுத தூண்டும் நல்நண்பர்கள் அதிகம் உங்களுக்கு கிடைக்க என் வாழ்த்துக்கள் ஆனந்தி.
உங்களின் தேர்வுகள் அனைத்தும் அருமை !
3 ,5 ,6 8, 9, 10
நம்ம ஜாய்ஸ்
எல்லாமே நல்ல படங்கள் மேடம்,எஜமான் தவிர
@செந்தில்குமார்
//அருமை ஆனந்தி
என்னை கவர்ந்தது தில்லான மோகனாம்பாள்,முதல் மரியாதை மறக்கமுடியாத படங்கள் //
ஹ்ம்ம்.. ரொம்ப நன்றி செந்தில்..
@vasan
//காமெடி ரகம் மட்டும்தான் ரெம்ப புடிக்குமோ?
மற்ற வகைகளை லிஸ்ட்ல காணமே!!!//
ஏன் எல்லாமே காமெடி படம் மாதிரியா இருக்கு உங்களுக்கு??
வருகைக்கு நன்றி..
@ஜாக்கி சேகர்
//உங்க வரிசையில் ஒரு ஏழுபடம் எனக்கு பிடித்த படங்கள்.. //
ஓ.. ரொம்ப சந்தோசம்.
வருகைக்கு நன்றி..
@Kolipaiyan
//எனக்கு பிடித்த இரண்டு காமெடி படங்கள் இதில் உள்ளன.
சூப்பர்//
வருகைக்கு நன்றி..
@ஸ்ரீராம்.
//உங்கள் தெரிவு தெரிந்து கொண்டோம். பெருமளவு எல்லோருக்கும் பிடித்த படங்கள்... //
ஹ்ம்ம்.. வருகைக்கு நன்றி ஸ்ரீராம்..
@நாடோடி
// எனக்கு பிடித்த சில படங்களையும் வரிசை படுத்தியிருக்கீங்க... தொகுப்பு நல்லா இருக்குங்க.. //
வாங்க.. வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி..
@buruhaniibrahim
//நீங்க ரொம்ப பொருமைசாலி தாங்கள்
கஸ்ட்டப்பட்டு எழுதினதை கஸ்டம் இல்லமல் படித்தேன் அருமையான படங்கள்-மிருதங்கசக்கரவ்ர்த்தி-வாழ்க்கை-பலே பண்டியா-அன்ணன் ஒரு கோவில்-வீரபாண்டிய கட்ட பொம்மன்
இன்னும் எத்தனயோ சொல்லலாம் சிவாஜி-கனேசன் நடித்த அத்தனை படங்களும் பிடிக்கும். //
ஆமா.. நிறைய நல்ல படங்கள் இருக்கு, பத்து மட்டும் தான் சொல்ல சொன்னாங்க.. கருத்துக்கு நன்றி..
@malar
//நல்ல அழகான படங்கள்,நேர்தியான வரிசை...
மௌன ராகம் படத்தை எத்தனை தடவை பார்தேன் என்றே நினைவிலை..அதிக எண்ணிக்கையில் பார்த படங்களில் அதும் ஒன்று.//
சரியாய் சொன்னிங்க.. ரொம்ப நன்றி..
@FIRE FLY
//உங்களுக்கு பிடித்த 10 படங்கள், இவ்வுலகில் உள்ள எல்லா தமிழர்களையும் கவர்ந்த படங்கள்....
சன் டிவீல திரை விமர்சனம் பார்த்தது போல இருக்கு, ஆனால் சன் டிவீல ஒரு படத்தை தான்
திரை விமர்சனம் பண்ணுவாங்க....
ஆனால் ஆனந்தி, நீங்க.....பத்து படங்களை திரை விமர்சனம் செய்துடீங்கலே....கிரேட்....
குறைந்த நேரத்தில் பத்து படங்களை மிக விரைவாக பார்த்தது போல இருந்தது,
உங்கள் சாதனை, கின்னஸ் சாதனை...
இப்போ தமிழ்நாட்ல சில படங்கள் மக்களை கொன்னுட்டு இருக்கு, தயவு செஞ்சு அந்த படத்தை பத்தி
விமர்சனம் பண்ணுங்களேன்....(சுறா, குட்டி பிசாசு, இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்)....
நன்றி...///
உங்க விரிவான கருத்துக்கு ரொம்ப நன்றி..
@thenammailakshmanan
//பத்துப் படங்களும் அருமை ..ஆனா எனக்குப் பிடிச்ச படங்களே இருக்கு..ஆனந்தி..:)) //
ரொம்ப சூப்பர் அக்கா.. நன்றி..:)
@Nandhini
//உங்கள் தொடர் பதிவை படித்து மகிழ்ந்தேன்....தெரிந்த கதைகள்தான் என்றாலும் அருமையாக இருந்தது. தொடர்ந்து எழுதுங்கள். சைவகொத்துபரோட்டாவை போல், உங்களை எழுத தூண்டும் நல்நண்பர்கள் அதிகம் உங்களுக்கு கிடைக்க என் வாழ்த்துக்கள் ஆனந்தி.//
வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி
@♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
//உங்களின் தேர்வுகள் அனைத்தும் அருமை ! //
வாங்க.. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..
@பிரியமுடன் பிரபு
// 3 ,5 ,6 8, 9, 10
நம்ம ஜாய்ஸ்//
ஹ்ம்ம்.. ரொம்ப தேங்க்ஸ்..
@மங்குனி அமைச்சர்
//எல்லாமே நல்ல படங்கள் மேடம்,
வாங்க.. ஹ்ம்ம்.. வருகைக்கு நன்றி. :)
//எஜமான் தவிர//
ஓகே ஓகே.. :D
நல்ல பதிவு :)
மங்குனி அமைச்சர் said...
எல்லாமே நல்ல படங்கள் மேடம்,எஜமான் தவிர //////
இங்க வந்த கமெண்ட் எல்லாம் நல்ல கமெண்ட் ஒன்னை தவிர அது என்னன்னு கண்டுபிங்க பாப்போம்
நல்லாவே வரிசைப்படுத்தியிருக்கீங்க!
நம்ம ஓட்டு "மொழி"க்கும்,தில்லானா - வுக்கும்!!!!
உங்களுக்கு புடிச்ச பத்து படங்கள் பத்தி நல்லா சொல்லி இருக்கீங்க..... உங்களுக்கு புடிச்சிருக்கு..... நான் என்ன சொல்ல..... ஹி,ஹி,ஹி,ஹி....
@LK said...
// நல்ல பதிவு :) //
ரொம்ப நன்றி..
@MUTHU said...
//மங்குனி அமைச்சர் said...
எல்லாமே நல்ல படங்கள் மேடம்,எஜமான் தவிர //////
இங்க வந்த கமெண்ட் எல்லாம் நல்ல கமெண்ட் ஒன்னை தவிர அது என்னன்னு கண்டுபிங்க பாப்போம்//
ஹ்ம்ம்.. எதுன்னு தெரியல. வருகைக்கு ரொம்ப நன்றி..
@அண்ணாமலை..!! said...
//// நல்லாவே வரிசைப்படுத்தியிருக்கீங்க!
நம்ம ஓட்டு "மொழி"க்கும்,தில்லானா - வுக்கும்!!!! ///
ஹ்ம்ம்.. ஓகே.. ரொம்ப நன்றி.
@சித்ரா
/// உங்களுக்கு புடிச்ச பத்து படங்கள் பத்தி நல்லா சொல்லி இருக்கீங்க..... உங்களுக்கு புடிச்சிருக்கு..... நான் என்ன சொல்ல..... ஹி,ஹி,ஹி,ஹி.... ////
வாங்க சித்ரா.. உங்க தலைவர் படம் மட்டும் கண்டிப்பா பிடிச்சிருக்குமே.. :P
தேர்வு செஞ்சா படங்கள் மட்டுமில்ல சொன்ன விதம் கூட அழகா கவிதையா இருக்கு ஆனந்தி....சூப்பர்
பத்து படங்கள்னு சொல்லறத விட..பத்து பாடங்கள் நடத்திட்டீங்க டீச்சர். எல்லாமே எனக்கு பிடித்த படங்கள்.
@அப்பாவி தங்கமணி
//தேர்வு செஞ்சா படங்கள் மட்டுமில்ல சொன்ன விதம் கூட அழகா கவிதையா இருக்கு ஆனந்தி....சூப்பர் //
வாங்க தங்கமணி.. ரொம்ப நன்றி.. :)
@Mythili Krishnan (மைதிலி கிருஷ்ணன்)
//பத்து படங்கள்னு சொல்லறத விட..பத்து பாடங்கள் நடத்திட்டீங்க டீச்சர். எல்லாமே எனக்கு பிடித்த படங்கள்//
வாங்க மைதிலி.. ஹிஹி.. ரெம்ப நன்றிங்கோ.. :)
Ithilirunthu onnu mattum thelivaa theriyudhu....
Neengal kamal rasigar endru.
Singam paarthaachaa..?
Padam expers
எஜமானை தவிர மத்தது ஒ.கே.
photo உன்மையிலயே நீங்க தானா?
எஜமானை தவிர மத்தது ஒ.கே.
photo உன்மையிலயே நீங்க தானா?
பத்து படங்களும் நல்ல தேர்வு ஆனந்தி
எனக்கு எல்லா படங்களும் பிடிக்கும் என்றாலும் மிக கவர்ந்தது முதல் மரியாதை
மௌன ராகம், காதல் கோட்டை
அது எப்படி நமக்கு பிடிச்ச படத்தை எல்லாம் இவுக வரிசைப்படுத்தி இருக்காக....
என்னடா இது ஒரே அட்டூழியமா இருக்கு... இத கேக்க ஆளே இல்லையா....? சொக்கா....சொக்கா......!
Post a Comment